கிறிஸ்தியான், உண்மையானவன் இருவரும் மாயாபுரியை அடைவதை நான் என் கனவில் கண்டேன்.
மாயாபுரியில் மாயக் கண்காட்சி என்ற கண்காட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. எங்கும் மக்கள் கூட்டம்.
இந்தக் கண்காட்சி எப்போதுமே தொடர்ந்து நடை பெற்றுவரும் கண்காட்சியாகும். பெயெல்செபூல். அப்பொல்லியோன், லேகியோன் என்ற சாத்தானின் கூட்டத்தினரே இந்தக் கண்காட்சியை நடத்திவந்தார்கள்! மோட்சத்துக்குச் செல்லும் பயணிகளைக் கவர்ந்திழுக்கவே அந்தப் பாதையில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது! இங்கு உலகப்பிரகாரமான புகழ், மாம்சத்துக்கடுத்த இன்பங்கள் இவற்றை விலைகொடுத்து வாங்க முடியும்! சூதாட்டம், நடனங்கள், போக்கிரிகளின் சபை இவை எப்போதுமே நடந்துகொண்டிருக்கும்!
கிறிஸ்தியானும், உண்மையானவனும் கண்காட்சிக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் அவர்களை வெறித்துப் பார்த்தார்கள். அவர்களுடைய உடை வித்தியாசமானதாயிருந்தது. பயணிகள் இருவரும் கானானின் மொழியைப் பேசியதைக் கேட்ட மற்றவர்கள் அவர்களைக் கேலி செய்தார்கள்.
அங்குள்ள வணிகர்கள் இவர்களிடம் வீண்பெருமைகளை விற்க முயன்றார்கள். அவர்களோ காதுகளைப் பொத்திக்கொண்டு, இந்த வீண்பெருமைகள் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.
அப்படியானால் எதைத்தான் வாங்குவீர்கள்? என்று ஒரு வணிகன் அவர்களைக் கேலி செய்தான். பயணிகளோ சற்றும் தயங்காமல், நாங்கள் உண்மையைத்தான் வாங்குவோம் என்று கூறினார்கள்.
இந்தப் பதிலைக் கேட்டு கூடியிருந்தவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். சிலர் அவர்களைப் பரியாசம் செய்தார்கள். ஆனால் மற்றவர்களோ அவர்களை அடிக்கத்துவங்கினார்கள்! எங்கும் ஓரே கூச்சலும், குழப்பமுமாகிவிட்டது!
கண்காட்சியின் தலைவன் இதைக் கேள்விப்பட்டான். அவர்களைக் கைது செய்து அழைத்து வருமாறு கட்டளையிட்டான்! அவர்களை விசாரிக்கும் குழுவினர் பல கேள்விகளைக் கேட்டனர்.
நாங்கள் மோட்சத்துச் செல்லும் பயணிகள். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்றே இருவரும் திரும்பத் திரும்ப சொல்;லிக்கொண்டிருந்தார்கள்.
இந்தப் பதில் விசாரிப்புக் குழவினருக்கு எரிச்சல் மூட்டியது. புத்தி சுயாதீனம் இல்லாதவர்கள் என்று திட்டினார்கள், அடித்து உதைத்தார்கள். பிறகு அவர்களை ஓர் இரும்புக் கூண்டுக்குள் அடைத்து, எல்லோரும் அவர்களைப் பார்க்கும்படி கண்காட்சியின் நடுவே அந்தக் கூண்டை வைத்தார்கள்.
கண்காட்சியில் இருந்தவர்கள் அனைவரும் அவர்களைக் கேலிசெய்து காறித் துப்பினார்கள். ஆனால் பயணிகள் இருவருமே ஒன்றுமே பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
இதற்கிடையே பயணிகளை என்ன செய்யலாம் என்ற பதில் மற்றவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது, விவாதம் வலுத்தது! பின்னர் அடிதடியில் சென்று முடிந்தது! அவர்களே ஓருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்கள்.
இந்தக் கலகத்துக்குக் காரணம் கிறிஸ்தியானும், உண்மையானவனுமே என்று குற்றம் சாட்டி அவர்களைத் தலைவனின் முன்னே அழைத்துச் சென்றார்கள்.
முதலில் இவர்களைப் பிரம்பினால் அடித்து சங்கிலியால் கட்டுங்கள் என்று தலைவன் கட்டடையிட்டான். அப்படியே செய்யப்பட்டது!
கிறிஸ்தியானும் உண்மையானவனும் மிகவும் அடக்கத்துடன் அனைத்தையும் சகித்துக் கொள்வதைப் பார்த்தவுடன் அனைத்தையும் சகித்துக் கொள்ளவதைப் பார்த்தவுடன் கூட்டத்தில் சிலர் அவர்கள் மீது இரக்கப்பட்டு அவர்களை விடுதலை செய்யும்படி கோரினார்கள்! இதைக் கண்ட எதிர்த்தரப்பினர் அவர்களைக் கண்டிப்பாக்கக் கொன்றுபோட வேண்டும் என்று கூச்சலிடத் துவங்கிவிட்டார்கள். எனவே தலைவன் அவர்களை நீதிபதியிடம் அனுப்பினான்.
நன்மையை வெறுப்பவன் என்பவன்தான் நீதிபதி! இவர்கள் வியாபாரம் செய்வதைத் தடுக்கிறார்கள். அமைதியைக் குலைத்துவிட்டார்கள். நகரத்திலுள்ளவர்களை இரு பிரிவினராகப் பிரித்துவிட்டார்கள். இவை நமது இளவரசரின் சட்டங்களுக்குப் புறம்பானவை என்று அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது!
உடனே உண்மையானவன் எழுந்து, நாங்கள் எல்லாவற்றிற்க்கும் மேலான ஆண்டவருடைய சட்டங்களுக்குத்தான் கீழ்படிவோம். நீங்கள் சொல்லும் இளவரசன் சாத்தான். அவன் எங்கள் ஆண்டவருக்கு எதிரியானவன். அவனையும் அவனுடைய பிசாசுக் கூட்டத்தினரையும் நாங்கள் வெறுக்கிறோம் என்று மனத்திடத்தோடு கூறினான். உடனே கூடியிருந்தவர்கள் இன்னும் அதிக ஆத்திரத்தோடு கத்தத் துவங்கிவிட்டார்கள்.
பொறாமை, மூடநம்பிக்கை, புகழ்விரும்பி என்ற மூவரும் அவர்களுக்கு விரோதமாகச் சாட்சிகூற எழும்பினார்கள். கிறிஸ்தவ சமயம் இந்தக் கண்காட்சியின் வழக்கத்துக்கு விரோதமானது என்று கூறி தங்கள் விற்பனையைத் தடுத்ததாகக் குற்றம் சாட்டினார்கள்.
உண்மையானவன் எழுந்து ஆண்டவருடைய வார்த்தைக்கு விரோதமானவை அனைத்தும் கிறிஸ்துவுக்கு விரோதமானவை என்றுதான் நான் கூறினேன். சுhத்தானும் அவனுடைய கட்டளைகளும் நரகத்துக்குத் தான் ஏற்றவை. அவை நமக்கு ஏற்றவை அல்ல என்று கூறியவுடன் மீண்டும் பெரிய கூக்குரல் கேட்டது!
அவனுக்குக் கொலைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று கத்தினார்கள் அநேகர்!
நன்மையை வெறுப்பவன் என்ற நீதிபதி உண்மையானவனுக்கு மரண தண்டனை அளித்துத் தீர்;ப்புக் கூறி விட்டான்.
காவலாளிகள் உண்மையானவனைச் சாட்டையினால் அடித்தார்கள்! கூடியிருந்தவர்கள் அவன்மீது கற்களை எறிந்தார்கள்! சிலர் வாளினால் அவன் உடலைத் துளைத்தார்கள்! இவ்வாறு சித்தரவதை செய்தபின்பு ஒரு கம்பத்தில் அவனைக் கட்டி நெருப்பு மூட்டிவிட்டார்கள்! உண்மையானவன் ஆண்டவரைத் துதித்தபடியே உயிரை விட்டான்.
உடன்தானே அவன் ஒரு பறக்கும் இரதத்தில் ஏற்றப்பட்டு நேரடியாக மோட்சத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதை நான் என் கனவில் கண்டேன்.
கிறிஸ்தியான் சிறையில் அடைக்கப்பட்டான்! ஆனால் சில நாட்களுக்குள்ளாக அவன் தப்பிச் செல்வதற்க்கு ஆண்டவர் கிருபை செய்தார்!
கிறிஸ்தியான் மாயாபுரியைவிட்டு வெளியேறும்போது நம்பிக்கை என்ற பெயரையுடைய ஒருவன் அவனுடன் வந்து சேர்ந்துகொண்டான். கிறிஸ்தியான், உண்மையானவன் இவர்களுடைய திட விசுவாசத்தைக் கண்டு மனம் திரும்பியவன் அவன்! இருவருமாக மோட்சத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடர்ந்தார்கள்.











