Song 275 - Thuthi Geethangalal

பாடல் 275:  துதி கீதங்களால் புகழ்வேன்
 
துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்துவங்களை (2)
இயேசுவே இரட்சகா
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல் (2) 
 
(துதி கீதங்களால்......)
தினந்தோறும் உம் தானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர் (2)
திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே
கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் (2)
 
(துதி கீதங்களால்......) 
  
அலைமோதும் இவ் வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது (2)
வழிகாட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோடடியார்களைக் காருண்யத்தால் (2)
 
(துதி கீதங்களால்......)
துன்ப துயரங்கள் வாட்டும்போது
வேத வசனங்கள் ஆறுதலே (2)
சங்கீதங்களால் மகிழ் பாடிடுவேன்
உந்தன் வாக்குகளை எண்ணி ஆனந்தாய் (2)
 
(துதி கீதங்களால்......)
 

More Articles ...

Ezra Jean Dougan

ezra book
 
 
 

Nehemiah Jean Dougan

nehemiah book
 

Esther Jean Dougan

esther book