- பிராத்தனை
பம் என்ற பொருளின் பேரில் நன்கு விளக்கமாக எழுதப்பெற்றுள்ள நூல் வேதாகமந்தான். இப்பொருளைப் பற்றிய பிறநூல்கள் எல்லாம் குறைவுடையனவே. அவற்றைப்படிக்கையில் இன்னும் அடையாத ஆழங்கள், அளக்காத உயரங்கள் உள்ளன என்ற உணர்வையே அவை உண்டாக்குகின்றன. பிறருடைய முயற்சிகளைக் காட்டிலும் அதிகமாக இப்புத்தகத்தில் எழுதிவிட முடியாது. ஜெபத்தின் நெறிகளில் முக்கியமான சிலவற்றை, சிறப்பாக கிறிஸ்தவ சீஷத்துவத்தோடு தொடர்புடையனவற்றைத் தொகுத்து எழுதுவதுதான் நாம் செய்யக்கூடியது.
- உள்ளே எழும் பலத்த தேவையினின்றே சிறந
ஜெ;த விண்ணப்பம் பிறக்கும். இது உண்மை என்பதை நம் வாழ்க்iகையில் அமைதி நிலவும்போது நம் ஜெபங்கள் மந்தமானவையாக இருக்கும். ஒரு நெருக்கடியான நிலைக்குள் நாம் வரும்போது, ஒரு ஆபத்து நம்மை அணுகும்போது, கொடிய நோயால் வருந்தும்போது, மரணத்தால் ஒருவரை இழந்து தவிக்கும்போது நம் ஜெபங்கள் மிக முக்கியமானவையாக, ஊக்கமுள்ளவையாக மாறுகின்றன. விண்ணுலகத்தினுள் நுழைய வேண்டிய அம்பு நன்கு வளைக்கப்பெற்ற வில்லினின்று செலுத்தப்படவேண்டும் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவசரம், துணையின்மை, தேவையின் உணர்வு இவற்றினின்றே உயர்ந்த விண்ணப்பங்கள் வெளிப்படுகின்றன.
ஆனால் தேவைகளால் தாக்கப்படாதபடி மெத்தைகள் அமைத்து நம்மைக் காத்துக்கொள்ளவே நம் வாழ்க்கையின்பெரும்பகுதியை நாம் செலவிடுகிறோம். புத்திசாலித்தனமான முறைகளைக் கையாண்டு எவ்வெவ்விதங்களில் தேவைகள் தோன்றுமென்று நாம் நினைக்கிறோமோ அவற்றையெல்லாம் சமாளிக்க ஆவன செய்ய முற்படுகிறோம். வெறும் மனித மதிநுட்பத்தைப் பயன்படுத்தி செல்வந்தராக, உடைமைகளால் நிறையப் பெற்றவராக, ஒரு குறையும் இல்லாதவர்களாக நிற்கும் ஓர் நிலையை நாம் அடைந்துவிடுகிறோம். பின்னர் ஏன் நம் ஜெப வாழ்க்கை ஆழமற்று, உயிரற்றுக்காணப்படுகிறது, பரத்திலிருந்து ஏன் அக்கினி விழுவதில்லை என்று வியந்து கொள்ளுகிறோம். உண்மையாகவே நாம் பார்த்து நடவாமல் விசுவாசித்து நடந்தால் நம் ஜெப வாழ்க்கையில் புரட்சி ஏற்படும்.
- வெற்றிகரமான விண்ணப்பத்திற்கு ஒரு நிபந்தனை உண்மையுள்ள இருதயத்தோடு அணுகவேண்டும் என்பது (எபி.10:22). நாம் கபடற்றவர்களாக உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதே இதன் பொருள். மாய்மாலம் காணப்படக்கூடாது. இந்த நிபந்தனையை நிறைவேற்றுவோமானால் நாமே செய்யக்கூடியதொன்றைச் செய்யுமாறு தேவனைக் கேட்கமாட்டோம். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ ஊழியம் இருக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்குப்பயன்படக்கூடிய தொகை நம்மிடமே (நம் தேவைக்குப்போக) இருக்குமானால் அதைச் செலவிட மனமின்றி தேவனை நோக்கி பணம்வேண்டுமென்று கேட்கமாட்டோம். தேவனைப் பரிகாசம்பண்ண முடியாது. அவர் முன்னதாகவே விடையை நம் கையில் தந்திருந்தும் அதைப் பயன்படுத்த நாம் மனமற்றிருப்போமானால் அவர் நம் மன்றாட்டிற்குப் பதிலளிக்கமாட்டார்.
மேலும் கர்த்தருடைய செய்தியைக் கொண்டுசெல்ல நாமே போக மனமற்றிருந்தால் பிறர் அனுப்பப்படும்படி நாம் விண்ணப்பம் பண்ணக்கூடாது. முகமதியருக்காகவும், இந்துக்களுக்காகவும், புத்த மதத்தினருக்காகவும் ஆயிரக்கணக்கான மன்றாட்டுக்கள் ஏறெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த மக்களை அணுகும்படி தாங்கள் உபபோகிக்கப்பட (அவர்களுக்காக ஜெபித்த அனைவரும்) மனதுள்ளவர்களாக இருந்திருந்தால் ஒரு வேளை கிறிஸ்தவ சேவையின் வரலாறு அதிக ஊக்கமளிப்பதாக இருந்திருக்கும்.
- விண்ணப்பம் எளியதாக, விசுவாசமுள்ளதாக கேள்வி கேட்காததாக இருக்வேண்டும். பிராத்தனை என்ற பொருளோடு இணைந்துள்ள இறையியல் பிரச்சினைகளில் நாம் மூழ்கிவிடக்கூடும். ஆவிக்குரிய உணர்வை இது மந்தமாக்கிவிடும். ஜெபத்தோடு பொருந்தியுள்ள இரகசியங்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுதலைக்காட்டிலும் ஜெபிப்பதே உத்தமம். இறையியல் வல்லுனர் ஜெபத்தைப் பற்றிய தங்கள் கோட்பாடுகளை நூற்கட்டும். ஆனால் எளிய விசுவாசி குழந்தையின் நம்பிக்கைபோன்ற விசுவாசத்தால் விண்ணுலகின் வாயிலை வலுவாகத் தாக்கட்டும். படிப்பறியாதோர் பரலோகத்தைப் பலவந்தமாகப் பிடித்துக்கொள்ளுகின்றனர். நாமே நம் கல்வியறிவு எல்லாவற்றோடும்கூட மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் மேலாக உயர்ந்து எழுவதில்லை, என்று கூறினார் அகஸ்தின்.
- ஜெபத்தில் மெய் ஆற்றலை அறிய வேண்டுமானால் சமர்ப்பிக்கமனமின்றி எதையும் வைத்திருக்கவேண்டாம். கிறிஸ்துவுக்கு முற்றும் ஒப்புக்கொடுக்கப்பட்ட நிலையில் இரு முழுமனதோடு அவருக்கென்று நட. இரட்சகரைப் பின்பற்ற அனைத்தையும் கைவிடு. கிறிஸ்துவை எல்லாவற்றிம் கர்த்தராக முடிசூட்டுகின்ற பக்தியே அவர் கனப்படுத்த விரும்பும் பக்தி.
- ஜெபிப்பதற்காக ஏதோ ஒன்றை நாம் இழப்போமானால் அத்தகைய ஜெபத்தைத் தேவன் சிறப்பாக மதிக்கிறார். அதிகாலையில் எழுவார் அந்தந்த நாளுக்கான விதிகளைத் தம் பிதாவிடமிருந்து கற்றுக்கொள்ளுமாறு அதிகாலையில் எழுந்தவரோடு ஐக்கியம் கொண்டு மகிழுகின்றனர். அப்படியே இரா முழுவதும் விழிந்திருந்து விண்ணப்பம் பண்ண விழைவோர் இறைவனின் மறுக்க முடியாத ஆற்றலைப்பெற்று அநுபவிக்கின்றனர்.
- தன்னயமான ஜெபங்களைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாத விதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் யாத்.4:3. கர்த்தருக்கடுத்த காரியங்களே நம் பெஜங்களில் முதன்மையான பாரமாயிருக்கவேண்டும். முதலாவது உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம்பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று விண்ணப்பம்செய்ய வேண்டும். பின்பு, அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும் என்று வேண்டிக்கொள்ளலாம்.
- தேவன் பெரிய தேவனாயிருக்கிறதினால் பெரிய விண்ணப்பங்களை ஏறெடுத்து அவரைக் கனம்பண்ணவேண்டும். தேவனிடத்தில் பெரிய காரியங்களை எதிர்பார்ப்பதற்கான விசுவாசம் நம்மிடம் இருப்பதாக.
மன்னன் முன்னே வருகிறாய்
மன்றாட்டுக்கள் கொணர்கிறாய்
அவர் தம் அன்பும் ஆற்றலுமே
எத்துணை கேட்பினும் அளித்திடுமே.
-ஜான் நியூட்டன்.
ஜெபத்துடன் உவசாசத்தை இணைத்திருப்பதை புதிய ஏற்பாட்டில் அடிக்கடி காணலாம். ஆவிக்குரிய பயிற்சிகளில் உணவை வெறுத்து இருப்பது நன்மையே பயக்கும். அது மனத்தெளிவையும், காரியத்தில் கண்ணும் கருத்துமாயிருக்க ஏவதலையும் அதிகரிக்கிறது. மிகக்குறைவாக எதிர்பார்த்து எத்தணை தடவை நாம் கர்த்தரை துக்கப்படுத்தியிருக்கிறோம். மிகச் சிறிய வெற்றி, மிகக்குறைந்த அறிவு, ஆற்றல், உயர்வானவற்றின் மேல் மிகக்குறைந்த நாட்டம் இவற்றோடு நாம் மன நிறைவடைந்திருக்கிறோம். எனவே நமது தேவன் மிகப்பெரிய தேவன் என்ற உண்மையை நம்மைச் சூழவிருக்கும் மக்களுக்கு உணர்த்தத் தவறிவிட்டோம். நம் வாழ்க்கையால் நம் ஆண்டவரை அறியாதவர்களின் கவனத்தைக் கவர்ந்து, அதன் ஆதாரமாக அமையும் ஆற்றலைக் குறித்த கேள்விகளை அவர்களில் எழுப்பி, அவர்கள் முன் அவரை மகிமைப்படுத்தாமல் போனோம். என்னைப்பற்றி தேவன் மகிமைப்படுத்தினார் என்று அப்போஸ்தலனைக்குறித்து சொல்லப்பட்டதுபோல நம்மைப்பற்றி அடிக்கடி சொல்லப்படவில்லை என்று மூர் என்பார் கூறுகிறார்.
- ஜெபிக்கும்போது தேவனுடைய சித்தத்திற்குள் இருக்கிறோம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். பின்பு அவர் கேட்டுப் பதிலளிப்பார் என்று விசுவாசித்து ஜெபிக்கவேண்டும். நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதை அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் செவிகொடுக்கிறார் என்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப்பெற்றுக் கொண்டோமென்று அறிந்திருக்கிறோம். 1.யோவான்.5:14-15.
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபம் பண்ணுவதென்பது அவருடைய சித்தத்தின்படி ஜெபிப்பது ஆகும். நாம் உண்மையாகவே அவருடைய நாமத்தில் ஜெபிக்கும்போது அந்த விண்ணப்பம் அவராலேயே பிதாவாகிய தேவனுக்கு ஏறெடுக்கப்படுவது போலாகிறது.
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைக் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான். 14:13-14). அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றும் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார் (யோவான்.16:23). அல்லாமலும் உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் (மத்தேயு.18:19-20).
அவருடைய நாமத்தில் கேட்பது என்பது அவரால் கைப்பிடித்து ஜெபம் பண்ண நடத்தப்படுவது. நம் பக்கத்தில் அவர் முழங்காலில் நிற்க நம் இருதயத்தின் மூலம் அவருடைய வாஞ்சைகள் பாய்ந்து செல்லுதல். இதுதான் அதன் பொருள். அவர் நாமத்தில், அவர் நாமம் என்பது அவர் தன்மை. கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்பது என்றால் அவரது பாக்கியமான சித்தத்தின்படி விண்ணப்பம்பண்ணுதல். தேவனுடைய குமாரனின் நாமத்தில் தீமைக்காக நான் வேண்டுதல் செய்ய முடியுமா? நான் வேண்டிக்கொள்வது உண்மையில் அவருடைய தன்மையில் வெளிப்பாடாக இருக்கவேண்டும். ஜெபத்தில் நான் அவ்வாறு செய்யக்கூடுமா? ஜெபம் பரிசுத்த ஆவியின் வல்லமையை, கிறிஸ்துவின் சிந்தையை, நம்மிலும் நமக்காகவும் கிறிஸ்துவானவர் கொண்டுள்ள வாஞ்சையை சுவாசிக்கவேண்டும். கர்த்தர் நாம் அதிகமாக அவருடைய நாமத்தில் பிராத்தனை செய்யப்போதிப்பாராக. நம்முடைய கர்த்தரின் ஸ்தோத்தரிக்கப்பட்ட நாமத்திலே என்ற இதே சொற்களைப் பயன்படுத்தாமல் ஜெபத்தை முடிக்க நினைக்கக்கூடாது. ஆனால் முழு விண்ணப்பத்திலும் இயேசுவின் ஸ்தோத்தரிக்கப்பட்ட நாமம் நிறைந்து பரவியிருக்க வேண்டும். எல்லாம் அந்த நாமத்திற்கு இசைந்தே இருக்கவேண்டும், என்று கூறுகிறார் சாமுவேல் ரிட் அவுட் என்பவர்.
- நம் ஜெபவாழ்க்கை உண்மையாகவே சக்திவாய்ந்ததாக இருக்கவேண்டுமென்றால் தேவனிடத்தில் அறிக்கை செய்யவேண்டியவற்றை அவ்வப்போது உடனடியாக அறிக்கை செய்து ஒப்புரவாகிவிடவேண்டும். நம் வாழ்க்கைக்குள் பாவம் நிறைந்துவிட்டது என்பதை நாம் உணர்ந்தவுடனே அதை அறிக்கை செய்து விட்டுவிடவேண்டும். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்குச் செவிகொடார் சங். 66:18. நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் யோவான்.15:7. கிறிஸ்துவில் நிலைத்திருக்கிற ஒருவன் அவருக்கு வெகு அருகில் இருக்கிறதால் கர்த்தருடைய சித்தத்தன் அறிவால் நிறைந்திருக்கிறான். எனவே அவன் விபரம் அறிந்து விண்ணப்பம் பண்ணமுடியும். பதிலைப் பற்றிய உறுதியான நிச்சயத்தோடும் இருக்க முடியும். அவர் கட்டளைக்குக் கீழ்படிதல் நிலைத்திருக்கும் வாழ்க்கைக்கு அவசியமாயிருக்கிறது. அவருடைய கற்பனைகளைக் நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்கிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம் (1யோவான்.3:22). நம் ஜெபங்கள் கேட்கப்பட்டு பதில் கிடைக்கவேண்டுமானால் நம் ஆத்துமா சரியான நிலையில் இருக்கவேண்டும் 1.யோவான்.3:20.
- குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் ஜெபம் பண்ணினால்போதாது. தெருவில் நடந்துகொண்டிருக்கும்போதும், கார் ஓடிக்கொண்டிருக்கும்போதும், ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்யும்போதும், கர்த்தரை நோக்கிப் பார்க்கத்தக்கதாக ஜெபசிந்தையை விரிவாக்கவேண்டும். இத்தகைய, இயற்கையாய்த் தோற்றுகிற விண்ணப்பத்திற்கு நெகேமியா ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். உன்னதமானவரின் மறைவிற்குள் சில சமயங்களில் மட்டும் சென்றுவருவதைக்காட்டிலும் அங்கேயே வசிப்பது நல்லது.
- கடைசியாக, நமது ஜெபங்கள் திட்டமாகவும் குறிப்பாகவும் கேட்கிறவைகளாக இருக்கவேண்டும். திட்டமாக வேண்டுதல் செய்தால் தான் திட்டமான விடையைப் பெறமுடியும். ஜெபம் ஓர் அற்புதமான உரிமை. ஹட்ஸன் டெய்லர் சொன்னதுபோல, தேவன் மூலமாக மனிதனை அசைக்க முடியும் என்பதே இதனால் அறியப்படுவது. ஜெபம் என்னும் ஆச்சரிய சூழ்நிலையிலே அற்புதங்கள் நிகழச்செய்ய என்னென்ன ஊழியங்கள் நம் கைகளில் இருக்கின்றன! குளிர்ந்த, மகிழ்ச்சியற்ற இடங்களுக்குள் சூரிய ஒளியைக் கொண்டுசெல்லமுடியும். மனச்சோர்வு என்ற சிறையினுள் நம்பிக்கை என்ற விளக்கினை ஏற்றிவைக்க முடியும். சிறைப்பட்டோரின் சங்கிலிகளை அவிழ்த்துவிட முடியும். இல்லத்தின் ஒளியையும் நினைவுகளையும் தூரதேசத்திற்குள் எடுத்தச்செல்ல முடியும். ஆவியில் தொய்ந்து போனவர்களுக்கு, உள்ளத்தை வலுப்படுத்தும் விண்ணுலகபானத்தைச் சுமந்து செல்ல முடியும். விண்ணப்பத்திற்கு விடை அற்புதங்கள்! இவ்வாறு கூறினார் ஜோவெட் என்பவர்.
வென்ஹாம் என்ற எழுத்தாளர் இதனோடு சேர்த்துத் தம் சாட்சியைச் சொல்லுகிறார். பிரசங்கித்தல் ஒரு அரிய வரம். ஜெபித்தல் மிக அரிய வரம். பிரசங்கம், வாளைப்போல, அருகில் இருப்போரைத் தாக்கும் ஆயுதம். தூரத்திலிருக்கிறவர்களை அதைக்கொண்டு அணுக முடியாது. ஜெபம் தொலைவிலுள்ளவற்றைத் தாக்குத் துப்பாக்கிபோல வெகுதூரம் செல்லக்கூடியது. சில சந்தர்ப்பங்களில் பிரசங்கத்தைக் காட்டிலும் பயனுள்ளளதும்கூட.
ஆண்டவது முன்னிலையில் வேண்டிநிற்கும் சிறுபொழுது
எண்ணற்ற நன்மைகளை உவந்தளித்த மகிழ்விக்கும்.
பாரங்கள் நீங்குவதால் அடைகிறோம் ஆறுதல்
பாழ் நிலம் களிக்கின்றது தான் பெற்ற மாரியால்!
முழங்காலிடுகிறோம், எத்துணை பலவீனம்!
எழுந்து நிற்கிறோம், ஒப்பற்ற வலிமை!
விண்ணோடு உறவுகொள்ளும் உயர்நெறியை அறிந்துள்ளோம்
விண்ணவனே நீர் தருவீர் நன்மையாவும் திண்ணமாக
அப்படியிருக்க ஏன் எமக்கும் பிறர்க்கும்
இப்படி இழைக்கிறோம் தவறு? திடனற்றோராய்
மடக்கும் கவலைக்கும் தாக்கும் இன்னலுக்கும்
இடம் தந்து எப்போதும் உரமின்றி வாடுகிறோம்.
-ட்ரென்ச்.












