- வீழ்ச்சி பற்றிய திகில்
கிறிஸ்துவிடம் வருவோர் பலரின் சிந்தையை ஒருவித திகில் பற்றிக் கொள்கிறது. தாங்கள் இறுதிமட்டும் விடாமுயற்சியுன் இருக்க முடியாதென அவர்கள் அஞ்சுகின்றனர். பின்வருமாறு ஒருவர் சொல்லக்கேட்டேன். ‘என் ஆத்துமாவை நான் இயேசுவிடம் தத்தம் செய்தபின், ஒருவேளை நாளடைவில் நான் நாசத்துக்குட்படலாம். இதற்குமுன் என்னிடம் நல்ல உணர்ச்சிகள் இருந்ததுண்டு. ஆனால் அவை யாவும் மறைந்து விட்டன. என்னிடம் தோன்றிய நன்மை விடிகாலை மேகம்போலவும் காலை நேரப் பனி போலவும் இல்லாமல் போயிற்று. அது தீடீரென்று தோன்றி, ஒருபருவ காலம் மட்டும் நிலைத்து, அதிகமாய் எதிர்பார்க்கும்படி செய்து பின் மாயமாய் மறைந்துவிட்டது.
என் வாசகரே, இந்த அச்சம் அநேகமாக உண்மையின் தந்தையாயிருக்கலாம். வாழ்நாள் முற்றிலுமாக, என்றென்றுமாக, இயேசுவைச் சார்ந்திருக்க அஞ்சிய சிலர் தற்காலிகமான விசுவாசம் கொண்டிருந்து அது அவர்களை இரட்சிக்கும் அளவுக்கு நீடிக்காததால் தோல்வியுற்றனரென்று நான் கருதுகிறேன். ஓரளவுக்கு இயேசுவை நம்பி அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்தாலும், பரலோக வழியில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செல்லத் தங்களையே நம்பி முன்னேறுவதால், அவர்கள் தவறுதலாக ஆரம்பித்ததன் விளைவாக அதிசீக்கிரத்தில் திரும்பிவிடுகின்றனர். தொடர்ந்து பற்றியிருக்க நாம் நம்மையே நம்புவதாயின், நாம் தொடர்ந்து பற்றிக்கொண்டிருறோம். நமது மீட்பின் ஒரு பகுதிக்காக நாம் இயேசுவைச் சார்ந்திருப்பினும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாம் நம்மையே நம்பியிருந்தால் தோல்வியுறுவோம். ஒரு சங்கிலியின் ஓரிணைப்புத் தளர்ந்திருந்தாலும், சங்கிலி வலுவாயிராது. ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் இயேசு நம் நம்பிக்கையாயிருந்தால், அந்த ஒரே காரியத்தினிமித்தம் நாம் ஒன்றுமில்லாதவர்களாகக் கூடுமாதலின் நாம் முற்றுமாய்த் தோல்வியுறுவோம். பரிசுத்தவான்களின் விடாமுயற்சியைப் பற்றிய ஒரு தவறு, நன்றாய் ஓடின அநேகரின் விடாமுயற்சிக்குத் தடையாய் அமைந்தது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்கள் தொடர்ந்து ஒடாதபடிக்கு அவர்களுக்குத் தடையாயிருந்ததென்ன? அந்த ஓட்டத்துக்கு அவர்கள் தங்களையே நம்பியதால், மேற்கொண்டு ஓடாமல் நின்றுவிட்டனர். நீங்கள் கட்டப்பயன்படுத்தும் காதையில், சிறிதளவு சுயத்தையும் சேர்க்காதபடி எச்சரிக்கையாயிருங்கள். இல்லையேல் அந்தக் காரைக் கலவை கற்கள் இறுகப்பற்றிக்கொள்ளாதபடிச் செய்துவிடும். உங்கள் ஆரம்பங்களுக்கு நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தால் உங்கள் முடிவுகளுக்கு நீங்கள் உங்களையே சார்ந்திராதபடி கவனமாயிருங்கள். அவரே அல்பா. அவரையே ஓமேகாவாகவும் ஏற்கவும் பாருங்கள். ஆவியில் நீங்கள் ஆரம்பித்தபின், மாம்சத்தால் பூரணமாகிவிடலாமென்ற வழியில் ஆரம்பித்து, நீங்கள் ஆரம்பித்தபடியே போய், உங்களில் கிறிஸ்துவே எல்லாவற்றிலும் எல்லாமுமாயிருக்கப் பாருங்கள். நம் ஆண்டவர் வரும் நாள் வரை நாம் பாதுகாக்கப்பட அவசியமான பெலன் எங்கிருந்து வருமென்பதைக் குறித்து, பரிசுத்த ஆவியானவரான தேவன், நமக்கு ஒரு தெளிவான கருத்தை வெளிப்படுத்தினால் எவ்வளவு நலமாயிருக்கும்! இப்பொருள்பற்றி ஒருமுறை கொரிந்தியருக்கு எழுதிய அப்போஸ்தலனான பவுல் பின்வருமாறு கூறுகிறார். ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்” 1.கொரி.1:8-9.
ஒரு பெரும் தேவையை அமைதியோடு ஓப்புக்கொள்வதுடன், அது எவ்விதம் கிடைக்குமென்பதையும் இந்த அறிவிப்பு நமக்குக் கூறுகிறது. தேவன் வசதிகளை ஏற்படுத்தியிருக்கும் இடங்களிலெல்லாம் அதற்கு அவசியம் இருந்ததென்பதை நாம் நிச்சயமாய் அறியலாம். ஏனெனில் கிருபையின் உடன்படிக்கையில் அனாவசியமானவை இடம்பெறுவதில்லை. ஒருபோதும் பயன்படுத்தப்படாத தங்கக் கேடயங்கள் சாலொமோன் அவையில் இருந்ததுண்டானாலும், தேவனின் கவசத்தில் அத்தகையதொன்றும் இருந்ததில்லை. தேவன் குறிப்பிட்டிருப்பது நமக்குத் திட்டமாகத் தேவைப்படும். இந்த வேளைக்கும் சகல காரியங்களும் நிறைவேறும் காலத்துக்கும் இடையில், தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தமும், கிருபையின் உடன்படிக்கை அம்சங்கள் யாவும் உபயோகத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும். விசுவாசிக்கும் ஆத்துமாவின் அவசர தேவை உறுதிப்படுத்துதலும், தொடர்ந்திருத்தலும், இறுதிவரை முயற்சித்தலும், முடிவுபரியந்தம் பாதுகாக்குப்படலுமேயாம். மிக முன்னேற்றமடைந்த விசுவாசிகளுக்கு இது பெரும் தேவையாயிருக்கிறது. ஏனெனில், இயேசு கிறிஸ்து மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவ கிருபைக்காக நான் உங்களைக் குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் என்று பவுல் அப்போஸ்தலன் சொல்லக்கூடிய, சீலத்தில் உயர்ந்த கொரிந்து பட்டணத்து பரிசுத்தவான்களுக்கு இவ்வாறு எழுதப்பட்டது. அப்பேர்ப்பட்டவர்கள்தாம், தாங்கள் பற்றிக்கொண்டிருக்க வேண்டுமென்றாலும், இறுதிவரை அந்நிலையில் இருக்க வேண்டுமென்றாலும், முடிவில் வெற்றிக் காணவேண்டுமென்றாலும், புதிய கிருபையின் தேவை தங்களுக்கு அன்றாடம் உள்ளதென்றும் அதி நிச்சயமாக உணருபவர்கள். நீங்கள் பரிசுத்தவான்களாயிராவிட்டால் உங்களுக்குக் கிருபை இராததுடன், பெரும் கிருபை உங்களுக்கு அவசியமென்ற உணர்வும் உங்களுக்கு ஏற்படாது. ஆனால் நீங்கள் தேவனுடைய மக்களாய் இருப்பதினிமித்தம் ஆத்மீக வாழ்வின் அன்றாடத் தேவைகளை உணருகிறீர்கள். பளிங்குச் சிலைக்கு உணவு தேவையில்லை. ஆனால் உயிரோடிருக்கும் மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்படுவதால், தனக்கு அப்பமும் நீரும் கிடைப்பது நிச்சயமென்று மகிழ்கிறான். இல்லையேல் அவன் மயங்கி வீழ்வது திண்ணம். விசுவாசியின் சுயதேவைகள் ஆசீர்வாத ஊற்றிலிருந்து அவன் அநுதினமும் பெறுவதைத் தவிர்க்க முடியாதபடி உள்ளன. தவிர, அவன் தன் தேவனை அணுகாமல் வேறென்ன செய்வான்?
அரிய தாலந்துகள் பெற்றிருந்தும் பரிசுத்தவான்களின் வாழ்க்கையிலும் இது உண்மையே. வாக்கு சாதுரியத்திலும் சகல அறிவிலும் மேம்பட்டிருந்து கொரிந்து பட்டணத்தார் காரியமும் இவ்விதமே இருந்தது. அவர்களுடைய வரங்களும் திறமைகளும் அவர்களுடைய அழிவுக்குக் காரணமாயிராதபடி திறமைகளும் அவர்களுடைய அழிவுக்குக் காரணமாயிராதபடி முடிவுபரியந்தம் அவர்களுக்குத் திடப்படுத்துதல் அவசியமாயிருந்தது. நாம் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் கொண்டிருந்தாலும், புதிய அருளைப் பெறாதவர்களாயிருந்தோமாயின், நாம் எந்நிலையில் இருப்போம்? தேவனைப் பற்றிய சகல இரகசியங்களையும் புரிந்துகொள்ளத் தக்கதாக நாம் போதிக்கப்பட்டிருப்பினும், நமது உடன்படிக்கை தலைவரிடமிருந்து தெய்வீக ஜீவன் நம்மில் பாய்ந்தபடி இராவிட்டால் நம்மால் ஓரு தினம் கூட ஜீவிக்க முடியாது. நம்மில் நல்ல பணியைத் துவங்கினவர் கிறிஸ்துவின் நாள் மட்டும் நம்மில் அதை நிறைவேற்றிக்கொண்டிராவிடில், வேதனை தரும் தோல்வியையே காண்போம்.
இப்பெருந்தேவை நம்மிலிருந்தே அதிகமாய் எழுகிறது. தாங்கள் சலனபுத்தியுள்ளவர்கள் என்பதை அறிந்திருப்பதால், கிருபையில் தொடர்ந்து வளருவோமாக என்னும் அச்சம் சிலருக்கு இருந்து வருகிறது. சிலர் இயல்பாகவே திடமனமற்றவர்கள். சிலர் புதிய கருத்துக்களை ஏற்க விரும்பாதவர்களாயிருப்பர். பிடிவாதமென்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் மற்றவர்கள் நிர்ணயமற்றவர்களாயும் மாறுகிற தன்மையுடையவர்களாயுமிருப்பர். ஒன்றிலும் அமராமல், தோட்டத்தின் சகல எழில்களையும் சுற்றிக் காணும் வண்ணத்துப் பூச்சிகள்போல் அவர்கள் மலருக்கு மலர்தாவிச் செல்வர். ஏதாவது ஒரு நன்மையை ஆற்றும்படி போதுமான நேரத்துக்கு அவர்கள் எந்த இடத்திலேனும் தங்குவதில்லை. அவர்களுடைய தொழிலிலோ அல்லது அறிவுத்துறைகளிலுமோகூட அவர்கள் நிலைத்திருப்பதில்லை. அத்தகையோருக்கு பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று ஒருவேளை ஐம்பது ஆண்டுகள் வரைக்கும்கூட விடாமல் மார்க்க சம்பந்தமான எச்சரிப்புடன் வாழ வேண்டுமென்றால், அது அவர்களுக்கு அசாத்தியமாய்த் தோன்றும். மக்கள் ஒரு சபையிலிருந்து பிறிதொரு சபைக்கும், பின்னர் அங்கிருந்து வேறு சபைக்குமாக மாறிச் செல்வதைக் காண்கிறோம். திருப்பங்களில் வளைந்துகொண்டிருப்பதில்லை அவர்கள் திறமையுள்ளவர்களாயிருந்தாலும் எதிலும் நீடித்திருப்பதில் அக்கறையற்றவர்களாயுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் இருக்கும்படி அவர்களுக்கு இரட்டிப்பு ஜெபம் தேவைப்படுகிறது.
நாம் மெய்யாகவே தேவனால் உயிர்ப்பிக்கப்பட வேண்டுமெனில், நம் சொந்தப் பெலவீனத்தை உணரவேண்டும். பிரிய வாசகரே, நீங்கள் தடுமாறும் அளவுக்கு, ஓரே நாளில் பல நிகழ்ச்சிகள் நேரிடுவதில்லையே? பூரண புனிதத் தன்மையில் நடக்க வேண்டுமென்று விரும்பும் நீங்கள், அடிக்கடி அறிவீனமாக நடந்துகொண்டு விடுவதில்லையே? தவசிபோல் தனியாய் நம்மையே உலகத்தினின்று விலக்கிக்கொண்டாலும், நம்மைச் சோதனை தொடரும். ஏனெனில், நாம் நம்மிலிருந்து தப்பமுடியாதவரை, பாவத்தின் தூண்டுதலினின்றும் நாம் விலக முடியாது. நம் உள்ளத்திலிருப்பது நம்மை எச்சரிப்புள்ளோராகச் செய்து, தேவனுடைய சமூகத்தின் முன் நம்மைத் தாழ்த்தும்படி ஏவவேண்டும். அவர் நம்மை உறுதிப்படுத்தாவிடில், பலவீனராயிருக்கும் நாம் தடுமாறி விழுவோம். எதிரி ஒருவனால் நாம் இடறாமல் நமது சுய கவலையீனத்தினாலேயே விழுவோம்.
அத்துடன்கூட, நீண்ட ஜீவியத்தினால் ஏற்படும் சோர்வும் ஒரு காரணமாயுள்ளது. நாம் நமது கிறிஸ்தவப் பணியை ஆரம்பிக்கையில் கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்பி இளைப்படையாமல் ஓடுகிறோம். நமது சிறந்த நாட்களில் நாம் சோர்வுறாது நடக்கிறோம். நாம் காலடி எடுத்து வைக்கும்விதம் மெதுவாயிருந்தாலும், இன்னும் உதவுகிறதால், இன்னும் உதவுகிறதால், விழாமல் நிறுத்துகிறதாயுமுள்ளது. நமது இளமையின் சக்தி மாம்சத்தின் பெருமையெனும் நுரைத்துப் பொங்குதலாயிராமல், ஆவியானவரின் சக்தியாயிருப்பதால், அது நம்மோடு தொடர்ந்து இருக்க வேண்டுமென்று ஆண்டவரிடம் கோருகிறேன்.
பரலோகத்தின் பாதையில் நீண்ட காலமாய்ச் சென்று கொண்டிருப்பவன். வழி கரடுமுரடாயிருப்பதினிமித்தமே தன் பாதரட்சைகள் இரும்பும் வெண்கலமுமாயிருக்குமென வாக்கருளப்பட்டுள்ளதென்று அறிந்துகொள்கிறான். சிரமம் எனும் குன்றுகளும் தாழ்த்துப்படுதல் என்னும் பள்ளத்தாக்கும் இருக்கின்றனவென்பதை அவன் கண்டு பிடித்திருக்கிறான். கடந்து போவதற்கு மரண நிழலெனும் பள்ளத்தாக்கும், அதைவிட மோசமான போலிச் சந்தையும் உள்ளனவென்று அவன் உணர்ந்துள்ளான். இன்பமூட்டும் மலைகள் உள்ளனவென்றால், யாத்ரீகர்கள் அடிக்கடி உள்ளே சென்று பார்த்திருக்கும் வியாகுல மாளிகையில், பரிசுத்தத் தன்மையில் இறுதிமட்டும் பற்றிக்கொண்டு நடக்க வல்லவர்களை அடையாளமாயிருக்கிற புருஷர் எனலாம்.
ஒரு கிறிஸ்தவனின் ஜீவிய நாட்கள், தெய்வீக விசுவாசமெனும் தங்க நாணில் கோர்க்கப்பட்ட இரக்கமெனும் பல கோகினூர்கள் போன்றுள்ளன. நாம் பூலோகத்திலிருக்கை நமக்காய்ச் செலவழிக்கப்பட்டவையும் நம்மால் அனுபவிக்கப்பட்டவையுமான கிறிஸ்துவின் காணக்கிடைக்காத ஐசுவரியங்களைக் குறித்து, நாம் பரலோகத்தில் தேவ தூதர்களிடமும், துரைத்தனங்கள் அதிகாரங்களிடமும் கூறுவோம். மரணத்தின் எல்லையிலும்கூட நம் உயிர் காக்குப்பட்டுள்ளது. ஆழியின் நடுவிலே எரிந்துகொண்டிருக்கும் சுடர்போல், அந்தரத்தில் நிற்கும் கல்லைப்போல், நமது ஆத்தும வாழ்வு இருந்து வந்திருக்கிறது. நமது ஆண்டவரான இயேசு கிறிஸ்துவின் நாளில் நாம் குற்றமற்றவர்களாய்ப் பொன்னகர் வாயிலில் பிரவேசிப்பதைக் கண்டு பூவுலகமே பிரமிக்கும். ஒரு மணி நேரம் நாம் பாதுகாக்கப்பட்டிருப்பினும்கூட, அதற்காக நாம் நன்றியும் அதிசயமும் மேலோங்கியவர்களாய் இருத்தல் வேண்டும்.
இவை மட்டுமேயெனில், நம் கவலைக்குப் போதுமான காரணங்கள் உள்ளன. ஆயினும் இவைதவிர, வேறுபலவுண்டு. நாம் எத்தகைய இடத்தில் வாழ்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். தேவனுடைய மக்களில் பலருக்கு உலகமானது ஓலமிடும் பாலைப்போல் உள்ளது. நம்மில் சிலருக்கு அவ்வப்போது தேவ கிருபை கிட்டுவதாயினும், வேறு சிலர் அதற்காகக் கடும் போராட்டம் நிகழ்த்த வேண்டி நேரிடுகிறது. ஜெபத்துடன் நாம் அந்தந்த நாளை ஆரம்பிப்பதால் அடிக்கடி நம் வீடுகளில் புனித கீதம் ஒலித்துக்கொண்டிருப்பதை நாம் கேட்கிறோம். ஆனால் அநேகர் தாங்கள் மண்டியிட்டிருந்த நிலையிலிருந்து காலையில் எழு முன்னரே வசைச் சொற்களை வரவேற்பாக ஏற்க நேரும். அவர்கள் வெளியே வேலைக்குச் சென்றதும், சோதோமிலிருந்த நீதிமானான லோத்தைப்போல் நாள் முழுவதும் அருவருப்பான உரையாடலைச் செவிமடுத்து மனம் வெதும்பிப்போகின்றனர். தகாத மொழிகளைக் கேட்காமல் என்றாவது நீங்கள் வீதிகளில் நடந்து செல்லமுடிகிறதா?
உலகம் கிருபைக்கு நண்பனல்ல. நாம் சத்துருவின் நாட்டில் வசிப்பதால், இவ்வுலகில் நாம் நம் நாட்களைக் கடிதில் ஓட்டிவிடுவதுதான் நம்மால் செய்யக்கூடிய சிறந்த காரியமாகும். ஒவ்வொரு புதரிலும் ஒரு கள்ளன் மறைந்திருக்கிறான். உருவிய வாளுடனோ அல்லது சகல விதமான வேண்டுதல் எனும் ஆயுதத்துடனோ நாம் எங்கும் பிரயாணம் செய்யவேண்டியுள்ளது. ஏனெனில் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு அங்குலதூரத்திலும் நமக்கு ஒரு எதிர்ப்பு இருக்கும். இதை நீங்கள் ஆமோதிக்கவில்லையெனில், நீங்கள் காணும் இன்பக் கற்கனையிலிருந்து பலாத்காரமாகக் கலைக்கப்படுவீர்கள். தேவனே, எங்களுக்குச் சகாயம் புரிந்து, இறுதிமட்டும் எங்களை உறுதிப்படுத்தியருளும்.
மெய்மார்க்கம் ஆரம்பத்திலும், தொடர்ச்சியிலும் இறுதியிலும் இயற்கைக்குப் புறம்பானதாயுள்ளது. முதலிலிருந்து முடிவுவரை அது தேவனுடைய செயலாயிருக்கிறது. தேவனுடைய கரம் இன்னும் நீள வேண்டுமென்ற பெருந்தேவை இருக்கிறது. அத்தேவையை என் வாசகர் இப்போது உணருவதால் நான் களிப்புறுகிறோன். காரணம், நாம் இடறாதபடி நம்மைக் காக்க வல்லவரும் தம் குமாரனோடு நம்மை மகிமைப்படுத்தக் கூடியவருமான தேவனிடம், தன் சுயபாதுகாப்புக்கு வாசகர் இப்போது உதவி நாடுவாரென்ற நிச்சயந்தான்.











