• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

(7) பேராசை

April 4, 2016
in கிறிஸ்தவ நூற்கள், கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
0 0
(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(7) பேராசை

பேராசை பெருநஷ்டம். போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும், உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், கண்ணியிலும் மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும் , பொறுமையையும், சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தில் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப்பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய் (1.தீமோ.6:6-12).

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு உயிர் இழந்தோர் பலர் பலர். பிறர் பொருள்கள்மீது ஆசைகொண்டு அவமானம் அடைந்தோர் பலர் பலர். தகாத இன்பங்களில் ஆசை கொண்டு வாழ்வு இழந்தோர் பலர் பலர். கண்களின் இச்சைகளால் இழுப்புண்டு, நல்வாழ்வை நழுவ விட்டோர் பலர் பலர். நமது ஆதி பெற்றோர் கண்களின் ஆசை இச்சைகளால் கவரப்பட்டு தங்கள் பேரின்ப வாழ்வை இழந்தார்கள். ஆசைக்கு அடிமைப்பட்டதால் பரதீசு வாழ்வையே பறிகொடுத்து விட்டார்கள். அப்பொழுது ஏவாள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பாhவைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு அதின் கனியைப் பறித்து, புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான் (ஆதி.3:6). நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று ஆண்டவருக்குத்தான் சரியாய்த் தெரியும். அவர் வேண்டாம் என்று தடுத்துள்ள பொருள்மீது, அல்லது இன்பத்தின் மீது அல்லது வேறெந்த காரியத்தின்மீதும் நாம் ஆசை கொண்டால் அவதியுறுவது நிச்சயம்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது பெரும் பாவமாகும். பிறர் பொருளை இச்சியாதிருப்பாயாக. பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரிகளையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், இன்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்பது ஆண்டவர் விடுத்துள்ள கற்பனையாகும். ஆண்டவர் இட்ட இந்தக் கட்டளையை மீறுவது பெரும் பாவமாகும். ஆண்டவருடைய ஆணையை மீறி, பிறர் பொருளுக்கு ஆசைப்படுகிறவர்களை அந்த ஆசையே கொன்றுவிடும். ஆகாப் அரசன் பிறா பொருளுக்கு ஆசைப்பட்டான். அந்த ஆசை அவன் உயிருக்கே உலை வைத்துவிட்டது. ஆகாப் அரசன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திற்கு ஆசைப்பட்டான். அந்த ஆசை நாபோத் கொலைசெய்யப்படுவதற்குக் காரணமானது. நாபோத்தைக் கொன்று அவனுடைய திராட்சைத் தோட்டத்தைத் தனக்குச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி, ஆகாப் எழுந்துபோனபோது கர்த்தர் எலியா தீர்க்கதரிசியை அவனிடம் அனுப்பி பின்வருமாறு கூறச் சொன்னார். ஆகாபே, நீ (நாபோத்தைக்) கொலைசெய்ததும் அவனுடைய திராட்சைத்தோட்டத்தை எடுத்துக்கொண்டதும் இல்லையோ. நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நக்கும், ஆண்டவர் உன்மேல் பொல்லாப்பு வரப் பண்ணி, உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாப்புக்குச் சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்குச் செய்வார் (1.இராஜா.21:19).

இயேசு அவர்களை நோக்கி: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார். ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே. நான் ஒன்று செய்வேன். என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி, மதிகேடனே! உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்தக்கொள்ளப்படும், நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. காகங்களைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை. அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை. இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒர முழத்தைக் கூட்டுவான்? மிகவும் அற்பமான காரிய முதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்களைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலோமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியிருக்க, அற்ப விசுவாசிகளே, இன்றைக்கு காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாய் உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள். இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். தேவனுடைய இராஜ்யத்தையே தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (லூக்.12:15-31).

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழி விலகிப்போயுள்ளார்கள். யூதாஸ் காரியோத் பண ஆசைகொண்டான். பணத்தை இச்சித்தான். அப்பண ஆசை அவனை ஆண்டவரிடமிருந்து வழிவிலகிப் போகப் பண்ணியது. அவனுடைய சரீரம் சாகுமுன்னரே, அவனுடைய ஆத்துமா செத்துவிட்டது. அப்பொழுது பண ஆசையால் இயேசுவை விட்டுப் பிரிந்தானோ, அப்பொழுதே இவன் ஆத்துமா செத்துவிட்டது. ஆகாப் போன்றவர்களுக்கும், யூதாஸ் போன்றவர்களுக்கும், பேராசை மதிகேடன் போன்றவர்களுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விடுத்துள்ள எச்சரிப்பு இதுதான். தேவனிடத்தில் ஐசுவரியவனாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான் (லூக்.12:21).

நாம் பிறவியிலேயே பொருளாசைக்காரராகப் பிறந்துள்ளோம். நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை யாவரும் பொருளாசைக்காரராக இருக்கிறோம். சத்திய வேதாகமம் இவ்வுண்மையை வெகு தெளிவாய் எடுத்துக் காட்டியுள்ளது. அவர்களில் சிறியோர் முதல் பெரியோர் மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர் (எரேமி.6:13). மற்றக் கொடிய பாவங்களைப்போல் பேராசையும் நம்மைக் கொன்று நரகத்தில் தள்ள வல்லதொரு கொடிய பாவமாகும். அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு, பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும், நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஙருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்ச்சியில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதிபதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள் (ரோ.1:29-32).

நாம் மனந்திரும்பி விபசாரம், கொலை, களவு பொய் போன்ற மாபெரும் கொடிய பாவங்களை விட்டு விலகுவதுபோல், பிறர் பொருளை இச்சித்தலையும் விட்டு விலகவேண்டும். கடவுள் தந்துள்ள கற்பனையை நோக்குங்கள். விபசாரம் செய்யாதிருப்பாயாக… களவு செய்யாதிருப்பாயாக, பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக (ரோ.13:9).

மற்றப் பாவங்கள் செய்கிறவர்களைப்போல், பொருளாசைக்காரரும், தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று பரிசுத்த வேதாகமம் பறைசாற்றியுள்ளது. அநியாயக்காரார் தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள். ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள். பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். நீதிமான்களாக்கப்பட்டீர்கள். எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆயினும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். வயிற்றுக்குப் போஜனமும், போஜனத்திற்கு வயிறும் ஏற்கும். ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார் (1.கொரி.6:9-13).

சிலருக்கு வயிறுதான் சுவாமியாகிவிடுகிறது. சிலருக்கு சிற்றின்பம்தான் சுவாமியாகிவிடுகிறது. சிலருக்குப் பணம்தான் சுவாமியாகிவிடுகிறது. அவர்கள் அல்லும் பகலும் ஓயாது, ஒழியாது முழு மூச்சுடன் பணத்தையே தேடுகிறார்கள், பணத்தையே எப்பொழுதும் நாடுகிறார்கள், பணத்தையே எப்பொழுதும் கும்பிடுகிறார்கள். பண ஆசை அவர்கள் கண்களையெல்லாம் மூடிவிடுகிறது. ஒரு வெள்ளிக் காசுதனை நம் கண்ணருகேகொணர்ந்து அதை நாம் சூரியனைக்கூட பார்க்கமுடியாதபடி, அவ்வெள்ளிக்காசு நம் கண் பார்வையை மறைத்துவிடும். அதுபோல இருதயத்தில் ஒட்டிக்கொண்டு அதனை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பண ஆசை, நாம் கிறிஸ்துவை காணமுடியாதபடி நம்மைத் தடுத்துவிடுகிறது. அப்பண ஆசையே நமக்கு ஒரு விக்கிரகாராதனைப்போல் ஆகிவிடுகிறது. பொருளாசை ஒருவகை விக்கிரகாராதனையே என்று பரிசுத்தவேதாகமம் எச்சரித்துள்ளது. பணப்பித்து, பொருளாசை வெறி, பேராசை கொண்டலையும் தற்கால மாந்தர், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாற்கு 8:36ல் இயம்பியுள்ளதை மறந்துவிட்டார்கள்போலும். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

அடிமை வியாபாரத்திற்கு அடிப்படைக் காரணமாயிருந்தது பொருளாசைதான். யுத்தங்களுக்கும், படையெடுப்புகளுக்கும், கொள்ளைகளுக்கும், கொலைகளுக்கும் காரணம் பொருளாசைதான். பொய்க்கும், புரட்டுக்கும் காரணம் பொருளாசைதான். சண்டைக்கும், சச்சரவுகளுக்கும் காரணம் பொருளாசைதான். பாலில் நீர் ஊற்றுவதற்கும், தானியத்தில் கல்லும் மண்ணும் போடுவதற்கும் காரணம் பொருளாசைதான். சூதாட்டத்திற்கும், குதிரைப்பந்தயத்திற்கும் காரணம் பொருளாசைதான். இப்பொருளாசை எத்தனை இதயங்களைப் பிழிந்து திக்குமுக்காடச் செய்து கொன்றிருக்கிறது தெரியுமா? எத்தனை குடும்பங்களை நாசமாக்கியிருக்கிறது தெரியுமா? பொருளாசை, பேராசை மனிதனைக் கொல்லும் ஒரு கொடிய பாவம்.

கலிபோர்னியா வனாந்தரத்திலே சில ஆண்டுகட்குமுன் ஒரு பிணம், கையிலே காக்கைப் பொன்னை இறுகப்பிடித்துக்கொண்டு சுருண்டு கிடப்பதைச் சில பிரயாணிகள் கண்டார்கள். அப்பாலைவனத்து மணற் கன்றிலே தகதகவென்று தங்கம்போல் மிளினி மினிர்ந்து பளிச்சிட்ட காக்கைப் பொன்னை, உண்மையான தங்கம் என்று தவறாக கருதியதொரு மனிதன் அதனைக் கைப்பற்றுவான் வேண்டி மணற்குன்று மீதில் எறியபொழுது, மணல் சரிந்து அவன் தவறி விழுந்து பிணம் ஆனான். பொன்னாசை அவன் வாழ்வை மண்ணாக்கிவிட்டது. அவன் உடலைப் பிணமாக்கிவிட்டது. ஆத்துமாவையும் அழிக்க வல்ல பொருளாசையைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஐசுவரியமுள்ள வாலிபன் ஒருவன் இயேசு சுவாமியை அண்டியபொழுது, இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறையுண்டு. நீ போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். அப்பொழுது இயேசு சுற்றிப் பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. ஐசுவரியவான் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு, அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் கூடாதுதான், தேவனால் இது கூடாததல்ல. தேவனாலே எல்லாம் கூடும் என்றார் (மாற்.10:21-27).

பணக்காரராய் இருப்பது பாவமல்ல. ஆனால் அப்பணம், கிறிஸ்தவ நீதி நெறிப்படி சம்பாதிக்கப்பட்டதாய் இருக்கவேண்டும். அது கிறிஸ்துவை ஒதுக்கி வைத்துவிட்டு சம்பாதிக்கப்பட்ட செல்வமாய் இருக்கக்கூடாது. அது கிறிஸ்து தந்த செல்வமாய் இருக்கவேண்டும். அது கிறிஸ்துவின் இராஜ்ய விருத்திக்கென்றும், கிறிஸ்துவின் நாம மகிமைக்கென்று செலவிடப்பட வேண்டும். வேதாகமத்தில் சில ஐசுவரியவான்கள் தங்கள் ஐசுவரியத்தை கிறிஸ்துவின் நாம மகிமைக்கென்று செலவிட்டதைக் காண்கிறோம். இயேசுவுக்குச் சீடனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர் கொண்ட அரிமத்தியா ஊரான் (மத்.27:57) இயேசுவுக்கென்று தன்னுடைய பொருளை மனப்பூர்வமாய் செலவிட்டதைப் பற்றி வாசிக்கிறோம். நம்முடைய செல்வத்தை நமக்கென்று மட்டும் வைத்துக்கொள்ளக்கூடாது. தேவைப்படுவோர்க்கு மனமுவந்து கொடுத்து சேவைசெய்யவேண்டும். கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்ய வேண்டும். நம்முடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் ஆண்டவருக்கென்று அர்ப்பணம் செய்யப்படவேண்டும்.

ஐசுவரியவான்களுக்கு மட்டுமல்ல, ஏழைகளுக்கும் பண ஆசை உண்டு. பேராசை உண்டு, பிறர் பொருள் மீது இச்சை உண்டு. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை போன்ற ஆசைகளால் மாந்தர் அவதிப்படுகின்றனர். பண ஆசை அகில உலகத்தாரையும் அரிபிளவைப்போல் அரித்துக்கொண்டிருக்கிறது. பேராசை, பொருளாசை, பிறர்பொருள்மீது இச்சை, பணஆசை போன்ற பாவங்களால் அடிமையாக்கப்பட்டு ஊடுருவக் குத்துண்டு கிடக்கிற உனக்கு விமோசனமே இல்லையா? ஒரே ஒரு விமோசனந்தான் உண்டு. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1.யோ.1:7-9). ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின (2.கொரி.5:17). தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1.தெச.4:3-7). கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை (ரோ.8:1).

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

Recommended

இரயில் பயணம்

இரயில் பயணம்

பாடல் 158 – ஆயனே தூயனே வாரும்

பாடல் 158 – ஆயனே தூயனே வாரும்

Song 120 – Thedi Vantha

Song 161 – Anbullangal

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.