• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

தோல்வியில் அழைப்பு

June 14, 2016
in வேதாகம ஆய்வு
0 0
இயேசு கிறிஸ்துவின் வரலாறு

இராஜாவின் அழைப்பு நமக்குப் பல சூழ்நிலைகளிலே வரும். துக்கத்திலிருக்கிற மக்களுக்கு அழைப்பு வந்தது. தோல்வியிலிருக்கிறவர்களுக்கும் அழைப்பு வரும் என்பதைப் பார்ப்போம். ஒரு வாலிபன் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டுப் பல கதவுகளைத் தட்டி நின்றான். மருத்துவக் கல்லூரியின் கதவைத் தட்டி, மன ஏமாற்றம் அடைந்தான். பொறியியல் கல்லூரியின் கதவைத் தட்டினான், அவன் உள்ளம் புண்பட்டது. எத்தனையோ அலுவலகங்களிலே வேலைக்காக அலைந்து சென்றான். எங்கேயும் வேலை கிடைக்கவில்லை. ‘ஏன் இந்த வாழக்கை? நான் ஏன் ஜீவிக்கிறேன்?” என்று சோர்வுற்று மனம் குன்றி உட்கார்ந்துவிட்டான். அந்த வாலிபனின் தோல்வியுற்ற நிலையிலே ஆண்டவர் அவனோடு பேசினார். ‘உன்னுடைய வாழ்க்கை மருத்துவக் கல்லூரியில் நுழைவதைச் சார்ந்தது அல்ல. ஒருவேளை இன்றைய உலகம், இருந்தால் இன்ஜீனியராக இருக்க வேண்டும் அல்லது டாக்டராக இருக்க வேண்டும் என்று கூறலாம். ஆனால் உன் வாழ்வு அவ்விதமான வழியில் இல்லை. அது என் கையிலிருக்கிறது” என்று அவர் கூறினார். தோல்வியிலே ஆண்டவர் உன்னோடு பேசக்கூடும். தோல்வியின் நடுவிலே, உன்னுடைய கனவுகளெல்லாம் சின்னாபின்னமாகியிருக்கும் நிலையிலே, உன் ஏமாற்றத்திலே கடவுளின் அழைப்பை நீ கேட்கக்கூடும். அதைத்தான் மோசேயின் வாழ்க்கையிலே பார்க்கிறோம்.

மோசே ஒரு நல்ல கனவோடுகூட தன் வாழ்க்கையை ஆரம்பித்தான் ராஜ வாழ்விலே, பார்வோனின் அரண்மனையிலே வாழந்தான். இறுதியிலே பார்வோனின் அரண்மனையை விட்டு தன் உயிர் தப்ப ஓடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாற்பது ஆண்டுகள் பார்வோனின் அரண்மனையிலும், நாற்பது ஆண்டுகள் வனாந்திரத்திலும் வாழந்தான். வனாந்திர வாழ்வை அவன் ஒருவேளை தோல்வியுற்ற வாழ்வாகக் கண்டிருக்கலாம். அவனுடைய கனவு ஒன்றும் பலிக்கவில்லை. தான் செய்ய நினைத்ததை அவனால் செய்ய முடியவில்லை. ஆடுகளை மேய்த்துக்கொண்டு, தன் மனைவியின் கணவன் என்ற முறையிலே அவன் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த நிலையிலே, தோல்வியின் நடுவிலே ஆண்டவரின் அழைப்பு அவனுக்கு வந்தது.

யாத்திரகாமம் மூன்றாம் அதிகாரத்திலே அந்த அழைப்பைப் பார்க்கிறோம். ‘அங்கே கர்த்தருடைய தூத னானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.” (யாத் 3:2). கடவுளின் பிரசன்னம் அங்கே இருந்தது. முட்செடியில் தோன்றி அக்கினி சாதாரண அக்கினி அல்ல, கடவுளின் பிரசன்னத்தைக் காட்டும் அக்கினியென்று மோசே உணர்ந்துகொண்டான் ஏன்? அந்த அக்கினி முட்செடியைப் பட்சித்துப் போடவில்லை. அது பற்றியெரிந்தது. ஆனால் பட்சிக்கவில்லை. ஆகையினாலே இது ஆண்டவரின் அக்கினி என்று மோசே உணர்ந்துகொண்டான். அந்த அக்கினியின் நடுவிலிருந்து தெய்வம் அவனை அழைத்தார்.

இந்த அழைப்பைச் சற்று கவனிப்போம். ராஜாவின் அழைப்பிலே மூன்று காரியங்கள் தெளிவாகிறது. முதலவாது, இந்த அழைப்பிலே, ஒரு தெரிந்தெடுப்பு உண்டு. இரண்டாவது அதிலே மோசேயின் தயக்கத்தையும் காண்கிறோம். மூன்றாவதாக அந்த அழைப்பிலே தற்பிரதிஷ்டையும் உண்டு.

தெரிந்தெடுத்தல்

அழைப்பிலே தெரிந்தெடுப்பு உண்டு. ‘விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். (எபி 11:24-26).

மோசே பார்வோனின் அரண்மனையிலே வளர்க்கப்பட்டவன். பார்வோனின் குமாரத்தி அவனுக்கு வளர்ப்புத் தாயாக இருந்தாள். அரண்மனையின் எல்லாச் சிற்றின்பங்களும், சந்தோஷங்களும், பாக்கியங்களும், வசதிகளும், வாய்ப்புகளும் அவனுக்காகக் காத்திருந்தன. ஆனால் எல்லா சிற்றின்பமும் அநித்தியமானது, என்றென்றைக்கும் திருப்தியைக் கொடுக்காது என்று அறிந்து, கடவுளுக்கும் அவருடைய மக்களுக்கும் மோசே கைகொடுத்தான். அது ஒரு பெரிய தெரிந்தெடுப்பு.

நம் வாழ்க்கையிலே அவ்விதமான திட்டவட்டமான தெரிந்தெடுப்பு இல்லையானால் தரிசனமிருந்காது. நீ ஒரு வேளை உன் வாழ்க்கையை ஒரு நூல் பந்தாக்கி, நூலையெல்லாம் எடுத்துப்போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாய். அந்த நூல் உன் கையிலே சிக்கலாகிவிட்டது. சிக்கலான நூலை உன் கையிலே பிடித்துக்கொண்டு என்ன செய்வது என்று தேம்பித் தேம்பி சிறுபிள்ளையைப் போல அழுதுகொண்டிருக்கிறாய். வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்க உனக்குத் தெரியுமே ஒழிய அதைச் சீர்ப்படுத்த தெரியவில்லை. இந்த நிலையிலே தெய்வத் திட்டங்களையும் ஊழியத்தையும் பற்றிய தரிசனம் எப்படிக் கிடைக்கும்? பாவத்தோடும், உலகச் சிற்றின்பத்தோடும், மாமிச இச்சையோடும் விளையாடிக்கொண்டு எனக்கு ஊழிய அழைப்பில்லை என்று சொன்னால், அழைப்பு எப்படி வரும்? குப்பை மேட்டின் வாழ்க்கையிலிருக்கும் ஓருவன் மேலான வாழ்க்கையை என்றைக்கும் தெரிந்து கொள்கிறானோ அன்றைக்குத் தான் அவனுக்கு அழைப்பு வரும். தெரிந்தெடுப்பு அவசியம். ஒரு பக்கத்திலே ஒதுக்கித் தள்ள வேண்டியவை உள. இன்னொரு பக்கத்திலே அங்கீகரீக்க வேண்டியவை உள. மோசே பாவ சந்தோஷத்தை ஒதுக்கித் தள்ளினான். தெய்வ ராஜ்ஜியத்தையும் தெய்வ ராஜ்ஜியத்தின் பணியையும் தனக்கென்று தெரிந்துகொண்டான். தகாத நண்பர்கள், தகாத பழக்க வழக்கங்கள், அந்தரங்க பாவங்கள், இரகசியமான சிற்றின்பங்கள், வாசிக்கத்தகாத நூல்கள், பார்க்கத்தகாத படங்கள், இவையெல்லாம் ஆண்டவரின் அழைப்பைக் கேட்காதபடி நம்மைத் தடுத்து நிற்கின்றன. மாமிச இச்சைக்கும் அநித்தியமான பாவச் சிற்றின்பங்களுக்கும் முதுகு காட்டி இயேசு கிறிஸ்துவுக்குக் கை கொடுக்கும்பொழுது, ராஜ்ஜியத்தின் பணிக்கென்று அழைக்கப்படுவோம. வாழ்க்கையில் ஏன் இந்தத் தோல்விகள், ஏமாற்றங்கள்? நம் வாழ்க்கையை நாமே நடத்த வேண்டும் என்ற சுயசித்தத்தின்படி வாழ்ந்தோம். நம் தெரிந்தெடுப்புகள் எல்லாம் நம்மைப் பிரியப்படுத்தும் தெரிந்தெடுப்புகளாய் இருந்தன. ஆகையினால்தான் இந்த நிலை. ஒரு வேளை ‘எங்க அப்பாதான் இதற்கெல்லாம் காரணம். நான் என்னவெல்லாமா படிக்க வேண்டும் என்று எண்ணினேன். எதையும் செய்யாமல் என்னைத் தடுத்துவிட்டார். அவன் சொன்னபடி நான் செய்ய வேண்டும் என்று ஆட்டி வைத்தார். ஆகையினாலே இந்த நிலையிலே நான் இருக்கிறேன்” என்று நீ கூறலாம். அல்லது ‘எங்க அப்பா இல்லை, அம்மாதான் காரணம். எங்க அப்பா சொன்னதற்கெல்லாம் எங்க அம்மா மாறுத்தரம் சொல்லி, அவர் சொன்னதையெல்லாம் தடுத்துப் போட்டு என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்” என்று கூறுகிறாய். அம்மாவையும் அப்பாவையும் குற்றஞ்சொல்லி பயனி;ல்லை. உன்னுடைய தெரிந்தெடுப்புகள் சரியாயில்லை. நீ இன்னும் உன்னுடைய வாழ்க்கையைக் குறித்து ஒரு சரியான முடிவிற்கு வரவில்லை. அதுதான் இன்றைக்கு நீ இருக்கும் நிலைக்குக் காரணம். வேறு யாரையும் குற்றஞ்சொல்லாதே.

ஒரு கருமான் ஓரு இரும்புத்துண்டை எடுத்து அதை ஒரு குதிரைலாடமாக அடிக்கலாம் என்று எண்ணினான். அதை நெருப்பிலே போட்டுப் பழுக்கக் காய்ச்சி, பின்னர் அதை எடுத்து சம்மட்டிகொண்டு அடித்தான். குதிரை லாடமாக அமைக்கவேண்டும் என் றஅதை அடித்துக் கொண்டிருந்தான். ஆனால் அடித்துக்கொண்டிருக்கும் பொழுது தீடீரென்று அவன் மனம் மாறிவிட்டது. அது ஒரு குதிரைலாமமாக இருக்கக்கூடாது, அதை வெறும் ஒரு இரும்புத்துண்டாக ஆக்குவேன் என்று சொல்லி மறுபடியும் அதை எடுத்து நெரும்பிலே போட்டான். மீண்டும் அதை எடுத்து அடிக்கத் தொடங்கினானாம். அடிக்கத் தொடங்கியவுடனே மறுபடியும் அவன் மனத்திலே ஒரு மாறுதல். அது இரும்புத் துண்டாக இருக்கக்கூடாது, ஒரு வட்டமாக இருக்கவேண்டும் என்று மறுபடியும் அதை நெரும்பில் போட்டு, மறுபடியும் அடிக்கத் தொடங்கினான். இப்படி அந்த இரும்புத்துண்டை பழுக்கக் காய்ச்சுவதும், சம்மட்டிக்கொண்டு அடிப்பதுமாக இருந்தான். அந்த இரும்பிலே என்ன செய்வது என்று அவனால் தீர்மானிக் கமுடியவில்லை. இறுதியிலே பக்கத்தில் இருந்த ஒரு வாளியிலே இருந்த தண்ணீருக்குள்ளே அதை தூக்கியெறிந்தான் பழுக்கக் காய்ச்சிய இரும்பு தண்ணீருக்குள்ளேபோய் விழுந்ததினாலே உஸ் என்று சத்தம் உண்டாயிற்று. உடனே அவன் அதைப் பார்த்து ‘உன்னிலிருந்து இந்தச் சத்தமாவது எனக்குக் கிடைத்ததே” என்று சொன்னான். நம் வாழ்க்கையை இவ்விதமாய்தான் வீணாக்கிக் கொண்டிருக்கிறோமா? பல பாதைகளிலே சென்றோம் அடைபட்ட கதவுகளைக் கண்டு சோர்வுற்றோம். எத்தனை நாட்களை வீணாக்கிவிட்டோம்? என்னைக்காவது ஒரு நாள் ஆண்டவரே, எங்கள் வாழ்க்கையிலே பாவத்தோடு விளையாடாமல், எங்கள் சொந்தக் காரியங்களைச் செய்வதையே நாடாமல், முழுவதுமாக நூற்றுக்கு நூறு உமக்காக வாழ்வோம் என்று தெரிந்து கொண்டிருக்கிறோமா? இந்தத் தெரிந்தெடுப்பு அவசியம்.

லூக்கா 12: 16-20 ல் ஒரு மனிதனைப்பற்றி வாசிக்கிறோம் அவன் ஒரு ஐசுவரியவான். அதிலே தவறில்லை. அவனுடைய நிலம் நன்றாக விளைந்திருக்கிறது. அதுவும் தவறில்லை. ஏன்? மற்றவர்கள் சோம்பேறிகளாக இருந்தபொழுது, அவன் தன் கடின உழைப்பின் பலனாக தன் நிலத்தை நன்றாய் விளையச் செய்தான். நம் வாழ்க்கையிலும் கடும் உழைப்பின் பலனாய் முன்னேற்றமிருக்கலாம். நல்ல வசதிகள் கிடைத்திருக்கலாம் அதிலே தவறில்லை. நிலம் நன்றாய் விளைந்திருக்கிறது, தானியத்தைச் சேர்த்துவைக்க தன் களஞ்சியங்கள் போதாது என்று அவனுக்கு நல்லத் தீர்க்கச் சிந்தை இருந்தது. அதுவும் தவறில்லை. என் களஞ்சியங்களை இடித்துப் பெரிதாய்க் கட்டுவேன். களஞ்சியங்களில் தானியத்தைச் சேர்ப்பேன்” என்று திட்டம் போட்டான். அதுவும் தவறில்லை. அப்படியானால் அவன் செய்த தவறு என்ன?

லூக்கா 12:19ல் அவன் தவறைக் காண்கிறோம். ‘பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது@ நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.” அதிலே என்ன தவறு? அவன் வாழ்க்கையின் நடுமையத்திலே அவனுடைய சுய இன்பமும், அவனுடைய புசிப்பும், குடிப்பும், இளைப்பாறுதலும் தான் இருந்தன. ஆகையினாலேதான் தேவன் அவனைப் பார்த்து மதிகேடனே என்று அழைத்தார்;. தெய்வ சாயலிலே உருவாக்கப்பட்ட மனிதன் அவரை நடுமையத்தில் வைத்து வாழும்படியாய் உருவாக்கப்பட்டிருக்கிறான். அவன் தன்னை நடுமையத்தில் வைத்து வாழுவானானால் அவன் வாழ்வு நிச்சயமாகத் தோல்வியாகத்தான் இருக்கும். உன் வாழ்க்கையின் நடுமையத்தில் உன் படிப்பு, உன் பட்டம், உன் வெற்றி, உன் வேலையின் முன்னேற்றம், வாழ்க்கையின் முன்னேற்றம் என்று உன் சுயம் நடுமையத்தில் இருக்குமானால் நீ நிச்சயமாக வெற்றிபெற முடியாது. அவ்விதமாய் தேவன் உன்னை உருவாக்கவில்லை.

சில சமயத்திலே நம்முடைய மார்க்க பக்தியும்கூட நம்மை நடுமையத்தில் வைக்கும் மார்க்க பக்தியாக அமைந்து விடுகிறது. அதற்கேற்றவாறு இன்றைக்கும் பல போதனைகளும் நம்மை அந்த வழியிலே நடத்திவிடுகின்றன. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் நீ நீண்டநாள் வாழ்வாய், உன் வியாதிகளெல்லாம் நீங்கும், உனக்கு நல்ல செழிப்பு உண்டாகும், உன் வேலையில் முன்னேற்றம் வரும். நீ வெளிநாடு செல்வாய், நல்ல வேலை கிடைக்கு என்று செழுதைக் கொள்கை போதனைகள் இன்றைக்கு மலிந்து காணப்படுகின்றன. நம் இயேசு நம்மை வாழ வைப்பார். நம் கண்ணீரைத் துடைப்பார். கவலைகளை நீக்குவார். வியாதியைப் போக்குவார். வேலை கொடுப்பார். ஆனால் நாம் அருக்காக உருவாக்கப்பட்டோமென்பதை மறந்து, அவர் நமக்காக இருக்கிறார் என்று எண்ணி நம்மை நடுமையத்தில் வைத்து இயங்கும் விதமாக நம் பக்தி இருக்குமானால் அது திருமறைக்கும் பொருந்தாத பக்தி. ஆகையினாலே நம் தெரிந்தெடுப்பு எப்படிப்பட்ட தெரிந்தெடுப்பாக இருக்க வேண்டும்?

இயேசுவை ஏற்றுக்கொண்டால் நாம் செழுமையும் வளமும் பெறுவோமென்கிற சுயநலமான நோக்கமுள்ள தெரிந்தெடுப்பு அல்ல. இயேசு என் ஆண்டவர், என் ராஜா. அவர் என்னை அழைக்கிறார். அவருடைய சித்தத்தைச் செய்வதற்காக என்னை நான் ஒப்புக்கொடுப்பேன். அவருடைய சித்தத்திலே நான் பாடுபட்டாலும், சிலுவை சுமந்தாலும், எதையும் இழக்கக்கொடுத்தாலும், மரித்தாலும் சரி, அவருக்குகு; கீழ்படிவேன் என்ற அர்ப்பணமுள்ள தெரிந்தெடுப்பாக இருக்குவேண்டும். இன்றைக்கு நம் சபைகளிலும், கிறிஸ்தவ சமுதாயத்திலும் மிஷனெரி தரிசனமும் பாரமும் குன்றிப்போவதற்கு ஒரு காரணம் ‘செழுமைக் கொள்கைப் போதனை” (Pசழளிநசவைல னுழஉவசiநெ). இது போன்ற தவறான போதனைகள் நம்மை குறுக்குப் பாதையிலே திருப்பிவிட்டிருக்கின்றன.

அவுருடைய திட்டங்களுக்காக நாம் பாடுபடும்பொழுது, நாம் வாழ்வோம். நம் சுயத்தை நடுமையத்தில் வைப்போமானால், வாழ்க்கையிலே பலவிதமான ஏமாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். இரட்சிக்கப்பட்டோம் என்று சொல்கிற நம் வாழ்க்கையிலே யார் நடுமையத்தில் இருப்பது? யாருடைய திட்டங்களுக்காக வாழ்கிறோம்? மாம்சத்தைப் போஷித்துக் கொண்டு, நம் சித்தத்திற்காக வாழுவோமானால், தெய்வ ராஜ்ஜியம் எப்படித் தழைப்பது? மோசே பார்வோனின் அரண்மனையிலே அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைத் துறந்து, முழுவதுமாய் கடவுளுக்காகவும், அவருடைய மக்களுக்காகவும், அவருடைய ராஜ்ஜியத்திற்காகவும் தன்னை ஒப்புக்கொடுத்தார். இன்றைக்கு விசுவாசிகளுக்குத் தேவையானது சிலுவை சுமக்கும் சீஷத்துவமே ஒழிய அற்புதங்களையும், அடையாளங்களையும் சொல்லும் மேல்வாரியான மார்க்கமல்ல. தெய்வ ராஜ்ஜியத்திற்காக நான் எதையும் விட்டுக்கொடுக்க ஆயத்தம்.

பெரும் கிறிஸ்தவ தியாகம் இல்லாதபடி பெரும் கிறிஸ்தவ ஊழியம் நடைபெறாது, என்று பக்தர் ஒருவர் கூறியிருக்கிறார். சிலுவை சுமப்பதையும், ஒடுக்கமான பாதையில் நடப்பதையும், கிறிஸ்துவுக்காக விட்டுக்கொடுப்பதையும் கவனிக்கக்கூட நமக்கு நேரமில்லை. நம்டைய செழுமையைக் குறித்தே நாம் யோசித்துக்கொண்டிருக்கிறோம். கடவுளுக்காக ஊழியஞ் செய்வேன் என்று தீர்மானித்த மோசே ஒரு தவறு செய்துவிட்டான். தானாகவே இந்த ஊழியத்தைச் செய்யப்போகிறேன் என்று யோசித்துக் கொண்டான். தன் மக்களுக்குத் தானே விடுதலையின் நாயகன், விடுதலைப் போராட்டத்திலே புரட்சித் தலைவன் என்று எண்ணிக்கொண்டான். அந்த எண்ணத்திலே ஒரு எகிப்தியனும் இஸ்ரவேலனும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து எகிப்தியனைக் கொன்று அவனைப் பகைத்து விட்டான். இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் இரண்டு இ;ரவேலர் சண்டை போடுமபொழுது அதே மாதிரி குறுக்கிட்டான் மோசே. அவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து, ‘நீ செய்ததெல்லாம் எனக்குத் தெரியும், அதே மாதிரி இங்கேயும் செய்யமுடியாதப்பா” என்று சொல்லி விட்டான். மோசே தன்னுடைய காரியம் வெளிப்பட்டது என்று பார்வோனுக்குப் பயந்து, வனாந்திரத்திற்கு ஓடிவி;டான். மாம்ச வைராக்கியத்திலே சரியான ஒப்புக்கொடுத்தல் இல்லாதபடி செய்யும் ஊழியங்கள் இவ்விதமாய்தான் முடியும். அது ஏமாற்றத்தின் வாழ்வு. தோல்வியின் வாழ்வு. அந்தச் சமயத்திலே முட்செடியின் நடுவிலிருந்து கடவுள் பேசுகிறார். அழைப்பு வருகிறது.

அழளந2

தயக்கம்

மோசேயின் அழைப்பில் இரண்டாவதாகத் தயக்கத்தைக் காண்கிறோம். கடவுள் அழைக்கிறார். மோசே தயங்குகிறான். அவனுடைய தயக்கம் என்ன? ‘அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.” (யாத்.3:13). ‘ஆண்டவரே, நீர் என்னை அனுப்புகிறீர். நான் அங்கே போய், கர்த்தர் என்னை அனுப்பினார். நீங்கள் எல்லாரும் புறப்பட்டு வரவேண்டும் என்று கூறும்பொழுது, நீர் யார் ஐயா? என்று அவர்கள் கேட்டால் நான் என்ன சொல்லுவேன்” என்று தயங்குகிறான். நான் ஒன்றுமே இல்லை. நான் சொல்லி மக்கள் கேட்பார்களா? நானும் ஊழியம் செய்ய முடியுமா? என்னாலும் இதைச் சாதிக்க முடியுமா? நான் எதற்குமே தகுதியற்றவன் என்று தன்னைப்பற்றிய தயக்கம். தன்னைத் தானே அவன் இன்னும் சரியானபடி ஏற்றுக்கொள்ளாமல் இருந்தபடியினாலே தன்னைப்பற்றிய தயக்கம் உண்டாயிற்று. ஆண்டவர் அழைக்கும்பொழுது சிலர் என்ன சொல்லுகிறார்கள்? ‘நான் அல்ல, மற்றவர்கள் செல்லட்டும். என்னை ஆண்டவர் அழைக்கமுடியாது. நான் பாவி, திறமையற்றவன், தகுதியற்றவன், என்னை அவர் அழைக்க முடியாது” என்று கூறுகிறார்கள். நான் ஒன்றுமில்லை என்று கூறுவது சரி. ஆனால் நான் ஒன்றுமில்லை. ஆகையால் நான் ஒன்றுமே செய்யமாட்டேன் என்று சொல்லுவது தவறு. நாம் ஒன்றுமில்லை என்று சொல்லும் நாம் அவருடைய சக்தியையும், தகுதியையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அடுத்தபடி மோசே யாத்திரகாமம், 4:1ல் அவர்கள் என்னை நம்பார்கள் என் வாக்குக்குச் செவிகொடார்கள். கர்த்தர் உனக்குத் தரிசனமாவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். என்னை அவர்கள் நம்பமாட்டார்கள் என்ன அதிகாரத்தோடு நான் போவேன்? எதை வைத்துக்கொண்டு நான் அவர்களிடத்திலே பேசுவேன்? எனக்கு ஒரு பட்டம் இருந்தால், ஒருவேளை அவர்கள் நான் சொல்லுவதைக் கேட்பார்கள். ஆனால் ஒன்றுமேயில்லையே. ளு.ளு.டு.ஊ யை எப்படியோ எட்டிப் பிடித்துவிட்டேன். நான் எங்கே ஊழிய்ம செய்வது? என்று கூறுகிறாய். ஆண்டவர் மோசேக்குச் சொல்லும் பதில் என்ன தெரியுமா? நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னை பலப்படுத்துவேன். நான் உன்னை அனுப்புகிறேன். நானே கர்த்தர். ‘உன்னுடைய தகுதி அல்ல, கர்த்தர் உன்னை அனுப்புகிறார் என்கிற நிச்சயத்திலே நீ போ” என்று மோசேயைப் பார்த்து ஆண்டவர் சொன்னார்.

மோசே தன்னைப்பற்றி தயங்கினான். தன் நிலையைப் பற்றித் தயங்கினான். மூன்றாவது தன்னுடைய திறமையைப் பற்றித் தயங்கினான். ‘அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல. நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.” (யாத்.4:10). அப்.7:22 ல் ‘மோசே எகிப்த்தியருடைய சகல சாஸ்த்திர ங்களிலும் கற்ப்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.” என்று கூறியிருக்கிறது. ஆனால் மோசே ‘நான் திக்கு வாயுள்ளவன், மந்த நாவுள்ளவன்” என்று கூறுகிறான். எது உண்மை? இக்கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடாய் இருக்கின்றனவா? இல்லை, ஒரு காலத்தில் வாக்கிலும் செய்கையிலும் வல்லவனாயிருந்த மோசே தனக்கு ஏற்பட்ட பெருத்த தோல்வியினாலே தான் ஒன்றுமேயில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டான். தன்னுடைய சொந்த வாக்கிலும், செய்கையிலும் நம்பிக்கையற்றவனாகிவிட்டான். வாழ்க்கையின் சூழ்நிலைகளினாலும், ஏமாற்றங்களினாலும், வாழ்க்கையிலே நமக்குக் கிடைத்த அடிகளினாலும் எல்லா நம்பிக்கையும், நம்முடைய தன்னம்பிக்கையையும் இழந்து, ஒன்றுமே செய்யமுடியாது என்கிற நிலைக்கு நாம் வரக்கூடும். மோசே அந்நிலையில்தான் இருந்தான். ‘ என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. எனக்கு தன்னம்பிக்கையே இல்லை. நான் செய்ததெல்லாம் தோற்றுப்போய்விட்டது. இனிமேல் நான் ஒன்றுமே செய்யமாட்டேன்” என்று கூறுகிறாயா? அந்தக் காரணத்தைச் சொல்லித் தயங்கிக்கொண்டிருக்கிறாயா? தேவன் அவனைப் பார்த்து ‘…… நீ போ. நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்” (யாத்.4:12). நம் தகுதியற்ற நிலையைச் சாக்காகச்சொல்லக்கூடாது. ‘படிப்பில்லை, உடலில் பலமில்லை, வயதில்லை” என்று சாக்குச் சொல்லக்கூடாது. ராஜா நம்மை அழைக்கும்பொழுது தயங்குவதற்கு அவசியமேயில்லை. எத்தனையோ அருமையான பக்தர்களை ஆண்டவர் பயன்படுத்தவில்லையா?

ஆபிரிக்காவிலுள்ள மாளாவி நாட்டிலே நடந்த ஒரு மிஷனெரி கூட்டத்திலே நான் ஒரு வாலிபனைச் சந்தித்தேன். அவன் அந்தக்கூட்டத்தில் தன் சாட்சியைச் சொன்னான். அவன் ஒரு சாதாணமானது. அவன் கால்களிலே செருப்புகள் கிடையாது. ஆனாலும் அவன் சொன்னது என்ன தெரியுமா? ‘நான் ஒரு குடியானவன். சோளமும், பருத்தியும் பயிர் செய்கிறவன். அவற்றை எடுத்துக்கொண்டு என் நாட்டின் எல்லையைத்தாண்டி, அருகில் இருக்கிற மொசாம்பிக் நாட்டுக்குச் சென்று இயேசு கிறிஸ்துவை அறிவித்திருக்கிறேன். அதன் பலனாக, இன்றைக்கு முப்பத்தைந்து சபைகள் அங்கே உருவாகியிருக்கின்றன” என்று கூறினான். நான் அவனை உற்று கவனித்தேன். சாதாரண ஒரு ஏழை வாலிபன். கால்களில் செருப்புகள் கிடையாது. அவன் பெயர்கூட யாருக்கும் தெரியாது. ஊர் பெயர் தெரியாத, புகழும் குறித்து நான் எண்ணிக்கொண்டேன். ஆண்டவர் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறாரோ, அதை அவர் கையில் கொடுக்கும்படி அழைக்கிறாரே ஒழிய, அவர் கொடுக்காததைப் பார்த்து அவர் அதைக் கொடுக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டு செயலற்ற நிலையின் அழைப்பிலே ஆண்டவருக்கு தன்னைப் பிரதிஷ்டை செய்வதைப் பார்க்கிறோம். மோசேயை ஆண்டவர் அழைத்தார். அவன் தயங்கினான். தன் தயக்கத்தினால் ஆண்டவருடைய மனத்தைப் புண்படுத்தினான். ஆனால் இறுதியிலே தன்னை முழுவதுமாக அவர் கையிலே ஒப்புக்கொடுத்தான்.

ஆண்டவர் மோசேக்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படி கட்டளை கொடுத்தார். மோசே கட்டிடங்கள் கட்டுவதற்குரிய திறமையைப் பார்வோனின் அரண்மனையிலே கற்றிருக்க வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டவேண்டுமென்று ஆண்டவர் சொன்னவுடனே, ‘ஆம் ஆண்டவரே, பார்வோனின் அரண்மனையிலே நான் பொறியியல் கற்றிருக்கிறேன். ஆகையினாலே எதையும் நான் கட்டி உருவாக்கிச் சாதித்து விடுவேன்” என்று மோசே பெருமை பாரட்டவில்லை. இன்றைக்கு சிலர் ஆண்டவரிடத்திலே போய், ‘ஆண்டவரே, என்னை என்னுடைய பட்டம், என்னுடைய இசைத்திறமை என்னுடைய பாட்டு வரம், என்னுடைய வம்ச வரலாறு, என்னைப்போல் உமக்கு யார் உண்டு?” என்று கூறுகிற விதமாய் நடந்துகொள்ளுகிறோம். ‘ஆண்டவரே, என்னுடைய பயிற்சி எல்லாம் ஒன்றுக்குமே உதவாது. அதை இன்றைக்கு அலமாரியிலே வைத்துவிட நீர் சொன்னாலும் அழகாக அதை அடுக்கி வைத்துவிடுவேன். எவ்விதத்திலாவது உமக்காக நான் பணியாற்ற விரும்புகிறேன்” என்ற அர்ப்பணம்தான் வேண்டும். ஆண்டவர் மோசேயைப் பார்த்து ‘அதோ அந்தப் பெசலெயேலையும் அவனோடே கூட இன்னும் சிலரையும் அழைத்திருக்கிறேன். இதோ இந்த மக்களெல்லாம் தங்களுடைய நகைகளையும், பொருட்களையும் உன் கையிலே கொடுப்பார்கள். நான் உனக்கு ஒரு திட்டம் கொடுக்கிறேன். ஆசரிப்புக் கூடாரத்தை நான் சொல்லுகிறபடி நீ அமைக்க வேண்டும். உன் எகிப்திய பயிற்சியையெல்லாம் ஒருக்கி வைத்ருவிடு. நான் கொடுக்கிற திட்டத்தை நீ செயலிலே நிறைவேற்று” என்று கூறினார். இதுதான் கிpறஸ்தவ ஊழியத்தின் சாராம்சம்.

‘ஆண்டவரே, நீர் எதைச் செய்யச் சொல்லுகிறீரோ அதை நான் செய்கிறேன். என் திட்டங்கள் அல்ல, திறமைகள், சாமர்த்தியம் அல்ல. என்னை முழுவதும் வெறுமையாக்கி நீர் செய்யச் சொல்வதை நான் செய்கிறேன்” என்று நாம் கூறவேண்டும். நம் வாழ்க்கையை வெறும் தாளாக்கி, அவர் கையில் அந்த வெள்ளைத்தாளை கொடுக்கும் பொழுது அவர் அந்தத்தாளில் எழுதுகிறார். நம்முடைய கையெழுத்தை மட்டும் அதிலே போட்டுவிட வேண்டும். அதற்காகத்தான் அவர் நம்மை அழைக்கிறார். இவ்விதமான அழைப்புக்கு நாம் ஆயத்தமாய் இருக்கிறோமா?

ShareTweetPin

Related Posts

ஆசரிப்புக்கூடாரம்
வேதாகம ஆய்வு

ஆசரிப்புக்கூடாரம்

ஆசரிப்புக்கூடாரம் (யாத். அதிகாரங்கள் 25-27 , 36-38) ஆசரிப்புக்கூடாரத்தின் பல பெயர்கள் ஆசரிப்புக்கூடாரம் - யாத்.27:21, 28:43 கூடாரம் - யாத்.26:9 கர்த்தருடைய கூடாரம் - 1.இராஜா.2:28...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு
வேதாகம ஆய்வு

பலிதமாகும் அழைப்பு

இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். (லூக்.19:5) (ஊ.ர். ளுpரசபநழn)...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு
வேதாகம ஆய்வு

யோசேப்பும் கிறிஸ்துவும்

யோசேப்பும் கிறிஸ்துவும் யோசேப்பு பிதாவின் (யாக்கோபு) நேசகுமாரன் ஆதியாகமம் 37:4 இயேசு பிதாவின் நேசகுமாரன் மத்தேயு 3:17 (இயேசு பிதாவின் நேசகுமாரன் என்று ஏழு தடவைகள் எழுதப்பட்டிருக்கிறது.)...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு
வேதாகம ஆய்வு

வேதாகமத்தில் ஆசாரியர்கள்

01) ஆரோன் - யாத்.28:29 , லேவி.8 , சங்.133 , எபி.5:1-4 02) எலெயாசார் - எண்.20:24-29 , உபா.6:10 , யோசு.24:33 03) பினெகாஸ்...

Next Post
இயேசு கிறிஸ்துவின் வரலாறு

ஈசாக்கும் கிறிஸ்துவும்

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

நம்பினால் நன்மையடைவாய்

Recommended

Song 213 – Sabikapadda

பாடல் 274 – சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்

பாடல் 274 – சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(5) பெருந்தீனி

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 01: தேவனுடைய பிள்ளையாகுதல்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.