13
1 நான் மனிதர் மொழிகளையும் தூதர் மொழிகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். 2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, அணைத்து இரகசியங்களையும், அணைத்து அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக அணைத்து விசுவாசம் உள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. 3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் செய்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கு இராவிட்டால் எனக்கு பயன் ஒன்றுமில்லை. 4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, 5 தகாத செய்யலை செய்யாது, தன்னலத்தை தேடாது, கோபமடையாது, தீங்கு நினையாது, 6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 7 அணைத்தையும் தாங்கும், அணைத்தையும் விசுவாசிக்கும், அணைத்தையும் நம்பும், அணைத்தையும் சகிக்கும். 8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்கள் ஆனாலும் ஒழிந்துபோம், அந்நிய மொழிகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம். 9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனம் சொல்லுதலும் குறைவுள்ளது. 10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 11 நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். 12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். 13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.