- மனந்திரும்புதல் அருளப்படும் விதம் அந்தப் பெருமைக்குரிய வசனத்துக்கு மறுபடியும் வருவோமாக. ‘இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பiயும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்”. கிருபை கீழே வரும்படி நமது ஆண்டவரான இயேசு கிறிஸ்து மேலே சென்றுள்ளார். அவருடைய கிருபை பெருவாரியாய்ப் பலன் ஈனும்படி அவரது மகிமை பயன்படுத்தப்பட்டுள்ளது. விசுவாசிக்கும் பாவிகளைத் தம்முடன் கூட மேலே அழைத்துச் செல்லும் நோக்கத்துடனன்றி வேறெதற்காகவும் ஆண்டவர் மேல் நோக்கிச் செல்லவில்லை. மனந்திரும்புதலை அருளுகிறதற்காக அவா உயர்த்தப்பட்டார். சில பெரும் சத்தியங்களை நாம் மனதில் கொண்டால் இந்த உண்மையை நாம் காண்போம்.
நமது ஆண்டவரான இயேசு ஆற்றிய பணி மனந்திரும்புதல் சாத்தியமாவதற்கும், கிட்டுவதற்கும், ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் வழி செய்துள்ளது. நியாயப்பிரமாணம் மனந்திரும்புதலைக்குறித்து ஏதும் கூறாமல், ‘பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று தெளிவாய்க் குறிப்பிடுகிறது. ஆண்டவராகி இயேசு மரித்து, உயிரோடெழுந்து, பிதாவிடம் போகாதிருந்தாரானால், உங்கள் மனந்திரும்புதலுக்கும் என் மனந்திரும்புதலுக்கும் என்ன பலன் இருக்கும்? அதன் பயங்கரங்களினிமித்தம் குற்றவுணர்வால் நாம் வருந்தியிருக்கக்கூடும். ஆனால் மனந்திரும்புதலின் நம்பிக்கைகளோடு ஒருபோதும் மனஸ்தாபமடைவோம். இயல்பான உணர்வாக வரும் மனஸ்தாபமடையோம். இயல்பான உணர்வாக வரும் மனந்திரும்புதலானது பெரும் பாராட்டு எதற்கும் தகுதியற்ற சாதாரண கடமையாயுள்ளது. கூறப்பார்த்தால், அது தண்டனையினிமித்தம் ஏற்படும் சுயநல அச்சத்துடன் சாதாரணமாக இணைக்கப்பெறுவதால், அதை எந்த நல்ல மதிப்புரையால் குறிப்பிட்டாலும் அது அதைத் தாழ்த்துவதாகவே இருக்கும். இயேசுவானவர் குறுக்கிட்டு அதற்குத் திரளான தகுதியை இணைத்திராவிடில், நமது மனந்திரும்புதலின் கண்ணீர்த்துளிகள் விருதாவாய்ப்போயிருக்கும். தாம் மத்தியஸ்தம் புரிவதன்மூலம் தேவ சமூகத்தில் மனந்திரும்புதலுக்கு இடமிருக்க வேண்டுமென்று இயேசுவானவர் உன்னதத்தில் உயர்த்தப்பட்டார். மனந்திரும்புதலானது தானாகவே இருக்கக்கூடாத இடத்தில், ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில், அவர் அதை வைத்திருப்பதினிமித்தம், இவ்வகையில் நமக்கு மனந்திரும்புதலை அவர் அருளுகிறார்.
இயேசுவானவர் உயர்த்தப்பட்டபோது, நமக்கு அவசியமான கிருபைகள் உண்டாக்குப்படவே ஆவியானவர் ஊற்றப்பட்டார். பரிசுத்த ஆவியானவர் இயற்கைக்குப் புறம்பான முறையில் நமது சுபாவத்தை புதுப்பித்தும், நமது சதையிலிருந்து கல்லான இருதயத்தை அகற்றியும் நம்மில் மனந்திரும்புதலைத் தோற்றுவிக்கிறார். இப்போது உட்கார்ந்து வராத விழிநீரை வருவிக்க முற்படாதீர்கள்! மனந்திரும்புதலானது விருப்பமில்லாத சுபாவத்தினின்று தோன்றாமல், சுயமாயும் மேலான கிருபையினின்றும் பிறக்கும். உங்கள் அறைக்குச் சென்று கல்லான இருதயத்தினின்று அதில் இல்லா உணர்ச்சிகளை வருவிக்குமாறு நெஞ்சில் அடித்துக் கொள்ளாதீர்கள். ஆனால் கல்வாரிக்குச் சென்று இயேசு எவ்வாறு மரித்தாரென்பதைக் காணுங்கள். உங்களுக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக் நேராகக் கண்களை ஏறெடுங்கள். ஒரு காலத்தில் பரிசுத்த ஆவியானவர் குழப்பத்தின்மீது அமர்ந்து ஒழுங்கை நாட்டியதுபோல் மக்களின் ஆவிகளின் மேல் நிழலிட்டு அவர்களில் மனந்திரும்புதலை வளர்க்கும் நிமித்தமே வந்துள்ளார். ‘ஆசீர்வாதமான ஆவியே என்னோடு தங்கியருளும். நான் பாவத்தை பெறுத்து, உள்ளான இருதயத்துடன் அதற்காக வருந்துமாறு என் உள்ளத்தை மென்மையாக்கி, தாழ்மையை ஏற்கச் செய்தருளும்” என்று உங்கள் மன்றாட்டை அவருக்கு ஏறெடுங்கள். உங்களுடைய வேண்டுதலை அவர் கேட்டு உங்களுக்கு பதிலளிப்பார்.
நம் ஆண்டவரான இயேசுபிரான் உயர்த்தப்பட்டதும், பரிசுத்த ஆவியானவரை அனுப்பி நமக்கு மனந்திரும்புதலை வழங்கியிருக்கிறார். நமக்கு இரட்சிப்பு கிட்டும்பொருட்டு, இயற்கை, தெய்வ நடத்துதல் இவற்றால் இயங்கும் சகல கிரியைகளையும் பரிசுத்தமாக்கி, பேதுருவின் சேவல் கூவியதைப் போன்றோ, அல்லது சிறையதிகாரியின் பூமியதிர்ச்சி சிறைக்கூடத்தை அதிரப்பண்ணியதுபோன்றோ, அவற்றுள் ஏதாவது ஒன்று நம்மை மனந்திரும்பச் செய்யும்படி அருள் பாலித்தார். நமது ஆண்டவர் தேவனின் வலது பாரிசத்தில் இருந்த வண்ணம் யாவற்றின்மீதும் ஆதிக்கம் செலுத்தி, தம்மால் மீட்கப்பட்டோரின் இரட்சிப்புக்காக யாவும் இணைந்து கிரியை புரியும்படி செய்கிறார். பாவிகள் தங்கள் தேவனிடம் நற்சிந்தையுடன் திரும்பும்படி, கசப்பும் இனிப்புமான அநுபவங்களையும், துன்பங்களையும், இன்பங்களையும் ஆண்டவர் பயன்படுத்துகிறார். உங்களை வறியவனாக, வியாதியுள்ளவனாக, வருத்தமுள்ளவனாக மாற்றிய தெய்வ செயலுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், இவை வாயிலாக ஆண்டவர் உங்களுடைய ஆத்தும வாழ்க்கையில் கிரியை புரி;ந்து, உங்களை அவர் புறமாக இழுத்துக் கொள்ளுகிறார். அநேக சமயங்களில் தேவ கிருபையானது நமது இதய வாயில்களை நெருங்கி துயரமெனும் கருங்குதிரைமீது ஏறி வருவதுண்டு. இயேசுவானவர் நமது அநுபவத்தொடர் முழுவதையும் உபயோகித்து, பூலோகக் கவர்ச்சிகளை நாம் மறந்து கைவிடும்படி செய்து, பரலோகத்தை நாடும்படி கோருகிறார். சகல தெய்வீக நடவடிக்கைகள் வழியாக, மென்மையும் கிருபையும் கூடிய மனந்திரும்புதலுக்கு நம் கடின இருதயங்கள் அடங்கிவரும்படி செய்யவே கிறிஸ்துவானவர், பூமிக்கும் பரத்துக்கும் உரிய அரியணைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
மேலும், இவ்வேளையிலும்கூட, மனச்சாட்சியில் தொனிக்கும் அவர் குரல் மூலமாயும், ஆத்ம உணர்வை எழுப்பும் அவர் வேதத்தின் மூலமாயும், அவ்வேதத்தினின்று பேசும் அடியார் மூலமாயும், ஜெபிக்கும் நண்பர்கள் மூலமாயும், உண்மையான உள்ளங்கள் மூலமாயும் அவர் செயல் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் ஒரு வார்த்தையை அனுப்பினாராகில், மோசேயின் கோலைப்போல் அது உங்கள் கற்பாறை நெஞ்சைத் தாக்கி, அதினின்று மனந்திரும்புதல் எனும் அருவிகள் பெருக்கெடுத்தோடச் செய்யும். உங்களை அதிவிரைவில் கைப்பற்றக்கூடியதும், உள்ளத்தை நொறுக்கக்கூடியதுமான பரிசுத்த ஆகம வசனமொன்று உங்கள் நினைவில் வரும்படி அவரால் செய்ய இயலும். நீங்கள் சற்றும் எதிர்பாராதவிதமாய் உங்களை மென்மையாக்கி, உங்களில் ஒரு புனித சிந்தையை மெல்ல மெல்ல உருவாக்க அவரால் முடியும். தம் மகிமையில் பிரவேசித்திருப்பவரும், தெய்வீக மேன்மைக்கும் இராஜரீகத்திற்கும் உயர்த்தப்பட்டிருப்பவருமான ஆண்டவரும், தாம் மன்னிப்பை வழங்குவோருக்குள் மனந்திரும்புதல் ஏற்படும்படி எண்ணற்ற வழிகள் உண்டென்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். இப்போதும்கூட உங்களுக்கு மனந்திரும்புதலை அருளுகிறதற்கு அவர் காத்திருக்கிறார் உடனே அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
உலகத்திலேயே சற்றும் நினைக்கக்கூடாத மக்களுக்கு ஆண்டவரான இயேசு இந்த மனந்திரும்புதலை அருளுகிறார் என்பதை ஆறுதலோடு உணருங்கள். இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலை அருளுகிறதற்காக உயர்த்தப்பட்டுள்ளார். இஸ்ரவேலுக்கா! அப்போஸ்தலர்கள் இவ்விதமாய்ப் பிரசங்கித்த நாட்களில் ஒளிக்கும் அன்புக்கு விரோதமாக மிக மோசமாய்ப் பாவமிழைத்ததும், ஆண்டவரை சிலுவையில் அறைந்ததன் மூலம் தன் குற்றத்துக்கு மகுடமிட்டதும், ‘இவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக” என்று கூறத் துணிந்ததும் இந்த இஸ்ரவேல் இனம்தான். இவர்கள் இயேசுவின் கொலையாளிகளாயிற்றே! இருந்தும் அவர்களுக் மனந்திரும்புதலை அருள அவர் உயர்த்தப்பட்டுள்ளார்! எத்தகைய அற்புதமான கிருபை! அவ்வாறயின் கவனியுங்கள். நீங்கள் மிகப் பிரகாசமான கிறிஸ்தவ ஒளியில் வளர்க்கப்பட்டிருந்தும்கூட அதை ஒதுக்கியிருந்தீர்களென்றால், இன்னும் நம்பிக்கை இருக்கிறதென்றே சொல்ல வேண்டும். மனச்சாட்சிக்கு விரோதமாயும், பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாயும் இயேசுவின் அன்புக்கு விரோதமாயும் நீங்கள் பாவம் புரிந்திருப்பினும், மனந்திரும்புதலுக்கு இன்னும் இடமுண்டு. இஸ்ரவேலைப்போல், நம்பாத கடின இருதயமுள்ளவர்களாய் இருந்தாலும், இயேசு உயர்த்தப்பட்டு, எல்லையற்ற அதிகாரத்தைக் கொண்டிருப்பதால், உங்கள் இருதயம் மென்மையாக இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அக்கிரமத்தின் ஆழத்துக்கே போய், பாவத்தின் மோசநிலையை எய்தியுள்ளவர்களுக்கும்கூட பாவமன்னிப்பையும் மனந்திரும்புதலையும் வழங்க ஆண்டவர் உயர்த்தப்பட்டிருக்கிறார். இத்தகைய நிறைவான சுவிசேஷத்தை அறிவிப்பதில் நான் மகிழ்வுறுகிறேன்! அதைச் செவிமடுக்கும் நீங்களும் பாக்கியசாலிகளே!
இஸ்ரவேல் மக்களின் இருதயங்கள் அசையமாட்டாத கல்லைப்போல் கடினப்பட்டிருந்தன. ஒரு யூதனை மனந்திரும்பச் செய்தல் மிகக் கடினமென்பது லூத்தரின் கருத்து, அவர் கருத்தை நாம் ஏற்க மறுத்தாலும், இத்தனை நூற்றாண்டுகளில் இஸ்ரவேலின் வழிவந்தவர்கள் இரட்சகரை அங்கீகரிக்கப் பெரும் பிடிவாதம் காட்டுவதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். ‘இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை” என்று கர்த்தர் கூறியது மெய்யே! ‘அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்றாலும், இஸ்ரவேலின் சார்பில் மனந்திரும்புதலையும் மன்னிப்பiயும் தந்தருளும்படி நமது ஆண்டவர் மேன்மையுற்றிருக்கிறார். ஒருகால் என் வாசகர் அநேக ஆண்டுகளாக ஆண்டவரான இயேசுவுக்கு விரோதமாக மிகப் பிடிவாதத் தன்மை பொருந்தியவராயிருக்கலாம். அவரிலும்கூட ஆண்டவர் மனந்திரும்புதல் ஏற்படுமாறு செய்யக்கூடும்.
ஆண்டவர், நினைக்கக்கூடாத மக்களுக்கு மனந்திரும்புதலை ஈந்து, சிங்கங்களை ஆட்டுக்குட்டிகளாகவும், காகங்களை புறாக்களாகவும் மாற்ற வல்வராயுள்ளார். இத்தகைய பெரும் மாற்றம் நம்மில் ஏற்பட நாம் அவரை நோக்குவோமாக. மனந்திரும்புதலைப் பெற, கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்துத் தியானித்தல் விரைவான வழியும் நிச்சயமான பாவ சுபாவமென்பதில் ஐயமில்லை. உடனே உட்கார்ந்து, பாவ சுபாவமெனும் வறண்ட கிணற்றிலிருந்து மனந்திரும்புதலை இறைக்க முயற்சிக்காதீர்கள். அந்தக் கிருபையான நிலைமைக்குள் உங்கள் ஆத்தமாவை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்துவிட முடியுமென எண்ணுவது சிந்தைக்கடுத்த சட்டங்களுக்கு விரோதமானது. இதயத்தைப் புரிந்து கொள்பவரிடம் அதை ஏறெடுத்து, ‘ஆண்டவரே, இதைச் சுத்திகரியும். ஆண்டவரே இதைப்புதுப்பியும், ஆண்டவரே இதில் மனந்திரும்புதல் ஏற்படக் கிரியையாற்றும்” என்று ஜெபியுங்கள். வியாகுல உணர்ச்சிகளையெழுப்ப நீங்கள் எவ்வளவு முயற்சிக்கிறீர்களோ, அவ்வளவு ஏமாற்றமுறுவீர்கள். ஆனால் இயேசு உங்களுக்காக மரித்தாரென்பதை நீங்கள் விசுவாசத்துடன் சிந்தித்தீர்களெனில் மனந்திரும்புதல் குமுறியெழும். உங்கள்மீதுள்ள அன்பால் தம் இதய இரத்தத்தை ஆண்டவர் சொரிந்ததுபற்றி எண்ணமிடுங்கள். உங்கள் மனக்கண்முன், வேதனையால் வெளிப்பட்ட இரத்த வியர்வை, சிலுவை, சிலுவைப்பாடுகள் இவற்றை நிறுத்திக் காணுங்கள். நீங்கள் அவ்விதமிருக்கiயில், இத்துயர் யாவையும் சுமந்த அவர் உங்களை நோக்கி, அந்தப் பார்வையால் அவர் பேதுருவுக்குச் செய்ததுபோல் உங்களுக்கும் செய்யுங்கால், நீங்களும் சென்று மனங்கசந்து அழுவீர்கள். உங்களுக்காக மரித்தவர் தமது கிருபை நிறைந்த ஆவியால், நீங்கள் பாவத்துக்கு மரிக்கும்படிச் செய்வார். உங்கள் சார்பில் மகிமையில் பிரவேசித்திருக்கிறவர் உங்கள் ஆத்துமாவைத் தீமையினின்றும் விலக்கி, பரிசுத்தத் தன்மைக்கு நேராகத் தம்முடன் கூட உங்களை அழைத்துச் செல்வார்.
பின்வரும் ஒரு கருத்தை உங்களிடம் கூறுவதில் நான் திருப்தியுறுகிறேன். நெருப்பைக் கண்டுபிடிக்க பனிக்கட்டியின் கீழ் தேடாதீர்கள். அதேவிதமாக, மனந்திரும்புதலைச் சுய உள்ளத்தில் காண்போமென்று கனவு காணாதீர்கள். ஜீவனுக்காக ஜீவித்திருப்பவரை நோக்கிப்பாருங்கள். நரக வாசலுக்கும் பரத்தின் வாசலுக்குமிடையே உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் பெற இயேசுவை ஏறிட்டுப் பாருங்கள். இயேசு வழங்க விரும்பும் எந்த வரத்தின் ஒரு பாகத்தையும் வேறெந்த இடத்திலும் நாடாதீர்கள். ஆனால் இதை மனதில் வையுங்கள்.
‘கிறிஸ்துவே எல்லாமுமாயிருக்கிறார்”











