• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

03. கிரயம் எண்ணிப் பார்த்தல்

August 18, 2018
in கிறிஸ்தவ நூற்கள், கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
0 0
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  1. கிரயம் எண்ணிப் பார்த்தல்

தியான வாசிப்பு: யோசுவா 2:1-24

கானான்தேசத்தை நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாகிய மோசேயால் சுதந்தரிக்க முடியாது. கிருபையின் பிரதிநிதியாகிய யோசுவாவின்மூலமே கானான் தேசத்தைச் சுதந்தரிக்க முடியும். அவ்வாறே பரம கானானையும் நியாயப் பிரமாணம் அல்லது சன்மார்க்கம் சுதந்தரித்தக்கொள்ளமுடியாது. கிருபையின் கடவுளாகிய கிறிஸ்துவின் மூலமாகத்தான் பரம கானானைச் சுதந்தரித்துக் கொள்ளமுடியும். கிறிஸ்து கொடுக்கும் பேரின்பவாழ்வை நாம் விசுவாசத்தால் சுதந்தரிக்க வேண்டும். பரம ஆசிர்வாதங்களைக் கிறிஸ்து நமக்கு இலவசமாகக் கொடுக்க, நாம் அவைகளை விசுவாசக் கரம் நீட்டிப் பெற்று அனுபவிக்க வேண்டும். இவ்வதிகாரத்தில் நாம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தியானத்தின் பொருளாக்க வேண்டும். இஸ்ரவேலர் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்குமுன், மூன்று நாள் அமரிக்கையாய்க் காத்திருக்கவேண்டும்.

அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து, உங்களுக்குப் போஜன பதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்தக் கொள்ளும்படிக்கு இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானை கடந்து போவீர்கள் என்று சொல்லச் சொன்னான் (யோசு.1:10-11). நமக்கு இருக்கிற வேலைகளில் மிகக் கடினமான வேலை அமர்ந்து காத்திருப்பதேயாகும். ஆனால் கர்த்தர் நம்மைக் காத்திருக்கச் சொன்னால், நாம் கட்டாயம் காத்திருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் ஒரு காரணமுமின்றி வீணாக நம்மைக் காத்திருக்கச் சொல்லமாட்டார். அவர் ஒரு வேலையைச் செய் என்று சொல்லும்பொழுது எவ்வளவு ஆசீர்வாதம் கிடைக்குமோ, அதைப்போலவே ஒரு வேலையைச் செய்யாது அமரிக்கையாய்க் காத்திரு என்று சொல்லும்பொழுதும் அவருடைய ஆசீர்வாதம் நிச்சயமாய்க் கிட்டும். காரணமின்றி, கடவுள் ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லமாட்டார். அங்கனமாயின், கானானுக்குள் பிரவேசிக்குமுன் இஸ்ரவேல் புத்திரரை மூன்றுநாள் மட்டும் காத்திருக்கச் சொல்கிறாரே, இதன் இரகசியம் என்ன? அதற்கு மூன்று காரணங்கள் கூறலாம்.

முதலாவது, எரிகோவில் ஓர் ஆத்துமா காப்பாற்றப்படவேண்டியதிருந்தது. எரிகோ கர்த்தரால் முற்றிலும் அழிக்கப்படப் போகிறது. அவ்வாறு எரிகோ தரைமட்டடமாகுமுன், அந்த அழிவினின்று ஓர் ஆத்துமா இரட்சிக்கப்படவேண்டியதிருந்தது.

எரிகோ பலத்த அரணால் சூழப்பெற்ற மாபெரும் நகரம். எரிகோ நகருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் நடுவே எளிதில் கடக்க முடியாத யோர்தான் நதி ஓடினது. ஆகவே, எரிகோ மக்களுக்கு இன்னும் அதிக நெஞ்சுத் தைரியம் ஏற்பட்டது. இந்த இஸ்ரவேலரின் தெய்வம் நம்மை என்ன செய்கிறது பார்ப்போம் என்று மமதை கொண்டார்கள். இஸ்ரவேலின் தெய்வத்தைப்பற்றிய பயபக்தியோ அவர்கள் நெஞ்சில் எழவில்லை.

ஆனால், அந்த எரிகோ நகரத்தில் இஸ்ரவேலின் தேவனிடத்தில் விசுவாசம் கொண்ட ஓர் ஆத்துமா இருந்தது. பிற எரிகோ வாசிகளுக்கு யுத்தம் வந்தால் அழிந்துபோவோமே என்ற அச்சம் இருந்தபோதிலும், இஸ்ரவேலின் தேவனிடத்தில் விசுவாசம் ஏற்படவில்லை. தங்கள் உயிருக்குப் பயந்தவர்களே தவிர, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அவர்கள் பயப்படவில்லை. ஆனால், அந்தநகரிலுள்ள ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசிக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப்பற்றிய பயபக்தியும் விசுவாசமும் இருந்தது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் வல்லமைக்கு முன்பாக தனது நகரத்தின் பலத்த அரண்நிலைநிற்க முடியாது என்று நம்பினாள். இஸ்ரவேலின் தேவனுக்கு முன்பாக யாரும் எதிர்த்து நிற்கமுடியாது என்று விசுவாசித்தாள்.

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டபொழுது, கர்த்தர் அவர்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப்பண்ணினதையும், யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு இராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும் நடந்ததையும் அவள் கேள்விப்பட்டிருந்தாள். இதை அந்நகரத்தாரும் கேள்விப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய உள்ளம் கரைந்து போயிற்று. எனினும், இஸ்ரவேலின் தேவனிடத்தில் அவர்கள் விசுவாசமும், பக்தியும் கொள்ளவில்லை. ஆனால் இதையெல்லாம் கேள்விப்பட்ட ராகாப் என்னும் வேசியோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும், தேவன் ஆனவர் என்று சாட்சி பகர்ந்தாள்.

ராகாபுடைய விசுவாசம் பரிபூரணப்பட்டதாய் இல்லாதிருந்தபோதிலும், அவளுக்கு இஸ்ரவேலின் தேவனைப் பற்றிய விசுவாசம் நிச்சயமாய் இருந்தது என்பதற்கு மேற்கண்ட அறிக்கையே போதுமான சான்றாகும். எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் 11ம் அதிகாரம் 31ம் வசனம் இதற்கு ஆதாரம் தருகிறது. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதம் ஆகாதிருந்தாள்.

இவற்றால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்தில் ராகாபுக்கு விசுவாசம் இருந்ததுமன்றி, அவரே உயர வானத்திலும் கீழே பூமிலும், தேவனானவர் என்று பகிரங்கமாக அறிக்கையிடவும் அவள் தயங்கவில்லை. மேலும் தனது விசுவாசத்தைக் கிரியைகளின் மூலமாகவும் ரூபித்தக் காண்பித்துவிட்டாள். ஆகவே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும் என்பதற்குப் புதிய ஏற்பாட்டில், அப்போஸ்தலானகிய யாக்கோபு குறிப்பிடும் உதாரணங்களுள் ராகாப் என்னும் வேசியும் வேவுகாரர்களை ஏற்றுக்கொண்டு, வேறு வழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவள் ஆக்கப்பட்டாள் (யாக்.2:25).

எபிரெயர் 11ம் அதிகாரத்தில் வரும் விசுவாச வீரர்களின் அட்டவணையில் ராகாப் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகாப் விசுவாசத்தினாலே வேவுகாரரைத் தனது வீட்டில் ஏற்றுக்கொண்டு, அவர்களை ஒளித்து வைத்துக் காப்பாற்றி, பின்னர் அவர்களை இரகசியமாய் கயிற்றினாலே ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள். மேலும், தேடுகிறவர்கள் உங்களைக் காணாதபடிக்கு நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பி வருமட்டும் அங்கே மூன்றுநாள் ஒளித்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள் என்று வேவுகாரர் உயிர் தப்புவதற்குப் புத்திமதியும் சொல்லி அனுப்பினாள். இவ்வாறு விசுவாசத்தினாலே தேவனுடைய மக்களை ராகாப் ஏற்றுக்கொண்டு காப்பாற்றியதால், தேவ மக்களுக்கு கிடைத்த ஆசீர்வாதத்திலும் அவளுக்குப் பங்கு கிடைத்தது. அவள் இஸ்ரவேலருடன் கானானில் வாழும் பாக்கியம் பெற்றாள். இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் ராகாபுடைய பெயரும் வருவது குறிப்பிடத்தக்கதன்றோ (மத்.1:5).

கடவுள் மங்கி எரிகிற தீயை அணையாது, மேற்கொண்டும் அது கொழுந்து விட்டு எரியச் செய்கிறவராவார். அவர் நெரிந்த நாணலை முறியாது, அது இன்னும் அதிகப் பலம் அடையுமாறு செய்கிறவர். அவர் அற்ப விசுவாசத்தையும் அசட்டை செய்யாது, அதை ஆசீர்வதிக்கிறவர். விசுவாசம் கொண்ட ராகாபை எரிகோவின் அழிவினின்று இரட்சிக்குமுன், அவர் எரிகோவைச் சங்காரம் செய்யப்போவதில்லை. அதற்காக அவர்கள் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. சோதோம் நகரில் வாழ்ந்த ஒரு தேவ மனிதனைக் காப்பாற்றுமுன், அவர் சோதோமை அழிக்கமாட்டார். ஒரு பெரும்பாடுள்ள ஸ்திரியைச் சுகமாக்குமுன் அவர் விரைந்து சென்று மறைந்துபோகமாட்டார். இயேசுவே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட ஒரு குருடனுக்குக் பார்வை அளிக்குமுன் அவர் ஓடிவிடமாட்டார். நின்று சுகப்படுத்துமுன் அவர் பிரயாணம் செய்யார். தன்னிடத்தில் வேண்டிக்கொண்ட ஒரு கள்ளனுக்குப் பரதீசை வாக்களிக்குமுன் அவர் மரிக்கமாட்டார். இந்தச் சிறியரில் ஒருவராவது கெட்டுப்போவது அவருக்குச் சித்தம் அன்று. தன்னிடத்தில் வருகிற ஒருவனையும், ஒருத்தியையும் அவர் புறம்பே தள்ளமாட்டார். அவர் இப்பொழுது தமது இரண்டாம் வருகையைப் பிந்த வைப்பதின் காரணமும் இதுதான். தன்னை விசுவாசிக்கும் ஓர் அற்ப ஆத்துமா இரட்சிக்கப்படுமுன், அவர் நியாயத்தீர்ப்பைத் துரிதப்படுத்தமாட்டார். நாம் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படும்படிக்கே அவர் காத்திருக்கிறார். நாம் ஒருவராவது நரக ஆக்கினையிலே அழிந்துபோவது அவருக்கு சிறிதும் பிரியம் அன்று. ஆ! இயேசுவின் அன்பு எத்துணை ஆழமானது. அவரது கிருபைக்கும் எல்லையுண்டோ? அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவர் நீடிய சாந்தமும் பொறுமையுமுள்ளவர். நாம் ஆக்கினை அடையாது இரட்சிப்பை அடைவதற்கே அவர் இவ்வளவு பொறுமையோடு நமக்காக காத்து நிற்கிறார்.

இரண்டாவது, மீண்டும் அவர்கள் கானானை நோக்கிப் புறப்படுமுன் ஒரு பாகப் பிரிவினை நிச்சய உறுதி பெறவேண்டியதாயிருந்தது.

வனாந்தரப் பிரயாணக் காலத்தில் ரூபனியரும் காத்தியருமான மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் யாசேர் தேசத்தையும், கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த செழிப்பான மேய்ச்சல் பூமி என்று கண்டார்கள். இந்த இரண்டரைக் கோத்திரத்தாருக்கு ஆடுமாடுகள் மிகத் திரளாயிருந்தன. ஆகவே, அவர்கள் மோசேயையும், ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி: இந்த யாசேர் தேசமும் கீலேயாத் தேசமும் வளம் மிக்க பூமி. சிறந்த மேய்ச்சல் நிலம் இங்குண்டு. எங்கள் ஆடு மாடுகளுக்கு ஏற்ற nழிப்பான இப்புல்வெளிப் பிரதேசத்தை எங்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்து போகப்பண்ணீராக என்று வேண்டிக்கொண்டார்கள். மோசே விசனம் கொண்டு உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில் நீங்கள் இங்கே இருப்பீர்களோ? கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயங்களைத் திடனற்றப் போகப் பண்ணுகிறதென்ன? உங்கள் கீழ்ப்படியாமையால் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்களோ? என்று சினந்து கண்டித்துரைத்தான்.

அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கு கட்டுவோம். நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டு போய்ச் சேர்க்குமளவும், யுத்த சன்னத்தாராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம். எங்கள் பிள்ளைகள் இத் தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம். இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்திரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும் நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை. யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்திரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடேகூட யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்திரம் வாங்கமாட்டோம் என்றார்கள்.

அப்பொழுது மோசே அவர்கள் பிடிவாத்தைக் கண்டு அவர்கள் சொல்லுக்கிணங்கினான். ஆனால் அவர்கள் சொற்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால், கர்த்தருக்கு விரோதமாக அவர்கள் பாவஞ்செய்தவர்களாயிருப்பார்கள் என்றும், அவர்கள் பாவம் அவர்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்றும் மிக மிகக் கண்டிப்பாய் எச்சரித்தான். அவர்கள் தங்கள் வாக்கைக் காத்துக்கொள்வதாக வாக்குக் கொடுத்தார்கள்.

அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரத் தலைவர்களுக்கும் கட்டளையிட்டு: ரூபன் புத்திரரும் காத் புத்திருரம், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கர்த்தருடைய சமூகத்தில் யுத்தசன்னத்தராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்து போனால், கானான் தேசம் உங்களுக்கு வசப்பட்ட பின்பு, அவர்களுக்கு யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும், அதாவது யோர்தானுக்குக் கீழ்ப்புறத்திலிருக்கிற செழிப்பான தேசத்தைச் சுதந்திரமாகக் கொடுக்கக்கடவீர்கள். ஆனால், உங்களோடேகூட யுத்த சன்னத்தராய் அவர்கள் புறப்பட்டு வராவிட்டால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையக்கடவர்கள் என்றான்.

மோசே கொடுத்த இக்கட்டளையை யோசுவா நிறைவேற்ற வேண்டியதிருந்தது. அவர்கள் யோர்தானைக் கடந்து கானானுக்குள் பிரவேசிக்குமுன் இந்த இரண்டரைக் கோத்திரத்தாரின் பாகப் பிரிவினையையும், வாக்குறுதியையும் யோசுவா மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியதிருந்தது. இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்கும் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம் வாக்களிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்களுக்கு விருப்பமான இடத்தைத் தெரிந்துகொள்ளும் சுதந்திர உரிமையும் அவர்களுக்கு இல்லாமலில்லை. இந்த இரண்டரைக் கோத்திரத்தாரோ யோர்தானுக்கு மேற்புறத்திலுள்ள கானான் பூமியை விரும்பாமல், யோர்தானுக்கு கிழக்காயுள்ள வனாந்தரத்தின் ஒரு செழிப்பான பகுதியையே தெரிந்து கொண்டார்கள். தங்களுக்குப் பிரியமான இடத்தைச் சுதந்தரிக்கும் உரிமையை மோசேயும் யோசுவாவும் மறுக்க முடியவில்லை.

அவ்வாறே, ஆன்ம சுதந்திரத்தையும் தெரிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உண்டு. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இரண்சண்ய பூமியின் ஆசீர்வாதம் வாக்களிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்குள் வெற்றியுள்ள பரிசுத்த வாழ்வு நடத்த ஒவ்வொரு ஆத்துமாவும் அழைக்கப்பட்டுள்ளது. அவர் பரிசுத்தராய் இருக்கிறதுபோல, அவருடைய அடியாரும் பரிசுத்தராயிருக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் வெற்றி சிறக்கும் புனித வாழ்வு கிறிஸ்துவால் வாக்களிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இவ்வுலகில் இருக்கும்பொழுதே தூய பேரின்ப வாழ்வு அனுபவிக்க உரிமையும் பலமும் கிறிஸ்துவால் வழங்கப்படுகிறது. இவ்வையகத்தில் பரம கானான் வாழ்வு நடத்த ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் உரிமை தரப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பரம கானான் வாழ்வைத் தெரிந்துகொள்ளும் உரிமை நமக்கு அருளப்பட்டுள்ளது. நாம் எத்தகைய கிறிஸ்த வாழ்க்கை தரத்தைத் தெரிந்து கொண்டுள்ளோம் என்பதைச் சிந்திப்போமாக.

அந்த இரண்டரைக் கோத்திரத்தாருக்கும் பூரண கானான் வாழ்வைத் தெரிந்து கொள்ள உரிமையிருந்த போதிலும், யோர்தானுக்கு கிழக்கேயுள்ள வனாந்தரத்தின் ஒரு செழிப்பான பாகத்தைத் தங்கள் சுதந்திர பூமியாகத் தெரிந்து கொண்டார்கள். இஸ்ரவேல் படையின் முன்னணியில் நின்று படைத்தலைவர்களாய் பகைவர்களை வென்று கானான் நாட்டில் முதலாவது வெற்றிப் பெருமிதத்தோடு கோத்திரத்தார் பெற்றிருந்த போதிலும், அவர்கள் தங்கள் காணியாட்சியாகத் தெரிந்து கொண்ட பூமி வனாந்தரப் பகுதியேயாகும். படைக்குத் தலைமை தாங்கி, போரிட்டு, விரதீரர்களாகப் பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்தின் பெரும் வளத்தையும், செழிப்பையும் கண்கூடாக முதலாவது கண்டு பூரிக்கும் பாக்கியம் பெற்றிருந்த போதிலும், அவர்கள் வனாந்தரப் பூமியைத் தங்கள் காணியாட்சியாக விரும்பிக் கேட்டுக்கொண்டு அங்கேயே நிலைவரமாக குடிகொள்ள ஆசித்தார்கள்.

இவ்வாறே, ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவுக்குள் கிருபையாக அருளப்பட்ட பேரின்ப பாக்கியங்களை ஒரு கால் ருசித்தபோதிலும் அநேகர் பூரண பரம கானான் வாழ்வில் நிலைத்திராது, வனாந்தர வாழ்வுக்கே திரும்பி விடுகின்றனர். அவர்கள் சிலுவைப் புண்ணியங்களை அறிந்திருந்தும், இன்னும் கீழ் நிலையான கிறிஸ்தவ வாழ்விலேயே தங்கி இருக்கத் துணிந்து விடுகிறார்கள்.

அவர்கள் அடிக்கடி உலகம், மாம்சம், பிசாசு பழைய இரகசியப் பாவம் போன்ற தீய சக்தியால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களாய், தாழ்ந்த ரகமான கிறிஸ்தவர்களாகவே நிலைத்துவிடுகிறார்கள். ஒருகால் பரிசுத்த வாழ்வின் பேரின்ப ருசியைச் சுவைத்தபோதிலும் மீண்டும் மட்ட ரகமான கிறிஸ்தவ வாழ்வில் தங்கி விடுவதையே தெரிந்து கொள்கிறார்கள். இதை வாசிக்கும் நண்பரே, உமது கிறிஸ்தவ வாழ்க்கைத் தரம் எத்திறத்தது? இன்னும் போலியான வாழ்வையே தெரிந்துகொண்டு அதிலேயே காலம் கடத்த மனம் இசைந்துவிட்டீரோ? வேண்டாம். இன்னும் வானாந்தர வாழ்வு உமக்கு வேண்டாம். நீர் பரம கானான் வாழ்வுக்கென்றே தெரிந்துகொள்ளளப்பட்டீர். முதல் தரமான வெற்றிமிக்க பரிசுத்த வாழ்க்கை நடத்த அன்றோ நீர் கிறிஸ்துவால் அழைக்கப்பட்டுள்ளீர். அதிவுன்னதமான மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தை அல்லா நீர் தெரிந்துகொண்டு நிலைத்திருக்கவேண்டும். கீழானவைகளையல்ல மேலானவைகளையே நாடுங்கள். தாழ்வானவைகளை அல்ல உயர்ந்தவைகளையே தேடுங்கள். மட்டமான ரகத்தை அல்ல, மகத்தானதையே தெரிந்து கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து வாழ்ந்த ஒப்பற்ற முதல்தர வாழ்க்கை நெறியில் நீங்களும் நிலைத்திருங்கள். அவர் பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருங்கள்.

இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும், கானானுக்காகப் போராடி, கானானை வென்ற போதிலும் அவர்கள் திரும்பி, தாங்கள் விட்டுவந்த வனாந்தரப் பிரதேசத்தில் குடிகொண்டு வாழத் தீர்மானித்தது அவர்களுக்குள்ளே கண்ணியாக முடிந்தது. ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதியாயின (நியா.5:16). அவர்கள் நாளடைவில் தங்கள் பிதாக்களின் தேவனுக்குத் துரோகம்பண்ணி, தேவன் அவர்களுக்கு முன்பாக அழிந்திருந்த பகைவர்களின் தேவர்களைப் பின்பற்றிச் சோரம் போனார்கள். ஆகையால் இஸ்ரவேலின் தேவன் ஆசீரியா இராஜாவின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார். இந்த இரண்டரைக் கோத்திரத்தாரையும் அசீரியர் சிறைபிடித்துக்கொண்டு போனார்கள் (1.நாளா.5:25-26). இவ்வாறு இஸ்ரவேலருள் முதன் முதலாவது சோரம்போய் சிறைபிடிக்கப்பட்டவர்கள், இந்த இரண்டரைக் கோத்திரத்தார்தாம். அவர்களுடைய தவறான தெரிந்து கொள்ளுதலினால் எவ்வளவு துயரத்திற்குள்ளாகிவிட்டார்கள். பாருங்கள்! நாம் தெரிந்து கொள்ளும் கிறிஸ்தவ வாழ்க்கைத்தரத்தைப்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும:. பரமகானான் வாழ்வை விட்டுவிட்டு, பாவமான பழைய வனாந்தர வாழ்வில் மீண்டும் ஈடுபடக்கூடாது. அதிசிறந்த பரிசுத்தமான ஜெயஜீவியத்தையே நாம் தெரிந்துகொண்டு, அதில்தானே நிலைத்திருக்கவேண்டும்.

ஆரம்பம் மாத்திரமன்று, முடிவும் முக்கியமானதல்லவா? முடிவு பரியந்தமும் நிலைத்திருக்கிறவனே இரட்சிக்கப்படுவான். நாம் நல்ல ஆரம்பத்தை ஆரம்பித்திருக்கலாம். ஆனால், நாம் இன்று எந்நிலையில் இருக்கிறோம்? நாய் தான் கக்கினதைத் தின்னுவதுபோல் மீண்டும் அருவருப்பான கீழ்த்தர வாழ்வில் இன்னும் இருக்கிறோமா? அல்லது நமது கிறிஸ்தவ வாழ்க்கை நெறி உயர்ந்துள்ளதா? ஓர் எழுப்புதல் கூட்டத்தில் ஒரு சுவிசேஷகரின் உருக்கமான பிரசங்கத்தினால் அசைக்கப்பட்டவர்களாய் மனந்திரும்பி, பல்லாயிரக்காணக்கான மக்கள் முன்னுக்கு வந்து நிற்கலாம் அல்லது இருந்த இடத்திலே தங்கள் கையை உயர்த்தி, தங்கள் வாழ்க்கைத் திருப்பத்தைச் சயையாருக்குத் தெரிவித்திருக்கலாம். அல்லது மனந்திரும்புதல் பிரதிக்கினைச் சீட்டில் கையொப்பமிட்டு வாழ்க்கை மாறுதலை அறிவித்திருக்கலாம். அல்லது தன்னந்தனியாகக் கிறிஸ்துவின் பாதத்தில் வீழ்ந்து கண்ணீர் உதிர்த்து மனந்திரும்புதல் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கலாம். எப்படியோ ஒரு புனித வாழ்க்கைத் திருப்பம் உன் வாழ்வில் ஒரு காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் இன்று உன் வாழ்வில் வளர்ச்சி எந்த அளவில் இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தாயா?

ஒருவேளை நீ பல சமயங்களில் பாவ ஆசையில் மீண்டும் சிக்கியிருக்கலாம். அல்லது பாவத்தில் வீழ்ந்திருக்கலாம். ஆனால் நீ வீழ்ந்த இடத்திலேயே சோர்ந்து கிடக்க வேண்டாம். மீண்டும் எழும்பிப் பிரகாசி. நீ ஏழு தடவை மாத்திரமல்ல, ஏழு ஆயிரம் தடவை விழுந்துவிட்டாலும் மீண்டும் எழுந்து நிற்க, சிலுவைப் புண்ணியத்தால் உரிமை பெற்றுள்ளாய் என்பதை ஒருகாலும் மறந்துவிடாதே. விழுந்த பாவச்சேற்றை இன்னும் கவ்விக்கொண்டிருப்பதற்கு அல்ல, எழுந்து ஓடி கன்மலையில் வீற்றிருப்பதற்கே நீ அழைகக்கப்பட்டுள்ளாய். பரிசுத்த ஜெய வாழ்வாகிய உயர் கன்மலை வாழ்வே உன் கிறிஸ்தவப் பிறப்புரிமை. நீ ஏன் இன்னும் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிறாய்? உடனே சீக்கிரமாக எழுந்து மேலே ஓடிச்செல். வனாந்தரத்தை எட்டிப் பாராதே. பரமகானானுக்குள் விரைந்துசெல். பரிசுத்த வாழ்வில் முனைந்து நில். பூரண வெற்றியுள்ள பரிசுத்த வாழ்வே உன் இலட்சியமாயிருப்பதாக.

மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியதின் மூன்றாம் காரணம்: இஸ்ரவேலர் மீண்டும் புறப்படுமுன் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளவேண்டும். இஸ்ரவேலருக்குள் அசுத்தம் இருந்தால், யோர்தான் அற்புதம் தடைபட்டுப்போம். ஆகவே, யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான் (யோசு.3:5).

அற்புதம் வேண்டுமென்று ஆசிக்கிறோம். ஆனால் அற்புதம் நம்மிடம் நிகழவேண்டுமாயின், நம்மிடம் பரிசுத்தம் இருக்கவேண்டும் என்பதை ஒருக்காலும் மறக்கவேண்டாம். நமது திருச்சபைகளிலும், உலகம் எங்கும் ஆன்ம எழுப்புதல் வேண்டும், பரிசுத்தாவியானவர் பொழியப்பட வேண்டும். கிறிஸ்தவம் எங்கும் தழைக்கவேண்டும் என்று ஊக்கமாய் ஜெபித்து வருகிறோம். கிறிஸ்தவர்களிடையே பரிசுத்த வாழ்வும், பரிசுத்தாவியின் கனிகளும் செழிக்கவேண்டும் என்று விரும்பி ஜெபிக்கிறோம். ஆனால் நமது சொந்த வாழ்வை உற்று நோக்க மறந்துவிடுகிறோம். நமது சொந்தக் குடும்பத்தின் வாழ்வைச் சீர்படுத்தத் தயங்குகிறோம். நமது வாழ்வில் கிறிஸ்தவக் கனிகள் அறவே அற்றுப்போயிருக்க, பிறர் வாழ்வில் மட்டும் கனிகளை எதிர்பார்ப்பது விபரீதமன்றோ! அயலகத்தார் வாழ்க்கையில் காணப்படும் அசுத்தம் நமக்கு அருவருப்பாயிருக்கிறது. அவ்வாறே நமது சொந்த ஜீவியத்தில் காணப்படும் அசுத்தம் நமக்கு அருவருப்பைத் தருகிறதா? நம்மிடம் அசுத்தம் இருந்தும், அசுத்தம் இல்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.

பரிசுத்தம் இயேசு கிறிஸ்துவால் மாத்திரம் நமக்குக் கிட்டும். அவரே தேவனால் நமக்குப் பரிசுத்தம் ஆனார் (1.கொரி.1:31). விசுவாசத்தால் இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிறோம். பரிசுத்தாவியானவர் மூலமாக இயேசு கிறிஸ்து நமது உள்ளங்களில் வாசம்பண்ணும்பொழுது மட்டுமே, பரிசுத்தம் நமது உள்ளங்களில் குடிகொண்டிருக்கும். இயேசுவே பரிசுத்தம். இயேசுவே பரிசுத்தர். இயேசுவே பரிசுத்தத் தெய்வ இரட்சகர். இயேசு இல்லாதவன் பரிசுத்தம் இல்லாதவன். இயேசுவால் அன்றி ஒருவனும் பரிசுத்தம் ஆகமாட்டான். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டாலன்றி ஒருவனும் சுத்திகரிக்கப்படான். நாம் பரிசுத்த ஜீவியம் செய்யவேண்டுமென்றால், ஒன்றான பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து தமது ஜீவியத்தை இப்பொழுது நம்மில் ஜீவித்தருள வேண்டுமென்பதே அதன் கருத்தாகும். ஆகவே, நீ பரிசுத்த ஜீவியம் செய்கிறாயா என்பதை அறிய வேண்டுமாயின், இயேசு கிறிஸ்து உன் இதயத்தில் ஜீவிக்கிறாரா என்று பரிசோதித்தறிய வேண்டும். கிறிஸ்து இல்லாத எவனும் அசுத்தனே ஆவான். கிறிஸ்துவே பரிசுத்தத்தின் ஊற்றும் காரணருமாவார். இயேசு எங்கிருக்கிறாரோ அங்கு பரிசுத்தம் நிலவும். ஆதலின் பரிசுத்த ஜெய ஜீவியத்தின் இரகசியம், கிறிஸ்து, உன்னில் ஜீவிப்பதே ஆகும். உன் இதயத்தை ஆராய்ந்து பார். இயேசு உனக்குள் இருக்கிறாரா?

பரிசுத்தாவியானவர் உன்னகத்தே வாழுங்கால், அவர் உன் பாவங்களைக் குறித்து உன்னைக் கண்டித்துணர்த்துவார். நீ ஆண்டவருக்கு அதிகப் பிரியம். ஆனால் உனது அசுத்தம் அவருக்குச் சற்றேனும் பிடிக்காது. அவர் பாவத்தைப் பாராத பரிசுத்தக் கண்ணர். நீ களைந்தெறிய வேண்டிய பாவங்கள் இவை இவை என்று அவர் சுட்டிக்காட்டும்பொழுது, உடனே அச்சத்திற்குக் கீழ்ப்படிந்து அவற்றை விட்டு ஒழிக்கவேண்டும். கிறிஸ்துவின் ஆவியானவரும் நாமும் ஒத்துழைத்த்தால்தான் பரிசுத்த வாழ்க்கை ஆற்றமுடியும். பரிசுத்த ஆவியினாவரின் ஆலோசனைகளுக்கு நாம் கீழ்ப்படியாமற்போனால், எங்கனம் பரிசுத்தம் நம் வாழ்வில் பலிதப்படும்? இருதயம் கடினமும், கீழ்ப்படியாமையும் நம்மை அசுத்தத்தில் ஆழ்த்திவிடும். அவரது அமர்ந்த மெல்லிய சத்தத்தைப் பக்தி விநயத்தோடு ஜெபத்தின் மூலமாக கேட்கத் தவறக்கூடாது. அவரது சொல்லைக் கேட்பதோடு நின்றுவிடாது, அதன்படி செய்யவும் நாம் ஜாக்கிரதையுள்ளவராய் இருக்கவேண்டும். கிறிஸ்துவின் ஆவியானவர் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுவான். அவனது ஜீவியம் முழுவதும் விழுந்து முற்றிலும் அழிந்துவிடும். பரலோகத்திலிருக்கிற தேவனுடைய சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

ஆகவே பரிசுத்தாவியானவர் கண்டித்துணர்த்தும் பாவத்தையெல்லாம் விட்டுவிடத் தயங்கவே கூடாது. பரிசுத்த வாழ்வில் நாம் பரிசுத்தாவியானவரோடு கண்ணும் கருத்துமாய் ஒத்துழைக் வேண்டும். அவர் சொல்லுகிறபடி நாம் செய்யவேண்டும். இதைச் செய்வதற்குரிய ஆற்றலையும் அவர் நமக்கு அருள்கிறார். அவரால்தான் பாவத்தைக் களைவதற்குச் சக்தி பெறுகிறோம். ஆனால் அவரோடுகூட ஒன்றுபட்டு ஒத்துழைப்பது நம் கடமையாகும். அவர் இன்று உன்னைப் பார்த்து உன்னிடம் இன்னின்ன இரகசியப் பாவங்கள் உண்டு என்று சுட்டுகிறார். உடனே, அப்பாவத்தை அவர் சகாயத்தால் விட்டுவிடுவோமாக. இனிப் பாவம் செய்யாதே என்பது நமக்கு எப்பொழுதும் ஓர் எச்சரிக்கை வசனமாய் இருக்கட்டும். நம் வாழ்வில் அற்புதங்களும், பரிசுத்த கனிகளும் காணப்பட வேண்டுமாயின், கிறிஸ்துவின் இரத்தத்தால் இன்று நம்மைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்வோமாக. யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான் (யோசு.3:5).

இயேசுதான் பரிசுத்தம். அவர்தான் பரிசுத்தர். அந்தப் பரிசுத்தம் உன்னில் திகழவேண்டுமாயின், அவரை உன் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டியது உன்மீது விழுந்த பெரும் பொறுப்பு அல்லவா? அவரை விட்டு நீங்காதிருக்கவேண்டுவது உன் கடமையன்றோ! அவர் உன்னையும், நீ அவரையும் விடாப்பிடியாய்ப் பிடித்துக்கொள்ளும்போது, அவரது பரிசுத்தம் உன் வாழ்வில் பொங்கிப் பெருக்கெடுக்கும் அல்லவா? ஆ! இயேசுவோடு இசைந்து, உறைந்து ஒன்றுபட்டு, அன்புற்று, இன்புற்று வாழ்பவன் எத்துணை பரிசுத்தவான்! இயேசுவே என்னைப் பரிசுத்தமாக்கமாட்டீரா?

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

04. ஆசீர்வாதம் அடைவதற்கு ஒரே வழி

00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

05. கிறிஸ்தவனும் சிலுவையும்

Recommended

Song 079 – Aayiram

Song 217 – Pithavae

Song 216 – Messia Yesu

Song 116 – Ethanai

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.