- கோதுமையும் களைகளும்
மத்தேயு 13:24-30, 37-43
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திihபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள், கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன், நிலம் உலகம், நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர், களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர், அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு, அறுப்பு உலகத்தின் முடிவு, அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
இந்த உவமை கோதுமையையும் (கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களையும்) களைகள் (பாவிகளையும்) பிரிப்பதாய் உள்ளது. தேவன் தம்மை நேசிப்பவர்களுக்கு நற்பலனிளிக்கிறார். நித்திய வாழ்வளிக்கிறார். அவரைப் புறக்கணிக்கிறவர்கள் நித்திய ஆக்கினையை அடைவார்கள். தேவன் மனிதரின் இருதயத்தை அறிகிறவராகையால் அதற்குத் தகுந்தவிதமாய் தீர்ப்பளிப்பார்.
- களைகளை விதைத்தல்: வசனம் 13:24-27
(அ) உவமை – வசனம் 24-24 – ஒரு மனிதன் நல்ல விதையை விதைத்தான். அந்த மனிதன் நித்திரை பண்ணுகையில் சத்துரு கோதுமைக்குள் களைகளை விதைத்தான்.
(ஆ) நிலைமை – வசனம் 26-27 – களைகளுக்குள் நல்ல விதைகள் வளர்ந்தன.
- களைகளைப் பிடுங்குதல்: வசனம் 13:28-29
(அ) விதைத்தல் – வசனம் 28 – சத்துரு நல்ல விதைகளுக்குள் களைகளை விதைத்தான்.
(ஆ) வெளியில் தெரிதல் – வசனம் 29. களைகளும் நல்ல விதைகளோடு வளர்வதற்கு விடப்பட்டன. களைகளும் நல்ல விதை செடிகளும் வெளியில் தெரிந்தன. தேவன் பாவியையும் அவரை ஏற்றுக்கொண்டவர்களையும் அறிந்துள்ளார் – 2.கொரி.5:71, யோவான் 8:44.
(இ) பிரித்து வைத்தல் – வசனம் 30 – அறுப்புக்காலத்தில் களைகளைப் பிடுங்கி சுட்டெரிக்கிறதற்காக பிரித்து வைக்கப்படுகிறது. கோதுமையை களஞ்சியத்தில் சேர்க்கப் பிரித்து வைக்கப்படுகிறது.
பரிசுத்த வேதாகமம் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதைப்பற்றிக் கூறுகிறது – மத்.25:32.
நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்தலையும் ஆகாதவைகளை எறிந்து போடுதலையும் மத் 13:48ல் பார்க்கிறோம்.
- அடையாளங்களும் களைகளும்: வசனம் 13:37-39.
(அ) விதைக்கிறவர் – வசனம் 37. நல்ல விதைகளை விதைக்கிறவர் கிறிஸ்து.
(ஆ) விதை – வசனம் 38. நிலம் உலகம். நல்ல விதைகள் இராஜ்யத்தின் பிள்ளைகள் -யோவான் 1:12 – களைகள் சாத்தானின் பிள்ளைகள் – யோ.8:44.
(இ) சாத்தான் – வசனம் 39 – சத்துரு – ஆதி.3:4, மத்.4:1. உலகத்தின் முடிவில் அறுவடை நடக்கும். வெளி 20:11-15. அறுவடை செய்பவர்கள் தேவ தூதர்கள் – மாற்கு 13:27.
- களைகளைப் பிரித்தல்: வசனம் 13:40-43.
(அ) பிரித்தல் – வசனம் 13:40 – நியாயத்தீர்ப்பின் நாளில், களைகள் அக்கினியினால் சுட்டெரிக்கப்படும் – வெளி 21:8
(ஆ) துக்கநிலை – வசனம் 41. கோதுமையும் களைகளும் நிரந்தரமாகப் பிரிக்கப்படுதல் ஒரு துக்க நிலையே – வெளி 20:10.
(இ) துன்பமடைதல் – வசனம் 42 – அழுகையும் பற்கடிப்பும் துன்பத்தின் உச்சநிலையை விளக்குகிறது.
(ஈ) பரிசுத்தவான்கள் – வசனம் 43 – நீதிமான்கள் தங்கள் பிதாவின் இராஜ்யத்தில் சூரியனைப்போல் பிரகாசிப்பார்கள். நித்திய மகிழ்ச்சியடைவார்கள்.
மற்றவர்களை அவர்களது கனிகள் மூலம் அறிந்து கொள்ளமுடியும் என்றாலும் அவர்களை நியாயத்தீர்ப்பது நமக்குரியதல்ல – மத்.7:16-20.
நாமே குற்றம் செய்கிறோம். அப்படியிருக்க மற்றவர்களைக் குற்றச்சாட்ட நமக்கு என்ன உரிமை இருக்கிறது. அவரது நியாயத்தீர்ப்பே சரியானது.










