• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

(3) பொறாமை

April 4, 2016
in கிறிஸ்தவ நூற்கள், கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
0 0
(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(3) பொறாமை

பொறாமையும் பகையும் மனிதனைப் பாழ்படுத்தி அழிவுக்குட்படுத்தும், பொறாமை குடும்பங்களைச் சீரழித்துவிடும்.பொறாமை நண்பர்களை விரட்டியடித்துவிடும். பொறாமை நம் அலுவலைக் குழப்பிவிடும். பொறாமை நமது ஆன்மாவையும் நம்மையும் கொன்றொழித்துவிடும். யோபு 5:2ல் நாம் வாசிக்கிறபடி, கோபம் நிர்மூடனைக் கொல்லும். பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.

பொறாமையினால் ஒரு மனிதன் தன்னைத்தானே கொன்றுவிட்ட வரலாற்றைப்பற்றி, கிரேக்க கதை ஒன்று விவரம் தெரிவித்துள்ளது. ஒரு விளையாட்டு வீரனுக்கு கௌரவம் அளிப்பதற்காக அப்பட்டணத்தார் அவனுக்கோர் உருவச் சிலை அமைத்தார்கள். இதைக்கண்ட இன்னொரு விளையாட்டு வீரனுக்குப் பொறாமை ஏற்பட்டது. தனக்கு எதிர்போட்டியிட்டு விளையாடும் அவ்விளையாட்டு வீரனின் உருவச்சிலையை எப்படியாவது அகற்றி ஒழித்துவிட வேண்டுமென்று இப்பொறாமைக்காரன் கங்கணம் கட்டினான். ஒவ்வொரு நாள் இரவிலும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாய்த் தன்னால் முடிந்த மட்டும் உளிகொண்டு அவ்வுருவச்சிலையின் அடிப்பாகத்தை வெட்டிக்கொண்டுவந்தான். இறுதியில் ஒரு நாள் தான் எண்ணியதைப் பூர்த்திசெய்துவிட்டான். அந்த உருவச்சிலை விழுந்தது. ஆனால் அந்த உருவச்சிலையை வெட்டிக்கொண்டிருந்தவன் மீதே அது விழுந்துவிட்டது. பொறமைக்காரன் அவ்விடத்தில்தானே செத்து மடிந்துவிட்டான். அவனுடைய பொறாமையே அவனுடைய உயிருக்கு உலை வைத்துவிட்டது. பொறாமை பொறமைக்காரரைக் கொன்றுவிடும்.

மனநோய் மருத்துவரைவிடச் சிறந்த ஒப்பற்ற ஆலோசனை தரவல்ல சத்திய வேதாகமம் இயம்புவதைக் கேளுங்கள். ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே (சங்.49:16). ஒருவன் செல்வம் மிகுந்தவனாகும்போது அவன்மீது பொறாமை கொள்ளவேண்டியதில்லை. அவ்வாறு பொறாமை கொள்வதால் நமக்கு ஒரு பைசாகூட கிடைக்காது. வெறும் பொறாமையால் நமது பணம் அதிகரிக்காது. ஆனால் அப்படி பொறாமையால் நமது ஆன்மா அழிந்துவிடும். பணக்காரார்களின்மீது நாம் பொறாமை கொள்வதற்கு அவசியமே இல்லை. அதற்குக் காரணத்தையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. ஐசுவரியவான் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை. அவன் மகிமை அவனைப்பின்பற்றிச் செல்வதுமில்லை (சங்.49:17).

பொறாமைக்காரன் பிறருடைய வாழ்வைக்கண்டு மனம் புழுங்குகிறான். பிறருடைய வாழ்வைத் தன்னுடைய தாழ்வாகக் கருதுகிறான். பிறருடைய முன்னேற்றத்தைத் தன்னுடைய தாழ்நிலையாகக் கருதுகிறான். பிறருடைய வெற்றியைத் தன் தோல்வியாக எண்ணுகிறான். பிறருடைய ஆசீர்வாதத்தைத் தன் சாபமாக எண்ணுகிறான். பிறருடைய ஆக்கத்தை தன் அழிவாக எண்ணுகிறான். இப்பொறாமையே அவனை அடியோடு அழித்துவிடுகிறது. பொறாமையால் முன்னேறினவர்களை நான் ஒருக்காலும் கண்டதில்லை. ஆனால் பொறாமையால் சீரழிந்தவர்களைக் கண்டிருக்கிறேன். உனக்குள் பொறாமை வந்துவிட்டால், நீ பூரண மனிதனாக இருக்கமுடியாது. பொறாமை எப்படியாவது உன் உருவைக் குலைத்துவிடும். உன் அழிவைச் சிதைத்துவிடும். உன் குணாதிசயத்தை குறைத்துவிடும். உன் பண்பைப் பாழாக்கிவிடும், உன் உடலையே உருக்கிவிடும், உன் எலும்பைக்கூட உருக்கிவிடும் என்று வேதாகமம் செப்புகிறது. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன். பொறாமையோ எலும்புருக்கி (நீதி.14:30). பொறாமை பெரும் துன்பம் விளைவிக்கும், பெரும் துக்கம் தரும். பெரும் வேதனை உண்டாக்கும். பொறாமையால் நமக்கும் நன்மையில்லை, பிறருக்கும் நன்மையில்லை. இரண்டுபேருக்கும் தீமையே விளையும், அழிவே உண்டாகும்.

பொறாமை மற்றவர்களை அநியாயமாய்த் தாக்குகிறது. மற்றவர்களுக்கு அநியாயமாய் நஷ்டம் விளைவிக்கிறது. அதனால் தமக்கு லாபமில்லை. பிறருக்கும் லாபமில்லை. பிறருக்கு நஷ்டம் விளைவிப்பதில் பொறாமை பெருமகிழ்ச்சி அடைகிறது.

ஒரு பூஞ்செடி முள்செடியைப் பார்த்து: நீ உன் அருகே வருகிறவர்களின் ஆடைகளின் மீது ஏன் அவ்வளவு பொறாமை கொள்கிறாய்? அந்த ஆடைகளால் உனக்கு பயன் என்ன? என்று கேட்டது. அதற்கு விடையாக முள்செடி இவ்வாறு கூறினது: எனக்கு இந்த ஆடைகளால் பயன் ஏதுமில்லை. அந்த ஆடைகளை நான் அணிந்துகொள்ளவும் விரும்பவில்லை. ஆனால் அந்த ஆடைகளையெல்லாம் கிழித்துவிடுவதே எனக்கு ஆசை.

இந்த முள்செடியைப்போலவே பொறாமைக்காரரும் பிறரைத் துன்பப்படுத்தி அழிப்பதையே தங்கள் பேரின்பமாகக் கருதுகிறார்கள். தங்களுக்கு எவ்வித ஆதாயம் வராவிட்டாலும் பரவாயில்லை, பிறர் தாழ்வடைந்து சின்னாபின்னமாகச் சிதைந்துபோகவேண்டுமென்பதே இவர்களுடைய சிந்தையாகும். இது சாத்தானின் சிந்தையாகும். ஆதாம் ஏவாளின் நல்வாழ்வைக் கண்டு சகிக்கமுடியாத சாத்தான் அவர்களைப் பாழாக்குவதில் மனம் மகிழ்ந்தான். அப் பொறாமையால் அவனும் பாழானான். பொறாமை கொள்ளும் மனிதனும் பாழாவான். ஆண்டவர் பொறாமையை அருவருக்கிறார். ஞானிகளும் இப்பொறாமையைக் கண்டித்துரைத்துள்ளார்கள்.

சுhலோமோன் கூறியுள்ளதைக் கேளுங்கள். உக்கிரம் கொடுமையுள்ளது. கோபம் நிஷ்டுரமுள்ளது. பொறாமையோவென்றால் அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? (நீதி.27:4).

பரிசுத்த பவுல் கூறியுள்ளதைக் கேளுங்கள். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்கக்கடவோம் (கலா.5:26).

பரிசுத்த யாக்கோபு கூறியுள்ளதைக் கேளுங்கள். வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு (யாக்.3:16).

பிரான்ஸிஸ் பேக்கன் இவ்வாறு கூறினார்: தன்னுடைய சொந்த அலுவலில் ஈடுபட்டு அனாவசியமாக பிறருடைய காரியங்களில் தலையிடாமல் இருக்கிறவர்கள் பொறாமை என்னும் சோதனையிலிருந்து எளிதில் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் தன் காரியத்தைவிட்டுவிட்டு பிறர் காரியங்களிலே பொறாமையோடு ஈடுபடுகிறவர்கள் இப்பயங்கர சோதனைக்கு தப்பிக்கொள்வது அரிது.

கோரேஸ் என்பவர் பின்வருமாறு உரைத்துள்ளார்: சிஸிலியர்களைப் பொறாமையைப்போல் சித்திரவதை செய்வது வேறெதுவுமில்லை.

கோரேஸ் என்பவர் மீண்டும் உரைத்துள்ளார்: பொறாமைக்காரன் மற்றவர்களுடைய வாழ்வைக் கண்டு, முன்னேற்றத்தைக் கண்டு, உயர்வைக்கண்டு, பொறாமையால் பெருமூச்சுவிட்டு, மெலிந்து சீரழிந்து போகிறான்.

சாமுவேல் ஐhன்சன் இவ்வாறு பகர்ந்துள்ளார்: தூண்டுவாரின்றியே சீறிச் சினந்து பொங்கி வழிவது பொறாமையே. அது பிறர் வாழ்வைச் சகிக்காது. அது அமைதியாயிராது. அது சேர்ந்தோரைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்துவிடும்.

பெட்ரோனியஸ் பகர்ந்துள்ளதைக் கேளுங்கள். புலவர்கள் குறிப்பிடுவது பிணம் தின்னிக் கழுகு என்னும் பறவையே அல்ல. அதைவிடக்கொடிய கொல்லும் தன்மையேயுள்ள மனிதனை உயிரோடு தின்னவல்ல பொறாமையே பேராசையே. பரிசுத்த வேதாகமச் சத்தியத்தின்படி பொறாமை நமது இயற்கைச் சுபாவமாகும். உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது. உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை. நீங்கள் கொலை செய்தும் பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள். நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும் நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை…. நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? (யாக்.4:1-2,5). காயீன் ஆபேல்மீது பொறாமைகொண்டான். இப்பொறாமை காயீன் உள்ளத்தில் எரிச்சலை உண்டாக்கியது. அவன் முகநாடி வேறுபட்டது. பொறாமையால் காயீன் ஆபேலைக் கொன்றான். காயீன் இவ்வாறு ஆபேல்மீது பொறாமை கொள்வதற்கு நியாயமே இல்லை. இவ்வாறு பிறர்மீது பொறாமை கொள்வதற்கு நமக்கு என்ன நியாயம் இருக்கிறது? பொறாமை கொள்வதற்கு அவசியமே இல்லை. பூந்தோட்டத்தில் களைகள் இயற்கையாக முளைத்தெழும்புவதுபோல, மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவுக்குள் மறுபிறப்படையாத இதயங்களில் பொறாமைபோன்ற பாவங்கள் இயற்கையாகவே முளைத்தெழும்பிவிடுகிறது.

யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பின்மீது பொறாமைகொண்டு, அவனை எகிப்திய வியாபாரிகளுக்கு விற்றுப்போட்டார்கள். இப்பொறாமை யோசேப்பின் சகோதரர்களுக்குத் தீமையை விளைவித்ததே தவிர, யோசேப்பின் சிறப்பு இதனால் பாதிக்கப்படவில்லை. எனவே, யார்மீது பொறாமை கொள்ளுகிறோமோ அவர்களைக் காட்டிலும் பொறாமைப்படுகிறவர்களே பொறாமையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஏறிந்தவனிடமே திரும்பிவரும் சக்கரப்படை ஆயுதம்போல, பொறாமை தன்னை உபயோகிப்பவர்களையே மீண்டும் வந்து சேர்ந்து தாக்கி நிற்கும்.

ஆமான் மொர்தெகாய் மீது பொறாமைகொண்டு, அவனைக் கொன்றொழித்துவிடத் திட்டமிட்டான். அவனைக் கொல்வதெற்கென்று ஒரு தூக்குமரத்தை ஆயத்தம் பண்ணினான். ஆனால் அப் பொறாமை ஆமானையே கொன்றுபோட்டது. ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம் பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள் (எஸ்.7:10).

உங்களில் எத்தனைபேர் நீங்கள் பிறருக்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் நீங்களே தூக்குப்போட்டீர்கள்? பொறாமை காரணமாகப் பிறருக்கு வெட்டிய குழியில் தாங்களே விழுந்து மாண்டுபோனவர்கள் ஏராளம்.

நமது வீடுகளிலும் நாடுகளிலும் இதற்கு எண்ணிறைந்த சான்றுகள் உள. பொறாமை கொண்ட எந்த மனிதனாவது உண்மையாகவோ மன மகிழ்ச்சியாய் இருந்ததுண்டா என்று வினவுகிறேன். பொறாமை மன நிம்மதியைக் குலைத்துப்போடும், பொறாமைப்படுகிறவனைப் படுகுழியில் தள்ளிவிடும். எப்பொழுது பொறாமை என்னும் பாவத்தில் வீழ்கிறோமோ, அப்பொழுதே நம் ஆன்மா செத்துவிடும்.

பொறாமை ஏன் இவ்வளவு கொடிய பாவமாக இருக்கிறது? கடவுள் ஏன் பொறாமையை இவ்வளவு கசந்து வெறுத்துத் தள்ளவேண்டும்? பொறாமையின் பயங்கரம் கடவுளுக்குத் தெரியும். பொறாமையின் காரணமாக எவ்வளவு அழிவு ஏற்படும் என்பதை ஆண்டவர் அறிவார். நமது நல்வாழ்வைக் கருதுகிற ஆண்டவர் பொறாமையை வெறுக்கிறார். நமது ஆத்துமா வாழ்கிறதுபோல எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கவேண்டுமென்பதே ஆண்டவரது சித்தம். பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3.யோ.1:2).

நன்றாக இருந்த லூசிபர் என்ற தேவதூதன் அனாவசியமாக நியாயமின்றி ஆண்டவர்மீது பொறாமைகொண்டான். உடனே அவன் சாத்தான் ஆனான். அப்பொறாமை அவனையே அழித்துவிட்டது. எனவே, தம் சிருஷ்டியை அழிக்கும் பொறாமையின்மீது ஆண்டவர் பிரியம் கொள்வாரோ? அவர் அதனை அருவருக்கிறார். கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்து கொள்வதற்குக் காரணமாயிருந்த பாவங்களுள் ஒன்று பொறாமையாகும். பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்தான் (மாற்.15:9).

இயேசு கிறிஸ்துவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பற்றி பரிசேயரும் சதுசேயரும் பொறாமை அடைந்தனர். மக்கள் திரள்திரளாக இயேசு கிறிஸ்துவண்டை வந்து அவருடைய அமுத மொழிகளைக் கேட்டு, அவரால் சுகம் பெற்று, நன்மை பெற்று வருவதைப்பற்றியும், இயேசுவின் புகழ் நாடெங்கும் வெகுவிரைவில் பரவி வருவதைப் பற்றியும் அவர்கள் பொறாமைகொண்டார்கள். மக்கள் இயேசு கிறிஸ்துவை ராஜாவாக்க முயன்றபோது, அவர்களின் பொறாமை கொழுந்துவிட்டெரிந்தது. வர வர இயேசு கிறிஸ்துவின் மேன்மையும் மகிமையும் நாடெங்கும் காட்டுத்தீ போல்பரவிச் செல்வதைக்கண்டு, அவர்களால் சகிக்கமுடியவில்லை. உலகம் முழுவதும் இயேசுவைப் பின்சென்றுவிட்டதே என்று பொறாமைப்பட்டார்கள். அவர்கள் நெஞ்சில் மூண்டெழுந்த பொறாமைத் தீயை அவர்களால் அடக்கி வைக்கமுடியவில்லை. இயேசுவைக் கொன்றொழித்துவிட சதி செய்தார்கள். பொதுவாக பரிசேயரும் சதுசேயரும் ஒருவருக்கொருவர் இணங்காதவர்களாயிருந்தும், இருவகுப்பினரும் இயேசுவின் மீதிருந்த பொறாமை காரணமாக, அவ்விரு வகுப்பாரும் ஒன்று சேர்ந்து இயேசுவைக் கொன்றுவிட இணங்கினார்கள். இருவகுப்பாரும் பொறாமையால் நிதானத்தை இழந்தார்கள். நியாயத்தை மறந்தார்கள். நீதியைக் கசந்தார்கள். தங்களுக்குள்ளிருந்த வேற்றுமை உணர்ச்சிகளைக்கூட ஒதுக்கி வைத்துவிட்டார்கள். பொறாமைக்கு அடிமையானார்கள். பொறாமை அவர்கள் புத்தியைக்கொன்றுவிட்டது. அவர்கள் ஆன்மாவை அழித்துவிட்டது. அநியாயமாக இயேசுவைக் கொல்வதற்கு இருவகுப்பாரும் கூடிக்கொண்டார்கள். பொறாமையின் கொடுமைதான் என்னே! என்னே!

பொறாமை ஆன்ம சுகத்தையே அறவே ஒழித்துவிடும். ஜென்ம பாவத்தின் பயங்கர அறிகுறிகளுள் ஒன்று பொறாமையே. இப்பாவம் மனுக்குலமனைத்தையும் ஆட்கொண்டுள்ளது. இயற்கையாகவே எல்லா மனிதனுக்குள்ளும் பொறாமைப்படும் சுபாவம் இருக்கத்தான் செய்கிறது. ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான பொறாமை உண்டு. இயேசு கிறிஸ்துவைத் தன் நாயகராக ஏற்றுக்கொள்ளுமுன் பவுலுக்கு ஆவிக்குரிய பொறாமை இருந்தது. புதிதாகப் புகழ்பெற்றுப் புனிதமாய் நடந்த கிறிஸ்தவர்களைக் கண்டு பவுல் பொறாமைப்பட்டான். இப்பொறாமை நெருப்பை அவன் நெஞ்சத்துக்குள் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. கிறிஸ்தவ இனத்தையே இப்பூமியிலிருந்து பூண்டோடு அழித்துவிடவேண்டுமென்று சீறிச் சினந்துபொங்கி எழுந்தான். சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்தி கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய், இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால் அவர்களைக் கட்டி எருசலேமுக்குக்கொண்டுவரும்படி தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டுவாங்கினான். ஸ்தேவான் என்னும் கிறிஸ்தவ சீஷன் கல்லெறிந்து கொல்லப்படுவதற்கு ஒரு காரணமாகவும் இருந்தவன் பவுல். ஸ்தேவான் கல்லெறியுண்டு சாகும்போது அவனுடைய முகத்தில் ஓர் ஆச்சரியமான மகிமையின் ஒளி பிரகாசித்ததைப் பவுல் கண்டான். அதே ஒளி தமஸ்குவிற்குச் செல்லும் பாதையில் அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. ஸ்தேவானை ஆட்கொண்டிருந்த இயேசு கிறிஸ்து பவுலையும் ஆட்கொண்டார். இயேசுவிடம் பொறாமையில்லை. அவரிடம் அன்புதான் உண்டு. அந்த அன்பு அன்றிலிருந்து பவுலை ஆட்கொண்டது. பவுல் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியானான். பழைய பொறாமை போன்ற பாவங்களெல்லாம் ஒழிந்துபோயின. எல்லாம் கிறிஸ்துவுக்குள் புதிதாயின. கிறிஸ்துவே அவனுக்குள்ளிருந்து அன்பாகப் பொங்கினார். பேரின்பமாகப் பொங்கினார். பவுல் அதன்பின்னர் அன்பு வடிவமான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே தன் முழு இருதயத்தோடும் சேவித்தான். தன் இருதயம் முழுவதையும் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டான். இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டான். இயேசுவே அவனுக்கு ஞானமும், நீதியும், மீட்புமானார்.

கொடிய சயரோக கிருமிகள் உன் உடலில் இருக்கின்றன என்று நீ கேள்விப்பட்டால், அவற்றை அப்புறப்படுத்துவதில் உடனடியாக ஈடுபடுவாய். அதற்காக எவ்வளவு நேரத்தை வேண்டுமானாலும் சரி, எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் சரி, உடனே செலவழிக்கத் தயங்கமாட்டாய். உதாரணம் உன் உடலுக்குள் புகுந்துவிட்ட சயரோக கிருமிகள் உன்னைக் கொன்றுபோடும் என்பதை அறிவாய். அதைப்போல் உனக்குள் புகுந்திருக்கும் பொறாமை என்னும் பேய்க்குணம் உன் சரீரத்தை மட்டுமல்ல, உன் ஆத்துமாவையும் கொன்றொழித்துவிடும் என்பதை மறவாதே. இவ்வளவு கொடிய கொல்லும் தன்மையுள்ள பொறாமை உனக்குள் இருந்தும், நீ அதனை அகற்றுவதற்கு முயலாது, சும்மா இருப்பது விந்தையிலும் விந்தையே. கடவுளுடைய பார்வையில் பொறாமையும் விபச்சாரத்தைப்போல் மனிதனைக்கொல்லும் தன்மையுள்ள கொடிய பாவமே. கலாத்தியர் நிருபத்தில் கூறப்பட்டுள்ள பதினேழு மாம்சத்தின் கிரியைகளில் ஒன்று பொறாமையாகும். இப்பொறாமை என்னும் பாவம் விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாரதனை, பில்லிசூனியம் போன்ற பாவங்களோடு சேர்ந்து அவைகளுக்குச் சமமாக வைத்து எண்ணப்படும் கொடிய பாவமாகும். மற்ற பாவங்களைவிட இப்பொறாமை என்னும் பாவம் அதிகமாகப் பரவி வேரூன்றியிருத்தலைக் காணலாம். எனினும், இப்பொறாமையைப் பிரசங்கபீடங்களிலிருந்து கண்டித்துப் பேசுவதை நாம் அதிகமாகக் கேட்பதில்லை. இப்பாவம் நம் நாட்டுச் சட்ட திட்டங்களால் தடைவிதிக்கப்படவில்லையாயினும், இப்பாவம் கடவுளால் பெரிதும் வெறுக்கப்படுகிறது. சுகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். இதோ நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார் (யாக்.5:9).

பொறாமை யாருடைய உள்ளத்திலிருக்கிறதோ அவர்கள் அகத்திலும் முகத்திலும் மன மகிழ்ச்சியும், பூரிப்பும், திருப்தியும் காணமுடியாது. அமைதியும், சாந்தி சமாதானத்தையும் பொறாமை ஒழித்துவிடும். பொறாமை காரணத்தால் எத்தனையோ பேருடைய வாழ்வில் கசப்பும் கொடுமையும், ஏமாற்றமும், குழப்பமும், பிணியும், துக்கமும் துன்பமும் குடிகொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். நமது வேலையையும் நாம் செவ்வனே செய்யமுடியாதபடி பொறாமை தடுத்துவிடும். ஆண்டவருக்கு நாம் இதயபூர்வமாய்த் தொண்டுசெய்யாதபடி தடைசெய்துவிடுகிறது. நமக்கும் நமது நரம்பு மண்டலத்திற்கும் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தி, நமது சுகத்தையெல்லாம் நசமாக்கிவிடும் இப்பொறாமை.

பிற மக்களோடு கூடிய கூட்டுறவை அல்லாது தெய்வத்தோடு கூடிய அன்னியோன்னிய ஐக்கியத்தையும் கெடுத்து தொலைத்துவிடும் இப்பாழான பொறாமை. பொறாமையுள்ளம் ஆண்டவரோடு ஒன்றித்து இணைந்து நிற்கமுடியாது. நீ இதுவரை உன் இதயத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்காமல் வாழ்ந்தால், அதற்கொரு காரணம் உன் நெஞ்சத்திலிருக்கும் பொறாமையாகும். பொறாமை உன்னைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். பொறாமை உன்னுள்ளத்திலிருக்கும்வரை நீ ஆண்டவரோடு ஐக்கியப்பட முடியாது. ஆண்டவர் உன்னுள்ளத்தில் வரவேண்டுமாயின் நீ உன்னுடைய பொறாமை பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, அதனை அறிக்கையிட்டு, நீ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் இப்பொறாமை எனும் பாவமறக் கழுவி சுத்திகரிக்கப்படவேண்டும். இவ்வாறு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு, சுத்தமாக்கப்பட்ட இதயத்தில் பிதாவாகிய தெய்வமும், குமாரனாகிய தெய்வமும், பரிசுத்தவியானவராகிய தெய்வத்தின் மூலம் வாசம் பண்ணுவார். அப்பொழுது நீ கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாவாய். அப்பொழுது பழைய மாம்சத்தின் கிரியைகளெல்லாம் ஒழிந்துபோகும், எல்லாம் புதிதாகும்.

கொலைகாரனின் கொடிய கோடரியின் கூரிய முனையைக் காட்டிலும் பன்மடங்கு கூர்மையானது பொறாமை என்று சேக்ஸ்பியர் கூறியுள்ளார்.

பொறாமை அகந்தை அரிபிளவைப்போல் அரித்துவிடும். மனிதனைச் சமுதாயத்தினின்று பிரித்துவிடும். அவனைத் தன்னந்தனியாக்கிக் கொன்றுவிடும். பொறாமைக்காரன் பிறரோடு கூடிவாழ முடியாது. காரணம் பிறர் வாழ்வை அவனால் பொறுக்கமுடியாது. அவனும் வாழமாட்டான். பிறரையும் வாழவிடமாட்டான். அவன் ஓர் ஆன்ம குஷ்டரோகி ஆகிவிடுகிறான். அப் பொறாமை என்னும் குஷ்டரோகம் அவனை அயலாரிடமிருந்து பிரித்துவிடும், ஆண்டவரிடமிருந்தும் பிரித்துவிடும்.

கடைசி நாள் நியாயத்தீர்ப்பில் நாம் இந்தப் பொறாமை பாவத்திற்காகவும் நியாயந்தீர்க்கப்படுவோம். இப்பாவத்தைக்குறித்தும் நாம் ஆண்டவருக்கு கணக்கொப்புவிக்கவேண்டும். இப் பொறாமையாகிய பாவம் நம்மை நரக ஆக்கினைக்குட்படுத்திவிடும்.

என்னுடைய சரீர சுகம், மனச்சமாதானம், ஆன்ம வாழ்வு இவற்றைப் பாதிக்கும் இப்பாழான பொறாமைப் பாவத்தை எங்கனம் விட்டுவிடுவது என்று நீங்கள் வினவலாம்.

முதலாவது, உண்மையை ஒத்துக்கொள். அதாவது, உனக்குள்ளிருக்கும் பொறாமைக் குணத்தை நீ அறிந்தவனாய், பொறாமை உன்னிடத்தில் உண்டு என்னும் உண்மையை நீ ஒத்துக்கொள். உனது தோல்விக்காக பிறர்மீது பழி சுமத்திக் கொண்டிருக்காதே. மற்றவர்களுக்குள்ளும்தான் இப்பாவம் தலைதூக்கி நிற்கிறதே என்று நீ வீண் சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டு சும்மாயிராதே. உன் குற்றத்தை நீ உணர்ந்து கொள்வதால், நீ சிறிய மனிதனாகிவிடுவாய் என்று தவறாகக் கருதாதே. உள்ளபடியே நீ உண்மையை ஒத்துக்கொள்ளும்பொழுது உன்னைப் பெரிய மனிதனாகப் பிறர் மதிப்பார்கள். எனவே நீ பாவி என்பதை முதலாவது ஒத்தக்கொள்.

இரண்டாவது, உன் பாவத்தை கடவுளிடம் அறிக்கையிட்டு விட்டுவிடு. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1.யோ.1:9). நீ சொஸ்தமடையும்படிக்கு, உன் குற்றங்களை அறிக்கையிடு (யாக்.5:15). மனந்திரும்பி பாவத்தை அறிக்கையிட்டு அதை விட்டுவிடு.

மூன்றாவது, உன்னைப் புது சிருஷ்டியாக்கும்படி கிறிஸ்துவிடம் உன்னை ஒப்புவித்துவிடு. பொறாமையை உன் சுயபலத்தால் வெல்லவே முடியாது. பவுல் இப்பாவ வெற்றியின் இரகசியத்தைக் கண்டுபிடித்தவனாய், பிலிப்பியர் 4:13ல் கூறியுள்ளதைக் கேளுங்கள். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. இயேசுகிறிஸ்துவை அல்லாமல் நாம் ஒன்றும் செய்யமுடியாது. இயேசுகிறிஸ்து ஒருவர் மட்டும்தான் பாவம் அற்றவர், முழுக்க முழுக்க பரிசுத்தமானவர். அவர் ஒருவரே முழுக்க முழுக்க அன்புள்ளவர். பாவச் சுபாவம் படைத்த நம்மைச் சிலுவையில் கொன்றொழித்துவிட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு ஜீவனாகவும் பரிசுத்தமாகவும், இரட்சிப்பாகவும், எல்லாவற்றிற்கும் எல்லாமாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் (கலா.2:20). கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் (கலா.5:24). ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை (கலா.5:22-23).

நான்காவது, கிறிஸ்துவின் ஆவியானவர்உன் இதயத்தில் வந்து வாசம்பண்ணுமாறு ஆண்டவரை வருந்திக்கேள். பிதாவாகிய தெய்வம், குமாரனாகிய தெய்வம் பரிசுத்தாவியானவரின் மூலமாய் உன்னில் வாழ விடு. அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள் (ரோ.6:11). ஆவியின் முதற்கனி அன்பு (கலா.5:22). அன்பு நமது இதயத்தை முற்றிலும் நிரப்பிப் பொங்கி வழியும்பொழுது அவ்விடத்தில் பொறாமை தங்கியிருக்க இடமில்லாமல் வெளியேற்றப்பட்டுவிடும். அன்புள்ள இடத்தில் பொறாமை இருக்கமுடியாது. எனவே, பொறாமை நமது இதயத்திலிருந்து அகற்றப்படுவதற்கு ஒரே வழி, பரிசுத்த அன்புக்கடவுளாகிய இயேசு கிறிஸ்து நம் இதயத்தை முற்றிலும் ஆட்கொள்ளவேண்டும். நம் இதயத்தை இயேசுகிறிஸ்துவுக்கு முழுவதும் ஒப்புக்கொடுக்கும்போது, அவர் நம் இதயத்தில் தங்கி அன்பைப் பொழிவார். அப்பொழுது பொறாமை அகன்றுபோம். இயேசு கிறிஸ்துவாலே பொறாமையை நீ வெல்வாய். இதற்கு இயேசு கிறிஸ்துவேயன்றி வேறொரு வழியும் இல்லை. எனவே உடனே உன்னை முற்றிலுமாய்க் கிறிஸ்துவிடம் ஒப்புவித்துவிடு.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(4) காமம்

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(5) பெருந்தீனி

Recommended

00. மோட்சப் பயணம்

17. சந்தேகக் கோட்டையில் பயணிகள்

Song 112 – Aandavarae

Song 217 – Pithavae

பாடல் 264 – பரலோகமே என் சொந்தமே

பாடல் 264 – பரலோகமே என் சொந்தமே

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.