‘மாணவர்; வழிகாட்டி’ என்கிற இச் சிறிய புத்தகம் பன்னிரண்டு பாடங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் இப்பாடங்களை தெளிவுற அறிந்திருக்க வேண்டும். இளம் விசுவாசிகள் கிறிஸ்தவ போதனைகளில் வேரூன்றி உறுதியாய் நிலைத்து நிற்க இப் பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடங்களிலும் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டியது மாணவர்;கள் கடமையாகும். மாணவர்;கள் எளிதாக கேள்விகளுக்கு பதிலைக் கண்டு பிடிக்க அல்லது தெரிந்து கொள்ள ஒவ்வொரு கேள்விகளோடு சேர்ந்து வேதாகமத்தில் கேள்விக்கான பதில் எங்கு உள்ளதென்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேள்விகளுக்கும் நீங்கள் பதில் எழுதும்படி கேள்விகளைத் தொடர்;ந்து சிறிது இடம் விடப்பட்டுள்ளது. அதில் நீங்கள் பதில் எழுத வேண்டும். மேலும் ஒவ்வொரு பாடங்களின் முடிவிலும் மனப்பாடம் செய்ய வேண்டிய வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கண்டிப்பாக மனப்பாடம் செய்ய வேண்டும். இனி நாம் நேரடியாக பாடத்திற்குள் செல்வோம்.
பாடங்கள்
01) தேவனுடைய பிள்ளையாகுதல்
02) இரட்சிப்பின் நிச்சயத்துவம்
03) ஞானஸ்நானம்
04) தேவனோடு நேரம் செலவிடல்
05) ஜெபிக்கக் கற்றுக்கொள்ளல்
06) வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு
07) தேவனோடு ஜக்கியப்படல்
08) உங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதல்
09) உங்கள் ஆவிக்குரிய குடும்பம் ஸ்தல சபையே
10) நித்திய ஜீவனின் வழியைக் குறித்து பிறரோடு பகிர்ந்துகொள்ளல்
11) பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படல்
12) தேவனுடைய சித்தம் செய்தல்











