மார்ச் 21 - மனிதனின் தீமை தேவனின் மகிமை

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)
Post Reply
User avatar
kesaran
Admin
Admin
Posts: 1717
Joined: Thu Jun 23, 2005 11:35 pm
Location: Germany

மார்ச் 21 - மனிதனின் தீமை தேவனின் மகிமை

Post by kesaran » Sun Mar 21, 2010 11:19 pm

மனிதனின் தீமை தேவனின் மகிமை

மனுஷருடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர். சங்கீதம் 76:10

மனிதனுடைய வரலாற்றில் நிகழும் கவர்ச்சிமிக்க நிகழ்ச்சி யாதொனில், தேவன் மனிதனின் கோபத்தைத் தனக்குப் புகழ்ச்சியாக மாற்றுவதேயாகும். மனிதன் வீழ்ந்துபோன நாளிலிருந்தே தேவனுக்கும் அவருடைய நோக்கத்திற்கும், அவர் தம் மக்களுக்கும் அவன் எதிர்த்துநிற்கிறான். அத்தருணங்களிளெல்லாம், உடனே தண்டியாது அவனுடைய செயல்களை தொடர்ந்து நடக்கவிட்டு யாவற்றையும் தம் மகிமைக்காகவும், தம் மக்களின் நலனுக்காகவும் தேவன் ஒருமுகப்படுத்த விடுகிறார்.

தங்களுடைய உடன் சகோதரனுக்கு எதிராக தீமைசெய்ய சில மனிதர்கள் திட்டமிட்டனர். அவனை நாடோடிக்கூட்டத்தில் விற்றனர். அவர்கள் அவனை எகிப்துக்குக்கொண்டு சென்றனர். தேவனோ, அவiனை அந்நாட்டின் அரசாட்சியின் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தினார். தனது ஜனங்களின் இரட்சகனாகவும் அவன் உயர்த்தப்பட்டான். நீங்கள் எனக்கு தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ அதை நன்மையாக முடியப்பண்ணினார் என்று இந் நிகழ்ச்சியைக் குறித்து யோசேப்பு, தன் சகோதரருக்கு பின்னர் நினைவுபடுத்தினான் (ஆதி 50:20).

யூதர்களுக்கு எதிராக ஆமான் வெகுண்டு எழுந்தான். அது அவனுடைய அழிவிற்கும் அவன் யாரை அழிக்கவேண்டுமென்று நினைத்தானோ அவர்களுடைய புகழ்ச்சிக்கும் காரணமாயிற்று.

எபிரேய இளையர் மூவர் எரிகிற அக்கினிச் சூளைக்குள் தூhக்கியெறியப்பட்டனர். அவர்களை எறிந்தவர் கருகிப்போகும்படி தீப்பிளம்பு கடுமையாய் இருந்தது. ஆனால் அந்த எபிரேயர் மூவரும் தங்களுடைய உடலில் புகையின் வாசனைகூட இல்லாமல் காயமின்றி வெளியே வந்தனவர். அந்நிகழச்சியின் விளைவாக யூதர்களுடைய தேவனுக்கு எதிராகப்பேசுகிற எவனும் கொலைசெய்யப்படவேண்டுமென்று புறமக்களின் அரசன் கட்டளையிட்டான்.

பரலோக தேவனை நோக்கித் தனது மன்றாட்டை ஏறெடுத்ததால் தானியேல் சிங்கங்களின் குகையில் வீசியெறிப்பட்டான். வியத்தொகு வகையில் அவன் காக்கப்பட்டதை கண்ணுற்ற புற இன அரசன், தானியேலின் தேவனுக்கு முன் மக்கள் நடுங்கி அவரைக் கனப்படுத்தவேண்டுமென்றும் கட்டளையிட்டான்.

புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் இது தொடர்கிறது. பலவித இடர்பாடுகளை சபை சந்தித்தது. நற்செய்தி நாற்பக்கங்களிலும் விரைந்து பரவிற்று. ஸ்தேவானின் உயிர் தியாகம் சவுலின் மனமாற்றத்திற்கு வித்திட்டது. பவுல் சிறையில் அடைக்கப்பட்டதால், தேவதத்தின் பகுதியாக விளங்கும் நான்கு மடல்கள் உருவாயின.

பின்னர் ஜான் ஹஸ் என்பவரின் சாம்பல் ஆற்றில் வீசப்பட்டது. சிறிதுகாலத்திற்குள்ளாகவே அந்த ஆறு பாய்ந்த இடமெங்கும் நிற்செய்தி பின் தொடர்ந்து பரப்பப்பட்டது.

திருமறையைக் கிழித்து காற்றிலே மனிதர்கள் பறக்கவிட்டனர். அதில் ஒரு தாளை எடுத்துப் படித்தவர் மகிமைக்குப் புகழ்ச்சியாக இரட்சிக்கப்பட்டார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை மனிதன் ஏளனம் செய்கிறான். கடைசி நாட்களில் ஏளனம் செய்வோர் தோன்றுவார்கள் என்னும் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (2பேது 3:3-4).

மனிதனுடைய கோபத்தை தமக்கு புகழ்ச்சியாக தேவன் மாற்றுகிறார். அவருக்கு புகழ்ச்சியைக் கொண்டுவராத கோபத்தை அவர் அடக்குகிறார்.

Post Reply

Return to “தினதியானம்”