- பந்தியில் முதன்மையான இடம்
லூக்கா 14:8-11
ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே, உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான், அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு, அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப்பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும். தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதihயாகிலும் உன் சகோதரihயாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாihயாகிலும் அழைக்கவேண்டாம், அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனihயும் சப்பாணிகளையும் குருடihயும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய், அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள், நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
கிறிஸ்தவனின் முதல் விரோதி சுயநலம். சாத்தான் சுயநலத்தைத் தூண்டி கிறிஸ்துவுக்கு எதிராக செயல்படவைக்கின்றான். 1. சுயநலம் தேவசித்தத்தை எதிர்க்கிறது. 2. சுயநலம் நம்மை ஆண்டுகொள்வதால் தேவனின் ஆட்சி நடைபெற முடியாதவாறாகிறது (யோவான் 2:15-17). கிறிஸ்து நமது கர்த்தரும் எஜமானாருமாயிருந்தால் சுயநலம் மறைந்து போகும். நாம் இரண்டு எஜமான்களுக்கு (சுயநலத்திற்கும் கிறிஸ்துவுக்கும்) ஊழியம் செய்ய முடியாது (மத்.6:24).
- சுயநலம்: வசனம் 14:8
(அ) தேடுதல்: சுயநலம் அடிப்படையில் நன்மையைத் தேடுதல் கூடாது. புவுல் கூறுவதைப்போன்று நான் அல்ல கிறிஸ்துவே என்ற எண்ணம் உதயமாக வேண்டும். கலா.2:20.
(ஆ) பங்கு கொள்ளுதல்: வசனம் 8 – கலியாண விருந்தில் பங்குகொள்ளும் ஒருவன் முதன்மையான இடத்தை விரும்பும்போது வெட்கமடைய நேரிடும். நம்மைத் தாழ்த்த வேண்டும். முதன்மையான இடத்தை நாடுதல் சுயநலம்.
- வெட்கம்: வசனம் 14:9 (அ) வெட்கமடைதல்: வசனம் 9 – உன்னையும், அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து அவனுக்கு நீ உட்கார்ந்திருக்கும் இடத்தை கொடுக்கக் கூறினால் நீ வெட்கத்தோடு செல்ல வேண்டியதிருக்கும். கலா.2:20
தன்னைப் பொருட்டாக எண்ணுகிறவன் நிலை இப்படியே. நான் சிலுவையிலறையப்படவேண்டும்.
(ஆ) பலன்: வசனம் 9 – தாழ்ந்த இடத்தில் உட்கார்ந்தால் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவாய்.
- அழைத்தவனின் அக்கறை: வசனம் 14:10 (அ) தாழ்மையைத் தெரிந்து கொள்ளுதல்: தாழ்மையுடன் தாழ்ந்த இடத்தில் உட்காரப் பழகுதல் தேவை. இதில் சுயம் இல்லை. லூக்கா 9:23.
(ஆ) பெருமை: பெருமையாயிருந்தால் தாழ்ந்த இடம் தேடும் மனநிலை இருக்காது. சுயநலம் மிகுந்திருக்கும்.
தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்ந்து நிற்கிறார். 1.பேதுரு 5:5.
(இ) உயர்த்தப்படுதல்: தாழ்மையுள்ளவர்கள் உயர்த்தப்படுவார்கள்.
யாக் 4:10 – கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள். அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
- ஆவிக்குரிய தன்மை: வசனம் 14:11 (அ) சாத்தானின் பெருமை: பெருமை சாத்தானுக்குரியது. சாத்தான் தன்னைத் தேவனுக்கு மேலாக உயர்த்தினான். பரலோகத்தை இழந்தான். ஏசாயா 14:13. (ஆ) சுயகௌரவம்: சுயகௌரவம் வேண்டாம். தாழ்மையே அவசியம். மாற்கு 10:35-37. யாக்கோபும் யோவானும் கிறிஸ்துவின் வலது பாரிசத்தை விரும்பினார்கள். தங்களுக்கு வலது பாரிசத்தில் உட்காரும் தகுதி உண்டென்று எண்ணினார்கள். இதனை இயேசு விரும்பவில்லை.
(இ) உண்மையான கௌரவம்: வசனம் 11 – தன்னைத் தாழ்த்துகிறபோதுதான் உண்மையான கௌரவம் கிடைக்கிறது. தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
கிறிஸ்துவுக்கு நீங்கள் முதன்மையான இடமளித்தால் உங்களில் சுயநலம் இருக்காது. அவரைத் திருப்தி செய்யமுயலுங்கள். அவருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள். தாழ்மைக்கு இவ்வுலகிலும் இனிவரும் வாழ்விலும் நற்பலனுண்டு.












