பாடம் 1: தேவனுடைய பிள்ளையாகுதல்
இவ் உலகில், பிறப்பால் நாம் எப்படி ஒரு குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருக்கிறோமோ, அதேபோல் இரட்சிப்பால் தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினர்; ஆகிவிடுகிறோம். தேவனுடைய குடும்பத்தில் பங்குள்ளவர்களாக மாற நாம் மறுபடி பிறக்கவேண்டும். மறுபடி பிறந்தவர்;கள் தேவனை “பிதா” என்று அழைக்கலாம். பிதா என்ற சொல் தந்தை, அப்பா ஆகிய அர்த்தங்களை உடையது.
(1) இயேசு கிறிஸ்து ஒரு பக்தி உள்ள மனிதனிடம் கூறியது என்ன ? (யோ.3:3)
நாம் மறுபடி பிறப்பதற்குத் தேவன் இரண்டு உபகரணங்களைப் பயன்படுத்துகின்றார்;.
அ ) தேவனுடைய வார்த்தை (1.பேது.1:23)
ஆ ) பரிசுத்த ஆவி (தீத்து 3:5)
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு கடிதம் எழுதுகின்ற பொழுது, கொரிந்துவில்; மக்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்;கள் என்று கூறுகின்றார்;. சுவிசேசம் அதாவது நற்செய்தி அவர்;களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தது. நற்செய்தி அல்லது சுவிசேசம் என்றால், கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்;, அடக்கம் பண்ணப்பட்டார்;, உயிர்த்தெழுந்தார்; என்பதாகும் (1.கொரி.15:1-4).
(2) கொரிந்துவில் உள்ளவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள என்ன செய்தார்கள்? (1.கொரி.15:3-4)
(3) பூமியில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதரின் நிலை என்ன ? (ரோ.3:23)
(4) எது மட்டும் பாவத்தின் சம்பளத்தைக் கொடுக்க முடியும்? (ரோ.6:23, எசேக்.18:20)
(5) கிறிஸ்து நம்மை விடுவிப்பதற்கு அல்லது இரட்சிப்பதற்கு என்ன செய்தார்? (1.பேது.2:24)
(6) பரலோகத்திற்குச் செல்ல நற்கிரியைகளின் பங்கு என்ன ? (எபேசி.2:8-9)
சுவிசேஷம் அல்லது நற்செய்தி இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது, ஆகவே அவர்; மீது நாம், விசுவாசம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
(7) இயேசு கிறிஸ்து யார் ? (யோ.1:1, 14)
(8) தேவனுடைய பிள்ளையாகுவதற்கு ஒரு மனிதன் என்ன செய்யவேண்டும் ? (யோ.1:12)
(9) இயேசு கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தோடு இணைந்து செல்வது எது ? (அப்.3:20)
(10) உண்மையாக தேவனுடைய குமாரனை உடையவன் எதை உடையவன் ? (1.யோ.5:12)
உங்களுக்குள்ளாகவே இக்கேள்விகளைக் கேளுங்கள்
எப்பொழுது நீங்கள் சுவிசேசத்தைக் கேட்டு விசுவாசித்தீர்கள் ? அதன் மூலம் பரிசுத்த ஆவியினால் முத்திரை இடப்பட்டீர்களா ? (எபேசி.1:13)
நீங்கள் என்ன முறையில் பாவத்திலிருந்து மனம் திரும்பினீர்கள் ? (லூக்.13:3) அப்படியானால் இயேசு கிறிஸ்துவைத் தேவனும் இரட்சகரும் என்று அறிக்கை பண்ணீர்களா ? (ரோ.10:9)
நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டதிலிருந்து உங்கள் வாழ்கையில் என்ன மாற்றம் தெரிகிறது ? (1.தெச.1:9)
மனப்பாட வசனம்
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோ.10:9).









