• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

11. என்னால் ஒன்றும் செய்யக்கூடாது!

April 3, 2016
in எல்லாம் கிருபையே, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. கிருபையின் மாட்சி
  1. என்னால் ஒன்றும் செய்யக்கூடாது!

கவலைக்குள்ளாயிருந்த உள்ளம் ஒப்புரவாகுதல் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, ஆண்டவரான இயேசுவில் விசுவாசம் வைப்பதால்தான் இரட்சிப்பு கிட்டுகிறதென்ற பெரும் சத்தியத்தை அறிந்துகொண்டது. நன்மையானதைச் செய்யமுடியவில்லையே என்றதொரு ஏக்கத்தால் அடிக்கடி வாட்டமுறுவதுண்டு. ‘என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே” என்று அநேகர் கலங்குகின்றனர். இதை ஒரு சாக்காக அவர்கள் கூறாமல் அன்றாடம் தாங்கள் சுமக்கும் ஒரு பளுவாக அதைப் பாவிக்கின்றனர். அவர்களால் கூடுமாயின் செய்வார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ‘நன்மை செய்யவேண்டுமென்கிற மனவிருப்பம் என்னிடத்திலிருக்கிறது. நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை” என்ற உள்ளான மனதுடன் சொல்லக்கூடியவராயிருப்பர்.

இந்த உணர்ச்சியானது சுவிசேஷத்தையே பயனில்லாததாக, ஏதுமற்றதாகப் பண்ணிவிடும்போல் தோன்றுகிறது: ஏனெனில், பசியோடிருப்பவனுக்கு ஆகாரம் எட்டாத நிலையிலிருப்பின், அதனால் அவனுக்கு என்னு பயன்? ஒருவனால் பருகக்கூடாதிருந்தால் ஜீவ நதியின் தண்ணீரால் அவனுக்கு ஏற்படும் லாபம் என்ன? வறிய நிலையிலிருந்த ஒரு ஸ்திரீ தன் பிள்ளைக்குச் சிகிச்சை பெற அறிவு நிறைந்த ஒரு வைத்தியரிடம் சென்றாள். தக்க சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவளுடைய பிள்ளை சுகமாவானென்றும், ஆனால், அச்சிறுவன் கிரமமாக சிறந்த திராட்சரசம் பருகவேண்டுமென்றும், குறிப்பிட்ட காலம் வரை இரசாயன ஊற்றுகள் உள்ள ஜெர்மனியில் நோயாளியாக தங்கியிருக்கவேண்டுமென்றும் மருந்துவர் அறிவித்தார். தினசரி சாப்பாட்டுக்கே திண்டாடும் ஓர் ஏழை விதவையிடம் இவ்வாறு கூறினால் அதை அவள் எவ்விதம் நிறைவேற்றுவாள்? ‘விசுவாசித்து வாழ்ந்திரு” என்னும் இச்சிறிய நற்செய்தி, ஓர் ஏழைப்பாவியை அவனால் செய்யவியலாததைச் செய்யுமாறு ஏவுவதால், அதற்கு அவன் இணங்குவதற்கு அது அவ்வளவு எளிதாயில்லை என்றே கூறவேண்டும். மெய்யாகவே விழிப்புற்றவர்கள் அரைகுறையான போதனை பெற்றிருப்பதால், ஏதோ ஒன்று இராதவர்கள்போல் தோன்றுகிறார்கள். இயேசுவின் இரட்சிப்பு அதோ இருக்கிறதென்றாலும், அதை எவ்விதம் பெறுவது? சத்துவமில்லாத ஆத்துமாவால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அடைக்கலம் எனும் நகருக்குள் பார்வையில் படும்படி அது இருக்கிறதெனினும், அதன் வாயிலில் பிரவேசிப்பது சிரமம்.

இரட்சிப்பின் திட்டத்தில் தேவைப்படும் சத்துவத்தைப் பூர்த்திசெய்துகொள்ள வழியுண்டு. தேவனுடைய கிரியை பூரணமாயிருப்பதால், நாம் இருக்குமிடத்தில் அது ஆரம்பித்து, அது பூரணம் பெறுவதற்கு நம்மிடம் எதுவுமே எதிர்பாராமல் இருக்கிறது. காயமுற்ற, குற்றுயிராய்க் கிடந்து பிரயாணியைக் கண்ட நல்ல சமாரியன், அவன் எழுந்து தன்னிடம் வந்து, கழுதைமீதேறி, சத்திரத்துக்குச் செல்லவேண்டுமென்று அவனுக்குக் கட்டளையிடாமல், ‘அவனைக்கண்டு, கிட்டவந்து அவனுக்கு அவசியமான முதலுதவியைச் செய்து, அவனை வாகனத்தின்மேல் ஏற்றுp, சத்திரத்துக்கு அழைத்துச்சென்றான். இவ்விதமாகவே ஆண்டவரான இயேசுவும், நீசமும் கேவலமுமான நிலையிலிருக்கும் நம்மை நடத்துகிறார்.

தேவன் நீதிமானாக்குகிறரென்றும் பாவியை நீதிமானாக்குகிறாரென்றும், இயேசுவின் விலைமதிப்பில்லாத இரத்தத்தில் விசுவாசம் வைத்திருப்போரை நீதிமான்களாக்குகிறாரென்றும் கண்ட நாம், பாவிகளின் இரட்சிப்புக்கு இயேசுவழிசெய்ய வருகையில் அவர்கள் எந்நிலையில் இருக்கிறார்களென்பதை அறியவேண்டும். விழிப்புற்றுவர்களில் பலர் தங்கள் பாவத்தினிமித்தம் மட்டுமல்ல, தங்கள் ஒழுக்கநிலையின் பலவீனம்பற்றியும் கலங்குகிறார்கள். தாங்கள் விழுந்துவிட்ட சேற்றினின்று தப்புவதற்கான பெலன் அவர்களிடம் இராததுடன், எழுந்து பின்னர் மறுபடியும் அதில் சிக்கிவிடாதபடி தங்களைக் காத்துக்கொள்ளும் திடனுமில்லை. தாங்கள் செய்த காரியத்தைக் குறித்தும் தாங்கள் செய்யவியலாததைக் குறித்தும் அவர்கள் துயருறுகின்றனர். சக்தியற்று, ஆத்மீகப் பிரகாரமாய் உயிரற்றுவாகளாய் தாங்கள் இருப்பதுபோல் உணர்கின்றனர். மரித்தவர் போல் தங்களைப் பாவித்துக் கொள்கின்றனர் என்று கூறுவது விசித்திரமாய் இருந்தாலும், அதில் உண்மை இல்லாமலில்லை. நன்மையான எதற்குமே தாங்கள் தகுதியற்றவர்கள் என்பது அவர்களுடைய அபிப்பிராயம். பரத்தின் பாதையில் பயணம் செய்யவொண்ணாதவாறு அவர்கள் எலும்புகள் நொறுங்கியுள்ளன. வல்லமையுள்ள எல்லா மனிதருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று, உண்மையில் அவர்கள், ‘பெலனற்றவர்களாயிருக்கிறார்கள்” தேவனுடைய மகத்தான அன்பைப் பாராட்டும் வண்ணமாக, ‘அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6) என்று எழுதியுள்ளது.

ஆண்டவரான இயேசுவின் குறுக்கீட்டால், பலவீனநிலை வல்லமையுள்ளதாகிறதென இங்கு நாம் காண்கிறோம். ‘நாம் பெலவீனமாயிருந்த போது கிறிஸ்து நமக்காக மரித்தார்” என்றோ, அல்லது, நமக்குச் சிறிதளவே பெலனிருந்த போது என்றோ குறிப்பிடாமல், ‘நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே” என்ற அவ்விளக்கம் நிச்சயமானதாயும், நிபந்தனையற்றும் உள்ளது. நாம் மீட்கப்படுவதில் நமக்கு அனுகூலமாயிருக்கும்படி நம்மிடம் எவ்வித வல்லமையும் இருக்கவில்லை. ‘என்னையன்றி உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று நம் ஆண்டவர் மொழிந்தது முற்றிலும் மெய்யே. இதைவிட நாம் ஒருபடி மேலேயே சென்று, ‘அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த” நம்மை ஆண்டவர் எவ்வளவு மகத்தான அன்பினால் நேசிக்கிறாரென்பதையும் நினைவுகூரலாம். பெலனற்றுவர்களாயிருப்பதைவிட மரித்தவர்களாயிருப்பது பின்னும் மோசமல்லவா?

‘குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்ற தெய்வீக வாக்கு ஒன்றைத்தான் அற்பனும் பெலனற்றவனுமான பாவி, தன் ஒரே நம்பிக்கையாகக் கொண்டு, அதில் தன் சிந்தையை நிலைக்கச் செய்து அதனை உறுதியாய் பற்றியிருக்கவேண்டும். இதை நம்பியிருந்தால் எல்லாப் பெலவீனங்களும் மறைந்தும்போம். கிரேக்கர் வழி வந்த கதையில், மைடாஸ் எதையெல்லாம் தான் தொட்டானோ அவற்றைப் பொன்னாக மாற்றியதுபோல், மெய்யான விசுவாசமும்கூட தான் தொடுவதனைத்தையும் நன்மையாக மாற்றிவிடுகிறது. நமது தேவைகளோடும் பெலவீனங்களோடும் விசுவாசம் சம்மந்தம் கொள்ளும்போது, அவையே ஆசீர்வாதங்களாகி விடுகின்றன.

பெலன் தேவைப்படும் இந்த வகையில் சிலவற்றை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். ‘என் இரட்சிப்புக்கடுத்த சிந்தனைகளைத் திரட்டி, பயபக்தியாகப் பேசப்படும் காரியங்களில் அவற்றை ஒருமனப்படுத்துவதற்கு எனக்குச் சக்தியில்லை. ஒரு சிறு ஜெபத்திலும்கூட என் கவனம் நிலையாயிருப்பதில்லை. அதற்கு ஒரு காரணம் அசட்டையாயிருந்து நானே கவனத்தை ஊனமாக்கிவிடுவது. வேறோரு காரணம் உலகக் கவலைகளால் நாம் பாதிக்கப்படுவது. இதனால் ஒர் ஆத்துமா ஈடேற்றப்படுமுன், அதற்கு அவசியமான உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவனாய் நான் இருக்கமுடியவில்லை. இவ்விதம் ஒருவர் சொல்லக்கூடும். பாவத்தால் ஏற்படும் பெலவீனங்களுள் மிகச் சாதாரணமானது இது. இவ்வாறு எத்தனையோ பேர் உள்ளனர். இதேவிதமான பெலவீனம் உங்களுக்கு இருக்கலாம். தங்கள் ஜீவனை மீட்டுக்கொள்ள, தொடர்ச்சியாக வரும் அடுக்கடுக்கான கருத்துக்களை அவர்களால் தாங்கிக்கொள்கக்கூடாத நிலையில் உள்ளனர். அநேக ஆண்களும் பெண்களும் கல்வியறிவு அற்றோராய் பயிற்சிபெறாதோராயிருப்பதால், ஆழ்ந்த சிந்தனையில் முனைந்திருப்பது அவர்களுக்கு மிகக் கடினமான காரியமாயிருக்கும். மற்றும் சிலர் எதையுமே லேசாகவும் விளையாட்டுப் போக்கிலும் எடுத்துக்கொள்வதால், ஒரு நீண்ட விவாதத்தையோ, காரணங்களை ஆராய்ந்து முடிவுக்கு வரும் காரியங்களையோ கவனமாய்க் கேட்கும் சக்தியற்றவர்களாய் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் கழித்தாலும் கூட, எந்தப் பெரிய இரகசியத்தைப் பற்றிய அறிவையும் அடையமுடியாது. எனவே, நீங்கள் கவலையுறவேண்டாம். இரட்சிப்புக்கு வேண்டற்பாலது தொடர்பான நினைவல்ல. குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார் என்ற அந்த ஒரே சத்தியத்தை உறுதியாய்ப் பற்றியிருங்கள். இந்த உண்மையை அறிய நீங்கள் ஆழ்ந்த ஆராய்ச்சியோ, பெரும் தர்க்கமோ, ஆணித்தரமான விவாதமோ செய்யவேண்டியதில்லை. ‘குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்ற வாக்கின்மீது உங்கள் சிந்தையை நிலைக்ககச் செய்து அமர்ந்திருங்கள்.

மகத்தானதும் கிருபை நிறைந்ததும் மகிமையுள்ளதுமான இந்த ஓர் உண்மை உங்கள் நினைவுகளையெல்லாம் மணம் கமழச் செய்யும்படி உங்கள் சிந்தையில் அதைப் பொதிந்து வைப்பீர்களெனில், நீங்கள் பெலனற்றவர்களாயிருப்பினும், ஆண்டவரான இயேசு உங்கள் பெலனும், உங்கள் கீதமும் உங்கள் இரட்சிப்புமானார் என்பதால் நீங்கள் களிகூர்ந்திருக்கும்படி அது செய்ய அக்கிரமக்காரர் பெலனற்றவர்களாயிருக்கையிலே கிறிஸ்து அவர்களுக்குhக மரித்தார் என்பது வேதவாக்கியங்களின்படி வெளிப்படுத்தப்பட்ட சத்தியமாயுள்ளது. இதையே நீங்கள் நூற்றுக்கணக்கான தருணங்களில் கேட்டிருக்கலாம். எனினும், அவற்றின் பொருளை இதற்குமுன் நீங்கள் உணர்ந்ததில்லை. உற்சாகமூட்டும் அம்சம் ஏதோவொன்று அதில் இருப்பதாக உங்களுக்குப்படவில்லையா? இயேசு தமது நீதிக்காக மரிக்காமல், நமது பாவங்களுக்காக மரித்தார். ஈடேற்றப்பட அருகதையுள்ளவர்களாக நாமிருக்கிறோமென்று நம்மை மீட்க அவர் வராமல், ஒரு தகுதியும் இல்லாதவர்களாய் அழிவைக் கண்டு மோட்சமான நிலையிலிருக்கிறோமென்பதை அறிந்து நம்மை இரட்சிக்க வந்தார். நம்மிடமுள்ள ஏதோ காரணம்பற்றி அவர் பூமிக்கு வராமல், தம் தெய்வீக அன்பின் ஆழத்தினின்று அவரே கண்டெடுத்த காரணங்களினிமித்தமே அவர் நம்மிடம் வந்தார். அக்கிரமக்காரர் என்று அவரே விளக்கிக்கூறினவர்களுக்காக, நீதிமான்களாயிராதவர்களுக்காக அவர் குறித்த காலத்தில் மரணத்தை ஏற்றார். இச்சத்தியம் ஏற்கப்படக்கூடிய உங்கள் சிந்தையானது மிகச் சிறியதாயிருப்பினும், பெருஞ்சுமையைத் தாங்கியிருக்கும் இருதயத்துக்கு ஆறுதல் தரவல்லதென்பதால், அதை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள். இந்த வசனம் உங்கள் நாவில் ஓர் இனிய பண்டம்போல் தங்கி, உங்கள் உள்ளத்தில் கரைந்தோடி, உங்கள் எண்ணங்களுக்கெல்லாம் சுவையூட்டட்டும். பின்னர் இந்நினைவுகள், இலையுதிர் காலத்தில் இலைகள் அடையும் நிலையை எய்துமெனில், அதனால் பாதகமெதுவுமில்லை விஞ்ஞானத்தில் மேதையாகவோ, அல்லது சுய ஆற்றல் படைத்தவராகவோ இல்லாதவர்களும் கூட சிலுவையின் கோட்பாட்டை ஏற்கக்கூடியவர்களாயிருந்தமையால் இரட்சிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறாயின் ஏன் நீங்களும் அந்நிலையைப் பெறலாகாது?

‘தேவைப்படுமளவுக்கு என் பாவங்களினிமித்தம் உணர்வடையக்கூடிய சக்தி எனக்கில்லை!” என்பது இன்னொருவர் வெளியிடும் கவலை. மனந்திரும்புதலைக் குறித்து மக்கள் விசித்திர எண்ணம் கொண்டுள்ளனர். பாவத்துக்கு மனம் கசிவதென்றால் ஏன் இத்தனை கண்ணீர்துளிகள் சிந்தவேண்டும். இத்தனை பெருமூச்சுகள் எழும்பவேண்டும். இவ்வளவு துன்பம் அடையவேண்டும் என்பது கருத்து, இப்படியும் ஒரு நியாயமற்ற அபிப்பிராயம் எங்கிருந்து வந்ததோ? அவநம்பிக்கையும் கவலையும்கூட பாவங்களாயிருப்பதால், அங்கீகாரமான மனந்திரும்புதலை நிர்ணயிக்கும் ஆதாரங்களாக அவை எவ்வாறு பொருந்தும் என்பது தெரியவில்லை. என்றாலும் மெய்யான கிறிஸ்தவ அனுபவத்தின் இன்றியமையாத பகுதிகளாக அவற்றைப் பலர் மதிக்கின்றனர். இது பெரும் பிழை. இருப்பினும், நான் இருளில் சிக்கியிருந்த நாட்களில் நானும் இதே வகையான உணர்வுடன் இருந்தமையால், அவர்கள் ஏன் அவ்விதம் கருதுகின்றனரென்பது எனக்குப் புரிகிறது. மனந்திரும்ப விழைத்த நான், அதை என்னால் செய்யமுடியாதென்பதைக் கருதினேன். ஆனால் அதே சமயத்தில் நான் என் பாவங்களுக்காக வருந்திக்கொண்டிருந்தேன். கேட்க விரோதமாயிருப்பினும், என்னால் உணரமுடியாதென்ற உணர்வு எனக்கு ஏற்பட்டிருந்தது. ஆகையால், ஒரு மூலைக்குச் சென்று நான் அழுததுண்டு. பாவத்தினிமித்தம் நான் கலங்க முடியாததால், மிகக் கசப்பான துயரில் நான் மூழ்கினேன். விசுவாசியாத நிலையிலிருந்தவாறு நாம் நமது நிலையை எடைபோட முற்படுவது எத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தும்! இது ஓர் அந்தகன் தன் சொந்தக் கண்களைக் காணும் நிலை போலுள்ளது. பிடிவாதம் பிடித்த பாறைபோல் என் உள்ளம் கடினப்பட்டிருப்பதாக எண்ணிய என் இருதயம் அச்சத்தால் உருகலாயிற்று. அது நொறுங்காதென்று நான் எண்ணியதாலேயே என் இருதயம் நொறுங்கிப்போயிற்று. என்னிடம் எது இல்லையென்று நான் எண்ணினேனோ. அதையே நான் வெளிப்படுத்தியிருக்கிறேனென்பதை, இப்போது என்னால் அறியமுடிகிறது. ஆனால் அப்போதோ என் நிலையே எனக்குப் புரியாதிருந்தது.

நான் இப்போது அனுபவிக்கும் ஒளிக்குள் மற்றவர்களும் வர நான் உதவக்கூடுமாயின் எவ்வளவு நலமாயிருக்கும்! அவர்களுடைய குழப்பநிலையே நீடிக்கச் செய்யாதபடி மகிழ்வுடன் நான் ஒரு வார்த்தை கூறமுடியாது. ஒரு சில தெளிவான சொற்களைக் கூறி அவற்றை அவர்களுடைய உள்ளத்தில் பதியவைக்கும்படி ‘தேற்றரவாளரை” வேண்டுவேன்.

மெய்யாகவே மனந்திரும்புகிறவன் தன் சுய மனந்திரும்புதலினிமித்தம் ஒருபோது திருப்தியுறுவதில்லை என்பதை நீங்கள் நினைவுகூரவேண்டும். நாம் பூரண சற்குணராய் வாழ்வது கூடாததுபோலவே. நாம் பூரணமாய் மனந்திரும்புதலும் கூடாத காரியம். நமது கண்ணீர் எவ்வளவுதான் தூய்மையாயிருந்தாலும், அதில் எப்படியும் சிறிய மாசு இருந்தே தீரும், நமது சிறந்த மனந்திரும்புதலிலும்கூட, எதற்காகவேனும் நாம் மனம் வருந்தவேண்டியிருக்கும். ஆனால் இதைக் கவனியுங்கள்! மனந்திரும்புதல் என்றால் பாவத்தைக் குறித்தும், கிறிஸ்துவைக் குறித்தும் நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த மாற்றத்தால் துயரம் ஏற்படினும், கவனிக்கவேண்டிய முக்கியமான காரியம் யாதெனில், உள்ளத்தைப் பாவத்தினின்று விலக்கி, கிறிஸ்துவிடம் திரும்புதலேயாம். இத்தகைய மனந்திரும்புதல் இருக்குமெனில், உங்கள் சிந்தையில் எவ்வித திகில் அல்லது துயரத்தின் சாயையும் படிந்திராமல், மெய்யான மனந்திரும்புதலின் சாரத்தை நீங்கள் பெற்றவர்களாயிருப்பீர்கள்.

நீங்கள் விரும்பும் வகையில் உங்களால் மனஸ்தாபப்பட இயலாவிடின், ‘குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக் காரருக்காக மரித்தார்! என்பதை நீங்கள் உறுதியாய் நம்பினால், அது நீங்கள் மனந்திரும்புவதற்குத் துணைபுரியும். இதையே நீங்கள் விடாது சிந்தித்துப் பாருங்கள். மகத்தான அன்பின்நிமித்தம் ‘கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்பதை நீங்கள் அறிந்திருக்கையில் உங்களால் எவ்வாறு இருதயக் கடினத்துடன் இருக்கமுடியும்? கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தாரென்பதால், அவர் என்னைப் போன்றோருக்காகவே தம் உயிரை ஈர்ந்தார். நான் இதை விசுவாசித்து, இதன் வல்லமையை என் கல்லான இருதயத்தில் உணர்ந்தால் எவ்வளவு சிறப்பாயிருக்கும்!

உங்கள் சிந்தையிலிருக்கும் எல்லா நிழல்களையும் ஒதுக்கிவிட்டு, ‘கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்ற தகுதியற்றதும், எதிர்பாராததும், ஈடில்லாததுமான மகிமையான அன்பின் வெளிப்படுத்துதலைக் குறித்து மணிக்கணக்கில் ஆழ்ந்து தியானியுங்கள். ஆண்டவரின்மரணத்தைப்பற்றி நான்கு சுவிசேஷகர்களும் விவரித்திருத்தலை; கவனியாய் வாசித்துப்பாருங்கள். உங்களுடைய பிடிவாத இருதயத்தை உருக்கக்கூடியது ஏதேனும் இருக்குமென்றால், அது இயேசுவின் பாடுகளைக் காண்பதும், இவை அனைத்தையும் அவர் தம் விரோதிகளுக்காகச் சகித்தார் என்பதை உணர்வதுதான்.

பாறையினின்று நீர் வருவிக்கும் அதிசயக் கோல் போன்று சிலுவை உள்ளது. இயேசுவின் தெய்வீகத் தியாகத்தின் முழுப்பொருளையும் நீங்கள் புரிந்துகொண்டிருந்தீர்களெனில், அன்பே உருவான இருவருக்கு விரோதமாய் இருந்தோமேயென்று நீங்கள் மனஸ்தாபமுறுவீர்கள். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின அவரை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஓரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுப்போல அவருக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல அவருக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள் என்று எழுதியுள்ளது. மனந்திரும்புதலானது நீங்கள் கிறிஸ்துவைக் காணும்படி செய்யாது. ஆனால் கிறிஸ்துவைக் காண்பது உங்களுக்கு மனந்திரும்புதலையருளும். உங்கள் மனஸ்தாபத்தின் மூலம் நீங்கள் கிறிஸ்துவை உருவாக்க மாட்டீர்கள். ஆனால் மனந்திரும்புதலுக்கு நீங்கள் கிறிஸ்துவை நாட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவிடம் திரும்புவதின்மூலம் நம்மைப் பாவத்தினின்று திரும்புகிறார். அவ்வாறாயின், நீங்கள் சுயமாய் மனஸ்தாபப்படுதலான அந்த விளைவை விடுத்து மனந்திரும்புதலை அருளும்படி மேலே உயர்த்தப்பட்டிருக்கும் ஆண்டவரான இயேசு என்னும் காரணரை ஏறிட்டு நோக்குங்கள்.

வேறொருவர் கூறியது:’பயங்கரமான எண்ணங்களால் நான் அலைக்கழிக்கப்படுகிறேன். நான் போகுமிடமெல்லாம் என்னையுமறியாது நிந்தனைகள் என் வாயினின்று வந்துவிடுகின்றன. நான் வேலையில் ஈடுபட்டிருக்கையில், மோசமான யோசனைகள் அடிக்கடி தோன்றி என்னை அழுத்துகின்றன. நான் படுத்திருக்கையிலும்கூட தீயோனின் இரகசியமொழிகள் என்னை அச்சுறுத்துகின்றன. பீதிதரும் இச்சோதனையிலிருந்து என்னால் தப்பமுடியவில்லை”. இத்தகைய ஓநாய் என்னையும் துரத்தியதுண்டு ஆகையால் இது எனக்குப் புதுமையாகப்படவில்லை. சாத்தானால் தூண்டப்படும் எண்ணங்களை முறியடிக்க ஒரு மனிதன் முற்படுவதைவிட ஓர் ஈக்களின் கூட்டத்தை ஒரு பட்டயத்தால் மாய்த்துவிட அவன் எத்தனிக்கலாம். ஒரு வழிப்போக்கனின் தலை, காதுகள், உடல் முழுவதையும் சீற்றம் கொண்ட ஒரு குளவிகள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. அவற்றை விரட்டவோ அல்லது அவற்றினின்றுதப்பவோ அவனால் கூடாதிருந்தது. அவை அவனை எல்லாப் பாகங்களிலும் கொட்டி அவனை மாய்த்துவிடுவதுபோல் அச்சுறுத்தின. சாத்தானின் யோசனைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட சோதனையில் சிக்குண்ட பரிதாபகரமான ஆத்துமாவும் அவ்விதமே உள்ளது. உங்கள் சிந்தையில் சாத்தான் சொரியும் இந்தக் கேவலமான பயங்கர எண்ணங்களை நிறுத்த உங்களுக்குச் சக்தியில்லை என்பதை அறிந்து நான் வியப்புறவில்லை. இருந்தாலும், ‘நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்று முன்னுள்ள வசனத்தை உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன். நாம் எங்கிருக்கிறேமென்பதையும், நாம் எங்கிருக்க வேண்டும் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். ஆகாயத்து அதிகாரப் பிரவுவை நாம் மேற்கொள்ளக்கூடாதிருத்தலையும் இயேசு அறிவார். அவனால் நாம் அதிகம் பாதிக்கப்படுவோம் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அப்போதும் கூட நம்மை அந்த நிலையில் கண்டதும், கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். உங்கள் விசுவாசமெனும் நங்கூரத்தை இதன்மேல் போடுங்கள். நீங்கள் அக்கிரமக்காரரென்றும் உங்களைச் சாத்தானாலும் கூற முடியாது. எனவே, உங்களைப் போன்றவருக்காகவே இயேசு மரித்தாரென்பதை நம்புங்கள். பிசாசின் சிரசை அவன் பட்டயத்தைக் கொண்டே வீழ்த்திய மார்ட்டின் லூத்தரின் முறையை நினைவில் கொள்ளுங்கள். சாத்தான் மார்ட்டின் லூத்தரிடம் ‘நீ ஒரு பாவி” என்றான். ‘ஆம் பாவிகளை மீட்கவே கிறிஸ்து மரித்தார் என்ற லூத்தர் அவன் வாளினாலேயே சாத்தானை வீழ்த்தினார். குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார் என்ற இந்தப் புகலிடத்தைச் சேர்ந்த நீங்கள் அங்கேயே மறைந்திருங்கள். நீங்கள் அந்தச் சத்தியத்தைப் பிடித்து நின்றால், உங்களால் விரட்டக்கூடாதிருந்த நிந்தனைக்கிடமான நினைவுகளெல்லாம் தன்னால் மறைந்துபோம். ஏனெனில் அவற்றைக்கொண்டு உங்களை வருத்துவதால் ஏதும் பயனில்லையென்பதை சாத்தான் அறிந்துகொள்வான்.

இந்நினைவுகளை நீங்கள் வெறுப்பதாயின், அவை எங்களுடையவையாயிராமல், சாத்தானின் தூண்டுதலாயிருப்பதால், அவற்றிக்கு அவனே பொறுப்பாளியல்லாமல் நீங்களல்ல. நீங்கள் அவற்றோடு போராடினீர்களென்றால் தெருவில் செல்லும் கலகக்காரரின் சாபங்களும் பொய் மொழிகளும் எவ்வாறு உங்களைப் பாதிக்காலிருக்குமோ அவ்வாறே இவையும் உங்களை ஏதும் செய்யா. இந்த நினைவுகள் மூலம் தான் சாத்தான் உங்களைத் துயரத்தில் ஆழ்த்தவோ, அல்லது நீங்கள் இயேசுவைச் சார்ந்திருக்காதபடி செய்வான். திரள்கூட்டத்தின் காரணமாக, பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவை நெருங்கக் கூடாதிருந்தது. இந்தப் பயங்கரமான நினைவுகள் திரண்டெழுந்து அழுத்துவதால் நீங்களும் அதே நிலையில் இருக்கிறீர்கள். எனினும், அவள் தன் விரலை நீட்டி ஆண்டவரின் வஸ்திரத்தின் ஓரத்தைத்தொட்டு, சுகம் பெற்றாள். நீங்கள் அவ்விதமே செய்யுங்கள்.

‘எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும்” செய்து குற்றவாளிகளாகும் மக்களுக்காக இயேசு மரித்தவராகையால், தங்களுக்கு விருப்பமில்லாமலே தீய நினைவுகளுக்குள் சிக்கிவீடுபவர்களை ஆண்டவர் ஏற்க மறுக்கமாட்டாரென்பது திண்ணம், உங்களை இரட்சிக்க அவர் வல்லவராயுள்ளாரா இல்லையாவென்பதை அறியுங்கள். பிசாசின் பயங்கர குற்றச்சாட்டுகளை அவரால் தணிக்கக்கூடும். அல்லது அவற்றால் நீங்கள் அல்லலுறாவண்ணம் அவற்றின் மெய்யான தன்மையை நீங்கள் காணுமாறு அவரால் செய்ய இயலும். அவர் தம் சொந்தப் போக்கில் உங்களை இரட்சிக்க வல்லவராயிருப்பதால், உங்களை அவர் மீட்டு, இறுதியில் உங்களுக்கு நிறைவான சமாதானத்தை அருளுவார். இதற்காகவும் மற்றெல்லாவற்றிற்காகவும் நீங்கள் அவரையே சார்ந்திருங்கள்.

விசுவாசிப்பதற்குத் தேவையான பெனில்லையென்று கேள்வியுறுவதுதான் நமக்குக் குழப்பமாயும் வருத்தமாயும் உள்ளது. பின்வரும் அவல ஒலியை நாம் கேட்டதுண்டல்லவா?

‘நம்பினால் நல்லதாம்,
யாவும் சுலபமாம்
வாஞ்சித்தும் இயலாததால்
உம் துணை அருள்வீர்”

தங்கள் சுயபெலனை விட்டுவிட்டு, ஆண்டவரான இயேசுவின் பெலனில் சார்ந்திருத்தலைச் செய்யத் தங்களுக்குத் திராணி இல்லையென்று அநேகர் ஆண்டுக் கணக்கில் இருளில் முழ்கியிருக்கின்றனர். விசுவாசிக்க முயற்சிப்பதால் மாந்தர் பெரும் பயனுறுவதில்லை என்பதனால், நம்பிக்கை எனும் காரியமே மிக விசித்தரமானதாயிருக்கிறது. முயற்சிப்பதினால் விளைவதல்ல விவாசம். இன்று நிகழ்ந்த ஏதே ஒரு காரியத்தைக் குறித்து ஒருவர் எனக்கு அறிவிக்கையில், அவர் அறிவித்ததை நான் நம்ப முயற்சிப்பதாக நான் அவரிடம் கூறலாகாது. சம்பவத்தைக் குறித்துக் கூறியவரின் வாய்மையை நான் நம்பினால் தம் கண்ணால் கண்டதாக அவர் கூறியதுமே, அவருடைய வாய்மொழியை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் வாய்மையுள்ளவரல்ல என்று அறிந்திருந்தால், அவர் கூற்றை நம்பமாட்டேன். இந்தக் காரியத்தில் முயற்சிக்க வேண்டிய அவசியமேயில்லை. கிறிஸ்து இயேசுவில் இரட்சிப்பு உண்டென்று தேவன் அறிவிக்கும்போது, ஒன்று நான் அவரை உடனே விசுவாசிக்க வேண்டும். அல்லது அவரைப் பொய்யராக்க வேண்டும். இக்காரியத்தில் எது சரியான வழியென்பதை அறிந்துகொள்ள நீங்கள் தயங்கமாட்டீர்களென்பது நிச்சயம். தேவனுடைய அறிக்கை சத்தியமுள்ளதாயிருக்க வேண்டுமாகையால், நாம் உடனே இயேசுவை விசுவாசித்தல் நம் கடமை.

‘நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்ற இந்த ஒரு சத்தியத்தை, விசுவாசம் தன் கையில் அடக்கி வைத்திருப்பதில் திருப்பதியுறுங்கள். மக்கள் தம்மை விசுவாசியாதிருக்கையில், தம்மை விசுவாசிக்க அவர்களால் கூடாதிருக்கையில் அவர் அவர்களுக்காக தம் ஜீவனை ஈர்ந்தார். விசுவாசிகளாயிராமல், பாவிகளாயிருந்த மக்களுக்காக அவர் மரித்தார். இந்த அக்கிரமக்காரரை விசுவாசிகளாகவும், பரிசுத்தவான்களாகவும் மாற்றும்படி அவர் வைத்தார். ஆனால் அவர் அவர்களுக்காகத் தம்மை அர்ப்பணித்தபோது, அவர்கள் முற்றிலும் பெலனற்றவர்களாயிருத்தலைக் கண்டார். கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தாரென்ற சத்தியத்தை நீங்கள் பற்றிக்கொண்டு அதில் நீங்கள் உறுதிகொண்டீர்களெனில், உங்கள் நம்பிக்கை உங்களை ஈடேற்றும். நீங்கள் சமாதானத்துடன் இருக்கலாம். நீங்கள் சகலத்தையும் நம்ப இயலாவிடினும், உங்களால் மலைகளை அசைக்க முடியவில்லை என்றாலும், வேறெந்த அற்புதங்களையும் உங்களால் செய்யமுடியவில்லையென்றாலும், அக்கிரமக்காரருக்காக மரித்த இயேசுவிடம் உங்கள் ஆத்துமாவை நீங்கள் ஒப்புவித்துவிட்டால் நீங்கள் இரட்சிப்படைவீர்கள். பெரும் விசுவாசமல்ல, மெய்யான விசுவாசமே இரட்சிக்கிறது தவிர, இரட்சிப்பு விசுவாசத்தில் இராமல் விசுவாசம் சார்ந்திருக்கும் கிறிஸ்துவில்தான் உள்ளது. கடுகத்தனை விசுவாசம் இரட்சிப்பை வருவிக்கும். விசுவாசத்தின் அளவைக் கவனியாது, விசுவாசத்தின் தரத்தைக் கவனிக்கவேண்டும். சத்தியமென்று தோன்றுகிறரை ஒருவன் நிச்சயமாகவே நம்பலாம். ஆகையால், இயேசு சத்தியமுள்ளவரென்பதை நீங்கள் அறிந்திருப்பதால், நண்பரே, நீங்கள் அவரில் நம்பிக்கை வைக்கலாம்.

விசுவாசத்தின் இலக்காக இருக்கும் சிலுவை, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால், விசுவாசத்தின் காரணமாகவும் உள்ளது. உங்கள் உள்ளத்தில் விசுவாசம் இயல்பாகவே காக்குமட்டும், நீங்கள் அமர்ந்திருந்து, சிலுவையில் தொங்கும் இரட்சகரைக் கவனியுங்கள். நம்பிக்கையை தோற்றுவிப்பதற்கு. கல்வாரியைப்போன்று பிறிதொரு இடமில்லை. நடுங்கும் விசுவாசத்திற்கு அந்தப் பரிசுத்த மலையின் காற்று ஆரோக்கியத்தைக் கொணரும்.

‘அந்தோ! என்னால் என் பாவத்தைத் துறக்க முடியவில்லை. இதுவே என் பெலவீனம். என் பாவத்தை நான் சுமந்தபடி பரலோகத்துக்குச் செல்ல முடியாதென்பதை அறிந்திருக்கிறேன்” என்று இன்னொருவர் அங்கலாய்த்தார். அதை நீங்கள் உணர்ந்திருப்பது குறித்து மகிழ்கிறேன். ஏனெனில், அது உண்மையே. நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்படுமுன் பாவத்தை ரத்து செய்துவிடவேண்டும். இளைஞனான பனியன் ஒய்வுநாளன்று புல்வெளியில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, ‘ உன் பாவங்களுடன் நீ நரகத்துக்குச் செல்வாயா? அன்று, பாவத்தை விட்டுப் பரலோகத்திற்குச் செல்வாயா? என்ற வினா அவனுள் திடீரென்று எழுந்தது. அது அவன் ஆட்டத்தைத் தொடரவொட்டால் அப்படியே நிற்க வைத்துவிட்டது. பாவத்திலேயே உழன்று விட்டுப் பின் பரலோகத்துக்குச் செல்வது கூடாததாகையால், ஒவ்வொரு மனிதனும் இக்கேள்விக்கு விடை காண வேண்டும். பாவத்தையோ அன்றி நம்பிக்கையையோ கைவிடவேண்டும். ‘ஆம் நான் அவ்விதம் செய்யச் சித்தமாயிருக்கிறேன். செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது. செய்வதோ என்னிடத்திலில்லை. பாவம் என்மேல் ஆதிக்கம் செலுத்துவதால் எனக்குப் பெலனில்லை” என்று நீங்கள் பதிலளிக்கிறீர்களா? அவ்வாறாயின் வாருங்கள் உங்களுக்குப் பெலனே இல்லையெனில், ‘நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்ற இந்த வசனம் இப்போதும் உங்களுக்குப் பொருத்தமாயிருக்கும். உங்களால் அதை நம்ப முடிகிறதா? பிற காரியங்கள் அதற்கு முரணாகத் தோன்றினாலும், நீங்கள் அதை நம்புவீர்களா? தேவன் மொழிந்த அச்சத்தியத்தில்தான் உங்கள் ஒரே நம்பிக்கை இருப்பதால், அதை உறுதியாய்ப் பற்றியிருங்கள். இதை விசுவாசித்து இயேசுவில் சார்ந்திருந்தீர்களானால், உங்கள் பாவத்தை முறியடிக்க வல்ல சத்துவத்தை நீங்கள் விரைவில் பெறுவீர்கள். அவரில்லையேல், ஆயுதம் தரித்திருக்கும் பலசாலி உங்களை என்றென்றும் தன் அடிமையாக வைத்துக்கொள்வான். என்னை எடுத்துக்கொண்டால், நான் சுயமாக என் பாவத்தை மேற்கொண்டிருக்க முடியாது. நான் அதில் முயன்று தோல்வியுற்றேன். என் தீய சுபாவங்கள் மேலோங்கி நின்றபோது, கிறிஸ்து எனக்காக மரித்தாரென்ற நம்பிக்கையில், அக்கிரமம் நிறைந்த என் ஆத்துமாவை நான் அவரிடம் ஒப்புவித்தேன். ஆகையால், வெற்றிகொள்ளும் வழியை நான் பெற்று, அதனால் பாவத் தன்மையை மேற்கொண்டேன். பண்டைய வீரர்கள் இரு கைபிடிகள் கொண்ட தங்களுடைய பெரும் பட்டயங்களால் ஒவ்வொரு அடிக்கும் தங்கள் விரோதிகளை வெட்டிச் சாய்த்ததுபோல்,, சிலுவையின் கோட்பாடும் பாவத்தை முறியடிக்கப் பயன்படுத்தப்படலாம். பாவிக்கு விசுவாசத்தைப் போன்தோர் உற்ற நண்பன் வேறொன்றில்லை. அது சகல தீமையையும் மேற்கொள்ளுகிறது. அக்கிரமக்காரனும் பெலவீனனுமான எனக்காக இயேசு மரித்தாரென்றால், நான் மேலும் பாவத்தி;ல் அமிழ்ந்திராமல், என்னை இரட்சித்தவரை நேசிக்கவும் அவருக்கு ஊழியம் புரியவும் எழுந்திருக்கவேண்டும். என் உற்ற நண்பரை மாய்த்த தீமையுடன் நான் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. அவருக்காக நான் பரிசுத்தமாயிருக்க வேண்டும். என்னைப் பாவத்தினின்று மீட்கும்படி அவர் மரித்திருக்க, நான் எவ்வாறு பாவத்தில் வாழ்ந்திருப்பது?

குறித்த காலத்தில் உங்களையொத்த அக்கிரமக்காரருக்காக கிறிஸ்து மரித்தாரென்பதை உணர்ந்து அதில் நம்பிக்கையாயிருத்தல், பெலனில்லா உங்களுக்கு எத்துணை சிறந்த உதவியாயுள்ளதென்பதைக் காணுங்கள். இக்கருத்து இதற்குள் உங்களுக்கு புலப்பட்டுவிட்டதா? இருண்டதும் தப்பெண்ணம் கொண்டதும், நம்பிக்கையற்றதுமான நமது சிந்தைகளுக்கு, சுவிசேஷத்தின் சாரத்தைக் கண்டறிவது மிகக் கடினமாயிருக்கின்றது. சில சமயங்களில் நான் பிரசங்கித்து முடித்த பின்னர், ஒருவருடைய முகத்தில் அவருடைய மூக்கு தெளிவாய்த் தெரிவதைக் காட்டிலும் மிக விளக்கமாய் நான் சுவிசேஷத்தை அறிவித்துவிட்டதாக எண்ணிக்கொண்டதுண்டு. ஆயினும், ‘என்னை நோக்கிப் பாருங்கள். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்” என்பதன் பொருளை அறிவில் சிறந்தோரும்கூடப் புரிந்துகொள்ளத்தடுமாறுகிறதை நான் கண்டிருக்கிறேன். குறிப்பிட்டதொரு நாள்வரைக்கும் தாங்கள் சுவிசேஷத்தை அறியவில்லையென்று மனந்திரும்பியவர்கள் சாதாரணமாகக் கூறுவதுண்டு. ஆயினும், ஆண்டுக் கணக்கில் அவர்கள் அதைக் கேட்டிருக்கின்றனர். விளக்கம் தேவைப்பட்டதால் தான் சுவிசேஷம் அறியப்படவில்லை என்பதல்ல, தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தப்படாததன்காரணமாகவே, அது அறியப்படாமல் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இதை அருளச்சித்தமாயிருப்பதுடன், தம்மிடம் வேண்டிக்கொள்வோருக்கு வழங்கவும் செய்வார். என்றாலும், அது அருளப்படுகையில் வெளிப்படுத்தப்பட்ட மொத்த உண்மையும், ‘கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்பதில் அடங்கியிருக்கிறது.

‘ஒரே சிந்தையில் நான் நீடித்திருப்பதில்லை. இதுவே என் பெலவீனம். ஞாயிற்றுக்கிமையன்று நான் கேட்கும் வார்த்தை என்னை அசைக்கிறது. ஆனால் வார நாட்கள் வந்ததும் ஒரு தீயசகாவைச் சந்திப்பதால் என் நல்ல உணர்ச்சிகள் மறைந்துவிடுகின்றுன. எதிலும் நம்பிக்கையி;ல்லா என் சக தோழர்கள், மோசமான காரியங்களைக் கூறுவதால், எதற்கும் பதிலிருக்கத் தெரியாமல் ஒரு மத்தளம்போல் இடிபட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று ஒருவர் நொந்துகொண்டார். இவ்விதம் எதற்கும் வளைந்து கொடுக்கக்கூடிய சுபாவமுள்ளுவருக்காக நான் நடுங்குகிறேன். ஆனால் அதே சமயத்தில் அவர் அதை உண்மையில் உணர்ந்து கூறினால், அவருடைய பெலவீனம் தெய்வீக அருளால் நீங்கிப்போகும். மனிதனின் அச்சமெனும் கோழையே அவர் தீரனாக்கிவிடுவார். நிலையாய் நிற்கவும் பயந்தோ, மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் தேரையைப்போல் இருக்க நீ;ங்கள் உண்டாக்குப்படவில்லையென்பதை நீங்கள் உணர்ந்து, நேராக நிமிர்ந்து நின்று உங்களையே பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சுயசித்தம் என்று ஒன்று இருக்கட்டும். இது ஆத்மீக சம்மந்தமான காரியம் மட்டுமல்லாது, சாதாரணமாக மனிதனில் காணப்படவேண்டிய தைரியத்தை ஒட்டியும் உள்ளது. நண்பர்களை மகிழ்விக்க நான் அநேக காரியங்களைச் செய்வேன். ஆனால்அவர்களைக் களிப்பில் ஆழ்த்துவதற்காக நான் நரகம் செல்லுவதென்றால், அது என்னால் கூடாது. நுல் ஐக்கியத்திற்காக இதையும் அதையும் செய்வது சரிதான். ஆனால் மனிதர்களிடம் நல்லுறவுக்காக தேவனுடைய நட்பை விட்டுவிடுதல் நன்மை பயக்காது. ‘எனக்கு அது தெரியும், தெரிந்திருந்தும் என் சுய கருத்தை வெளியிட முடியவில்லை. எனக்குத் தைரியமில்லை. என்னால் உறுதியாய் நிற்கமுடியவில்லை” என்றார் அம்மனிதர். அவருக்கும்கூட, ‘நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்ற வசனத்தைச் சுட்டிக்காட்டுகிறேன். பேதுரு இப்போது நம் மத்தியில் இருந்தால், பின்வருமாறு கூறக்கூடும்: ‘நெருப்பை கவனித்துக்கொண்டிருந்த வேலைக்காரப் பெண் ஆண்டவரை அறியேனென்று நான் பொய் கூறவும் சபிக்கவும் என்னை ஏவியபோதும், அந்தப் பரிதாபகரமான, பெலவீனமான நிலையிலிருந்த எனக்காக ஆண்டவரான இயேசு தம் ஜீவனை ஈந்தார்.” ஆம் அவரைக் கை விட்டு ஓடியவர்களுக்காக இயேசு தம் உயிரை அர்ப்பணித்தார். ‘அவர்கள் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” என்னும் இச்சத்தியதத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள். உங்கள் கோழைத்தனத்தினின்று நீங்கள் மீள இதுவே வழி. ‘கிறிஸ்து எனக்காக மரித்தார்” என்பதை உங்கள் ஆத்துமாவில் பதியவைத்துக்கொண்டீர்களனெனில், அவருக்காக நீங்கள் உங்கள் உயிரையும் அளிக்கச் சித்தமாவீர்கள். உங்களுக்காக, உங்கள் இடத்தில், உங்களுக்குப் பதிலாக, அவர் பாடுகளை ஏற்று, நிறைவானதும், மெய்யானதும், திருப்திகரமுமான பரிகாரத்தை உங்களுக்கு அருளினாரென்பதை விசுவாசியுங்கள். இந்த உண்மையை நீங்கள் நம்பினால், ‘எனக்காக மரித்தவரினிமித்தம் நான் வெட்கமுற வேண்டியதில்லை” என்பதை எப்படியும் உணருவீர்கள். இது சத்தியமானது என்ற திடநம்பிக்கை உங்களுக்கு உண்டானாதும், நீங்கள் மிகுந்த தைரியமுறுவீர்கள். இரத்த சாட்சிகளின் காலத்தில் வாழ்ந்த பரிசுத்தவான்களைப் பாருங்கள். கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களில் கிறிஸ்துவின் அளவிடற்கரிய அன்பு புத்தம் புதியதாம் திருச்சபையில் சுடர் வீசிக்கொண்டிருக்கையில், மாந்தர் மரிப்பதற்கு மட்டுமல்லாது, வேதனைகளைச் சகிக்கவும் சித்தமாயிருந்து, ஆட்சியாளர்களின் நியாயபீடங்களுக்கு முன் கிறிஸ்துவை அறிக்கையிட்டபடி நூற்றுக்கணக்கில் திரண்டு வந்தனர். இயேசுவின் பாலுள்ள அன்பானது, மனிதன் நமக்கு இழைக்கக்கூடிய தீமைகளைக் குறித்த அச்சத்துக்கும் மேலாக சிந்தையை உயர்த்துமென்று நாம் வலியுறுத்துகிறேன். உங்களிலும் அதே விளைவு ஏற்படலாமல்லவா? ஆண்டவர் அண்டையில் சேரவும் முடிவு பரியந்தம் அவரைப் பின்பற்றுகிறவராயிருக்கவும், நீங்கள் தீரமாய் முடிவெடுக்கு உங்களில் இப்போது எழுச்சி ஏற்பட்டால் எவ்வளவு மேன்மையாயிருக்கும்!

ஆண்டவரான இயேசுவைப் பற்றும் விசுவாசத்தில் நாம் இவ்வளவு தூரம் வர பரிசுத்த ஆவியானவர் நமக்குத் துணை புரியட்டும், அப்போது நலமாயிருக்கும்.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிருபையின் மாட்சி

12. விசுவாசத்தின் வளர்ச்சி

00. கிருபையின் மாட்சி

13. மறுபிறப்பும் பரிசுத்த ஆவியும்

Recommended

00. இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

17. இரு குமாரர்கள்

00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

05. கிறிஸ்தவனும் சிலுவையும்

Song 139 – Viduthalai

ஹட்சன் டெய்லர்

ஹட்சன் டெய்லர்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.