கொல்கொதா அனுபவம் - நூற்றுக்கதிபதியின் சாட்சி

கடவுளின் வழி - மூன்று முக்கிய கேள்விகள் - மூன்று அடிப்படை சத்தியங்கள் - திரித்துவ தேவன் - தேவனுடைய வசனம் - இருதயம் - மூன்று அழைப்புகள் - இயேசுவின் பாதத்தில் - விசுவாசிகளின் பெலன் - இயேசு சிருஷ்டிகர் - சமாதானம் - இவரே கன்மலை - புழுதியிலிருந்து மகிமைவரை - அவருடைய பிரசன்னம் - ஒளியில் - கிறிஸ்துவின் மூன்று நிலைகள் - நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?
Post Reply
arputhaa
Officer
Officer
Posts: 4
Joined: Sun Dec 10, 2006 6:48 pm

கொல்கொதா அனுபவம் - நூற்றுக்கதிபதியின் சாட்சி

Post by arputhaa » Fri Apr 10, 2009 7:20 pm

நான் சீசரின் இராணுவத்தில் 30 வருடங்கள் பணிபுரிந்திருந்தாலும் கூட இதற்கு மேற்பட்ட பதவி எனக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் பிரச்சனைகள் மிகுந்த யூதேயா தேசத்தில் பணி செய்யும்படி எனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது எனக்கு சற்று கவுரவத்தை தருவதாக இருந்தது. அங்கே கலகம் அடிக்கடி எழும்புகிற படியால் நாங்கள் பல வேளைகளில் கிளர்ச்சி செய்கிற யூத வாலிபர்களுக்கு கடுமையான தண்டணையை நிறைவேற்றும்படி உட்படுத்தப்படுகிறோம்.

அதிகாலமே இன்றைய தினம் சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்பதை முன்குறிக்கிற சில காரியங்கள் நடந்தாலும், நான் இன்றைய தினம் வழக்கமான ஒரு சாதாரண நாளாகவே இருக்கும் என்று நினைத்தேன். அன்று நிலைமை வழக்கத்திற்கு மாறாக இருந்தது. பொந்தியு பிலாத்து என்ற எங்கள் மரியாதைக்குரிய கவர்னர் அவர்களால் சிலுவையிலறைந்து கொல்லப்படும்படி எங்களிடம் ஒப்படிக்கப்பட்ட இரு குற்றவாளிகளை நாங்கள் அரைமணி நேரத்திற்குள்ளாக கொல்ல வேண்டியிருந்தது. அந்த இருவரும் பயம் நிறைந்தவர்களாகவும், வெறுப்பையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் தங்கள் முகத்தில் வெளிப்படுத்துகிறவர்களாயும் இருந்தனர். அவர்கள் மீது எனக்கு எந்தவிதமான இரக்க உணர்ச்சியும் எழவில்லை. ஏனெனில் அவர்கள் அந்த தண்டணைக்கு பாத்திரர்கள் என்பதை நான் சந்தேகமற அறிந்திருந்தேன்.

அப்போது மற்றுமொரு கைதியை நடந்திக் கொண்டு வந்தனர். அவரைப் பார்த்த போது நான் ஆச்சரியப்பட்டேன். முந்தின இரவு அவர் கைது செய்யப்பட்டார் என்றனர். அவ்ர் பெயர் இயேசு. இவர் கடந்த மூன்று வருட காலமாக மதம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனைக்குரிய நபராக இருந்தார். நான் அவரை விட்டு சற்று தூரத்திலிருந்தாலும்கூட அவரில் ஒரு தனித்தன்மை இருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது. அது கொல்லப்படப்போகிற வேளையிலும் கூட அவரின் தோற்றத்தில் வெளிப்பட்ட ஒரு கம்பீரம் ஆகும்.

அவருக்குப் பின்னாக ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களின் சந்த்தடியினால் புழுதி கிளம்பியது. அவர்களின் அழுகைக் குரல் அந்த இடத்தையே அடைத்தது. அவர் எருசலேமின் வாசலின் வழியாக கடந்து வருகிற போது தடுத்து நிறுத்தப்பட்டார். ஒரு ஷணம் என் படை வீரர்களைக் நினைத்து கோபப்பட்டேன். பின்னர் அவர் எனைக் காட்டிலும் அவர் உயரிய அதிகாரம் உடையவராயிருந்தார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அங்கே கூடியிருந்த எருசலேம் குமாரத்திகளைப் பார்த்து ஊக்கத்தையும் நம்பிக்கையும் தருகிற வார்த்தைகளை அவர் கூறினார். அப்போது மீண்டுமாக அவர் நடக்கும் படி தள்ளப்பட்டார். அவர் நடந்து வந்த பாதை நீண்டதும் பெரிய மலைப்பாதையுமாக இருந்தது. அந்த ஆபத்தான பாதையில் அவர் தனது கனத்த சிலுவை மரத்தை சுமந்து கொண்டு வந்தார். அவர் இரா முழுதும் காவல் பண்ணப்பட்டு எருசலேமில் பல இடங்களில் விசாரணை செய்யப்பட்டார் என்று எனக்கு பின்னர் சொல்லப்பட்டது. அந்த மனிதன் அடிக்கப்பட்டு, கசையடி கொடுக்கப்பட்டு கிட்டதட்ட சாகடிக்கப்படும் படிக்கு வாரினால் அடிக்கபடிருந்தார். அவர்கள் அவருடைய தாடி மயிரை பிய்த்து அவருடைய முகத்தில் காறி துப்பியிருந்தனர். அவருடைய சிரசின் மீது முள்ளாலான ஒரு கிரீடம் வைக்கப்பட்டிருந்தது. தவறான மத போதனை செய்கிற தலைவர்களுக்கு வழக்கமாக கொடுக்கப்படுகிற தண்டணை இதுவல்ல. யூத ஆசாரியர்கள் ஏன் இவர் மீது இவ்வளவு வெறுப்பு காட்டினர் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிய வில்லை. எனினும் அதை அறிந்து கொள்வது என் வேலையும் இல்லை. ஒரு பொது குற்றவாளி மீது எனக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் ஏற்பட வேண்டும்? ஏனெனில் அவர் உண்மையில் அவர் சாதாரண குற்றவாளி அல்லை.

திடீரென மலை உச்சியில் நின்ற ஜனக் கூட்டம் அடிவாரத்தை நோக்கி வேகமாக குழப்பத்துடன் விரைந்தது. ஜனங்கள் கூடின அந்த அந்த இடத்துக்கு தீவிரமாக சென்ற நான், சிலுவை பாரம் தாங்காமல் கீழே விழுந்து கிடந்த இயேசுவைக் கண்டேன். நாசரேத்தைச் சேர்ந்த அந்த புகழ்பெற்ற மனிதனின் சரீரம் முழுதும் வியர்வையினால் நனைந்து, பெருமூச்செறிந்து கொண்டிருந்தார். அந்த கடினமான சிலுவை பாரத்தை இனி அவரால் சுமக்க முடியாது என்பது வெளிப்படையாக தெரிந்தது. என்னைப் பொறுத்த வரையில் இப்படிப்பட்டதொரு கடினமான தண்டனைக்கு இவர் பாத்திரராக தோன்ற வில்லை. முந்தின இரவிம் பயங்கரங்கங்கள் அவரது சக்தியை முழுவதுமாக உறிந்து சரீரத்தில் வேதனையை உண்டாக்கியிருந்தன. நான் உடனே நல வலிமையான ஒரு மனிதனை கூட்டத்தில் கண்டு அந்த சிலுவையை மீதமுள்ள தொலைவு சுமக்கும்படி கட்டளையிட்டேன். பொதுவாக அரசியல் கைதிகளுக்கு உதவுவது எனது வழக்கம் இல்லை. கைதி எவ்வளவுதான் பெரியவராக இருந்தாலும்கூட அதை பொருட்படுத்தாமல் அப்படிப்பட்ட வழக்கத்தை நான் ஒருபோதும் விரும்பியதில்லை.

கடைசியாக அந்த ஜனக் கூட்டம் கொல்கொதா என்று அறியப்பட்டிருந்த அந்த மலையின் உச்சியை வந்தடைந்தது. முதலாவதாக சிலுவையிலறையப்பட்ட அந்த இரு குற்றவாளிகளும் வேதனைக் குரலுடனும், வலியின் கதறலுடனும் கூட அவர்கள் சிலுவை உயர்த்தப்பட்டது. அச்சிலுவைகள் அதற்கென்று தோண்டபட்டிருந்த குழிகளில் மிக பலமாக் போடப்பட்ட போது அந்த குற்றவாளிகளிம் உடம்பிலுள்ள மூட்டுகளையெல்லாம் அது தளரப்பண்ணிற்று. அதன் பின்னர் ஒரு போர்வீரன் இயேசுவை ஒரு சிலுவையில் கிடத்தி அவருடைய கைகளில் நீளமான் ஆணிகளை பெரிய சுத்தியல் கொண்டு அடிக்க ஆரம்பித்தான். அவருக்கு இப்படி செய்யப்படுகிறதைப் பார்த்தபோது நான் ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் அப்படிப்பட்ட தண்டணை மிகவும் கடுமையான ஆபத்தான குற்றவாளிகளுக்கெதிராகவே கொடுக்கப்படுகிற உச்சகட்ட தண்டணையாகும். இயேசு அப்படிப்பாட்ட ஒரு ஆபத்தான மனிதராக எனக்கு தோன்ற வில்லை. உண்மையைச் சொல வேண்டுமெனில் அவருடைய முகத்தில் அன்புனிறைந்த ஒரு தோற்றம்தான் காணபட்டது. அவருடைய கைகளில் ஆணி அறியப்பட பட இரத்தம் வெளிப்பட்டு அவருடைய கைகளில் வடிந்து ஏற்கனவே வடிந்து காய்ந்திருந்த இரத்தத்துடன் கலந்தது. பின்னர் உடனடியாக அவர்கள் அவருடைய சிலுவையை உயர்த்தி அதற்கென்று தோண்டப்பட்டிருந்த் குழியில் இறக்கினர். அது அவருடைய சரீரத்தின் தசை நார்களையும் மற்ற உள்பகுதிகளையும் கிழித்தது.

இப்போது மூன்று மனிதர்கள் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தனர். இரத்த ஓட்டம் தடைபடுகிற செயலானது அவர்களில் நடக்க ஆரம்பித்து விட்டது. நான் மணியை கவனித்த போது அது மூன்றாம் மணி வேளையாயிருந்தது. இந்த் சிலுவை தண்டணையானது வழக்கமாக நடைபெறுகீற நேரத்தைவிட சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும் என்பதால் நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் அத்தேச வழக்கத்தின் படி ஒருவரும் ஓய்வு நாளில் சிலுவையில் தொங்கவிடப்படக் கூடாது.

காலைவேளையில் சூரியன் தனது உஷ்ணத்தினால் அவர்களை வாட்டுகிறவேளையில், இப்படிப்பட்ட மரணத்தைப் பெற இந்த மனிதர்கள் என்ன செய்தார்கள் என்று நினைத்து வியந்து கொண்டிருந்தேன். சுவாசம் செய்வது மிகவும் கடினமானதாக இருக்கும் நிலையில் அவர்களின் சரீரங்கள் தொங்க விடப்பட்டிருந்தது. இந்த மூச்சு திணறலை சமாளிக்கும் படியாக மரித்திக் கொண்டிருப்பவர்கள் தங்கள் பாதங்களால் தங்கள் சரீரத்தை உயர்த்துவார்கள். உணவும் போதுமான கற்றும் நீண்ட நேரம் இல்லாமல் அவர்கள் சோர்ந்து களைப்படைந்து முடிவில் மூச்சுத்திணறலால் மரித்துப் போவர்.(சில வேளைகளில் மரணம் சீக்கிரம் நேரும் படிக்கு நான் எனது வீரர்களை வைத்து அவர்களின் கால்களை முறித்துப் போடுவதும் உண்டு) இன்று சூரியன் தனது வெயிலினால் அவர்களின் மரணத்தை துரிதப்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் சில வேளைகளில் இரண்டு நாட்கள் கூட இந்த சிலுவை தண்டனை நிறைவேற்றப்படும்.

சிலுவையில் அறையப்பட்ட மனிதர்களில் இயேசு எனது கவனத்தை ஈர்த்தார். ஒரு காலத்தில் மக்கள் அவரை அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவிக்கப் போகிற மேசியா என்று அழைத்தனர். என்னால் அதை புரிந்து கொள்ள முடிய விலை. ஏனெனில் அவர்களை ஒடுக்குகிற ஒரு ராஜ்ஜியமாக நான் எங்கள் அரசை கருதவிலை. நாங்கள் அந்த நாட்டுக்கு கலாச்சாரத்தை, நாகரீகத்தை மற்றும் ஒழுங்கை கொண்டு வந்திருந்தோம். எந்த விதமான ஒடுக்கத்திலிருந்து அந்த மேசியா இவர்களை விடுவிப்பார்? நான் பார்த்த ஒடுக்கம் அவர்களின் மததலைவர்கள் அவர்களுக்கு செய்ததே. ஆனாலும் கூட கடின இருதயமுள்ள பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களும் கூட மககளோடு இவரின் வார்த்தைகளை கேட்டன்ர்.

அவர் தேவ குமாரன் என்றும் அழைக்கப்பட்டார். இந்த ஜனங்கள் தேவனை மட்டுமே அராதிக்கிற பழக்கத்தை நீண்ட நாட்களாக பெற்றிருந்தனர். அவரின் செய்திகளை இவர்கள் தங்கள் பரிசுத்த புத்தகங்களான தோரா மற்றும் தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதிவைத்திருந்தனர். இதற்கு முற்றிலும் மாறாக ரோம அரசாங்கத்தின் அரசாங்க மதம் பல கடவுள்களை வணங்குகிற வழகத்தை கொண்டிருந்தது. அந்த கடவுள்களின் புகழை பரப்பும் படியாக நாங்கள் பல அழகான கோவில்களை கட்டியிருந்தோம். மேலும் எங்கள் ராஜாவே ஒரு கடவுள்தான். அனேக கடவுள்கள் இருபது மிகவும் கற்பனைக்குரியதாயிருந்தது. ஆனால் இந்த ஜனங்கள் அபடிப்பட்ட கற்பனையில் வாழாமல் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருந்தன்ர்.

ஒரு சிலுவையிலிருந்து வந்த சத்தம் என் கவனத்தை திருப்பியது. அந்த இயேசு இரக்கம் நிறைந்த கண்களுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மிகவும் உடைந்த பலவீனமான குரலில் ஒரு காரியத்தை சொன்னார். ஆனால் அதன் கருத்து மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஒரு உதவியாளன் எனக்கு அந்த செய்தியை சொன்ன போது, அவரால் சொலப்பட்ட வார்த்தைகள் என்னை சூழ்ந்து கொண்டு, நான் செய்து கொண்டிருந்த குற்றத்தைக் குறித்து என்னை மிகவும் வெட்கத்தால் நிரப்பிற்று. அந்த வார்த்தைகள் என்னுள்ளத்தில் இரைந்து, எனது இருதயத்தை ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருந்தன. அவர் சொன்ன வர்த்தைகள்: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.

அந்த வார்த்தைகள் நீண்ட நாட்கள் என் நினைவில் இருக்கும். அந்த நீண்ட தண்டணை நிறவேற்றுகிற வேளை முழுதும் அதை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் தனது தாயிடமும் அந்த வேதனையின் கடைசி நேரத்தில் தன்னருகே இருந்த தன் சீடனிடமும் பேசிக் கொண்டிருந்த போதும் அவர் சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன். அவர் தன்னோடு மரித்துக் கொண்டிருந்த வாலிப கைத்தியோடு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகீற வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்த போதும் நான் அவர் சொன்ன இந்த வார்த்தையை நினைத்துப் பார்த்தேன். அவர் மரித்த போதும் நான் அவற்றை நினைத்துப் பார்த்தேன்.

இதற்கு முன்பு நான் பல்வேறு மரணங்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் இதுவரை பார்த்த அல்லது கேள்விப்பட்ட எல்லாவற்றையும் விட இவரின் மரணம் சிறப்பானதாக இருந்தது. சுமார் ஆறாம் மணிவேளையில் மேகமானது சூரியனை மறைத்தது,அது நண்பகல் வேளையாயிருந்தும் கூட நள்ளிரவு போன்று எங்கும் இருள் சூழ்ந்தது. அவ்விருள் மூன்று மணி நேரம் நீடித்திருந்தது. அப்போது ஒன்பதாம் மணினேரத்தில் இயேசு தனது கடைசி வார்த்தைகளை சொன்னார்: முடிந்தது,பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்றார்.தான் மரித்ததை வெளிக்காட்டும் படியாக அவர் தனது தலையை சாய்த்தார், கடந்த பல மணிநேரங்களாக பலவீனப்பட்டுக் கொண்டிருந்த அவரின் சரீரத்தை நெகிழ்த்தினார்.

அவரின் பெரிய கஷ்டம் முடிந்ததென்று நம்பி நான் எனது கண்களை மௌனமாக மூடினேன். பின்னர் சர்வ வல்லமையுள்ள தேவனால் கட்டளயிடப்பட்டது போல காரிருள் நிறைந்த பூமி குலுங்கி அதிர ஆரம்பித்தது. பூமி பிளந்து போகக் கூடிய அளவுக்கு ஆகரோஷமாக அந்த அதிச்சி இருந்தது. பாறைகள் பெயர்ந்தோடின. ஜனங்கள் அலறினர், கட்டிடங்கள் இடிந்தன. திகிலடைந்த ஜனங்கள் பயமடைந்து சிதறி ஜனங்களுக்குள்ளே ஓடினர். தேவன் தாமே தனது குமாரனின் மரணத்தில் தனது வல்லமையை வெளிப்படுத்தினார்.

இப்போது எல்லாம் வெளிப்படையாக தெரிந்தது. இவரே யூதர்களால் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட மேசியா. ஆத்துமாவுக்கான ஒரு செய்தியுடன் அவர் வந்தார் என்பதை அப்போதுதான் என்னால் பார்க்க முடிந்தது. அது என்ன செய்தி? சனகெரிப் சங்கத்தின் முக்கியமான ஒரு அங்கத்தினராக இருந்த நிக்கோதேமு விடம் அவர் சொன்னதுதான் அந்த செய்து. அதென்னவெனில்:
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

அந்த நேரத்தில் தான் இயேசு ஒரு சாதாரண மதத்தலைவரோ அல்லது ஒரு பெரிய தீர்க்கதரிசியோ அல்ல மாறாக அவர் இந்த உலகத்தில் உள்ள எல்லாருக்கும், அவரைக் கொன்ற எனக்கும் கூட ஒரே மெய்யான தேவனிடமிருந்து வருகிற நித்திய ஜீவனை அருளும் படியாக வந்தார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

இருள் தணிந்த அந்த வேளையில்,மரித்த அவரே இரட்சகர், எனது இரட்சகர் என்று ஆன் கண்டுகொண்ட உண்மையை சத்தமாக கூற விரும்பினேன். எனினும் அவரின் தெய்வீகத்தன்மைக்கு முன்பாக மரணம் நிலைத்து நிற்க முடியாது என்பதை நான் கண்டுகொண்டேன். அவருடைய மரணம் மூன்று நாளைக்குள்ளாக முடிவுக்கு வந்தது. மேலும் எனது முழுவாழ்க்கையும் மாற்றப்பட்டது. சாதாரண நூற்றுக்கதிபதியாகிய நான் எல்லாரும் காணும்படியான ஒளிவீசும் தீபமாக கலங்கரைவிளக்காக மாற்றப்பட்டேன். அவருடைய சரீரத்தை பார்த்துக் கொண்டு சிலுவைக்கு முன்பாக முழங்காழ்படியிட்டு நான் பெற்றுக் கொண்ட முழு அனுபவத்தையும் மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்ற நான்கு வார்த்தைகளில் சுருக்கமாக கூறினேன்.

பிலிப்பியர்.2:5- 11:கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

கல்வாரி மாமலை மேல் கைகால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் இயேசு தொங்கக் கண்டேன்

குருசின் வேதனையும் சிரசில் முள்முடியும்
குருசின் வேதனையும் உருக்கிற்றென் மனதை

Translated and contributed by Arputham
Source:www.tamilchristians.com

Post Reply

Return to “இன்றைய சிந்தனை”