- ஐசுவரியவானும் தரித்திரனும்
லூக்கா 16:19-31
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வihக்கும் வழங்கிவந்தது, அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள். வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான். ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான், அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
மரணத்திற்குப் பின்பு நாம் செல்ல வேண்டிய இடம் எது? பாதாளமா? பரலோகமா?
சங் 9:17 – தேவனை மறக்கிறவர்கள் செல்லுமிடம் நரகம்.
தானி. 12:2 – சிலருக்கு நித்திய தண்டனை உண்டு.
வெளி 21:8 – எரிகிற கடலில் பங்கடைவோர் யார் யார் என்பதை இவ்வசனம் குறிப்பிட்டுச் சொல்லுகிறது.
வெளி 14:11, 20:10 – நரகத்தில் ஓய்வே இல்லை.
- இவ்வுவமையில் வரும் நபர்கள்: வசனம் 16:19-21
(அ) ஐசுவரியவான்: வசனம் 19 – இவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்தவன் என்று இயேசு குறிப்பிடுகிறார். (சிலர் அவன் பெயர் டைவ்ஸ் என்கின்றனர். டைவ்ஸ் என்ற லத்தீன் வார்த்தைக்குச் செல்வந்தன் என்று பொருளாம்)
(ஆ) தரித்திரன்: வசனம் 20 – இவன் ஐசுவரியவானின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளால் தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான். பருக்களுக்கான மருந்து வாங்க பணமில்லை. நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கின.
- இவ்வுவமையிலுள்ள சில குறிப்புக்கள்: வசனம் 16:22-26
(அ) பரலோகம்: வசனம் 22. அந்தத் தரித்திரன் மரித்து தேவ தூதரால் ஆபிரகாம் என்னும் நீதிமானின் மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான். ஐசுவரியவாவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.
யாவரும் மரிக்க வேண்டியதே – எபி.9:27
(ஆ) நரகம்: வசனம் 23 – ஐசுவரியவான் பாதாளத்திற்குச் சென்றான். அவன் தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
(இ) உதவி நாடுதல்: வசனம் 24 – ஐசுவரியவான் உதவி நாடினான். தன் நாவைக் குளிரப்பண்ணக் கூறினான். மாற்கு 9:44
(ஈ) உதவமுடியாத நிலமை: வசனம் 25 – இரண்டாம் தருணம் கிடைப்பதில்லை.
(உ) பயங்கரநிலை: வசனம் 26 – நரகத்திற்குச் சென்றவர்கள் நரகத்தின் பயங்கரத்திலிருந்து வெளிவர முடியாது. இப்பொழுதே கிறிஸ்துவை அண்டிக் கொள்ளுங்கள்.
- உவமையில் வரும் ஜெபம்: வசனம் 16:27-31
(அ) வேதனை: வசனம் 27-28 – அதிக வேதனையுள்ள அந்த இடத்திற்கு தனது சகோதரர்கள் வராதிருக்க அவன் செய்யுமாறு வேண்டுகிறான். வெளி 20:10, 14:11.
(ஆ) தீர்க்கதரிசிகள்: வசனம் 29 – ஆபிரகாம் அவனை நோக்கி, அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு. அவர்களுககு அந்தச் சகோதரர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
(இ) கோரிக்கை: வசனம் 30 – மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போகவேண்டும் என்பது அவனது வேண்டுதல்.
(ஈ) உண்மை நிலை: வசனம் 31 – ஐசுவரியவானின் சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளும் செவி கொடாமற்போனால் மரித்தோரிலிருந்து ஒருவன் போனாலும் செவிகொடுக்க மாட்டார்கள்.
நரகம் உண்டு – பரலோகம் உண்டு
குறிப்பு
- இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தைகள் – யேவான் 14:1-3
- மனிதரின் கைவேலை இல்லாமல் கட்டப்பட்ட பரமவீடு – 2.கொரி.5:1
- தேவன் கட்டி உண்டாக்கின நகரத்திற்கு ஆபிரகாம் எதிர்பார்த்திருந்தார் – எபி.11:10.
- மரணத்தின் பின் கிறிஸ்துவோடு இருப்போம் என்றார் பவுல் – 2.கொரி.5:8
- புதிய நகரம் பற்றிய வெளிப்பாடு – வெளி 22:1-7











