- இரு குமாரர்கள்
மத்தேயு 21:28-32
ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள், மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான், ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான், அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார், அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை, ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள், அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.
- உவமை: வசனம் 21:28-30
(அ) கட்டளை: வசனம் 28 – மூத்த குமாரனிடம் தகப்பன்: மகனே, நீ போய் இன்றைக்கு திராட்சத்தோட்டத்தில் வேலை செய் என்று கட்டளையிட்டான். கர்த்தர் நம்மூலம் அவரது திட்டத்தை நிறைவேற்றுகிறார். நாம் அவரது கரங்கள். அவர் கட்டளையிடுவதை நாம் நிறைவேற்றவேண்டும். நாம் அவரது பிள்ளைகள் – யோவான் 1:12, 15:16, மாற்கு 16:15.
(ஆ) மறுப்பு: வசனம் 29 – அவன் மாட்டேன் என்றான். பின்பு மனஸ்தாபப்பட்டுப் போனான். இவ்விதம் தவறை நாமும் செய்வதுண்டு. எனினும் தவறை உணர்ந்து செயல்படும்போது நமதாண்டவர் மகிழ்ச்சியடைகிறார் – யாத்.20:12, எபேசி.6:1-3.
(இ) கீழ்ப்படிவதுபோல் காண்பித்தும் கீழ்ப்படியாதவன்: வசனம் 30. இளையவன் போகிறேன் என்று சொல்லியும் போகவில்லை.
உதட்டளவில் கர்த்தருக்குக் கீழ்படிகிறவர்கள் போல் காண்பித்துக் கொள்ளுகிறவர்களைப்பற்றி ஏசாhயா 29:13ல் பார்க்கிறோம் – யோவான் 14:15.
- உத்தமம்: வசனம் 21:31
(அ) கீழ்படிதலுள்ள மகன்: மூத்தவன் தவறை உணர்ந்தான். கீழ்ப்படியாதிருப்பது தவறு என்பதை அறிந்து கொண்டான். எனவே மனஸ்தாபப்பட்டுச் சென்றான். இவனே கீழ்படிதலுள்ள மகன்.
நம் நிலைமை என்ன? தவறுகளைத் தவறு என்று ஒப்புக்;கொண்டு உணர்வடைகிறோமா?
(ஆ) கீழ்படிதலுள்ள பாவிகள்: வசனம் 31 – கர்த்தரிடமாய் திரும்புகிற ஆயக்காரரும் பாவிகளும் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் – லூக்கா 18:11-12. பரியாசக்காரர், மாயக்காரர், விபச்சாரக்காரர் போலல்லாதிருந்தும் கர்த்தரிடம் திரும்பாதவர்கள் உத்தமர்கள் அல்ல. மார்க்க பிரகாரமாய் எல்லாச்சடங்குகளையும் நிறைவேற்றுகிறவர்களிடமிருந்தே இயேசுவுக்கு எதிர்ப்பு வந்தது. மற்றவர்கள் அவரை எதிர்க்கவில்லை.
- இரட்சிப்பு: வசனம் 21:32
விபச்சாரக்காரர்களும் வேசிகளும் அவரை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் மத வைராக்கியமுள்ள பரிசேயர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்று மனிதர் ஏன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். மனிதர் யாவரும் இன்னும் ஏன் அவரை ஏற்றுக்கொள்ளாதிருக்கின்றனர்.
(அ) இரட்சகர் தேவை என்பதை மறுப்பதால், இரட்சிப்பை அடைய முடியாதவாறாகிவிடுகிறது ரோமர் 3:10,23
(ஆ) எல்லாரும் வழிவிலகி கெட்டுப்போனார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாதிருப்பதால் இரட்சிப்பை அடைய முடியாதவாறாகிவிடுகிறது – ஏசாயா 53:6.
(இ) சாத்தான் சத்தியத்திற்குக் கண்களைக் குருடாக்கிப் போட்டுள்ளான் – 2கொரி 4:4.
நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறீர்களா? இரட்சிப்பை அடைந்து கொள்வதைப்பற்றி உங்கள் தீர்மானம் என்ன? கிறிஸ்துவின் போதனையைச் சாதனையாக்குவதில் உங்கள் நடைமுறை என்ன? கருத்தாய் தினசரி கர்த்தரைத் தியானிக்கிறீர்களா? உங்களுக்கும் தேவனுக்குமுள்ள உறவு எப்படி இருக்கிறது?
தேவனுக்குக் கீழ்படிகிறீர்களா? கீழ்படிகிறேன் என்று சொல்லியும் செய்யாதிருக்கிறீர்களா? மூத்தவனைப் போலிருக்கிறீர்களா? இளையவனைப்போலிருக்கிறீர்களா?









