• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

பாடம் 05: நித்திய இரட்சிப்பு

April 5, 2016
in அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 5: நித்திய இரட்சிப்பு

என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும் என்று கர்;த்தர்; சொல்கிறார்; (ஏசா.51:6ன் பிற்பகுதி). நம்முடைய மகா பெரிய தேவனும், இரட்சகரும் அவருடைய ஐனங்களுக்குள் நற்கிரியையைத் தொடங்கியிருக்கிறார். அதைக் கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்துவார்; (பிலி.1:5). கர்;த்தராகிய இயேசு நமக்கு நித்திய மீட்பை உண்டுபண்ணினார்; (எபி.9:12). தேவனுக்குள் இருக்கிற ஜீவனே நித்தியஜீவன் (யோ.1:4 , 5:26 , 1.யோ.1:2). அந்த ஜீவனையே தேவன் மனிதனுடைய இரட்சிப்புக்குக் கொடுத்திருக்கிறார்; (1.யோ.5:11-12). அவருடைய வசனத்தைக் கேட்கிறவனுக்கு நித்தியஜீவன் இலவசமாக கொடுக்கப்படுகிறது (யோ.5:24). குமாரனை விசுவாசி (யோ.3:15-16) அவருடைய மாமிசத்தையும், இரத்தத்தையும் புசியுங்கள் (அர்;த்தம் சிலுவையில் கிறிஸ்து செய்த வேலையை ஏற்றுக்கொள்ளல். யோவான் 6:56). நித்திய ஜீவனாகிய இந்த ஈவை பெறத் தேவனுக்கு மிகப் பெரிய செலவுசெய்யவேண்டியிருந்தது (ரோ.6:25 , யோ.17:2). அது அவருடைய குமாரனுடைய மரணம். இதை ஒழுக்க கட்டுப்பாட்டு மூலமோ, பக்தி மூலமோ பெறமுடியாது. அப்படிக் கிடைப்பதாயிருந்தால் அது ஈவாக இருக்காது. அது வேலைக்குக் கிடைத்த கூலியாகத்தான் இருக்கும் (ரோ.4:4). வேதத்தின் நித்தியஜீவன் நல்ல குணத்திற்காகவும், நல்நடத்தைக்காகவும் கொடுப்பதாகவும் எங்கும் கூறப்படவில்லை. தற்காலிகமான நித்தியஜீவன் கிடையாது. அது நித்தியம் என்ற வார்;த்தைக்கு மாறுபாடாகக் காணப்படுகிறது.

விசுவாசிகளின் இரட்சிப்பு நிச்சயிக்கப்பட்டதும், இடைவிடாத தொடர்;ச்சியான ஒன்று ஆகும். பரலோகத்திலே வைக்கப்பட்ட அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய சுதந்திரத்தை நாம் பெறும்படி மறுபடிஜெனிப்பிக்கப்பட்டிருக்கிறோம். அந்த சுதந்திரம் கடைசிகாலத்தில் வெளிப்பட இருக்கிற இரட்சிப்பாகும் (1.பேது.1:4-5). இரட்சிப்பின் வாழ்க்கை ஒரு தொடர்;ச்சியான சங்கிலியாகும். தேவன் எவர்;களை முன்குறித்தாரோ, அவர்;களை அழைத்திருக்கிறார்;. எவர்;களை அழைத்தாரோ அவர்;களை நீதிமான்களாக்கியிருக்கிறார். எவர்;களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியிருக்கிறார் (ரோ.8:30). வருங்காரியங்களாலும், நிகழ்காரியங்களாலும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது (ரோ.8:38-39). கர்;த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவால் நித்தியஜீவன் நமக்குக் கொடுக்கப்பட்டி ருப்பதால் ஒன்றும் நம்மை தேவனுடைய கரத்திலிருந்து பறித்துப்;போடாது (யோ.10:28-29). நம்மை வழுவாதபடி காக்க தேவன் வல்லவர்; (யூதா 24). முடிவுபரியந்தம் நம்மை அவர்; ஸ்திரப்படுத்துவார்; (1.கொரி.1:8). அவர் நம்மைக் காத்துக்கொள்வார்; (2.தீமோ.1:12). அவர் முற்றும்முடிய இரட்சிக்க வல்லவர்; (எபி.7:25). இரட்சிப்பு என்றென்றும் நிலையான ஒன்று. ஏனென்றால் இதை முற்றும் முடிய செய்பவரும் பரிபூரணப்படுத்துபவரும் தேவன் ஆவார்;.

நித்திய இரட்சிப்பின் பரிபூரணத்துவம்

விசுவாசத்தைத் தொடக்கிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவின் இரட்சிப்பின் பணியை நோக்குவோம் (எபி.12:1).

1) பூரண பிறப்பு

நாம் தேவனுடைய குடும்பத்தில் பிறக்கும்பொழுது, இரட்சிப்பு என்றென்றும் உள்ளதாக இருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு மறுபடி பிறக்கவேண்டும் என்று கர்;த்தராகிய இயேசு நிக்கொதேமுவிடம் கூறினார்; (யோ.3:3-7). நாம் தேவனுடைய குமாரனை உண்மையிலேயே விசுவாசித்தால் மறுபடி பிறந்தவர்;களாவோம் (யோ.1:12-13). நாம் தேவனுடைய குடும்பத்திலே அங்கத்தினராக இருக்க மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும் என்று வேதத்தில் கூறப்படவில்லை. மாமிசமான பிறப்பு வாழ்க்கையில் ஒருமுறை நடப்பதுபோலவே, ஆவிக்குரிய பிறப்பும் ஒரேமுறைதான் நடைபெறுகிறது.

2) பூரண பலி

பழைய ஏற்பாட்டில் சொல்லியிருக்கிற பலிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவில் பூரணப்பட்டிருக்கிறது. அவர்; சிலுவையில் செய்து முடித்த வேலை விசவாசியின் பாவத்தை நீக்கியிருக்கிறது என்று எபிரெயர்; நிருபம் விளக்குகிறது. கிறிஸ்து செய்து முடித்த பணி என்றென்றும் நிலைநிற்கிறது. ஒரே ஒரு தரம் செய்து முடித்ததும், அப்பணி திரும்பவும், செய்யப்பட வேண்டியதல்லாமலும் இருக்கிறது. அவரின் சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்த சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் (எபி.10:10). பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்;ந்திருக்கிறார்; (எபி.10:12). ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்;களை ஒரே பலியினாலே இவர்; என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்; (எபி.10:14). கிறிஸ்து சிலுவையில் செய்துமுடித்த வேலையை விசுவாசிகள் நம்பி அதில் சார்;ந்து நிற்க வேண்டியதே தலையாய கடமையாகும்.

3) பூரண ஐக்கியம்

இரட்சிப்பு நம்மை ஸ்தல சபைகளில் அங்கமாக்குவதில்லை. ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாய் நம்மைக் கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாக்குகிறது. தேவகுமாரனோடு ஐக்கியப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவர்; கிறிஸ்துவின் சரீரத்தில் நம்மை ஞானஸ்நானப்படுத்தி (1.கொரி.12:13), அவரின் அவயவங்களாக்குகிறார்; (1.கொரி.12:27 , எபேசி.5:30). கிறிஸ்துவின் அவயவங்களாக இருப்பதால் தான் விசுவாசிகளைத் துன்புறுத்துவது, கிறிஸ்துவைத் துன்புறுத்துவதாக இருக்கிறது (அப்.9:4-.5). நாம் தேவனோடு ஐக்கியப்பட்டு அவரோடு இணைந்தவர்;களாக இருப்பது எதைக் குறிக்கிறதென்றால் கிறிஸ்துவோடு உயிர்;த்தெழுந்து, உன்னதங்களில் அவரோடு உட்காருவதைக் குறிக்கிறது (எபேசி.2:5-7). நம்முடைய ஜீவன் கிறிஸ்துவோடு இணைந்திருப்பது ஆவிக்குரிய திருமண கட்டமாக இருக்கிறது (ரோ.7:4 , எபேசி.5:31-32). ஒன்றும் அவரின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்காது (ரோ.8.33-39). அவர்; சொல்கிறார்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று (எபி.13:5).

4) ஆவியானவரின் பூரண பணி

நிகழ்காலத்தில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலே பரிசுத்த ஆவியானவர்pன் பணி பழைய ஏற்பாட்டுக் காலத்திலும், சுவிசேஷத்திலும் அவர்; ஆற்றியுள்ள பணியிலிருந்து வித்தியாசமானது. ஆவியானவர்; மனிதன் மீது வந்து தங்கினார்;, திரும்பச் சென்றார்; (1.சாமு.16:14). தாவீது பரிசுத்த ஆவி தன்னை விட்டு எடுபட்டுவிடுமோ என்று பயந்தான் (சங்.51:11). பரிசுத்த ஆவியானவர்; வேண்டுமென்று வேண்டிக்கொள்வதை இயேசு கிறிஸ்து ஆமோதித்து, அவர் அப்படிக் கேட்பவர்;களை உற்சாகப்படுத்தினார்; (லூக்.11:13). இருந்தாலும் இயேசு கிறிஸ்து பிதாவிடம் சென்ற பின்னர்; ஆவியானவரின் பணி முற்றிலும் வேறுபட்டதாக இருக்குமென அவரே கூறினார்;. அவர்; மகிமைப்படுவதற்குமுன்னால் ஆவியை அவர்; கொடுக்கவில்லை (யோ.7:39). அவர்; மகிமையடைந்த பின்பு அவரால் விசுவாசிகளிடத்தில் நிரந்தரமாய் தங்கியிருக்க பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டது ( யோ.14:16-17 ) , இது பெந்தேகோஸ்தே நாளில் நிறைவேறியது புதிய அத்தியாயம் துவங்கியது (அப்..1:4-5 , 2:18,33) . உண்மையாய் எந்த விசுவாசியும் கிறிஸ்துவின் ஆவியில்லாமல் இருக்க முடியாது . ( ரோம. 8:9 ன் பிற்பகுதி ) நாம் நற்செய்தியை உண்மையாக விசுவாசிக்கின்றபொழுது பரிசுத்த ஆவியானவரால் முத்திரை போடப்படுகிறோம் , அது நம்முடைய மீட்புக்கு அச்சாரமாய் இருக்கிறது ( எபே. 1:13,14 , 4:30 , 2 கொரி.1:22 ) ஆவியின் அபிஷேகம் எல்லா உண்மையான விசுவாசிகளிடத்திலும் நிலைத்திருக்கிறது (1.யோ.2:27) இவ்வாறாக எல்லா விசுவாசியும் தேவனால் ஆவியால் முத்தரிக்கப்பட்டு, நித்தியமீட்புக்கும், சுதந்திரத்துக்கும் பாத்திரவான்களாயிருக்கிறார்கள் .

5) பூரணமாக பரிந்து பேசுபவர்

பரிசுத்த வேதத்தில் பாவமில்லாத இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது . ஒரு விசுவாசி பாவம் செய்தால் என்ன நடக்கும்? நிச்சயமாகவே அவன் தன் பாவங்களை அறிக்கையிட்டு அதை விட்டு விடுவது தேவையாயிருக்கிறது ( நீதி. 28:13 , 1.யோ.1:9 ) நம்முடைய பிரதிநிதியாக ஒருவர் பரிசுத்த தேவனுக்குமுன் நிற்க தேவையாயிருக்கிறது. நமக்காக பரிந்து பேசுவதற்காக, பிதாவிற்கு முன்பாக கர்த்தராகிய இயேசு மகா பிரதான ஆசாரியராக இருக்கிறார். பிரதான ஆசாரியராக கிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பேசுவார் (1.யோ.2:1). நமக்காக வேண்டுதல் செய்ய அவர் எப்பொழுதும் தேவனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார் (ரோ.8:34 , எபி.9:24) யாருக்காக வேண்டுதல் செய்கிறாரோ அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார் (எபி.7:25). நம்முடைய நல்ல நடத்தையால் கிறிஸ்து நமக்காக வேண்டுதல் செய்யவில்லை. பரலோக நீதிமன்ற அறையிலே நமக்காகப் பரிந்து பேசுகிறவரை நாம் எப்படி இழக்கமுடியும்?

6) பூரண பாதுகாப்பு

மனிதனின் உண்மைத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட எந்த இரட்சிப்பும் இருண்டதாகவே இருக்கும் . மாம்சத்தின் பெலவீனம் நமக்கு தெரிந்ததே (ரோ.6:19). ஆவியினாலே துவங்கப்பட்டது மாமிசத்தினாலே பரிபூரணப்பட்டது (கலா.3:3). நம்முடைய இரட்சகரின் வார்த்தையை கேட்போமானால் , அவர் இப்படி சொல்கிறார் அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பிய பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும் என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது (யோ.6:39-40). கர்த்தர் நம்முடைய ஆத்துமாவைப் பாதுகாப்பவர், புதிய ஏற்பாட்டில் இது வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது (யோ.10:27-30 , 1.கொரி. 1:8 , பிலி.1:5 , யூதா 24-25 ,1.பேது.1:5) இவ்வசனங்களில் ஒன்றாவது மனிதனின் உண்மைத் தன்மையின் இரட்சிப்பு நிலை நிற்க காரணமானது என்று சுட்டிக்காட்டவில்லை.

நித்திய இரட்சிப்பைப் பற்றிய பிரச்சனைகள்

ஏராளமான விசுவாசிகளுக்கு நித்திய இரட்சிப்பை குறித்த போதனைகளை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது. அவர்கள் மூன்று விதங்களில் இதை மறுக்கிறார்கள்.

1) மனம் மாறியவர்களின் தோல்வி

சிலர் கூறுகின்றனர் இரட்சிப்பு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கிறது. எப்படியெனில் சிலர் தங்களைக் கிறிஸ்தவர்களென்று கூறிக்கொண்டு (போதகர்கள்கூட) ஒழுக்கரீதியாக தேவனைவிட்டு தூரமாக சென்று, இறுதியாக கர்த்தரை கூட ஏற்று கொள்ளாமல் தள்ளி விடுகின்றனர். பழைய வாழ்கைக்குத் திரும்பி அல்லது கலகம் விளைவிப்பவராக இருந்தால், எப்படி அவர்கள் இரட்சிப்பை நம்ப முடியும்? இக் கேள்விக்கு பதில் அளிக்க கிறிஸ்தவர்;கள் என்று சொல்லிக்கொள்கிறவர்;களெல்லாம் உண்மையில் இரட்சிக்கப்பட்டவர்;களா என்று முதலில் கேட்கவேண்டும். புதிய ஏற்பாட்டில் போலித்தனமான கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்கு வெளிப்படையான ஆதாரம் உண்டு. இயேசு கோதுமையையும், களைகளையும் வைத்து ஓர்; உவமையைச் சொன்னார்;. இதில் நல்ல கோதுமையும், களையும் ஒன்றாக வளர்;கிறது (மத்.13:24-30,36-42). களைகள் ஒருபோதும் தேவனுடைய பிள்ளைகள் அல்ல. நீதிமார்;க்கத்தை அறிந்தபின்பு திரும்பவும் பாவவாழ்க்கைக்குத் திரும்புவார்;கள். நாய் தான் கக்கினதைத் தின்பதும், கழுவப்பட்ட பன்றி தன்னுடைய பழைய பழக்கத்துக்குத் திரும்பியது. ஏனென்றால் அவைகள் தேவனுடைய ஆவியால் கிறிஸ்துவின் மந்தையில் சேரவில்லை. வரும் நாட்களில் தங்களுடைய செயல்களினாலே கிறிஸ்துவோடு உறவு கொண்டாட அவர்;கள் வரும் போது, கர்;த்தர்; சொல்லுவார் நான் உங்களை ஒருபோதும் அறியேன், என்னை விட்டு அகன்றுபோங்கள் என்பார்; (மத்.7:23). ஒரு காலத்தில் என்னைத் தெரியும், ஆனால் என்னைவிட்டுச் சென்றுவிட்டீர்;கள் என்று கூறமாட்டார்;. இரட்சிப்புக்குக் காரணமாக விசுவாசத்திற்கும், போலி விசுவாசத்திற்கும் வித்தியாசம் உண்டு. குழந்தைப் பருவ ஜெபம், உயர்;த்தப்பட்ட கை, சபைக்கூட்டங்களில் ஆவலோடு பங்குபெறல், ஞானஸ்நானம் ஆகியவை இரட்சிப்பை ஊர்;ஜிதப்படுத்தாது. உண்மையான இரட்சிப்போ என்றென்றும் நிலைநிற்கும். ஒழுக்கமின்மை, சண்டை, கோபம், மதுபானவெறி, பொறாமை இவைகளை உடையவன் தேவனுடைய இராஜ்ஜியத்தைச் சுதந்தரி;க்கமாட்டான் (கலா.5:19-21). இவைகள் எச்சரிப்பின் அடையாளங்களாக இருக்கிறது. இரட்சிப்பின் விசுவாசத்தைக் குறித்து நாம் பரிசீலித்துப் பார்;க்க 1.யோவான் 2:3-6,15 , 3:6-10,14 , 5:2-4 ஆகிய வசனங்கள் உதவும். நாம் கர்;த்தராகிய இயேசுவுக்கும், அவருடைய வார்த்தைக்கும் கீழ்ப்படியாமல் இருந்தால், பாவம் செய்தால், உலகத்தை நேசித்து, தேவனுடைய பிள்ளைகளை நேசிக்காமல் போனால் நாம் கிறிஸ்துவைத் தெரியும் என்று சொல்லுவது வீணாய் இருக்கும். தேவன் சொல்கிறார்; நாம் பொய்யர்;களென்று (1.யோ.1:6 , 2:4). அப்படியானால் மறுபடி பிறத்தல் நம் வாழ்வில் நிகழவில்லை.

2) பாவம் செய்ய அனுமதி

சிலர்; கூறுகிறார்;கள் ஐனங்களுக்கு நித்திய இரட்சிப்பைக்குறித்து நிச்சயம் இருக்குமானால், அவர்; ஆவிக்குரிய நிலையில் திருப்தியாய் இருப்பார்;கள். அதன்பிறகு தாங்கள் விரும்பிய பாவங்களைச் செய்வதற்குச் சுதந்திரம் இருக்கிறதென்று. இது இக் கருத்தைச் சரியாகப் புரிந்தகொள்ளாமல் தவறாக எடுத்துக்கொண்டதேயாகும். ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஆடு அவரையே பின்பற்றவிரும்புகிறது. அவரின் அன்பையும் இரக்கத்தையும் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்காது. தவறிப்போகிற தேவனுடைய பிள்ளைகளை தேவன் எப்படிச் சரிசெய்வார் என்ற வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தண்டனை மூலம் தேவன் சரிசெய்கிறார்; (எபி.12:5-11). சரி செய்தல் அல்லது திருந்துதல் தேவனுடைய குடும்பத்திலிருந்து வெளியேற்றுவதிலிருந்து வித்தியாசமாகும். தன்னைவிட்டுத் தூரமாய்ச் செல்கிற பிள்ளைகள் சந்தோஷம், சமாதானம், சாட்சி, ஜெபவல்லமை, வாழ்க்கையில் கனி கொடுத்தலை இழக்க அனுமதிக்கிறார்;. மேலும் கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன் பலன்களையும் இழப்பார்கள். கிறிஸ்துவின் எந்த மந்தையும் தவறான பாதையால் திருப்தியடையாது.

3) நித்திய இரட்சிப்போடு முரண்படும் வேதவாக்கியங்கள்

சிலர்; நித்திய இரட்சிப்பு உபதேசம் தேவவசனங்களைச் சுட்டிக்காட்டி மறுக்கின்றனர்;. உபதேசங்கள்: முழுவதுமான தேவவசனங்களின் அடிப்படையில் அமைகிறது. ஏதோ ஒரு வசனங்களில் ஒரு பகுதியை மட்டும் கொண்டு அமைகிறதல்ல. ஒருபோதும் தேவனுடைய வார்;த்தை ஒன்றுக்கு ஒன்று முரணானது அல்ல. ஒரு உபதேசத்தைக் குறித்த எல்லா வசனங்களையும் ஆராய்ந்து பார்;க்கவேண்டும். நாம் இப்பொழுது நித்திய இரட்சிப்போடு முரண்பாடாக காணப்படுகிற வேதவாக்கியங்களைப் பார்;ப்போம்.

அ) வீழ்ந்துபோதல்:

சில வேளைகளில் சில வேதபகுதிகள் வீழ்ந்துபோகிற நபர்;களைப் பற்றிச் சொல்லும்பொழுது விசுவாசிகள் இரட்சிப்பை இழக்கிறார்;கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால் வீழ்ந்துபோதல் என்பது ஒருமுறை கிறிஸ்தவர்;கள் என்று கூறி அவ் விசுவாசத்திலிருந்து தவறிச் செல்வதாகும். வீழ்ந்து போதல் என்ற வார்த்தைக்கு கிரேக்கமொழியில் அப்போஷ்டாசியா (யிழளவயளயை) என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மறுப்பதும், அவர்; சிலுவையில் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி முடித்த மீட்பின் பணியை ஏற்றுக்கொள்ளாததும் ஆகும். இக் கொள்கையை உடையவர்;கள் சபையின் உள்ளிலே இருக்கிறார்கள். பெரும்பாலானோர்; சபைக்குள்ளாகவே போதகர்;களாக இருக்கிறார்;கள். அவர்;கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்;கள் அல்ல (1.யோ.2:19). இப்படிப்பட்டவர்;களைக் குறித்து யூதா நிருபம் தெளிவாகக் கூறுகிறது. இவர்;கள் பக்க வழியாய் நுழைகிறவர்;கள், பக்தியற்றவர்;கள் (வசனம் 4), தண்ணீரற்ற மேகம் (வசனம் 12), ஆவியில்லாதவர்;கள் (வசனம் 19), தேவபக்தியின் வேடம் தரித்த போலியான விசுவாசிகள் (2.தீமோ.3:5). மேலும் இவர்;கள் பற்றி 1.தீமோத்தேயு 4:1-3 , 2.பேதுரு 2:1,15-22 , 1.யோவான் 2:18-22 , 2.யோவான் 7-9 ஆகிய பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. கிருபையிலிருந்து வீழ்ந்து போதல் (கலா.5:4) ஆதி அன்பிலிருந்து விழுதல் (வெளி 2:4-5), உறுதியிலிருந்து விலகி வீழ்ந்துபோதல் (2.பேது.3:17) ஆகியவற்றிற்கு அப்போஷ்டசியா என்ற வார்;த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவைகள் விசுவாசியின் தோல்வியைக் குறிக்கிறது. ஆனால் இரட்சிப்பிலிருந்து வீழ்தலை அல்ல.

ஆ) நிபந்தனைக்குட்பட்ட பிரிவு:

இரட்சிப்பைப் பற்றிக் கூறுகின்ற ஏராளமான வேதவாக்கியங்களில் ஆல் என்ற வார்த்தை அத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆல் என்ற வார்;த்தையால் நாம் சில குறிப்பிட்ட வழியில் வாழ்ந்தால் தான் இரட்சிப்பு நிலை நிற்கும் எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் நன்கு ஆராய்ந்து பார்;த்தால் வேதவாக்கியத்தின்படி இல்லாத வாழ்க்கையுடையவர்களின் இரட்சிப்பு உண்மையான இரட்சிப்பு அல்ல. எபிரெய நிருபம் ஏராளமான நிபந்தனைகளை உள்ளடக்கிய வசனங்களைக் கொண்டது. அவைகள் உண்மையான இரட்சிப்பைக் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. எபிரெய நிருபம் யூத ஐனங்களுக்காக எழுதப்பட்டது. குறிப்பாக மறுபடி பிறந்த, பிறவாத விசுவாசத்தில் உறுதியில்லாதவர்;களுக்காக எழுதப்பட்டது. பிற்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இரு சாரரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களாக மட்டும் இருக்காமல் பழைய ஏற்பாட்டு பலிக்கும் திரும்பவும் முக்கியத்துவம் கொடுக்கிறவர்;கள் இவர்;கள் மறுபடி பிறவாமல், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்திலிருந்து சென்றவர்கள் இந் நிருபத்தின் மூலம் எச்சரிக்கப்படுகின்றனர்; (எபி.2:1-3 , 3:6,12,14 , 4:1 , 12:25). கிறிஸ்துவைத் தொடர்ந்து பற்றிக்கொண்டவர்களாக இருக்கவேண்டுமென்று 1.கொரிந்தியர்; 15:1-2 , கொலோசேயர்; 1:22-23 ஆகிய பகுதிகள் கூறுகிறது. எபிரெயர் 6:4-6 ஏராளமானவர்;களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணுகிறது. இங்கு கூறப்பட்டுள்ள பகுதி கிறிஸ்தவர்களுக்கு உரியது போன்று காணப்படுகிறது. இங்கு ஆவியானவரின் ஊழியத்தின் பங்கை குறிக்கிறதேயல்லாமல் ஆவியானவரால் உள்ள முத்தரிப்பையோ, வசித்தலைiயோ குறிப்பிடவில்லை (வசனம் 4). இரட்சிக்கப்படாமலேயே ஆவியானவரின் ஊழியத்தில் ஈடுபடமுடியும். எபிரெய நிருப ஆசிரியர்; வசனம் 9ல் கூறுகிறார்;: நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். ஆகவே வசனம் 4 முதல் 6 வரை உள்ளவைகள் உண்மையான விசுவாசிகளுக்குப் பொருத்தமில்லாதது. இங்கு முக்கியமான தவறு என்னவென்றால் கிறிஸ்து இயேசுவின் இரத்தம் மட்டுமே இரட்சிப்புக்கு காரணமானது என்பதை ஏற்க மறுப்பதாகும்.

மனப்பூர்;வமாய் செய்கிற பாவத்தைக் குறித்து எபிரெயர் 10:26-39ல் எச்சரிக்கப்பட்டுள்ளது. வசனம் 26 முதல் 39 வரை ஒப்பிட்டுப் பார்;க்கும்போது இவ்விரு வசனங்களிலும் கூறப்பட்டுள்ள நாம் என்கிற சொல் வித்தியாசப்படுவதைக் காணலாம். வசனம் 26ல் கூறப்பட்டுள்ள மனப்பூர்;வமாய்ப் பாவம் செய்கிறவன் தேவனுடைய குமாரனைக் காலில் மிதிக்கிறவனாக மாறுகிறான் (வசனம் 29). இதற்கு முரண்பாடாக வசனம் 39 இப்படிக் கூறுகிறது: நாமோ கெட்டுப்போக பின்வாங்குகிறவர்;களாயிராமல் ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்;களாயிருக்கிறோம். உண்மையான விசுவாசிகள் கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து பின்வாங்கமாட்டார்கள். அதுவே அவர்;களின் ஒரே நம்பிக்கையாயிருக்கிறது. இரட்சிப்பின் விசுவாசம் நிலை நிற்கின்ற ஒன்று.

இ) பல்வேறு உவமைகள்:

சில உவமைகள் நிரந்தரமற்ற இரட்சிப்புக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. சரியாக உவமைகளை விளக்கவேண்டுமானால் தெளிவாக போதிக்கப்பட்டுள்ள உவமைகளை அடிப்படையாகக் கொண்டே விளக்கவேண்டும். இதுவே சரியான முறை. நான்கு உவமைகள் நித்திய இரட்சிப்புக்கு எதிராக விளக்கப்படுகிறது. அவை நான்கையும் இப்பொழுது சோதித்தறிவோம்.

1) விதைக்கிறவன் (லூக்.8:4-15)

பிரச்சனை: கொஞ்ச காலம் விசுவாசிப்பவர்;கள்

விளக்கம்: அவர்;களைக் குறித்துச் சொல்கின்ற பொழுது வேர்; அற்றவர்;கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் என்ன விசுவாசிக்கிறார்;கள்? பிசாசுகளும் விசுவாசிக்கிறது, ஆனால் அவைகள் இரட்சிக்கப்பட்டவைகள் அல்ல (யாக்.2.19). இந்த உவமை தேவனுடைய வார்;த்தையை கேட்கிறவர்;களின் மனநிலையை விளக்குகிறது. உண்மையும் உத்தமமுமான இருதயத்தோடு வசனத்தைக் கேட்டு விசவாசிக்கிறவர்;கள் இரட்சிக்கப்படுவார்கள், கனிகளைக் கொடுப்பார்;கள்.

2) விசாரணைக்காரன் (லூக்.12:41-48)

பிரச்சனை: உண்மையற்ற விசாரணைக்காரன் கர்;த்தருடைய வருகையை நோக்கியிருக்காதவன் இவனுடைய பங்கு அவிசுவாசிகளோடு நியமிக்கப்பட்டது.

விளக்கம்: ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய விசாரணைக்காரனாய் இருக்கிறான். தேவன் மனிதனுக்குத் தந்திருக்கிற அனைத்துக்கும் அம் மனிதன் விசாரணைக்காரனாயிருக்கிறான். இதில் உண்மையற்ற ஒருவன் விசுவாசி என்றும், இரட்சிப்பை இழந்தவன் என்றும் சொல்வதற்கு இடமில்லை.

3) மன்னிக்கும் பிரமாணம் (மத்.18:23-35)

பிரச்சனை: நாம் பிறரை மன்னிக்காவிட்டால் தேவன் நம்மை மன்னிக்கமாட்டார். பொல்லாத ஊழியக்காரன் உபாதிக்கிறவர்;களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டான்.

விளக்கம்: மன்னிக்கும் தன்மையற்றவனை இரட்சிக்கப்பட்டவன் என்று கூறவில்லை. தேவனுடைய கிருபையின் வெளிச்சத்தில் பிறருக்கு நியாயம் செய்யவேண்டும் என்பதே இவ் உவமையின் பொதுவான பாடமாகும்.

4) மெய்யான திராட்சைச் செடி ( யோ.15:1-7)

பிரச்சனை: ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால் வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்;ந்து போவான். அப்படிப்பட்டவைகளைச் சேர்;த்து, அக்கினியிலே போடுகிறார்;கள், அவைகள் எரிந்துபோம்.

விளக்கம்: இப் பகுதி கனிகொடுத்தலைப் பற்றிச் சொல்லுகிறது. அதற்கு கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியம் தேவையாயிருக்கிறது. வயல்வெளிகளில் நடப்பதுபோன்று கனிகொடுக்காத கிளைகள் மனிதர்;களால் எரிக்கப்படும். இந்த எரித்தல் நித்திய நியாயத்தீர்;ப்பு அல்ல.

ஈ) பிற பகுதிகள்:

விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தல் (1.தீமோ.1:19-20), விசுவாசத்தை விட்டு வழுகிச் செல்லுதல் (1.தீமோ.6:10,21), விசவாசத்தைக் கவிழ்த்துப் போடல் (2.தீமோ.2:18). ஆகிய பகுதிகளை வைத்து நித்திய இரட்சிப்பை மறுக்கின்றனர்;. இப் பகுதிகள் வழுகிப்போகிற விசுவாசிகளைக் குறித்து கூறுவதாக இருக்கலாம் என்றாலும் கர்;த்தர்; தம்முடையவர்;களை அறிவார்; (2.தீமோ.2:19). குழப்பமான வாழ்க்கையினால் நாம் அடிக்கடி பிறருடைய இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை அறிந்து கொள்ளமுடியவில்லை. ஆதியாகமத்தில் காணப்படும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் லோத்து இரட்சிக்கப்பட்டவன் என்று தெரியவில்லை. ஆனால் அவர்; இரட்சிக்கப்பட்டவர்; என்று 2.பேதுரு 2:7-9 கூறுகிறது.

விசுவாசியின் கிரியைகள் கிறிஸ்துவின் நியாயசனத்தின் முன் அக்கினியால் சோதிக்கப்படும்போது, தன்னுடைய கூலியை இழக்க நேரிடுமேயொழிய இரட்சிப்பை அல்ல (1.கொரி.3:15). இதைக் குறித்து அப்போஸ்தலர் ஆகாதவனாய்ப் போவதால் உள்ள ஆபத்தைக் குறிப்பிடுகிறார்; (1.கொரி.9:27). பவுல் இரட்சிப்பை இழந்துவிடுவேன் என்று பயப்படுவதாக அர்;த்தமல்ல, அவர்; தன்னுடைய இரட்சிப்பைக் குறித்து நம்பிக்கையுள்ளவராயிருந்தார் (2.தீமோ.1:12 , 4:7-8).

முடிவுரை

இரட்சிப்பின் விசுவாசம் வாழ்க்கையின் முடிவுரையிலும் தொடர்;கிறது என்று வேதவாக்கியம் தெளிவாகச் சொல்கிறது. அது ஒரு நொடிப்பொழுதில் உள்ள நிகழ்ச்சியல்ல. இரட்சிப்பின் விசுவாசம் உறுதியற்ற நம்பிக்கை, சடங்காச்சார ஜெபம் ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிறது. உண்மையான விசுவாசம் ஒருபோதும் கிறிஸ்துவையும், அவரின் இரட்சிப்பின் வேலையையும் நிராகரிக்கமாட்டாது. இது நல்ல ஜீவியத்திற்கு வழிவகுக்கும், பாவமான ஜீவியத்திற்கு அல்ல. இரட்சிக்கப்பட்டேன் என்று விசுவாசிக்கிறேன் என்கிற நபரிடத்தில் அல்ல, ஆனால் அவ்விசுவாசத்தை வாழ்க்கையில் காட்டுகிறவர்;களிடத்திலே இது காணப்படும் (யாக்.2:14-24). வாழ்க்கையில் தன் விசுவாசத்தைச் செயற்படுத்திக் காட்டாதவனுக்கு பரலோகம் செல்ல பயணச்சீட்டு உறுதிப்படுத்தமுடியாது. அதற்குப் பதிலாக அவன் கர்;த்தரைச் சந்திக்கும்போது என்னை விட்டு அகன்றுபோங்கள் நான் உங்களை அறியேன் என்கிற வார்த்தையைக் கேட்கவேண்டி வரும். ஆனால் கிறிஸ்துவின் ஆடு இப்படிச் சொல்ல முடியும். கர்;த்தர்; எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; (2.தீமோ.4:18).

பாடம் 5 ற் கான கேள்விகள்

1) விசுவாசியாகிய நம்மை எதிலிருந்தெல்லாம் இரட்சித்திருக்கிறார் (மத்.1:21, ரோ.5:9, 6:14,17-18 , கலா.3:13 , எபேசி.2:1-7)?

2) தேவன் நம்முடைய பாவங்களை என்ன செய்திருக்கிறார்; (ஏசா.1:18 , சங்.103:12)?

பாவமன்னிப்பு எதன் அடிப்படையில் உள்ளது (எபேசி.1:7)?

3) எப்பொழுது எங்கே நம்முடைய பாவம் தீர்க்கப்பட்டது (1.பேது.2:24)?

இதில் நம்முடைய எல்லாப் பாவங்களும் அடங்கியுள்ளதா அல்லது முன்பாக செய்த பாவங்கள் மட்டுமா? (எபி.9:24-28 ; 10:10-14)?

4) குமாரனை விசுவாசிக்கும் பொழுது நாம் என்ன பெறுவோம் (யோ.5:24)? இதை நாம் உடனடியாகப் பெறுவோமா அல்லது மரித்த பிறகு பெறுவோமா? விளக்குக.

நித்தியம் என்ற சொல்லை விளக்குக. அதன் எல்லையைக் குறிப்பிடுக.

5) இரட்சிக்கப்பட்ட நாம் இரட்சிக்கப்பட்டவர்களாக எப்படி பாதுகாக்கப்படுகிறோம் (யோ.6:39-40 , 1.பேது.1:4-5 , யூதா 24)?

6) கிறிஸ்தவர்கள் என்கிற முறையில் தேவனோடு நம்முடைய உறுவு என்ன (1.யோ.3:1-2)?

நாம் எப்படி இவ் உறவிற்கு பாத்திரமாவோம் (யோ.1:12-13)?

இந்த உறவிலிருந்து எது நம்மைப் பிரிக்கமுடியும் (யோ.10:28-29 , ரோ.8:35-39)?

7) விசுவாசியின் வாழ்க்கையில் எப்படிப் பரிசுத்தஆவியானவர்; இரட்சிப்பு நித்தியமானது என்று சுட்டிக்காட்டுகிறார் (யோ.14:16-17 , ரோ.8:9பிற்பகுதி , எபேசி.1:13-14 , 4:30)?

8) 2.தீமோத்தேயு 1.12ன் பிற்பகுதியை சொந்தமாக எழுதுக.

இந்த வசனத்திலிருந்து (2.தீமோ.1:12 , 4:7-8,18 ) ஆகியவற்றிலிருந்தும் பவுலுக்கு நித்திய இரட்சிப்பைக் குறித்து இருந்த நம்பிக்கை என்ன?

9) நமக்கு நித்திய இரட்சிப்பு இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு 1.யோவான் 5:11-13 என்ன சுட்டிக்காட்டுகிறது?

10) பின்வரும் பகுதிகளுக்கு எப்படிப் வேதத்தின்படி பதில்கொடுப்பீர்;கள்?

நீங்கள் சாகின்றவரையில் இரட்சிக்கப்பட்டீர்;கள் என்று அறியமுடியாது.

என் வாழ்க்கை இதைக் காட்டவில்லை. ஆனால் எனக்குத் தெரியும் நான் இரட்சிக்கப்பட்டேன். ஏனென்றால் நான் எட்டு வயதாக இருந்தபொழுது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாக ஜெபம்பண்ணினேன்.

நான் என் இரட்சிப்பை இழந்துபோகமாட்டேன். ஆகையால் நான் விரும்பிய பாவங்களைச் செய்வேன்.

நித்திய இரட்சிப்புக் குறித்த போதனை சரியல்ல. ஏனென்றால் எனக்கு ஒரு போதகரைத் தெரியும் அவர்; பல தகாத செயல்களைச் செய்தார்.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 06: சபை வாழ்வு

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 07: சோதனையை மேற்கொள்ளல்

Recommended

Song 148 – Kuthugalam

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

04. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

Song 017 – Enthan Anbulla

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

பாடல் 001 – ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.