- விழித்திருக்கும் ஊழியக்காரர்
லூக்கா 12:34-40
உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். உங்கள் அihகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அihகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
விழித்திருக்கிறவர்களால் இருக்கிற ஊழியக்காரர்கள்மேல் தேவன் பிரியமுள்ளவராயிருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பவும் வருவார் என்கிற தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. எனவே விழித்திருத்தல் அவசியம்.
- எஜமானுக்கு ஆயத்தமாயிருத்தல்: வசனம் 12:35-36
(அ) ஆயத்த நிலை: வசனம் 35 – அரைகள் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். விளக்குகள் எரிந்து கொண்டிருக்க வேண்டும். இவ்வித ஆயத்தநிலை தேவை. மத்.24:44.
(ஆ) ஏற்றுக்கொள்ளுதல்: வசனம் 36 – அவர் தட்டும்போது திறந்து ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
(1) அசதியாயிருக்கக்கூடாது: புசிப்பும் குடிப்பும் உலகக் கவலையுமாயிருந்தால் அசதி ஏற்பட்டுவிடும். லூக்கா 21:34
(2) விசுவாசித்தோடிருக்கவேண்டும்: சீக்கிரமாய்வருவார். அதுவரை விசுவாசத்திலிருந்து விழுந்துவிடக்கூடாது. லூக்கா 18:8.
- எஜமான் திரும்பி வருதல்: வசனம் 12:37
(அ) ஆயத்தம்: வசனம் 37 – எஜமான் திரும்பவும் வருவது நிச்சயம். அதுவரை விழித்திருக்கிறவர்களாக காணப்படுகிற ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்.
அவர் வரும் நாளையும் நேரத்தையும் அறியோம் – மத்.25:13.
(ஆ) மகிழ்ச்சி: வசனம் 38 – விழித்திருப்பவர்கள் கலியாண விருந்தில் பங்கு பெற்று மகிழ்ச்சியடைவார்கள்.
மறுபிறப்படைந்த அனைவரும் கிறிஸ்துவின் மணவாட்டியாவார்கள் – வெளி 22:1-14.
- எஜமானோடு சந்தோஷப்படுதல்: வசனம் 12:38
(அ) அவர் வருவார் நிச்சயம் – எந்த நாழிகையிலும் வருவார்.
நடு இரவிலும் வருவார் – யோவான் 14:1-3
(ஆ) அவர் வரும்போது சந்தோஷம் ஏற்படுதல்: வசனம் 38 – அவர் எப்போது வந்தாலும் ஆயத்தமாயுள்ள அவரது ஊழியக்காரர்கள் சந்தோஷமடைவர். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். இனி மரணமுமில்லை. துக்கமுமில்லை. வருத்தமுமில்லை-வெளி 21:4.
- எஜமான் திரும்பவும் வருதல்: வசனம் 12:39-40
(அ) வரும் நேரம் நிச்சயமில்லை: வசனம் 39 – திருடன் இன்ன நேரத்தில் வருவான் என்று வீட்டெஜமான் அறியான். அதுபோல அவர் இன்ன நேரத்தில் வருவார் என்பதை ஒருவரும் அறியார். அந்த நாளையும் நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். மத்.24:36
(ஆ) எதிர்பாராதவாறு வருதல்: வசனம் 40 – நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார். விழித்திருக்கும் ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்.
நீங்கள் உண்மையான ஊழியக்காரர்கள்தானோ? உண்மையான ஊழியக்காரர்கள் நிச்சயமாய் விழித்திருப்பார்கள். அவர்கள் பாக்கியவான்களெனப்படுவார்கள். மின்னல் கிழக்கில் தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும். மத்.24:34.











