- விவேகமுள்ள ஊழியக்காரனும் தண்டனை அனுபவிக்கிற ஊழியக்காரனும்
மத்தேயு 24:42-51
உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார், ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்னமயும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வேலைக்காரih அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
இந்த உவமையில் கிறிஸ்துவின் வருகையைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அவர் தாம் சொன்னபடியே திரும்பவருவார். யோவான் 14:1-3. புதிய ஏற்பாட்டில் 300க்கு அதிகமான தடவைகள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறிப்பிடப்பட்டுள்ளது. எழுபது தடவைகள் மனஸ்தாபத்தைப்பற்றியும், பத்தொன்பது தடவைகள் ஞானஸ்நானத்தைப்பற்றியும், ஆறு தடவைகள் திருவிருந்தைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் புதிய ஏற்பாட்டில் 25 வசனங்களுக்கு ஒருமுறை அவரது மறுவருகை கூறப்பட்டுள்ளது. மத்தேயு 25ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன.
- அவரது வருகைக்கு ஆயத்தம்: வசனம் 24:42-44
(அ) விழித்திருத்தல்: வசனம் 42 – கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களைப்போன்று ஆவிக்குரிய இருளில் இல்லை. எனவே நாம் விழிப்பாயிருக்க வேண்டும் – 1.தெச.5:6.
(ஆ) எதிர்த்து நிற்றல்: வசனம் 43 – திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று அறிந்திருந்தால் வீட்டெஜமான் தன் வீட்டை கன்னமிடவொட்டான். அதுபோல் நாமும் சாத்தானின் தாக்குதலுக்கு விழித்திருந்து எதிர்த்து நிற்க வேண்டும்.
(1) பாதுகாப்பு: உலகிலுள்ள சாத்தானைவிட நம்மிலுள்ள தேவன் பெரியவர் என்பதையும் அவர் பாதுகாக்கிறார் என்பதையும் மறந்துவிடலாகாது. 1.யோவான் 4:4.
(2) வல்லமை: ரோமர் 8:31 – தேவன் நம் பட்சத்திலிருந்தால் நம்மை எதிர்ப்பவன் யார்? அவர் சர்வ வல்லமையுள்ளவர்.
(இ) காத்திருத்தல்: வசனம் 44 – ஆயத்தத்துடன் காத்திருக்க வேண்டும். யோவான் 3:1-8, 2.கொரி.7:1, 1.யோவான் 2:15-17.
- அவரது வருகையைப்பற்றிய வாக்குறுதி: வசனம் 24:45-47
(அ) பொறுப்புணர்ச்சி: வசனம் 45 – ஏற்ற வேளையில் தன் வேலைக்காரனுக்குப் போஜனம் கொடுத்து விசாரிக்கிறவன் பொறுப்புணர்ச்;சியுள்ளவன்.
நாம் கிறிஸ்துவின் கட்டளை நிறைவேற்றுவதில் பொறுப்புணர்ச்சியுடையவர்களாயிருக்கிறோமா? மாற்கு 16:15, யோவான் 15:16.
(ஆ) மகிழ்ச்சி: வசனம் 46 – பொறுப்புணர்ச்சியோடு கட்டளைகளை நிறைவேற்றுகிறவர்கள் கிறிஸ்துவரும்போது மகிழ்ச்சியடைகிறார்கள். சங்.143:10. கர்த்தருக்கு நம்மை ஒப்படைத்து பணியாற்றும் போது மகிழ்ச்சி உண்டாகிறது ரோமர் 13:1-2, அப் 9:6, 1.யோவான் 2:17.
(இ) வெகுமதி: வசனம் 47 – பொறுப்புணர்ச்சியோடு கட்டளையை நிறைவேற்றுகிறவர்களாக மகிழ்ச்சியடைவதோடு எஜமானிடம் வெகுமதியும் பெறுகின்றனர்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:12இல் அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு அவர் அளிக்கும் பலன் கிடைக்கிறது. மல்.3:16.
- அவர் வரும்போது தண்டனையும் வருதல்: வசனம் 24:48-51
(அ) அசதி அல்லது சோம்பேறித்தனம்: வசனம் 48 – தன் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று அசதியாயிருக்கும் ஊழியக்காரன்.
முன்னர் நோவாவின் கூற்றுக்குச் செவிகொடுக்க மறுத்தவர்கள் என்ன நிலையானார்கள் என்பதை நாமறிவோம். அசதியாயிருந்தார்கள். அழிவுக்குத் தப்பவில்லை.
கிறிஸ்துவின் இணர்டாம் வருகையைக் குறித்து அசதியாயிருப்பவர்கள் நிலைமையும் அதுவே.
(ஆ) பாவத்தில் நிலைத்திருத்தல்: வசனம் 49 – அவர்கள் அசதியாயிருப்பதோடு பாவத்தில் நிலைத்திருக்கின்றனர்.
சீனாய் மலையிலிருந்து மோசே வரப்பிந்தியபோது அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள் தங்கள் இஷ்டப்படி நடக்கலாயினர் – யாத்.31:4-28. இதுபோன்றே கிறிஸ்து வரத்தாமதிக்கும் என்றெண்ணி கலக குணமுள்ளவர்களாகின்றனர்.
(இ) தண்டனையடைதல்: வசனம் 50-51 – அப்படிப்பட்டவர்கள் அவர் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும் வரும்போது தண்டனைக்குத் தப்பமாட்டார்கள். அவர்கள் கடினமாய்த் தண்டிக்கப்பட்டு மாயக்காரரோடு பங்கு பெறுவர் அழுகையும் பற்கடிப்புமே அவர்களது பங்கு அப்.1:6-7, மத்.24:44.
கிறிஸ்துவின் வருகைக்கு இன்னும் ஏராளமானோர் ஆயத்தமாகவில்லை – மத்.7:21-23. சாத்தான் நம்மை ஆயத்தமற்ற நிலையி; நீடித்திருக்க வகை செய்வான். கிறிஸ்துவை நோக்கிப் பார்க்காதிருக்கவும் வகை செய்வான் – 1.தெச.4:13-18. எனவே விழிப்பாயிருப்போம்.
விவேகமுள்ள ஊழியக்காரன் வெகுமதி பெறுவான். அசதியான ஊழியக்காரன் தண்டனைக்குத் தப்பான்.












