• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

06. போருக்கு ஆயத்தப்படுதல்

August 18, 2018
in கிறிஸ்தவ நூற்கள், கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
0 0
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  1. போருக்கு ஆயத்தப்படுதல்

தியான வாசிப்பு: யோசுவா 5:1-10

யோசுவா 5ம அதிகாரத்தின் முதற்பகுதியைத் தியானச் சிந்தையுடன் வாசித்துப் பார்த்தால், இஸ்ரவேலரின் வரலாற்று ஏட்டில் மாபெரும் புரட்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளதை உய்த்துணரலாம். அவர்கள் இப்பொழுது வானந்தரத்தில் இல்லை. கானான் தேசத்தின் கரையில் கால் வைத்துள்ளார்கள். கானான் தேசத்திற்கும் வனாந்தரத்திற்கும் நடுவே நின்ற தடுப்புச் சுவர் போன்ற யோர்தானை அற்புதமாய்க் கடந்துவிட்டார்கள். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்தது முற்றிலும் கர்த்தருடைய பெரிதான அதிசயக் கிருபைதான். கர்த்தரின் வல்லமையால் இஸ்ரவேலர் யோர்தான் நதியை வெட்டாந்தரையைக் கடப்பதுபோல் கடந்து வந்த செய்தி கேட்டு, கானானியரின் சகல இராஜாக்களும் கண்கலங்கினார்கள். மதி மயங்கினார்கள். இதயம் சோர்தார்கள். தங்களுக்கு என்ன நேரிடுமோவென்று மனம் நைந்தார்கள்.

நம் வாழ்வில் அதிசயம் நிகழந்துள்ளதா? தேவனுடைய வல்லமையான கிரியை காணப்பட்டுள்ளதா? பிறர் கண்டு பிரமிக்கத்தக்க அற்புதம் நம் வாழ்வில் காணப்பட்டுள்ளதா? சத்துருக்களின் உள்ளம் உடைந்து போகத்தக்கதாக அதி உன்னதத் திடுக்கிடும் சம்பவங்கள் நம் வாழ்வில் நேரிட்டுள்ளனவா? பகைவர் இதயம் கரைந்து போகத்தக்கதாகக் கர்த்தருடைய பலத்த கரம் நம்மில் செயலாற்றியுள்ளதா? இன்றைய கிறிஸ்தவ சபையில் இத்தகைய அதிசயங்கள் நடைபெறுகின்றனவா? இஸ்ரவேலரின் வரலாற்றில் நிகழ்ந்த பரவசமூட்டும் அதிசயங்கள் நம் வாழ்க்கையிலும் நிகழாவிட்டால் அதற்குக் காரணம் அதிசய நாதராகிய இயேசுநாதர் நம்மோடு இல்லை என்பதுதான் பொருள். கர்த்தர் இருக்கும் இடத்தில் புதுமைகள், அதிசயங்கள் பொங்கிக்கொண்டிருக்கும். காரணம் அவர் அதிசயமானவர், வல்லமையுள்ள தேவன் (ஏசா.9:6).

இஸ்ரவேல் புத்திரர் யோர்தானை இவ்வாறு அதிசயமாய்க் கடந்ததைக் கேள்விப்பட்டு, கானானியர் உள்ளம் கரைந்து கலங்கி, சோர்ந்துபோயிருக்கும் இச்சந்தர்ப்பம்தான் அவர்கள்மேல் பாய்ந்து விழுந்து அவர்களை மடங்கடிப்பதற்கு ஏற்ற சமயமாகுமன்றோ? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். அணை கடந்த வெள்ளம் அழுதாலும் திரும்பவராது என்பதெல்லாம் உலக ஞானம். பகைவர் கலங்கியிருக்கும் இந்தத் தருணத்தை நழுவவிடக்கூடாது. உடனே அவர்கள்மீது சீறிப் பாயந்து படையெடுப்பதற்கு இஸ்ரவேல் புத்திரர் துடித்து நிற்கலாம். துரிதப்படுத்தலாம். ஆனால் கர்த்தர் அவசரப்படவில்லை. அவர் ஒருக்காலும் வீணாக அவசரப்படுகிறவர் அல்ல. அவர் அனாவசியமாக காலம் தாழ்த்துகிறவரும் அல்ல. எந்த வேலை எந்தச் சமயத்தில் செய்யவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒருவர்தான் உற்ற நேரத்தில் உரிய காரியத்தைச் சரியான முறையில் செய்ய வல்லவர். ஆகவே, இஸ்ரவேல் புத்திரர் மனித விவேகத்தின்படி வெடுவெடுப்பாக நில்லாது கர்த்தருடைய வேளைக்காக காத்திருக்கவேண்டும். அவர் போவென்றால் போகவேண்டும். அவர் இதை இப்பொழுது செய்ய என்றால் உடனே தாமதமின்றி அப்பொழுதே அவர் வல்லமையால் அதை உடனே செய்யவேண்டும். கர்த்தர் இஸ்ரவேலருக்கு இப்பொழுது கட்டளையிடுகிறது யாது?

இஸ்ரவேலர் கானானியரோடு போருக்குப் புறப்படுமுன், அவர்கள் விட்டுவிடவேண்டிய மாம்ச இச்சைகள் உண்டு. அவர்கள் துறந்துவிடவேண்டிய பாவச் செயல்கள் உண்டு. அவர்கள் அறுத்து ஒழிக்கவேண்டிய நுனித்தோலின் மாம்சம் உண்டு. அவர்கள் போருக்கு எழுமுன் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். ஆகவே, நாம் கில்காலில் படிக்கவேண்டிய மூன்று பாடம் விருத்தசேதனம் பண்ணப்படுதல்.

இவ்வாறு கில்காலில் நாம் கற்கும் மூன்றாம் பாடம் விட்டுவிடுதல் அல்லது துறந்துவிடுதல், கில்கால் விட்டுவிடுதல் பாளயமாகும். அல்லது துறவுப் பாளயமாகும்.

எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா இஸ்ரவேலரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால் அவர்கள் 40 வருடமாய் வனாந்தரத்தில் அலைந்து திரிந்து மாண்டுபோனார்கள். அவர்கள் கீழ்ப்படியாமையின் மக்கள் கானான் நாட்டைக் காணமுடியாது. அவர்களுக்கு வழியில் வனாந்தரத்திலே பிறந்த சகல மக்களும் விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தார்கள். அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி, நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம் விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார். அப்படியே யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணினான்.

விருத்தசேதனம் கர்த்தர் ஆபிரகாமோடே பண்ணின உடன்படிக்கைக்கு முத்திரை அடையாளமாகத் திகழ்ந்தது. ஆபிரகாமின் சந்ததியர் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தைக் கட்டாயமாகச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்பதற்கு விருத்தசேதனம் ஓர் உறுதிப் பத்திரம்போல் விளங்கியது. இதன் விவரத்தை ஆதியாகமம் 17:10-15ல் விரிவாகக் காணலாம்.

மாம்சத்தின் பலத்தினால் அல்ல, கர்த்தரின் பலத்தினாலேயே கானான் வாழ்வு கிட்டும் என்பதற்கு விருத்தசேதனம் வெளிப்படை அடையாளமாக விளங்கி நிற்கும். மாம்சத்தின் பலவீனத்தோடே, ஆனால் கர்த்தரின் கிருபையால் மட்டும் கானான் கிட்டும். விருத்தசேதனம் நுனித்தோலின் மாம்சத்தை வெட்டி, வீசுதலைக்குறிக்கும். கானான் வாழ்வு பெற வேண்டுமாயின், மாம்சம் களையப்படவேண்டும். மாம்ச இச்சைகள் ஒழியவேண்டும். மாம்சசிந்தை வேரோடு வெட்டி வீசி எறியப்படவேண்டும். மாம்சம் ஆவிக்குரிய கானான் வாழ்வைக் காண்பிப்பதில்லை. கானானின் பேரின்ப வாழ்வு துய்க்க வேண்டுமாயின் மாம்சத்தின் சிற்றின்ப வாழ்வு பூண்டோடு அழியவேண்டும். இவ்வாறு மாம்சம் வெட்டி வீசுதல் வேதனையைத் தரலாம். கருக்கான கத்தியால் நுனித்தோல் மாம்சம் நறுக்கப்பட்டு வீசி எறியப்படுவது துன்பம் தரும் செயல்தான். அது சாவுக்குரிய வேதனை அளிக்கலாம். எனினும் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாவிட்டால் பாலும் தேனும் பொங்கி ஓடும் பரம கானானைச் சுதந்தரிக்க முடியாது. துன்பம் இன்றேல் இன்பம் இல்லை. பாடு இன்றேல் பலன் இல்லை. விருத்தசேதனம் இன்றேல் கானான் சுதந்திரம் இல்லை. கில்கால் மாம்ச சிந்தையை விட்டுவிட நினைவுபடுத்தும் பாளயம் அன்றோ!

யோர்தானைக் கடந்தபின் விருத்தசேதன வேதனை வேண்டுமோ? யோர்தான் மரணத்துன்பம் போதாதோ? கானான் என்னும் பேரின்பப் பூமியில் கால்மிதித்த பின்பும் சிலுவை வேதனைiயை அடையவேண்டுமோ? மீண்டும் ஏன் இந்த விருத்தசேதன வேதனை? அதற்குப் புதிய ஏற்பாடு தரும் விளக்கத்தைக் காண்போம். ஆகையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை நாம் கிறிஸ்துவுக்குள் பெறவேண்டும். கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவச் சரீரத்தைக் களைந்துவிடவேண்டும். மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறோம் (கொலோ.2:10-11).

நாம் கிறிஸ்துவுக்குள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறோம் என்பதை அறிதல் வேண்டும். நாம் எல்லாரும் இரட்சண்ய பூமியில் இருக்கிறோம். நமக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் இயேசு கிறிஸ்துவுக்குள் அடங்கியிருக்கின்றன. நமக்கு எல்லாம் இயேசுவே. அவர் நமக்குப் போதுமானவர். அவர் நமக்கு அருளியச்செய்யாத நன்மைகள் எவை? எல்லா நன்மைகளையும் நம்மீது கொட்டியுள்ளாரே. நாம் கிருபையின்மேல் கிருபை பெற்றுள்ளோம். கிறிஸ்துவை அடைந்துள்ளோம். அவருக்குள் எல்லாம் அடங்கியுள்ளன. தம்மையே நமக்காகத் தந்துள்ளவர், பிற ஆசீர்வாதங்களை நம்மீது பொழிந்தருளத் தயங்குவாரோ? கானான் பேரின்பங்களெல்லாம் அவரிடத்தில் உண்டே.

ஆகவே, கிறிஸ்தவர்களுக்குள் கிரேக்கனென்றும், யூதனென்றும் இல்லை. விருத்தசேதனமுள்ளவன் என்றும், விருத்தசேதனமில்லாதவன் என்றும் இல்லை. அடிமையென்றும், சுயாதீனனென்றும் இல்லை. கிறிஸ்து பெற்ற விருத்தசேதனமே நாம் பெற்ற விருத்தசேதனமாகும். அவர் அடைந்த மரணம் நாம் அடைந்த மரணமாகும். அவர் அடைந்த உயிர்த்தெழுதல் நாம் அடையும் உயிர்த்தெழுதல் ஆகும். அவர் பெற்ற வெற்றி நாம் பெற்ற வெற்றியாகும். அவர் அடைந்த மகிமை நாம் அடைந்த மகிமையாகும். கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.

ஆகையால் கிறிஸ்து பெற்ற விருத்தசேதனம் நாம் பெற்ற விருத்தசேதனமாயிருக்கிறது. ஆதலின் விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள் என்று பவுல் அப்போஸ்தலன் அழுத்தம் திருத்தமாக அறை கூவுகிறார். காரணம், இவைகளின் பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். ஆகையால் பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோடவேண்டும். புதிய மனுஷனாகிய கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளவேண்டும். இதுதான் நாம் செய்யத்தக்க புத்தியுள்ள விருத்தசேதனம்.

இங்கிலாந்திலுள்ள ஒரு பொழுதுபோக்கு பொது விடுதியில் ரோமர் 8ம் அதிகாரம் முதலாம் வசனத்தை ஒருவர் எனக்கு விளக்கிக் காட்டினபொழுது நான் மனந்திரும்பி கிறிஸ்துவை என் நாயகராக ஏற்றுக்கொண்டேன். என்னைக் கவர்ந்துகொண்ட அவ்வாக்கியம் இதுதான். கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. ஆம், இயேசுவுக்குட்பட்டவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

எத்துணை பொன்னான வசனமிது! இத்தங்கமான வாக்கியத்தை நான் மீண்டும் படித்து பரவசமுற்றேன்! அழுத்தமாக அந்த அருமையான வசனத்தின்கீழ் அடிக்கோடிட்டேன். இந்த அற்புதமான வாக்கியம் பசுமரணத்தாணிபோல் என் மனத்துள் ஆழமாய்ப் பதிந்தது. என் உள்ளத்தைக் கவ்விக்கொண்டது. என் இதயத்தை இறுகப் பிடித்துக்கொண்டது. அதை மறுபடியும் மறுபடியும் படித்துப் பரமானந்தம் கொள்கிறேன். அதை இப்பொழுது நினைத்தால் என் உள்ளம் துள்ளுகிறது. ஆம், ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இது உயிரூட்டும் அதி உன்னத வாக்கியம். கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. அது எப்படியென்கிற மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு அப்படிச்செய்தார். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல், ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவன் அல்லன். கிறிஸ்து உங்களில் இருந்தால் சரீரமானது பாவத்தின் நிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும், ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்கு கடனாளிகள் அல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் செய்யக்கூடிய புத்தியுள்ள விருத்தசேதனம் இதுதான் அன்றோ!

பாவம் செய்யும் தன்மை ஒரு கிறிஸ்தவனிடத்தில் அறவே இல்லை என்று சாதிப்பது வீண் விவாதம். அதற்கு வேதத்தி;ல் ஆதாரம் இல்லை. பாவம் செய்யும் தன்மை நம்மிடத்தில் இருக்கிறது. நாம் இப்பொழுது பாவ மாம்சத்தில்தான் குடியிருக்கிறோம். நாம் சாகும்வரை சரீரத்தோடுதான் இருக்கவேண்டும். நாம் இப்பொழுது பாவ உலகில்தான் வாழ்கிறோம். இங்கு சாத்தானின் அதிகாரம் இன்னும் ஓயவில்லை. ஆனால் உலகத்தில் இருக்கிற அந்தகாரத்தின் அதிபதியாகிய சாத்தானைவிட நம்மோடு இருக்கிற ஜீவாதிபதியாகிய இயேசு பெரியவர்.

என்னிடத்தில், அதாவது என் மாம்சத்தில் நன்மை வாசமாய் இருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன். நன்மை செய்யவேண்டும் என்கிற விருப்பம் என்னிடத்தில் இருக்கிறது. நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையைச் செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமை உண்டு என்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். என் மனத்தின் நல்ல பிரமாணத்துக்கு விரோதமாய் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன். இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவைன ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மாம்சத்தினாலே பாவப்பிரமாணத்துக்கும் ஊழியம் செய்கிறேன். தேவனுடைய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பாவக்கொடிகளை அறுத்தெறியும் வண்ணம், தங்களைப் பரம திராட்சத் தோட்டக்காரராகிய எல்லாம் வல்ல கர்த்தரிடத்தில் தங்களை ஒப்படைக்கவேண்டும். கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார். நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். கிறிஸ்துவாகிய என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

உனது வாழ்வில் கிறிஸ்தவக் கனிகள் உண்டா? உனது வேலையில் நல்ல பலன் உண்டா? ஆத்தும ஆதாயம் உண்டா? உனது கிறிஸ்தவத் தொண்டினால் எத்தனை பேர் கிறிஸ்துவை அண்டியுள்ளார்கள்? உனது வாயின் வார்த்தைகளும் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஆத்துமாக்களைக் கிறிஸ்துவண்டை வழிநடத்துகிறதா? உன்னைக் காண்கிறவர்கள் கிறிஸ்துவைக் காண்கிறார்களா? நீ கற்றுக்கொடுக்கும் ஓய்வுநாள் பாடசாலை மூலம் எத்தனை பேர் மனந்திரும்பியுள்ளார்கள்? நீ பணியாற்றும் அலுவலகத்தில் உனது புனிதக் கிறிஸ்தவ நடத்தையால் எத்தனை பேர் கிறிஸ்துவண்டை நடத்தப்பட்டுள்ளார்கள்? உனது வீடடில் வாழும் மக்களும் பிறரும் நீ கிறிஸ்தவன் என்று சாட்சி பகரக்கூடுமா? உனது கிறிஸ்தவ சேவையால் எத்தனை ஆத்துமாக்களை இதுகாறும் கிறிஸ்துவுக்காக ஆதாயம் செய்துகொண்டுள்ளாய்? வேலை செய்வதுதான் என் கடமை. பலன் அளிப்பது அவருடைய கரத்திலிருக்கிறது என்று சொல்லி, நல்ல பலன் கிட்டாவிட்டால் , பழியைக் கடவுள்மீது போட்டுவிட்டு நிர்விசாரமாய் இருக்க நினைக்கிறாயோ? நீ பாவ வாழ்க்கை ஆற்றிவிட்டு, பலன் தருவது அவரது கடமையென்று வீண் கனவு காண்கிறாயோ? நீ கிறிஸ்துவுக்குள்ளாக வெற்றியுள்ள தூய வாழ்க்கையாற்றுங்கால், உனது கிறிஸ்தவப் பணியால் நற்கனிகள் அவர் அருளால் கிடைப்பது திண்ணம். அவரில் நிலைத்திருந்தால் நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பது நிச்சயம்.

திருச்சபை என்றால், குருவானவரும் இன்னும் சில புத்துயிர்க் கிறிஸ்தவர்களும் மாத்திரம் சேர்ந்து செயலாற்றும் குழு என்றும், அதில் உனக்கு ஒரு பங்கும் இல்லை என்றும், சோம்பல்தனமாகக் கைகட்டி வாளாவிருக்கலாம் என்றும் கருதுகிறாயோ? நீ திருத்தொண்டாற்றலே கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ளாய் என்பதை ஒரு நாளும் மறக்கவேண்டாம்.

ஒரு வேளை இதை வாசிக்கும் நண்பர் ஒருவர் இயேசுவால் இரட்சிக்கப்பட்ட அனுபவம் இருந்தும், இன்னும் ஓர் ஆத்துமாவையாவது இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தாதிருக்கலாம். இதுகாறும் உன்மூலமாக ஒருவரும் கிறிஸ்துவைத் தங்கள் தெய்வமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் , உன்னிடத்தில் ஒரு பெரிய குறை உண்டு என்பதை உடனே அறிந்துகொள்வாயாக. உடனே அமர்ந்து, கிறிஸ்துவின் பாதத்தில் உட்கார்ந்து , பரிசுத்த ஆவியானவர்மூலமாக, நீ எதில் தவறியுள்ளாய், உனது குறைவு என்ன, ஜெபக் குறைவா, வேதத்தியானக் குறைவா, கீழ்ப்படியாத குறைவா, ஆத்தும ஆதாயத்தில் அனல் இல்லாத குளிர்ந்த வாழ்வா, ஆழ்ந்து கிடக்கும் ஓர் இரகசியப் பாவமா, மாம்ச இச்சையின் ஆட்சியா, உன் குறை யாது என்று உடனே கண்டு பிடிப்பாயாக. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ நல் வாழ்வு பெறுவான். இதுவே நாம் செய்யத்தக்க புத்தியுள்ள விருத்தசேதனம் அல்லவா? அத்தகையவனே வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை நடத்த தகுதியுள்ளவனாவான். அவன் வாழ்வில் கனிகள் கனிந்து குலுங்கும்.

நண்பரே, இன்று யோசுவா அன்று, கிறிஸ்துதாமே ஒரு கருக்கான கத்தியை உண்டாக்கி உனது அருவருக்கத்தக்க ஆபாச மாம்ச இச்சையை அறுத்துத்தள்ள ஆவலோடு காத்து நிற்கிறார். அவர் இந்தக் கில்கால் உன்னை விருத்தசேதனம் பண்ணட்டும். உன் பாவ மாம்சம் வெட்டி வீசப்பட நீ சம்மதித்து உன்னை அவரது திருக்கரங்களில் சமர்ப்பிப்பாயாக. அவர் கையிலிருப்பது விருத்தசேதன கத்திதான். அது கருக்கான கத்திதான். எனினும் அக்கத்தியால் உனக்கு நன்மை உண்டு என்பதை ஒருக்காலும் மறவாதே. அக்கத்தியால் உன் பாவ மாம்சம் ஆற, நீ சுத்திகரிக்கப்படாவிட்டால் அவரிடத்தில் உனக்குப் பங்கில்லை. கில்காலில் விருத்தசேதனம் பெறாவிட்டால் கானானின் சுதந்திரம் கிட்டாது. அறுவைச் சிகிக்சைக்கு உன்னை அழைக்கிறவர் அன்புள்ளவர் என்பதை ஒருக்காலும் மறக்கவேண்டாம். அவர் உனக்காக எழும்பும் தீயை நீ கடந்து சென்றால் களிம்பு நீங்கிய சுத்தப் பொன்னாக மிளிர்வாய் அன்றோ! கில்கால் விட்டு விடுதல் பாளயம் அல்லவா?

கில்கால் நமக்குக் கற்பிக்கும் நான்காம் பாடம் புதுப்பிக்கப்பட்ட புத்துயிர் வாழ்க்கையாகும். கில்கால் புதுப்பித்தல் பாளயமாகும். இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டுத் தீர்த்த பின்னர் அவர்கள் குணமாகுமட்டும் தங்கள் தங்கள் இடத்திலே பாளயத்திலே தரித்திருந்தார்கள். கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் போட்டேன் என்றார். அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் எனப்படுகிறது. இஸ்ரவேல் புத்திரர் கில்காலில் பாளயம் இறங்கியதிலிருந்து, மாதத்தின் 14ம் தேதி அந்தி நேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்.

இஸ்ரவேலர் பஸ்காவை இப்பொழுது மூன்றாம் தடவையாக ஆசரிக்கிறார்கள். இதற்கு முன்னர் அவர்கள் இரண்டு தடவைகளில் பஸ்காவை ஆசரித்துள்ளார்கள். அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்தை விட்டுப் புறப்படும்பொழுது முதல் தடவையாகப் பஸ்காவைப் புசித்தார்கள். அதிலிருந்து அவர்கள் கில்கால் வரும் வரைக்கும் ஒருநாளும் பஸ்காவை ஆசரிக்கவில்லை. அவர்கள் நிர்விசாரத்தினால் அசட்டை செய்து மறந்து போனதினால் அல்ல. கர்த்தர் வேண்டாம் என்று கண்டிப்பாக கூறியபடியால் அவர்கள் பின்னர் இதுகாறும் பஸ்காவை ஆசரிக்கவில்லை. காரணம் கீழ்ப்படியாமையாலும் அவிசுவாசத்தாலும் முரட்டாட்டக் குணத்தினாலும் அவர்களுக்கு கானான் தேசப் பிரவேசம் மறுக்கப்பட்டது.

அவர்களுக்கு வனாந்தரத்தில் பிறந்த பிள்ளைகளுக்குத்தான் கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது. வனாந்தரத்தில் பிறந்த இந்த இஸ்ரவேல் புத்திரரோ இதுகாறும் விருத்தசேதனம்பண்ணப்படவில்லை. விருத்தசேதனம் பெறாத ஒருவனும் பஸ்காவை புசிக்கக்கூடாது. யாத்திராகமம் 12:48ல் விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் பஸ்காவைப் புசிக்க வேண்டாம் என்று கர்த்தர் கண்டிப்பாய்க் கட்டளை கொடுத்துள்ளார். ஆகவே, கில்காலில் இஸ்ரவேல் புத்திரர் விருத்தசேதனம்பண்ணப்பட்ட பின்னரே அவர்களுக்குப் பஸ்காவைப் புசிக்கும் பரம பாக்கியம் வாய்த்தது. விருத்தசேதனம் இன்றேல், பஸ்கா விருந்து இல்லை. விருத்தசேதனத் துன்பம் இன்றேல், பஸ்காவின் பேரின்பமும் இல்லை. பாவங்களை விட்டுவிடாவிட்டால், பரம வாழ்வு எது? மாம்ச இச்சைகளை ஒழித்து தள்ளாவிட்டால், பரமானந்தம் ஏது? சிகிச்சைக்குப் பின்னரே சுகம். பாவ மாம்ச அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரே பரம சுகம். விருத்தசேதனத்திற்குப் பின்னர்தான் பஸ்கா.

நமது திருச்சபையில் சுகம் இல்லை. காரணம் திருச்சபை குற்றமன்று. கர்த்தரின் குற்றமும் அன்று. குற்றம் நமதே. குற்றம் எனதே. நான் கர்த்தருக்கு கீழ்ப்படியாவிட்டால் எப்படி ஆசீர்வாதம் கிடைக்கும்? நான் பாவம் செய்யும் மாம்ச உறுப்புகளை நசுக்கி எறியாவிட்டால் எப்படிப் பேரருள் பெறமுடியும்? நான் அவருடைய சொற்படி நடக்காவிட்டால் எப்படி அவரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்க்கலாம்? நம்மிடம் பஸ்கா விருந்தின் எக்களிப்பு இல்லாத காரணம் நமது பாவ நுனித்தோல் மாம்சம் இன்னும் விருத்தசேதனம் பண்ணப்படாததே. கிறிஸ்துவுக்குள் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களின் வாழ்வில் பஸ்காவின் பேரானந்தம் பொங்கி வழியும். அவனுக்கு கர்த்தரோடு பஸ்கா உண்ணும் பாக்கியம் கிட்டும். அவரோடு நெருங்கிய உறவு ஏற்படும். பரம ஐக்கியம் புலப்படும். அவன் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பலம் பெற்று, புத்துயிர் அடைவான். கில்கால் புதுப்பிக்கும் பாளயம் அல்லவா?

ஆட்டுக்குட்டியானவரின் பஸ்கா விருந்து ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. அவ்விருந்தில் பங்குபெற நம்மெல்லாரையும் அழைக்கிறார். அழைக்கிறவர் அன்புள்ள ஆண்டவர். நாமோ பாவிகள். அவருடைய சிலுவை இரத்தம் என்னும் கருக்கான கத்தியால் நாம் சகல பாவங்களும் அற சுத்திகரிக்கப்பட்ட பின்னரே, அப் பரிசுத்த பந்தியில் கலந்துகொள்ளலாம். அத்திருவிருந்தை நாம் அருந்தாவிட்டால் ஆன்மப் பட்டினியால் செத்து அழிவோம். இயேசு தரும் இனிய விருந்தால் நாம் உயிர்பெறுகிறோம். உரம் பெறுகிறோம். உறவு பெறுகிறோம். உன்னதபலம் பெறுகிறோம். அவரோடு வாழ உரிமை பெறுகிறோம். அவருக்காக வாழச் சக்தி பெறுகிறோம். உண்டவன் உரம் பெறுவான் என்பது பழமொழி. ஆம், கிறிஸ்து தரும் திருவிருந்தை உண்கிறவன் உயிர்பெற்று, உரம் பெற்று வாழ்கிறான். இந்த உரத்தால் உலகில் அரிய பெரிய காரியங்களை அவருக்காகச் சாதிக்கிறான். இதுகாறும் இவ்வுலகில் ஏதேனும் ஒரு நல்ல காரியத்தைச் சாதித்த அத்தனைபேரும் இயேசு தந்த பலத்தால்தான் அதனைச் சாதித்தார்கள். அவரேயல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யக்கூடாது. முன்னவன் முன்னிருக்க முடியாதொன்றுண்டோ! கில்கால் புதுப்பித்தல் அல்லது புத்துயிர் ஊட்டும் பாளயம் அன்றோ!

இக் காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல. கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபடாவிட்டால் அப்படி ஆகும். ஆகவே, நாம் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில் பங்குபெறவேண்டுமாயின், இவ்வுலகத்தில் அவரோடுகூடப் பாடுபட்டு, அவர் நாம மகிமைக்காக உழைக்கவேண்டும். விருத்தசேதன வேதனையின்றி, பஸ்காவின் பூரிப்பு இல்லை. இவ்வுலகத்தின் சொற்ப ஆயுள் நாளில் அவருக்காகப் பாடுபட்டுச் சேவை செய்தால் யுகாயுகமாக அவரோடு கல்யாண விருந்து உண்டு களித்திருக்கலாம்.

விண்ணுலகம் விரும்பும் திருத்தொண்டுதனை வெற்றியுடன் செய்து முடிக்க வேண்டுமாயின், நாம் தினந்தோறும் விண்ணுலகம் தரும் ஜீவ அப்பத்தைப் புசித்துப் பலப்பட வேண்டும். விண்ணுலகம் மண்ணுலகத்திற்குத் தரும் ஜீவஅப்பம் இயேசு கிறிஸ்துதான். இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் செத்து மடிவது திண்ணம். நாம் ஒவ்வொரு நாளும் ஜீவ அப்பமாகிய இயேசுவை உட்கொள்ளாவிட்டால், நம் ஆன்மா மெலிந்து நலிந்து ஒழிந்துபோம். கிறிஸ்துவால் நாம் ஆட்கொள்ளப்படாவிட்டால், நாம் அவருக்காக ஒன்றும் செய்யமுடியாது.

இயேசு கிறிஸ்து இதயத்தில் பொங்கி வழிய வேண்டும். ஜீவதண்ணீராகிய அவர் உன் உள்ளத்தில் ஊற்றெடுக்கவேண்டும். உள்ளும் புறமும் கிறிஸ்துவால் நிறைந்திருக்கவேண்டும். இத்தகைய இருதயத்தின் நிறைவால் வாய் பேசவேண்டும். அப்பொழுது நமது ஒவ்வொரு சொல்லினாலும் செயலினாலும் இயேசுநாதர் மகிமைப்படுவார். அந்த மகிமையைவிட நமக்கு வேறெந்த மகிமை வேண்டும். இயேசுநாதரின் மகிமையே நமக்கு மகிமை. அவர் கொடுக்கும் விருந்து, நமக்காக மகிமைப்பட்டிருக்கிற பஸ்கா கிறிஸ்துதான். ஆதலால் பழைய புளித்த மாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் (1.கொரி.5:7). எவன் அப்பாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்து குற்றமுள்ளவனாயிருப்பான். எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனப்பானம் பண்ணுகிறான்.

இஸ்ரவேல் புத்திரர் எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள் (யோசு.5:10). எரிகோவில் குடியிருக்கிறவர்கள் இஸ்ரவேலரின் சத்துருக்கள். அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாக பஸ்காவைப் புசித்து ஆனந்தம் கொண்டாடினார்கள். என்ன மகிழ்ச்சியான காட்சி! என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் எனைத் தொடரும். யுத்தப்பூமியில் பகைவருக்கு எதிரே பாங்காய் ஒரு பந்தி நமக்கு ஆயத்தமாய் இருக்கிறது. எத்துணை ஆறுதலான, அருமையான செய்தி! போருக்குப் புறப்படுமுன் போர்வீரர்கள் கர்த்தர் கொடுக்கும் விருந்துணவை உண்ணவேண்டும். இவ்விண்ணுணவு உண்ணாவிட்டால், இம் மண்ணுலகில் நமக்கு வெற்றியேது? வெற்றிகொள்ள வன்மையேது? எரிகோவின் பகைவரை வீழ்த்துமுன் கில்காலில் பஸ்கா உண்ணவேண்டும். கில்காலின் பஸ்கா இன்றேல், எரிகோவில் வெற்றியில்லை. கிறிஸ்து இல்லாத வாழ்க்கை, வெற்றியில்லாத வாழ்க்கை.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

07. உண்மையின் பரிசு

00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

08. வெற்றி கொண்டாடல்

Recommended

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 13: கர்த்தருடைய இராப்போஜனம்

Song 162 – Vinilum

Song 047 – Ootru

பாடல் 017 – ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன

பாடல் 017 – ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.