- முடிவுரை
என் வாசகர் இந்நூலின் காணப்படும் என் வாசகங்களை வாசித்து வருகையில் படிப்படியாக என் கருத்தைப் புரிந்துகொண்டிராவிடில், அதற்காக நான் உண்மையில் வருந்துகிறேன். சிந்தைக்கும் முன் தவழ்ந்து செல்லும் சத்தியங்கள் கிரகிக்கப்பட்டு, வாசிப்போருக்கு உரியனவாக்கப்பட்டு, செயல்முறையில் கையாளப்படவில்லையெனில், புத்தகம் வாசித்தால் பெறும் பயம் ஏதுமில்லை. உணவு இருந்ததைக் கண்டு அதை எடுத்து அருந்தக் கூடாமையால் பசியுடனிருத்தலை போன்றது இது. என் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் உண்மையில் பற்றிக் கொள்ளாதிருந்தால், பிரிய வாசகரே, நீங்களும் நானும் சந்தித்தது விருதா. என்னைப் பொறுத்த வரையில், உங்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற திட்டமான ஆவல் என்னுள் எழுந்ததால் அதையொட்டி என்னாலியன்றதை நான் செய்திருக்கிறேன். உங்களுக்கு நன்மை செய்ய விழைந்ததில் நான் வெற்றி காணவில்லையே என்பது எனக்கு வேதனையளிக்கிறது. ஏனெனில், அந்த உரிமையைப் பெற நான் வெகு ஆவலாயிருந்தேன். நான் இந்தப் பக்கத்தை எழுதியபோது, உங்கள் நினைவே என்னை ஆக்கிரமித்திருந்ததால், பேனாவை வைத்துவிட்டு, இதை வாசிக்க நேரிடும் அன்பர்களுக்காக முழங்காலில் நின்று பிரார்த்தனை புரிந்தேன் ஏராளமான வாசகர்கள், நீங்கள் அந்த எண்ணிக்கையில் சேர மறுப்பினும் ஓர் ஆசீர்வாதத்தைப் பெறுவார்களென்பது என் உறுதியான நம்பிக்கை. இருக்கட்டும். நீங்கள் ஏன் மறுக்க வேண்டும்? நான் உங்களுக்குக் கொணர்ந்திருக்கக்கூடிய உகந்த ஆசீர்வாதத்தை நீங்கள் அங்கீகரிக்க விரும்பாவிடினும், உங்கள் இறுதி அழிவின் பழி என்னைச் சாராதென்று ஒப்புக்கொண்டாவது நீதியை நிலைநிறுத்துங்கள். நாமிருவரும் வெண்மையான பெரிய சிங்காசனத்தின் முன் சந்திக்க நேருங்கால், என் சிறு நூலை வாசிக்க நீங்கள் மகிழ்வுடன் செத்திய கவனத்தைக் குறித்து, நான் அதை வீணில் பயன்படுத்தியதாக நீங்கள் என்மீது குற்றம் சுமத்த முடியாது. உங்கள் நித்திய நலனுக்காகவே நான் ஒவ்வொரு வரியையும் எழுதினேன் என்பதை தேவன் அறிவார். இப்போது நான் ஆவியின் ஒருமையில் உங்கள் கையபை; பற்றுகிறேன். உறுதியாய் உங்கள் கரத்தை அழுத்துகிறேன். சகோதர வாஞ்சையோடு நான் பிடிப்பதை நீங்கள் உணருகிறீர்களா? விழிகளில் நீர் கசிய நான் உங்களை நோக்கி: நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்? என வினவுகிறேன். உங்கள் ஆத்துமாவைக் குறித்துச் சற்றே சிந்திக்கமாட்டீர்களா? வெறும் கவலைகளா? வேண்டாம். அவ்விதம் அசட்டையாயிராதீர்கள். இந்தப் பக்திக்கடுத்த காரியங்களை நிதானித்துப்பார்த்து நித்தியத்துக்காக நிச்சயமாய் உழைக்கப்பாருங்கள்! இயேசுவையும், அவர் அன்பையும், அவர் இரத்தத்தையும், அவர் இரட்சிப்பையும் மறுக்காதீர்கள். நீங்கள் ஏன் மறுக்க வேண்டும்? இதை உங்களால் செய்ய இயலுமா?
உங்கள் மீட்பரிடமிருந்து விலகிக்செல்ல வேண்டாமென்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன்!
மேற்கூறியவாறில்லாது என் மன்றாட்டுகள் கேட்கப்பட்டு, என் வாசகரான நீங்கள் ஆண்டவர் இயேசுவைச் சார்ந்திருக்க வழி நடத்தப்பட்டு, கிருபையினால் அவரிடமிருந்து இரட்சிப்பைப் பெற ஏவப்பட்டிருப்பின், இந்தக் கொள்கையை என்றென்றும் கடைப்பிடித்து, இவ்வழியில் வாழ்பவர்களாயிருங்கள். கிறிஸ்துவே உங்களுக்குச் சகலத்திலும் சகலமுமாயிருந்து, இலவச கிருபையெனும் ஓரே போக்கில் நீங்கள் நடமாடி ஜீவிப்பீர்களாக. தேவ தயவில் வாழ்க்கை நடத்துவதுபோன்று பிறிதொரு வாழ்க்கையில்லை. எல்லாவற்றையும் இலவச ஈவாகப் பெறுதலானது, சுய நீதியில் வரும் பெருமை. சுய குற்றஞ்சாட்டுதலால் ஏற்படும் வியாகுலம் இவற்றினின்று சிந்தையைக் காத்துக்கொள்கிறது. அது நன்றியறிதலான அன்பால் நெஞ்சை நெகிழப் பண்ணுவதால், அடிமைத்தன அச்சத்தால் ஏற்படும் உயர்வைவிட தேவனால் வெகுவாய் ஏற்கத்தக்க ஒருவித உணர்வை அது ஆத்துமாவில் தோற்றுவிக்கிறது. தங்களால் இயன்றவரைச் சிறப்பானதைச் செய்து மீட்பைப் பெறலாமென எதிர்நோக்குவோர், திருவருளின்படி இலவசமாய் அருளுப்படும் இரட்சிப்புடன்கூடத் தோன்றும் அந்த ஒளிவீசும் ஆர்வத்தைக் குறித்தோ, பக்திக் கனலைப் பற்றியோ, தேவன்பால் சுரக்கும் பக்திப் பரவசம் பற்றியோ ஏதுமறியார். அடிமைத்தனம் ஆவியின் சுய இரட்சிப்பு, மகிழ்வு நிரம்பிய சுவிகார ஆவி இணையாகாது. சட்டப்பூர்வமாக பிணைபட்டிருக்கும் அடிமைகளை இழுக்கும் பல இழுப்புகளில் இருப்பதைவிட சடங்குச் சுற்றுகள் மூலம் பரலோகத்தை ஏறி அடையமுயலும் பக்தர்களின் அலுப்பூட்டும் சாதனங்களில் இருப்பதைவிட, மெய்யான தூய்மை விசுவாசத்தின் மிகச் சிறிய உணர்வில் அதிகமாய்க் காணப்படும். விசுவாசம் ஆவிக்குரியதென்பதால் ஆவியாயிருக்கும் தேவன் அக்காரணம் பற்றி அதில் மகிழ்வுறுகிறார். ஆவியானவரான யெகோவாவின் பார்வையில், ஆண்டுக்கணக்கான ஜெப முறையீடுகளும், ஆலய வழிபாடும், சிற்றாலயத்தொழுகையும், சடங்குகளும், முறைமைகளும் அருவருப்பாயிருக்கும். ஆனால் மெய்யான விசுவாச விழியின் ஒரே ஒரு பார்வையானது ஆவிக்குரியதாயிருப்பதினிமித்தம் அது அவருக்கு அருமையானதாயிருக்கும். தம்மைத் தொழுதுகொள்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். முதலில் நீங்கள் உள்ளான மனிதனையும் மார்க்கத்தின் ஆவிக்குரிய பகுதியையும் கவனித்துக் கொண்டீர்களாயின், நாளடைவில் மற்றவை தொடரும்.
நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களெனில் மற்றவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்துக் கவனம் செலுத்துங்கள். உங்கள் உடன்வாழ் மக்களை ஆசீர்வதிக்கவேண்டுமெனும் தீவிர வாஞ்சை உங்கள் உள்ளத்தில் நிறைந்திருந்தாலன்றி அது வளம் பெறாது. உங்கள் ஆத்துமாவின் ஜீவன் விசுவாசத்திலும் அதன் ஆரோக்கியம் அன்பிலும் நிலைத்திருக்கின்றன. பிறரை இயேசுவிடம் வழி நடத்தவேண்டுமெனும் ஏக்கமுறாதவன் தானே அன்பின் வயப்படாதவனாயுள்ளான். தேவ சேவையான அன்பின் பணியில் ஈடுபடுங்கள். இல்லத்தில் இதை ஆரம்பியுங்கள். அடுத்து உங்கள் அயலகத்தாரைச் சந்தியுங்கள். நீங்கள் வசிக்கும் வீதியிலோ, கிராமத்திலோ ஒளிவீசப் பண்ணுங்கள். உங்கள் கை நீளும் இடமெல்லாம் கர்த்தருடைய வசனத்தைத் தூவுங்கள்.
மனந்திரும்பியவர்கள் மற்றவர்களை ஆதாயப்படுத்துகிறவர்களாக மாறினால், என் சிறு நூலினின்று என்ன நிகழுமென்பதை யாரறிவார்? அதன் வழியாக ஆண்டவர் கிரியை புரியக்கூடிய மனந்திரும்புதல்களுக்காகவும், அது இயேசுவிடம் வழி நடத்திய மக்களால் ஏற்படக்கூடிய மனமாற்றங்களுக்காகவும் இப்போதே நான் கர்த்தரை மகிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டேன். ஒருகால் இப்போது இத்தாளில் தன் அடையாளத்தைப் பதித்துக் கொண்டிருக்கும் என் வலக்கை மரணத்தால் அசைவற்றுப் போனபின், பெருவாரியான பலன்கள் ஏற்படக்கூடும்.
வாசகரே! என்னை விண்ணுலகில் சந்தியுங்கள்! நரகத்துக்குச் சென்றுவிடாதீர்கள். துயர்மிகு அவ்வாசஸ்தலத்தினின்று திரும்பிவருதல் என்பது கூடாதது. விண்ணுலக வாயில் உங்களுக்கு முன் திறந்திருக்கையில், மரணத்தின் வழியில் நுழைய நீங்கள் நாடுவதேன்? தம்மைச் சார்ந்திருப்போர் யாவருக்கும் இயேசு அருளும் இலவச மன்னிப்பையும் பூரண மீட்பையும் மறுக்க வேண்டாம். தயங்கித் தாமதியாதீர். வேண்டிய அளவுக்கு நீங்கள் தீர்மானம் பண்ணியாயிற்று. இப்போது வந்து செயற்படுங்கள். உடனடியான நிறைவான உறுதியுடன் இப்போதே இயேசுவை நம்புங்கள். நம்பிக்கையின் சொற்களை உங்களுடன் ஏற்று, இன்றே இந்த நாளில்தானே உங்கள் ஆண்டவரிடம் வாருங்கள்.
இப்போதே அல்லது இல்லை என்று இல்லாமல், ஆத்துமாவை என் வாழ்க்கையில் இப்போதே என்றிருக்கட்டும். இல்லை என்று கேட்க நேரிடில் பயங்கரமாம்.
ஆண்டவர் துணைபுரிவாராக! மறுமுறையும் உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்.
விண்ணுலகில் என்னைச் சந்தியுங்கள்.










