புதிய உடன்படிக்கை ஊழியன்
தன்னுடைய ஊழியப் பணியை நிறைவேற்றுவதற்கு தேவனுக்கு மனுஷர்கள் தேவை! ஏனென்றால் இந்தப் பூமியில் அவருடைய ஊழியங்கள் அனைத்தும் மனுஷரைச் சார்ந்திருக்கும்படியான நிலையிலேயே தேவன் ஏற்படுத்தி வைத்துள்ளார். ஆனால் தேவன் அழைத்திடும் அந்த மனுசன் ஆயத்தமாயிராத பட்சத்தில், தேவனுடைய பணி தாமதமாகிறது அல்லது பாதிக்கப்படுகிறது. இருப்பினும் தேவனுடைய அழைப்பிற்கு ஒருவன் இணங்குவதற்குத் தவறும்போதோ, தேவன் வேறொருவனை அழைத்துவிடுவார்.
ஊர்; என்கிற தேசத்திலிருந்து ஆபிரகாம் தன்னுடைய வீட்டையும், தன் உறவினர்களையும் விட்டுவிட்டு அறியப்படாத தேசத்திற்குச் செல்லும்படி தேவன் அழைத்தார். இவ்வேளையில் கீழ்ப்படிவதற்கு ஆபிரகாம் விருப்பமற்றவனாய் இருந்திருந்தால் தேவன் நிச்சயமாய் அவரைக் கட்டாயப்படுத்தியிருக்கவே மாட்டார். ஆம்! தேவன் வேறொருவரைத் தனக்கென அழைத்திருக்கக்கூடும். நாமும் ஆபிரகாமைக் குறித்து கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம்.
தேவனால் அழைக்கப்பட்டு அவருக்கென ஊழியம் செய்வது ஓர்; சொல்லி முடியாத பாக்கியமாகும். ஆனால், இந்த அழைப்புடன் மாபெரும் பொறுப்பும் உத்திரவாதமும் சேர்ந்தே வருகிறது!
யாக்கோபின் சந்ததியைக் குறித்த தேவனுடைய பூரண திட்டத்தில், அவர்கள் சரியாக நான்கு நூற்றாண்டுகள் (நானூறு வருடங்கள்) எகிப்து தேசத்தில் வாழ்ந்திட வேண்டும். இவ்வாறு ஓர்; அந்நிய தேசத்தில் 400 வருடங்கள் அடிமைகளாய் சேவிப்பார்களென ஆபிரகாமுக்கு அநேக வருடங்கள் முன்பே தேவன் கூறிவிட்டார் (ஆதி.15:13). ஆனால் முடிவில் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து தேவன் விடுவித்தபோது, அவர்கள் 430 ஆண்டுகள் எகிப்து தேசத்தில் வாழ்ந்துவிட்டார்கள் (யாத்.12:40).
இவ்வாறு இஸ்ரவேலரைக் குறித்த பூரண திட்டத்திற்கு முரணாக, அவர்கள் ஏன் 30 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இருக்கவேண்டியிருந்தது.
இந்தக் கேள்விக்கு நாம் என்ன பதிலைச் சொல்லுவோம்? ஆம்! ஐனங்களை நடத்திச் சென்றிட மோசே இன்னமும் ஆயத்தமாகவில்லை! இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கிட தேவனுக்கு ஓர்; ஆவிக்குரிய ஓர்; மனிதன் தேவைப்பட்டான். ஆனால் அந்த மனிதனோ ஓர்; ஆவிக்குரிய தலைவனாய் மாறுவதற்கு தேவனால் முதலாவது ஆயத்தம் செய்யப்பவேண்டியதாயிருந்தது.
தேவனுடைய ஊழியர்கள் உடைபடுதல் வேண்டும்
மோசே 40 வயதாய் இருந்தபோது, தனக்குத்தானே வலிமை கொண்டவனாய் இருந்தது மாத்திரமல்ல தான் இஸ்ரவேலருக்குத் தலைவனாய் இருப்பதற்குத் தகுதியும் பெற்றிருப்பதாக எண்ணிக்கொண்டான். ஆனால் தேவனுடைய பார்வையிலோ மோசே இன்னமும் ஆயத்தமாகவில்லை.
மோசே 40 வயதாகையில், எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான் (அப்7:22) என வேதம் கூறுகிறது. மோசே ஒரு நாள் தன்னுடைய இஸ்ரவேல் சகோதரர்;களைச் சந்தித்த போது அவர்களில் ஒருவன் ஒரு எகிப்தியனால் அநீதியாய் நடத்தப்பட்டதைக் கண்டான். அவ்வேளையில் அந்த இஸ்ரவேலனின் சார்பாக மோசே நின்று கொண்டு எகிப்தியனைக் கொன்றான். இச் சம்பவத்தின் மூலமாய் தான் இஸ்ரவேலர்களுக்கு தேவனால் நியமிக்கப்பட்ட தலைவன் என்பதை இஸ்ரவேலர்கள் கண்டுகொள்வார்கள் என மோசே எண்ணினான். ஆனால், அவர்களோ, மோசே எண்ணியவிதமாய் அவனைத் தங்களுக்குத் தலைவனாய் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆம்! ஓர்; தேவ ஊழியனாய் இருப்பதற்குரிய தகுதியின் வெளிச்சத்தை மோசே இன்னமும் அறியாதவனாகவே இருந்தான்.
எனவேதான், தன் மனுசீக பெலத்திலும் ஞானத்திலும் மோசே கொண்டிருந்த நம்பிக்கையை உடைக்கும்படியாய் தேவன் அவனை வனாந்திரத்திற்கு கொண்டுபோனார்;. இந்தப் பயிற்சியானது தேவனுடைய பரிபூரணத்திட்டத்தில் 10 வருடங்கள் மாத்திரமே காலவரையறை கொண்டிருந்தது. ஆனால் இதற்கு மாறாக, மோசே உடைபடுவதற்கு 40 வருடங்கள் பிடித்தது. இதினிமித்தமே தங்களுடைய தலைவன் ஆயத்தமாவதற்கு இஸ்ரவேலர்கள் மேலும் 30 வருடங்கள் காத்திருக்கவேண்டியதாகிவிட்டது.
தேவன் தெரிந்தெடுக்கும் தலைவர்கள், குறிப்பிட்ட காலங்களில் உடைபடாத பட்சத்தில் அவருடைய திட்டங்கள் தாமதமாகிவிட வாய்ப்பிருக்கிறது. நாம் உடைபடுவதற்கென ஓர் குறிப்பிட்ட கால அளவை தேவன் நிர்ணயம் செய்துவைத்திருக்கிறார்;. அந்தக் கால அளவை நாம் ஒருபோதும் குறைத்திட முடியாது. ஆனால் தேவனுடைய பயிற்சிக்கு நம்மை ஒப்புக்கொடுக்காத பட்சத்தில், அக் கால அளவை நாமாகவே நீடித்துவிட முடியும். இவ்வாறு, ஒரு ஒப்புக்கொடுக்காத கடினத்தன்மை உடையவர்களாய் இருந்தால், நமக்குத்தான் அதிக இழப்பு ஆகும்! தேவனுடைய பணியும் பாதிக்கப்படும்.
மோசே போலவே நாமும் வேதஉபதேசங்களை நன்கு கற்றவர்களாயும், தேவனுடைய முழு ஆலோசனைகளையும் அறிந்தவர்களாயும் பரிசுத்தஆவியின் அபிசேகத்தைப் பெற்றவர்களாயும், நம்முடைய பார்வையில் வாக்கிலும் செய்கையிலும் வல்லவர்;களாயும் காணப்பட முடியும். இன்னமும் ஒருபடி அதிகமாய் நாம் மோசேயைப் போலவே, தோல்வியினால் கட்டுண்ட நம்முடைய சகோதரர்களுக்காக கரிசனை கொண்டவர்களாயும் இருக்கமுடியும். இதினிமித்தமாய் இப்போது தேவனை சேவிப்பதற்கு நாம் முழு ஆயத்தம் பெற்றவர்கள் என நாமாகவே எண்ணிக்கொள்ள முடியும். ஆனால் நாமோ உண்மையில் இன்னமும் ஆயத்தமாகவில்லை.
நாம் மோசேயைப் போல வார்த்தைகளில் வல்லவர்;களாய் பேச்சுத்திறமை கொண்டிருக்கமுடியும். நம் பிரசங்கத்தை மற்றவர்கள் சுமார் 1மணி நேரம் கூட கவனித்துக் கேட்க ஆர்வம் கொண்டிருக்க முடியும். ஆனால் அது எல்லாம் தேவனுடைய தகுதிக்கு சிறந்த நிரூபணம் இல்லை. ஏனெனில் இந் நாட்களில் ஐனங்கள் அரசியல் தலைவர்களின் பேச்சைக்கூட 2 அல்லது 3 மணி நேரங்கள் கேட்பதற்கு விருப்பத்துடன் இருக்கிறார்;கள். ஆகவே நாம் தேவனை நம்முடைய சுபாவமான திறமைகளை வைத்து சேவிக்காதிருக்க ஐhக்கிரதையாய் இருக்கக்கடவோம். ஏனென்றால் நாம் எவ்வளவு அதிகம் வரம் பெற்றிருக்கிறோமோ அந்த அளவு மனுஷீகத் திறமைகளைச் சார்ந்து தேவனை சேவிப்பதற்குத் துணியும் அபாயம் நம்மிடம் இருக்கிறது. இதினிமித்தமே நாம் உடைபடவேண்டியத அவசியமாயிருக்கிறது.
அந் நாட்களிலிருந்த இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மீது நம்பிக்கை உண்டாகவில்லை. மோசேயை ஐனங்களுக்குத் தலைவனாக நியமித்திட அவன்மீது தேவனுக்கு நம்பிக்கை இல்லாதிருந்தது. இவ்வாறு தன்மீது தேவனோ அல்லது மனுஷர்களோ நம்பிக்கை வைக்காதிருக்கும்போது ஒருவன் எவ்வாறு மற்றவர்களை நடத்தும் தலைவனாக இருக்கமுடியும்???
தேவனுடைய பிரதிநிதியாக, நம்மைத் தேவன் எடுத்து உபயோகப்படுத்து வதற்கு நாம் தகுதி கொண்டவர்கள்தான் என நாமாகவே நமக்குள் எண்ணிக்கொள்ளலாம். ஆனால் நாம் எண்ணுவதைப் போல தேவன் அவ்வாறு எணணாதிருக்கமுடியும்! நாம் ஆண்டவருக்கு வலிமையான ஊழியம் செய்யவேண்டுமென்றால், நாம் செய்திடும் ஊழியத்தின் மீது தேவனுடைய அங்கீகார முத்திரையைப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் தேவனோ நாம் உடைபடும்வரை நம்முடைய ஊழியத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவே மாட்டார்.
எந்த மோசே வார்த்தைகளில் வல்லவன் என பெயர் பெற்றிருந்தானோ, இப்போது அதே மோசே உடைபட்ட பின்பு ஆண்டவரே நான் திக்குவாயன், மந்த நாவும் உள்ளவன்! என்றான் (யாத்.4:10). இந்த ஆச்சரியமான நிலைக்கு தேவன் எவ்வாறு மோசேயை உடைத்தார்? அவனை அவர் வறண்ட வனாந்தரத்திற்கு அனுப்பினார். அங்கு தான் மோசேக்கு திருமணமும் நடந்தது. மேலும் தன் மனைவியின் பெற்றோர்களுடைய வீட்டில்தான் மோசே வாழவேண்டியிருந்தது. ஓர் நிர்கதியற்ற நிலையில் தன் மாமனாரைச் சார்ந்து வாழும் ஒருவன் எவ்வளவு துரிதமாய் உடைக்கப்படுகிறான் என்பதைக் காண்பது நமக்கு வியப்பாய் இருக்கிறது. இதேபோலதான் மோசேக்கு பலவருடங்களுக்கு முன்பு யாக்கோபை தேவன் உடைத்தார்.
இவ்வாறு மோசே தன் மனைவி பிள்ளைகளுடன் மாமனார் குடும்பத்தோடு இருந்த சூழ்நிலையிலும் தன் மாமனாரின் மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த சூழ்நிலையிலும்தான் தேவன் மோசேயை உடைத்து சிறுமைப்படுத்தினார். இவ்வாறு உடைபடவேண்டிய கல்வித்திட்டத்திற்கு 40 வருடங்கள் பிடித்தது. இவன் நொறுங்கும்வரை காத்திருக்க தேவன் ஆயத்தமாயிருந்தார். ஆகவே தேவமனிதன் ஆயத்தமாகும் வரை தேவஐனங்களும் காத்திருக்கவேண்டியதாகிவிட்டது.
தேவன் இன்றும் காத்துக்கொண்டு தான் இருக்கிறார். நம் தேசத்தின் பல பகுதிகளில் கிறிஸ்துவின் சரீரமாய் கட்டப்படவேண்டிய தேவையுள்ள ஆத்துமாக்கள் சிதறி இருக்கிறார்கள். ஆனால் இந்த சரீரத்தைக் கட்டுவதற்கு, தான் உபயோகப்படுத்தப்போகும் தன் ஊழியர்களை தேவன் தெரிந்து கொண்டு அவர்களை உடைத்து ஆயத்தம் செய்யவேண்டியதாயிருக்கிறது.
ஆகவேதான் நம்முடைய வீடு மற்றும் வேலைசெய்யும் சூழ்நிலைகளை தேவனுடைய பல்கலைக்கழகமாக காணவேண்டியது நமக்கு அவசியமாய் இருக்கிறது. நம் மாமனார் குடும்பத்தோடும், நம் சொந்த குடும்பத்தோடும்நாம் சந்திக்கும் நெருக்கமான சூழ்நிலைகள் யாவும் தேவனுடைய கல்வித்திட்டத்தின் வழிமுறைகளாகவே இருக்கிறது. இச் சூழ்நிலைகள் மூலமாகத்தான் அவர் நம்மைத் தன்னுடைய ஊழியர்களாய் ஆயத்தம் செய்கிறார். இவ்வித சூழ்நிலைகளில், உபதேசங்களைக் காட்டிலும் மேலான பாடங்களை நமக்கு கற்றுத்தருகிறார்;… அவர் நம்மை உடைக்கிறார்.
ஆனால் தங்களைக் குயவனின் கையில் இருக்கும் களிமண்ணாக தங்களை தாங்களே அர்ப்பணிப்பவர்கள் மிக மிக கொஞ்சமாக இருப்பதையே தேவன் காண்கிறார். அவரிடம் பயிற்சிக்கு வருகிற அநேகர் முரட்டாட்டம் செய்து மரிப்பதற்கு மறுக்கிறபடியால், தேவன் அவர்களைப் புறம்பே வைத்து புறக்கணிக்கவேண்டியதாயிருக்கிறது.
மோசே இந்த 40 வருடங்களில் உபதேசங்களைக் கற்றுக்கொள்ளவில்லை. ஒருவன் புத்திசாலியாய் இருந்தால் உபதேசங்களைச் சொற்ப நாட்களில் கற்றுக்கொள்ள முடியம். ஆனால் உடைபடுபவதற்குத்தான் அதிககாலம் ஆகிறது. எல்லா நேரங்களிலம் தன்னைக் குறித்து சிறிய எண்ணம் கொண்டு அதில் வேரூன்றி நிலைத்திருப்பது அவ்வளவு எளிதான கிரியை இல்லை. முதிர்ச்சியடைந்த விசுவாசிகள் மத்தியில் நாம் இருக்கும்போது நம்மை ஓர் முக்கியமானவனாய் எண்ணாதிருக்கலாம். ஆனால் நம்முடைய ஸ்சூதல சபைக்கு போகும்போது இங்குதான் நம்மை முக்கியமானவர்;களாய் கருதி சிந்திக்கத் தொடங்குகிறோம். இங்குதான் அபாயம் இருக்கிறது. நாம் போகும் ஒவ்வவொரு இடங்களிலும் நம்மைப் பரிசுத்தவான்கள் எல்லாரிலும் சிறியவன் என்பதை நன்கு அறிந்துகொள்ளும் நிலைக்கு கொண்டுவர தேவன் அவ்வளவாய் நம்மை முற்றிலும் உடைக்க வேண்டியதாய் இருக்கிறது.
இளம் வாலிபர்களையே தேவன் அழைக்கிறார்
இயேசு இளைஞர்களையே தன் அப்போஸ்தலர்;களாக அழைத்தார். ஒருவன் அப்போஸ்தலனாய் இருக்க வேண்டுமென்றால் குறைந்தது 60 அல்லது 65 வயதுடையவனாய் இருக்கவேண்டுமென அநேகர் எண்ணுகிறார்கள். ஆனால் இயேசு தெரிந்துகொண்ட முதல் அப்போஸ்தலர்கள் சுமார் 30 வயது நிறைந்தவர்களாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் முன்னோடியான இயேசுவும்கூட அவர் மரிக்கும்போது 33 அரை வயது உடையவராகவே இருந்தார். அவருடைய 11 அப்போஸ்தலர்கள் அவரைக் காட்டிலும் இளம் வயதுடையவர்;களாகவே இருந்தார்கள். பொதுவாக யூதர்களின் போதகர்கள் தங்களைக் காட்டிலும் இளையவர்களையே தங்:கள் சீஷனாகத் தெரிந்துகொள்வார்கள். இதன்படி பெந்தெகொஸ்தே நாளில் யோவான் அப்போஸ்தலன் 30 வயது நிறைந்தவராகவே இருந்திருக்கக்கூடும் என அறிகிறோம்.
இயேசு அந்த இளைஞர்களைத் தெரிந்துகொண்டபோது, அவர்களுடைய அனுபவத்தை அவர் பார்க்காமல் அவர்களின் முழு இருதயத்தையும் பார்த்தார். பெந்தெகொஸ்தே நாளில் இந்த இளைஞர்கள் யாவரும் பரிசுத்த ஆவியினால் அபிசேகிக்கப்பட்டு, ஆண்டவருடைய அப்போஸ்தலர்களாகப் பரத்தின் வல்லமையினால் உருவாக்கப்பட்டார்கள். அனுபவத்தையும் முதிர்ச்சியையும் பின்வரும் காலங்களில்தான் பெற்றார்கள். தீமோத்தேயும் கூட அப்போஸ்தலனாய் மாறியபோது இளமையான வாலிபனாகவே இருந்தார் (1.தீமோ.4:12).
இன்று தேவன் தன்னுடைய ஊழியத்திற்கு வாலிபர்களையே அழைக்கிறார். ஆனால் இது போன்ற வாலிபர்கள் எப்போதும் தாழ்மையில் தங்கியிருப்பவர்களாய் இருக்கவேண்டும். ஏனெனில், தேவனால் அழைக்கப்பட்ட எந்த ஒரு வாலிபனுக்கும் வரக்கூடிய பிரதானமான அபாயம் ஆவிக்குரிய பெருமையாகும்.
நம் தேசத்தில் தேவனுடைய ஊழியர்களாய் அழைக்கப்பட்ட அநேகம் இளைஞர்கள் தங்களுடைய அழைப்பிலிருந்து வீழ்ச்சியடைந்த ஏராளமான துயர சம்பவங்களை அறிந்திருக்கிறேன். சிலருடைய வீழ்ச்சி எப்படியெனில், தேவன் அவர்களை ஏதாகிலும் ஒரு வகையில் உபயோகப்படுத்தத் துவங்கியவுடன் பெருமையினால் நிறைந்து, தேவனுக்குரிய மகிமையைத் தாங்கள் எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறபடியால்….. அவர்களைத் தேவன் ஒதுக்கி வைத்து விடுகிறார். இன்னும் சிலருடைய வீழ்ச்சியில், அவர்கள் உலகத்தின் சொகுசை விரும்புகிறபடியால், அவர்களின் விரும்பத்திற்கேற்ப ஏராளமாய் சம்பளத்தை வாரி வளங்கும் மேற்கத்திய கிறிஸ்தவ ஸ்தாபனங்களுக்கு கூலி வேலை செய்பவர்களாய் மாறிவிடுகிறார்கள். இவ்வாறாகவே இவர்கள் பிலேயாமைப்போல வழிவிலகிப் போகிறார்கள். இன்னும் சிலருடைய வீழ்ச்சியில் சௌந்தரிய மிக்க தெலீலாக்களால் ஈர்க்கப்பட்டு, சிம்சோனைப் போல தங்கள் அபிசேகத்தை இழந்து நிற்கிறார்கள். இவ்வாறாக இந்த அருமையான வாலிபர்கள் மனுசருடைய புகழ்ச்சிக்காக, பணத்துக்காக அல்லது இச்சையைத் திருப்தி செய்யும் சௌந்தரிய மிக்க ஸ்திரிகளுக்காக தங்கள் மேன்மையான அழைப்பையும், அபிசேகத்தையும் பலி கொடுத்து விட்ட துயரத்தை நான் கண்டிருக்கிறேன்.
இன்று நம் தேசத்தில், பணத்தையும், மயக்கும் மாதுக்களையும் அல்லது மனுசரின் அங்கீகாரத்தையும் துச்சமென மதித்து தேவனுடைய வார்த்தையை அச்சமின்றி பிரகடனம் செய்யும் தேவனுடைய தீர்க்கதரிசிகள் எங்கே இருக்கிறார்கள் ???? இப்படிப்பட்டவர்களைக் காண்பது இன்று மிக மிக அரிதாகிவிட்டதே! தேவனால் அழைக்கப்பட்டவர்களில் அநேகர், தங்கள் ஊழிய பயணத்தில் தடுமாறி வீழ்ச்சியடைந்துவிட்டார்கள்!!!
தேவனுடைய உகந்த பலி நொருங்குண்டதும், நருங்குண்டதுமான ஆவியே ஆகும். நாம் நொருங்குண்டு தாழ்மையானவர்;களாய் இருந்தால் நம்மை எப்போதும் தேவன் உபயோகப்படுத்திக்கொண்டே இருப்பார். ஆனால் நாம் தேவனிடத்திலிருந்து பெற்ற வெளிப்பாட்டின் நிமித்தமோ அல்லது தேவன் நமக்குத் தந்த வலிமையான ஊழியத்தினிமித்தமோ இப்போது நான் விசேசித்தவனாக மாறியிருக்கிறேன் என எண்ணும் நாளிலிருந்து மாபெரும் வீழ்ச்சியை நோக்கி நாம் செல்லத் துவங்கி விடுவோம். தேவனும் நம்மை ஒதுக்கி வைத்துவிடுவார்… இது துயரம்!
இந் நிலைக்க வந்துவிட்ட நாம் இன்னமும் கூட சில சபைகளில் மூப்பர்களாய் இருக்கும் ஸ்தானத்தைத் தக்க வைத்துக்கொண்டவர்களாய் இருக்கலாம். ஆனால் நாமோ நம்முடைய ஜீவியத்தை வீணாக்கிவிட்டோம் என்பதை நிச்சயமாய் நித்தியத்தில் காண்போம்.
தேவன் பூஐ;யமானவர்களையே அழைக்கிறார்
1.கொரிந்தியர் 3:5ல் பவுல் யார்;? அப்பொல்லோ யார்? என்ற கேள்வியை பவுல் கேட்டார். இந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்வோமென்றால் பவுலா, அவர் ஓர்; மாபெரும் வல்லமை நிறைந்த கர்த்தருடைய அப்போஸ்தலன், மரித்தவனை உயிரோடு எழுப்பினான், ஏராளமான சபைகளைக் ஸ்தாபித்தவன்….. இன்னமும் சொல்லவேண்டுமென்றால் வேதவாக்கியங்களை தன் கைப்பட எழுதியவன் என்றெல்லாம் நாம் பவுலைக் குறித்து கூறுவோம். ஆனால் பவுல் அந்தக் கேள்விக்கு விடைகூறும்போது, பவுல் யார்? ஊழியக்காரன்தானே! என தன்னைக் குறித்து கூறினார்;. உண்iயிலேயே பவுல் தன் ஜீவிய காலமெல்லாம் தன்னைக் குறித்து கொண்டிருந்த எண்ணம் அவ்வளவுதான். ஆம்! பவுல் தன் ஊழியப்பாதையி;ல் ஒரு தடவைகூட விழாதிருந்தது நமக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. நாம் பிறருக்கு ஊழியர்கள் அல்லது வேலைக்காரர்கள் என்ற எண்ணத்தை விட வேறுவிதமாய் சிந்திக்கத் துவங்கினால் நமக்கு அக்கணமே பின்மாற்றம் துவங்கிவிடும்.
பவுல் மேலும் கூறும்பொழுது நான் நட்டேன், அப்பொல்லோ நீர்; பாய்ச்சினான் எனக் கூறினார்;. இங்கே பவுல் கூறிய இருவரில் யார் பெரியவர்? நட்டவரை எடுத்துக்கொள்ளுங்கள் – இவர் சொல்லப்பட்டிராத இடங்களுக்கு மிஷனறியாகச் சென்று தேவனுடைய ஊழியத்தைச் செய்து சுவிசேஷத்தை நட்டவர். இப்போது நீர்; பாச்சியவரை எடுத்துக்கொள்ளுங்கள் இவர் நட்டவருக்குப் பின்பாக வந்து செடிகளுக்குத் தேவனுடைய வார்த்தைகள் மூலம் தண்ணீர்; பாய்ச்சி விசுவாசிகளை ஒரே சரீரமாய் கட்டியவர்;. இவர்களில் யார் பெரியவர்? என்ற கேள்வியை மீண்டும் கேட்டுப் பாருங்கள். அதற்கு பவுலே விடை கூறுகிறார்: நடுகிறவனாலும் ஒன்றுமில்லை! நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை(1.கொரி.3:7). ஆம்! இருவருமே ஒன்றுமில்லை. அதாவது இருவருமே பூஐ;யங்கள். அப்படியானால் இங்கு வேறு எதுதான் காரியம்? அதற்கு பவுல் விடை கூறுகிறார், விளையச் செய்கிற தேவனே எல்லாமாகும்.
பவுல் தன் ஜீவியத்தின் முடிவுவரை தன்னை ஓர்; பூஐ;யமாகவே கருதியிருந்தார். ஆகவேதான் தேவன் அவருடைய ஐPவியத்தின் கடைசி வரை அவரை உபயோகிக்கமுடிந்தது. ஆம், பவுலுக்கு தேவனே எல்லாமாக இருந்தார்.
ஒரு சமயம் பிலேயாமோடு பேசுவதற்கு ஆண்டவருக்கு ஒரு கழுதை தேவiயாய் இருந்தது. இன்னொரு சமயம் எருசலேமுக்கு பவனியாக வந்திடவும் அவருக்கு ஒரு கழுதை தேவையாய் இருந்தது. இன்றும் அவருடைய காரியங்களை நிறைவேற்றிட அவருக்கு கழுதைகள் வேண்டும். அப்படியானால் நாம் யார்? நம் மூலமாய் பேசுவதற்கோ, அல்லது நமது மூலமாய் எங்காகிலும் செல்லுவதற்கோ, நாம் ஆண்டவர் தெரிந்துகொண்ட கழுதைகள் மாத்திரமே.
எங்கெல்லாம் தேவனே எல்லாமுமாய் இருக்கும்படி சகோதரர்கள் தங்களை ஒன்றுமில்லாமல் இருப்பதற்கு ஆர்வம் கொண்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம் தங்களில் யார் சிறந்த ஆவிக்குரியவன் அல்லது யார் பெரியவன் போன்ற போட்டிகளெல்லாம் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது.
ஒருவன் எப்போதெல்லாம் தன்னைத் தன்னுடைய குழுவிற்குத் தலைவனாகக் காட்டுவதற்கு முயற்சிக்கிறானோ, அவனை ஒரு அறையில் தேவன் ஒதுக்கி வைத்துவிடுவார். ஒவ்வொரு சபையும் நடத்துவதற்கு தலைவர்;கள் வேண்டுமென்பது உண்மைதான். ஆனால் அந்த தலைவர்கள் தேவன் தெரிந்துகொண்டவர்களாய் இருக்கவேண்டும்.
ஒரு இடத்தில், வேறொரு சகோதரனுக்கு தேவன் கிருபை கொடுத்து, மற்றவர்கள் அவனைத் தங்களை நடத்தும் தலைவனாக ஏற்றுக்கொள்ளப் பிரியமாக இருந்தால், நாம் துரிதமாய் நம்மைத் தாழ்த்தி தேவன் உருவாக்கியிருக்கும் அந்த நிலையை அப்படியோ ஏற்றுக்கொள்பவர்களாயும் இருக்கவேண்டும். இதற்குப் பதிலாய் நாம் அந்த சகோதரனின் ஊழியத்தையோ அல்லது அவருடைய ஸ்தானத்தையோ இச்சித்து பொறாமை கொண்டால், நாம் சாத்தானின் எஜெண்டுகளாய் மாறி, நம் ஸ்தலத்தில் கிறிஸ்துவின் சரீரம் கட்டப்படுவதற்கு நாமே இடையூறாய் இருந்துவிடுவோம்.
தேவன் தன்னுடைய ஆளுகையில் அந்தந்த சபைகளை நடத்துவதற்கு சிறந்த நபர் யார் என அறிந்திருக்கிறார். அவர் திறமையான புத்திசாலிகளைப் பொறுக்கி எடுப்பதில்லை. மாறாக யாரெல்லாம் பெலவீனர்களாய், நொறுங்குண்டவர்களாய்த் தங்களை பூஐ;யம் என உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களையே அவர் தெரிந்துகொள்கிறார்! இந்த உண்மையை உங்களால் நன்கு அறிந்து கொள்ள முடிகிறதா?
தன் ஊழியர்களிடம் தேவன் காட்டும் கண்டிப்பு
ஒரு குறிப்பிட்ட காரியத்தை தேவனுடைய வார்த்தை துவக்கத்திலிருந்து கடைசிவரை வலியுறுத்திப் போதிக்கிறது. அது என்னவெனில், எவர்களிடத்தில் தேவன் அதிகம் கொடுத்தாரோ அவர்களிடத்தில் அவர் அதிகம் எதிர்பார்க்கிறார். தன்னுடைய ஊழியர்களிடம் தனக்குரிய அதிகமானதைத் தேவன் ஒப்புவித்திருக்கிறபடியால் அவர்களிடம் கண்டிப்பாய் நடந்துகொள்கிறார்.
எரிகிற முட்செடியின் சமூகத்தில் தேவனால் மோசே நியமிக்கப்பட்ட பின்பு, மோசே எகிப்தை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்தப் பயணத்தில் தேவன் அவனை கொல்லப் பார்த்தார் (யாத்.4:24) என நாம் வாசிக்கிறோம். தன்னுடைய பணிக்கென இப்போதுதான் தேவன் மோசேயை அழைத்திருக்கும்வேளையில், தேவனுடைய இந்தச் செயல் நமக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. அது மாத்திரமல்ல, அந்நாட்களில் தேவனுடைய பணியை நிறைவேற்றுவதற்கு பூமியில் மோசேயைத் தவிர வேறு யாரும் தகுதி உடையவர்களாய் இல்லை! தேவனுடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கென மேசேயைப் பயிற்சிப்பதற்கு தேவன் 80 வருடங்களைச் செலவழித்திருந்தார். ஆகவே, பூமியில் மோசே மிகமிக முக்கியமான – விசேஷித்த மனிதனாய் இருந்தான் என நாம் உறுதியாய் கூறலாம். அவ்வாறிருக்க, தேவன் மோசேயை ஏன் கொல்ல விரும்பினார்?
மோசேயின் மனiவி சிப்போராள் ஒரு யூதபெண்மணி அல்ல. ஆகவே அவள் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்வதில் நம்பிக்கை இல்லாதிருந்தாள். தன்னுடைய மனைவியின் இந்த அபிப்பிராயத்தை மோசேயும் ஏற்றுக்கொண்டு இவ் விஷயத்தில் தேவனுக்கு கீழ்ப்படியாமலே இருந்து கொண்டிருந்தான். ஆனால் மோசேயோ இப்போது தேவஐனத்திற்கு ஓர் தலைவனாகப் போகிறான். இந் நிலையிலும் மோசே தன் மனைவியை இன்னமும் பிரியப்படுத்தி தன் சொந்த வீட்டிலேயே தேவனுக்கு கீழ்ப்படியாதிருந்தான். ஆகவே, தேவனுடைய சிட்சையில் மோசே மரித்துக்கொண்டிருந்த வேளையில், எதனால் இந்த வருத்தம் உண்டானது என்ற காரணத்தை சிப்போராள் உடனடியாக விளங்கிக்கொண்டாள். எனவேதான் அவள் தன் மகனுக்கு உடனடியாக விருத்தசேதனம் செய்தாள். அவ்வாறு செய்தபின் மாத்திரமே தேவன் மோசேயின் ஐPவனைத் தப்ப விட்டார்.
இந் நிகழ்ச்சியிலிருந்து தேவன் தன்னுடைய ஊழியர்களின் எந்தவித கீழ்ப்படியாமையையும் அல்லது எவ்வித சத்தியத்தை விட்டுக்கொடுத்துவிடும் ஒத்த வேஷங்களையும் அல்லது மனைவியை பிரியப்படுத்தும் செயல்களையும் சகித்துக்கொள்வதில்லை. நாம் தேவ ஐனத்தை நடத்தவேண்டுமென்றால் நாம் முதலாவது தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிபவர்களாய் இருக்கவேண்டும். ஆம்! தேவனிடத்தில் எந்த விதமான பட்சபாதமும் இல்லை. தன்னுடைய வலிமையான ஊழியர்களேயானாலும், அவர்கள் கீழ்ப்படியாதிருக்கும்போது அவர்களையும் அவர் நியாயந்தீர்ப்பார்.
பொறுமையின் முக்கியத்துவம்
மோசே 120 வயதாய் இருந்தபோது, தேவன் மோசேயை மீண்டுமாய் தண்டித்ததைப் பார்க்கிறோம். ஆனால் இந்த முறை அவர் தண்டனையைத் தளர்;த்திக்கொள்ளவில்லை. தண்ணீர்; பெறுவதற்கு கன்மலையிடம் பேசும்படியே தேவன் மோசேயிடம் சொல்லியிருந்தார். ஆனால் மோசே தன்னுடைய நிதானத்தை இழந்து கோபமடைந்தவனாய், தேவனுடைய ஐனங்களோடு ஆத்திரமுடன் மோதிய பின்பு இப்போது கன்மலை மீதும் மோதியடித்தான் (எண்.20:7-13). இது ஒரு சின்ன தவறாக நமக்கும் தோன்றுகிறது. ஆனால் தேவனுடைய கண்களுக்கோ இந்த தவறு மிகவும் சீரியஸான தவறாகவே இருந்தது.
ஐனங்களிடம் மோசே மிகுந்த கோபத்துடன் கலகக்காரரே கேளுங்கள், (எண்.20:10). என பேசிவிட்டான். இவ்வாறு கூறியதில் மோசே வெளிப்படுத்திய மனப்பான்மை யாதெனில், மோசேயாகிய தன்னைத் தவிர எல்லா ஐனங்களும் கலகக்காரர்கள் என்பதுதான். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த வேளையில் தேவனுக்கு கீழ்ப்படியாமலிருந்த மோசேகூட ஒரு கலகக்காரன்தான். கோபத்துடன் மோசே பேசிய வார்த்தைகளில் தேவன் துக்கமடைந்தார். இதை குறிப்பிடுகையில், அவர்கள் அவன் (மோசேயின்) ஆவியை விசனப்படுத்தினதினாலே தன் உதடுகளினால் பதறி பேசினான் (சங்.106:33) என வேதவசனம் எடுத்துக்கூறுகிறது.
இவ்வாறு மோசே தேவ ஐனங்களைத் தாக்கிய செயலில் முரட்டாட்டம் இருப்பதை உங்களால் காணமுடிகிறதா? எத்தனையோ தடவைகளில் நாம் பேசும் படி தேவன் சொல்லாதிருக்கும்போது நாமோ அடிக்கடி பேசியிருக்கிறோம். இதினிமித்தமே யாவரும் கேட்கிறதற்கு தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும், கோபிக்கிறதற்கு தாமதமாயும் இருக்கக்கடவன். ஏனென்றால், மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாதே (யாக்.1:19-20) என வேதவசனம் நம்மை எச்சரிக்கிறது.
நம்முடைய பொறுப்பில் நாம் சரிசெய்யவேண்டிய ஏதாவதொரு பிரச்சனையை நம் வீட்டிலோ அல்லது நம்முடைய சபையிலோ கண்டால், நாம் என்ன செய்கிறோம்? நாம் கர்த்தருக்கு காத்திராமல் உடனே பதறி பேசி துரிதமான நடவடிக்கைகளில் இறங்குகிறோமா? இதுதான் நம்முடைய நிலை என்றால் நீங்கள் உங்கள் வீட்டிற்குள்ளும் சபைக்குள்ளும் குழப்பத்தை கொண்டு வந்து
தோல்வியடைந்ததில் எவ்வித ஆச்சரியமுமில்லை. இது போன்ற நேரங்களில்தான், நம்முடைய கோபம் தேவனுடைய நீதியை நிறைவேற்ற முடியாது என்பதை நாம் நினைவுகூரவேண்டும். இவ்வாறு நம்முடைய இருதயத்தில் இளைப்பாறுதலற்றவர் களாய் மற்றவர்கள் மீது கொதிப்புடன் இருக்கும்போது நாம் செய்யவேண்டிய சிறந்த செயல் மௌனமாய் இருப்பதுதான். இவ்விதமாய் இருந்துவிட்டால் நாம் குறைந்தபட்சம் தேவனுடைய ஊழியத்திற்கு எவ்வித சேதமும் விளைவிக்காமல் இருக்கமுடியும்.
நாம் தேவனுடைய ஊழியனாய் இருப்பது அதிக சீரியஸான விசயம்! இத்தனை பெரிய பொறுப்பை நாம் இலேசாக எடுத்துக்கொள்ள முடியாது. தேவனுடைய ஊழியர்களிடம் சொல்லி முடியா வல்லமையும் , அதிகாரமும் இருக்கிறது. ஆனால் அதே சமயம் அவர்கள் அதிக விழிப்புடன் சிறு சிறு விஷயங்களில் தேவனுக்கு கீழ்ப்படிந்து கவனம் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் வாயின் வார்த்தைகள்.
ஒரு சமயம் மோசேயின் சகோதரி மீரியாம் மோசேயைக் குறை கூறிய போது, மோசே எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதியாய் இருந்தார். இவ்வாறு மோசே நடந்து கொண்ட செயலைப் பரிசுத்தஆவியானவர் அங்கீகரித்து மெச்சிக்கொண்டதை கீழ்க்கண்டவாறு தன் வேதப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மோசேயானவன் பூமியில் உள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாய் இருந்தான் (எண்.12:3). இன்னொரு சம்பவத்தில், கோரா ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு மோசேக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்து மோசே பெற்றிருந்த அதிகாரத்தை கேள்விக்குறியாக்கிய போது, இங்கும் மோசே தனக்கு ஏற்பட்ட தூண்டுதலினிமித்தமாய் கோபப்படாமல் தன் முகம் குப்புற விழுந்து மௌனமாய் இருந்தான் (எண்.16:4). இத்தனை உயர்ந்த குணாதிசயம் கொண்ட மோசே, மேரிபாவில் ஐனங்கள் முரட்டாட்டம் செய்தபோது ஏன் மௌனமாய் இருக்கவில்லை.தன் ஐPவியத்தின் கடைசிப் பகுதியான ஓர் நிகழ்ச்சியில்போய் ஏன் பதறி பேசிவிட்டார் ?
ஒரு தேவ ஊழியனிடமும், ஒரு அப்போஸ்தலனிடமும் காணப்படவேண்டிய பிரதானமான அடையாளம் பொறுமை ஆகும் (2.தீமோ.2:24, 2.கொரி.12:12). நாம் மறுபடியும் மறுபடியுமாய் முகம் குப்புற விழுந்து ஓர்; நீண்ட…. பெறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். எனவே இங்கு எழும் கேள்விகள் என்னவென்றால் நம்மை நியாயமாய் தீர்ப்பு செய்பவருக்கு நம்முடைய அனைத்தையும் ஒப்புவித்து வாழ்ந்தோமா? அல்லது சிறு ஆண்டுகள் சகித்தவர்களாய் இருந்துவிட்டு…. முடிவில், நம்மை நியாயப்படுத்தி நம்மைத் தற்காத்துக்கொள்ள வாதாடுகிறவர்களாய் மாறிவிட்டோமா? (1.பேது.2:23) என்பதே நம்மை அண்டிவரும் கேள்வியாகும். நம்மைத் தேவன் எந்த சமயத்திலும் எந்த மனிதர்;களைக் கொண்டும் நம்முடைய திராணிக்குமேல் சோதிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை (1.கொரி.10:13). ஆகிலும், நம்முடைய திராணிக்குரிய எல்லை மட்டும் நாம் சோதிக்கப்பட அவர் அனுமதி கொடுத்துவிடுகிறார். ஆனால் இவ்வேளைகளில் நாம் நமக்காகவும், நம்முடைய உரிமைகளுக்காகவும் நம்முடைய மதிப்பிற்காகவும் மரிப்பதற்கு அயத்தமாயிருந்தால், நாம் பொறுமையாய் இருப்பதற்கு வேண்டிய கிருபையை தேவன் நிச்சயமாய் நமக்குத் தருவார்.
நாம் அவதூறாய் பேசப்பட்டு மோசமாய் நடத்தப்படும்போது இன்றும் நாளையும், அடுத்தவாரமும், அடுத்த மாதமும் , அடுத்த வருடமும் , நம் ஜீவியத்தின் முடிவு பரியந்தமும், தேவனுக்கு முன்பாக முகம் குப்புற விழும் மனிதர்;களாய் இருப்பதற்கு நம் எல்லோருக்கும் தேவன் உதவி செய்வாராக. அன்று போலவே இன்று மேரிபாவிலும் மோசே தேவனுக்கு முகம் குப்புற விழுந்திருப்பானென்றால், மோசே கானானுக்குள் பிரவேசித்திருக்கமுடியும். தன் ஐPவியத்தின் கடைசி நேரத்தில் போய் இந்த ஒரு இடத்தில் மோசே கவனம் இல்லாதிருந்தபடியால் அவனுடைய இழப்பு பெரிதாயிருந்தது. இவ்வாறு மோசேயைப் போலவே, எத்தனையோ வருடங்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனுக்கென்று உண்மையாய் வாழ்ந்த அநேக தேவ ஊழியர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால்… இவர்கள் தங்கள் ஐPவியத்தின் இறுதிப் பகுதியில் போய் கவனமில்லாது ஐPவித்து வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதன் மூலமாய் அவர்களுடைய வாழ்வைக் குறித்த தேவனுடைய திட்டத்தை தங்கள் சொந்த கைகளினாலேயே அழித்துப்போட்டார்கள்.
இவ்வாறு கானானுக்குள் மோசே பிரவேசிக்கத் தடை செய்து தேவன் தண்டித்ததுபோலவே இஸ்ரவேலர்களையும் இதே விதமாய் தண்டித்தாரென நாம் வாசிக்கிறோம். ஆனால் இங்கு நாம் காணும் வித்தியாசம் யாதெனில், இஸ்ரவேல் ஐனங்கள் தேவனுக்கு முன்பாக பத்து முறை முரட்டாட்டம் செய்தார்கள் (எண்.14:22). இவ்வாறு இஸ்ரவேலர்களைத் தண்டிப்பதற்கு முன்பாக தேவன் அவர்களுக்கு பத்து சந்தர்ப்பங்களைக் கொடுத்திருந்தார். ஆனால் மோசேக்கு ஒரே ஒரு சந்தர்ப்பத்தையே தந்தார்;. ஏன்? ஏனென்றால் இஸ்ரவேல் ஐனங்களைவிட மோசேயிடம் தேவன் அதிகம் எதிர்பார்த்தார்.
இஸ்ரவேல் ஐனங்கள் தேவனுடைய வெளியரங்கமான கிரியைகளை மாத்திரமே கண்டிருந்தார்கள். ஆனால் மோசேயோ தேவனோடு முகமுகமாய் பேசி உறவாடியதினிமித்தம் அவருடைய வழிகளை அறிந்திருந்தான் (சங்.103:6). நாம் தேவனுடைய ஸ்தானத்தில் பிரதிநிதியாக நின்று அவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறவர்களாக இருந்தால், நம் சபையில் உள்ள மற்றவர்களைக் காட்டிலும் நம்மிடம் தேவன் பத்து மடங்கு அதிகம் எதிர்பார்க்கிறார்.
தேவனுடைய ஊழியர்கள் என்னதான் கோபம் கொள்ளும்படி தூண்டப்பட்டாலும், அவர்;களுடைய வார்த்தையில் ஒருபோதும் கவனமில்லாமல் இருந்துவிடவே கூடாது. இவ்வாறு தங்களுடைய சம்பாஷணையில் தப்பான வார்த்தைகளைப் பிரித்தெடுக்க கற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே தேவனுடைய வாய் போல் இருப்பார்கள் (எரேமி.15:19).
சம்பூரணமாய் கீழ்ப்படிவதின் முக்கியத்துவம்
இஸ்ரவேலை நடத்துவதற்கு தேவன் தெரிந்துகொண்ட மற்றும் ஓர் மனிதன்தான் சவுல். இந்த சவுல், தான் ராஐhவாக மாறவேண்டுமென ஒருபோதும் விரும்பியதேயில்லை. அவனைத் தேவன்தான் இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் அமரச்செய்தார். இஸ்ரவேலர்கள் சவுலைத் தங்களுக்கு ராஐhவாக்கிட வந்தபோது , சவுல் தன்னை ஒளித்துக்கொண்டு, நான் இராஐhவாய் இருப்பதற்கு எம்மாத்திரம்? என் குடும்பம் இஸ்ரவேலின் குடும்பங்களிலெல்லாம் அற்பமானதல்லவா? என கூறினான் (1.சாமு.9:21). இந்த சவுலின் தாழ்மைதான் எவ்வளவு பெரிதென்று பாருங்கள்.
அனால் வெகு சீக்கிரத்தில் சவுல் தன்னுடைய பார்வையில் பெரியவனாகிவிட்டபடியால், தேவன் தன்னுடைய அபிஷேகத்தை அவனைவிட்டு எடுத்துப்போட வேண்டியதாகிவிட்டது. நாம் 1.சாமுவேல் 15ம் அதிகாரத்தில் வாசிக்கிறபடி, சவுல் தேவனுடைய கட்டளையைத் தனக்கேற்றபடி மாற்றிக்கொண்டு அமலேக்கில் தேவன் கூறியபடி எல்லாவற்றையும் சங்கரிக்கவில்லை. அவன் தன்னுடைய சொந்த புத்தியை சார்ந்து ஐனங்களுக்குப் பிரியமானதெதுவோ அதையே செய்தான். இன்றும் யாரெல்லாம் தங்கள் பார்வையில் பெரியவர்களாக மாறிவிடுகிறார்களோ, அவர்களும் இவ்வாறாகவே சவுலைப்போல் செய்கிறார்கள். ஆகவே இங்கு ஒவ்வொரு தேவனுடைய ஊழியனும் சந்திக்கும் இரண்டு பெரிய கண்ணிகளை நாம் காண்கிறோம். இது யாதெனில்: (1) தன் சொந்த புத்திக்கு பிரியமானவைகள் (2) ஐனங்களுக்குப் பிரியமானவைகள். இந்த இரண்டு விருப்பங்களும், தன்னைப் பற்றிக் கொள்ளுவதற்கு சவுல் அனுமதித்தபடியால் தன்னுடைய அபிஷேகத்தை இழந்துபோனான். நம்முடைய சொந்த ஞானத்தின்படி தேவனுடைய எந்த கட்டளைகளையும் மாற்றியமைப்பதற்கு நமக்கு எவ்வித உரிமையும் இல்லை. இவ்வாறு நாம் மனுஷர்களைப் பிரியப்படுத்துகிறவர்களாய் இருந்தால் நாம் கிறிஸ்துவின் ஊழியக்காரனாய் ஒருபோதும் இருக்கவே முடியாது (கலா.1:10) என வேதம் ஆணித்தரமாக எச்சரிக்கிறது.
சவுல் தன்னுடைய பார்வைக்கு சிறியவனாகவே நிலைத்திருப்பானென்றால் தேவனுடைய அபிஷேகம் அவனுடைய ஐPவியத்தின் கடைசிவரை அவன் மீது தங்கியிருந்திருக்கும். ஆனால் அவனோ தன்னுடைய சிங்காசனத்தை நேசிக்கத்தொடங்கிவிட்டான். இந்தக் காரணத்தினாலேயே இன்றும் அநேக தேவ ஊழியர்கள் தங்கள் அபிஷேகத்தை இழந்து இருக்கிறார்கள். நாம் விழிப்பாய் இல்லாத பட்சத்தில், ஐனங்களுக்கு முன்பாக தேவனுடைய பிரதிநிதியாய் பேசும்படியான நம்முடைய அழைப்பே, நமக்கு தலைக்கனம் கொண்டுவரும் வழியாய் மாறிவிட முடியும்.
இங்கு சவுல், தான் தொடர்ந்து ராஐhவாய் இருப்பதைப் பற்றிக் கொண்டிருந்தவனாய் மாத்திரமல்லாமல், அபிஷேகம் நிறைந்த ஓர் இளைய சகோதரன் (தாவீது) முன்னேறி வருவதையும், ஐனங்கள் அவன் மீது நம்பிக்கை வைப்பதையும் கண்டவுடன், அவனையும் ஒடுக்குவதற்குத் திட்டம் தீட்டினான். சவுலிடம் இல்லாத விசுவாசம் தாவீதிடம் இருந்தபடியால், தாவீதின் மீது சவுல் பொறாமையும் கொண்டான். அது மாத்திரமல்லாமல் ஐனங்கள் தாவீதைப் புகழ்ந்ததினிமித்தம் அவனை; கொலை செய்யவும் விரும்பினான்.
இவ்வாறு தேவன் தள்ளிவிட்ட பின்பும், தங்கள் சிங்காசனங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் இது போன்ற சவுல்களின் செய்கைகளைத் தேவன் காணாததுபோல் விட்டுவிடுவாரா? அவ்விதம் ஓர் நீண்டகாலம் தேவன் விட்டுவைக்க கூடும். சவுலினுடைய விஷயத்தில் தேவன் அவனை 13 வருடங்கள் விட்டுவைத்தார்;. கோலியாத்தை தாவீது கொன்றபோது 17 வயதுடையவனாகவே இருந்தான். ஆனால் தாவீது 30 வயது நிரம்பிய பின்புதான் ராஐhவாய் மாறினான். இவ்வாறு தாவீது தேவனால் அபிஷேகிக்கப்பட்ட பின்பும், 13 வருடங்கள் வரை சவுல் இஸ்ரவேலின் இராஐhவாய் ஆளுகை செய்வதற்கு தேவன் அனுமதித்திருந்தார்;.
இந்த நிகழ்ச்சி நமக்கு கற்பிக்கும் பாடம் யாது?
நாம் பின்மாற்றம் அடைந்து, ஆவியின் அபிஷேகத்தைப் பல வருடங்களுக்கு முன்பே இழந்திருந்தாலும்கூட, நாம் ஏதேனும் ஒரு ஊழியத்தில் இன்னமும் இருப்பதற்கு தேவன் அனுமதிக்கக்கூடும். பகுத்து நிதானிக்கும் தன்மை ஐனங்களிடத்தில் இல்லாதபடியால் நாம் அபிசேகத்தை இழந்துவிட்டோம் என்பதை அவர்கள் அறியாதிருக்கமுடியும். ஆகவே, அவர்கள் நம்மை இன்னமும் தேவஊழியர்களாகவே மதித்து ஏற்றுக்கொள்ளமுடியும். ஏனென்றால் அவர்கள் நம்முடைய வயதினிமித்தமோ அல்லது வேதஅறிவினிமித்தமோ அல்லது நம்முடைய அனுபவத்தினிமித்தமோ நமக்குத் தொடர்;ந்து மரியாதையைச் செலுத்திக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு ஐனங்கள் நம்மை ஏற்றுக்கொண்டதால், அதுவே நாம் தேவஊழியர்களாய் இருப்பதற்கு போதுமானது என ஒருக்காலும் எண்ணாதிருக்கக்கடவோம்.
தேவனே நம்மை நிராகரித்த பின்பு மனுஷன் நம்மை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரயோஐனம்? ஒரு மனிதன் தன்னுடைய ஐpவியத்தில் அபிசேகத்தை இழந்தபின்பும் கர்த்தருக்கு ஊழியம் செய்வதேர் அல்லது ஒரு சபைiயை நடத்துவதோ ஓர் கொடிய துயரமிக்க சம்பவமாகும்.
அவசரப்பட்டு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விலகியிருத்தல்
துரதிஸ்ட வசமாய், தாவீதுகூட தான் இராஐhவாய் மாறியவுடன் எவ்வளவுதான் நம்முடைய நோக்கங்கள் நல்லதாய் இருந்தாலும் அவைகள் தேவசித்தத்திலிருந்து விலகும் கொடிய நிலையிலிருந்து நம்மைப் பாதுகாக்கவே முடியாது. இந்த உண்மையை நாம் 2.சாமுவேல் 6ம் அதிகாரத்தின்மூலம் அறிந்து கொள்கிறோம். தாவீது தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை திரும்பவும் எருசலேமுக்கு கொண்டு வந்தான். இது நல்ல செயல்தான். ஆனால் தேவன் தன்னுடைய பிரமாணங்களில் கட்டளையிட்ட முறையின்படி அவன் அதைச் செய்யவில்லை. தேவனுடைய பெட்டியை லேவியர்கள் தங்கள் தோள்களில் சுமந்து வரவேண்டுமென்றே தேவன் கட்டளை கொடுத்திருந்தார். ஆனால் தாவீதோ தேவனுடைய பெட்டியை ஒரு இரதத்தில் வைத்து அந்த இரதத்தை மாடுகள் இழுத்துவரும்படியாய் செய்தான். சில வருடங்களுக்கு முன்பு பெலிஸ்தியர்கள் தேவனுடைய பெட்டிக்கு இவ்விதமாகவே செய்தார்கள். இப்போதும் தாவீது அதே முறையின்படியே செய்யத் துணிந்தான் (1.சாமு.6:3-8).
இன்றும் இதே செயலைத்தான் கிறிஸ்தவ தலைவர்கள் செய்வதை தொடர்;ந்து நாம் காண்கிறோம். இவர்கள் தங்கள் சபைகளைத் தேவனுடைய வார்த்தை போதிக்கிறபடி நடத்தாமல் இன்றைய வியாபார உலகின் திறமையான உபாயங்களை உபயோகித்து நடத்துகிறார்கள்.
தேவனுடைய பெட்டியை மாடுகள் சுமந்து கொண்டிருந்தபோது அவைகள் மிரண்டு தள்ளாடியது. மாடுகள் மிரண்டதினிமித்தம் தேவனுடைய பெட்டியும் தள்ளாடியது. அச் சயம் ஊசா என்பவன் பெட்டி கீழே விழாமல் இருப்பதற்குத் தன் கையை நீட்டி அதைப் பிடித்தான். அவனுடைய பயபக்தியற்ற துணிவினிமித்தம் தேவன் ஊசாவை அந்த இடத்திலேயே அடித்தார். இங்கு அவன் தேவனுடைய பெட்டியண்டையில் செத்து விழுந்தான் (வசனம் 7).
இவ்வாறு தேவனுடைய மேய்ப்பர்கள் ஒரு தவறைச் செய்யும்போது, ஆடுகளும் துன்பமடைவது வருத்தமான செயலேயாகும். ஆனால் அதுதான் இன்றும் தொடர்ந்து சம்பவிக்கிறது. தாவீது செய்த ஒரு தவற்றிற்காக ஊசா துன்பமடைந்தான். இந்த சம்பவத்தின்மூலமாய் தேவன் தன்னுடைய ஊழியர்களிடம் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்கிறார் என்ற பாடத்தை தாவீது கற்றுக்கொண்டான்.
ஊசாவின் நோக்கம் மிகச் சிறந்ததுதான்… ஆனால் ஊசாவின் மேல் கர்த்தருடைய கோபம் பற்றியெரிந்தது (வசனம்7) என வேதம் கூறுகிறது. தேவனுடைய பெட்டியை லேவியர்கள் தான் தொடமுடியும் என்ற சத்தியத்தை ஊசா தன் சிறு பிராயத்திலிருந்தே கற்றிருந்தான். ஆனால் அந்த வேளையில் ஊசா தேவனுடைய கட்டளையை சாதாரணமாய் எடுத்தபடியால் அதினிமித்தம் துன்பமடைந்தான்.
இன்றும் இதே ஊசாவின் தவறு திரும்பவுமாக நடந்திடமுடியும். நம்முடைய சபையில் ஏதாவது தவறு நடப்பதை நாம் காணும்போது உடனே நம்முடைய கைகளை நீட்டி தேவனுடைய பெட்டியை நிலைநிறுத்த முயற்சிக்கலாம். இவ்விதம் நம் நோக்கங்கள் நல்லதாய் இருந்தாலும் நாம் நம்முடைய எல்லையைத் தாண்டுகிறபடியால் தேவன் நம்மையும் அடித்துவிடக்கூடும். நல்லது என நம்முடைய புத்தி சொன்னதை வைத்து நாம் சிலவற்றைச் செய்திடக்கூடும். ஆனால் அந்த வேளையில் நாமோ கர்த்தருடைய சித்தம் என்னவென்பதை அறிந்துகொள்வதற்கு காத்திருக்கவில்லை. ஆம் நாம் அவசரமாய் செயற்பட்டு விட்டோம்.
இயேசு நான் சபையைக் கட்டுவேன் (மத். 16:18) எனக் கூறினார். சபையைக் கட்டுவது ஆண்டவருடைய பணியே ஆகும். நம்முடையதல்ல. இந்தக் குறிப்பிட்ட ஸ்தலங்களில் நான் சபையைக் கட்டுகிறேன் என நாம் கூறுவது அகங்காரமான பெருமையே ஆகும். இவ்வாறு கிறிஸ்துவின் சரீரத்தை நம்முடைய சொந்த வியாபாரத்தைப் போல் நாம் எண்ணத்துவங்கிவிட்டால், என்றாவது ஒரு நாள் ஊசா செய்த அதே பிழையை நாமும் நிச்சயமாய் செய்து விடுவோம்.
சபை தடுமாறுவதை நாம் காணும்போது, அதை தேவனிடத்தில் சென்றே, ஆண்டவரே, நானல்ல நீரே சபைiயைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்;. உம் சபையைக் காத்துக்கொள்ளும் என ஜெபத்துடன் சொல்லக்கடவோம். சபைiயில் காரியம் எவ்வாறு நடக்கவேண்டுமோ, அவ்வாறு நடக்காததை நாம் காணும்போது இந்தப் பணி யாருடையது? இந்தப் பொறுப்பு யாருடையது? பரிசுத்தாவியானவரா அல்லது நானா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளக்கடவோம்.
சில சமயங்களில் சில காரியங்கள் உடனடியாகச் செய்யப்படவேண்டும் என நாம் உணரலாம். ஆனால் அதையும் பரிசுத்தாவியின் குரலைக் கேட்காமல் செய்தால், நாம் நிச்சயம் மாம்சத்தின்படியே செய்துவிடுவோம். இவ்வித நம்முடைய செயல் எவ்வளவுதான் நல்ல நோக்கங்கள் கொண்டதாய் இருந்தாலும், நாம் ஒன்றும் செய்யாதிருப்பதைக் காட்டிலும் அதிக குழப்பத்தையே நம் செயலால் கொண்டுவருவோம். ஆகவேதான் நாம் ஆண்டவரிடம் சென்று, ஆண்டவரே நீரே இந்தப் பொறுப்பில் இருக்கிறீர். அரசாளும் கர்த்தத்துவம் உமது தோளின் மேல் இருக்கிறது. நீர்; சொல்வதைக் கேட்டகவே நான் விரும்புகிறேன். நான் என்ன செய்யவேண்டுமென்பதை நீர் எனக்குச் சொல்லும் எனக் கூறக்கடவோம்.
பலவிதமான முட்டாள்களைக் குறித்து நீதிமொழிகள் புத்தகம் விவரிக்கிறது. அனால் முடிவாக எல்லா முட்டாள்களுக்கும் மேலான முட்டாளை நீதிமொழிகள் புத்தகம் கூறும்போது தன் வார்த்தைகளில் (அல்லது செய்கைகளில்) பதறுகிற (அவசரப்படுகிற) மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைக் காட்டிலும் மூடனை நம்பலாம் (நீதி.29:20) என்றே வேதம் கூறுகிறது.
இவ்வாறு ஒன்றைச் சொல்லுவதற்கோ அல்லது செய்வதற்கோ அவசரப்படுகிறவன் ஒரு சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் என்பதை தனக்கு நன்றாகத் தெரியும் என தனக்குத்தானே நம்பிக்கை கொண்டவனாய் இருக்கிறான். இவனுக்கு தேவனிடம் சென்று ஆலோசனை கேட்பதெல்லாம் அவசியமாய்த் தோன்றுவதில்லை. ஆம். இவன் தானாக எல்லாவற்றையும் செய்துவிடுகிறான். இப்படிப்பட்ட ஒரு மனிதனே இவ்வுலகில் முட்டாள்களுக்கெல்லாம் மேலான முட்டாளாய் இருக்கிறான்.
சிக்கலான பிரச்சனைகளோடு நம்மிடத்தில் யாராவது வரும்போது, அவர்களுக்கு நம்முடைய புத்திசாலித்தனத்தையும் நம்முடைய கடந்த கால அனுபவத்தையும் சார்ந்து ஆலோசனை கூறினால் அந்தப் பிரச்சனை இன்னமும் அதிகரித்துவிடக் கூடும். ஆனால் பிதாவினிடத்திலிருந்து பெறும் ஒNரு ஒரு ஞானமுள்ள வார்த்தை வியக்கத்தகு அற்புதங்களை அவர்கள் வாழ்வில் செய்துவிடும்.
ஆகவே அடுத்த தடவை மாடுகள் இடறி தேவனுடைய பெட்டி தடுமாறுவதை நீங்கள் காணும்போது அந்த நாளின் முட்டாள்களின் பட்டியலில் உங்கள் பெயரை முதலாவதாய் எழுதிட முனைந்து நிற்காதீர்;கள். கண் கண்டபடியும் காது கேட்டபடியும் துரிதாமாய் நியாயம்தீர்த்து தெய்வபயமற்ற செயலை செய்யாதிருக்க விழிப்பாய் இருக்கக்கடவோம். இதற்கு மாறாக நம்முடைய முகத்தை ஆண்டவருக்கு முன்பாக புழதியில் புதைத்து ஆண்டவரே, நான் ஞானத்தில் குறைவுள்ளவன். நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர்;? என்றே கேட்கக்கடவோம்.
நமக்கு ஞானம் குறைவாயிருக்கிறது என ஒத்துக்கொள்வதே கடினமான காரியமாகும். அதுவும் குறிப்பாக சபையில் உள்ள மற்றவர்கள் நம்மைவிட இளையவர்களாகவும், முதிர்ச்சியற்றவர்களாகவும் இருப்பதை நன்றாய் அறிந்த பிறகும்…. தனக்கு ஞானமில்லையென ஒத்துக்கொள்வது இன்னமும் அதிகக் கடினமேயாகும். ஆனால் மிகுந்த தாழ்மையோடு நம்முடைய குறையை தேவனிடத்தில் ஒத்துக்கொண்டால் அவர் தமது ஞானத்தை நமக்கு சம்பூரணமாய் கொடுத்துவிடுவார்.
நாம் சொல்லிய வாக்கை காத்து நடத்தல்
தன்னுடைய ஊழியர்களிடத்தில் தேவன் எவ்வாறு கண்டிப்பாய் நடந்துகொள்கிறார் என்பதை அறிவதற்கு மற்றும் ஓர்; உதாரணத்தை 2.சாமுவேல் 21:1ம் வசனத்தில் காண்கிறோம். தாவீது ராஐhவாய் இருந்த நாட்களில் தொடர்ச்சியாக மூன்று வருஷம் பஞ்சம் உண்டாயிருந்தது. இவ்விதமாக நம்முடைய சபையிலும் தொடர்ச்சியாக தீர்;க்கதரிசனமான வார்த்தைக்கு பஞ்சம் உண்டாயிருந்தால் நாமும் தாவீதைப் போலவே கர்த்தரிடத்தில் காரணத்தைக் கேட்டு விசாரிக்கிறவர்களாக இருக்கவேண்டும். என்ன காரணத்தினால் பஞ்சம் என கர்த்தர் தாவீதுக்கு கூறும்போது, பல வருடங்களுக்கு முன்பு கிபியோனியரிடத்தில் இஸ்ரவேல் தான் செய்த வாக்குத்தத்தத்தை மீறியபடியால் இந்தப் பஞ்சத்தை உண்டாக்கினேன் எனக் கூறினார்.
அதாவது யோசுவாவின் காலத்தில் சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேல் கிபியோனியரிடம் உங்கள் சந்ததிக்கு நாங்கள் எவ்வித தீங்கும் செய்யமாட்டோம் என வாக்குக்கொடுத்திருந்தார்கள். ஆனால் சவுல் ராஐhவாய் வந்தவுடன் இந்த வாக்குத்தத்தத்தை அவமதித்துவிட்டு அவர்களில் சிலரை கொன்றுபோட்டான். இந்த நிகழ்ச்சி நடந்து 30 வருடங்களுக்குப் பின்புதான் இந்தப் பாவத்திற்கான தண்டனை இஸ்ரவேலைப் பிடித்துக்கொண்டது. பார்த்தீர்களா? தேவன் எவ்வளவு துல்லியமாய் தன்னுடைய கணக்குகளை வைத்திருக்கிறார். நாம் ஏதாகிலும் தவறு செய்து அவைகளை தேவனுக்கு முன்பாக சரிசெய்யாத பட்சத்தில் அத் தவறுகளில் ஒன்றையாகிலும் தேவன் மறந்துவிடுவதில்லை. நம்முடைய தவறுகளை நாம் தேவனிடத்தில் சென்று ஒப்புவித்து சரிசெய்வதெற்கென ஓர்; நீண்ட 30 ஆண்டுகள் கூட தருவார். ஆனால் என்றாகிலும் ஒரு நாள் அக் கணக்குகளைத் தீர்;க்க அவர் வந்துவிடுவார். ஆம். இஸ்ரவேல் தன் கணக்குகளைத் தேவனிடத்தில் சென்று சரிசெய்யும்வரை அவர் இஸ்ரவேலின் மீதிருந்த பஞ்சத்தை நீக்கவில்லை.
கர்த்தரை சேவிக்கிற நாம் யாவரும் நாம் பேசுகிற வார்த்தையில் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். கூட்டங்களில் மாத்திரமல்ல, நம் அன்றாட ஜீவியத்தின் வார்த்தைகளிலும் நாம் மிகுந்த கவனமாய் இருக்கவேண்டும். நாம் ஒரு காரியத்தை ஒருவருக்கு செய்வதாக வாக்குகொடுத்துவிட்டு அதை எளிதில் மறக்கிறவர்களாக இருக்கவே கூடாது. உதாணமாய் எனக்காக ஜெபியுங்கள் எனக் கேட்டுக்கொள்பவர்களிடம் ஜெபிப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு ஜெபிப்பதற்கு மறந்துவிடக்கூடாது. தங்களுக்காக nஐபிக்கச் சொல்லி கேட்டவர்களுக்காக நாம் உடனே ஜெபிக்கமுடியாத நிலையிலிருந்தால் நாம் நேர்மையுள்ளவர்களாய் இருந்து உங்கள் வேண்டுதலை நான் நினைவுகூறும்போது நிச்சயமாக ஜெபிப்பேன் எனக்கூறவேண்டும் அல்லது குறைந்த பட்சம் அவர்களுக்காக அந்த இடத்திலேயே உடனே ஜெபித்துவிடவேண்டும். ஆனால் நாம் நிறைவேற்றமுடியாத ஒன்றை ஒருபோதும் வாக்குகொடுக்கவே கூடாது.
சர்வசாதாரணமாய் நாம் ஐனங்களுக்கு வாக்கு கொடுக்கிறவர்களாயிருந்தால் தேவனுடைய வார்த்தையை நாம் எவ்வாறு அதற்குரிய கனத்தோடு பேசமுடியும்? அகவே, நாம் பிறருக்கு வாக்குக்கொடுத்ததை நிறைவேற்ற முடியாத நிலையிலிருந்தால் அந்த உரிய நபரிடம் நாம் சென்று அவ்வாறு நிறைவேற்றமுடியாமல் போனதற்குரிய காரணத்தை விளக்கி அவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். கொடுத்த வாக்கை மீறுவது அபாயகரமானது! அதை ஆண்டவர் இயேசு குறிப்பிடும்போது மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்;ப்பு நாளில் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என எச்சரித்தார் (மத்.12:36).
நாம் பிறருக்குத் தரும் வாக்குகளைத் தேவன் மிகப்பெரிய விசயமாய் எடுத்துக்கொள்கிறார். அவ்வாறு நாம் வாக்கு கொடுத்த நபர்கள் அவிசுவாசிகளோ அல்லது கிபியோனியர்களைப் போல வேலைக்காரர்களேயானாலும் நாம் சொன்ன வாக்கை மீறுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.
நாம் சில இடங்களில் செய்த அநீதியான செயல் சரிசெய்யப்படாமல் வைத்திருந்து, நீண்ட காலமாய் அதனிமித்தம் எந்த தண்டனையும் நமக்கு வராதபடியால் தேவன் அவைகளை மறந்துவிட்டாரென நாம் எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தேவனோ அவைகளை ஒருபோதும் மறப்பதேயில்லை. தேவனுடைய நியாயத்தீர்;ப்புகள் வருவதற்கு தாமதிக்கலாம். ஆனால் முடிவில்… அது வந்தே தீரும்.
ஆதலால் நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்கு பிரியமாய் ஆராதனை (ஊழியம்) செய்யக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறாரே (எபி.12:28-29).
(புதிய உடன்படிக்கை ஊழியன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)














