ஒரு நாள் நான் அயர்ந்து தூங்கும்பொழுது ஒரு கனவு கண்டேன். அது ஒரு விசித்திரமான கனவு! அந்தக் கனவைப்பற்றி இப்பொழுது உங்களுக்குக் கூறப்போகிறேன்.
கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைக் கண்டேன். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அவன் அந்தப் புத்தகத்தைத் திறந்து வாசிக்கத் துவங்கினான். அதைப் படிக்கும்போதே அவன் கண்கள் கலங்கின. உடல் நடுங்கியது.
ஐயோ! நான் என்ன செய்வேன் என்று கதறி அழுதான்.
அவன் தன் வீட்டினுள் நுழைந்தான். அவன் நிலையைக் கண்ட அவன் மனைவியும் பிள்ளைகளும் அருகே வந்தார்கள். அவனால் தனது கவலையை மறைக்கமுடியவில்லை.
அவர்களை அவன் அருகே அழைத்தான்.
என் அன்பான மனைவியே! என் அருமைப் பிள்ளைகளே, இதோ, என் முதுகிலுள்ள இந்தச் சுமை என்னை அதிகமாக அழுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் நாம் வசிக்கும் இந்த நகரம் வானத்திலிருந்து வரும் நெருப்பினால் அழிக்கப்படும் என்று இந்தப் புத்தகத்தில் படித்தேன். நாம் எப்படியாவது தப்பித்துக்கொள்ளவேண்டுமே. இல்லாவிட்டால் அழிந்துவிடுவோமே என்று அவன் புலம்பினான்.
அவனுடைய மனநிலை சரியில்லை என்று நினைத்துப் பயந்தார்கள் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும். அப்பொழுது இரவு நேரமாகிவிட்டமையால் அவனைப் படுத்து, உறங்கி ஓய்வெடுக்கும்படி கூறினார்கள். மறுநாள் காலையில் அவன் மனைவியும் பிள்ளைகளும் அவன் படுக்கையருகே வந்து அவன் எப்படியிருக்கிறான் என்று விசாரித்தார்கள். அவனோ இன்னும் மோசாமாகிவிட்டேனே என்று புலம்பினான். அவர்கள் வசிக்கும் நகரம் அழியப்போகிறது என்று கூறி மீண்டும் அவர்களை எச்சரித்தான். அவர்களோ அவன் பேச்சுக்கு செவிகொடுக்கவில்லை. அவனைக் கேலி செய்யவும், கிண்டல் பண்ணவும் துவங்கினார்கள்.
சிறுது நேரம் பொறுமையுடன் இருந்த அவன் மேலும் அந்த நிந்தனைகனைத் தாங்கமுடியாமல் தன்னுடைய அறைக்குள் சென்றான். தன் கவலையை நீக்குமாறு, தன் குடும்பத்தினர் உண்மை நிலையை அறிந்துகொள்ள உதவுமாறு ஆண்டவரை நோக்கி nஐபித்தான்.
அதன் பின்பு அவன் அடிக்கடி வயல்வெளிகுச் சென்று அந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பான். சிலவேளைகளில் nஐபம் செய்வான். என்றாலும் அவன் கவலை நீங்கிவிடவில்லை.
நான் இரட்சிக்கப்படுவதற்கு அந்த அழிவிலிருந்து தப்புவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று அடிக்கடி புலம்பிக்கொண்டிருந்தான்!












