• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

14. சுதந்திரத்தைச் சுதந்தரித்தல்

August 18, 2018
in கிறிஸ்தவ நூற்கள், கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
0 0
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  1. வெற்றியின் கனி

தியான வாசிப்பு: யோசுவா 11:15-23

தேசம் அமைதலாயிருந்தது

கர்த்தர் வாக்குத் தவறாதவர். அவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கு இப்பொழுது நிறைவேறிவிட்டது. ஆபிரகாமின் பின் சந்ததியாருக்குக் கானான் தேசத்தைக் கொடுப்பேன் என்று ஆண்டவர் ஆணையிட்டிருந்தார். அவர் ஆணை என்றேனும் பொய்த்ததுண்டோ? மனம் மாற அவர் மனிதன் அல்ல. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம். அவர் அழியாதவர். அவரது வாக்கு அழியாதது. அவரை விசுவாசிக்கிறவர்கள் ஒருக்காலும் ஏமாற்றம் அடைந்ததில்லை. இஸ்ரவேலர் கர்த்தரின் சகாயத்தால் கானான் தேசத்தை அடைந்தார்கள். யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசத்தைப் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே சுதந்திரமாகக் கொடுத்தான். யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதியாயிருந்தது (யோசு.11:23).

பகைவர் அனைவரும் அறவே இன்னும் சங்கரிக்கப்படவில்லை. தேசம் முழுமையும் இன்னும் அவர்கள் உரிமையாகவில்லை. எனினும் கானான் நாடு முழுவதும் அவர்களுடையதுதான். தேசமனைத்தும் அவர்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்டாயிற்று. கர்த்தருடைய உதவியால் அவர்கள் வெல்லமுடியாத விரோதிகள் இந்நாட்டில் இப்பொழுது யாரும் இல்லை. ஆணிவேர்போன்ற அத்தனை பகைவர்களும் அழிக்கப்பட்டாயிற்று. இப்பொழுது மீந்திருக்கிற பகைவர்கள் இஸ்ரவேலின் கர்த்தருடைய வல்லமைக்குமுன் எதிர்த்து நிற்க முடியுமோ? இதுகாறும் கர்த்தர் இஸ்ரவேலருக்காகச் செய்த மகத்தான யுத்தத்தைக்கண்டு, அவர்கள் நெஞ்சம் கரைந்துபோயுள்ளார்கள். அவர்கள் ஈரல் குலைநடுக்கம் கண்டுள்ளது. இதயம் சோர்ந்துள்ளது. அவர்கள் சிதறடிக்கப்பட்டுச் சிந்தை கலங்கியுள்ளார்கள். இப்படிப்பட்டவர்களை எதிர்த்துப் போராட இஸ்ரவேல் பட்டாளம் அனைத்தும் ஒன்று திரண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இப்பொழுது இல்லை. முறியடிக்கப்பட்டு, சிதறுண்டிருக்கிற இப்பகைவரை இஸ்ரவேல் படை மொத்தமாக அன்று, தனித் தனிகோத்திரமாக எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளலாம். ஆகவே, இதுகாறும் இஸ்ரவேலர் பிடித்துக்கொண்ட தேசம் அவர்கள் குடியிருப்புக்குப்போதுமானது. ஆகையால், இவ்வெற்றிப் பூமியை இஸ்ரவேலருக்கு அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே யோசுவா சுதந்தரமாகக் கொடுத்தான்.

இனி ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்கள் அருகே உள்ள பகைவர்களை எதிர்த்துப் போராடி, வெற்றி கொண்டு, தங்கள் சுதந்திரப் பூமியைப் பெரிதாக்கிக்கொள்ளவேண்டும். இஸ்ரவேல் ஜாதி மொத்தமாக ஒன்றுகூடி யுத்தம்பண்ணுங்கால் ஏற்பட்ட அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இப்பொழுது தனித்தனிக் கோத்திரமாக அவர்கள் போராடல் வேண்டும். அவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தின போர் வாழ்க்கையில் அவர்கள் படித்துள்ள நல்ல பாடங்களையெல்லாம் ஒருகாலும் மறவாது, அவற்றை மனதில் இருத்திக்கொண்டு, இப்பொழுது தனித் தனிக் கோத்திரமாகப் போர்செய்து, வெற்றி பெற்று, தாங்கள் அடைந்துள்ள சுதந்திரத்தை விருத்தியாக்கவேண்டும். நாடு முழுவதும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது. எனினும் அவற்றை மொத்தமாகவோ, அல்லது இப்பொழுது தனியாகவோ, சுதந்தரித்து அவற்றை உரிமையாக்கிக்கொள்ளவேண்டியது அவர்களது கடமை. இப்பொறுப்பை அவர்கள் ஏற்காது, தட்டிக் கழித்துவிட்டால், குற்றம் கர்த்தருடையது அன்று, இஸ்ரவேலரையே சாரும். மொத்தமாக வாக்களிக்கப்பட்டுள்ள கானான் நாட்டை அவர்கள் தனித்தனியாக உரிமையாக்கிப் பெருக்கிக் கொள்ளவேண்டியது அவர்களுடைய தவிர்க்கமுடியாத பொறுப்பாகுமன்றோ!

இயேசு கிறிஸ்து மொத்தமாக மனுக்குலம் அனைத்திற்கும் பரம கானானை வாக்குப்பண்ணியுள்ளார். அகில உலகத்திலுள்ள அத்தனை மனிதருக்கும் வேண்டிய இரட்சிப்பையும் மோட்சத்தையும் அவர் சிலுவையில் சம்பாதித்து, முடித்துவிட்டார். இனி அவர் நமக்காக சம்பாதியாத எப்பொருளும் இல்லை. நமக்கு வேண்டிய எல்லாப் பேரின்ப நன்மைகளையும் அவர் சிலுவையில் பரிபூரணமாய்ச் சம்பாதித்து முடித்துவிட்டார் என்பதற்கு அறிகுறியாகச் சிலுவையில் முடிந்தது என்று வெற்றிமுரசு கொட்டவில்லையோ? மனுக்குலம் அனைத்திற்கும் வேண்டிய பரமநன்மைகளை இயேசுநாதர் தமது அவதார காலத்தில் சம்பாதித்து, அவற்றை எல்லா மக்களுக்கும் வாக்கருளியுள்ளார். எனினும் ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு மனுஷியும் அப்பரம நன்மைகளில் தனக்குரிய பாகத்தை விசுவாசக்கரம் நீட்டி, பெற்று அனுபவிக்க வேண்டியது தனி ஒவ்வொரு மனிதனின் கடமையன்றோ! இயேசுநாதர் அகில உலக இரட்சகர்தான். எனினும், ஒவ்வொரு தனி மனிதனும் அவரைத் தனது சொந்த இரட்சகராக ஏற்று, அனுபவியாவிடில், அவ்வெறும் அறிவால் தனிப்பட்ட அவனுக்கு ஏற்படும் பயன் யாது? காவேரியில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால், நான் அதை அள்ளிப்பருகாவிட்டால், எனது தாகம் தீருமோ? தண்ணீர் தாகத்தைத் தீர்க்கும் என்ற பொது அறிவு மாத்திரம் இருந்தால் எனது தாகம் தீராது. அல்லது காவேரி கரைபுரண்டு ஓடுவதால் மாத்திரம் தாகம் தீராது. காவேரியில் நிறை தண்ணீர் இருப்பது மிகமிக நல்லதுதான். எனினும், நான் அத்தண்ணீரை அள்ளி அள்ளிக் குடிக்காவிட்டால் எனது தாகம் தீர்ந்து போகாதே.

கல்வாரியில் கிறிஸ்துவின் இரத்தம் கரைபுரண்டு ஓடுகிறது. மனுக்குலம் அனைத்தின் தாகத்தைப் போக்கக்கூடிய போதுமான ஜீவத்தண்ணீர் கொல்கொதாவில் உண்டு. எனினும் ஒவ்வொரு ஆத்துமாவும் விசுவாசக்கரம் நீட்டி, அந்த ஜீவத்தண்ணீரை அள்ளிப் பருகினாலன்றி, அவ்வாத்துமாவுடைய தாகம் தீர்ந்து போகாதே. ஆண்டவர் மனுக்குல ஈடேற்றத்திற்காகத் தாம் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார். இரட்சிப்பின் கிரியை சிலுவையில் ஆற்றி, முடிந்தாகிவிட்டது என்ற பரமதிருப்தியோடு அவர் பரலோகம் சென்று, தேவனுடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறார் (எபி.1:3). இரட்சிப்பில் தேவன் செய்யவேண்டிய கடமை செய்து முடிந்துவிட்டது. இயேசுநாதர் மனுக்குலத்திற்காக அந்தகாரலோகாதிபதிகளோடு, போராடின யுத்தம் வெற்றியோடு முடிந்ததால், அவர் வெற்றியின் திருப்தியோடு அமைதலாகப் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

ஆண்டவர் பெற்ற வெற்றியின் கனியாக அவருக்கு அமைதல், சாந்தி, சமாதானம், பேரானந்தம் போன்ற பரம பண்புகள் நிரந்தர உரிமையாயிற்று. இப்பண்புகளை அவர் தமக்காகச் சம்பாதிக்கவில்லை. தமக்கென்று வைத்துக்கொள்ளவும் அவர் விரும்புகிறதில்லை. இப்பேரின்பங்களையெல்லாம் மனுக்குலத்திற்காகவே தமது மனித அவதாரகாலத்தில் அவர் சம்பாதித்துள்ளார். தாம் சிலுவையில் சம்பாதித்த சாந்தியையும், இரட்சிப்பையும், பேரின்பத்தையும் மனிதருக்குக் கொடுப்பதில்தான் பேரின்பம் காண்கிறார் இயேசு கிறிஸ்து. அவர் இப்பூவுகில் மனிதனாக அவதரித்தும் மனிதனுக்காகவே அவர் அவதார வாழ்க்கை ஆற்றியதும் மனிதனுக்காகவே, அவர் சிலுவையில் மரித்ததும் மனிதனுக்காகவே. அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததும் மனிதனுக்காகவே. அவர் மீண்டும் 40 நாள் மகிமையான சரீரத்தோடு இப்பூவுலகில் தரிசனம் கொடுத்ததும் மனிதனுக்காகவே. அவர் வெற்றி வேந்தராகப் பரலோகம் எழுந்தருளிப்போனதும் மனிதனுக்காகவே, அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக்கண்டு, பூரணத் திருப்தியோடு மகிமையின் தெய்வமாக இப்பொழுது அமைதலாகப் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதும் மனிதனுக்காகவே. பெந்தெகொஸ்தே நாளில் அவருடைய பரிசுத்த ஆவியானவர் பொழியப்பட்டதும் மனிதனுக்காகவே. இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்ற வாக்கு ஒரு விசுவாசிக்கு எவ்வளவு அருமையான வாக்காகும். இயேசுநாதர் இன்று பரிசுத்தாவியானவர்மூலமாக விசுவாசிகளின் இதயங்களில் வாசம்பண்ணுகிறார். இயேசுவை விசுவாசிக்கிறவன் எத்துணை பாக்கியவான். இயேசுவை விசுவாசிக்கிறவள் எவ்வளவு பாக்கியவதி.

ஆண்டவரே, எனக்கு விசுவாசம் தாரும். இயேசுநாதா, என் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும். இயேசுநாதா, உமது சிலுவை வெற்றியின் கனியாக உமக்கு அமைதல் கிடைத்துள்ளது. சமாதானம் கிடைத்துள்ளது. சாந்தி கிடைத்துள்ளது. உம்மிடத்திலுள்ள அந்த அமைதல் எனக்காகச் சம்பாதிக்கப்பட்டது. அதை எனக்குத் தருவதாக வாக்குச்செய்துள்ளீர். கேளுங்கள், அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள் என்று சொன்ன தெய்வமே, இதோ உமது அமைதல், சமாதானம், உமது சாந்தி எனக்கு வேண்டும் என்று கெஞ்சி கேட்கிறேன். சுவாமி, உமது சமாதானத்தை எனக்குத் தாரும். நான் கேட்டவுடனே இதோ, உமது கரம் நீட்டி அதை எனக்குத் தருகிறீர். அபாத்திரனாகிய நான் எனது விசுவாக் கரம் நீட்டி, அதை பெற்றுக்கொள்ளுகிறேன். இதோ நீர் எனக்கு இலவசமாகத் தரும் சாந்தியை நான் விசுவாசத்தோடு பெற்று அனுபவிக்கிறேன். இதோ, இயேசுவின் இதயத்தினின்று ஊற்றெடுக்கும் சாந்தி என் இதயத்திலும் பொங்கி வழிகின்றதே. இயேசுவின் நெஞ்சினின்று புறப்பட்டுப் பெருக்கெடுத்தோடும் ஆன்மசமாதானம், அமைதல், உன் உள்ளத்திலும் பிரவாகித்து வழிந்தோடுகிறதே! என்னை விசுவாசிக்கிறவனுடைய உள்ளத்திலிருந்தே ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று சொன்ன தெய்வமே, இதோ, சாந்தி நதி என் இதயத்தில் பொங்கி ஓடுகிறதே. நான் விசுவாசத்தால் அனுபவிக்கும் இந்தச் சாந்தியை நீர் எனக்கு பிச்சையாக தந்தீர். உமது சமாதானத்தை நான் இலவச ஈவாகப் பெற்றுக்கொண்டேன். தாகமாயிருந்த நான் ஜீவநதியாகிய உம்மிடம் வந்து பணமுமின்றி, விலையுமின்றி, அமர்ந்த ஜீவத்தண்ணீர் பெற்றுக்கொண்டேன். நீர் எனக்குத் தருமமாகக் கொடுத்த இச்சாந்திக்காக இதயபூர்வமான நன்றியோடு, தலைகுனிந்து உம்மை வணங்குகிறேன். சாஷ்டாங்கமாக விழுந்து உம்மைப் போற்றுகிறேன். நன்றி, நாதா.

சாந்தியுடன் அமைதியாய்ப் புனித கிறிஸ்தவாழ்க்கை ஆற்றவேண்டும் என்று கூறுங்கால், நாம் வேலை செய்யாத சோம்பேறிகளாய், கை கட்டி, வாய் புதைத்து, சும்மா இருக்கவேண்டும் என்பது அர்த்தமன்று. ஆண்டவர் தமது அவதார காலத்தில் அமைதியோடு சாந்தசொரூபியாய், சாந்தியின் வடிவமாய், சமாதானத்தின் பிரபுவாய், அமரிக்கையின் உறைவிடமாய், அடக்கத்தின் இருப்பிடமாய் வாழ்க்கை ஆற்றினார். எனினும் அவரைப்போல அல்லும் பகலும் அயராது அரும்பாடுபட்டு உழைத்து, மாபெரும் சாதனைகளைச் சாதித்தவர் அகில உலகம் எங்கணும் எவருமில்லர்.

மனுக்குலம் அனைத்தும் யுகாயுகமாய்ச் செய்யமுடியாததைத் தனி மனிதராக, ஏக தேவசுதனாக இயேசுநாதர் தமது 33 அரை ஆண்டு அவதார காலத்தில் செய்துமுடித்துவிட்டார். அவரைப்போல, வியர்வை கொட்ட கை கடுக்க, மேனி இளைக்க, உழைத்தவர் யார்? அவரைப்போல கால் கடுக்கநடந்து, தாகமென்றும் பசியென்றும் பாராது, தவறிப்போன ஆத்துமாக்களைத் தேடித் திரிந்தவர் யார்? அவரைப்போல மணிக்கணக்காய் மணிமணியாய்ப் பொன்மொழிகளை உதித்தவர் யார்? இளைப்பாறாது, கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது, இரவெல்லாம் ஜெபித்தவர் யார்? மேனியின் வியர்வையெல்லாம் இரத்தத் துளிகளாய் விழும் வண்ணம், தனது உடல் உள்ளம், இதயத்தைப் பிழிந்து உலகுக்குக் கொடுத்தவர் யார்? தனது திருமேனியில் ஒரு சொட்டு இரத்தமுமில்லாது கடைசி சொட்டு இரத்தம் வரை பிறருக்காகச் சிலுவையில் வடித்துக் கொடுத்தவர் யார்?

யதா தேவா ததா பக்தா என்பர் ஆன்றோர். தெய்வம் அப்படியே அடியவரும் அப்படியே. இயேசுநாதர் எப்பொழுதும் கிரியை ஆற்றிவருகிறார். அவரது தொண்டர்களும் தொண்டு புரிந்துகொண்டுதான் இருக்கவேண்டும். எனினும், அலுவல் மத்தியிலும் அமைதல் கிட்டுகிறது அவரது அடியாருக்கு. அமைதலோடு அலுவலாற்ற வேண்டும் கிறிஸ்தவர்கள். ஆத்திரமும் பரபரப்பும் பதற்றமும் கலக்கமும் வீண் கவலையும் கிறிஸ்தவர்கள் களைந்தெறியவேண்டிய முள்களாகும். அவர்களுக்கு உலகத்தில் துன்பமே இல்லை என்று ஆண்டவர் சொல்லவில்லை. உலகில் உங்களுக்கு அநேக உபத்திரவங்கள் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள் என்று தம் மக்களை ஆண்டவர் தேற்றுகிறார். காரணம் அவர் உலகத்தை ஜெயித்துவிட்டார். ஓநாய்கள் மத்தியிலுள்ள ஆடுகள்போல்தான் விசுவாசிகள் இவ்வுலகத்தில் இருக்கின்றனர். எனினும், அவர்கள் அஞ்சவேண்டியதில்லை. காரணம், அவர்களுக்கு ஓர் ஒப்பற்ற நல்ல மேய்ப்பர் இருக்கிறார்.

ஆகையால், அவர்கள் தாழ்ச்சி அடையார்கள். இயேசு அவர்களைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவர்கள் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்குப் பயப்படார்கள். காரணம், கிறிஸ்து அவர்களோடுகூட இருக்கிறார். அவர்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் சாத்தியும் சமாதானமும் அமரிக்கையும் அமைதலும் அவர்களைத் தொடரும். காரணம், அவர்களோடு இருக்கிற தெய்வம் சமாதானப்பிரபு. தீடீரென்று உலகில் எழும் புயல் மத்தியிலும் அவர் அடியாருக்கு அமைதல் கிட்டுகிறது. உலகில் எழும் புரட்சி சர்ச்சைகள் மத்தியிலும் அவர்களுக்குச் சமாதானம் கிடைக்கிறது. அது உலகம் கொடுக்கிற சமாதானம் அன்று. கிறிஸ்து கொடுக்கிற சமாதானம் ஆகும். ஆகவே, அச்சமாதானத்தை உலகம் அவர்களைத் திக்கற்றவர்களாக விரட்டி அடிக்கலாம். ஆனால், கிறிஸ்துவோ அவர்களைத் திக்கற்றவர்களாக விடார். அவர்களைத் தேற்றுவான் வேண்டி, சதாகாலமும் அவர்களோடு கூட இருக்கும் ஒரு தேற்றரவாளனையே அவர்களுக்குக் கொடுத்தார். ஆகவே, உலகத்தின் பட்டயமோ நாசமோசமோ, வேறெந்தத் துன்பமோ கிறிஸ்துவின் சாந்தியை விட்டு அவர்களைப் பிரிக்கமுடியாது. ஆ! கிறிஸ்தவ விசுவாசிகள் எவ்வளவு பாக்கியசாலிகள்! எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எவ்வளவு அருமையான பேறு பெற்றவர்கள்! கிறிஸ்தவ விசுவாசியே பாக்கியவான்.

கிறிஸ்தவன் சாந்தம் தவழும் முகத்தை உடையவன். கிறிஸ்தவன் அமைதல் குடிகொள்ளும் அகத்தை உடையவன். கிறிஸ்தவன் சமாதானம் பொங்கும் நெஞ்சம் கொண்டவன். கிறிஸ்தவன் சாந்தி பெருக்கெடுத்தோடும் இதயம் படைத்தவன். கிறிஸ்தவன் பேரின்பம் பொங்கும் உள்ளம் உடையவன். இப்பேரின்பத்திற்குக் காரணம் யாது? இவ்வானந்தமான அமைதலுக்குக் காரணம் யாது? கிறிஸ்து அவன் பாவத்தையெல்லாம் மன்னித்துவிட்டார் என்ற நிச்சயமே. என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே. மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்தவிட்டாரே. ஆடுவோம் பாடுவோம் கூடுவோம் ஒன்றாய் மகிழ்கொண்டாடுவோம்! எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ அவன் பாக்கியவான், எவனுடைய அக்கிரமத்தை கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடம் இல்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் சகல பாவங்களுமற என்னைக் கழுவிச் சுத்திகரித்துவிட்டது என்று புள்ளிமான்போல துள்ளிஆடுகிறான் கிறிஸ்தவன். செக்கச்சேவேரென்றிருந்த என் பாவம் உறைந்த மழையைப்போல வெண்மையாகிவிட்டதே. இரத்தாம்பரச் சிவப்பாயிருந்த என் பாவம் பஞ்சைப்போல வெண்மையாகிவிட்டதே என்று பூரிப்படைகிறான் கிறிஸ்தவன்.

கள்ளன் போன்ற என்னைக் கழுவி எடுத்து, வெள்ளன் ஆக்கிவிட்டாரே என்று துள்ளி மகிழ்கிறான் கிறிஸ்தவன். கிறிஸ்துவின் இரத்தத்தால் நான் கழுவப்பட்டிருக்க, இனி யார் என்னை அசுத்தன் என்று குற்றுஞ்சாட்டக் கூடும்? கிறிஸ்து என் பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்திலே வீசி எறிந்து புதைத்திருக்க, அவற்றை மீண்டும் வெளியே எடுத்து அம்பலப்படுத்தக்கூடியவன் யார்? கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் தம் இரத்தத்தால் கழுவி, மன்னித்து, அவற்றை அறவே மறந்து போயிருக்க, அவற்றை மீண்டும் பட்டவெளிச்சமாக்கக் கூடியவன் யார்?

கிறிஸ்து மன்னித்தது மன்னித்ததே. அவற்றை மன்னிக்கவில்லை என்று மறுத்துரைக்கக் கூடியவன் யார்? கிறிஸ்து தம் தூய இரத்தத்தால் சுத்திகரித்தது சுத்திகரிக்கப்பட்டதே. அதை இல்லை என்று எதிர்த்துரைப்பவன் யார்? அவர் உறைந்த பனியைப்போல வெண்மையாக்கிய உள்ளத்தை கறுப்பு என்று மறுப்புக்கூறுபவன் யார்? அவரால் மன்னிக்கப்பட்ட பாவம் என்றும், மன்னிக்கப்பட்ட பாவமே. அவர் பரிசுத்தவானே. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. ஆ! கிறிஸ்தவன் எவ்வளவு மேன்மை பெற்றவனாகிவிட்டான். கிறிஸ்துவை நம்பியிருக்கிற அவன் பின்னை ஏன் பேரின்பம் பொங்கித்துள்ளமாட்டான். ஆ! பாவ மன்னிப்பின் நிச்சயம் ஒருவனது அகத்தில் எவ்வளவு அமைதலையும், சாந்தியையும், சமாதானத்தையும் Nபுரின்பத்தையும் கொண்டு குவித்துவிடுகிறது பாருங்கள்.

சிலுவை வெற்றியின் கனியான அமைதல், ஒரு கிறிஸ்தவனின் உடமை ஆகிறது. கிறிஸ்துவின் வெற்றி கிறிஸ்தவனின் வெற்றி ஆகிறது. உலகம், மாம்சம், பிசாசுபோன்ற பகைவர்களை மடங்கடிக்க முடியவில்லையே என்று இன்று நாம் முடங்கிக் கொண்டிருக்கவேண்டியதில்லை. கிறிஸ்து உலகத்தை வென்றுவிட்டார். கிறிஸ்து மாம்சத்தை வென்றுவிட்டார். கிறிஸ்து பிசாசை வென்றுவிட்டார். அவர் கண்ட வெற்றி நாம் கண்ட வெற்றியே. ஆமென், அல்லேலூயா! கிறிஸ்து அடைந்த வெற்றி இப்பொழுது விசுவாசத்தால் எனக்குச் சொந்தமாகிவிட்டதே. அல்லேலூயா! இனி உலகமோ, மாம்சமோ, பிசாசோ என்மீது உரிமை கொண்டாட முடியாது. அவை என்னை அடிமையாக்கிக்கொள்ளமுடியாது. அவற்றிற்கு என்மீது இனி அதிகாரம் கிடையாது. கிறிஸ்து ஒருவருக்கே என்மீது இனி அதிகாரம் உண்டு. ஆ! அவரது அதிகாரம் எனக்கு ஆனந்த சாகரம்! அவரது ஆதிக்கத்திற்குட்பட்ட என்னை உலகமோ, மாம்சமோ, பிசாசோ தொடவே முடியாது. அவரது அன்பின் நெஞ்சத்திலே அமர்ந்திருக்கும் ஆட்டுக்குட்டியாகிய என்னை ஒருவனும் ஒருக்காலும் பறித்துக்கொள்ளமுடியாது. அவரது அன்பின் இதயத்தைவிட்டு என்னைப் பிரிப்பவன் யார்? ஆ! இயேசுவே நீர் எனக்குச் சொந்தமாகிவிட்டீரே நான் உமக்குச் சொந்தமாகிவிட்டேனே. இதைவிட வேறென்ன மோட்ச இன்பம் எனக்குவேண்டும். நீரே பேரின்பம். நீரே என் சாந்தி. நீரே என் சமாதானம். நீரே என் மீட்பு. நீரே என் பரிசுத்தம். நீரே என் நீதி. நீரே என் ஆன்ம அமைதல். இயேசுவால் என் இதயம் அமைதலாயிருக்கிறது.

தேசம் அமைதலாயிருந்தது (யோசுவா 11:23).

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

15. திருப்தியுள்ள வாழ்வு

00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

16. சீடர்களின் பரிசு

Recommended

பாடல் 164 – நான் வணங்கும் தெய்வமே

பாடல் 164 – நான் வணங்கும் தெய்வமே

0. பாக்கியவான்கள் யார்?

2. இரண்டாம் பேறு

Song 215 – Jeevanulla

Song 141 – Palaandu

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.