பாடம் 11: பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படல்
தினந்தோறும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ்வாழ்கின்றபொழுது அவர் விரும்புவதை நாம் செய்கிறோம். (லூக்கா 6:46) அவருக்கு கீழ்ப்படிதல் நாம் அவரை நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது (யோவான் 14: 15). இந்த கீழ்படிதல் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பை வெளிக்காட்டுகிறது (யோவான் 14:21, 23) நம்முடைய சுயத்திற்காக வாழ்வதை விட தேவனுக்காக வாழ்வது ஒரு அதிமானிட வல்லமை ஆகும். இது தேவனிடத்திலிருந்து வருகிறது. அவரல்லாமல் நம்மால ;ஒன்றும் செய்யமுடியாது (யோவான் 15:5) நாம் பயனுள்ள வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு அவர் நல்வழி முறைகளை வகுத்துத்தந்துள்ளார்.
1) இயேசு கிறிஸ்துவால் வாக்குதத்தம்பண்ணப்பட்ட தேற்றரவாளன் யார் ? (யோவான் 14:16,17)
2) தேற்றரவாளன் எப்பொழுது எப்படி வருகிறார் ? (எபேசியர் 1:35)
3) தேற்றரவாளன் எங்கு தங்குவார் ? (ரோமர் 8:11) இது எப்படி நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது ?
4) ஒரு விசுவாசிக்குப் பரிசுத்த ஆவியின் உதவி தேவையில்லை என்ற கருத்துக்கு வேதம் கூறும் மறுமொழி என்ன ? (ரோமர் 8:9,11)
5) விசுவாசியின் சரீரத்தில் பரிசுத்தஆவி எதை உண்டு பண்ணுகிறார் ? (1.கொரிந்தியர் 6:19)
இது எப்படி நம்முடைய நடத்தையைப் பாதிக்கிறது ?
6) பரிசுத்த ஆவியின்ஆலயமாக விளங்குகின்ற சரீரத்தைக்குறித்து என்ன எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது ? (1.கொரிந்தியர் 6:18) மாம்ச இச்சைகளிலிருந்து நாம் எப்படி வெற்றி பெறலாம் ? (கலாத்தியர் 5:16)
7) விசுவாசிகளுக்கு என்ன கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது ? (எபேசியர் 5:18)
8) மதுபான பிரியனுக்கு மதுபானம் என்ன செய்யும்? கீழ்படிகின்ற விசுவாசிக்கு பரிசுத்த ஆவியானவா ;என்ன செய்வார் என்று எபேசியர் 5:18 ல் கூறப்பட்டுள்ளது ?
9) விசுவாசி பரிசுத்த ஆவியானவரை என்ன செய்ய முடியும்? (எபேசியர் 4:30)
10) பரிசுத்த ஆவியானவர் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகின்ற போது ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிட்டு காட்டவும் ? (கலாத்தியர் 5:22-23) இவைகள் நம்மிடத்தில் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
உங்களுக்குள்ளாகவே இக் கேள்விகளைக் கேளுங்கள்
உங்;களுக்குள்ளாக இருக்கின்ற இப் பெரிய ஆவிக்குரிய வல்லமையை விசுவாசத்தால் எம் முறையில் பாதுகாக்கிறீர்கள் ?
உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார் என்பதற்கான நடைமுறை அடையாளங்கள் என்ன ?
பரிசுத்த ஆவியானவர் உங்கள ;தனிப்பட்ட வாழ்க்கையில் முழு கட்டுபாடு செலுத்தத்தடையாக இருப்பவை என்ன ? (தவறான பழக்க வழக்கங்கள், பிரச்சனைக்குரிய உறவுமுறைகள், பிடிவாத குணங்கள், மன்;னிக்காத தன்மை ஆகியவையே)
ரோமர்10:9, அப்போஸ்தலர் 2:41, மத்தேயு 28:19, யோசுவா 1:8, மாற்கு 1:35, மத்தேயு 7:7, யோவான் 10:10 ன் பிற்பகுதி, 1.கொரிந்தியர் 10:13, நீதிமொழிகள் 28:13, லூக்கா 6:46, அப்போஸ்தலர்1: 8 யை படிக்கவும்.
மனப்பாட வசனம்
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல (ரோமர் 8:9).
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல் ஆவியினால் நிறைந்து, (எபேசியர் 5:18).












