- காணாமற்போன ஆடு
லூக்கா 15:1-7
சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதihயும் அயலகத்தாihயும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்த உவமையில் கூறப்பட்டுள்ள மேய்ப்பன் காணமற்போன ஓர் ஆட்டிற்காக அதிக கரிசனை எடுத்துக்கொள்ளுகிறதைக் காண்கிறோம். தன்னிடமுள்ள மற்ற ஆடுகளைவிட காணாமல்போன ஆட்டினிடம் அதிக அன்பு பாராட்டி அதனைத் திரும்பக்கொண்டுவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டான்.
இவ்வுவமை சபையில் இருந்து பின்வாங்கிப்போனவர் மீது அதிக கரிசனை கொண்டு, மீண்டும் அவர்களைச் சபை என்னும் மந்தையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இரட்சிப்படையாதவர்களைப் பற்றியும் சுவிசேஷத்தைக் கேட்டிராவதர்களைப் பற்றியும் சபை அதிக வாஞ்சை கொண்டு அவர்களைக் கிறிஸ்துவின் பிள்ளைகளாக்கிட முயற்சிக்கவேண்டும். மாற்கு 16:15.
- கிறிஸ்துவைப் பற்றிய குற்றச்சாட்டு: வசனம் 15:1-2
(அ) வாஞ்சை: வசனம் 1 – எல்லாவித மக்களும் இயேசுவிடம் வாஞ்சையோடு வந்து உபதேசம் கேட்டனர். அநேகர் தங்களில் உள்ள நோய் தீர்ந்திட அவரிடம் வந்தனர். அவரிடம் வந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருந்தது. அந்தத் தேவை சந்திக்கப்பட வந்தனர்.
இயேசுவோ யாவரும் மனந்திரும்பிட அழைக்க வந்தார். இழந்துபோனதைத் தேடி கண்டுபிடிக்க வந்தார். இழந்துபோனவர்களை மீட்டுக்கொள்ள வந்தார் – மத்.18:11.
(ஆ) குற்றச்சாட்டு : வசனம் 2: சுயநீதியுடைய பரிசேயரும் வேதபாரகரும், இயேசு பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்று குற்றச்சாட்டினார்கள். அவர் அவர்கள் பாவங்களைச் சுத்திகரித்தார்.
(1) அவர் எல்லா ஜனங்களையும் நேசிக்கிறார். யோ.3:7
(2) அவர் எல்லா ஜனங்களுக்காகவும் மரித்தார் 2.பேது.3:9
(3) அவர் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறார் 1.யோ.1:7-92.
- அவர் சொன்ன உவமை: வசனம் 15:3-6 (அ) உவமை: வசனம் 3-4 – ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து அவைகளில் ஒன்று காணாமற்போனால் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரிவான். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் – யோவான் 3:17
(ஆ) பாதுகாப்பு: வசனம் 5. ஆட்டைக் கண்டுபிடித்தபின் சந்தோஷப்படுவதோடு அதற்கு பாதுகாப்பும் அளிக்கிறான்.
அதுபோல் ஆண்டவரும் காணாமற்போனவர்கள் மீது (தொய்துபோனவர்கள்மீது) மனதுருகி அவர்களைப் பாதுகாக்கிறார் – மத்.9:36.
(இ) கண்டுபிடித்ததினால் ஏற்படும் சந்தோஷம்: வசனம் 6. காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடித்ததும் மேய்ப்பன் சந்தோஷமடைகிறான். கிறிஸ்துவின் மந்தையில் இல்லாதவர்கள் கிறிஸ்துவின் மந்தையில் வரும்போது நாம் அதிக மகிழ்ச்சியடைய வேண்டும்.
கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கம்பீரத்தோடு அறுப்பார்கள் – சங்.126:5, யோ.4:36.
- மனந்திரும்பி கிறிஸ்துவிடம் வருதல்: வசனம் 15:7 – கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது பரலோகத்தில் சந்தோஷம் ஏற்படுகிறது. நாமும் சந்தோஷமடைய வேண்டும். (அ) தேவமன்னிப்பு: மனந்திரும்பும்போது தேவ மன்னிப்பு கிடைக்கிறது. மனம் திரும்பியவன் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாகிறான் – யோவான் 3:1-8, 2.கொரி.5:17.
(ஆ) தேவனின் முன் ஏற்பாடு: கிறிஸ்து மனிதனின் பாவத்திற்காக பாடனுபவிப்பார் என்ற முன்னேற்பாட்டை முன்னரே ஏசாயா தீர்க்கதரிசி கூறியுள்ளார் – ஏசாயா 53:5-6, மத்தேயு 27 ஆம் அதிகாரத்தை வாசியுங்கள்.
(இ) தேவனின் திட்டம்: கிறிஸ்துவே பரலோகத்திற்கு வழி. அந்த வழியல்லாது வேறு வழியில்லை. இதுவே தேவ திட்டம் – யோவான் 14:6, அப்.4:12.
(ஈ) தேவவல்லமை: அவரது வல்லமை பாவத்தைக் கழுவுகிறது – எபி.7:25.
நாம் தேவனை நெருங்க நெருங்க காணமற்போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென வாஞ்சை வளரும். அவரது மந்தையில் அநேகரைச் சேர்க்கும் வாஞ்சை ஏற்படும். எனவே தேவனை அதிகமாதிகமாய் நெருங்கிச் சேர்வோம்.









