மக்கள் நியாயமில்லாமலும், அர்த்தமில்லாமலும், தன்னலத்தோடுந்தான் நடந்து கொள்வார்கள்.
ஆனாலும்….. அவர்களை நேசியுங்கள்.
நீங்கள் நல்லது செய்தால், ஏதோவொரு சுயநல நோக்கோடுதான் செய்தீர்களென மக்கள் குற்றஞ்சாட்டுவார்கள்.
ஆனாலும்….. நன்மையே செய்யுங்கள்.
நீங்கள் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தால், பொய்யான நண்பரையும் மெய்யான விரோதிகளையும் சம்பாதிப்பீர்கள்.
ஆனாலும்…… வென்று வாழுங்கள்.
நீங்கள் இன்று செய்யும் நன்மை நாளை மறக்கப்படும்.
ஆனாலும்…… நன்மை செய்து விடுங்கள்.
திறந்த மனதும் வெளிப்படையான குணமுமிருந்தால் தாக்குதல்கள்தான் கிடைக்கும்.
ஆனாலும்….. திறந்த மனதோடிருங்கள்.
மக்கள் நசுக்கப்பட்டோருக்கு உதவுவது போலிருந்தாலும் மேம்பட்டோர் பின்னால்தான் செல்லுவார்கள்.
ஆனாலும்….. நசுக்கப்பட்டோருக்காய்ப் போராடுங்கள்.
பல்லாண்டுகளாய் நீங்கள் கட்டியது ஒரே இரவில் இடிக்கப்படலாம்.
ஆனாலும்…… கட்டுங்கள்.
மக்களுக்கு நிச்சயம் உதவி தேவை. ஆனால் நீங்கள் உதவினாலோ அவர்கள் திரும்பிக் கொண்டு உங்களைத் தாக்கலாம்.
ஆனாலும்….. மக்களுக்கு உதவுங்கள்.
உங்களிடமிருக்கும் மிகச்சிறந்ததை உலகத்திற்குக் கொடுங்கள். அதுவோ உங்களை எட்டி உதைக்கும்.
ஆனாலும்…… சிறந்ததையே கொடுத்து விடுங்கள்.









