அறிவிப்பு பலகைகள் (ழேவiஉந டீழயசனள)
நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை எச்சரிக்கவும். நமக்கு வழிகாட்டவும் அநேகம் அறிவிப்பு பலகைகள் தெருக்களிலும் கடைகளிலும் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது கிறிஸ்தவ வாழ்க்கையோடு ஒப்பிடக் கூடிய சிலவற்றை இங்கே கவனிப்போம்.
அபாயம் (னுயபெநச)
(1) பாவத்தின் சம்பளம் மரணம் (ரோ.6:23)
(2) பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் (எசேக்.18:4,18)
(3) உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் (எண்.32:23)
இங்கே நடக்கக் கூடாது (னுழn´வ றயடம hநசந)
(1) துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடவாதே (சங்.1:1)
(2) மாம்சத்தின்படி நடவாதே (ரோ.8:1,4,5, 2.பேது.2:7,10)
(3) ஒழுங்கற்று நடவாதே (2.தெச.3:6, 2.கொரி.4:2, எபேசி.4:17, 5:15)
நல்வரவு (றுநடஉழஅந)
(1) வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்.11:28)
(2) எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. கலியாணத்திற்கு வாருங்கள் (மத்.22:4, லூக்.15:28)
(3) கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படவரே, உள்ளே வாரும் நீர் வெளியே நிற்பானேன் (ஆதி.24:31).
சாப்பாடு தயார் (ஆநயடள சுநயனல)
(1) ஜீவ அப்பம் நானே, என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. (யோ.6:48,54-56, 1.கொரி.11:26, 10:16-17)
(2) என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்கு பூர்த்தியான சாப்பாடு இரக்கிறது. நானோ பசியினால் சாகிறேன் (லூக்.15:17, ஆதி.25:34)
(3) கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் தஅதின் வியாபாரம் அவர்களைச் சேரும் (ஏசா.23:18, (1.இராஜா.17:1-6)
பால், திராட்சைரசம் குளிர்பானங்கள் விற்குமிடம் (ஆடைமஇ புசயிந துரiஉந யனெ ஊழழட னுசiமௌ)
(1) நீங்கள் வளரும்படி புதிதாய் பிறந்த குழந்தைகளைப்Nடீபால, திருவசனமாகிய களங்கமில்லாத ஞாப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள் (1.பேது.2:1-3, நியா.5:25, 1.கொரி.3:2)
(2) திராட்சைரசம் மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்ககிறது (சங்.104:15, சக.9:17, பிர.10:19, சங்.78:65, உன்.7:9, 1.தீமோ.5:23, யோ.2:3-11)
(3) ஓ! தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள். பணமில்லாதவர்களே நீங்கள் வந்து பணமுமின்றி விலையுமின்றித் திராட்சைரசமும் பாலும் கொள்ளுங்கள் (ஏசா.55:1-2, யோ.4:14, 7:37-38)
கட்டணம் கிடையாது. அனுமதி இலவசம் (ழே நுவெசயnஉந குநந)
(1) கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு (எபேசி.2:8, 1.பேது.1:18-19)
(2) இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள் (ரோ.3:24)
(3) ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள். கேட்கிறவனும் வா என்பானாக. தாகமாயிருக்கிறவன் வரக்கடவன். விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன் (வெளி 22:17, 21:6)
திருடர்கள் ஜாக்கிரதை (டீநறயசந ழக வுhநைஎநள)
(1) ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல் வழியாய்ப் பிரவேசியாமலும், வேறு வழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோ.10:10-11)
(2) கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். (2.பேது.2:1-3, யோ.10:11, எரேமி.14:14)
(3) திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஐ;யத்தைச் சுதந்தரிப்பதில்லை. (1.கொரி.6:10)
நாய்கள் ஜாக்கிரதை (டீநறயசந ழக னுழபள)
(1) நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள். (பிலி.3:2, 2.பேது.2:22, நீதி.26:11)
(2) பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள். (மத்.7:6, எசா.56:10-11)
(3) வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக, அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள். (உபா.23:18, வெளி 22:15)
நோட்டீஸ் ஒட்டாதீர். இங்கே விளம்பரம் செய்யக்கூடாது (ளுவiஉமள ழே டீடைடள)
(1) மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. (மத்.6:1-4)
(2) எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். (1.கொரி.3:23-24,17, 1.கொரி.10:31)
(3) நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனihயும் சப்பாணிகளையும் குருடihயும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய், அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள், நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார். (லூக்.14:13-14)
கைகளை வெளியே நீட்டாதீர்கள் (னுழவெ´வ ளவசநவஉh லழரச hயனௌ)
(1) ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். (ஏசா.56:2)
(2) நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் (சங்.125:3)
(3) ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான். அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார். அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். (2.சாமு.6:6-7, 1.இராஜா.13:4,6)
பெண்கள் உட்காருமிடம் (குழச டுயனநைள ழடெல)
(1) அந்தப்படியே ஸ்திரிகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும். (1.தீமோ.3:11, 2:11-12)
(2) குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. (நீதி.31:10)
(3) சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திர்Pயே புகழப்படுவாள். (நீதி.31:30)
இது ஒருவழிப்பாதை (ழுநெ றயல வசயககiஉ)
(1) இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோ.14:6)
(2) நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோ.10:9)
(3) அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். (அப:4:12, 10:43, 16:31)
பிரயாணிகள் இளைப்பாறுமிடம் (Pயளளநபெநசள சுநளவ சுழழஅ)
(1) என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்.11:29, எரேமி.6:16, ஏசா.28:11-12 )
(2) என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். (யாத்:33:14, 1.நாளா.22:18, 23:25, 2.நாளா.14:6, 15:14, 20:30)
(3) தேவனுடைய ஐனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது……… ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். (எபி.4:9-11, யோ.14:2)
அந்நியர் உள்ளே வரக்கூடாது (ழே யனஅளைளழைn வழ ளவசயபெநசள)
(1) ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோ.3:3,5)
(2) ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள். (வெளி 21:27, சங்.87:46, பிலி.4:3)
(3) அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். (யோ.1:12-13, மத்.25:34))
தொத்து வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது (னுளநயளந ஊயசசநைசள ழெவ யடடழறநன)
(1) தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை (வெளி 21:27)
(2) பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. (எபி.12:14)
(3) குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு. (எண்.5:2)
நின்று கவனித்து மெதுவாகச் செல்லவும் (ளுவழி ரூ புழ ளுடழறடல)
(1) வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள். (எரேமி.6:16)
(2) காகங்களைக் கவனித்துப் பாருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைகஇ கவனித்துப் பாருங்கள். காட்டு புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள் (மத்.6:26-28, லூக்.12:24-25)
(3) விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். (எபி.12:1, 3:1)
இன்றே கடைசி (வுழ னயல டயளவ)
(1) மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். (லூக்.12:20)
(2) அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார். இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். (அப்.17:30)
(3) இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள். (2.கொரி.6:2, லூக்.19:42-43, எபி.2:1-4)
இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் (லூக்.19:5,9)












