இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்
இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்
ஏனோக்கு நடந்தான் இயேசுவோடு
எல்லையில்லா இன்பம் அடைந்தான்
ஏனோக்கு நடந்தான் இயேசுவோடு
எல்லையில்லா இன்பம் அடைந்தான்
வளுவாது வாழ்க்கை வாழ்ந்திருந்தான்
வானூடே சென்றான் இயேசுவோடு
வானூடே சென்றான் இயேசுவோடு
இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்
இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்
பலரோடு நானும் நடந்ததுண்டு
புரியாத பாதையில் நடந்ததுண்டு
பலரோடு நானும் நடந்ததுண்டு
புரியாத பாதையில் நடந்ததுண்டு
சரியான பாதையில் நடந்திடவே
சீராளன் இயேசு தான் வழியாம்
சீராளன் இயேசு தான் வழியாம்
இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்
இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்
யாரோடு இன்று நீ நடப்பதென்று
போராடுகின்றாயோ உள்ளத்திலே
யாரோடு இன்று நீ நடப்பதென்று
போராடுகின்றாயோ உள்ளத்திலே
பாரோடு இன்று நடப்பாயோ?
பரனோடு என்றும் நடப்பாயோ ?
பரனோடு என்றும் நடப்பாயோ ?
இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்
இயேசுவுடன் நான் நடப்பேன்
இனிய மொழி அவர் பேசுவார்












