அப்போது அந்த வழியே நற்செய்தியாளர் வருவதைக் கண்டான் கிறிஸ்தியான். தான் செய்த தவறை உணர்ந்த அவன் வெட்கித் தலைகுனிந்தான்!
அவனைக் கண்டவுடன், கிறிஸ்தியானே, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று கோபத்துடன் கேட்டார் நற்செய்தியாளர். ஒன்றுமே பதில்கூற முடியாமல் தலைகுனிந்தவாறே நின்றான் கிறிஸ்தியான். நான்தான் உன்னை இடுக்கமான வாசலை நோக்கிச் செல்லும் பாதையில் போகச் சொன்னேனே! நீ எப்படி வழிதவறி இங்கே வந்தாய்? என்று மீண்டும் கேட்டார் நற்செய்தியாளர்.
தயங்கியவறே நடந்ததை விவரிக்கத் துவங்கினான் கிறிஸ்தியான். நற்செய்தியாளருடன் பல குறுக்குக் கேள்விகள் கேட்டு அனைத்தையும் அறிந்து கொண்டார். கிறிஸ்தியானே, நான் சொல்லப் போவதைக் கவனமாகக் கேள். உன்னை ஏமாற்றிய உலக ஞானி இது போலப் பலரையும் நேரான பாதையிலிருந்து வழிதவற வைத்து அழிவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அவன் கூறும் பாதையில் சென்றால் கண்டிப்பாக அழிந்துதான் போகவேண்டும்! ஆண்டவரின் வார்த்தைகளை நம்பி அவர்காட்டும் பாதையில்தான் நீ செல்ல வேண்டும். அவருடைய வார்த்தைகளை வாசிக்கிறேன் கேள். பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்க மாட்டோமென்று விலகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில், பூமியியே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவih நாம் விட்டு விலகினால் எப்படித் தப்பிப் போவோம்? (எபி.12:25 ). எனவே பரலோகத்திலிருந்து பேசுகிற ஆண்டவருக்கே நீ செவி கொடுக்க வேண்டும். இதோ இன்னொரு வசனம் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் (எபி. 10:38 ). கிறிஸ்தியனே, நீ உன் பாதையிலிருந்து பின்வாங்கிப் போயிருக்கிறாய். இது ஆண்டவருக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது என்று வலியுறுத்தினார் நற்செய்தியாளர்.
ஐயா, நான் தவறு செய்துவிட்டேனே என்று கிழே விழுந்து கதறி அழுதான் கிறிஸ்தியான். நற்செய்தியாளர் கைகொடுத்து அவனைத் தூக்கி விட்டார். பயப்படாதே கிறிஸ்தியான். எந்தப் பாவமும் எந்தத் தூசணமும் மனுசருக்கு மன்னிக்கப்படும்…. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு (மத்தேயு 12:31 , யோவான் 20:27 ). உலக ஞானியைப் பற்றி ஓரிரு உண்மைகளை நான் பற்றி நல்ல அறிவு உடைவயன்தான் நல்ல குணமுடையவன்தான் நல்லொழுக்கத்துடன் வாழ்பவன்தான். ஆனாலும் அவன் சிலுவiயைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும் கூறப்படும் போதனைகளுக்குச் செவிகொடுக்காதபடியால் அவன் ஆண்டவருக்கு விரோதமானவனே. அவனது போதனையில் மூன்று தவறுகள் காணப்படுகின்றன. முதலாவது அவன் உன்னைச் சரியான பாதையிலிருந்து வழிதவற வைத்தான். இரண்டாவது சிலுவையை நீ வெறுத்துப் புறக்கணிக்கும்படி செய்தான். மூன்றாவது மரணத்துக்குச் செல்லும் பாதையில் உன்னைச் திசை திருப்பிவிட்டான் என்று விளக்கினார் நற்செய்தியாளர்.
கிறிஸ்தியான் முகத்தை மூடிக்கொண்டு அழுதான்.
ஐயா, நான் அவனுடைய முட்டாள்தனமான யோசனையைப் பின்பற்றி சரியான பாதையிலிருந்து விலகி வந்துவிட்டேனே! என்று கதறினேன். தன்னைக் காப்பற்றும்படி கெஞ்சினான்! கவபை;படதே, கிறிஸ்தியான். நீ உண்மையாகவே உன் தவறுகளை உணர்ந்தால் ஆண்டவர் உன்னை நிச்சயமாக மன்னிப்பார். வா nஐபம் செய்வோம் என்று நற்செய்தியாளர் கூறவே இருவருமாகவே முழங்காற்படியிட்டனர். கிறிஸ்தியான் தனது தவறுகளை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டான்.
அதன்பிறகு நற்செய்தியாளர் அவன் செல்ல வேண்டிய சரியான பாதையைச் சுட்டிக்காட்டி, அவனை அன்போடு வழியனுப்பி வைத்தார். கிறிஸ்தியான் அங்குமிங்கும் பார்க்காமல் வேகமாக நடந்துசென்றான். எதிரே வருபவர்களிடம் அவன் பேச்சுக் கொடுக்கவேயில்லை! சரியான பாதையை அடைந்தவுடன் இன்னும் வேகமாக நடக்கத் துவங்கினான்!
இறுதியில் இடுக்கமான வாசலை நெருங்கிவிட்டான் கிறிஸ்தியான்! வாசல் கதவின்மீது தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கத் திறக்கப்படும் (மத்.7:7) என்று எழுதப்பட்டிருந்தது!
கிறிஸ்தியான் அதன்படி கதவைத் தட்டினான்! தயாளன் என்ற பெயருடைய நல்ல மனிதர் கதவைத் திறந்தார். யாரப்பா நீ? எங்கிருந்து வருகிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று அன்புடன் கேட்டார்.
ஐயா, நான் அழிநகரத்திலிருந்து வரும் ஒரு பாவி. பெயர் கிறிஸ்தியான். வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள நான் சீயோன் மலைக்குச் செல்லவேண்டும். அதற்கு இந்த வழியாகத்தானே போக வேண்டும்? என்று கேட்டான். ஆமாம், உள்ளே வா என்று கூறிய தயாளன் கதவை அகலமாகத் திறந்தார். கிறிஸ்தியானின் கையை வேகமாகப் பற்றி உள்ளே இழுத்தார். கதவை மீண்டும் படாரென்று மூடித் தாளிட்டார்.












