பாடம் 7: தேவனோடு ஐக்கியப்படல்
நம்முடைய வாழ்நாளில் நாம் தேவனோடு நெருங்கிய ஐக்கியம் உடையவர்களாக நடக்கவேண்டும் என்று அவர் நம்மை அழைத்து இருக்கிறார். அவருடைய அளவில்லா ஞானத்தாலே, நாம் சில நேரங்களில் இதில் தவறி விடுவோம் என்பதையும் அறிந்திருக்கிறார். இந்த உலகத்திலே பாவமற்ற ஒரே ஒருவர் தேவனுக்கு முன்பாக இப்படி வாழ்ந்து காட்டியிருக்கிறார், அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆவார்.
எவ்வளவு பெரிய தேவமனிதர்களும் ஏதாவது ஒரு வகையில் தோல்வி கண்டவர்களாகவே உள்ளனர். நாம் அவர்களைவிட நல்லவர்கள் அல்ல.
(1) எதைத் தேவன் தவறான செய்தி என்று கூறுகிறார் ? (1.யோவான் 1:8,10)
தேவன் முறிந்து போன ஐக்கியத்தைச் சரி செய்ய வழிகளை உண்டுபண்ணியிருக்கிறார். விசுவாசிகளாக நாம் தேவனுடைய குடும்பத்தில் பிறந்திருக்கிறோம்.(1.யோவான் 5:1,11-13) நாம் பாவம் செய்கிறபொழுது, நாம் குடும்பத்திலிருந்து தள்ளிவிடப்படுவதில்லை, ஆனால் தேவனோடு நடப்பதில் முறிவு ஏற்படுகிறது. இதைச் சரி செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?
நம்முடைய பிதா தவறிச் செல்கின்ற பிள்ளைகளைத் திருத்த வேண்டுமென்று விரும்புகிறார். எப்படி ? இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு தேவனோடு உறவு உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா ?
(2) நீங்கள் மறுபடி பிறக்கவில்லை என்று எது உங்கள் வாழ்வில் சுட்டிக்காட்டும் ? (1.யோவன்3:9)
(3) முதல் இரண்டு கேள்விக்கான விடைகளைக் கவனியுங்கள். ஒவ்வொரு வசனமும் எதை வலியுறுத்துகிறது ?
விசுவாசியின் வாழ்வில் எது உண்மை ? எது உண்மையில்லை ? இரண்டு வசனங்களுக்கும இடையே உள்ள வித்தியாசம் என்ன ?
(4) ஒரு உண்மையான விசுவாசி தேவனிடத்தில் எதற்காக nஐபிப்பான் ? (சங்கீதம் 119:33-34) அதன் நோக்கம் என்ன ?
(5) தேவனுடைய பார்வையில் சரியாக இல்லாதவர்கள் தங்களை சரிப்படுத்திக் கொள்வதற்கு செய்ய வேண்டிய இரண்டு முக்கியமான பணிகள் என்ன ? (நீதிமொழிகள் 28:13)
(6) 1.யோவன் 1:9ன் படி, விசுவாசிகளின் பொறுப்பு என்ன, தேவனின் வாக்குதத்தம் என்ன ?
(7) தேவனிடத்திலிருந்து பாவ மன்னிப்பை பெறுவதற்கு எது அடிப்படையாகக் காணப்படுகிறது (எபேசியர் 1:7, வெளிப்படுத்தல் 1:6, எபிரேயர் 9: 22) தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, அவரிடத்திலிருந்து பாவ மன்னிப்பை பெற்று கொள்ளுங்கள். பாவத்தை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் பாவம் அழிவுக்குரியது, அதன் சம்பளம் தேவனுடைய குமாரனின் மரணமாகும்.
(8) உண்மையாகவே நீங்கள் இரட்சிக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள் ? (2.தீமோத்தேயு 2:19)
(9) 2. கொரிந்தியர் 6:14-17 அடிப்படைப் போதனை என்ன ?
இக் கட்டளையை மீறுவதால் உண்டாகும் அபாயம் என்ன ?
உங்களுக்குள்ளாகவே இக் கேள்விகளைக் கேளுங்கள்
தேவனோடுள்ள உறவு நம்மால் முறிந்து போகிறபொழுது அதை சரிசெய்வதற்கு தேவன் எவ்வழியை உண்டு பண்ணியிருக்கிறார் ?
தேவனோடுள்ள ஐக்கியத்தை நாம் எவ்வாறு பேணிப் பாதுகாக்க முடியும் ?
ரோமர் 10:9, 1.யோவான் 5:13, அப்போஸ்தலர் 2:41, மத்தேயு 28:19, யோசுவா 1:8, மாற்கு 1:35 , மத்தேயு 7:7, யோவன் 10:10ன் பிற்பகுதி, 1.கொரிந்தியர் 10:13 யை படிக்கவும்.
மனப்பாட வசனம்
தன்பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான், அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதிமொழிகள் 28:13).










