• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
    • மேம்பட்ட கிறிஸ்தவ பயிற்சி
    • உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Monday, February 2, 2026
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
    • மேம்பட்ட கிறிஸ்தவ பயிற்சி
    • உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
    • மேம்பட்ட கிறிஸ்தவ பயிற்சி
    • உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

பாடம் 2: இயேசு கிறிஸ்து – அவரே உண்மையான சீடர்

January 15, 2026
in உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்
0 0
உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்

பாடம் 2: இயேசு கிறிஸ்து – அவரே உண்மையான சீடர்

கிறிஸ்துவே உண்மையான சீடர், வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் மனிதர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அதற்கு கிறிஸ்துவே தன்னிகரில்லா ஒப்பற்ற வெளிப்பாடு. “மெய்யான சீடர்கள்” என்று கர்த்தராகிய இயேசுவால் அழைக்கப்பட்டவர்களுக்கு, அவரே பரிபூரண மாதிரியாக இருந்தார். யோவான் ஸ்நானகன் கூறியது போல, தேவனுடைய ஊழியக்காரர்களில், பெரியவர்களாகவும், உத்தமர்களாகவும் இருப்பவர்கள் கூட அவரின் பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு தகுதியில்லாதவர்கள். எப்பகுதியிலும் அவரை ஒருவரோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது, என்றாலும் நாம் அவரின் மாதிரியை பின்பற்ற வேண்டுமென அழைக்கப்படுகிறோம் (1.யோ.2:6) எல்லாவிதத்திலும் நம்மைவிட உயர்ந்தவராக இருந்தாலும், யாருக்கும் சமமானவராக இருக்க முடியாமலிருந்தாலும், நாம் அவரின் சாயலுக்கு ஒப்பாக வேண்டி உள்ளது (ரோ.8:29). நாம் தேவனை பின்பற்றுகிறவர்களாயிருக்க வேண்டும் (எபேசி.5:1). உண்மையான சீடத்துவத்தின் மாதிரியாக தேவாதி தேவன் தாமே மாம்சத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாய் வந்தார்.

மேசியாவைப் பற்றிய தீர்க்கத்தரிசனங்கள் கிறிஸ்துவை தீர்க்கதரிசியாக, ஆசாரியராக, ராஜாவாக சுட்டிக்காட்டுவது போல், உண்மையான சீடர் என்கிற தன்மையிலும் அவரைக் குறித்து தெளிவுற வெளிப்படுத்துகிறது. “இளைப்படைந்தவனுக்குச் சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு கல்விமானின் (சீடனின்) நாவைத் தந்தருளினார், கற்றுக்கொள்ளுகிறவர்களைப் போல (சீடனைப் போல) கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்.” (ஏசா. 50:4 Asv, marginal reading) கர்த்தர் தன்னுடைய சீடர்களை தன்னிடமாய் அழைத்த வேளையில் சீடத்துவத்தின் கடினமான நிபந்தனைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். தான் எதைக் கற்றுக்கொடுக்கிறாரோ அவற்றிற்கு தாமே ஒரு உண்மையான மாதிரியாக இருப்பது அவரின் மாறாத குணாதிசயம் ஆகும். சிலுவை பாதையில் நடக்க சீடர்களை அழைத்தார். அவர் அப்பாதையில் நடந்தார். அப்பாதையிலிருந்து தன் முகத்தை பின்னாக ஒரு பொழுதும் திருப்பவில்லை. தன்னைத்தான் வெறுக்க வேண்டுமென கூறிய அவர், சுயநலமற்ற ஒருவராய் பிதாவை பிரியப்படுத்துவதும், பிறருக்கு ஊழியம் செய்கிறவருமாய் வாழந்தவர் அவர் ஒருவரே. தியாக வாழ்க்கைக்கு சீடர்களை அவர் அழைத்தார் (லூக்.9:58). ஆனால் அவரே தியாகத்திற்கு எடுத்துக்காட்டாய் நரிகளுக்கு குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. தனக்கே தலை சாய்க்க இடமின்றி இருந்தார். எல்லாவற்றையும் “விட்டுவிட” வேண்டுமென கூறினார், தான் கூறியபடியே சுற்றித்திரிந்து ஊழியம் செய்த காலங்களில் தான் உடுத்தியிருந்த உடையும், எளிமையான உணவையும் உண்டு வாழ்ந்து காட்டினார். தான் போதித்த எல்லாவற்றையும், தானே வாழ்ந்து காட்டினார். அவர் வாழ்ந்த வாழ்க்கையே உண்டையான சீடனின் வாழ்க்கையாக உள்ளது.

இவைகளைப் பற்றி எழுதுவதாக இருந்தால் “உலகம் கொள்ளாது” (யோ.21:25). இருப்பினும் நம்முடைய பயனுக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தன்னிகரற்ற இப்பூமிக்குரிய வாழ்விலிருந்து சீடத்துவத்திற்கான முழு தன்மைகளைக் காண்போம்.

அவரின் நோக்கம்

விண்ணக அரண்மனையை விட்டு ஏன் கர்த்தராகிய கிறிஸ்து இங்கு வர வேண்டும்? அங்கே அவர் பிதாவின் மனமகிழ்ச்சியாயிருந்தார். (நீதி.8:30). தூதர்கள் அவரை ஆராதித்தார்கள். பரலோகத்தின் மகிமை அவரை சுற்றியிருந்தது. அப்படி இருந்தவர் ஏன் மனிதனால் நிந்திக்கப்படவும், தள்ளப்படவும் நிராகரிக்கப்படும்படியாக பயங்கரமான உலகில் வர வேண்டுமா? பிதாவை நேசித்தாலும், அவரின் சித்தத்தை செய்ய நாடியதுமே முதன்மையான காரணமாகும். என் சித்தத்தின்படியல்ல என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்” (யோ.6:36). தேவனே உம்முடைய சித்தத்தின்படிசெய்ய இதோ வருகிறேன் என்று சொன்னார்” (எபிரெயர் 10:9). கிரயம் எவ்வளவு வேதனையாக இருப்பினும், உண்மையான சீடன் பிதாவினுடைய சித்தத்தை செய்ய தன்னை ஒப்புக்கொடுக்கிறான் (லூக்.22:42). அவர் தன் சுய மகிமையைத் தேடாமல், பிதாவின் மகிமையை நாடினார் (யோ.7:18; 8:50). இழந்துபோன உலகத்தின் தேவையை சந்திக்க பிதாவின் சித்தம் கிறிஸ்துவை தூண்டியது. ஆகவே இழந்துப்போனதை தேடவும் இரட்சிக்கவும்” (லூக்.9:10) அவர் இங்கு வந்தார். தன்னுடைய அன்பை நிராகரிக்கிற, அன்பற்ற, உதாசினமாக வாழ்கிறவர்களுக்காக அவர் தன்னுடைய வாழ்க்கையை ஊற்றினார். தன்னை நேசிக்காதவர்களை அவர் நேசித்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாய், பிதாவினிடத்தில் அன்புகூர்ந்து, அவரின் மகிமையை மட்டுமே நாடினார். அவருடைய மரணம்கூட பிதாவை மகிமைப்படுத்துவதாக இருந்தது (யோ. 21:19). இவைகள் எல்லாவற்றையும் எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல், மனமுவந்து செய்தார். ஏனெனில், உண்மையான சீடன் ஒரு போதும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. தேவத்துவத்தின் அழைப்பு, கிறிஸ்துவைப் பற்றி தீர்க்கத்தரிசனமாக “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?” … அதற்கு நான், இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும் என்றேன்” (ஏசா.6:8).

அவரின் கீழ்ப்படிதல்

மனமுவந்து பின்பற்றுகிறவர்களின் அடையாளமாக எப்பொழுதும் காணப்படுவது கீழ்ப்படிதலும், தன்னுடைய எஜமானைப்போலாக முயற்சிப்பதுமேயாகும். மனித தன்மையுடைய இயேசுவின் பாதையை கவனிக்கிற வேளையில், அவர் பிதாவின் இயக்கத்திலேயே மனுஷ குமாரனாக நடந்தார். “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்” (யோ.8:29). அவரிடத்தில் ஒருபொழுதும் கீழ்ப்படியாமை காணப்படவில்லை, மரணபரியந்தமும் கீழ்படிந்தார். (பிலிப்பியர் 2:8). “பட்டப்பாடுகளினாலே கீழ்ப்படிதலை அனுபவபூர்வமாக கற்றுக்கொண்டார். அவரிடத்தில் எவ்விதமான கீழ்படியாமையும் இல்லாததினால் அவருக்கு கீழ்படிதலை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஒருபொழுதும் தேவையாயிருக்கவில்லை. கீழ்ப்படியாத நபர் சீடனாக இருக்க முடியாது. சீடத்துவக் கொள்கைக்கு கீழ்படியாமை முரணாணது. சீடன் சுயத்திற்கு அல்ல தேவனுக்கு பிரியமாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதே போல “கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடக்கவில்லை” (ரோ.15:3). சீடன், தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதிலும், அவற்றில் சார்ந்திருத்தலிலும் உற்சாகமுள்ளவனாயிருப்பானெயன்றி தன்னுடைய வார்த்தைகளில் அல்ல. “தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார் (யோ.3:34).”நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய் சொல்லவில்லை” (யோ.14:10) என்றும், “நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்கு கொடுத்தேன்” (யோ.17:8) என்கிறார் கிறிஸ்து. சீடனுடைய செயல்கள் தன்னுடைய எஜமானால் கட்டளையிடப்பட்டதாக இருக்கும் தன்னுடைய சுய சித்தத்தை செய்ய அவன் அழைக்கப்படவில்லை. “நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்” (யோ.17:4) என நம்முடைய கர்த்தர் கூறுகிறார். “நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்கு கற்பித்ததும், நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக் குறித்துச் சாட்சிக் கொடுக்கிறது” (யோ. 5:36) சீடனுக்கு அடையாளமாக இருப்பது பூரண கீழ்ப்படிதலே ஆகும். இதுவே கர்த்தராகிய இயேசுவின் குணாதியசமாக இருந்தது.

அவரின் ஊழியம்

எல்லா விசுவாசிகளும் தேவனை சேவிப்பதற்கே முதன்மையாக அழைக்கப்படுகிறார்கள் (லூக்.4:8 பின்பகுதி, உபா.6:13). நாம் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யமுடியாதென மேலும் எச்சரிக்கப்படுகிறோம் (லூக்.16:13, மத்.6:24). பிரசங்கியும் மற்றும் ஊழியங்கள் மட்டுமே தேவனுடைய ஊழியக்காரர்கள் என்பதல்ல. நாம் எல்லாருமே தேவனுடைய ஊழியர்களென அழைக்கப்படுகிறோம் என்றாலும் சீடன் மட்டுமே தன்னுடைய வாழ்வில் இவ்வழைப்பின் சிறப்பை அறிந்துள்ளான். “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னை பின்பற்றக்கடவன்” (யோ.12:26) இதுவே சீஷத்துவத்தின் பொருளாகும். நம்முடைய கர்த்தர் பரிபூரண தேவ ஊழியர் ஆவார். மாற்கு சுவிசேஷம் நம்முடைய கர்த்தரை பல்வேறு முறைகளில் தேவனுடைய ஊழியக்காரராக சித்தரிக்கிறது. “நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல இருக்கிறேன்” (லூக்.22:27) என இயேசு கூறினார். இதை அவர் தாழ்வான இடத்தை தெரிந்தெடுக்க வேண்டிக்கொள்கிற கருத்தில் பேசினார். (வசனங்கள் 25-26). பணிவிடை அழைப்பு ஒரு தாழ்வான அழைப்பாகும், அது ஒரு உயர்வானதல்ல. நாம் பெரியவர்களாக இருக்க விரும்பினால். எல்லாருக்கும் பணிவிடைக்காரர்களாயிருக்க வேண்டுமென இரட்சகர் கற்பித்திருக்கிறார். இதை அவர் மாதிரியாகக் கொண்டு “மனுஷகுமாரன் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யும்படி வந்தர்”. (மாற்.10:45) சீடர்களால் தவிர்க்கப்பட்ட கீழான வேலையை செய்யும்படி கிறிஸ்துவே அரைக்கச்சையை கட்டி, குனிந்து அவ்வேலையை செய்தார். ஒரு கீழான அடிமையைப்போல தேவனுடைய சித்தத்தை செய்தார். அவர் தம்மையே பாடமாக வைத்தார். ஊழியக்காரன் எஜமானிலும் பெரியவனல்ல. எஜமானே இப்படி செய்திருப்பாரானால், ஊழியக்காரன் என்கிற இடத்தை தெரிந்தெடுக்கும் பொழுது பிறருக்கு இப்படி பணியாற்றவேண்டுமென அழைக்கப்படுகிறோம்.

அவரின் அன்பு

கிறிஸ்தவர்களின் மேன்மையான அடையாளத்தைப் பற்றி யோவான் நமக்கு வெளிப்படுத்துகிறார். “பிரியமானவர்களே ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான் அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1.யோ.4:7-8). எல்லா சீடர்களுமே அன்புகூருவதற்கு அழைக்கப்படுதிறார்கள். நாம் கர்த்தரிடத்தில் அன்புகூரவேண்டும். (மத்.22:37), மாற்.12:30, லூக்.10:27) பிறரிடம் அன்புகூரவேண்டும் (மத்.22:39) உடன் விசுவாசியிடம் அன்புகூரவேண்டும் (1.யோ.3:14). மேலும் நம்முடைய சத்துருக்களின் மீது கூட அன்பு கூரவேண்டுமென (மத்.5:44, லூக்.6:27) அழைக்கப்படுகிறோம். அன்பின் மொத்த வெளிப்பாடே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவர் பூரண நீதியுள்ளவரும் நீதிமானுமாவார். பரிசுத்தரும், தன் பேச்சிலும் செயலிலும் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்றாலும் அன்பை குறைவின்றி வெளிப்படுத்துகிறார். இயேசு உலகிலுள்ள சிறுபிள்ளைகளை நேசிக்கிறார் என பிள்ளைகள் பாடுவதை கேட்டிருக்கிறேன். ஏனெனில், தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மாற்.10:14). ஆனால் சிறுபிள்ளைகளோடு அவருடைய அன்பு நிற்கவில்லை, அப்பட்டியல் முடிவில்லாதது. தன் அழைப்பை புறக்கணித்து துக்கத்தோடு சென்ற செல்வந்த வாலிபனை நேசித்தார் (மாற்.10:21). புறக்கணிக்கப்பட்ட மக்களிடம் அன்பு கூர்ந்தார். தன்னை துன்பப்படுத்தி, சிலுவியல் அறைந்த சத்துருக்களுக்காக சிலுவையிலிருந்து ஜெபித்தார் (லூக்.23:34) என்றாலும், தன்னுடைய பிதாவிடம் முதன்மையான அன்பு வைத்திருந்தார். அதை வெளிப்படையாக பிரகடனப்படுத்தினார் (யோ.14:31). சீடன் பிறரிடம் சரியாக அன்புகூருவதற்கு முன்பாக மனப்பூர்வமாக தேவனிடத்தில் முதலாவது அன்புகூர வேண்டும். தெய்வீக அன்பு, தியாக அன்பு, அது உணர்ச்சிவசப்பட்ட அன்பல்ல. இவ்வன்பு சித்தத்திலிருந்து வருகிறது. உணர்ச்சிகளிலிருந்தல்ல. இவ்வன்பானது எதையும் சார்ந்திராமல், பெரிய இருதயத்திலிருந்து பாய்ந்து செல்கிறது. இவ்வுலகுக்குரியவர்களால் இதை அறிந்து கொள்ள முடியாது (யோ.1:5-10). சீடனுடைய தீர்மானமும், வைராக்கியமும் அன்பினால் மட்டுமே தூண்டப்படவேண்டும் உண்மையான சீடனே பூரண அன்பிற்கு வெளிப்பாடு.

அவரின் மனஉருக்கம்

மனஉருக்கமும், அன்பும் ஒன்றுதான் என்பது போல் தோன்றலாம். ஆனால் அவற்றிற்கிடையே வித்தியாசம் இருக்கிறது. அவைகளிடையே நெருங்கிய உறவு காணப்படுவதையும் நாம் காணலாம். மனஉருக்கம் என்பது பிறருடைய துன்பத்தை நாம் அறியும் பொழுது அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டும் என்ற ஆவலோடு நமக்குள்ளாக ஏற்படும் இரக்க சிந்தையின் நெருக்கமாகும். பிறருடைய தேவைகளை காணும்பொழுது சீடனானவன் அசையாமல் இருக்கமுடியாது. பிறருடைய துக்கங்கள் மற்றும் தேவைகள் இயேசுகிறிஸ்துவின் உள்ளான தவிப்பை மனதுருக்கமாக வெளிப்படுத்தியது. அவரின் மனதுருக்கம் செயலோடு பின்னி பிணைந்திருக்கிறது. அவர் திரளான ஜனங்களை கண்டு அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுதளைப்போலத் தொய்ந்து போனவர்ளாக கண்டார் (மத்.9:36). அவரின் இருதயம் வியாதியஸ்தர்களை பற்றிக் கொண்டிருந்தது (மத்.20:34). குஷ்டரோகிகளிடமாய் (மாற்.1:41) துக்கம் நிறைந்தவர்களிடமாய் (லூக்.7:13) அவர் நின்றார். அவர்களின் வேதனைகளை ஆச்சரியப்படும் விதமாய் நீக்கினார். புராணங்களிலும், மற்றும் கட்டுக்கதைகளில் வரும் தேவர்களை போல் அல்லாமல் நம்முடைய தேவன் ஆறுதலின் தேவனாவார். இவ்வுலகிலே நிறைந்திருக்கும் தேவைகளைக் குறித்து அவர் நெருங்கிய கரிசனை உடையவராயிரக்கிறார். எல்லாவற்றையும் நேர்த்தியாகவும் அழகாகவும் சிருஷ்டித்த தேவனுக்கு பாவத்தின் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான துன்பங்களும் வேதனைகளும் அவருடைய பரிபூரண சித்தத்திற்கு உட்பட்தல்ல. பாவம் உலகை நாசகரமாக மாற்றியது; என்றாலும் கர்த்தர் ஆழமான கரிசனை உள்ளவராக இருக்கிறார். சீடர்களும் பிறருடைய பலவீனங்களைக் குறித்து கரிசனையும், உணர்வும், பரிதவிக்கக்கூடியவர்களாக கண்டிப்பாக இருக்க வேண்டும். நம்முடைய இரட்சகர் பூமியிலே மிகவும் செயல்பட்டவராக காணப்பட்டதுபோல, பரலோகத்தில் நம்முடைய மகா பிரதான ஆசாரியராக இரக்கமுள்ளவராய் தொடர்ந்து ஊழியம் செய்து கொண்டிருக்கிறார். (எபி.4:15) கர்த்தராகிய இயேசுவை போல் மனதுருக்கம் உள்ள எவரும் இப்பூமியில் இதுவரை வாழ்ந்ததில்லை.

அவரின் ஜெபம்

சீடன் தன்னுடைய குருவுடன் ஐக்கியம்கொள்ள வேண்டும். கவனமாக அவரை கவனிக்கவேண்டும். சில நேரங்களில் அவரின் போதனைக்காக காத்திருக்க வேண்டும். தன்னுடைய ஊழியத்தை குறித்து குருவோடு சொல்ல வேண்டும். என்ன செய்தோம் என்பதைக் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும். பெற்றுக் கொண்ட உதவிக்கு நன்றி தெரிவிக்கிறவனாக இருக்க வேண்டும். தன்னுடைய ஆண்டவரை (எஜமானை) அதிகமாக சிந்திக்கவேண்டும். இவை எல்லாம் அடங்கியதே ஜெபம். ஜெபமானது ஜீவரேகையாக சீடனுக்கு இருக்கிறது. நம்முடைய கர்த்தர் ஓர் ஜெப மனிதர். “அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார்” (மாற்.1:35). சீடர்கள் தங்கள் ஆண்டவனின் ஜெப பழக்கத்தை கவனமாக கவனித்து வந்தனர். “அவர் ஒரிடத்தில் ஜெபம் பண்ணி முடித்த பின்பு அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி, ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்தது போல், நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும் என்றார்” (லூக்.11:1). ஏனெனில் அவர் ஜெபமனிதராக இருந்ததினாலே, சீடர்களும் ஜெப மனிதர்களாக இருக்கவேண்டியதின் தேவையை அறிந்திருந்தார்கள். கிறிஸ்து ஜெபத்தை மாதிரியாக இருந்து கற்றுக்கொடுத்தாரே தவிர உபதேசமாக அல்ல அவரின் வெளிப்படையான ஊழியம் துவங்குவதற்கு முன்பாக அவர் ஜெபித்தார் (லூக்.3:21). முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பாக அவர் ஜெபித்தார் (லூக்.6:12-13). பெரும் வேதனையில் தேவனுடைய சித்தத்தை நாடி ஜெபம் பண்ணினார் (லூக்.22:44). அவருடைய சீடர்களின் விசுவாசம் ஒழிந்து போகாமலிருக்க அவர்களுக்காக அவர் ஜெபித்தார் (லூக்.22:32). மேலும் தன்னுடையவர்களுக்காக தொடர்ந்து வேண்டிக்கொண்டிருக்கிறார் (எபி.7:25). கர்த்தராகிய இயேசுவைப்போல எந்த ஒரு சீடனும் ஜெபத்திற்கு முன் மாதிரியாக இருக்க முடியாது.

அவரின் விசுவாசம்

சீடனுடைய வாழ்வு விசுவாச வாழ்வாகும். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” (எபி.11:6) “நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான்” என்கிற வசனம் நான்கு முறை திரும்ப திரும்ப கர்த்தருடைய வசனத்தில் கூறப்பட்டுள்ளது. விசுவாசத்தின் சரியான நோக்கமே கர்த்தரும், அவரின் வசனமும் ஆகும். விசுவாசம் என்பது கர்த்தரை சார்ந்து அவர் மீது சாய்ந்து, அவரையே நோக்கிப்பார்த்து, அவருடைய வார்த்தையின்படி எல்லாவிதமான தேவைகளுக்காகவும் அவரையே நம்பி இருத்தலாகும். இவ்விதமான சார்பு தன்மை மெய்யான சீடனிடம் காணப்படும்” நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை” (யோ.5:30).

அவர் தம்முடைய சீடர்களுக்கு “அன்றன்றுள்ள ஆகாரத்தை எங்களுக்கு தாரும்” என ஜெபிக்க கற்றுக்கொடுத்தார் (மத்.6:11). அவருக்கு எது தேவையோ அதற்காக தன்னுடைய பிதாவையே நோக்கிப் பார்த்தார். திரளான ஜனங்களுக்கு உணவுக் கொடுக்கவும் (மத்.14:19), பேதுருவுக்கும், தனக்கும் வரி செலுத்தும் படியாகவும் (மத்.17:27), எருசலேமில் பயணம் செய்ய கோவேறு கழுதைக்காகவும் (மத்.2:2) பிதாவையே சார்ந்து நின்றார். தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை யாரிடமும் வெளிப்படையாக கூறினதாக வேதத்தில் எழுதி வைக்கப்படவில்லை. என்றாலும் அவருக்கோ, அவரின் சீடர்களுக்கோ ஒரு குறைவும் இல்லை. தன்னுடைய சுய தேவைகளுக்காக ஒருபோதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை, தன்னுடைய சீடர்கள் நாளையைக் குறித்து கவலைப்பட்ட வேண்டாம் என போதித்தார் (மத்.6:25-34). அவரின் ஊழியத்தின் திட்டங்களெல்லாம், தேவனுடைய திட்டமாக இருந்தது (யோ.4:4-7). அவரின் வருங்காலம் தேவனால் திட்டமிடப்பட்டது, அதில் அவர் அமைதியாக சார்ந்திருந்தது ஒவ்வொரு நாளும் இப்பூமியில் வாழ்ந்து வந்தார்.

முடிவுரை

தன்னை பின்பற்றி வருகிறவர்கள் எப்படி இருக்கவேண்டுமென கர்த்தராகிய இயேசு விரும்பினாரோ அதற்கு அவரே பரிபூரண எடுத்துக்காட்டு, அவரின் நோக்கமெல்லாம் பிதாவின் மீதுள்ள அன்பினாலே வேரூன்றியிருந்தது. அவரின் கீழ்படிதல் அவ்வன்பை பிரதிபலித்தது. தேவன் மீதும், பிறர் மீதும் கொண்டிருந்தது அவரின் அன்பு மேன்மையானது. அது இரக்கத்திற்கும் மன உருக்கத்திற்கும் அடையாளமாக காணப்பட்டது. ஜெபத்தாலும், விசுவாசத்தாலும், தேவனுடைய வார்த்தையாலும் ஆவிக்குரிய யுத்தத்தை நடத்தினார். அவரையும், அவர் செய்ததையும் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம்.

சில வேளைகளில் கிறிஸ்து எல்லாவிதத்திலும் நம்மைவிட மிக உயர்ந்தவராக இருக்கிறாரென நினைத்து, அவரை பின்பற்றுவதற்கு நாம் முயற்சி செய்யாமல் நம்முடைய குறைகளை சாக்குப்போக்காகக் சொல்கிறோம். இது ஒரு வகை. அதே வேளையில் கிறிஸ்து நிகழ்காலத்திற்கு ஏற்றவரல்ல என்கிற எண்ணமுடையவர்களாய் இருந்து குற்றஉணர்வுள்ளவராகவும் இருக்கிறோம். இவை இரண்டுமே நமக்கு பயனில்லை; என்றாலும், அவருடைய வாழ்க்கையே பரிபூரண அளவுகோல். அதை தரம் தாழ்த்தி விடக்கூடாது. எவ்வளவு உறுதியாக அவரின் தரத்தை நோக்கி முன்னேறி செல்கிறோமோ அவ்வளவாய் தேவன் நிச்சயமாக நம்மில் பிரியப்படுவார். நாம் பரலோகத்தில்தான் இப்பரிபூரண தரத்தை அடைவோம். ஆனால் இப்பொழுதே இவ்விதமான தெய்வீக குணங்களை நம்முடைய நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து பரிசுத்த ஆவியின் வல்லமையினால் முன்னேறி செல்லவேண்டும்.

பாடம் 2 ற்கான கேள்விகள்

இயேசு கிறிஸ்து: அவரே உண்மையான சீடர்

  1. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பிதாவுக்கு கீழ்படிந்த வாழ்க்கை (பிலி. 2:8, யோ.17:4) கர்த்தருக்கும், அவரின் வசனத்திற்கும் முழுமையாக கீழ்படிய எவைகள் தடையாக உள்ளது? எப்படி இத்தடைகளை மேற்க்கொள்வீர்?
  1. நம்முடைய ஆண்டவரின் வாழ்க்கை சீடனாக. இருப்பதின் பொருளை தெளிவாக விளக்குகிறது. அவர் நடந்ததுபோல நாமும் நடக்க வேண்டும் (1.யோ.2:6). நீங்கள் இப்பாடத்தை கற்றுக் கொண்டதால், உண்மையான சீடராகிய இயேசு கிறிஸ்துவின் குணங்களில் உங்களை பாதித்த ஒன்றோ அல்லது இரண்டையோ குறிப்பிடு.
  1. தேவனுடைய மகிமையும் எல்லாவற்றிற்கும் இராஜவானவர், இப்பூமிக்கு வந்தபொழுது, தாழ்மையான இடத்தை தெரிந்தெடுத்தார் (லூக்.22:27, மாற்.10:45) எந்த வகையில் உள்ளான மனத்தாழ்மையோடு இருப்பது கடினமாக உள்ளது?
  1. 1.கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில் 4-7 வரை உள்ள வசனங்களை வாசிக்கவும். எப்படி இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் இவைகளை கைக்கொள்ளும்படியாக மாதிரியாக விளக்கி காண்பித்தார்?
  1. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் காணப்பட்டதுபோல உண்மையான மனதுருக்கம் என்றால் என்ன? பிறரோடுள்ள உறவில் எப்பகுதியில் நீங்கள் மனஉருக்கத்தில் குறைவுள்ளவராக உணருகிறீர்கள்?
  1. நீங்கள் வல்லமையாகவும், அதிகமாகவும் ஜெபிக்க, இயேசு கிறிஸ்துவின் ஜெபவாழ்க்கையில் குறைந்த மூன்று எடுத்துகாட்டுகளை கூறவும். எப் பகுதியில் நாம் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்? வசனங்கள் மாற்கு 1:35, லூக்கா 22:32, 41-44, யோவான் 17:1-28 இவைகளை கருத்தில் கொள்ளவும்.
  1. இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் விசுவாசம் எவ்வளவு முக்கியமாக இருந்தது? குறைந்தது மூன்று ஜெபங்களையோ,- அல்லது பிதாவை அவர் சார்ந்திருந்ததையோ விளக்கு.
  1. கர்த்தரின் மீது நம்பிக்கை வைத்து, எல்லாவற்றையும் அவரிடம் ஒப்புக் கொடுப்பதை விட்டு விட்டு, உங்கள் வாழக்கையில் நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிற எதாவது ஒன்றைக் கூறவும்.
ShareTweet

Related Posts

உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்
உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்

பாடம் 3: இயேசு கிறிஸ்து: திட்டமிட்ட குறிக்கோள் உடைய மனிதர்

பாடம் 3: இயேசு கிறிஸ்து: திட்டமிட்ட குறிக்கோள் உடைய மனிதர் "உம்முடைய சித்தத்தின் படி செய்ய, இதோ வருகிறேன்" (எபி.10:7, சங்.40:7) இயேசுவுக்கு திட்டமிட்ட குறிக்கோள் ஒன்று...

உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்
உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்

பாடம் 1: சீஷத்துவத்தின் கிரயம்

பாடம் 1: சீஷத்துவத்தின் கிரயம் "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்" (யோ.7:37) "நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்.11:28)...

உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்
உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்

உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்

(LDP – LIVING DISCIPLESHIP PRINCIPLES) ஆசிரியர்: ஓ. ஜே. கிப்சன் (O. J. Gibson) இந்த பாடத்திட்டத்திலிருந்து அதிகபட்ச பயனைப் பெறுவது எப்படி உயிரோட்டமான சீஷத்துவக்...

Next Post
உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்

பாடம் 3: இயேசு கிறிஸ்து: திட்டமிட்ட குறிக்கோள் உடைய மனிதர்

பாடல் – 282 – கர்த்தரை பாடுவோம்

பாடல் - 282 - கர்த்தரை பாடுவோம்

Recommended

Song 030 – தேவ தேவனைத் துதித்திடுவோம்

Song 030 – தேவ தேவனைத் துதித்திடுவோம்

மெய்யான ஒளி

மெய்யான ஒளி

இரு வழிகள் இரு இலக்குகள்

இரு வழிகள் இரு இலக்குகள்

மோட்சப் பயணம்

04. கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆதியாகமம்
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மேம்பட்ட கிறிஸ்தவ பயிற்சி
  • மோட்சப் பயணம்
  • யாத்திராகமம்
  • வேத ஆராட்சி
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

பரிசுத்த வேதாகமத்தை Spotify ல் கேட்டபதற்கு இங்கே அழுத்தவும் !

பாடல்களைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்.

Ok

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
    • மேம்பட்ட கிறிஸ்தவ பயிற்சி
    • உயிரோட்டமான சீஷத்துவக் கோட்பாடுகள்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
    • வேத ஆராட்சி
      • ஆதியாகமம்
      • யாத்திராகமம்
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.