• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

02. எருசலேமைச் சேர்தல்

August 10, 2017
in கிறிஸ்தவ நூற்கள், நெகேமியா
0 0
00. பொருளடக்கம்

அதிகாரம் 2

எருசலேமைச் சேர்தல்

வசனம் 2:1-3

அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன். நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை. அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார். அப்பொழுது நான் மிகவும் பயந்து, ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க. என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.

நெகேமியா மிகவும் விடாமுயற்சியாய் இருந்தான். அவனுடைய உபவாசமும் ஜெபமும் மாதங்கள் தொடர்ந்து நடந்தேறின. நாம் சில வேளைகளில் ஒரு காரியத்தைக் குறித்து ஜெபிக்கும்போது இரண்டு, மூன்று, இரவுகள் ஜெபித்தபின் சோர்ந்து போகிறோம். ஆனால் நெகேமியா அவ்வாறு சோர்ந்துபோகவில்லை. கர்த்தர் பதிலளிக்கும் நாள் வந்தது. வழக்கம்போல அன்றும் நெகேமியா இராஜாவின் அரண்மனைப் பணியைச் செய்தவண்ணமேயிருந்தான். இராஜாவும் அவரது ஆசனத்தில்தானேயிருந்தார். நெகேமியா திராட்சைரசம் பரிமாறிக்கொண்டு இருந்தான். இங்கே நெகேமியா ஓர் அருமையான செய்தியை அறிவிக்கிறான். அவன் எப்போதும் இராஜாவிற்கு முன்பாக இதற்குமுன், அவர் சமுகத்தில் துக்கமாய் இருந்ததில்லை. எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடனே இருந்தான். இதுபோல நம்மைப்பற்றிக் கூறமுடியுமோ? ஓர் உண்மைக் கிறிஸ்தவனைவிட யாரும் மனமகிழ்ச்சியாய் இருக்கமுடியாது.

ஆனால் நாம் பல நேரங்களில் பலவகைத் தொல்லைகளினால் பாதிக்கப்பட்டவர்களாய்க் காண்கிறோம். இன்று நெகேமியாவின் முகமும் அவனது மனதின் துயரத்தைக் காண்பித்துக்கொண்டிருந்தது.

இராஜா அதைப் பார்த்தான். நீ துக்கமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே. இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்று இராஜா சொன்னான். அந்த வார்த்தைகள் நெகேமியாவை மிகவும் பயப்படச்செய்தன. ஓர் இராஜாவைத் துக்கப்படுத்துவதென்பது அந்நாட்களில் மிகவும் அஞ்சப்படவேண்டிய ஒரு காரியம். பலவேளைகளில் இத்தகைய காரணங்களுக்குச் சிலர் சிரச்சேதம் செய்யப்பட்டும் இருக்கின்றனர். ஆனால் இராஜா அதைப் பற்றிக் கேட்டபோது நெகேமியா பயந்து மயங்கிவிழவில்லை. உடனே அவன் பதில் சொல்லுகிறான். அவன் பதிலிலே வழக்கமான வாழ்த்துதல் வார்த்தைகளை நாம் காண்கிறோம். இராஜா என்றைக்கும் வாழ்க (தானி.3:9 ஒப்பிடுக). அதன் பிறகுதான் அவன் செய்தியைச் சொல்லுகிறான். என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் நகரம் பழானதும், அதன் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய் கிடக்கும்போது நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி? எருசலேம் நகரம் என்ற பெயரை அவன் குறிப்பிடவில்லை. அதை உரிமையான ஓர் இடமாகக் குறிப்பிட்டு, என்னுடைய முன்னோர்களின் நகரம் என்று குறிப்பிட்டுப் பேசுகிறான். எஸ்தரும், ஒருமுறை அகாஸ்வேரு இராஜாவினிடத்தில் பேசும்போது அவ்வாறே கூறுகிறாள்…. என் ஜீவன்…. என் மன்றாட்டு…. என் ஜனங்கள்… (எஸ்.7:3). இந்த இரண்டு முறையும் யார் இவ்வார்த்தைகளைப் பேசினார்களோ அவர்கள் நிமித்தம் அரசர்கள் இவ்வார்த்தைகளுக்குச் செவி சாய்த்தனர். நெகேமியா தன் வார்த்தைகளை வளர்க்கவில்லை. அவனுடை மாறுத்தரம் யாவும் சுருக்கமாயிருந்தது.

வசனம் 2:4-5

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.

இராஜா தனது பரிவர்த்தனைகளிலும் மிகவும் சுருக்கமாய் இருந்தான். நீ கேட்கிற காரியம் என்ன? என்று கேட்டான். இதுபோன்ற ஒரு கேள்வி நம்மை வியப்பில் ஆழ்த்தவல்லதாய் இருக்கிறது. ஆனால் நெகேமியாவை அல்ல, அவன் நன்றாகச் சிந்தித்து, பலநாள்களுக்கு முன்னதாகவே தேவனிடத்தில் ஜெபித்து, முடித்து இருந்தான். இப்போது இராஜா அவனைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டவுடனே ஒரு நொடிப்பொழுது – இடைவெளி – தேவனை நோக்கிய ஒரு ஜெபம். நான் பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ஒரிடைவெளி மிகச் சிறிய இடைவெளிநேரம். இராஜாவைப் பார்த்து பதிலிறுத்தி, என்று வாசிக்கிறோம். அவனுடைய அறைக்குள் ஓடி முழங்கால் படியிட்டு ஜெபம் செய்ய நேரமில்லை. அதற்குரிய நேரம் வந்தவுடனே, செயல்ப்பட தயாராக இருந்தான். நமது வாழ்விலே, நாம் தயாராக இல்லாததினால் எத்தனை அரிய சந்தர்ப்பங்களை நழுவ விட்டிருக்கிறோம். நம்முடைய மனம் பரிசுத்த ஆவியின் செயல்ப்பாட்டிற்கு உகந்ததாய் ஆயத்த நிலையில் இல்லாதிருந்ததினால் எத்தனை சந்தர்ப்பங்கள் நழுவிப் போயின. ஒருவேளை அத்தகைய சந்தர்ப்பத்தினைக்கூட, அது கடந்து போகுமுன் நாம் அறிந்துகூட இருக்கமாட்டோம்.

நெகேமியா மரியாதையான வார்த்தைகளால் பேசி, இராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என்று ஆரம்பிக்கிறான். வேதம் சொல்லுவதென்ன? தேவனுக்குப் பயந்திருங்கள், இராஜாவைக் கனம் பண்ணுங்கள் (1.பேது.2:17). அடுத்து அவன் இராஜாவினிடத்தில் வேண்டுதல் செய்கிறான். யூதா தேசத்திற்கு நீர் என்னை அனுப்பும், என்று வேண்டுகிறான். என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் பட்டணம் என்று கூறுகிறான். இன்னும்கூட எருசலேம் என்ற பெயரை அவன் கூறவில்லை. அவன் மன்றாட்டு, தனிப்பட்ட அவனுக்கு மட்டும்தான். அடுத்து, ஏன் செல்லவேண்டும் என்பதற்கான காரணத்தைக் கூறுகிறான். நெகேமியா வேடிக்கை பார்ப்பதற்காக சுற்றுலா செல்லவில்லை, அல்லது துப்பறியும் பணிக்காக அவன் அங்கு செல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட பணிக்காக வேலை செய்ய – உழைக்க – அந்ந உழைப்பு – ஒன்றைக் கட்ட. இங்கே நாம் காணும் நெகேமியா, உழைப்பின் அவசியத்தை மேற்கொள்ளுகிறான். அவன் அதற்காக அழுதான். அதற்காகவே ஜெபித்தான். உபவாசித்திருந்தான். நன்கு திட்டமிட்டிருந்தான்.

வசனம் 2:6

அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிராயணம் எத்தனைநாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.

இராஜா இரண்டு கேள்விகள் கேட்பதை நாம் காண்கிறோம். அதற்குமுன் இராஜஸ்திரியைப் பற்றியும் வேதம் கூறுகிறது. அவளுடைய பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. ஆனால் இராஜஸ்திரியும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் என்று நாம் வாசிக்கிறோம். இந்தக் கேள்விகளும் உரையாடலும் நடக்கும்போது இராஜஸ்திரீயும் அருகில் இருந்தாள் என்று காண்கிறோம். ஆகையால் இந்த நடைமுறைகள் ஒரு தனி அறையில் நடைபெற்றிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. இராஜா கேட்ட கேள்விகள்: 1. உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும்? 2. நீ எப்பொழுது திரும்பி வருவாய்? இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை அறிந்திருந்த நெகேமியா அதைக் கூறுகிறான். அப்போது இராஜா அவனை அனுப்ப சம்மதிக்கிறான். நெகேமியா என்னை அனுப்பும் என்ற வார்த்தைகளையே பயன்படுத்துகிறான். தன்னைப் போகவிடும்படி இராஜாவினிடத்தில் கேட்கவில்லை. ஆனால் அனுப்பும்படி கேட்கிறான். அந்தப் பயணத்தில், அப்படி அனுப்புவதனால் இராஜாவிற்கும் ஒரு பங்கு இருக்கிறது. இராஜா நெகேமியாவை அனுப்புகிறான். எகிப்து தேசத்தில் பார்வோன் இராஜா அப்படிச் செய்யவில்லை. மோசே கேட்டது, என் ஜனங்களைப் போகவிடு என்பது. ஒரு முழுப்பயணமாக பார்வோனைவிட்டுப் போக அவர்கள் விரும்பினார்கள்.

வசனம் 2:7

பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப்போய்ச் சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்கு கடிதங்கள் கொடுக்கும்படிக்கு,

அடுத்து நெகேமியா, தனக்குத் தேவையானது என்னவென்று, இராஜாவினிடத்தில் கேட்டான். யூதா தேசத்திற்குப் போய்ச் சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படி அவன் கேட்டான். அக்கடிதங்கள் அவனை இராஜாதான் அனுப்பினான் என்று காட்டும். ஆகையால் அவனுடைய பயணம் எளிதாய் அமையும் என்று எண்ணுகிறான். நாம் கிறிஸ்துவினால் இருதயங்களில் எழுதப்பட்டும் சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற நிருபங்களாக இருக்கிறோமா (2.கொரி.2:3)? மக்கள் உங்களைப் பார்க்கும்போது இராஜாதி இராஜனாகிய கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவன் என்று அவர்கள் நினைக்கக்கூடுமோ? நெகேமியா புறப்படவேண்டிய நேரத்தைக் குறித்தபின் அவன் எருசலேமுக்குப் புறப்பட்டான். அவன் புறப்படுவதை எதுவும் தடுக்கக்கூடாது என்று விரும்பினான். ஆபிரகாமின் வேலைக்காரனும் அவன் திரும்புகையில் யாதொன்றும் அவன் பணியைத் தடுப்பதை அவன் விரும்பாமல் கர்த்தா என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க நீங்கள் எனக்குத் தடை செய்யாதிருங்கள் என்றான் (ஆதி.24:25).

வசனம் 2:8

தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன். என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

நெகேமியா தேவலாயத்திற்கு இருக்கிற அரணின் கதவுகளின் வேலைக்கும் நகர அலங்கத்தின் வேலைக்கும் தான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் என்ன தேவை என்பதை முன்கூட்டியே கணித்துச் செயல்ப்பட்டான். அந்த வேலைகளுக்கு அதிகமான மரங்கள் தேவைப்படும் என்று அவன் அறிந்திருந்தான். அம்மரங்கள் எங்கு கிடைக்கும் என்றும் நன்கு அறிந்திருந்தான். அது இராஜாவின் வனத்துக்காவலாளன் அவன் அப் பணிக்குத் தலையானவன், தேவன் தமது பணிகளுக்கு தலையாய பணியாளர்களையே பலமுறை பயன்படுத்த வல்லவராய் இருக்கிறார். எரேமியா கிணற்றுச்சிறையில் அடைக்கப்பட்டுப்போனபோது எபெத்மெலேக் என்னும் பிரதானி அவனுக்காக நேரே இராஜாவினிடத்தில் சென்று அவனைச் சிறையிலடைத்த அதே இராஜாவினிடத்தில் பேசி அவனை விடுவிக்கச் செய்தான் என்று வேதம் கூறுகிறது (எரேமி.86:8-10).

நெகேமியா கேட்டதனைத்தையும் பெர்சியாவின் இராஜா அவனுக்குக் கொடுத்தான். நெகேமியாவும் இங்கு எஸ்றாவைப்போல் செயல்ப்பட்டதைக் காண்கிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறான். என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால் இராஜா இவைகளை எனக்குக் கட்டளையிட்டார் என்று நெகேமியா கூறுகிறான். கர்த்தரின் உதவியில்லாமல் எந்த ஒரு திட்டமும் நடைபெறாது என்பது நெகேமியாவுக்குத் தெரியும்.

வசனம் 2:9

அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன். ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார்.

நெகேமியா உடனே புறப்பட ஆயத்தமானான். வீட்டுக்குச் சென்று புறப்படுவதற்காக ஆயத்தம் செய்தான் என்று நாம் வேதத்தில் வாசிப்பதில்லை. வேதத்தில் கர்த்தர் தமது வாசலைத் திறக்கும்போதே உள்ளே செல்ல அவன் மிகவும் ஆயத்தமாக இருந்தான்.

இராஜாவோ அதிலும் அதிகம் செய்தான். நெகேமியாவுடன் ராணுவச் சோர்வைக்காரரையும் குதிரைவீரரையும் அனுப்பியிருந்தான். இதுபோலவே பவுலுக்கும் நடந்தது என்று வேதம் கூறுகிறது. பவுல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கர்த்தர் பவுலின் அருகே நின்று, பவுலே திடன்கொள் என்றார். அடுத்தநாள் இரவு பவுல் சிறைச்சாலையினின்று வெளியே விடுவிக்கப்பட்டு வேறு நகரத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டான். அதுமட்டுமன்றி அவனுடன் செல்ல இருநூறு காலாட்களையும், எழுபது குதிரை வீரரையும் இருநூறு ஈ ட்டிக்காரரையும் ஆயத்தம்பண்ணி அனுப்பினான். கர்த்தர் தமது பணிக்காக எந்த ஒரு சேனையைக்கூட பணியவைக்க முடியும் என்று அறிவோமாக (அப்.23:23-24).

வசனம் 2:10

இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது.

நெகேமியா, நெடுந்தொலைவுப் பயணம் செய்து, அதற்குப்பின் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற தேசாதிபதிகளிடத்திற்கு வந்த இராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தான். நெகேமியாவும் அவனுடன் வந்த இராணுவச் சேர்வைக்காரரும், குதிரைவீரரும் எருசலேமில் காணப்பட்டபோது அங்கு ஒரு தீவிர நிலை எற்பட்டது. ஓர் ஆளையும், அவனைக் காக்க அவனோடு வந்த சேனையையும் நீ பார்த்தாயா என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர்.

இந்த நெகேமியாவைப்பற்றிய செய்தி வெகுதுரிதமாக நரமெங்கும் பரவியது. நெகேமியா வந்து, யாதொரு காரியமும் செய்யத் துவங்கு முன்னரே பல எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. இஸ்ரவேலர்களுக்கு உதவிசெய்ய ஒருவன் வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடனே, சன்பல்லாத்து என்பவனும் தொபியா என்பவனுமான இருவர் தீவிரமடைந்தனர். இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்ற செய்தி அவர்களை மிகவும் அலைக்கழித்தது. அவர்கள் இருவரும் யூதர்களின், இஸ்ரவேலரின் விரோதிகளுக்கு நண்பர்கள் என்பவர்களாதலின், யூதர்களுக்கு உதவிசெய்ய ஒருவன் வந்துள்ளான் என்ற செய்தியே அவர்களை நிலைகுலையச்செய்தது. அதுமுதற்கொண்டே சன்பல்லாத்தும், தொபியாவும் நெகேமியாவிற்கு அடிக்கடி தொல்லைகள் கொடுக்கத்தலைப்பட்டனர்.

இன்றைக்கு இந்த நிலைதான் நிலவுகிறது. உலக அரங்கில் யூதர்களுக்குப் பற்பல விரோதிகள் எழும்பியுள்ளனர். அவர்களைப் பலவிதங்களிலும் விரோதிகள் நெருக்கி வருகிறார்கள். இங்கே சன்பல்லாத்தும், தொபியாவும் நெகேமியாவினால் நேரடியாக எந்தவித தொல்லைக்கும் ஆளாக்கப்படவில்லை. அவர்களுடைய பதவிகளையோ அல்லது அவர்களுடைய நண்பர்களின் பதவிகளையோ பாதிக்கும் விதத்தில் நெகேமியா யாதும் செய்யவில்லை. ஆனால் யூதர்களுக்கு உதவி செய்ய வந்துள்ளான் என்ற செய்தியே அவர்களுக்கு வேதனையளிப்பதாக உள்ளது.

வசனம் 2:11-12

நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு, நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகரசோதனை செய்தேன். ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை. நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.

நெகேமியா அமைதலுடன் தங்கியிருந்தான். அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர் என்ற செய்தி அவனைச் சிறிதும் கலங்கடிக்கவில்லை. முதன் முதலில் அவன் மூன்று நாள் காத்திருந்தான். அவன் கர்த்தரிடத்தில் பெற்ற அழைப்பின் கட்டனையை யாரிடமும் கூறவில்லை. அவனே அதைச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமென்று முதலில் விரும்பினான். பெறப்படக்கூடிய அனைத்து உதவிகளையும், தெரிந்துகொள்ளவேண்டிய அனைத்து செய்திகளையும், தங்கு தடையின்றிப் பெறவேண்டும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஆகையால் ஒரு மிருகத்தின்மீது எறிக்கொண்டு சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு இராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்து எருசலேமின் வாசல்களையும் இடிந்துபோன அலங்கங்களையும் பார்வையிட்டுக் கவனித்தான்.

வசனம் 2:13-15

நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன். அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கு, ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன். நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது. அன்று ராத்திரியிலேயே நான் அற்றோரமாய்ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன்.

நெகேமியாவும் அவனுடன் சில உதவியாளர்களான நண்பர்களும் தங்கள் வாகனங்களாகிய மிருகங்களின்மேல் ஏறிக்கொண்டு, குப்பை குவியல்கள் மீது மெல்ல கடந்து வாசல்களைத் தாண்டி நகரத்தைச் சுற்றி வந்தனர். ஓரிடத்தில் அவன் ஏறி வந்த மிருகம் கடந்து செல்லக்கூட வழியில்லாதிருந்தது. அங்கே நெகேமியா காலால் நடந்து அலங்கங்களைப் பார்வையிட்டான். சென்ற சில ஆண்டுகளிலே நடந்த போர்களின் விளைவாக அலங்கங்கள் இடிபட்டு போயிருந்த அவலநிலை நெகேமியாவின் மனதை மிகவும் உறுத்தியிருக்கக்கூடும். இடிந்துபோன அலங்கங்களைப்பற்றியும் இதர பாழ்க்கடிப்புக்களைப் பற்றியும் யாதொரு முனனேற்ற முயற்சியும் செய்யப்படாமையால், அந்த நகரம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. இத்தகைய சீர்கெட்ட அவல நிலைமையைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஆனால் நேரில் பார்ப்பது மிகவும் கடுமையான மனவெழுச்சியை உண்டாக்கவல்லது.

வசனம் 2:16-17

நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது. அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை. பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே. நாம் இனி நிந்தைக்குள்ளாகாதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி,

இதனையெல்லாம் பார்த்துப் பின்பு அவர்கள் செய்யவேண்டிய வேலை எவ்வளவு பெரியதென்பதை அவன் உணர்ந்தான். ஆனால் மனச்சோர்வினாலோ, முடியாமையினாலோ அவன் அந்த வேலையைத் தள்ளிப்போட நினைக்கவில்லை. யூதர்களை ஒரு கூட்டமாகக்கூட்டித் தனது திட்டத்தைக் கூற முற்பட்டான். அவர்களோடு பேசும்போது நான் என்று ஆரம்பிக்கவோ, அல்லது அவர்களைக் கடிந்துகொள்ளவோ, அல்லது அவர்களை அந்த வேலையைச் செய்யுங்கள் என்று ஆலோசனை கூறவோ இல்லை. ஆனால் அன்று இருந்த எருசலேமின் நிலையைமட்டும் கூறி விளக்க ஆரம்பித்தான். எருசலேம் பாழாய்க் கிடக்கிறதைப் பார்க்கிறீர்களே என்று ஆரம்பித்தவன், மேலும் அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறதையும் பாருங்கள் என்று கூறியபின், எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம், வாருங்கள் என்று தனது வழக்கமான பாணியிலேயே, அழைப்பு விடுவித்தான். தேவனாகிய கர்த்தரின் அனைத்துப் பணிகளிலேயும், உதவிடமுன் வருபவர்களின் வழக்கமான அறைகூவலே இது. கட்டுவோம் வாருங்கள் பெரிய இழப்புகள் நமக்குண்டு. பெரிய பின்னடைவுகள் நமக்குண்டு. துயரம் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இருந்தபோதிலும் நாம், ஊக்கத்துடன் எழுந்திருந்து, வேலையில் அமர்ந்து கட்டக்கடவோம். சேர்ந்து கட்டக்கடவோம் என்றான் அவன். மேலும் அவன் ஒரு நல்ல காரணத்தைக் கூறுகிறான். நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு….. என்று காரணம் காட்டும் நெகேமியா அவர்களை அழைக்கிறான். பல ஆண்டுகளாக அவர்களின் அவலநிலையைக் கண்டு இழிவாகவும், எரிச்சலாகவும், இதர நாட்டினர் யூதர்களைப் புறக்கணித்து வந்தனர். இப்போது கட்டப்படவேண்டிய நேரம் நெருங்கி வந்ததை அவர்கள் நன்குணர்ந்து கொண்டனர்.

வசனம் 2:18

என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன். அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.

பின்பு நெகேமியா, தேவ அழைப்பின் வல்லமையை ஜனங்களுக்கு விளக்கினான். என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாய் இருக்கிறதை இராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் என்கிற செய்திகளை நெகேமியா ஜனங்களுக்குச் சொன்னான். இராஜா அவனுக்களித்த பொருள்கள், உதவியாட்கள் பற்றியும் கூறினான். இவைகளை அவர்கள் கேள்விப்பட்டவுடனே அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தி, எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று ஆர்ப்பரித்தார்கள். சிலவேளைகளில் நாம் காண்கிறபடி ஒரு தனியாளின் உற்சாகத்தினால் ஒரு பெரிய வேலை தொடர்ந்து முடிக்கப்படுகிறது. இந்த நல்ல வேலைக்காக அவர்கள் தங்கள் கரங்களை வலுப்படுத்திக் கொண்டனர். நாமும் நம் வேலைகளுக்காக ஒருவர் மற்றவர்களின் கரங்களை வலுப்படுத்துவது எவ்வளவு நலமாயிருக்கும். தளர்ந்த கைகளைத் திடப்படுத்துங்கள்… (ஏசா.35:3, எபி.12:12).

வசனம் 2:19-20

ஓரோனியனான சன்பல்லாத்தும் அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள். அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார். அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம். உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை. உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.

ஆனால் வேலை துவங்கப்படும் தருவாயில் தொல்லைகள் உருவெடுக்க ஆரம்பித்தன. சன்பல்லாத்தும், தொபியாவும், அவர்களோடு மற்றொருவனாகிய அரபியனான கெஷேமும், நெகேமியாவின் தி;ட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டனர். முன்பு அவர்கள் இதே காரணங்களுக்காக அலைக்கழிக்கப்பட்டனர் எனக் கண்டோம். இப்போதோ அவர்கள் செயல்ப்படத் துவங்கினர். முதலில் அவர்கள் பரிகாசம்பண்ணத் துவங்கினர். பிறகு அவர்கள் நிந்தித்து, நீங்கள் செய்கிற காரியம் என்ன? நீங்கள் இராஜாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணப்போகிறீர்களோ? என்று அதட்டிப் பேசினர். இராஜா நெகேமியாவுடன் ஒரு பாதுகாப்புப் படையையே அனுப்பியிருந்த நிலையில் இது தேவையற்ற அற்பத்தனமான கேள்வியாகும்.

ஆனால் அவர்களின் பரிகாசச் சிரிப்பு வேதனையளிப்பதாயிருந்தது. ஒருவனுடைய கோபத்தையும், மற்ற வகைக் கடுமைகளையும் நாம் தாங்கிக் கொள்வது ஒருவேளை எளிதாக இருக்கலாம். ஆனால் பரிகாசம் என்பது எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கக் கூடியதன்றோ! அம் மூவரும் யூதர்களைப் பரியாசம் பண்ணினார்கள். அலங்கங்கள் கட்டப்படுவதென்பது சன்பல்லாத்துக்கும் தொபியாவிற்கும் கோபத்தை உண்டாக்கியதேனோ? தேவனுடைய மனுஷரையும், யூதர்களையும் தாக்குவதற்கென்று செலவிடப்பட்டதான பெரிய பணத்தொகைகளையும், சக்தி முயற்சிகளையும், வரலாற்று வழியாக நாம் பார்க்கும்போது வியப்படையத்தான் செய்கிறோம். ஆனால் தேவனின் விரோதிகள் இத்தகைய தாக்குதல்களைச் செய்ய மிகத் தீவிரமாக இருந்தனர். அவர்களுடைய தீய முயற்சிகள் இருந்துவிட்டுப் போகட்டுமே. பிசாசானவன் நமது சகோதரர்களின் பகைஞன் என்று வேதம் கூறுகிறது. நம்முடைய சகோதரர்மேல் இரவும் பகலும் குற்றம் சுமத்தும் பொருட்டு, என்று சாத்தனைப்பற்றி வெளி 12:10ல் வாசிக்கிறோம். சாத்தான் எப்போதும் அமைதியாக இருக்கமாட்டான். அவன் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், சாத்தானின் நாட்கள் குறைவானது.

நெகேமியா தன்னை எதிர்க்கிறவர்களைக் கர்த்தராகிய தேவனை முன்வைத்துச் சந்திக்கிறான். இராஜாவைப்பற்றி அவன் ஏதும் கூறவில்லை. பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப் பண்ணுவார் என்கிறான் நெகேமியா. பவுலும் ஒருமுறை தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? என்று கூறுகிறான் (ரோ.8:31). நெகேமியா மேலும் அவருடைய (தேவனுடைய) ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம் என்று கூறுகிறான். நெகேமியா, நாங்கள் கட்டாயம் கட்டுவோம் என்கிற உண்மையை அவர்களுக்குத் தெளிவுபட விளக்குகிறான். யூதர்களின் கர்த்தராகிய தேவன்தாம் அவனை அப்பணிக்கு அனுப்பியது குறித்து மிகவும் பெருமைப்பட்டான். சன்பல்லாத்தும், தொபியாவும் எந்த விதத்திலும் அப்பணியில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எந்தவிதமான முன்உரிமையும் சுதந்திரமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் தேவனாகிய கர்த்தருடைய ஊழியக்காரர்களும் அல்லர்.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. பொருளடக்கம்

03. ஜனங்கள் அலங்கங்களைக் கட்டுதல்

00. பொருளடக்கம்

04. பணியும் போராட்டமும்

Recommended

டேவிட் பிரெய்னார்ட்

டேவிட் பிரெய்னார்ட்

Song 151 – Aandavar

Song 182 – Oru

Song 074 – Ennai

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.