தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று இருக்கும் போது, நரகத்தை உண்

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)
Forum rules
User avatar
Dino
Sergeant
Sergeant
Posts: 11
Joined: Fri Apr 15, 2011 7:19 pm
Location: Germany, Karlsruhe

தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று இருக்கும் போது, நரகத்தை உண்

Postby Dino » Mon Apr 18, 2011 7:44 am

தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று இருக்கும் போது, நரகத்தை உண்டாகி மனிதர்களை ஏன் அனுப்பவேண்டும்?

இப்படியாக ஒரு கேள்வியினை உலகத்தார் எழுப்புகின்றார்கள்: "If God is love, How could a God of love send people to the lake of fire (or hell)?". எப்படி அன்பானவர் நரகத்தை உண்டாக்கி மனிதனை அங்கே தள்ளமுடியும்? இதுதான் கிறிஸ்தவ மண்டலத்தின் தவறான போதனைகளில் ஒன்று.

'அன்பே கடவுள்' என்று அநேக இடங்களில் வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது எங்கிருந்து வந்தது என்றால்: யோவான் 4:7,8லிருந்து
7. பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
8. அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

இயேசு மத்தேயு 25:41ல் "அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்." என்று கூறினார்.

"தேவன் பிசாசுக்காகவும், அவனுடைய [விழுந்துபோன] தூதர்களுக்காகவும் மட்டுமே அக்கினிக்கடலை உண்டாக்கினார்".

நீங்கள் பிசாசை பின்பற்றினால், அல்லது பிசாசின் கிரியைகளுக்கு உட்பட்டால், நீங்களே பிசாசின் பின்னாகச் செல்கின்றீர்கள், அவனுடைய கூட்டத்தார் ஆகின்றீர்கள். எனவே தேவனல்ல, பிசாசே உங்களைத் தனக்கென்றும், தன்னுடைய கூட்டத்தாருக்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றான். நீங்கள் யாரைப் பின்பற்றுகின்றீர்கள்?

எபேசியர் 5:11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

தேவன் மனிதனுக்காக நரகத்தை உண்டாக்கவில்லை. மீண்டும் ஒருமுறை படியுங்கள் அப்படி வேதம் எமக்கு போதிக்கவில்லை. மனிதன் பாவத்திலிருந்து விடுபடும்படி தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இது தேவன் நம்மேல் வைத்த அன்பினால்தான். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை. அவர் அன்பாகவே இருக்கிறார். "நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புகூருங்கள்" என்று சொல்கின்றார். நம்மை நரகத்துக்கு அனுப்புவது அவரது சித்தமல்ல. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையவேண்டுமென்பதே அவருடைய சித்தமாயிருக்கின்றது.
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன்( [img]தமிழ்%20கிறிஸ்தவ%20சபை[/img] )

rexsam
Officer
Officer
Posts: 7
Joined: Mon Jan 27, 2014 2:11 pm

Re: தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று இருக்கும் போது, நரகத்தை

Postby rexsam » Tue Jan 28, 2014 5:25 pm

அநேகர் நரகம் என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் நரகம் என்றால் நித்திய வேதனை என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். இது இருண்ட காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் சேர்க்கப்பட்ட தேவனற்ற ஜனத்தின் கருத்தாகும். வேதத்தில் சொல்லப்படும் நரகத்தை பற்றிய உண்மையை நம்பாமல், இருண்ட காலத்தில் சொல்லப்பட்ட கருத்தை இவர்கள் நம்புகிறார்கள்.
உலகம் முழுவதும் இன்று எல்லா மதங்களுமே நரகம் என்ற முடிவற்ற கொடிய வாதிக்கப்படுதலை, சித்ரவதையை போதித்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால் நாம், வேதத்தில் நமக்குச் சொல்லப்பட்ட நரகத்தைக் குறித்து நன்கு படித்து, கவனமாக ஆராய வேண்டியது மிக முக்கியமாகும்.
பழைய ஏற்பாட்டில் நரகம் (Hell) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரே எபிரேய வார்த்தை ஷியோல் (Sheol) என்பதாகும். புதிய ஏற்பாட்டில் இதற்கு தொடர்பான கிரேக்க வார்த்தை ‘ஹெடேஸ்’ (Hades) என்பதாகும்.
வேதாகமத்தில் ‘ஷியோல்’ மற்றும் ‘ஹெடேஸ்’ 41 தடவைகள் நரகம் என்றும், 32 தடவைகள் கல்லறை என்றும் , 3 தடவைகள் குழி என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அடிக்கடி பாதாளம் நரகம் என்றும். நரகம் பாதாளம் என்றும் பொருள் படுத்தப்பட்டிருக்கிறது.(சங் 49:15; 55:15; 86:13; ஏசாயா 14:9; யோனா 2:2, 1கொரி 15:55; வெளி 20:13 )
Revised version (RV), Revised Standard Version (RSV), Hebraic Roots Bible போன்ற ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் இந்த நரகம் (Hell) என்ற விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு, ஷியோல் (Sheol) மற்றும் ஹெடேஸ் (Hades) வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் அப்படியே உபயோகித்து இருக்கிறார்கள். அதனால் 76 இடங்களிலும் ஒரே பொருளில் இதனை கருத்தில் கொள்ள உதவுகிறது.

rexsam
Officer
Officer
Posts: 7
Joined: Mon Jan 27, 2014 2:11 pm

Re: தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று இருக்கும் போது, நரகத்தை

Postby rexsam » Tue Jan 28, 2014 5:47 pm

பழைய ஆங்கில மொழியில் ‘ஹெல்’ (Hell) என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் ‘மறைத்துக்கொள்’ அல்லது ‘மூடிக்கொள்’ என்பதாகும். ‘helling the potatoes’ என்றால் உருளைக்கிழங்குகளை குழியில் புதைத்தல் என்று பொருள். ‘helling a house’ என்றால் மூடுவது அல்லது கூரை போடுவது என்பதாகும்.

இருண்ட காலத்தில் இறையியல் மேதைகள் நரகம் என்பதற்கு ‘வேதனை மிகுந்த இடம்’ என்ற தவறான அர்த்தத்தை புகுத்தும் முன் அந்தச் சொல், ‘ரகசிய, மறைந்து இருக்கும் மரண நிலை’ என்ற சரியான கருத்தையே குறித்தது. அதன்படி பார்த்தால் நரகம் ( Sheol or Hades) என்றால், தன் நினைவற்ற உணர்வற்ற மரண நிலையைத்தான் குறிக்கிறது.

நரகம் என்றால் நெருப்பு, வேதனை, கூக்குரல் நிறைந்த ஓர் இடம் எண்ட கருத்திற்கு மாறாக, “மரித்தவர்கள் ஒன்றும்


அறியார்கள்”...“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே (Sheol) செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே”. - பிர 9: 5,10
“மரணத்தில் உம்மை நினைவு கூர்வதில்லை, பாதாளத்தில் (Sheol) உம்மை துதிப்பவன் யார்?” “பாதாளம் (Sheol) உம்மைத் துதியாது. மரணம் உம்மை போற்றாது”. “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.”
( சங் 6:5, 71:20, 146:4; ஏசாயா 38:18 ) என்று வேதம் கூறுகிறது.


நல்லோரும், தீயோரும் இறந்தபின் பாதாளத்திற்கு ( Sheol ) போவார்கள். உதாரணமாக யாக்கோபு ‘துக்கத்தோடு என் குமாரனிடத்தில் பாதாளத்தில் ( Sheol ) இறங்குவேன் என்றான். (ஆதி 37:35 ). யோபு தேவனிடத்தில் தன்னை பாதாளத்தில் ( Sheol ) உயிர்த்தெழுதல் மட்டும் மறைத்து வைக்கும்படி கூறுகிறான். (யோபு 14:,13). “மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?”. அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.” (யோபு 14:10; 17:16). நல் ஆத்துமாவும் தீய ஆத்துமாவும் உணர்வுகளற்ற மரண நிலைக்கே போகிறார்கள். அதிலிருந்து மரித்தோரின் உயிர்த்தெழுதலே ஒருவனை மீட்க முடியும்.

தேவன் ஆதாமிடம் பாவத்திற்கான தண்டனையை பற்றி கூறும்போது, “அதைப் புசிக்கும் நாளிலே நித்தியமாய் வேதனையை அனுபவிப்பாய்” என்று கூறவில்லை. ஆனால் “சாகவே சாவாய்” (ஆதி 2:17 ) அதாவது உயிரோடு இருக்கமாட்டாய் (ஜீவன் அற்றவனாய் இருப்பாய்)என்ற உண்மையைத்தான் சொன்னார்.

http://divineplan.in/forum


Return to “தினதியானம்”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest