ஈசாக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவன்
ஆதியாகமம் 17:19
இயேசுவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர்
ஆதியாகமம் 15:4-5 , ஏசாயா 7:14 , கலாத்தியர் 1:14
இருவருடைய பிறப்பும் தாய்மார்களிடத்தில் முந்தி அறிவிக்கப்பட்டது
ஆதியாகமம் 18:9-10 , லூக்கா 1:30-31
இரண்டு பேருடைய பெயரும் பிறக்கு முன்னே முன்னறிவிக்கப்பட்டது
ஆதியாகமம் 17:19 , லூக்கா 1:31
இரண்டு பேருடைய பிறப்பும் இயற்கைக்கு வித்தியாசம்
சாராள்: மலடி, கிழவி, ஸ்திரிகளுக்குள்ள வழிபாடு நின்றுபோயிற்று
ஆதியாகமம் 11:30 , 18:11-12
மரியாள்: கன்னிகை, புருஷனை அறியாதவள்
மத்தேயு 1:18-21 , ஏசாயா 7:14
இருவரும் பிதாவின் ஒரே நேசகுமாரர்கள்
ஆதியாகமம் 22:2 , யோவான் 3:16 , லூக்கா 3:22
இருவரும் சொந்த ஜனத்தால் துன்பப்படுத்தப்பட்டனர்
ஆதியாகமம் 21:9-10 , கலாத்தியர் 4:28 , மத்தேயு 27:29-30
இருவரும் தேவகட்டளைக்கு (பிதாவின் கட்டளைக்கு) கீழ்ப்படிந்தனர்
ஆதியாகமம் 22:2-9 , மத்தேயு 27:24-31
ஈசாக்கு சாயங்கால வேளையில் தியானம்பண்ணி வந்தான்
ஆதியாகமம் 24:63 , 25:21
இயேசு இராக்காலங்களில் ஜெபம்பண்ணிவந்தார்
மாற்கு 1: 35 , லூக்கா 6:12
ஈசாக்கு பலிசெலுத்த மரக்கட்டைகளைச் சுமந்துகொண்டு போனான்
ஆதியாகமம் 22:6
இயேசு தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தவராய் சிலுவை மரத்தைச் சுமந்துகொண்டு போனார்
யோவான் 19:17
இருவரும் பிதாவினால் கைவிடப்பட்ட சந்தர்ப்பம் வந்தது
ஆதியாகமம் 22:10-22 , மத்தேயு 27:46
ஈசாக்கு கை கால்கள் கட்டப்பட்டவனாக பலிபீடத்தின் கட்டையின்மேல் கிடத்தப்பட்டான் இயேசு சிலுவை மரத்தில் ஆணிகளால் கடாவப்பட்டுத் தொங்கினார்
யோவான் 19:18,30 , கொலோசெயர் 2:15
இருவரும் மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார்கள்
எபிரெயர் 11:17-29 , மத்தேயு 28:6 , ஆதியாகமம் 25:5 , மத்தேயு 28:18
ஈசாக்கு மோரியா மலையில் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டபோது, ரெபேக்காள் (மணவாட்டி) பிறந்தாள் என்ற செய்தி ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்டது
ஆதியாகமம் 22:20-22
இயேசுவும் கல்வாரி மலையில் தன்னை சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தபோது (மரித்தபோது ) மணவாட்டி (சபை) பிறந்தது
எசாயா 53:10-12 , யோவான் 20:14-16 , மாற்கு 16:9
ஈசாக்கு தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு நூறுமடங்கு பலன் அடைந்து ஜசுவரியவானானான்
ஆதியாகமம் 26:12-14
இயேசுவும் தேவனால் உயர்த்தப்பட்டு சம்பூரண ஜசுவரியத்தையும் கனத்தையும் பெற்றுக்கொண்டார்
பிலிப்பியர் 2:6-11 , வெளி 5:12 , ரோமர் 9: 23 , 10:12 , எபேசியர் 1:18 , 3:8
ஈசாக்கிற்கு (ஆபிரகாம்) எலியேசர் மூலம் ரெபேக்காள் என்ற கன்னிகையை ஆயத்தப்படுத்தி விவாகம் பண்ணினான்
ஆதியாகமம் 24:22,35 , 63-67 , 25:20
இயேசுவும் பரிசுத்த ஆவியானவர்மூலம் ஆவிக்குரிய வரங்களினாலும் கனிகளினாலும் அலங்கரிக்கப்பட்ட கற்புள்ள கன்னிகையை ஆயத்தப்படுத்தி (சபை) அவளைச் சேர்த்துக் கொள்ள வரப்போகிறார்
2.கொரிந்தியர் 11:3 , எபேசியர் 5:26-27 , லேவியராகமம் 21:13-14 , வெளி 19:7-9











