பாடம் 2: இரட்சிப்பின் நிச்சயத்துவம்
நாம் தேவனுடைய பிள்ளைகளானபடியால் நமக்கு ஒரு பிதா இருக்கிறார்; அவர்; பொய் உரையாதவர்;, அவருடைய வார்த்தைகள் எப்பொழுதும் உண்மையாய் இருக்கிறது. “உம்முடைய வார்த்தை சத்தியம்” ஏனென்றால் அவர்; தான் கூறியவற்றில் உறுதியாயிருக்கிறார்;. நாம் அவருடை வார்;த்தையில் முழுமையாகச் சாய்ந்து நிற்க முடியும். அவர்; எதைக் கூறியிருக்கிறாரோ அதைக்குறித்து நிச்சயம் உள்ளவர்;களாக நாம் இருக்கமுடியும்.
(1) எது உண்மை என்பதை நாம் நிச்சயத்துக் கொளவது தேவையாய் இருக்கிறது. நீதிமன்றங்களின் உண்மை, சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது. குமாரனைக் (கிறிஸ்து) குறித்து சாட்சி கூறுவது யார் ? (1.யோ.5:9)
எங்கே இச் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காணமுடியும் ? (யோ.5:39)
சாட்சி தருகின்ற வாக்குத்தத்தம் என்ன ? (1.யோ.5:11)
பின்வரும் வாக்கியங்கள் நாம் இரட்சிப்பைப் பெற்றுள்ளோம் என்பதைத் தேவனுடைய வார்த்தையின் (வேதாகமம்) மூலம் உறுதி செய்கின்றது.
(2) நீங்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்துள்ள தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு விசுவாசித்தால் மூன்று வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அவைகள் யாவை ? (யோ.5:24)
இப்பொழுது உங்களுக்கு இருப்பது என்ன ? வருங்காலத்தில் உங்களை விட்டு விலகுவது என்ன ? ஏற்கெனவே நிகழ்ந்திருக்கிறது என்ன ?
(3) இயேசு கிறிஸ்து விசுவாசிகளை “என் ஆடுகள்” என்று அழைக்கிறார் அவர் அவைகளை அறிவார்;, அவைகள் அவருடைய சத்தத்தைக் கேட்டு அவரைப் பின்பற்றும் (யோ.10:27-30).
அவைகளுக்கு என்ன இருக்கிறது ?
அவர்களுக்கு என்ன நடக்காது ?
யார் அவர்களைப் பாதுகாக்கிறார் ?
தேவனுடைய வார்;த்தை நம்முடைய இரட்சிப்பைக் குறித்த நிச்சயத்தை உண்டுபண்ணுகிறது. அதேசமயம் இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்தவைகள் நம்மைத் தேவனுடைய நியாயத்தீர்;ப்பிலிருந்து காத்துக்கொள்கிறது.
(4) எது நம்மைத் தேவனுக்கென்று மீட்டுக்கொண்டது, எது நம்மைத் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றுகிறது ? (1.பேது.1.18-20)
(5) மன்னிப்பு ஒரே ஒரு அடிப்படையில்தான் உள்ளது அது யாது ? (எபி.9:22)
உங்களுக்குள்ளாகவே இக்கேள்விகளைக் கேளுங்கள்
எப்படி உங்கள் இரட்சிப்பை நிச்சயத்துக்கொள்ள முடியும் ? நித்திய நியாயத்தீர்ப்பிலிருந்து எது உங்களை காக்கிறது ?
உங்கள் இரட்சிப்புக்காக நீங்கள் எதில் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் ?
மனப்பாட வசனம்
உங்களுக்கு நித்தியஐPவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன் (1.யோ.5:13).










