- மறுபிறப்பும் பரிசுத்த ஆவியும் ‘நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்” பரதீசின் வாயிலில் நிற்கும் சேராபீம் தாங்கியுள்ள பட்டயத்தைப் போல், ஆண்டவர் இயேசுவின் இந்த வார்த்தை அநேகருடைய வழியில் சுடர் வீசுகின்றது. இந்த மாற்றம், அவர்கள் எடுக்கக்கூடிய பெரும் பிரயாசைக்கும் புறம்பானதால் அவர்கள் துயரத்துக்குட்படுகின்றனர். மறுபிறப்பு பரத்திலிருந்து ஏற்படவேண்டுமாகையால், அது சிருஷ்டியின் கரத்திலில்லை. ஒரு பொய்யான ஆறுதலை ஏற்படுத்துமாறு ஓர் உண்மையை மறுக்கவோ அல்லது மறைக்கவோ நான் எண்ணவில்லை. மறுபிறப்பு இயற்கைக்கு அப்பாற்பட்டதென்றும், பாவியின் சுய முயற்சியால் உண்டாவதில்லையென்றும், நான் ஒப்புக்கொள்கிறேன். கேள்விக்கிடமின்;றி மெய்யாயிருப்பதை ஒதுக்கிவிடும்படியோ அல்லது மறந்துவிடும்படியோ நான் என் வாசகரை தூண்டுவேனாகில், அதனால் அவருக்கு நல்லபலன் விளையாது.
எனினும், விசுவாசத்தினால் உண்டாகும் இரட்சிப்பைக்குறித்து இந்த அறிக்கைக்கு நமதாண்டவர் தந்த தெளிவான விளக்கம் இதே அதிகாரத்தில் இருப்பதை குறிப்பிடத்தக்கதல்லவா? யோவான் எழுதின சுவிசேஷத்தின் மூன்றாம் அதிகாரத்தை முற்றும் வாசியுங்கள். ஆரம்ப வசனங்களைப்பற்றியே எண்ணமிட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.
‘இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்’ இவ்வாறு மூன்றாம் வசனம் அறிவிப்பது உண்மையே.
ஆனால், பதினாலாம், பதினைந்தாம் வசனங்கள் நம்மோடு இவ்விதமாய்ப் பேசுகின்றன.
‘சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்”
பதினெட்டாம் வசனம் மகிழ்வூட்டும் அதே கோட்பாட்டை விளக்கமாய் அறிவிக்கின்றது!
‘ அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான். விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.”
இந்த இரண்டு விளக்கங்களும் ஒரே வாயினால் அறிவிக்கப்பட்டு ஒரே அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆகையால் இவை ஒன்றொடொன்று ஒத்துப்போக வேண்டுமென்பது தெளிவு. சிரமமே இல்லாதவிடத்து, நாம் ஏன் அதைச் சிரமப்படுத்திக்கொள்ளவேண்டும்? தேவன் அருளும் ஏதோ ஒன்றால்தான் இரட்சிப்புக்கு அவசியமானது நமக்குக் கிட்டுமென்று ஒரு விளக்கம் நமக்கு உறுதியளிக்கின்றது. இன்னொரு விளக்கமானது, நாம் இயேவில் விசுவாசம் வைக்கையில் ஆண்டவர் நம்மை இரட்சிப்பாரென நிச்சயப்படுத்துகிறது. ஆகையால் இரட்சிப்புக்கு என்னென்ன தேவையென்று கூறப்பட்டுள்ளனவோ அவை யாவையும் ஆண்டவர் விசுவாசிப்பவர்களுக்குத் தந்தருளுவாரென்று நாம் நிச்சயமாகவே மறுபிறப்பைத் தோற்றுவிப்பதால், அவர்களின் நம்பிக்கையே அவர்களை மறுபிறவி அடைந்திருக்கின்றனர் என்பதற்கு நிலையான அத்தாட்சியாகும்.
நாமே செய்யக்கூடாத காரியத்தினிமித்தம் நாம் இயேசுவை விசுவாசிக்கிறோம். அது நம் சுய வல்லமையில் இருக்குமானால், நாம் அவரை ஏன் நோக்கிப்பார்க்கவேண்டும்? விசுவாசித்தல் நம் கடமை. நம்மைப் புதுப்பிறவி ஆக்குவது ஆண்டவர் பொறுப்பு. நமக்காக அவர் விசுவாசிக்கமாட்டார், அதுபோல் அவருக்காக நாம் புதுப்பிக்கும் பணியை ஏற்கமுடியாது. கிருபையான கட்டளைக்கு நாம் பணிவது போதுமானது. நம்மில் மறுபிறப்புண்டாகக் கிரியை புரிய ஆண்டவர் இருக்கிறார். நமக்காகச் சிலுவை பரியந்தம் சென்று நம்முயிரைத் தியாகம் செய்ய ஆயத்தமாயிருந்தவர், நாம் என்றென்றும் பாதுகாவலுடனிருக்க அவசியமான யாவற்றையும் நமக்கு நல்குவார்.
‘ஆயினும் இரட்சிப்புக்கடுத்த இதய மாற்றம் பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகும்”. இதுவும் முற்றிலும் மெய்யாயிருப்பதால், இதைக்குறித்துக் கேள்விகள் கேட்பதோ, அல்லது மறந்துவிடுவதோ தகாது. ஆனால் பரிசுத்தாவியானவரின் கிரியை இரகசியமாயும் மர்மமாயும் இருப்பதால், விளைவுகளின் வாயிலாகத்தான் அதைக் காணமுடியும். இயற்கையான பிறப்பும் இவ்வாறே உள்ளது. அதைவிட அதிகப் புனிதமுள்ளதாக தேவ ஆவியானவரின் பரிசுத்த கிரியைகளை மதிக்கவேண்டும். ‘காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. அதன் சத்தத்தைக் கேட்கிறோம். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்கு போகிறதென்றும் உனக்குத் தெரியாது. ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்” பரிசுத்த ஆவியானவர் இயேசுவைக் குறித்து சாட்சி பகருவதால், அவரில் விசுவாசம் வைக்க மறுப்பதற்கு பரிசுத்த ஆவியானவரின் இரகசிய கிரியை ஒரு காரணமாயிராதென்பது மட்டும் நமக்குத் தெரியும்.
ஒரு நிலத்தை உழுமாறு ஒருவனைப் பணிக்கும்போது, தேவன் தானியத்தை விளையச் செய்தாலன்றி, விதை விதைத்தலில் பயனில்லையென்று சாக்குச் சொல்லி, தனக்கு இடப்பட்ட வேலையை அவன் செய்யாதிருக்க முடியாது. தேவனுடைய இரசகிய சக்கதியே ஓர் அறுவடையை உண்டாக்கக் காரணமாயிருப்பதால் அவன் நிலத்தில் உழைக்காதிருப்பது நியாயமாகாது. ‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” என்பதினிமித்தம் வாழ்க்கையின் சாதாரண அலுவல்களை மேற்கொள்வோருக்கெல்லாம் தடைகள் ஏற்படுவதில்லை. கிறிஸ்துவை விசுவாசக்கும் எவனும் தன்னில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய மறுக்கிறாரென்று காணமாட்டான். கூறப்போனால் அவன் விசுவாசமே, ஆவியானவர் அவன் உள்ளத்தில் கிரியை செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதற்குச் சான்று.
தேவன் கிருயையால் கிரியை புரிகிறாரென்று மக்கள் வாளாவிருப்பதில்லை. ஜீவனும் பெலனும் அருளும் தெய்வீக வல்லமையின்றி அவர்களால் அசையக்கூடாதெனினும், அவர்கள் கேள்வியேதும் கேட்காமல், தங்கள் காரியத்தைக் கவனிக்கின்றனர். யாருடைய கரத்தில் அவர்களுடைய மூச்சு உள்ளதோ, அவர்களுடைய வழிகள் யாவும் யாருக்கு உரியனவோ, அவரிடமிருந்து அவர்களுக்கு அன்றாட வல்லமை கிட்டுகிறது. கிருபையின் வழியும் அவ்விதமே உள்ளது. மனஸ்தாபமுறுதலையும் விசுவாசித்தலையும் செய்யும் நாம் தேவன் அவற்றை செய்யும்படி நமக்கு வல்லமை அருளவில்லையென்றால், இரண்டில் எதையும் செய்வோம். நாம் பாவத்தைத் துறந்து இயேசுவில் விசுவாசம் வைத்ததும், ஆண்டவர் தமகு;கு நலமானபடி நம்மில் கிரியை செய்கிறதை நாம் காண்கிறோம். இக்காரியத்தில் ஏதும் சிரமம் இருப்பதுபோல் பாவனை புரிவது சோம்பேறித்தனம்.
சில சத்தியங்கள் சொற்களால் விளக்க கடினமாயிருப்பினும், அநுபவத்தில் எளிமையாய்த் தோன்றுகின்றன. பாவியானவன் நம்பும் சத்தியத்துக்கும், பரிசுத்த ஆவியானவராலேயே அவனில் விசுவாசம் தோன்றியுள்ளதென்பதற்கும் முரண்பாடு ஏதுமில்லை. ஆத்துமா ஆபத்தில் இருக்கையில் தெளிவாய்த் தெரியும் காரியங்களைக்கூட குழப்பிக்கொண்டிருப்பது மடமை. விபத்துக்குள்ளானோரைக் காப்பாற்ற வரும் படகைப் பார்த்துவிட்டு, படகு எடை இவற்றின் திட்டமான கனம் தெரியாததால் படகில் ஏறமாட்டேனென்று எவனும் கூறமாட்டான். அதேவிதமாக ஆகாரம் சீரணமாகும் முழு விபரத்தையும் அறிந்தாலன்றி, சாப்பிடமாட்டேனெ;று பட்டினி கிடப்பவன் சொல்லமாட்டான். எல்லா இரகசியங்களையும் புரிந்துகொள்ளும்வரை நான் விசுவாசிக்கமாட்டேனென்று என் வாசகர் கூறுவாறாயின், அவர் இரட்சிப்பை காணவே முடியாது. உங்கள் ஆண்டவரும் இரட்சகருமானவரின் மூலம் நீங்கள் மன்னிப்பைப் பெறமாட்டாதபடி நீங்களே சிரமங்களை ஏற்படுத்திக்கொண்டீர்களானால், நித்திய ஆக்கினையில் அழிவீர்கள். தந்திரப்பேச்சுகள், குதர்க்கங்கள் வாயிலாக ஆத்மீகப் பிரகாரமான தற்கொலை புரிந்துகொள்ளாதீர்கள்.











