3. புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும்
மத் 25:1-13
அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கிப்போனபோது மணவாளன் வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள், கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
இந்த உவமை நாம் கிறிஸ்துவின் வருகையைச் சந்திக்க ஆயத்தமாயிருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது. அவர் திரும்பவும் வருவார். யோவான் 14:1-6.
மத்தேயு 24 ம் அதிகாரத்தில் அவர் திரும்பவும் வருவதற்கான அடையாளங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அவர் தமது ஜனங்கள் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருக்க விரும்புகிறார். ஆனால் சாத்தான் தூக்கிக்கொண்டிருக்கவும், ஆயத்தமில்லாதிருக்கவும் வகை செய்கிறான்.
1. கன்னிகைகள்: வசனம் 25:1-5
(அ) உவமை: வசனம் 1 இது நாம் ஆயத்தமாயிருக்கக் கூறும் ஓர் உவமை.
(ஆ) அடையாளம்: வசனம் 25:2-4
(1). புத்தியில்லாதவர்கள் தீவட்டிகளைக் கொண்டு போனார்கள். தங்கள் பாத்திரங்களில் எண்ணெய் கொண்டு செல்லவில்லை. ஏற்கெனவே தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் ஏராளமாயிருப்பதாக நினைத்துக் கொண்டார்கள்.
(2). புத்தியுள்ளவர்கள் தீவட்டிகளோடுங்கூட தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். கடந்த கால நிலையில் திருப்திப்பட்டு வாளாவிருக்கவில்லை.
(இ) தூக்கம்: வசனம் 25:5. மணவாளன் வரத் தாமதித்த போது எல்லாரும் நித்திரை மயக்கமடைந்திருந்தார்கள். தூங்கி விட்டார்கள். புத்தியுள்ளவர்கள் எண்ணெயைச் சேகரித்து வைத்துவிட்டு தூக்கினார்கள். புத்தியில்லாதவர்கள் எண்ணெய் சேகரித்து வைக்காது தூங்கினார்கள். நீதி 27:1. அவர்கள் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்கினார்கள்.
2. திட்டம்: வசனம் 25:6-9
(அ) ஆயத்தம்: வசனம் 6-7 , நடு இராத்திரியிலே இதோ மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர் கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அவர்கள் தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினர். கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்விதமாய் எப்பொழுதும் ஆயத்த நிலையிலிருக்க வேண்டும். நினையாத நாழிகையில் மனுஷ குமாரனின் வருகை இருக்குமாகையால் நாம் ஆவிக்குரிய ஜீவியத்தில் எப்பொழுதும் ஆயத்த நிலையிலேயே இருக்க வேண்டும். மத்.24:44.
(ஆ) கெஞ்சுதல்: வசனம் 8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம் எண்ணெய்க்காக கெஞ்சினர். கலியாண வைபவத்தில் பங்குகொள்ள மற்றவர்களைச் சார்ந்திருந்தனர். இது சரியல்ல.
(இ) அவர்களின் நிலைமை: வசனம் 9. நீங்கள் விற்கின்றவர்களிடம் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று புத்தியுள்ளவர்கள் சொன்னார்கள். ஒவ்வொருவரும் ஆயத்தமாயிருக்க வேண்டுமே தவிர ஒருவர் இன்னொருவருக்காக ஆயத்தமாயிருக்க முடியாது. ஓருவருக்காக இன்னொருவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓவ்வொருவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மறுபிறப்படைந்திருக்க வேண்டும். யோவான் 3:1-8.
3. பிரச்சனை: வசனம் 25:10-12
(அ) பிரச்சினையான நிலைமை: வசனம் 10- கதவு அடைக்கப்பட்டுவிட்டது. நோவாவின் நாட்களில் ஜனங்கள் ஆயத்தமடைய தேவன் 120 நாள்களைக் கொடுத்தார். ஆதி 6:3- ஒருநாள் கதவு அடைக்கப்படும் என்பதை மறந்துபோகாதிருப்போமாக. நீதி 29:1, ஏசாயா 55:6.
(ஆ) வேண்டுதல: வசனம் 11. எங்களுக்குத் திறக்க வேண்டும் என்று வேண்டினார்கள். புத்தியுள்ளவர்கள் அவ்வேளையில் திறக்க முடியாது.
இ. தண்டனை: வசனம் 12 உங்களை அறியேன் என்ற பதில் கடினமானதோர் தண்டனையாகும். மறு பிறப்படைந்தவர்கள் மாத்திரமே பிரவவேசிக்க முடியும் . யோவான் 3:1-8, மாற்கு 16:16.
4. ஆயத்தம்: வசனம் 25:13
வுpழித்திருந்து ஆயத்தமாயிருங்கள்!
(அ) நற்குணமுள்ளவர்களாயிருக்க விழிப்பாயிருங்கள்: 1கொரி7:1. நற்குணமுள்ள கிறிஸ்தவர்களாயிருக்க வாழ்நாள் முழுவதும் விழிப்பாயிருக்க வேண்டியதுள்ளது.
(ஆ) அர்ப்பணம் செய்வதிலிருந்து விலகிவிடாதீர்கள:; -ரோமர் 12:1-2- காலேப்பு 85 வயதுள்ளவனாயிருக்கையிலும் தன்னைக் கர்த்தருக்கு அர்ப்பணம் செய்வதிலிருந்து விலகிவிடவில்லை. கர்த்ரையே பின்பற்றினான்- உபா 1:36- நாம் முழுவதுமாய் அவரிடம் நம்மை அர்ப்பணம் செய்வதையே கர்த்தர் விரும்புகிறார்.
(இ) உங்கள் சிநேகிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்: 2.கொரி1:17. நீங்கள் உங்கள் சிநேகிதரின் தன்மையை உடையவர்களாயிருப்பீர்கள். எனவே நீங்கள் தெரிந்துகொள்ளும் சிநேகிதரைக் குறித்து விழிப்பாயிருக்க வேண்டும். ஆமோஸ் 3:3
நீங்கள் விழிப்பாயிருக்கிறீர்களா? உங்களிடம் போதுமான அளவு எண்ணெய் உள்ளதா? எண்ணெய் பரிசுத்த ஆவியானவரைக் குறிப்பிடுகிறது. நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட வேண்டுமென பவுல் கூறுகிறார். எபேசி. 5:18. கடந்தகால அனுபவத்தை அல்லது ஆசீர்வாதத்தைச் சார்ந்திராதேயுங்கள். தினமும் தேவனோடுள்ள உறவைப் புதுப்பித்துப் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்ளை ஆளுகை செய்தால் நீங்கள் எப்போதும் ஆயத்தமாயிருப்பீர்கள். பரிசுத்த ஆவியானவரோடு நடவுங்கள். பரிசுத்த ஆவியானவரோடு வாழுங்கள்.












