- மன்னன் மகனின் திருமணம்
மத்தேயு 22:1-14
இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரih அனுப்பினான், அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரih அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொளுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள். மற்றவர்கள் அவன் ஊழியக்காரihப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகih அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரih நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவihயும் கலியாணத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவihயும் கூட்டிக்கொண்டு வந்தார்கள், கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான், அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரih நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்திற்கு உதாரணமாக இந்தக் கலியாணத்தை இயேசு கூறியுள்ளார்.
- அழைப்பு அனுப்புதல்: வசனம் 21:1-7
(அ) உவமை: வசனம் 1-3 – அநேகர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய அழைக்கப்பட்டார்கள். சிலர் மாத்திரமே அதனை ஏற்றுப் பின்சென்றார்கள். மத்.7:13-14, யோவான் 6:66.
(ஆ) ஆயத்தம்: வசனம் 4 – பெரிய விருந்து ஆயத்தம் பண்ணப்பட்டது. கர்த்தர் நமக்கு பரலோகவீட்டை ஆயத்தம் செய்கிறார். யோவான் 14:1-3. சிலர் அவரது அழைப்பை ஏற்றுக்கொள்வார். சிலர் அழைப்பை அசட்டை செய்வர். மாற்கு 16:16.
(இ) பிரச்சனை: வசனம் 5-6 – அழைப்பு அனுப்பப்பட்டது. அநேகர் அசட்டை பண்ணினார்கள். கிறிஸ்துவையும் இவ்வண்ணமே அசட்டை செய்கின்றனர். யோவான் 1:11-12. இன்றும் இப்பிரச்சனை உள்ளது.
(ஈ) தண்டனை: வசனம் 7 – கொலை பாதகர்கள் அழிக்கப்பட்டார்கள். அழைப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களின் பரிதாப முடிவு. இதனை வெளி 20:11-15, 21:8 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளவைகளோடு ஓத்துப்பாருங்கள்.
- வழிச்சந்தி மக்களுக்கு அழைப்பு: வசனம் 21:8-10 (அ) அபாத்திரராகுதல்: வசனம் 8 – அழைக்கப்பட்டவர்களோ அபாத்திரரானார்கள். இவ்விதமே அழைப்பை அசட்டை செய்யும் யாவரும் இரட்சிப்பை இழந்து போவோம். நாம் நீதியைத் தேட வேண்டாம். இரக்கத்தை நாடுவோம். ரோமர் 3:23, 6:23.
(ஆ) கட்டளை: வசனம் 9 – வாருங்கள் என்பது கட்டாய அழைப்பு. அது ஒரு கட்டளை. யோவான் 15:16, மாற்கு 16:15.
அழைப்பு கொடுத்து தீமையிலிருந்து ஒருவனை மீட்காவிட்டால் தண்டனை நமக்கே. எசேக்.3:16.
(இ) முற்றுப்பெறுதல்: வசனம் 10 – நல்லோருக்கும், பொல்லாருக்கும் அழைப்பு. அனைவரும் இரட்சிக்கப்படவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். யோவான் 3:16. ஒருவராவது கெட்டுப்போக அவர் விரும்புகிறதில்லை. மனந்திரும்பி அவரிடம் வருவோரை அவர் ஏற்றுக்கொள்ளுகிறார். 2.பேதுரு 3:9, ரோமர் 10:13, யோவான் 6:37.
- நிர்விசாரம்: வசனம் 21:11-14
(அ) பாவம்: வசனம் 11 – கலியாண வஸ்திரமில்லாத ஒருவன் அங்கு இருந்தால் அவன் நிர்விசாரமானவன்.
கிறிஸ்துவின் நீதியாகிய ஆடையை நாம் அணிந்து கொள்ள நிர்விசாரமாயிருக்கக் கூடாது. நமது நீதி தேவனின் பார்வையில் கந்தை என்பதையும் மறக்கலாகாது. ஏசாயா 64:6. யோவான் 14:6. கிறிஸ்துவே வழி. அவரது அழைப்பிற்கு நிர்விசாரமாயிருப்பது பாவம்.
(ஆ) பேசமுடியாத நிலை: வசனம் 12 – கலியாண வஸ்திரமில்லாதிருந்தவன் பதில் பேச முடியாத நிலையிலிருந்தான்.
தேவனின் முன்னிலையில் நாம் நிறுத்தப்படும்போது பதில் பேச முடியாதவர்களாயிருப்போம். நாம் காரணம் கூறினாலும் அதனால் பயனில்லாது போய்விடும். ரோமர் 2:1.
(இ) கடினமான நிலை: வசனம் 13 – கையும் காலுமாய் கட்டப்பட்டு அழுமையும் பற்கடிப்பும் நிறைந்த இடத்தில் போடப்பட்டுவது கடினமான நிலையே. வெளி 21:8.
(ஈ) தெரிந்து கொள்ளுதல்: வசனம் 14 – அழைக்கப்பட்டவர்கள் அநேகர். அவர்கள் நிர்விசாரமாயிருந்தமையால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலரே.
அழைப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு இணங்குகிறவர்களுக்கு மட்டுமே மீட்பு (இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு மட்டுமே இரட்சிப்பு) நித்திய ஜீவன் உண்டு. யோவான் 3:16.
தேவ அழைப்பை ஏற்று செயல்பட சமயம் இல்லையென்று சொல்லாதே. நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வெளி 20:11-15. இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு நியாயத்தீர்ப்பு இல்லை. யோவான் 5:24).
மரணம் நெருங்குகிறது – எபி 8:27. அதன்பின் நியாயத்திர்ப்பு ஆரம்பிக்கிறது. மத் 6:33,22:37, ரோமர் 12:1-2, நீதி 3:5-6.











