என் தேவா எனக்கிரங்கும் உம் கிருபையின் படியே
உம் இரக்கங்களின்படியே என்னை சுத்தம் செய்திடும்
உமக்கொருவர்க்கு விரோதமாக பாவம் செய்தேன்
உம் கண்கள் முன்பாக நான் பொல்லாங்கை நடப்பித்தேன்
நீர் பேசும் போது தேவா உம் நீதி விளங்கவே
நியாயம் தீர்க்கையில் தேவா இதை அறிக்கை செய்கிறேன்
என் தேவா எனக்கிரங்கும் உம் கிருபையின் படியே
உம் இரக்கங்களின்படியே என்னை சுத்தம் செய்திடும்
உமக்கும் ஏற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவி தான் தேவனே
நொறுங்குண்ட நருங்குண்ட இதயத்தை நீர் தள்ளவே மாட்டீர்
சீயோனுக்கு உம் பிரியப்படியே நன்மை செய்யும்
எருசலேமின் மதில்களை கட்டுவீராக
என் தேவா எனக்கிரங்கும் உம் கிருபையின் படியே
உம் இரக்கங்களின்படியே என்னை சுத்தம் செய்திடும்
என்னைத் தள்ளாதேயும் உம் சமூகத்தில் இருந்து தேவா
பரிசுத்த ஆவியை என்னிலிருந்து எடுத்துக்கொள்ளாதிரும்
உம் இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு நீர் தந்து
உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்
என் தேவா எனக்கிரங்கும் உம் கிருபையின் படியே
உம் இரக்கங்களின்படியே என்னை சுத்தம் செய்திடும்