• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

சிந்தனைத் துளிகள்

January 4, 2016
in வேதாகம ஆய்வு
0 0
இயேசு கிறிஸ்துவின் வரலாறு

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி.25:11)

  1. ஜெபத்தின் இரகசியம்

ஜெபத்தின் இரகசியம், ஜெயத்தின் இரகசியம்.

ஜெபத்தின் இரகசியமென்றால் – இரகசியத்தில் ஜெபம்

  1. கர்த்தருடைய வேலை

கர்த்தரே உன்னை நடத்தவேண்டுமென்று நீ விரும்புவாயானால், உன்னுடைய முக்கிய வேலை கர்த்தருடைய வேலையாயிருக்கவேண்டும்.

  1. நன்றி – நம்பிக்கை

இதுவரைக்கும் கர்த்தர் செய்த உதவிக்கு நன்றியுள்ளவனாயிரு. இனி அவர் செய்யப்போகும் உதவிக்கு நம்பிக்கையுள்ளவனாயிரு.

  1. கர்த்தருடைய வசனம் படி

கர்த்தருடைய வசனத்தை மனப்பாடமாய்ப் படி. நீ அதன்படி செய்வாயானால், கர்த்தர் அதை உன் இருதயத்தில் நன்றாய்ப் பதிவு செய்து விடுவார்.

  1. சிறு விளக்கின் ஒளி

பிரகாசிப்பதற்கு நீ ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு சிறு விளக்கின் ஒளியில்தான் காணாமற்போன வெள்ளிக்காசு கண்டுபிடிக்கப்பட்டது.

  1. கர்த்தரை நம்பு

மேகம் சூரியனை மறைக்கும்போது, மேகத்தின் பின்னால் சூரியன் இருப்பதை நம்புகிறாய். அப்படியே கர்த்தர் தமது முகத்தை மறைக்கும் பொழுது அவர் அன்பற்றவர் அல்ல என்று நம்பு.

  1. பெலன் பெறும் வழி

நாம் ஆவிக்குரிய விஷயங்களில் போராடப் போராடப் பெலத்தின்மேல் பெலன் பெறுகிறோம்.

  1. பரலோக இன்பங்கள்

பரலோக இன்பங்கள் ஆரம்பிக்கிறது பூலோகத்தில். அது பூரணப்படுகிறது பரலோகத்தில். பரலோகம் என்றால்….. ஆயத்தப்பட்டவர்களுக்காக ஆயத்தமாக்கப்பட்ட இடம்.

  1. விசுவாசம்

விசுவாசக் கண்ணால் கிறிஸ்துவைக் காணலாம்.

விசுவாசக் கரத்தால் கிறிஸ்துவைத் தொடலாம்.

விசுவாச வாயால் கிறிஸ்துவை ருசி பார்க்கலாம்.

விசுவாச காலால் கிறிஸ்துவைச் சேரலாம்.

விசுவாச இதயத்தால் கிறிஸ்துவை அடையலாம்.

  1. இயேசுவின் காயங்கள் ஏழு!

இயேசுவின் கைகளும் கால்களும் ஆணிகளினால் சிலுவையில் அறையப்பட்டன. போர்ச்சேவகன் ஈட்டியினால் அவர் விலாவில் குத்தினான். தலையில் ஒரு முள்முடியை வைத்து கோலினால் அடித்தார்கள். அவருடைய முதுகு சாட்டையைக்கொண்டு அடித்ததினால் உழவுசாலுபோல் உழப்பட்டது. இதெல்லாம் நீசப்பாவியாகிய எனக்காகத்தான், உனக்காகவும்தான்.

  1. திரும்பிப் பாராதே!

கர்த்தர் தம்முடைய ஊழியத்துக்கு உன்னை அழைத்துஅனுப்பும் போது யார் உன்னைப் பின்பற்றுகிறார்கள் என்று திரும்பிப் பார்க்காதே.

  1. பரிசுத்தம்

பரிசுத்தம் என்பது நாம் நல்லவர்களாய நடந்துகொள்வதால் நமக்குக் கொடுக்கப்படுகிற கூலி அல்ல, அது இலவசமாய் இயேசு கிறிஸ்துவின்மூலம் தேவன் நமக்கு இலவசமாக வழங்கம் கொடை. நமது பரிசுத்தம் கிறிஸ்துவிடம் நம்மை வழிநடத்தாது. கிறிஸ்துவே நம்மைப் பரிசுத்தத்திற்கு வழி நடத்துகிறவர்.

  1. கிறிஸ்தவம் என்றால் என்ன?

கிறிஸ்தவம் ஒரு மதமா? அல்ல, அல்ல. அது கிறிஸ்துவோடுகூட இணைந்து வாழும் ஒரு புதிய அனுபவம். புது சிருஷ்டி.

  1. சிலுவையும் கிரீடமும்

எந்த ஆத்துமா முறுமுறுக்காமல் பாரமான சிலுவையசை; சுமக்கிறதோ, அந்த ஆத்துமாவுக்கு ஆண்டவர் பிரகாசமுள்ள கிரீடத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்.

  1. இன்று சம்பாஷித்தீர்களா?

இன்று உங்கள் பிள்ளைகளோடு சம்பாஷித்தீர்கள்.

இன்று உங்கள் மனைவியோடு சம்பாஷத்தீர்கள்.

இன்று உங்கள் புருஷனோடு சம்பாஷித்தீர்கள்.

இன்று உங்கள் பெற்றோரோடு சம்பாஷித்தீர்கள்.

இன்று உங்கள் சகோதரர்களோடு சம்பாஷித்தீர்கள்.

இன்று உங்கள் நண்பர்களோடு சம்பாஷித்தீர்கள்.

இன்று உங்கள் போதகரோடு சம்பாஷித்தீர்கள்.

உங்கள் இரட்சகர் இயேசுவோடு சம்பாஷித்தீர்களா?

  1. குற்றம் கண்டு பிடிப்பது

குற்றம் கண்டுபிடிப்பதே ஒரு தொழிலாய் இருப்பவனுக்கு நற்காரியங்கள் எவைகள் என்று புலப்படாது. பிறர்மீது குற்றங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பவன் தன் குறைகளை வளரவிட்டுக் கொண்டே இருக்கிறான்.

  1. விசுவாசியைக் குறித்த பழமொழி

சில விசுவாசிகளைக் குறித்து ஒரு பழமொழி உண்டு. அது அவர்கள் பொய்யையும் பேசமாட்டார்கள். உண்மையையும் சொல்லமாட்டார்கள். உன் ஜீவயம் எப்படி?

  1. தேவனால் பிறந்தவன்

தாமரைக் கொடியின் இலை தண்ணீரில் படர்ந்து வளர்ந்தாலும் தண்ணீர் அதில் ஒட்டிக்கொள்வதில்லை. அதுபோலவே ஒரு தேவனுடைய மனுஷன் அசுத்தமான இவ்வுலகில் ஜீவித்தாலும் உலக மாயைகளோ, சிற்றின்பங்களோ, உலக கறைகளோ அவன்மேல் புரளுவதில்லை. தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்.

  1. பாவமும் பாவியும்

பாவம் செய்ய எதிர்பாராதே!

பாவத்தை எதிர்க்காமலும் இராதே!

பாவி நான் என்பதை ஏற்க மறுக்காதே!

பாவத்தைப் பிறர்மேல் ஏற்றி மகிழாதே!

  1. கூட இருக்கிறவர்

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை,

உன்னைக் கைவிடுவதுமில்லை என்று தேவன் மூன்றுதரம் வாக்குப்பண்ணியிருக்கிறார்.

  1. இருதரம் பிறக்குதல்

ஒருதரம் பிறந்தவர் இருதரம் மரிப்பதும் இருதரம் பிறந்தவர் ஒருதரம் மரிப்பதும் உண்மையே. நீ மரணத்தக்கு பயப்படுகிறாயா? அல்லது மரணம் உன்னைக் கண்டு பயப்படுகிறதா?

  1. மலைகளை அசைக்கும் விசுவாசம்

உன் விசுவாசம் மலைகளை அசைக்கிறதா? அல்லது மலைபோன்ற பிரச்சனைகள் உன்னை அசைக்கிறதா?

  1. ஜெபத்தின் நிறை

தேவன் ஜெபத்தின் நிறையைப் பார்ப்பாரேயன்றி எண்ணிக்கையைப் பாரார்.

  1. ஜெபமாகிய கோல்

ஜெபமாகிய கோல் துன்பமென்னும் கற்பாறையினின்று ஆசீர்வாதமென்னும் நீரூற்றைப் புறப்படச் செய்கிறது.

  1. சர்வாயுத வர்க்கம்

சர்வாயுத வர்க்கத்தை அணிந்துகொண்டு சாய்வு நாற்காலியில் தூங்குவதெப்படி?

  1. நாம் அறியலாம்

பரீட்சையில் படிப்பாளியை அறியலாம்.

கொந்தளிப்பில் மாலுமியை அறியலாம்

துன்பத்தில் விசுவாசியை அறியலாம்

கனியில் மரத்தை அறியலாம்.

சிலுவையில் இயேசுவை அறியலாம்.

  1. இயேசு கிறிஸ்து கிரியை செய்கிறார்

கிறிஸ்து நம்மில் கிரியை செய்கிறார் என்பதை உணரும்போது, நாம் அநேக அற்புதங்களை நடப்பிக்கிறோம்.

  1. நான்கு இலட்சணங்கள்

நன்மைக்கு தீமை செய்வது பிசாசின் இலட்சணம்.

தீமைக்கு தீமை செய்வது மிருக இலட்சணம்.

நன்மைக்கு நன்மை செய்வது மனித இலட்சணம்.

தீமைக்கு நன்மை செய்வது தெய்வ இல்ட்சணம்

  1. உண்மையைப் பேசு

நீ பேசும்போது உண்மையைப் பேசு, சத்தியத்தையும் பொய்யையும் கலந்து பேசாதே. அதனால் தீமைதான் விளையும்.

  1. கர்த்தருக்குப் பயப்படுகிறவன்

கர்த்தருக்குப் பயப்படுகிறவன் முடிவில் வீரசூரனாய் வளங்குவான். மனிதனுக்குப் பயப்படுகிறவனோ, கோழை என்று பெயர் பெறுவான்.

  1. கிறிஸ்துவின் பாடு.

நாம் இயேசு கிறிஸ்துவுக்காகப்படும் எந்தப் பாடும், அவர் நமக்காகப் பட்ட பாடுகளோடு ஒப்பிடத்தக்கவை அல்ல.

  1. வேதவாசிப்பு – ஜெபம்

நாம் வேதத்தை வாசிக்கிறபொழுது சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மோடு பேசுகிறார். ஆனால் நாம் ஜெபம்பண்ணும்போது கர்த்தரோடு நாம் பேசுகிறோம்.

  1. பிதாவின் சித்தம் செய்தல்

தேவாதி தேவனுக்கு ஒரே நேச குமாரனுண்டு. அந்த மகனுடைய வேலை பிதாவின் சித்தம் நிறைவேற்றுவதும் அவரைப் பற்றி சாட்சி பகர்வதுமே.

  1. கர்த்தர் உன்னைப் பெலப்படுத்துவார்

அடுத்த அடி எடுத்து வைக்க இயலாது என்று நீ கவலைகொள்ளாதே. கர்த்தர் உன்னைப் பெலப்படுத்துவார், அல்லது திடீரென்று அடுத்த அடி வைக்க தேவை இல்லாதபடி செய்வார்.

  1. ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை

ஏனோதானொவென்று ஜெபிக்கிறதாலும், நோக்கமில்லாமல் ஜெபிக்கிறதாலும் வீண்வார்த்தைகளை அலப்புகிறதாலும், மாயக்காரரைப்போல் மாய்மால ஜெபங்களை ஏறெடுப்பதாலும் பாடுபடாமல் சோம்பலாக ஜெபிக்கிறதாலும் ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை.

  1. சுயபெலன் வீண்

ஒருவன் தன் சுயபலத்தால் பாவஜீவியத்தை மேற்கொண்டு ஜெயிப்பதைவிட, சமுத்திரத்தின் அலைகளை தடைசெய்வதோ, நயாக்காரா வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதோ அவனுக்கு எளிதாயிருக்கும்.

  1. தேவனை முதன்மையாக வைத்தல்

நம் ஜீவியத்தில் தேவனை முதன்மையாக வைத்தால் நமக்கு நேரிடும் எப்படிப்பட்ட தீமையயைக் குறித்தும் நாம் பயப்பட வேண்டியதில்லை.

  1. கர்த்தர் மேல் பாரத்தை வைத்தல்

நமது பாரங்களை கர்த்தர்மேல் வைத்தபின் அது முழுவதுமாக அவர்மேலேயே விட்டுவிட வேண்டும். பின்பு ஒரு விரலின் நுனியைக்கொண்டுகூட அதைத் தொடக்கூடாது.

  1. எல்லாம் பிறருக்காக

சூரியின் பிறருக்கு ஒளி கொடுக்கிறது. காற்று பிறருக்காகவே வீசுகிறது. மரம்கூட பிறருக்காகத்தான் பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்குகிறது. நிழல்கூட தருகிறது. ஆனால் இந்த நன்றிகெட்ட மனிதன் மட்டும் தனக்காகத்தான் வாழ விரும்புகிறான். உன் வாழ்க்கை எப்படியோ?

  1. சோதனையின் மேன்மை

சோதனைகள் வரும்போது சோர்ந்து போகாதிரு. நீ அவைகளை ஜெயித்தபின், அதே சோதனையில் அகப்பட்டிருப்பவர்களுக்கு உதவிசெய்ய உமக்கு பெலன் கிடைக்கிறது.

  1. வாக்குத்தத்தங்களை நம்பு

கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை நம்பிப் பிழைப்பவர்களைக் கர்த்தருடைய சர்வஞானமும் சர்வவல்லமையும் தாங்குகிறது.

  1. ஜெபம்பண்ணக் கற்பித்தல்

பிரசங்கிக்க பத்து மனிதரைப் படிப்பிக்கிறதைவிட ஜெபம் பண்ண ஒரு மனிதனை கற்பிக்கவே நான் பிரியப்படுகிறேன்.

  1. தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்

தேவனுக்காய்ப் பெரிய காரியங்களைச் செய்யுங்கள். தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்.

  1. சுவிசேஷத்தின் சிறப்பு

நாஸ்தீகர்களுக்கு தர்க்க ரீதியில் பதில் அளிப்பது பயனில்லை. அனால் சுவிசேஷத்தின்படி நடந்து, பின் அதைப் போதித்து சத்திய ஒளியை வீசுகிறவர்களிடம் அவிசுவாசிகள் தர்க்கம் செய்ய வருவதில்லை. சுவிசேஷத்தின் சத்திய வாழ்க்கைக்கு அவர்கள் எதிர்பேச முடியாது.

  1. பெரிய காரியங்களை நழுவ விடாதே

குருட்டுத்தனமாய் அற்பகாரியங்களில் உன் கவனத்தைச் செலுத்தி, பெரிய காரியங்களை நழுவவிடாதே. ஆத்தும இரட்சிப்பு மிகப் பெரியது.

  1. இயேசு ஏன் வந்தார்

கிறிஸ்து மதத்தை ஸ்தாபிக்க வந்தாரா? இல்லை. மனிதனை மாற்றவே வந்தார். பழைய மனிதனைப் புதியவனாக்குகிறார்.

  1. இயேசுவோடு கலந்துவிடலாம்

மனிதன் இயேசுவோடு கலந்துவிடலாம். பாலும் நீரும்போல, பூவும் மணமும் போல விளக்கும் ஒளியும்போல.

  1. பாவம் தடை செய்யும்

வேதபுத்தகம் பாவம் செய்யாதபடி உன்னைத் தடுக்கும். அல்லது இப்புத்தகத்தை தொடாதபடி பாவம் உன்னைத் தடுத்துவிடும்.

  1. தாழ்மையின் அவசியம்

எந்தக் காரியத்திலும் தாழ்மை அப்பியாசிப்பவன் தன்னை அறியாமலே மேலான பதவிக்கு வந்துவிடுவான்.

  1. குடும்ப ஜெபம்

மேல் கூரையில்லாத வீட்டிற்குள் பலத்த காற்றுகளும் புசல்களும் மோதியடிக்கும். குடும்ப ஜெபமில்லாத வீடு கூரையில்லாத வீட்டுக்குச் சமம்.

  1. தேவசித்தம் செய்தல்

கர்த்தருடைய வேலையைச் செய்யும்போது ஜெயமும் தோல்வியுமல்ல நாம் பிரதானமாக கவனிக்க வேண்டியது. எல்லாவற்றிலும் தேவசித்தத்தை நிறைவேற்றுவதே நமது இலக்காயிருக்கவேண்டும்.

  1. வேத புத்தகம்

பத்திரிகை வாசிக்கிறவண்ணமாய் நீ வேதபுத்தகத்தை வாசியாதே. என் தகப்பனிடமிருந்து உனக்கு வந்த கடிதம் என்று எண்ணி அதை வாசி. அப்பொழுது பெரும் மகிழ்ச்சியடைவாய்.

  1. மகிழ்ச்சியின் இரகசியம்

தேவனுடைய கரங்களில் நாம் இருக்கிறோம் என்றறியும்போது, நாம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியடைகிறோம்.

  1. கருங்கல்லிலும் கொடிதோ நம் இருதயம்?

சிலுவை காட்சிக்கு உருகார், ஒரு காட்சிக்கும் உருகார். சிலுவைக் காட்சியைவிட மனிதனின் உள்ளத்தை உருக்கும் வேறொரு காட்சியை மூவுலகு சென்றாலும் காணமுடியாது. இன்று உனது இருதயம் சிலுவை காட்சியைக் கண்டு உருகாவிட்டால், அது ஒருக்காலும் உருகப்போவதில்லை. கருங்கல்லிலும் கொடிதோ உன் இருதயம்?

  1. இருபுறமும் கருக்குள்ள பட்டயம்

வேதம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம். அது ஒரே நேரத்தில் பிரசங்கத்தைக் கேட்கிறவர்களையும், பிரசங்கிக்கிறவனையும் இருதயத்தில் குத்தி உணர்த்திக் காட்டுகிறது.

  1. நிலை நிற்பது

ஜீவியம் ஒன்றே ஒன்றுதான். அது விரைவில் கழிந்துவிடும். நாம் கிறிஸ்துவுக்காக என்ன செய்தோமோ அதுமட்டும் நிலை நிற்கும்.

  1. கிறிஸ்தற்ற மனிதன்

கிறிஸ்தற்ற மனிதன், கரையற்ற மகா ஆழமான சமுத்திரத்தில் செல்லும் சுக்கானும் திசைகாட்டும் கருவியுமற்ற கப்பலில் எறிச் செல்பவனுக்கு சமம்.

  1. சிலுவையில் அறையப்படுதல்

சிலுவையில் அறையப்படுதல் என்றால் என்ன? முதலாவது சிலுவையில் அறையப்பட்ட மனிதன் ஒரே திசையையே நோக்கி நிற்பான். இரண்டாவது அவன் திரும்பப் போவதில்லை. மூன்றாவது, அவனுக்கென்று இனி ஒரு திட்டமும் இல்லை.

  1. மேல்பூச்சு பூச வேண்டாம்

மனிதன் தனக்கு மேல்பூச்சு பூசிக்கொள்ளுகிறான். ஆனால் அவனுடைய இருதயத்தை வெண்மையாக்க தேவனால் மாத்திரமே கூடும்.

  1. இருபதினாயிரம் ரூபாய்

டாக்டர் ஸ்டான்லி ஜோன்ஸ் அவர்களிடம் ஒருநாள் ஒரு இந்து நண்பர் சென்று, எனக்கு இருபதினாயிரம் ரூபாய் கொடுத்தால் நான் ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்ந்து கொள்ளுகிறேன் என்றார். அவருக்கு டாக்டர் ஸ்டான்லி ஜோன்ஸ் பின்வருமாறு பதிலளித்தார். நீர் இருபதினாயிரம் ரூபாயை என் காலடியில் கொண்டு வந்து வைத்தாலும் உம்மை என் சபையில் சேர்த்துக்கொள்ள முடியாது.

  1. நீ பிரசங்கிக்கிறவைகளை நீயே செய்

நீ பிரசங்கிக்கிறவைகளை நீயே செய்யவில்லையென்றால், நீ செய்கிறவைகளை இன்னொருவர் பிரசங்கிப்பார்.

  1. தண்ணீரில் போட்ட உப்பு

தண்ணீரில் உப்பைப் போட்டால் அது தண்ணீரில் கரைந்து நமது கண் பார்வைக்குத் தெரியாமல் மறைந்திருந்து தண்ணீரை மாற்றுகிறது. சுவையளிக்கிறது. அதுபோல கிறிஸ்துவும் கண்ணுக்குத் தெரியாமல் நமது இருதயத்திலிருந்து நமது ஜீவியத்தை அவரைப்போல மாற்றுகிறார். அவர் அன்புள்ளவர், நம்மையும் அன்புள்ளவர்களாக மாற்றுகிறார். அவர் பரிசுத்தர் நம்மையும் பரிசுத்தராக மாற்றுகிறார். நம்மையும் தம்மைப்போல் மாற்றுகிறார்.

  1. உத்தம கிறிஸ்தவன்

இன்று இயேசு கிறிஸ்து வருவார் என்ற சிந்தையோடு ஆயத்தமாய் ஜீவிப்பவனே உத்தம கிறிஸ்தவன்.

  1. பரிசுத்தவானாயிருந்தல்

களிப்புள்ள பாவியாயிருப்பதைவிட துக்கமுள்ள பரிசுத்தவானாயிருப்பதே மேல்.

  1. தேவன் பட்ச பாதமுள்ளவரல்லவே

தேவன் பட்ட பாதமுள்ளவரல்ல என்று வேதாகமத்தில் ஏழுதரம் எழுதப்பட்டிருக்கிறது.

  1. பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமம் நமது தினசரி ஜீவியத்தின் ஆகாரம். விசேஷித்த சந்தர்ப்பங்களில் உண்ணும் பட்சணமல்ல.

  1. கர்த்தர் அளக்கிறார்

கர்த்தருடைய ஊழியத்தை ஒருவன் எவ்வளவு அதிகமாய் செய்கிறான் என்று தேவன் அளந்து பார்ப்பதில்லை. எவ்வளவு அன்புடன் செய்கிறான் என்றே அளந்து பார்க்கிறார்.

  1. நல்ல போர்ச்சேவகன்

உண்மை கிறிஸ்தவன் போர்முனையில் நிற்கிறான். ஆத்தும நேசர் இயேசுவுக்காக நல்ல போர்ச்சேவகனாய் ஜீவித்து, ஜீவியத்தை முடிப்பது என்பது ஒரு மகா பெரிய பாக்கியம்.

  1. முழங்காலில் நிற்கும் கிறிஸ்தவன்

உலகம் தன் கால்களில் நின்று வெற்றியைத் தேடி முயற்சிக்கிறது. உண்மை கிறிஸ்தவன் தன் முழங்காலில் நின்று அதைப் பெறுகிறான்.

  1. நாம் ஜெபிக்கிறோம்! பாடுகிறோம்!

பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபிக்கிறோமா?

இடைவிடாமல் ஜெபிக்கிறோமோ?

பரிசுத்த ஆவிக்குள் ஜெபிக்கிறோமோ?

பெருமூச்சுகளோடு ஜெபிக்கிறோமா?

விழித்திருந்து ஜெபிக்கிறோமா?

சோர்ந்துபோகாமல் ஜெபிக்கிறோமா?

ஊக்கமாக ஜெபிக்கிறோமா?

இனிய இசைக் கருவிகளோடு பாடுகிறோம். ஆனால் ஆவியோடும் கருத்தோடும் பாடுகிறோமோ?

நாம் பாட்டுப்பாட விரும்புகிறோம். ஆனால் கிறிஸ்துவுக்காக பாடுபடவிரும்புகிறோமா?

  1. விசுவாசமே தேவை

நான் சாதுரிய பிரசங்க வரத்தையுடையவனாயிருந்து உலகம் முழுவதும் சென்று பிரசங்கித்தாலும் விசுவாசம் எனக்கிராவிட்டால் எனக்கு ஒரு நன்மையுமில்லை.

  1. முதலும் கடைசியும்

தமிழ் வேதாகமம் ஒத்தவாக்கிய அகராதியில் முதல் வார்த்தை அகங்காரம் கடைசிவார்த்தை வெளவால்.

  1. வீண் கவலை எதற்கு?

தங்கள் பெற்றோரைச் சார்ந்திருக்கிற பிள்ளைகள் தங்கள் உடைகளைக் குறித்தோ, தங்கள் உணவைக் குறித்தோ சற்றேனும் கவலையடைவதில்லை. அதுபோல ஆண்டவரைச் சார்ந்திருக்கிற தேவனுடைய பிள்ளைகள் உலகப்பிரகாரமான தேவைகளைக்குறித்துக் கவலைப்பட்டு கலங்கமாட்டார்கள்.

  1. இன்றே வாழ்க்கையின் இறுதி நாளானால்!

இன்று மாலையில் நாம் இறந்துபோவது நிச்சயம் என்று நிச்சயமாகத் தெரிந்தால், அந்நாள் முழுவதும் எவ்வளவு சிறந்ததாகத் திகழ முற்படுவோமோ அவ்வாறே வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அதி சிறந்த எண்ணம், சொல், செயலில் ஈடுபட கிறிஸ்துவின் கிருபையால் முயலவேண்டும்.

  1. அரிது! அரிது!

பணம் பெருக பக்தி குறையும், ஐசுவரியமுள்ள சபை அனலுள்ளதாயிருப்பது அரிது. ஐசுவரியவான் பரலோராஜ்யத்தில் பிரவேசிப்பதும் அரிது.

  1. உன்னைத் துன்புறுத்துவது யார்?

உன் உள்ளத்தில் சாகாமல் ஜீவிக்கும் பேராசைகளைப் போல் உன்னைத் துன்புறுத்தி உபத்திரவிப்பது யார்?

  1. முற்றிலும் கீழ்ப்படிதல்

பேதுருவுக்கு பெரிய படிப்பும், பணமும் இல்லாவிட்டாலும் அவன் இயேசுவின் அழைப்புக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தபடியால் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள் வழி நடத்த முடிந்தது.

  1. அன்பே பிரதானம்

அன்பு நிலைத்திருக்குமிடத்திலே தேவனுடைய கற்பனையும் நிறைவேறுகிறது.

  1. அற்புதக்கரம்

எல்லாவற்றையும் மனமகிழ்ச்சியோடு தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தவர்கள் பின்னால் எல்லாவற்றிலும் தேவனுடைய அற்புதக் கரத்தைக் காண்பார்கள்.

  1. பரிசுத்த ஆவியின் பெலன்

ரப்பர் பையை காற்று அடைக்காமல் தண்ணீரில் போட்டால் அது அமிழ்ந்து போகும். ஆனால் அதே ரப்பர் பையை காற்று அடைத்து தண்ணீரில் போட்டால் மிதக்கும்.

அப்படியே நம் இருதயமானது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால் பாவத்தை மேற்கொள்ளவும் உலககாரியங்களில் சிக்கி அமிழாமல் வெற்றியடையவும் முடியும்.

  1. கர்த்தர் மாற்றுகிறவர்

தேவன் தமது பிள்ளைகளை நிழலில் வளரும்படி பலனற்ற செடிகளாக அல்ல. வெயிலிலும் புயல்காற்றிலும் அலசடிபட்டு பலமுள்ளதாய் வளரும் கேதுரு மரங்களாக மாற்றவிரும்புகிறார்.

நாம் கண்ணாடிக்கூண்டுகளில் வளரும் செடிகளாக அன்று, கப்பலில் உயர்ந்து நிற்கும் கொடிக்கம்பங்களாக மாற கர்த்தர் நம்மை பயிற்றுவிக்கிறார்.

  1. இயேசுவுக்கு முற்றும் ஒப்புக்கொடுத்தபின்

நான் இயேசுவை அறிந்தேன். அவர் என் ஆத்துமாவுக்கு மிக அருமையானவரானார். ஆனால் என்னுள்ள இனிமையற்ற, கனியற்ற, பொறுமையற்ற, பட்சமற்ற ஏதோ ஒன்று இருப்பதாகக் கண்டேன். அதை விலக்க முயன்றேன். ஆனால் அது அங்குதான் இருந்தது. எனக்கு உதவி செய்யுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டேன். அவர் என் உள்ளத்தில் வந்தார். என் இருதயத்தை அவருக்கு ஒப்படைத்த உடன், இனியமையற்றவைகளையும், கனியற்றவைகளையும், பொறுமையற்றவைகளையும், வெளியே தள்ளிக் கதவை அடைத்தார்.

  1. அதிக நன்மைக்கே

நாம் கேட்பதை சில வேளைகளில் கர்த்தர் கொடாமலிருப்பது, அதைவிட அதிக நன்மைகளைக் கொடுப்பதற்காகவே.

  1. வெற்றியின் இரகசியம்

நீ சத்துருவுக்கு விரோதமாய் ஆவியின் பட்டயம் எடுத்து போராடும் ஒவ்வொரு கட்டத்திலும் உனக்கு நிச்சயம் வெற்றியுண்டு. அந்த வெற்றி ஆசீர்வாதமாகிய பலனை உனக்கு உண்டாக்கும்.

  1. நற்செய்தி

தீயசெய்திகள் இவ்வுலகுக்குரியது. நற்செய்தி பரத்துக்குரியது. முந்தியது அநித்தியமானது. பிந்தியது பெருவாழ்வு கொண்டது.

  1. இரண்டு சிங்காசனங்கள்

ஆண்டவருக்கு இரண்டு சிங்காசனங்கள் உண்டு. ஒன்று பரலோகத்தில் இருக்கிறது. மற்றொன்று விசுவாசியின் இருதயத்தில் இருக்கிறது.

  1. கிறிஸ்தவம் அது என்ன?

கிறிஸ்தவம் என்பது ஒரு கொள்கை அல்ல, மதம் அல்ல. அது ஒரு வழி. அந்த வழி கிறிஸ்துவே. மேலும் கிறிஸ்தவம் ஓர் உணர்ச்சியல்ல, அது தேவன் மானிடருக்கு வழங்கிய கருணைக்கொடை, அன்பளிப்பு. அந்த அன்பளிப்பு கிறிஸ்துவே.

  1. என்னைக் கழுவியருளும்

இயேசு கிறிஸ்துவே, வேதநாயகமே! என்னை, என் தலையை, என் உடம்பை, என் மனதை, என் நினைவை, என் இதயத்தை, இதயத்தின் ஆழத்தை, ஆழத்தின் ஆழத்தை உமது திரு இரத்தத்தால் கழுவியருளும். கழுவிக்கொண்டேயிருந்தருளும். இன்றெனில் நான் முழுவதும் அழுகி நாறிப்போவேன். என் நாதா என்னை முற்றிலும் வெண்மையாக கழுவியருளும்.

  1. கிறிஸ்துவைப் போன்றவனா?

கர்த்தர் ஆசீர்வதிக்கிற மனிதன் சாமர்த்தியமுள்ளவனாயிருக் வேண்டும் என்பது முக்கியமல்ல. அவன் கிறிஸ்துவைப் போலிருக்கிறானா என்பதையே கர்த்தர் பார்க்கிறார்.

  1. பரலோகத்தில் பொக்கிஷம்

பரலோக இராஜ்யத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க முயற்சிப்பது நல்லதுதான். ஆனால் நீங்கள் அங்கே செல்ல முடியுமா? மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா?

  1. எல்லாம் நன்மைக்கே

நமக்கு வரும் ஆயிரம் துன்பங்களில் சில மட்டுமல்ல, ஒவ்வொன்றும் விசுவாசியின் வாழ்க்கையில் நன்மையை நடப்பிக்கிறது.

  1. உருக்கமான ஒரு ஜெபம்

பிதாவே நிலையற்ற எல்லாவற்றின்மேலும் உள்ள என் படி தளரத்தக்கவாறு நான் பெலனற்றவனாகட்டும். என் வாழ்க்கை, என் மதிப்பு, என் உடமைகள் இவற்றை இறுகப்பற்றுகிற என் கையின் வலிமையை கர்த்தாவே நான் இழந்து விடட்டும். இயேசுவின் கரங்கள் திறக்கப்பட்டதுபோல என் கைகளும் கல்வாரியின் ஆணிகளை ஏற்கத் திறக்கப்படட்டும். இவ்வாறு நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவதால் இப்போது என்னைக் கட்டியுள்ள எல்லாவற்றிலிருந்தும் நான் விடுதலையாகட்டும். விண்ணுலகத்தை இறைவனுக்குச் சமீபமாயிருப்பதை தனக்கென்று பிடித்து வைத்துக் கொள்ள கூடியதொன்றாக அவர் கருதவில்லை. எனவே என் பிடியும் தளரட்டும்.

  1. தேவ அற்புதமாய் போஷிப்பிக்கிறவர்

தேவன் உன்னை நடத்துமிடத்தில் அவர் உன்னைப் போஷிப்பார். மலைக்காகங்களைக் கொண்டுகூட உன்னை போஷிக்க அவரால் கூடும். தேவன் எல்லா பறவைகளுக்கும் ஆகாரம் கொடுத்து போஷிப்பிக்கிறார். ஆனால் அதை அவைகளின் கூடுகளில் அவர் எறிந்து கொடுப்பதில்லை.

  1. கர்த்தர் நேசிக்கிறார்

மன மகிழ்சியோடே கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவனையும், மனமகிழ்ச்சியோடே கர்த்தருக்கு காணிக்கை கொடுக்கிறவனையும் கர்த்தர் நேசிக்கிறார்.

  1. இயேசுவின் இரத்த புண்ணியத்தை நம்பியே….

நான் இம்மண்ணை விட்டு விண்ணுலகு செல்வதற்கு நேரம் ஆகிவிட்டது. நான் இம்மட்டும் என் வாழ்க்கையில் செய்த நன்மைகளையும் பிரசங்கத் திருத்தொண்டு புண்ணியங்களையும் நம்பி பரலோகம் செல்லவில்லை. நான் என் நேசர் இயேசுவின் இரத்த புண்ணியத்தை நம்பியே மறுவுலகு செல்கிறேன்.

  1. தேவனோடு நடக்கிறவன்

தேவனோடு இரகசியமாய் நடக்கக்கற்றுக்கொண்டவன் தனது துன்பங்களை விளம்பரம் செய்வதில்லை.

  1. கிறிஸ்தவனின் ஐசுவரியம்

கிறிஸ்தவனே! நீ சுகபோகமாக வாழ்வதற்கல்ல தரித்திரருக்கு இரங்கி பிச்சை கொடுக்கவே உன்னைக் கர்த்தர் ஐசுவரியவானாக்கியிருக்கிறார்.

  1. ஐயோ! சபையில் உலகம் !

தேவன் உலகத்தில் தமது சபையை வைத்தார். சாத்தான் சபையினுள் உலகத்தை வைக்கிறான்.

  1. பாடுகள் யாருக்கு?

கனிதரும் மரங்கள் மேலேயே கற்களும் தடிகளும் எறியப்படும் !

எப்பொழுதும் நன்மை செய்கிறவராகவே சுற்றித் திரிந்த கிறிஸ்து இயேசு நிந்தை, அவமானம், பரியாசம், பாடுகள் சிலுவையில் அறையப்படுதல் முதலிய துன்பங்களை ஏற்றுக்கொண்டார்.

  1. அற்புதமான விசுவாச வீரர்கள்!

ஆதியாகமம் சரித்திரத்தில் நாம் காண்கிற ஆபேல், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு முதலிய ஏழு விசுவாச வீரர்களான பரிசுத்தவான்கள் தங்கள் வாழ்நாட்களில் ஓர் அற்புதமும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மாபெரும் அற்புதமாகவே இருந்தது.

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி.25:11)

  1. சபையைக் கலக்குகிறவன்

ஆவிக்குரிய விசுவாசி உலகத்தைக் கலக்குகிறவனாயிருப்பான். மாம்சத்துக்குரிய விசுவாசி சபையைக் கலக்குகிறவனாயிருப்பான்.

  1. நரகத்தில் அழுகையும் பற்கடிப்பும்

நரகத்தில் அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என வேதாகமத்தில் ஏழுதரம் எழுதப்பட்டிருக்கின்றன.

  1. தேவனின் சால்வை

தேவன், நீதியின் சால்வைக்கேற்றவாறு மனிதனை மாற்றுகிறாரேயன்றி மனிதனுக்கேற்றவாறு சால்வையை மாற்றுகிறதில்லை.

  1. தேவனோடு நடத்தல்

தற்கால நாகரீக மனிதன், ஆகாயத்தில் எப்படிப் பறந்து செல்லலாம் என்பதைக் கற்றுக்கொண்டான். ஆனால் கர்த்தரோடு ஏனோக்கு, நோவா என்பவர்கள் நடந்து சென்றதுபோல நடக்கும் பழக்கத்தை மறந்துபோனான்.

  1. துன்பத்தில் காப்பாற்றுதல்

கிறிஸ்து மார்க்கத்தின் வேலை ஒருவனைத் துன்பத்திலிருந்து காப்பாற்றுவதல்ல, துன்பத்திற்குள்ளேயே காப்பாற்றுவதாகும்.

  1. சாத்தானின் தந்திரம்

மீன் பிடிக்கிறவன் தூண்டிலில் சிறிது ஆகாரத்தை வைத்து மீன்களை வசீகரித்து, அவைகள் எவ்விதம் தந்திரமாக பிடித்துக் கொள்கிறானோ, அவ்விதமே சாத்தானும் அற்ப சந்தோஷத்தைக் கொடுத்து (அநித்தியமான பாவ சந்தோஷம்) முடிவில் நரகத்தின் பிள்ளைகளாய் அவர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ளுகிறான்.

  1. பிழையை உணரா பிழை

பிழையை பிழை என்றுணராப் பிழையே பிழையுட் பெரிதாம் பிழை.

  1. வனாந்தர வாழ்க்கை

நாற்பது ஆண்டு காலத்தில் எகிப்தியரின் சகல ஞானத்திலும் தேறிய மோசே, நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்திலும் நாற்பது நாள் சீனாய் மலையின் உச்சியிலும் தேவனோடு தனித்து இருக்க வேண்டியதாயிற்று.

கிரேக்க ஞானத்தில் வல்லவனும் காமாலியேலின் பாதத்தில் படித்துத் தேறினவனாகிய பவுல், அரேபியாவில் தேவனோடு வனாந்தர வாழ்க்கை படிக்க வேண்டியதாயிற்று.

  1. இயேசுவும் கழுதையும்

இயேசு கிறிஸ்து ஒரு நாள் ஒரு கழுதையின்மேல் ஏறிக்கொண்டு எருசலேம் நகருக்கு பவனி போனார். அவரைத் தொடர்ந்து துதித்துச் சென்றவர்கள் தங்கள் வஸ்திரங்களை அவர் செல்லும் வழியில் விரித்தார்கள். ஆனால் வஸ்திரங்களில் பட்டகால்கள் கிறிஸ்துவின் கால்களல்ல, கழுதையின் கால்களே. கழுதையின் கால்களை இவ்வாறு எவரேனும் பூஜிப்பது உண்டோ? இயேசு பெருமான் கழுதையிலிருந்து இறங்கியபின், இக் கழுதையை தேடுவாருண்டோ?

அதுபோல நாம் கிறிஸ்துவை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொண்டிருப்பதினாலேயே நமக்கு மேன்மை கிடைக்கிறது.

ஆகவே அந்த மேன்மை யாவும் நமக்கு அல்ல, கிறிஸ்துவுக்குரியதே. அவர் நம்மை விட்டுச் சென்றுவிட நேர்ந்தால் நாம் முன்போல் மேன்மையற்றவர்களே.

  1. முற்றும் அர்ப்பணம் செய்தல்

எண்ணெய் எரிந்து வெளிச்சம் தர திரி அவசியம். திரி எரிந்து சாம்பலானாலொழிய தீபம் ஜுவாலிப்பதில்லை. அவ்வாறே பூதலத்தில் ஞானச்சுடர் வீச வாஞ்சிக்கும் ஒருவன் தன்னை ஞான ஒளியாகிய கிறிஸ்துவுக்கும் முற்றிலும் அர்ப்பணம்பண்ணவும் துணியவேண்டும்.

  1. புத்தாண்டு பாக்கியவான்கள் யார்?

நீ இந்த உலகில் மனிதனாகப் பிறந்து இப்புத்தாண்டோடு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பது கேள்வி அல்ல. நீ கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்பதுதான் கேள்வி. இப்பொழுது கிறிஸ்து உன் இருதயத்தில் தெய்வமாக வாழ்கின்றாரா என்பதுதான் கேள்வி. இயேசு கிறிஸ்துவுடன் நீ புத்தாண்டுக்குள் பிரவேசித்தால், உண்மையாகவே ஒர் பாக்கியவான்தான்.

  1. கிறிஸ்துவுக்குள் வாழ்தல்

இரும்புத் துண்டை உலையிட்டு காய்ச்சினால், இரும்பும் நெருப்பைப்போல் சிவந்து பளபளப்பாய்த் தோன்றுகிறது. என்றாலும் இரும்பு நெருப்பாகாது. நெரும்பும் இரும்பாகாது.

அதுபோல கிறிஸ்துவுடன் இடைவிடாது நெருங்கிப் பிழைத்தால் நாம் அவரைப்போல பூரணசற்குணராகலாம். நாம் அவரிலும் அவர் நம்மிலும் பிரதிபிப்பிக்கலாம். ஆனாலும் நாம் வேறு, அவர் மகிமை வேறு என்பதை அறியவேண்டும்.

  1. இதுவே கேள்வி

தேவனுக்கு நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல. தேவனுக்குரியதை நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதே கேள்வி.

  1. இயேசுவின் மணவாட்டி

ஆதாம் நித்திரை தெளிந்து எழுந்தபோது தனது விலா எலும்பினால் உண்டாக்கப்பட்ட தனது மனைவியாகிய ஏவாளைக் கண்டதுபோல, இரண்டாம் ஆதாம் விலாவில் குத்தப்பட்டவராய் தொங்கி மூன்று நாட்களுக்குப்பின் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தபோது தமது மணவாட்டியாகிய சபையைக் கண்டார்.

  1. ஜெபத்தில் ஜெயம்

ஜெபிப்பதினால் நாம் ஜெயிக்க கற்றுக்கொள்கிறோம். அதிகம் ஜெபித்தால் அடிக்கடி ஜெபிப்போம்.

ஒழுங்கீனமாய் நினைத்த நேரத்தில் ஜெபித்தும் ஜெபியாமலுமிருந்தால் ஊக்கமான ஜெபத்தினாலடையும் பயனை நாம் பெறமுடியாது. தான் இஷ்டப்பட்ட நேரம் ஜெபித்தும், ஜெபியாமலிருக்கும் ஒருவர் ஜெபத்தில் வல்லவராகலாம் என்று எண்ணுவது தப்பிதம்.

எலியா வானங்களை மூடும்படியும், பின்பு வானங்கள் திறக்கும்படியும் ஜெபித்தான். அது அப்படியே ஆயிற்று. அதுவே கருத்தான ஊக்கமான ஜெபம்.

  1. தேவனுக்கு மறைப்பதில்லை

பாவம் மனிதனுக்கு தேவனை மறைக்கிறது! தேவனுக்கு மனிதனை மறைப்பதில்லை.

  1. முழு திருப்தியடைகிறவன்

கர்த்தர் செய்கிறதுதான் சரி என்று முழு திருப்தியோடிருக்கிறவர்கள் வெகு சிலர். அவர் செய்கிறதைக் குறித்து எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்கள் அதிலும் சிலர்.

  1. கொடுக்கிற பாக்கியம்

சேமித்து வையுங்கள், அப்பொழுது ஜசுவரியவான்களாவீர்கள் என்பதல்ல. கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்பதே தேவசட்டம். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

  1. ஜெபமே ஜீவன்

ஒரு கிறிஸ்தவனின் முதுகெலும்பு ஜெபம். அது அவனை நிமிர்ந்து நிற்கப்பண்ணுகிறது. ஜெபத்தை மறந்த மனிதன் இறந்த மனிதனே. நீர் இறந்த மனிதனா? மறுபடியும் பிறந்த மனிதனா?

  1. பரிசுத்தவான்களோடு வாழ்தல்

பரலோகத்தில் பரிசுத்தவான்களோடு வாழ்வது பரம சந்தோஷம். அந்த பரிசுத்தவான்களோடு பூலோகத்தில் வாழ்வது பரம சங்கடம்.

  1. அந்தரங்க தனி ஜெபம்

மரத்தின் வேர் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு அடியில் சென்று நீரூற்றைத் தொடுகிறது. அதனால் மரத்துக்கு ஆகாரமும் பெலமும் கிடைக்கின்றன. அதுபோல் அந்தரங்க ஜெபத்தின்மூலம் இயேசுவோடு ஐக்கியப்பட்டு, அவரிடமிருந்து விசுவாசி வல்லமையையும் ஜெயஜீவியத்தையும் பெறுகிறான்.

  1. எல்லாம் மற்றவர்களுக்காகவே

சேவை செய்யவே நாம் மீட்கப்பட்டோம்.

நாம் ஏன் இங்கே வைக்கப்பட்டிருக்கிறோம்?

எடுப்பதற்கல்ல, கொடுப்பதற்கே.

ஊழியங்கொள்ளவதற்கல்ல, ஊழியஞ்செய்வதற்கே.

பிறர் நம்மை சேவிக்க அல்ல, நாம் பிறரை சேவிக்கவே.

தடைசெய்ய அல்ல, உதவிசெய்யவே.

பிறருக்கு பாரமாயிருப்பதற்கல்ல.

பிறருடைய பாரங்களை சுமக்கவே.

  1. கிறிஸ்துவோடு இருத்தல்

கிறிஸ்து இல்லாமல் சுவர்க்கத்திலிருப்பதைப் பார்க்கிலும், கிறிஸ்துவோடு நரகத்திலிருப்பதே நலமென்றெண்ணுகிறேன்.

  1. பாம்பின் சட்டையும் விஷப்பையும்

பாம்பு சட்டையைக் கழற்றும், விஷப்பையைக் கழற்றாது. இதேபோல அநேகர் வெளியரங்கமான பாவத்தைச் செய்வதைவிட்டு, உள்ளுக்குள் இரகசியப் பாவத்தைப் பேணி வைத்துக்கொள்வார்கள்.

  1. தேவ ஞானம்

ருசியுள்ள தேன் கூட்டில் விஷக்கொடுக்குள்ள தேனீக்களும், அழுகிய மிருதுவான ரோஜா புஷ்பத்தின் பக்கத்தில் முட்களும், பகலின் பக்கத்தில் இரவும், மலையின் பக்கத்தில் பள்ளத்தாக்கும் அமைந்திருப்பது இயற்கை ஒழுங்கு. இது தேவனுடைய மகா ஞானத்தைக் காட்டுகிறது.

  1. வீண் கவலை ஏன்?

யோசேப்பு கையில் மாபெரும் பொக்கிஷ சாலையின் திறவுகோல் இருக்கும்போது, பஞ்ச காலத்தில் யோசேப்பின் மனைவிக்கு யாதொரு கவலையும் உண்டாகத் தேவையில்லை. அதுபோல வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமுடைய இயேசு கிறிஸ்துவின் கையில் பொக்கிஷசாலையாகிய வானத்தின் திறவுகோல் இருக்கிறபடியால் அவருடைய மணவாட்டியும் யாதொன்றும் கவலைப்பட தேவையில்லை.

  1. அதிக காலம் ஜீவித்தவன்

மெத்தூசாலா 969 வருடம் இவ்வுலகில் ஜீவித்திருந்தான். எல்லா பூர்வபிதாக்களின் அதிக காலம் இப் பூவுலகில் ஜீவித்திருந்தவன் இவனே. ஆனாலும் இவன் ஆயுசு ஆயிரம் வருடம் பூரணமாகவில்லை. அது ஆயிரம் வரை எட்டினால்கூட கர்த்தருக்கு ஒரு நாள்போலவோ இரவின் ஒரு ஜாமம்போலவோதான் இருக்கும்.

மனிதன் எவ்வளவு நீண்டகாலம் பூமியில் ஜீவித்தாலும் அவன் எவ்வளவு நீண்டகாலம் பார்வையில் எவ்வளவு குறுக்கினதாக – ஒருநாளாக அல்லது ஓர் இரவின் ஜாமத்துக்கு ஒப்பாகவே இருக்கிறது.

  1. இலக்கை நோக்கி ஓடுதல்

ஏதாவது ஓர் இலக்கை நோக்கித் தொடருகிறவன் சித்திபெறுவான். இலக்கில்லாமல் ஜீவிப்பவன் எதிலும் சித்தி பெறான். அப்போஸ்தலனாகிய பவுல் இலக்கை நோக்கி ஓடுகிறான் என்றார்.

  1. இந்த நான்கு காரியங்கள்

கசப்பு மனப்பான்மை, குற்றம் கண்டு பிடிக்கும் நோக்கம், பிறர் மனதை புண்படுத்துதல், வஞ்சக புத்தி ஆகியவை தூய அன்பென்னும் மரத்தில் உற்பத்தியாகுபவை அல்ல.

  1. அன்பற்றவன் – உயிரற்றவன்

அன்பின் ஞானஸ்தானத்தைப் பெறாதவர்கள் ஆவியின் ஞானஸ்ஞானத்தை பெற்றதால் என்ன பயன்? அன்பற்ற பெந்தெகொஸ்தே அனுபவம் உயிர் இல்லாத ஒரு செத்த சடலத்தைப் போன்றதாகும்.

  1. வாழ்வு உயர வழி

கிறிஸ்தவ வாழ்க்கையில் தாழ்மையைக் கைக்கொள்வதால் தாழ்ந்து போய் விடுமோ? இல்லையே! தாழ்மை, தாழ்வைத் துரத்தும். வாழ்வை உயர்த்தும்.

  1. தடை கற்கள் எவை?

தரிசனமற்ற ஊழியம், ஜெபமற்ற வாழ்வு, திடனற்ற விசுவாசம், அன்பற்ற ஊழியர்கள் இவைகளே இன்றைய ஊழியத்தின் தடைக்கற்கள்.

  1. இருதயத்துக்கு ஆனந்தம்

அழகான பெண் கண்களுக்கு இன்பத்தைத் தருகிறான். குணசாலியான பெண் இருதயத்துக்கு ஆனந்தம் அளிக்கிறாள்.

  1. வேத வசனத்தோடு எதையும் கூட்டாதே!

வேத புஸ்தகத்திலுள்ள வசனங்களோடே ஒன்றையும் கூட்டவும் குறைக்கவும் கூடாது என்று வேதத்தின் துவக்கத்திலும் மத்தியிலும் கடைசியிலும் எழுதப்பட்டிருக்கிறது.

  1. பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமத்தை ஜுவாலித்து பிரகாசிக்கிற விலையேறப்பெற்ற பளிக்கு கற்களினால் மகா ஞானம்பெற்ற சிற்பாசாரியால் அதிக அழகாகவும் விசேஷித்த கைவேலைப்பாடுகளுடனும் செய்யப்பட்டதும், சிறிதும் பெரிதுமான அறுபத்தாறு அறைகளுள்ளதும் இராஜாதிராஜா உலாவிக்கொண்டிருக்கிறதுமான மகா பெரிய இராஜ அரண்மனைக்கு ஒப்பிடலாம்.

  1. பரலோகத்திலிருந்தவர்

பரலோகத்திலிருந்து வந்து பூலோகத்தில் வாசம் பண்ணினவர் இயேசு கிறிஸ்து மட்டுமே. பரலோகம் பற்றி அறிய வேண்டுமானால் இயேசு மட்டுமே கூற முடியும். அவருடைய முதற் பிரசங்கமும் பரலோகம் பற்றியதே.

  1. பெந்தெகொஸ்தே அனுபவம்

பெந்தேகொஸ்தே அனுபவந்தான் அன்றும் இன்றும் சக்தி நிறைந்த ஓர் அனுபவமாகக் காணப்படுகிறது.

இந்த அனுபவத்தை நாடுகிறவர்கள், மனிதனை ஏமாற்றி வஞ்சிக்கிறவனாகிய சாத்தானைக் குறித்து அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்க வேண்டும். சாத்தான் இந்த உண்மையான அனுபவத்தை வெறும் கூச்சலுக்கும் குழப்பத்திற்கும் நேராய் நடத்திச் சென்றுவிட தந்திரங்களை உபயோகித்து கெடுக்கப் பார்ப்பான். அவனிடத்திலும் ஒரு வித போலி பெந்தெகொஸ்தே உண்டு.

ஆனால் இவ்வித போலி பெந்தெகொஸ்தே அனுபவம் உடையவர்களை அவர்களுடைய கனிகளால் நாம் கண்டு கொள்ள முடியும். அவர்களுடைய வரங்களினால் அவர்களை அறிவீர்கள் என்று வேதத்தில் நாம் எங்கும் பார்க்க முடியாது. ஆனால் அவர்களுடைய கனிகளால் அவர்களை அறிவீர்கள் என்றுதான் நமது ஆண்டவர் திட்டம் தெளிவாய் கூறியுள்ளதைக் காண்கிறோம்.

சாத்தானின் தேவதூஷணமான தந்தரங்களிலிருந்து தேவன் நம்மை தடுத்தாட்கொள்ளும்படி தாழ்த்தி ஜெபிக்க வேண்டும்.

  1. விசுவாசியே நீ !

பணத்தை எப்படி சம்பாதிக்கிறாய்?

பணத்தை எப்படி சிநேகிக்கிறாய்?

பணத்தை எப்படி உபயோகிக்கிறாய்?

  1. பரலோகம் செல்லும் வழி

இந்தியாவில் நூற்றுக்கு இரண்டுபேர் கிறிஸ்தவர்கள். 98 பேர் செல்லும் வழி சரி என்று சொல்ல முடியுமா? விரிவும் விசாலமுமான வழி நரக வழி. இயேசுவே பரலோகம் செல்லும் வழி. அவராலேயன்றி வேறோருவராலும் இரட்சிப்பு இல்லை.

  1. இரட்சகருக்காக வாழ்தல்

தேவனுடைய திருப்பணியில் உழைப்பதைக் காட்டிலும் சிறந்ததோர் பணி வேறில்லை. நாம் நம் அருமை இரட்சகரின் அன்பை உலகுக்கு விளக்குவதற்கல்லாது வேறு எதற்காக வழங்க வேண்டும்.

  1. அழைப்பும் கட்டளையும்

ஆபிரகாமுக்கு கர்த்தர் முதலாவது தரிசனமளித்து அவனை வா என்று அழைத்தார். இரண்டாவது தரிசனமளித்து, அவனிடம் போ என்று கட்டளையிட்டார்.

  1. தேவனோடு சஞ்சரித்தவன்

ஆதாமின் மகனான சேத்தின் சந்ததியில் ஏழாம் தலைமுறைக்காரனாகிய ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்து, பின்பு பரலோகம் சென்றான்.

ஆதாமின் மகனான காயீனின் சந்ததியில் ஏழாந்தலை முறைக்காரனாகிய லாமேக்கு இப்பிரபஞ்சத்துக்குரியவனாக சஞ்சரித்துப் பின்பு பாவத்தில் மாண்டுபோனதைக் காணலாம்.

நீ யாரோடு சஞ்சரிக்கிறாய்? எப்படி ஜீவிக்கிறாய்?

  1. தியாகம் செய்யாவிட்டால்?

தன்னை தியாகம் செய்ய முன்வராத எந்த நபரினாலும், எந்த ஓர் ஆத்துமாவையும் நேசர் இயேசுவின் கல்வாரிச் சிலுவையண்டை கொண்டுவர முடியாது. சொந்த சாமர்த்தியம், படிப்பு, அழகு, செல்வம் இவற்றினால் ஒரு மனிதனின் மூளையை மாற்றலாம். இருதயத்தை மாற்ற முடியாது.

  1. நல் வழி காட்டுவது எது?

கலங்கரை விளக்கு கடல் பிரயாணிகளுக்கு நல்வழி காட்டுவதுபோல, வேதாகமம் மோட்சப் பிரயாணிகளுக்கு ஜீவவழி காட்டுகிறது.

  1. மூன்று தவறுகள்

இல்லாத பெருமையை இருப்பதாக சிலர் நினைத்துக் கொள்வார்கள். இது முதல் தவறு. இந்தப் பெருமை தங்களுக்கு உண்டு என்று மற்றவர்களும் கருத வேண்டும் என்று அடுத்தபடி நினைப்பார்கள். இது இரண்டாவது தவறு. இந்த வினோதமான பெருமை அவர்களுக்கு உண்டு என்று ஒரு சிலர் கருதுவார்கள். இது மூன்றாவது தவறு. பெருமை இந்த வண்ணம் சிலரைச் சீர்குலைத்துவிடும் அதிசயத்தை சில சமயம் பார்க்கிறோம்.

  1. ஏன் இப்படி?

உங்களிடம்தான் கேட்கிறேன். எனக்கொரு சந்தேகம்! ஸ்தாபனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கிறவர்களும் உண்டு. சாதாரண வேலைக்காரர்களும் உண்டு. அவர்களும் தப்பு செய்துவிடுகிறாhகள். இவர்களும் தவறி விடுகிறாhகள். ஆனால் சாதாரண பணியாளர்களுக்குத் தக்க தண்டனை உடனுக்குடன் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அந்தப் பெரியவர்களைத் தட்டிக் கேட்க ஆளில்லையே! தப்பித் தவறி மனம் நொற்து கேட்கிற எளியவனைச் சீரளித்துச் சுருட்டி விடுகிறார்களே! ஏன் இப்படி? அவர்களுக்குரிய தண்டனை மறுமைக்கென்று சேர்த்து வைக்கப்படுகிறதோ?

  1. தேவனுக்குக் காத்திரு

தேவன் கொடுக்கும் மேன்மையானதை நீ பெற விரும்பினால், அவர் உன்னை அங்கே சந்திக்கும்வரை அமைதியாக ஒரு வாக்குத்தத்தத்தில் காத்திரு.

  1. பேச்சில் எச்சரிக்கை

அதிகப் பேசினால் தேவ வல்லமையை நாம் இழக்கிறோம். வம்பளக்கும் கிறிஸ்தவன் வல்லமையற்ற கிறிஸ்தவன். பேசாமல் இருப்பது எளிது, மட்டாய்ப் பேசுவது எளிதல்ல.

  1. பரம ஈவின் ருசி

தலைமுறை தலைமுறையாக மாமிசம் புசியாத சைவக்காரனுக்கு வெள்ளாட்டின் நல்லி எலும்புக்குள்ளிருக்கும் மூளையின் ருசி தெரியாததுபோல, பரம்பரை கிறிஸ்தவனுக்கும் பரிசுத்த ஆவியின் நிறைவினால் கிடைக்கும் ஆவிக்குரிய வரங்கள், கிருபைகள், ஆவிக்குரிய சந்தோஷம், ஆவிக்குரிய தரிசனங்கள், வெளிப்படுத்தல்கள் இவைகளாகிய பரம ஈவின் ருசி தெரிவதில்லை.

  1. நரகம் எங்கே?

மனிதனுடைய வழியின் முடிவில்தான் நரகம் காணப்படுகிறது.

  1. அனாதைகள்

வாரத்தின் முதல் நாளில் ஆலயத்தில் நின்று எங்கள் பிதாவே என சொல்லி ஜெபிக்கும் அநேகர் மற்ற தினங்களில் அனாதைப் பிள்ளைகளைப்போல் நடக்கிறார்கள்.

  1. விசுவாசியே நீ !

தீமையானதைப் பாராதே ! தீமையானதைக் கேளாதே !! தீமையானதைப் பேசாதே !!!

  1. இயேசுவை நேசித்து வாழ்தல்

இயேசுவோடுகூட வேறெதையும் நேசிப்பது எத்தனை மாயையும் மதியீனமுமானது.

இயேசு இல்லா வாழ்வு கேடுள்ள நரகம். இயேசுவோடிருப்பது இனிக்கும் பரதீசு.

இயேசுவைக் கண்டடைகிறவன் நல்ல புதையலைக் கண்டடைகிறான். ஆம், மேன்மையானவர்களுக்கெல்லாம் மேன்மையான செல்வம் அவரே!

இயேசுவை இழப்பவன் மாபெரும் பங்கை இழக்கிறான். ஆம், அகில உலகைவிடப் பெரியதை இழக்கிறான். நண்பனே! நீ இயேசுவோடு இணைந்து வாழ்ந்திடு.

  1. நித்திய வாசல்

திறக்கக்கூடாதபடி பூட்டி, பூட்டக்கூடாதபடி திறக்கிற இயேசு கிறிஸ்து ஒரு கதவைமட்டும் திறக்கக் கூடாதவராய்க் காணப்படுகிறார். அது உன் இருதயக் கதவே. ஆகையால் தான் அவர் அந்த வாசலண்டைய நின்று ஆவலோடு தட்டுகிறார்.

உன் இருதய வாசலை இன்று அவருக்குத் திறப்பாயானால் நித்திய ஆசீர்வாதங்களுக்கும் நித்திய மகிமைக்குமுரிய வாசலை அவர் உனக்கு உடனே திறந்து வைப்பார்.

  1. மாபெரும் கண்டுபிடிப்பு

குளோரோபாம் என்ற மருந்தைக் கண்டுபிடித்தது, சர் ஜேம்ஸ் சிம்சன் என்ற பெரிய விஞ்ஞானியாகும். அவருடைய முதிர்வயதில் அவர் வியாதியாகப் படுத்திருக்கும்போது அவருடைய மாபெரும் கண்டு பிடிப்பு எது என்று ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு சிம்சன் சொன்ன மாறுத்தரம் 1861 கிறிஸ்மஸ் நாள் காலையில் நான் ஒரு பாவி என்றும் இயேசு கிறிஸ்து என் இரட்சகர் என்றும் கண்டு பிடித்ததுதான் என்றார்.

  1. தற்பரிசோதனை

கிறிஸ்துவுக்காக நான் அடைந்த நஷ்டம் என்ன? கிறிஸ்துவினிமித்தமாக நான் என் உடம்பிலோ அல்லது உள்ளத்திலோ ஏற்றுக்கொண்ட காயம் என்ன? அநியாயத்தைப் பொறுத்துக்கொண்ட உறுதி உள்ளம் எனக்கு உண்டா? பழியிலும் நிந்தையிலும் நான் எவ்வாறு நடந்துகொண்டேன்?

  1. தோல்விகளின் ஆரம்பம்

நம்முடைய ஆழமான விசுவாசத்தையும், நம்பிக்கையையும் ஆண்டவராகிய இயேசுவை விட்டுத் திருப்பி, மனிதனுடைய செல்வாக்கையும், பெலத்தையும் எப்போது நம்பத்தொடங்குகிறோமோ அப்போதிருந்தே நாம் ஆவிக்குரிய தோல்விகளைச் சந்திக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

  1. ஸ்தல சபையும் வாலிபர்களும்

ஒரு சமயம் அமெரிக்க வாலிபர்களிடம் பேசுகையில் ஐனாதிபதி கென்னடி இவ்வாறு சொன்னார்: வாலிப நண்பர்களே, நாடு உங்களுக்கு என்ன செய்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்பாமல் நாட்டுக்காக நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்திருக்கிறீர்கள் என்றே நினைத்துப் பாருங்கள் என்றார்.

விசுவாசிகளாகிய நமது வாலிபர்களும் சிந்திக்கவேண்டிய விஷயம் இது. ஸ்தல சபை நமக்கு என்னென்ன நன்மைகளை வழங்கியிருக்கிறது என்றல்ல, ஸ்தல சபையின் நன்மையை நாடி, (நான்) என்னென்ன நடப்பித்தோம் என்பதை நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போமாக.

  1. இயேசுவைக் கண்டதும் பேசினதும்

இயேசு கிறிஸ்து பரலோகத்துக்கு எழுந்தருளிப்போன பின் முதலாவது அவரைக் கண்டது ஸ்தேவான். ஆனால் அவர் முதலாவது பேசினது சவுலோடுதான்.

  1. காக்கும் கர்த்தர்

படகு மூழ்கையில் நித்திரை செய்யும் கர்த்தர் இயேசு, அமிழ்ந்து போகுமுன் விழித்துக்கொள்கிறார். அலைகள் நம்மீது புரண்டெழுகையில் கவனியாத கர்த்தர், வெள்ளங்கள் நம்மை வாரிக்கொண்டு போகுமுன் விழித்துக் கொள்கிறார்.

  1. துன்பங்களுக்கு காரணம்

உனக்கு வந்த துன்பங்களை ஒவ்வொன்றாய் சிந்தித்துப் பார். அப்பொழுது பல துன்பங்களுக்கு நீதான் காரணம் என்பதை அறிந்து கொள்வாய்.

  1. தேவனைப் பார்ப்பதெப்படி ?

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு டெலிவிஷன் நிலையத்திலிருந்து பேசுபவரை நாம் பார்க்கவும், அவருடைய சத்தத்தைக் கேட்கவும் டெலிவிஷன் கருவியினால் முடியுமென்றால் ஒரு சாதாரண கிராம மனிதனிடம் கூறும்போது அவன் அதை நம்பவில்லையென்றால், அவனுக்கு டெலிவிஷனைக் குறித்து அறிவுகிடையாது என்பதுதான் அர்த்தம்.

அதுபோலவே மகிமையின் தேவனை நாம் பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் முடியுமென்பதை ஒருவர் நம்பவில்லையென்றால் அவருக்கு விசுவாசம் என்னும் அற்புத விஷயத்தைக் குறித்து எவ்வித அறிவும் இல்லை என்பதுதான் பொருள்.

  1. பாவ மூட்டை

தனது பெட்டி, படுக்கைகளை தலையில் சுமந்துகொண்டு பஸ் ஏற வருகிற ஒருவர் பஸ்ஸில் ஏறின பின்பு, அவைகளை பஸ்ஸில் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக பிரயாணம் செய்யாமல், தனது தலையிலேயே சுமந்துகொண்டு பிரயாணம் செய்பவர்களைப்போலவே, இன்று அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களைக் கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து விட்டு விட்டு ஒரு சந்தோஷமான ஜீவியம் செய்யாமல் பாவ மூட்டைகளைத் தங்கள் தலையிலேயே சுமந்துகொண்டு பெருமூச்சுவிட்டு, கவலைப்பட்டு, கண்ணீர் சிந்தி பாரமடைந்த கிறிஸ்தவர்களாயும் சபை அங்கத்தினர்களாயுமிருக்கிறார்கள். அந்தோ பரிதாபம் !

  1. ஜெப ஆவி தாரும்

ஆண்டவரே, அழிந்து போகும் ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தை எங்கள்மேல் போடும். சபைகளின் நிர்ப்பந்த நிலைமையைக் குறித்த தரிசனத்தை எங்களுக்குத் தாரும். ஜெபத்தில் எங்களுக்கு ஆத்திரத்தை அளியும். நித்திரையை எங்கள் கண்களுக்கு தூரப்படுத்தும். அசட்டையை எங்களை விட்டகற்றி கண்ணீரையும் பெருமூச்சையும் தாரும். பிதாவின் வலது பாரிசத்திலிருந்து வேண்டிக்கொண்டிருக்கிறவரே ஜெபியாத பாவிகளாகிய எங்கள்மேல் கிருபையின் ஆவியையும் விண்ணப்பத்தின் ஆவியையும் பொழிந்தருளும். ஆமென்.

  1. தாயும் மகனும்

ஓர் ஏழை ஸ்திரி புருஷன் இறந்த சமயத்தில், அவர் அருகில் உட்கார்ந்து அதிகமாய் அழுகொண்டிருந்தாள்.

அவள் சிறிய மகன் தாயிடம் வந்து, அம்மா ஏன் இப்படி அழுகிறீர்கள்? என்றான்.

தாய் தன் மகனிடம் எனக்கு நேரிட்ட நஷ்டம் பெரியது. எனக்கு வருங்கால ஜீவியத்திற்கு ஒன்றுமில்லையே.

பையன் தாயின் முகத்தை உற்றுப்பார்த்து, அம்மா இயேசு கிறிஸ்து என்ற நம் இரட்சகர் உயிரோடிருக்கிறாரல்லவா என்றான். தாய்க்கு அற்புத விசுவாம் பெருகினது.

  1. தாழ்மை தாழ்மை தாழ்மை

திருச்சபையின் முற்பிதாவாகிய அகுஸ்தீன் என்பவரிடம், கிறிஸ்தவ பிரமாணங்களில் முதன்மையானது எது என்று கேட்டதற்கு தாழ்மை என்று விடையளித்தார். இரண்டாவது பிரமாணம் என்ன என்று கேட்டதற்கு அதுவும் தாழ்மை என்றே சொன்னார். மூன்றாவது பிரமாணம் எது என்று கேட்டதற்கு தாழ்மை என்றுதான் சொன்னார்.

  1. எப்படித் தப்பித்துக்கொள்ளுவான்

கடலில் வேலை செய்கிற ஒருவன், நீந்தக் கற்றுக்கொள்வதில் அசட்டையாயிருந்து, கடலில் விழுந்து விட்டால், அவன் அதில் மூழ்க்கிச் செத்துப் போவதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்ளுவான்?

அதேபோல தேவன் இலவசமாக கொடுக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதில் அசட்டையாயிருக்கிறவனும் (கவலையற்றவனாயிருக்கிறவனும்) தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளமாட்டான்.

  1. சிலுவையைப் பின்பற்றுதல்

அநேகருக்கு மிகக் கடுமையான மொழி இது.

ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

ஆனால் அதனைக் காட்டிலும் கடுமையாக இருக்குமே அவர்தம் இறுதிமொழி. சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

இப்போது கூறப்படுகிற சிலுவைச் செய்தியை மனமிசைந்து கேட்ட அவரைப் பின்பற்றுகிறவர்கள் அந்த நித்திய செய்தியைக் கேட்டு பயப்படமாட்டார்கள்.

  1. வானமட்டும் எட்டப் பேசுதல்

தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள். அவர்கள் நாவு பூமி எங்கும் உலாவுகிறது. சங்கீதம் 73:9ல் ஆசாப் தேவ ஆவியினால் நிறைந்து பாடியிருக்கிறார். இவ்வசனத்தை அக்காலத்திலுள்ளவர்கள் இப்படி நம்ப முடியவில்லை.

ஆனால் இப்பொழுது ஒருவன் பேசுகிற சத்தம் டெலிபோன், ரேடியோ, டெலிவிஷன், டேப்ரிக்கார்டர், ஒலிபெருக்கி முதலிய கருவிகள்மூலம் வானமண்டத்திலும் பூமியெங்கும் கேட்கிறதை நாம் நம்புகிறோம். வேதம் சத்தியம். வேதத்தை தியானம் செய்.

  1. நெப்போலியன் வீரமுரசு

அலெக்சாண்டரும், ஜுலியஸ் சீசரும் நெப்போலியனாகிய நானும் மாபெரும் வல்லரசுகளை நிறுவினோம். எதினாலே? எங்கள் பலத்காரத்தினாலேயே. இயேசுவும் ஓர் இராஜ்யத்தை நிறுவியுள்ளார். எதினாலே? சிலுவைத் தியாக அன்பினாலே.

எங்களோடு எங்கள் வல்லரசும் அதிகாரமும் அழிந்துபோம். ஆனால் இயேசுவின் இராஜ்யமோ ஒருக்காலும் அழியாது. ஏனெனில் இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அவரது அன்பில் பிரமித்துப்போகிறார்கள். அந்த அன்பருக்குத் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயங்கார்கள். அவரது அன்பு என்போன்ற மனித அன்பு அன்று, அது தெய்வீக அன்பே. அந்தத் தெய்வீக அன்பரான இயேசுவுக்கே இறுதி வெற்றி கிடைப்பது நிச்சயம்.

  1. யோசேப்பின் வெற்றியின் இரகசியம்

யோசேப்பு ஒரு சிறு பையனாக இருக்கும்போது தனது பொறாமைக்கார சகோதரர்களால் எகிப்பதியருக்கு அடிமையாக விற்றகப்பட்டான். அதன்பின் போத்திபாரின் மனைவியினிமித்தம் அவன் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு அவன் பெயர் களங்கப்படுத்தப்பட்டது.

மனிதனுடைய வாலிபப் பிராயத்தில் அவனுக்கு ஏற்படும் ஓர் இழிவைப்போல அவனது ஜீவிய காலத்தில் மற்ற பகுதிகளில் ஏற்படுவது அவனை அவ்வாறு பாதிக்காது.

யோசேப்பு இதற்குமேல் இனி அனுபவிக்கவேண்டியதில்லை என்ற அளவு சோதனைகளையும் அவமானங்களையும் வேதனைகளையும் தனது வாலிபப்பிரயாத்தில் அனுபவித்துவிட்டான். ஆனாலும் அவன் தனது விசுவாசத்தில் சோர்ந்துபோகவில்லை. இருதயத்தில் ஜெயத்தோடு அவன் சிறைசென்றான்.

அநேக இருண்ட நாட்களை அவன் இங்கே கழிக்க வேண்டியதிருந்தும், நான் பரிபூரணப்பட இது எனக்கு தேவைதான் என்றான். எரிச்சலின் ஆவி தன் இருதயத்தை ஆளவிடாமல் தனது விசுவாசத்தில் உறுதியாயிருந்தான். ஆகவே கர்த்தர் அவனை சிம்மாசனத்துக்கு உயர்த்தினார்.

  1. ஜீவிய நோக்கம்

அன்பே நமது ஊழியத்தின் அஸ்திபாரமாயிருக்குமாகில், நாம் ஜீவிப்பதில் பிரயோஜனமுண்டு. மற்றப்படி அது பூமிக்கும் மற்றவர்களுக்கும் பாரம்.

  1. முறுமுறுக்காதே – வெற்றி நிச்சயம்

எரிகிற அக்கினிச் சூளையில் எறியப்படும் வேளையிலும் அந்த எபிரெய வாலிபர்கள் எவ்வித முறுமுறுப்பின் வார்த்தைகளையும் பேசாமல் தாழ்மையோடு மரணத்துக்கு துணிந்து நின்றார்கள்.

அக்கினியைப்போன்ற ஒரு சோதனை நமக்கு வர ஆண்டவர் அனுமதித்தால், அவ்வேளையில் அவரது கரத்தில் நாம் அடங்கியிருப்போமானால் அதிலிருந்து நாம் வெற்றியோடு வெளி வர தேவன் உதவி செய்வார்.

  1. அவர்கள் பேசுகிறார்கள்

திருமணத்திற்குமுன் அவன் பேசுகிறான்,

அவள் கேட்கிறாள்.

திருமணத்திற்குப்பின் அவள் பேசுகிறாள்,

அவன் கேட்கிறான்.

அப்புறமோ அவர்கள் இருவரும் பேசுகிறார்கள்

அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் கேட்கிறார்கள்.

  1. நாவும் நெருப்பும்

காட்டிலுள்ள ஒரு பெரிய மரத்திலிருந்து அநேக ஆயிரம் நெருப்புக் குச்சிகள் செய்யலாம். ஒரு நெருப்புக் குச்சியினால் ஒரு காட்டிலுள்ள அநேகமாயிரம் மரங்களையே அழித்துவிடலாம். நாவும் நெருப்புத்தான்.

  1. எந்த நேரத்திலும் தேவனை துதித்தல்

ஜெர்மன் நாட்டிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்த மிஷனறியாக பணியாற்றி வந்த ரேனியஸ் என்ற தேவஊழியர், அவரது முதல் குழந்தை 1.5 வயதில் திடீரென வியாதி கண்டு இறந்தபோது தன் நாட்குறிப்பில் பின்வருமாறு எழுதினார்.

சிறுவயதில் நமது குழந்தைகள் எடுத்துக்கொள்ளப்படும்போது நாம் துக்கத்துக்குள்ளாவோமானால், நம் அன்பின் ஆண்டவரைப் பொல்லாதவர் என்று பிறர் நினைக்க நாமே காரணராகிவிடுவோமே. இம்மரணத்தின் மூலமாயும் இயேசுவில் தம்மை வெளிப்படுத்தின நமது தேவனுக்கு என்றும் துதியுண்டவதாக.

  1. ஜீவியத்தின் நிச்சயம்

என்றோ ஒருநாள் நான் இறந்து விட்டதாக செய்திவரும். அதனை நம்ப வேண்டாம். ஏனெனில் அப்பொழுது நான் இயேசு கிறிஸ்துவுடன் வாழ்ந்து கொண்டிருப்பேன்.

  1. விலையேறப் பெற்றது

பணம், கல்வி, புகழ் இம்மூன்றைக் காட்டிலும் அன்பு, சந்தோஷம், சமாதானம் இவையே விலையேறப்பெற்றது.

  1. ஒத்துக் கொள்ளுங்கள்

பல காரியங்களைக் கற்று, அவைகளைத் தீர்க்கமாய் அறிந்து கொண்டதைப்போல், உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் ஒன்றுமே அறியாதவைகள் இன்னும் எத்தனையோ உண்டென்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

  1. வேத வெளிச்சத்தில் பாவம் வெளிப்படுதல்

ஓ-சுயல இதன் ஒளி சரீரத்துக்குள் ஊடுருவிச் சென்று சரீரத்திலுள்ள அந்நிய பொருட்களையும், இருதய வியாதிகளையும், எலும்பிலுள்ள கேடுகளையும் காட்டுவதுபோல, வேத வெளிச்சமானது மனுஷனின் இருதயத்திலும், எலும்பிலும், சதையிலும் காணப்படுகிற பாவத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

  1. மாயை ! மாயை ! மாயை !

நல் வாழ்வின்மேல் சிறிதும் நாட்டமின்றி நீள் வாழ்வை வாஞ்சிப்பது மாயை!

எதிர்காலத்தை எட்டிப்பாராமல் நிகழ்கால வாழ்விற்கே சிரத்தை எடுப்பது மாயை!

நித்திய மகிழ்ச்சி நிறைந்த அவ்வுலகிற்காக அவசரப்படாமல், காற்றெனப் பறக்கும் இவ்வுலகிற்குரியவைகளை நேசிப்பதும் மாயை!

  1. கடலிலே மீனும் விசுவாசியும்

கடல் தண்ணீர் உப்பாக இருக்கிறது. ஆனால் அதில் வாழும் மீன்களின் மாம்சம் உப்பாக மாறுவதில்லை. நாம் அவைகளை சமையல் செய்யும்போது உப்பு சேர்க்க வேண்டியதிருக்கிறது. ஏன்? அவைகளுக்குள் ஜீவன் இருப்பதால் கடல் தண்ணீர் அவைகளை உப்பால் கறைப்படுத்துவதில்லை. இது ஓர் அற்புதம்.

அதுபோல ஓர் உண்மையான கிறிஸ்தவன் பாவம் நிறைந்த, அசுத்தமும் அழுக்குமான இந்த உலகத்தில் ஜீவித்தாலும் அவனுக்குள் ஜீவனாகிய கிறிஸ்து இருப்பதால் பாவஉலகம் அவனைக் கறைப்படுத்த முடிகிறதில்லை.

  1. பட்டுப்பூச்சி

காஷ்மீரில் அழகிய மனுமினுப்பான கூட்டினுள்ள சந்தோஷமாக இருக்கும் ஒரு பட்டுப்பூச்சி தன்னைத் துன்பப்படுத்தி கொல்லுகிற மனுஷனுக்கு விலை உயர்ந்த பட்டாடையைக் கொடுத்து மேன்மைப்படுத்துவதுபோல, இயேசுவும் சிலுவையில் ஆணிகளால் கடாவி தம்மைக் கொன்ற பாவிகளுக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களையும் நீதியின் சால்வையையும் கொடுத்து அவனை மேன்மைப்படுத்துகிறார்.

பணத்தால்…. எல்லாம் வாங்கமுடியும் – இரட்சிப்பைத் தவிர.

எங்கும் செல்லமுடியும் – பரலோகத்தைத் தவிர.

  1. பூட்டப்பட்ட வீடும், திறக்கப்பட்ட வீடும்

ஒரு வீடு பூட்டப்பட்டிருக்கும்போது, அதன் கண்ணாடி ஜன்னல் வழியாகவும் சாவித்துவாரத்தின் வழியாகவும் உள்ளே இருக்கும் பொருட்களை மங்கலாகப் பார்க்கிறோம். ஆனால் கதவு திறக்கப்படும்போது, தெளிவாகவும் பூரணமாகவும் பார்க்கிறோம்.

ஆதுபோல இவ்வுலகில் இருக்கும்போது, நாம் ஆவிக்குரிய பல காரியங்களை விசுவாசத்தின்மூலமாக மங்கலாகக் காண்கிறோம். காலம் வரும்போது திறந்த முகமாக தெளிவாகக் காண்போம்.

  1. பிராணவாயுவும் ஐலவாயுவும்

பிராணவாயுவும் ஜலவாயுவும் இரண்டு அக்கினிக்காற்றுகள். எரியக்கூடியவைகள். ஆனால் ஆண்டவர் அவைகளிலிருந்து அக்கினியை அவிக்கக்கூடிய குளிர்ந்த தண்ணீரை உண்டாக்குவது அற்புதமே.

  1. நீ பிரஜையல்ல, குமாரன்

தேவபிள்ளையே, நீ கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரஜையல்ல. தகப்பனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குமாரன்.

  1. தேசப் படப் புத்தகம்

ஒரு மாணவன் பாடசாலையில் கல்விகற்கும்போது தான் காணமுடியாத பல தேசங்களையும், மலைகளையும், கடல்களையும், ஏரிகளையும் பட்டணங்களையும் தேசப்படத்தின்மூலமாகப் பார்க்கிறான். அதை அப்படியே நம்புகிறான். அவன் பெரியவனாகிறபோது அவைகளை நேரில் கண்டு களிக்கிறான்.

அதுபோல விசுவாசிகளும் சரீரத்தில் இருக்கும்போது, தங்கள் கண்களால் நேரில் காணமுடியாத பரலோகம், நரகம், ஆத்துமா முதலியவைகளை வேதபுத்தகத்தின்மூலமாக பார்க்கிறாhகள். அதை நம்புகிறார்கள். ஆனால் அவைகளை மறுமையில் நேரில் கண்டு அதில் ஆனந்தமடைகிறார்கள்.

  1. பெலன் பெறும் வழி

ஜெபமாகிய திறவுகோலைக் கொண்டு அதிகாலையைத் திற. இரவில் அந்தத் தாழ்ப்பாளைப் போட்டு பூட்டிவிடு. அப்போது தேவனுடைய பெலத்தினாலே மிகவும் பலவீனமுள்ளவர்களும் மகா பெலன் பெறுவார்கள்.

  1. சப்பாணிகளோடு நடந்தால்….

நீங்கள் சப்பாணிகளோடு கூடவே (முடவரோடு) சதா நேரமும் தங்கித்தாபரித்து வந்தால், காலப்போக்கில் நீங்கள் அவர்களைப்போலவே குந்திக்குந்தி நடக்கக்கூடும்.

  1. ஒரு ஜெபம்

என் ஆண்டவரும் தேவனுமாகிய கர்த்தாவே. தேவரீர் என் துன்பத்தை இன்பமாகவும், என் கசப்பைத் தித்திப்பாகவும், என் சஞ்சலத்தைச் சந்தோஷமாகவும், என் அங்கலாய்ப்பை ஆனந்தமாகவும், என் சிறுமையை சிறப்பாகவும், என் எளிமையைச் செல்வமாகவும், என் சிறையிருப்பைச் சுயாதீனமாகவும், என் பாவ இதயத்தை பரிசுத்த ஆலயமாகவும் மாற்றுகிற மகத்துவமும் சர்வவல்லமையுமுள்ளவர் என்பதைக் கண்டு கொள்ளத்தக்கதாக என் உள்ளத்தைப் பிரகாசித்தருள வேண்டுமென்று கிறிஸ்து இயேசுவின் நிமித்தம் கெஞ்சிக்கேட்கிறேன். ஆமென்.

  1. நில் ! நினைத்துப் பார் ! உன் நிலை என்ன ?

ஆகாயத்தில் ஆனந்தமாக மிதந்து பறந்து செல்லவேண்டிய பறவை, தண்ணீரில் விழுந்து அமிழ்ந்து போகநேரிடுமாயின், எவ்வளவு அவல நிலையோ, அவ்வளவு அவல நிலை விசுவாச சிறகைக் கொண்டு கிறிஸ்துவுக்குள் ஆனந்தமாக வாழவேண்டிய கிறிஸ்தவன், அவிசுவாசம் என்னும் கடலில் வீழந்து ஆழ்ந்து கிடக்குங்கால் எற்படும் நிலை.

  1. உண்மையே பேசு

நீ சத்தியத்தைப் பேசுவது சிலருக்கு கஷ்டமாயிருக்கலாம். அதினிமித்தம் பொய் பேசாமல் உண்மையே பேசு.

  1. ஆத்துமாவை கெடுப்பது எது?

வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும். திராட்சரசம் பரியாசஞ்செய்யும். மதுபானம் அமளிபண்ணும். அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன். அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான்.

  1. ஒரு வித்தியாசம்

மெழுகினால் செய்த ஒரு மனுஷ சிலைக்கும் ஒரு உயிருள்ள மனுஷனுக்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம், இயேசு கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றவனுக்கும் அந்த ஜீவனைப் பெறாமலிருப்பவனுக்கும் இருக்கும்.

  1. தேவ பயம் இல்லாத அறிவு

வேதத்தை முழுமையாய் மனனம் செய்தாலும், தத்துவ ஞானிகளின் வாக்குகளில் எவ்வளவுதான் தேறினாலும், தேவனின் கனிவும் காருண்யமுமில்லையானால் அவைகளனைத்தாலும் இலாபம் என்ன?

ஒவ்வொருவரும் அறிய வேண்டுமென்பதில் ஆர்வம் உள்ளவர்களே! ஆனால் தேவபயம் இல்லாத தேவ அறிவினால் என்ன பயன்?

  1. பெரிய கழுகு

ஒருநாள் ஒரு பெரிய கழுகு பறந்து போகையில் திடீரென தொப்பென்று கீழே விழுந்து செத்தது. அதைப் பரிசோதித்துப் பார்க்கையில் ஒரு சிறு அட்டை அதன் இரத்தாசயத்தை துளைத்து இரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கக் கண்டார்கள்.

அற்பமாக எண்ணி இருதயத்தில் வைத்திருக்கிற சிறு பாவமும் விசுவாசியைக் கொல்லும். எச்சரிக்கை. எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

  1. உங்கள் அறிவு!

எந்த அளவுக்குக் கூடுதலாக அறிகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கையும் கூடுதல் தூய்மை அடையாவிட்டால், கூடுதல் நியாத்தீப்பு உங்களுக்குண்டு. ஆகவே, உங்களுக்குள்ள எந்த அறிவையும், ஆற்றலையும் குறித்துப் பெருமையடிக்காதேயுங்கள், உங்களுக்களிக்கப்பட்ட அறிவைக் குறித்துப் பயந்திருங்கள்.

குறை கூறும் நாவிற்கு விண்ணப்பம்பண்ணும் இருதயமிராது.

  1. சவுலும் தாவீதும்

சவுல் பாவம் செய்தான், ஆனால் அவன் சாமுவேல் தீர்க்கதரிசியினால் உணர்த்தப்பட்டு உணர்வடையாமல் நம்பிக்கையற்றவனாய் அஞ்ஞானக்காரியிடம் சென்றான். இது சாத்தானிடத்தி; அடைக்கலம் புகுவதற்கு சமம். அதன் முடிவு பரிசுத்த ஆவியை இழந்து, பொல்லாத ஆவியினால் கலக்கமடைந்து, பின்னால் தன்னைத்தான் தற்கொலை செய்துகொண்டான்.

தாவீதும் பாவம் செய்தான். ஆனால் அவன் நாத்தான் தீர்க்கதரிசியினால் தன் பாவம் உணர்த்தப்பட்டபோது உணர்வடைந்து தேவனிடத்தில் தன் பாவத்தை மறைக்காமல் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொண்டான். கர்த்தருடைய இருதயத்துக்கேற்ற மனுஷன் என்ற சாட்சியும் பெற்றான்.

  1. யூதாசும் யோவானும்

யூதாஸ்: யோவானே, நீ கர்த்தர் நேசித்த சீஷன் என்று ஏன் தன்னைத்தான் பெருமையாகப் பேசுகிறாய்?

யோவான்: என்னை நேசித்தார் என்றல்லாமல் உன்னை நேசிக்கவில்லை என்று நான் சொல்லவில்லையே. சிநேகிதனே! என்றல்லவா அவர் உன்னை அழைக்கிறார். நீ ஏன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை?

  1. நூறில் ஒன்று

தங்கள் முழு இருதயத்தோடும் இயேசுவில் அன்புகூர்ந்து, பாவத்தைத் தவிர வேறொன்றுக்கும் அஞ்சாத 100 மனிதர் எனக்குக் கிடைத்தால் கிறிஸ்துவுக்காக உலகத்தை அசைத்துவிடுவேன் என்றார் ஐhன் வெஸ்லி என்ற பக்தன்.

சிநேகிதனே! நீ ஏன் அந்த நூறில் ஒன்றாக இருக்கக்கூடாது?

  1. நமது கர்த்தர்

நமது கர்த்தர் கண்ணீரைக் காண்கிறவர்

நமக்காக கண்ணீர் விடுகிறவர்

நமது கண்ணீரைத் துடைக்கிறவர்

  1. தலைசிறந்த ஞானம்

பாழுலகைப் பரிகசித்து, மேலுலகத்தைத் தனக்கு இலக்காகக் கொள்வதே தலைசிறந்த ஞானம்.

ஆகவே சீரழியும் செல்வங்களைத் தேடி, அதைச் சாருவது மாயை.

புகழ்தேடி அலைவதும், உங்களை நீங்களே உயர்வுபடுத்திக் கொள்வதும்கூட மாயையே.

  1. சீனி

(1) பிராணவாயு – வாசனையற்றது

(2) ஜலவாயு – வாசனையற்றது

(3) கரி – இது கறுப்பு நிறமுடையது, ருசியற்ற கரையக்கூடாதது.

இந்த மூன்று வகைகளும் ஒன்றாகச் சேர்ந்து அழகான, வெள்ளை நிறமான, இனிமையான சீனியாக மாறுவது அற்புதம். அதுபோல பாவத்தால் கரியிலும் கறுத்துப் போன பாவியான மனிதன் இயேசுவின் தூய இரத்தத்தால் கழுவப்படும்பொது பஞ்சைப்போல் வெண்மையான பரிசுத்தவானாக, புதுசிருஷ்டியாக மாறுகிறான். இது மாபெரும் அற்புதமே.

  1. தாய் பன்றியும், குட்டிகளும்

பன்றிக் குட்டிகள்: எம்மோவ்! நாங்கள் மனுஷாள்களாகிறதுக்கு என்ன செய்யனும்?

தாய்ப்பன்றி: அடப் பிஞ்சுப் பசங்களா?

எதுக்குடா இந்தக் கேவல புத்தி உங்களுக்கு!

மனுஷாள் ரொம்பப்பேர் நம்மைப் போலாக்கிக்கொண்டிருக்காங்களே.

  1. போலிக் கண்ணீர்

இயேசுவின் பாடு மரணத்திற்காக துக்கப்படுகிறவர்களில் பலர் தங்கள் பாவங்களுக்காகவும், தங்கள் பிள்ளைகளின் பாவங்களுக்காகவும் அழுது மறந்துவிடுகிறார்கள். இயேசு அவர்களை நோக்கி: எருசலேம் குமாரத்திகளே எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார்.

உனது பாவத்திற்காக மரித்த இயேசு கல்லறையில் இல்லை. அவர் உயிரோடெழுந்தார். உயிரோடெழும்பிய இயேசுவுக்காக அழுவது சரிதானா? அவர் பாடு மரணங்களை லெந்து காலமென்று குறிப்பிட்டு, கூலிக்காகக மாரடிக்க உனக்கு கற்பித்தது யார்? வெள்ளிக்கிழமை போலிக்கண்ணீர்… ஞாயிற்றுக்கிழமை..???? ஏன் இந்த மாய்மாலம்?

  1. கிறிஸ்து இயேசுவையே தியானம் செய்!

கிறிஸ்து இயேசுவின் வாழ்வினை ஆழ்ந்து தியானிப்பதே நமது தலையாய கடமையாயிருக்கட்டும். கிறிஸ்துவின் வார்த்தைகளைப் பூரணமாய் புரிந்து கொள்ளவும் முழுமையாய் சுவைக்கவும் விரும்பினால், அவரது பாங்கிற்கேற்ப உங்கள் வாழ்க்கையை நீங்கள் சீரமைக்கக் கட்டாயம் சிரத்தையெடுக்க வேண்டும்.

  1. சோதிக்கும் பிசாசுகள்

அதிக வேலையாயிருப்பவனை ஒரு பிசாசு சோதிக்கும். சோம்பேறியை ஆயிரம் பிசாசுகள் சோதிக்கும்.

  1. குறைகளைப் பார்க்கிறவர்

மற்றவர்களின் குறைகளையே கண்டுபிடிக்க நான் பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தால், என் இருதயமே சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. நாம் ஒருவர் குறைகளை ஒருவர் பார்க்கிறோம். தேவனோ நம் எல்லாருடைய குறைகளையும் காண்கிறார்.

  1. நமது பிரசங்கத்தில்

(1) சுயஞானம் (உலகஞானம்) கலக்கக்கூடாது

(2) பாரம்பரியத்தைப் புகுத்தக்கூடாது

(3) கட்டுக்கதைகளைச் சேர்க்கக்கூடாது

  1. கோழியும், பசுவும்

சொந்தவீட்டில் மேய்ந்து, அடுத்தவீட்டில் சென்று முட்டையிடும் கோழி எப்படிப்பட்டது? தான் இடும் முட்டைகளைத்தானே கொத்திவிழுங்கும் கோழியும், தன் பாலைத் தானே குனிந்து குடிக்கும் பசுவும் எப்படிப்பட்டது? விசுவாசியே உனது அனுபவமென்ன? உன் எஜமானை (இயேசுவை) சந்தோஷப்படுத்துகிறாயா?

  1. தேவசித்தமே செய்

தேவஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டுமானால், எல்லாக் காரியங்களையும் தேவ சித்தப்படியே செய்து கொண்டிருக்கவேண்டும்.

  1. ஒரு ஜெபம்

ஆண்டவரே நான் ஆசீர்வதிக்கப்படவேண்டும், நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்க வேண்டும். அதை நான் அறியாதிருக்கவேண்டும். ஆமென்.

  1. தெய்வங்களை உண்டுபண்ணும் மனிதன்

அடே அப்பா! மனிதனுக்குத்தான் எவ்வளவு பைத்தியம். அவனால் ஒரு புழுவை உண்டாக்க முடியவில்லை. ஆனால் கணக்கில்லாத தெய்வங்களை மட்டும் உண்டுபண்ணிக்கொண்டே இருக்கிறான்.

  1. எது கூடாது?

ஜீவிக்கிறதற்காக புசிக்கவேண்டும். ஆனால் புசிக்கிறதற்காக ஜீவிக்கக்கூடாது.

சுவிசேஷ ஊழியத்திற்குப் பணம் தேவை. ஆனால் பணத்திற்காக சுவிசேஷ ஊழியம் செய்யக்கூடாது.

  1. உன்னை மறந்துவிடு!

மற்றவர்களுக்காக உன்னை நீ மறந்துவிடு மற்றவர்கள் ஒருக்காலும் உன்னை மறக்கமாட்டார்கள்.

  1. சாத்தானும் தேவனும்

சாத்தான்: என்னிடம் நீர் எப்போதாவது மன்னித்திருக்கிறேன் என்று சொன்துண்டோ? மனிதனுக்கு நீர் எத்தனை தரமோ மன்னித்திருக்கிறீரே என்றான்.

தேவன்: நீ ஒருதடவையாவது நான் தவறு செய்த பாவி, என்னை மன்னியும் என்று கேட்டதுண்டோ என்றார்.

  1. நமது பொறுப்பு

விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவரும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. ஆனால் இந்த விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டியது நமது பொறுப்பாயிருக்கிறது.

  1. அனலாயிரு

தன்னில்தானே அனலில்லாதவன் மற்றவர்களுக்கு அனலுண்டாக்க முடியாது.

  1. வணங்கா கழுத்து

வணங்கா கழுத்துடையவர்களுக்கு இயேசுவின் நுகம் தகுதியாயிராது.

  1. எதுவும் ஈடாகாது

கர்த்தர் உன்னைத் தம்முடைய ஊழியத்துக்கு அழைக்கும்போது, அதற்குப் பதிலாக பணமாவது, ஜெபமாவது கர்த்தருக்கு உகந்த ஈடாகாது.

  1. ஆபத்தில் அருந்துணை

ஆபத்துக்காலத்தில் கர்த்தர் நமக்கு அனுகூலமான துணை மாத்திரமல்ல, ஆபத்து வராமல் தடுப்பதற்கும் அவர் துணையாயிருக்கிறார்.

  1. குணம் அறிய

ஒருவனுடைய குணம் எப்படிப்பட்டதென்று அறியவிரும்பினால் அவனுக்குக் கஷ்டம் வரும்பொழுது அவனைக் கவனி.

  1. கர்த்தரை நோக்கிப் பார்த்தால்

சூரியனுக்கு நேரே உன் முகத்தைத் திருப்பினால் உன் நிழல் உன் முதுகுக்குப் பின்னால் விழும். அவ்வாறே, கர்த்தரை நீ நோக்கிப்பார்க்கும்போது, உன் கஷ்டங்கள், கவலைகள், துன்பங்கள் எல்லாம் பின்னிடும்.

  1. நீயும் மன்னித்துவிடு

அருமை நேசர் இயேசுவினால் கொடிய பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெற்ற, நீ உன் அயலான் செய்த சிறிய தவறை மன்னிக்க மனமற்றிருக்கிறாயோ?

  1. தேவ ஊழியனின் வேலை

கிறிஸ்துவின் ஊழியக்காரனின் வேலை, சபையாருக்கு ஊஞ்சல் போட்டு ஆட்டுகிறதல்ல, கழுத்தில் நுகத்தடியை தூக்கிவைத்து, சிலுவை சுமக்கும்படி செய்வதே.

  1. வேதாகமத்தில் வா

வேதாகமத்தில் வா என்ற வார்த்தை 1942 தரம் வருகிறது. இவைகளில் 632 தடவை தேவன் தனிப்பட்ட முறையில் மனிதனிடம் கூறியதாகும்.

  1. சுவிசேஷ பிரசங்கி யார்?

வாயினால் கிறிஸ்துவைப் பிரசங்கிப்பவன் மாத்திரம் சுவிசேஷ பிரசங்கியல்ல, உண்மையான கிறிஸ்தவனாய் ஜீவிப்பவனும் சுவிசேஷப் பிரசங்கியே.

  1. மகிழ்ச்சியின் இரகசியம்

மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் காரியத்தைச் செய்கிறவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருப்பான்.

  1. விவாகம் கனமுள்ளது

விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது. ஏனெனில் முதலாவது விவாகத்தை ஏதேன் தோட்டத்தில் வைத்து நடத்தி (ஆதாம் ஏவாள்) அவர்களை ஆசீர்வதித்தது நமது தேவனாகிய கர்த்தர் தான்.

இயேசுவும் கானாவூர் கலியாணத்துக்கு சென்று தமது மகிமையை வெளிப்படுத்தினார்.

  1. உண்மையை மட்டும் பேசுங்கள்

உண்மைகள் எல்லாவற்றையும் நீங்கள் சொல்லவெண்டுமென்பதில்லை. நீங்கள் சொல்கிறவைகள் எல்லாம் உண்மைகளாக இருக்கட்டும்.

  1. இயேசுவை நோக்கிப் பாருங்கள்

உலக காரியங்களைப் பார்த்தும் பாராததுபோல போ. ஆனால் இயேசுவையோ நன்றாய் உற்றுப் பார்.

உன்னை உற்றுப்பார்த்தால் உனது துன்பங்கள் பெருகும். தேவனை நோக்கிப் பார்த்தால் துன்பங்கள் மறையும்.

  1. பெரிய தப்பிதம்

ஒருவனுடைய ஜீவியத்தில் எற்படுகிற பெரிய தப்பிதம் அவன் வழிவிலகி நடக்கும்பொழுது அதைப்பற்றி உணர்ச்சியற்றிருப்பது.

  1. முழு வல்லமையோடும் பிரகாசி

ஆண்டவரே ஓர் இருண்ட இடத்தை எனக்குக் காண்பியும். அந்த இடத்தில் நான் முழுவல்லமையோடு பிரகாசிக்க உதவி செய்யும்.

  1. வசனத்தின்படி செய்

தமது ஜனங்கள் வசனம் பிரசங்கிக்கிறவர்களாக மட்டுமன்றி, அதன்படி செய்கிறவர்களாகக் காணவே தேவன் விரும்புகிறார்.

  1. பெரிய நஷ்டம்

காணாமற்போன ஆடு – நூறில் ஒன்று – உலகத்திற்கு நஷ்டம்.

காணமாற்போன வெள்ளிக்காசு – பத்தில் ஒன்று – சபைக்கு நஷ்டம்

காணமற்போன மகன் – இரண்டில் ஒன்று – வீட்டிற்கு நஷ்டம்

  1. நரகத்தின் முன்னணியில்

நரகத்திற்குச் செல்பவர்களின் முன்னணியில் நிற்பவர்கள் பயப்படுகிறவர்கள்தான்.

  1. தாயும் குஞ்சும்

உன்னையும் உன் ஆகாரத்தையும் பார்க்க, எங்கள் கண்கள் திறக்குமட்டும் நாங்கள் வாயைத் திற்கமாட்டோம் என்று பிடிவாதமாகக் குஞ்சுப் பறவைகள் தங்கள் தாயிடம் கூறிற்று. அப்போது நீங்கள் பசியால் செத்தப்போவதைத் தவிர வேறுவழி தெரியவில்லை என்று பதில் சொன்னது தாய்.

தேவன் எனக்கு உதவி செய்தால்தான் நான் நினைத்ததை முடித்து தந்தால்தான் ஜெபம்பண்ணுவேன், ஆராதனைக்குச் செல்வேன், அவரை ஸ்தோத்தரிப்பேன். அதுமட்டுமா வாயைமூடி மௌனமாயிருப்பேன் என்று நீ சொன்னால், நீ உன் இரட்சகரை பூரணமாக விசுவாசிக்காதபடியினால் உன் பாவத்தில் நீ செத்துப்போவது நிச்சயம்.

ஏற்ற காலத்தில் பூரண வளர்ச்சியடைந்து அவரை முகமுகமாய் தரிசிப்பேன் என்ற நம்பிக்கையைத் தளரவிடாமல் உன் விசுவாசத்தை வளரவிட அவரை உறுதியாக பிடித்துக்கொள். அப்பொழுது பிழைப்பாய்.

  1. உம் சித்தமே என் மகிழ்ச்சி

ஆண்டவரே, என் சித்தம் என்பதே எனக்கு வேண்டாம். என் மெய்யான மகிழ்ச்சி வெளிப்புறமாக எனக்கு நேரிடக்கூடிய எதையும் ஒரு சிறு அளவிலாவது சார்ந்திருப்பதாக நான் கருதவும் வேண்டாம். உம் சித்தத்தோடு ஒன்றாகி நிற்பதைப் பொறுத்தே என் மகிழ்ச்சி உள்ளது என்று நான் சிந்திக்கச்செய்யும்.

  1. பாவம் செய்கிறவர்கள்

ஏவாள் இச்சையைக் கர்ப்பம் தரித்தாள், அது பாவத்தைப் பிறப்பித்தது. பாவம் பூரணமாகி மரணத்தையுண்டாக்கியது. அவள் பாவத்தில் விழுந்ததுமன்றி தன் புருஷனுக்கும் சோதனைக்காரியாகிவிட்டாள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆன்மீக வளர்ச்சியில் உதவியாயிருக்க வேண்டியவர்கள். ஆனால் ஏவாள் ஆதாமையும் பாவம் செய்யப்பண்ணினாள். பாவம் செய்கிறவர்கள் மற்றவர்களையும் பாவத்தில் விழத்தள்ளிவிடுகிறார்கள்.

  1. உண்மை உண்டா?

மனிதன் வெற்றியையே விரும்புகிறான். ஆனால் தேவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறார்.

  1. ஒன்றுக்கும் உதவாதவன்

அஸிஸி பட்டணத்து பிரான்ஸிஸிடம் கர்த்தர் உம்மை இத்தனை வல்லமையாய் உபயோகிப்பதன் அந்தரங்கம் என்ன? என்று கேட்டபோது, அவர் உலகத்தில் ஒன்றுக்குமே உதவாத ஒருவன் உண்டா என்று தேவன் பரலோகத்திலிருந்து இப்பூலோகத்தில் நோக்கிப் பார்த்தார். என்னைத்தான் கண்டார். என்னை அழைத்தார், நேசித்தார், கரங்களில் எடுத்தார். ஆம், என்மூலம் ஏதேனும் செய்ய முடிகிறதென்றால் அது என்னாலல்ல அவராலேதான் என்பதை நான் நன்றாய் அறிவேன் என்றார்.

  1. நற்கிரியைகள்

காரிருளில் ஒரு மெழுகுவர்த்தியின் பிரகாசம் எவ்வளவோ விரும்பத்தக்கதாயிருக்கிறது. அவ்வாறே அக்கிரமம், அநீதி, பாவம் நிறைந்த இவ்வுலகில் நமது நற்கிரியைகள் பிரகாசிக்கின்றன.

  1. அப். பவுல் பேசுகிறார்….

பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேக முறை கண் வழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேக முறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள் தோறும் நெருக்குகிறது.

விசுவாசியே, தேவ ஊழியனே! உன்னுடைய அனுபவம் என்ன?

  1. செல்வப் பற்று

தன் செல்வத்தின்மேல் பற்றுக்கொண்டிருக்கும் ஒருவன் ஏதோ ஒருவித கலப்படமான சீஷத்துவத்தை மேற்கொள்ளக்கூடும் என்று இயேசு கற்பிக்கவில்லை. அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் என்று அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

  1. ரப்பர் பலூன்

ரப்பர் பலூனில் காற்றை அடைத்தால் அது விரித்து மினுமினுப்பாகி, பல கலர்களில் பிரகாசித்து மேலே பறக்கிறது.

இது கிறிஸ்தவனின் ஜெயஜீவியத்தையும் தோல்வியையும் சுட்டிக்காட்டுகிறது.

  1. அன்பின் இலக்கணம்

அன்பு பகிர்ந்து பங்கிட்ட உடன் கரைந்து போகிற கல்கண்டுபோல் இல்லை. பிட்டு பலருக்குப் பங்கிட்ட உடன் பெருகிவந்த அப்பமும், மீனும்போல இருக்கிறது.

  1. பாவியை மன்னிக்கும் தேவன்

பாவங்களை தேவன் மன்னிக்கிறவர் மட்டுமல்ல, மறக்கிறவர் என்பதற்குச் சாட்சியாக சாமுவேல், இராஜாக்களின் புத்தகத்தில் விவரமாய்ச் சொல்லப்பட்டிருக்கும் தாவீதின் பாவம் (உரியாவின் மனைவி பத்சேபாளிடத்தில் பாவத்திற்குட்பட்டது) நாளாகமப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.

  1. யோபு பேசுகிறார்….

நான் முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளைகளையும், உதவியற்ற எளியவனையும் இரட்சித்தேன். விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன். நான் குருடனுக்கு கண்ணும் சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன். எளியவனுக்கு தகப்பனாயிருந்து அவர்களை ஆதரித்தேன். தாய் தகப்பனில்லாத பிள்ளைகள் என் ஆகாரத்தில் சாப்பிட்டார்கள். நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதில்லை. சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தார்கள். உடுப்பில்லாதவனையும் வஸ்திரமில்லாதவனையும் கண்டபோது என் ஆட்டுமயிர் கம்பளியைக் கொடுத்து அவர்களுக்கு அனலுண்டாக்கினேன். (யோபு 29:1-16, 31:16-20).

  1. தெய்வச் செயல்

சனி என்ற கிரகத்தைச் சேர்ந்த 8 சந்திரன்கள் அதைச் சுற்றி ஒரே திக்கில் ஓட ஒன்று மாத்திரம் எதிர் திக்கில் சுற்றி ஓடுகிறது. இதைப் போன்று யூப்பித்தர், யுரெனஸ், நெப்டியூன் என்ற கிரகங்களிலும் நடைபெறுகிறது. இயற்கை இவ்வாறு சந்தர்ப்பத்திற்கேற்றவாறு திக்குமாறி சந்திரனை அனுப்புமோ? ஆதலால் இச்செயல் தற்செயலாகவும் பரிணாமிதத்தினாலுமல்ல, தெய்வச் செயலால் உலகம் உண்டாக்கப்பட்டு, ஞானமாக தேவனால் ஆளப்படுகிறது.

  1. உலகம் உண்டாக்கப்பட்டது

எபி. 11:3ல் காணப்படாதவைகளால் உலகம் உண்டாக்கப்பட்டது என எழுதப்பட்டிருக்கிறது. இந்த வேதவசனம் எழுதப்பட்டபோது அதன் கருத்து பலருக்கும் விளங்கவில்லை.

ஆனால் இப்பொழுது அணுக்களால் உலகம் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அணுக்களைச் சாதாரண நமது கண்களால் காணமுடியாது. மேலும் அணுக்கள் புரொட்டான்கள், எலக்டிரான்கள், நியூட்ரான் என்பவைகளால் ஆனது. இவைகளையும் நாம் காணமுடியாது.

இந்த வேத வசனத்தை விஞ்ஞானிகள் இப்போது ஒப்புக்கொள்கிறார்கள். வேதம் சத்தியமன்றோ!

  1. தயவு செய்து இதைச் செய்யுங்கள்.

கனம் பண்ணவதில் முந்திக்கொள்ளுங்கள்

ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருங்கள்

ஆவியில் அனலாயிருங்கள்

உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள்

பரிசுத்தவான்களின் குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்

துன்பப்படுகிறவர்களைச் சபியாமல் ஆசீர்வதியுங்கள்

மாயமற்ற அன்பு எல்லாரிடத்திலும் செலுத்துங்கள்

  1. மிக முக்கியமானது

நாம் ஒவ்வொரு நாளையும் எவ்வாறு செலவழிக்கிறோம் என்பதுதான் நீடித்த ஆயுளைவிட முக்கியமானது.

  1. காற்றில் அசையும் மரம்

காற்றினால் மரம் எவ்வளவாய் அசைக்கப்படுகிறதோ அவ்வளவாய் மரத்தின்வேர் ஆழமாய்ப் பாய உதவுகிறது. இது விசுவாசத்தின் ஜெய ஜீவியத்தைக் காட்டுகிறது.

  1. அன்பு இல்லையென்றால்…

அன்பில்லாத ஜீவியம் உப்புக் கடல்

அன்பில்லாத ஆத்துமா சீனாய் வனாந்தரம்

அன்பில்லாத பொருள் கனியற்ற அத்திமரம்

அன்பில்லாத ஊழியம் தண்ணீரற்ற மேகம்

அன்பில்லாத சம்பாஷணை விஷம் கலந்த விருந்து

அன்பில்லாத கிரியைகள் வெடிப்புள்ள தொட்டிகள்

அன்பில்லாத அறிவு வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை

  1. இயேசு உயிர்த்தெழுந்தார்

கிறிஸ்து மார்க்கத்தின் அடிப்படை விஷயம் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிரோடேழுந்தார் என்பதே.

  1. தற்காலப் போதகர்கள்

உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்து

கட்டாயமாய் அல்ல

மனப்பூர்வமமாய்

அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல

உற்சாக மனதோடு

சுதந்திரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாய் அல்ல

மந்தைக்கு மாதிரிகளாகவும் கண்காணிப்புச் செய்யுங்கள்

அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்

இப்படிக்கு

உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும் கிறிஸ்துவின் பாடுகளுக்கு சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற…. சீமோன் பேதுரு.

  1. விசுவாசியே உங்கள் கடமை! நீங்கள்?

ஆசிரியரா? மாணவரா?

விவசாயியா? வியாபாரியா?

வழக்கறிஞரா? வைத்தியரா?

விஞ்ஞானியா என்ஜினியரா?

கலைஞரா? கவிஞரா?

கற்றவரா? கல்லாதவரா?

வாலிபரா? வயோதிபரா?

யாராக இருந்தாலும் சரி

உங்களால் சுவிசேஷ ஊழியம் செய்ய முடியும்?

எப்படி?

பிரசங்கம் பண்ணலாம்.

சாட்சி கூறலாம்

பாட்டுப் பாடலாம்

துண்டுப் பிரதிகள் விநியோகிக்கலாம்

துண்டுப் பிரதிகள் அச்சிடலாம்

பண உதவி செய்யலாம்

ஆசீர்வாதத்துக்காக ஜெபம் பண்ணலாம்

  1. அபிஷேகத்தின் ருசி

பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறும்போது, அப்பமும், மீனும், முட்டையும் சேர்த்து சாப்பிடுவது போன்று ருசியும் திருப்தியும் ஆத்துமாவில் உண்டாகிறது.

  1. ஒரு கேள்வி?

சபை விசுவாசியிடம் ஒரு கேள்வி?

பிரியமான விசுவாசியே!

நீ உன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பேர் கிறிஸ்தவனான மனிதனிடம் வருடா வருடம் எவ்வளவு தொகை கிறிஸ்தவ ஊழியத்திற்காக கொடுக்கிறாய் என்று அந்த சிநேகிதனோடு கேட்டுப்பார்.

மனந்திருப்பி, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிறைந்து, உலகத்திலிருந்து வேறுபட்டு, ஆவிக்குரிய பல வரங்களால் நிரப்பப்பட்ட நீ, ஒரு பேர் கிறிஸ்தவன் கர்த்தருடைய ஊழியத்திற்கு செய்யுமளவுக்கு செய்யவில்லையானால், அது எவ்வளவு கனியற்ற பரிதாபகரமான நிலைமை! வெட்கக்கேடு! உன் மேன்மையான நித்தியத்திற்குரிய பிரதிபலனை இழந்துபோகிறாயே!

  1. விசுவாசமில்லாத ஜெபம்

விசுவாமில்லாத ஜெபம் நெருப்பற்ற விறகு குவியலில் ஊதுவதற்குச் சமம்.

  1. என் இயேசு ராஜா

என்னை

அழிக்காது அமைத்தீர்

அடிக்காது அணைத்தீர் – உம்

அன்பிற்கே நான் அடிமை

என்

உடல் பொருள், ஆவி அனைத்தும்

கடல்போன்ற உம்

அன்பிற்கு அடிமை

இனி

உம்பாரம் என் விருப்பம்

உமக்கென்றே என் வாழ்வு – உமக்கே

நான் அடிமை

அன்பனே! உன்னை அருமை நேசர் இயேசுவுக்கு

இன்றே ஒப்புக்கொடுப்பாயா?

இயேசு இராஜா நான்

உமக்குச் சிறையானதால்

சுதந்தரம் பெற்றேன்!

உமக்கு அடிமையானதால்

விடுதலை கண்டேன்.

  1. சுகமா? சுகமா? சுகமா?

நீ சுகமா? (1.இராஜா.4:265)

உன் புருஷன் சுகமா?

உன் பிள்ளை சுகமா? (3.யோ.2)

  1. பிரயோஜனமென்ன?

உனது கால்கள் ஆலயத்திற்கு விரைந்து சென்றாலும்

உனது கரங்கள் தானதர்மங்களைச் செய்தாலும்

உனது வாய் ஆண்டவரின் துதியைப்பாடினாலும்

உனது இருதயம் இயேசுவுக்கு கொடுக்கப்படாவிட்டால்

பிரயோஜனமென்ன?

  1. செத்தபின் பிழைத்தல்

மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? (யோபு 14:14) என்ற யோபின் கேள்விக்குப் பற்பல பதில்கள்.

மனிதன் திரும்பவும் பிழைப்பதாக நம்புகிறான்

என்று தத்துவஞானம் சொல்லுகிறது.

மனிதன் திரும்பவும் பிழைப்பவேண்டும் என்று

தர்மசாஸ்திரம் சொல்லுகிறது.

மனிதன் ஒருபோதும் திரும்பவும் பிழைக்கமாட்டான் என்று

நாத்தீகம் சொல்லுகிறது.

ஆனால் இயேசு கிறிஸ்துவோ நீங்கள் மரித்தாலும்

பிழைப்பீர்கள் என்று சொல்லுகிறார்.

  1. கனி உண்டா?

என்னில் கனி உண்டா? (லூக்.3:-69)

என்னில் நற்கனி உண்டா? (மத்.3:10)

என்னில் மிகுந்த கனி உண்டா? (யோ.15:8)

  1. அவரல்ல நீயே

உவமையில் சொல்லப்பட்ட வெள்ளிக் காசைப்போல கிறிஸ்துவும் மறைந்து இருக்கிறார். எங்கே? உன் வீட்டில்தான். அதாவது உன் அகத்தில்தான். தேடிப்போக வேண்டாம்.

அன்று படகில் அவர் நித்திரையாயிருந்த வண்ணம் உன் இருதயத்தில் இன்று நித்திரையாயிருக்கிறார். வாஞ்சையென்னும் பெருந்தொனியால் அவரை எழுப்பு, உண்மையில் அவரல்ல, நீயே அடிக்கடி அயர்ந்த நித்திரையாயிருக்கிறாய்.

  1. வசனத்துக்கு கீழ்ப்படிதல்

வேத புத்தகத்தில் விளங்காத சில வசனங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து நான் கவலைப்படுகிறதில்லை. ஆனால் தெளிவாய் விளங்கும் அநேக வசனங்களைப்பற்றித்தான் நான் கவலைப்படுகிறேன். இப்படி மார்க் டுவைன் என்பவர் கூறுகிறார்.

நமக்குத் தெரிகிற வசனங்களுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்கிறோமா என்பதை முதலில் சிந்திப்போம்.

  1. மக்களை மாற்றுகிறவர் யார்?

ஜெபம் சம்பவங்களை மாற்றும் – ஆனால்

மக்களை மாற்றுவது தேவன்

  1. அதிக கனிகள் கொடுக்கவே

திராட்சத் தோட்டக்காரன் செடியானது அதிக கனிகளைக் கொடுப்பதற்காக, அனாவசியமான கிளைகளை கத்தரித்து சுத்தப்பண்ணுவதுபோல, தேவனுடைய பிள்ளைகள் கர்த்தருக்கு அதிக கனிகளைக் கொடுக்கத்தக்கதாக, துன்பம் தங்களுக்கு வந்திருப்பதாக எண்ணிக்கொள்ளவேண்டும்.

  1. தேவனுடைய விருப்பம்

தேவைக்கு மிஞ்சியதை தேவனுக்கு கொடுப்பதைவிட நமது தேவையிலிருந்து கொடுப்பதையே தேவன் விரும்புகிறார்.

  1. முழங்கால் பயற்சி

சல்லிக்கல் உடைக்கும் தொழிலாளி ஒருவன் முழங்காலிலிருந்து கொண்டு கற்களைச் சிறிய சம்மட்டியால் உடைத்துக் கொண்டிருந்தான். அவ்வழியே சென்று கொண்டிருந்த போதகர் அவனைப் பார்த்து, கல்லான இருதயங்களை நானும் உன்னைப்போல் எளிதில் உடைக்கவிரும்புகிறேன். ஆனால் முடியவில்லையே என்றார். அதற்கு அவன்: நீர் முழங்காலிலிருந்து வேலை செய்வதில்லை போலும் என்றான்.

வச்சிரம்போன்ற கல்லான இருதயத்தையும் முழங்கால் ஜெபத்தின்மூலம் பெறும் பலத்தால் தகர்த்து விடலாம். ஜெபம் ஜெயம். ஜெபமே ஜீவன்.

  1. உங்களுக்கு அனுபவமுண்டா?

தலைமயிர் அடர்த்தியாக வளருவதற்கேற்ற தைலத்தை வழுக்கைத் தலையுடைய ஓர் ஆள் விற்பனை செய்யும்போது, அத்தைலத்தின்மீது மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைப்பார்களோ அவ்வளவு நம்பிக்கையும் மதிப்புமே கிறிஸ்துவின் அன்பை தனது ஜீவியத்தில் அனுபவமாக்கிக் கொள்ளாத ஒருவர் செய்யும் சுவிசேஷ ஊழியத்திற்கும் கிடைக்கும்.

  1. நேரம் கிடையாது.

நாள் முழுவதும் தன் சொந்த நன்மைக்கடுத்தவைகள் மேல் கவலையாயிருப்பவனுக்கு, பிறனுடைய நன்மைக்கடுத்தவைகளை கவனிக்க நேரமே கிடையாது.

  1. காலத்தைக் குறித்து கிறிஸ்தவன் அறியவேண்டியவைகள்:

கடந்த காலத்தைக் குறித்து சிந்தியாதே!

வருங்காலத்தைக் குறித்து கவலையடையாதே!

நிகழ்காலத்தில் செய்கிறவைகளை ஜெபத்துடன் செய்!

வீண்பொழுது போக்காதே!

கிறிஸ்துவுக்காக கூடுதல் நேரம் வேலைசெய்!

சில ஆத்துமாக்களையாவது இரட்சிப்புக்குள் வழி நடத்து!

கர்த்தருடைய வருகைக்காக விழிப்போடு காத்திரு!

  1. நல்லது! மிக நல்லது! மிக மிக நல்லது!

நல்லெண்ணம் நல்லது

நல்ல வாக்கு மிக நல்லது

நல்ல நடக்கை மிக மிக நல்லது

கேட்கிற பிறருக்கு கொடுப்பது நல்லது

கைம்மாறு கருதாது கொடுப்பது மிக நல்லது.

இயேசுவினிமித்தம் கொடுப்பது மிகமிக நல்லது

கிறிஸ்தவனாயிருப்பது நல்லது

கிறிஸ்தவனாய் நடப்பது மிக நல்லது

கிறிஸ்தவனாய் உழைப்பது மிகமிக நல்லது.

  1. நமது தேவன் நம்மை

தப்புவித்தார் – தப்புவிக்கிறார் – தப்புவிப்பார்

சங்.116:8 சங்.107:20 சங்.91:3

விடுவித்தார் – விடுவிக்கிறார் – விடுவிப்பார்

சங்.18:17 சங்.107.28 சங்.37:39-40

இரட்சித்தார் – இரட்சிக்கிறார் – இரட்சிப்பார்

சங்.34:9 சங்.107.19 சங்.37:10

  1. மனுஷனின் மூன்று அனுபவங்கள்

தவறுவது மனுஷீகம்!

உணருவது ஆத்மீகம்!!

மன்னிப்பது தெய்வீகம்!!!

  1. நம்மை இரட்சித்த கிருபையின் ஐசுவரியம் (எபேசி.1:7)

பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. (ரோ.5:20). கிருபையுள்ள தேவன் கிறிஸ்துவுக்குள் நமது பாவங்களை எண்ணவில்லை.

சிறுபிள்ளைகள் கடற்கரையில் வீடுகள் கட்டி விளையாடுவார்கள். ஓர் அலை வந்து அந்த வீடுகள் மேல் பரவித் திரும்பினவுடன் கட்டின மண் வீடுகள் இருந்த இடம் தெரியாது. அதுபோல நமது பாவப் பெருக்கத்தில் கிருபைக் கடல் பொங்கிவந்து நமது பாவங்களை இல்லாமலாக்கிவிடுகிறது. நமது இரட்சிப்பின் சகல ஆசீர்வாதங்களுக்கும் தேவகிருபைதான் காரணம். நாம் பெருமை பாராட்ட இடமே இல்லை.

ஆயக்காரன் பாவ பாரத்தால் மனமுடைந்து, தலை கவிழ்ந்து, தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தான். நீதிமானாக வீட்டுக்குத் திரும்பிப்போனான். கிறிஸ்துவுக்குள் அவன் புது சிருஷ்டியானான்.

  1. முத்துச் சிப்பி

எந்தச் சிப்பியில் முத்து உருவாகி இருக்கிறதோ அதுவே மனித பார்வையில் விலையேறப்பெற்றது. அதுபோல எந்த மனுஷனுக்குள் கிறிஸ்து உருவாகி இருக்கிறாரோ அவனே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவன். கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

  1. பாவ மன்னிப்பு

ஒரு ஸ்திரீ மரண அவஸ்தையில் படுத்திருக்கும்போது மனபோதகர் வந்தார். அப்போது போதகர் அந்த ஸ்திரீயிடம் உன் பாவத்தை அறிக்கையிட்டால் மன்னித்துத் தருகிறேன் என்றார்.

உடனே அந்த ஸ்திரி போதகரிடம் உங்கள் கையை எனக்குக் காண்பியுங்கள் என்றாள். அந்தக் கையைத் தொட்டுத் தடவிப் பார்த்துவிட்டு அந்த ஸ்திரீ இவ்விதமாய்ச் சொன்னாள். போதகரே, உங்களுக்கு என் பவாத்தை மன்னிக்க முடியாது. என் பாவத்தை மன்னித்த நேசரின் கையில் ஆணிகள் கடாவின தழும்பு உண்டு என்றாள்.

  1. உன் இருயத்தில்

வேதபாரகன் ஒருவன் இயேசுவை நோக்கி போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றாள்.

அதற்கு இயேசு (உன் இருயத்தில்) நரிகளுக்குக் குழிகள் உண்டு, ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகள் உண்டு. எனவே இயேசுவுக்கு அங்கே தலைசாய்க்க இடமில்லையே என்றார்.

தற்காலத்து வேதபாரகனே! இயேசுவுக்கு உன் இருதயத்தில் இடமுண்டா? அல்லது நரிகளுக்கும் பறவைகளுக்குந்தான் அங்கே இடமுண்டா? உன் இருதயத்தை இப்போதே ஆராய்ந்து பார்.

  1. மூன்று ஆனால்….

ஒரு நாத்தீகன் வேதாகமம் வாசிக்கத் தொடங்கி, ஒரு வாரத்துக்குப்பின் தன் மலைவியிடம் இவ்விதம் கூறினான்.

இந்தப் புத்தகம் சத்தியம் ஆனால்

நாம் யாவரும் பொய்யராயிருக்கிறோம்.

மறுபடியும் வாசித்து ஒரு வாரத்துக்குப் பின் தன் மனைவியிடம் இவ்விதம் சொன்னான்.

இந்தப் புத்தகம் சத்தியம் ஆனால்

நாம் யாவரும் நஷ்டப்பட்டிருக்கிறோம்

திரும்பவும் வாசித்தான். இந்தப் புத்தகம் சத்தியம்.

ஆனால் நாம் இரட்சிக்கப்பட முடியும் என்றான்.

அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள்.

  1. யோனாவும் – தானியேலும்

சிம்சோனும் – மோசேயும்

யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய் படுத்துக்கொண்டு அயர்ந்த நித்திரை பண்ணினான். யோனா 1:5

தானியேலோவென்றால், தன் மேல்அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான். (தானி.6:10)

சிம்சோன் கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாதிருந்தான் (நியா.16:20).

மோசே கர்த்தரால் தன்முகம் பிரகாசித்திருப்பதை அறியாதிருந்தான். (யாத்.34:29)

  1. மூன்று மாபெரும் அதிசயங்கள்

நான் பரலோகத்துக்குச் செல்லும்போது அங்கே மூன்று அதிசயங்களைக் காண்பேன்.

அங்கே இருக்கமாட்டார்கள் என்று நான் எண்ணிய சிலர் அங்கே இருப்பார்கள்.

அங்கே இருப்பார்கள் என்று நான் கருதிய சிலர் அங்கே இருக்கமாட்டார்கள்.

எல்லாவற்றிலும் பெரிய ஆச்சரியம் நான் அங்கே இருப்பது.

  1. இப்படியே பேசிப்பாருங்கள்.

அன்பாகப் பேசுங்கள்

அழகாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்

கனிவாகப் பேசுங்கள்

உண்மையைப் பேசுங்கள்

பொறுமையாகப் பேசுங்கள்

திருவசனத்தைப் பேசுங்கள்

சுருக்கமாகப் பேசுங்கள்

கருத்தாகப் பேசுங்கள்

சிந்தித்துப் பேசுங்கள்

பயபக்தியோடு பேசுங்கள்

இயேசுவைப்போல பேசுங்கள்

  1. குற்றமற்ற சபை

பிரசித்திபெற்ற ஸ்பர்ஜன் பிரசங்கியார் அவர்களிடம் ஒருவர் யாதொரு குற்றமும் குறையும் இல்லாமல் பரிசுத்தவான்கள் மாத்திரம் உள்ள ஒரு சபையை காண்பியுங்கள். நான் அதில் சேருகிறேன் என்றார். அதற்கு ஸ்பர்ஜன் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு சபையை இதுவரை எனக்குத் தெரியாது. நான் ஆராதனைக்குச் சென்ற சபைகளிலெல்லாம் ஏராளம் பரிசுத்தவான்கள் உண்டு. ஆனால் எல்லாரும் குற்றமற்றவர்கள் என்று நான் எண்ணவில்லை என்று மாறுத்தரமாகச் சொன்னார்.

ஆனால் நீங்கள் எங்கேயாவது அப்படிப்பட்ட ஒரு சபையைக் கண்டதுண்டானால் அதில் போய் சேரக்கூடாது. ஏனெனில் அந்தச் சபையைக் குற்றமுள்ளதாக்க, அசுத்தப்படுத்த நீங்கள் ஒருவர் மட்டும் போதும் என்றார்.

  1. சிகரெட் கணிதம்

நரப்புத் தளர்ச்சியைக் கூட்டுகிறது.

தேவ வலிமையைக் குறைக்கிறது.

வாயில் துர்நாற்றத்தைப் பெருக்குகிறது.

நோய்களுக்கு சரீரத்தை ஈடுகொடுக்கிறது.

ஏராளம் பணத்தைச் செலவு செய்கிறது

தேவ சமூகத்தைப் பிரிக்கிறது.

நித்தியஜீவனை நஷ்டப்படுத்துகிறது.

  1. ஜெபமும் கிரியையும்

ஒரு சமயம் பிரசித்திபெற்ற பக்கதனாகிய டி.எல். மூடி பிரசங்கியார் அட்லாண்டிக் கடலில் கப்பல் வழிப்பிரயாணம் செய்துகொண்டிருந்தார். நடுக்கடலில் வைத்து திடீரென கப்பலில் தீப்பிடித்துக்கெர்டது. கப்பலிலே வேலையாட்களும் பிரயாணிகளில் பலரும் கப்பலிலிருந்த பற்பல பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து தீ அணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு சிநேகிதன் மூடியினிடத்தில் வந்து,

ஐயா, நாம் மறுபக்கம் சென்று ஜெபிப்போம் என்று சொன்னான். உடனே மூடி சொன்னார் அப்படியல்ல, நாமும் அவர்களோடு சேர்ந்து பாத்திரங்களில் தண்ணீர்கோரி தீ அணைப்பவர்களிடம் கொடுத்துக்கொண்டே வல்லமையாக ஜெபிக்கவும் செய்வோம் என்றார். ஆ! எவ்வளவு ஞானமும் புத்தியுள்ளதுமான பதில். ஜெபமும் கிரியையும் ஒன்றுக்கொன்று மிக இணைந்த ஐக்கியமுடையதென்று அவர் விசுவாசித்திருந்தார்.

கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது.

  1. இயேசுவின் தடைச்சட்டம்

விபசாரத்தையும், கொலையையும் நமது அண்டவர் தடுத்துதுபோலவே, பூமியில் செல்வத்தைச் சேர்த்து வைப்பதையும் அவர் தடை செய்திருக்கிறார்.

  1. யோனத்தானும் பவுலும்

பழைய ஏற்பாட்டில்: பெலிஸ்தரின் வீரனாகிய கோலியாத்தை ஜெயித்து இஸ்ரவேலுக்கு பெரிய ஜெயத்தை உண்டாக்கிய தாவீதுக்கு யோனத்தான் தன் வஸ்திரத்தையும், தன் சால்வையுயையும் தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூடக்கொடுத்தான். யோனத்தானும் தாவீதும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். யோனத்தான் தாவீதைத் தன் உயிரைப்போலவும் தன் ஆத்துமாவைப்போலவும் சிநேகித்தான்.

புதிய ஏற்பாட்டில்: கெர்ச்சிக்கிற சிங்கம்போல் விழுங்கவரும் சாத்தானை தோற்கடிக்க, கல்வாரிச் சிலுவையில் தன் ஜீவனையே கொடுத்து, பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து ஜெயம்பெற்று நமக்கு மாபெரும் ஜெயத்தைக் கட்டளையிட்டிருக்கிற நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவுக்காக அப்போஸ்தலனாகிய பவுல், தனக்கு இலாபமாயிருந்த எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டார். குப்பையுமாக எண்ணினார். இயேசு கிறிஸ்துவை தன் உயிரிலும்மேலாக நேசித்து, கிறிஸ்துவின் அன்பைவிட்டு என்னைப் பிரிப்பவன் யார் என்றும், நான் விசுவாசித்திருக்கிற இயேசுவை இன்னார் என்று அறிவேன் என்றும் வெற்றி முழக்கமிட்டார்.

அன்பான சிநேகிதனே! தேவபிள்ளையே! உன் ஆத்தும நேசர் இயேசுவை நீ எப்படி சிநேகிக்கிறாய்? அவருக்காக நீ அடைந்த நஷ்டம் என்ன? அவருக்காக நீ எதை விட்டாய்?

பேதுரு இயேசுவைப் பார்த்து: நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே என்று எவ்வளவு உண்மையான அனுபவத்தோடே சொல்கிறான் பார்த்தாயா? கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றின பரிசுத்தவான்களின் முன்மாதிரியைப் பார்த்து, நீயும் அதுபோல் வாழ்ந்து கர்த்தருடைய கிருபையில் வளர்ந்து பெருகுவாயாக.

  1. பிரசங்கமும் ஜீவியமும்

ஒரு சபைப் போதகரின் தம்பி ஒருவர், தன் நண்பரோடு சம்பாஷிக்கும்போது அவர் தன் அண்ணனைக் குறித்து இவ்விதமாகக் கூறினார். அண்ணனின் சிறந்த வேதஞானத்தோடுள்ள அழகான பிரசங்கத்தைக் கேட்டு நடந்தால், நீங்கள் நிச்சயமாக பரலோகராஜ்யம் போய்ச் சேரலாம். ஆனால் அண்ணனின் ஜீவியத்தையும் கிரியையையும் பார்த்து அதைப் பின்பற்றி நடந்தால், நீங்கள் நிச்சயமாக நரகம் போய்ச் சேரலாம்

உங்கள் பிரசங்கமும் ஜீவியமும் எப்படி?

தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல.

பெலத்தினால் உண்டாயிருக்கிறது.

  1. ஏன் இப்படி?

கிறிஸ்தவர்களுள் எழுப்புதல் பிரசங்கிமார்கள் இருக்கிறார்களே. அவர்களைத்தான் சொல்கிறேன். இந்த பிரசங்கிமார்கள் கூட்டங்கள் நடத்தும்போது எழுப்புதலாகத்தான் இருக்கிறது. ஆனால் இவர்களுள்ள இரண்டுபேர் கூடி ஐக்கியமாயிருக்க நான் கண்டதில்லை.

இவர்களுடைய புகழ் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ந்திருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு இவர்களுள் ஒருவருக்கொருவர் வேற்றுமையும் வளர்ந்துவிடுகிறதே

இவரை அவர் குறைவாக நினைத்துக்கொண்டிருப்பார்

அவரை இவர் குறைவாக நினைத்துக்கொண்டிருப்பார்.

இந்தப் பெரிய பிரசங்கிகள் ஒருநாளாவது ஒரு மனப்பட்டு கூடி ஜெபித்ததை ஆண்டவர் தேவதூதர் பிசாசகள், மனிதர் எவரும் கண்டதில்லை.

ஏன் இப்படி?

இவர்களை எல்லாம் கூட்டி இவர்களுக்கென்று ஓர் உயிர்மீட்சிக் கூட்டம் தனியாக நடத்தினாலென்ன?

  1. பொய்க்கு பொய்க்கால்

பொய்க்கு கால் கிடையாததால், அது நிற்க முடியாது.

ஆனால் அதற்கு இறக்கை உண்டு. ஆகையால் அது வெகுதூரம் பறந்து செல்லக்கூடியது.

  1. சகல அதிகாரம்

சர்வ வல்லமையுள்ள தேவன் பிசாசக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கவில்லை. ஆனால் பொய்யனாகிய பிசாசு ஆதாமை வஞ்சித்தான். முதலாம் ஆதாம் தேவனிடத்தில் பெற்ற எல்லா அதிகாரங்களையும் இழந்தான். இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து எல்லா அதிகாரங்களையும் தமது கீழ்ப்படிதலினாலே பெற்றுக்கொண்டார். எனவே தமது சகல அதிகாரமும் அவர் தம் மணவாட்டிக்குக்கு (சபைக்கு) கொடுத்திருக்கிறார்.

  1. முதலாவது வீட்டில் சாட்சி

உன் வீட்டு வாசலில் நின்று, கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை தைரியமாய் சொல்லத்தக்க பரிசுத்தமான சாட்சியின் ஜீவியம் உனக்கு இல்லாமல், (இல்லாவிட்டால்) நீ பூமியின் கடையாந்தரங்களிளெல்லாம் சுற்றி நடந்து பிரசங்கித்தாலும் பயனென்ன? கர்த்தர் உன் அந்தரங்கத்தைக் காணாரோ? முதலாவது உன் வீட்டில், உன் குடும்பத்தில் , உன் சபையில் நற்சாட்சியுள்ளவனாயிரு. அதன்பின் கர்த்தர் உனக்குக் காட்டும் எவ்விடத்தில் வேண்டுமானாலும் புறப்பட்டுச் செல்லலாம்.

  1. ஊழியத்தில் உன் பங்கு

உன்னால் கட்ட முடியாமற்போனாலும் கட்டுகிறவனுக்குப் பொருளைச் சேகரித்துக்கொடுக்கிறவனாயாவது நீ இருக்கலாம்.

  1. சிம்சோனும் சாலோமோனும்

தேவனிடத்திலிருந்து அபூர்வமான பெலனைப் பெற்றிருந்த சிம்சோன், சிங்கத்தின் தாடையைக் கிழித்தவனும் 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்த்துக் கட்டின பராக்கிரமசாலியுமாயிருந்தான்.

இப்படிப்பட்ட மாபெரும் பலசாலியாயிருந்த சிம்சோன் மதியீனமாய் வேசியாகிய தெலீலாளின் மடியில் தூங்கினதினிமித்தம் அவன் தலையிலுள்ள ஏழு ஐடைகளும் சிரைக்கப்பட்டு, அவனுடைய மகாபெலனை இழந்து நஷ்டமடைந்தான். சத்துருக்களின் பரியாச பாத்திரமானான். ஐயோ! எத்தனை பரிதாபம்! நிர்ப்பந்தமான நிலைமை!

கர்த்தருக்காக மகிமையான மகா பெரிய தேவாலயம் கட்டின ஞானியாகிய சாலோமோன் தன் மனதின் அரையைக் கட்டாமல் விக்கிர தேவர்களுக்கும் மேடைகளைக் கட்டினதினால் மாபெரும் நஷ்டமடைந்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

பெலத்தின்மேல் பெலனையும், பரிசுத்ததின்மேல் பரிசுத்தத்தையும் அடையும்படிக்கே கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்.

  1. கிறிஸ்துவைத் தன் இருதயத்திலும் பரலோகத்தைத் தன் கண்முன்னும் வைத்திருக்கும் விசுவாசியை வேதனையும் சோதனையும் வருத்தமும் ஒன்றும் செய்ய இயலாது.
  2. யார் பாக்கியவான்?

ஒருவன் கிறிஸ்துமார்க்கத்தை வைராக்கியமாய்ப் பிடித்துக் கொள்ளுகிறான். இன்னொருவன் கிறிஸ்துவைப் பலமாய்ப் பிடித்துக் கொள்ளுகிறான். கிறிஸ்து மார்க்கத்தையல்ல, கிறிஸ்துவை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டவன் பாக்கியவான்.

  1. வேத புத்தகம் ஒரு ஜன்னல்

நம்பிக்கையற்ற மனிதனுக்கு வேத புத்தகம் ஒரு ஜன்னல். அதன் வழியாய் உற்றுப் பார்த்தால் நித்தியம் என்பது என்னவென்று தெரியவரும்.

ShareTweetPin

Related Posts

ஆசரிப்புக்கூடாரம்
வேதாகம ஆய்வு

ஆசரிப்புக்கூடாரம்

ஆசரிப்புக்கூடாரம் (யாத். அதிகாரங்கள் 25-27 , 36-38) ஆசரிப்புக்கூடாரத்தின் பல பெயர்கள் ஆசரிப்புக்கூடாரம் - யாத்.27:21, 28:43 கூடாரம் - யாத்.26:9 கர்த்தருடைய கூடாரம் - 1.இராஜா.2:28...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு
வேதாகம ஆய்வு

பலிதமாகும் அழைப்பு

இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். (லூக்.19:5) (ஊ.ர். ளுpரசபநழn)...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு
வேதாகம ஆய்வு

யோசேப்பும் கிறிஸ்துவும்

யோசேப்பும் கிறிஸ்துவும் யோசேப்பு பிதாவின் (யாக்கோபு) நேசகுமாரன் ஆதியாகமம் 37:4 இயேசு பிதாவின் நேசகுமாரன் மத்தேயு 3:17 (இயேசு பிதாவின் நேசகுமாரன் என்று ஏழு தடவைகள் எழுதப்பட்டிருக்கிறது.)...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு
வேதாகம ஆய்வு

வேதாகமத்தில் ஆசாரியர்கள்

01) ஆரோன் - யாத்.28:29 , லேவி.8 , சங்.133 , எபி.5:1-4 02) எலெயாசார் - எண்.20:24-29 , உபா.6:10 , யோசு.24:33 03) பினெகாஸ்...

Next Post
சாள்ஸ் பின்னி

சாள்ஸ் பின்னி

ஹட்சன் டெய்லர்

ஹட்சன் டெய்லர்

Recommended

Song 236 – Unnatha Thevan

00. கிருபையின் மாட்சி

05. நீதியுள்ளவரும் நீதிமானாக்குகிறவரும்

பாடல் 168 – வார்த்தையே தேவனாக ஆகி

பாடல் 168 – வார்த்தையே தேவனாக ஆகி

Song 023 – Thozhugirom Engal

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.