துதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையே

இதயங்கள் தேடட்டுமே அவர் தயவினை நாடட்டுமே

கண்டிட வேண்டுமே எங்கள் காருண்ய இயேசுவையே

பணிந்திட வேண்டுமே அந்த நிமலனின் பாதத்தையே
சுதந்திரம் ஈந்த அந்த தேவனையே தியாகத்தின் ஒளிச்சுடரை
அவலத்தில் எம் துணையே எங்கள் மன்னிப்பின் ஆண்டவனை
துதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையே
இதயங்கள் தேடட்டுமே அவர் தயவினை நாடட்டுமே
பாரிய சிலுவையினில் அன்று பாவியாய் மாண்டவரை

வினைகளை தீர்ப்பவரை எங்கள் தனிமையை அழிப்பவரை
வானத்தின் சேனைகளின் அந்த சத்திய ராஜனையே
வாவென எமை அழைக்கும் அன்பின் இயேசுவின் நாமத்தையே