• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்

April 5, 2016
in அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்

மூழ்கிக் கொண்டிருக்கிறவர்கள், மரித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆபத்திலிருப்பவர்;கள் தேவனை நோக்கி கூப்பிட கஸ்டப்படுவதில்லை எப்படி இயற்கையாக சுவாசிக்கிறோமோ அதுபோல் தான் இதுவும். மனசாட்சியானது இலகுவாகும்போது ஜெபமானது ஒரு உற்சாகமற்றதாக இராமல் தேவன் ஒருவரே செய்ய முடியும் என்ற ஆளமான மன பாரத்தோடு ஓ… தேவனே, தயவு செய்து எனக்கு உதவும் என்பது ஜெபமாக இருக்கிறது. அவர்கள் எப்படி ஜெபம்பண்ணுவது என்று கற்றுத்தர யாரையும் அணுகவில்லை, ஆனால் அவர்கள் ஜெபித்தார்கள். கிறிஸ்தவர்கள் பொதுவாக, அவர்கள் ஆவிக்குரிய ஒழுங்குகளில் அவர்களின் ஜெபவாழ்க்கை பலவீனமானது என்று ஒத்துக்கொள்வார்கள். ஆவிக்குரிய செயலின் வெற்றி ஜெபத்தை சார்ந்துள்ளது என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அதேசமயம் அவர்கள் தோல்வி ஜெப வாழ்க்கையில் உள்ள பற்றாக்குறை என்பதையும் அறிக்கையிடுவார்கள். எல்லாரும் ஜெபித்தாலும், ஜெபமனிதர்கள் சிலபேர்தான் உள்ளனர்.

கர்த்தரின் ஜெபப்பாடசாலை

சீஷர்கள் ஜெபத்தில் குறைவுள்ளவர்கள் என்று தங்களைக்கண்டு ஆண்டவரே யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ண போதித்ததுபோல நீரும் எங்களுக்கு போதிக்க வேண்டும் என வேண்டினார்கள் (லூக்.11:1). கிறிஸ்து ஜெபம் பண்ணுவதை கவனித்த சீஷர்கள் இவ்வேண்டுகோளை விடுவிக்கின்றனர். அவர்கள், கிறிஸ்து ஜெபத்தில் நாள்தோறும் உறுதியாய் தரித்திருப்பதை உணர்ந்தார்கள். அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து ஜெபம்பண்ணப்போனார் (மாற்.1:35). சில சமயம் அவர் இராமுழுவதும் ஜெபம்பண்ணினார் (லூக்.6:12) அவர் சீஷர்களுடைய நலனுக்காகவும், பிறருடைய நலனுக்காகவும் ஜெபம்பண்ணினார் (யோ.17) ஜெபமானது கிறிஸ்துவின் வாழ்க்கையில் அவசரகால தேவையாக இருக்கவில்லை ஆனால் அது அவரின் வாழ்கை முறையாகவே இருந்தது. சோர்ந்து போகாமல் சீஷர்கள் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்று கிறிஸ்து விரும்பினார் (லூக்.18:1). அவரின் ஜெபப்பாடசாலையிலே ஒவ்வொரு நாளும் சொல்லாலும், செயலாலும், பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர் கூறினார்: கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் (மத்.7:7) தொடர்ச்சியாக உறுதியாக வேண்டுகோளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கேளுங்கள், கேட்டுக்கொண்டே இருங்கள். தட்டுங்கள் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருங்கள் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகிறது. இக்கருத்தை வலியுறுத்துவதற்காக, பாதிராத்திரியிலே தன் சிநேகிதனின் வீட்டின் கதவை தொடர்ந்து தட்டிய மனிதனின் கதை கூறப்பட்டுள்ளது (லூக்.11:5-9).

தேவன் எப்பொழுதுமே விசுவாசிகள் தன்னை நோக்கி கூப்பிடவேண்டும் என்று அழைக்கிறார் (எரே.33:3) கர்த்தராகிய இயேசு இவ் அழைப்பை விசாலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் உள்ளார், எப்படியெனில் இதை அவரோடு தொடர்புபடுத்தியுள்ளார். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் (யோ.15:7) நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள் (யோ.16:23-24). இவ் அழைப்பு நம்பத்தகுந்தாக இல்லை, ஆனால் தேவன் பொய்யுரையாதவர் (தீத்து1:3) அவர் கூறியதை விசுவாசியாதவன், அவரை பொய்யராக்குகிறான் (1.யோ.5:10) தேவன் சத்தியபரர், எந்த மனிதனும் பொய்யன் (ரோ.3:4) ஆர்.எ.டோறி எழுதினார் ஜெபம் என்பது, பரலோக வங்கிக்கு செல்வதாகும். அவ்வங்கியில் உலகில் உள்ள எந்த வங்கியைக்காட்டிலும் அதிக மூலதனம் உள்ளது.

தேவனோடு அளவளாவுதல்

ஜெபம் என்றால் என்ன? இங்கு பிரபலமான, ஆனால் சரியற்ற பல கருத்துக்களைப் பார்ப்போம். சிலர் ஜெபத்தை மனரீதியான ஒரு சாதாரண செயல் என காண்கின்றனர். சில மருத்துவ நிலையங்களில் ஜெபமானது மனம் மற்றும் சரீரத்தின் மீது விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெபமானது உணர்ச்சிகளின் ஆதாரம் என்று இன்னும் சிலர் கருதுகின்றனர். சிலர் ஜெபத்தை மூடநம்பிக்கையாகக் கருதுகின்றனர். பரிசுத்த வேதத்தில் உள்ள தேவனைப் பற்றி சிறிது அறிவுள்ளவர்களுக்கு ஜெபமானது கண்கட்டு வித்தையைப்போல் உள்ளது. மந்திரவாதியாலோ, பூசாரியாலோ அல்லது போலியான பக்திமான்களாலோ ஜெபம் செய்தால் ஒரே மாதிரியான செயலை செய்யும் என நம்புகின்றனர். சிலருக்கு ஜெபம் மனப்பாடம் செய்து அதை திரும்ப திரும்ப கூறுவதாக இருக்கிறது. இங்கு கூறப்பட்டுள்ள எந்த கருத்துமே அறிவுபூர்வமாக உண்மையான தேவனோடு உரையாடுவதைக் குறிக்கவில்லை. இக் கருத்துக்குள், தேவன் கேட்கும் சக்தி படைத்தவர் இடைப்படக்கூடியவர், ஜெபத்தினால் செயற்படுபவர் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கக் கூடியதாயிருக்கிறது.

வேதவாக்கியங்களில் தேவன் வெளிப்படுத்தியிருக்கிறதின் அடிப்படையில் அவரோடு நேரடியாக அளவளாவுதலே ஜெபம். இது கர்த்தரிடத்தில் ஆத்துமாவை உயர்த்துவதாகவும் (சங்.25:1) கடினமான நிலையிலிருந்து முறையீடுதலாகவும் இருக்கிறது (யாத்.2:23 , சங்..5:2 , 18:6) கமரோன் தாம்சன் இவ்வாறு எழுதியிருக்கிறார் ஜெபம் என்பது நம்முடைய, மற்றும் பிறருடைய இயலாமையைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவினுடைய அன்பான கண்களுக்கு முன்பாககொண்டு வருதலாகும். அவர் அனைத்தையும் அறிந்தவராகவும், கரிசனையுள்ளவராகவும், பதிலளிக்கிறவருமாக இருக்கிறார். ஜெபமானது தேவனைப் பற்றிய ஆவியின் சுவாசமும் வாஞ்சையுமாயிருக்கிறது. ஜெபமானது தேவனுடைய களஞ்சியத்தை திறக்கிற சாவி என்று அழைக்கப்படுகிறது. நம்முடைய தேவைகளை தேவனுக்கு தெரியப்படுத்துவதல்ல ஜெபம். ஏனென்றால், நாம் வேண்டிக்கொள்வதற்கு முன்னமே அவைகளை அவர் அறிந்திருக்கிறார் (மத்.6:8 , லூக்.12:30). தேவனுடைய நித்திய நோக்கத்தை மாற்றுவதல்ல ஜெபம், ஆனால் அவரின் நித்திய நோக்கத்தோடு ஒத்திருப்பதே ஜெபமாகும். நம்முடைய விசுவாசத்தின் மூலமாக அவர் செயற்படுகிறார். உண்மையில், ஜெபமானது மெய்யான விசுவாசத்தின் செயலாகும். தேவனை பற்றிக் கொள்வதற்கு ஜெபமானது ஒரு கருவியாக அனுமதிக்கப்பட்டுள்ளது (ஏசா.64:7) சில நேரங்களில் நாம் நினைக்கிறோம், ஜெபமானது கேட்கிறதாக மட்டும் இருக்கிறது என்று , ஆனால் அது இன்னும் பரந்தபகுதியை உடையதாகவும் இருக்கிறது. இங்கு ஜெபத்தின் முக்கியத்தன்மைகளைப் பார்ப்போம்.

1) புகழ்தல்

அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடு பிரவேசியுங்கள் (சங்.100:4) என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. தேவனுடைய சமூகத்திலே வர நல்ல வழி என்ன? கர்த்தரைத் துதியுங்கள் அல்லது இதற்கு இணையான எபிரெயசொல் அல்லேலூயா என்பது சங்கீதங்களில் அதிக இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவன் தொழுதுகொள்ளுகிறவர்களை விரும்புகிறார் என இயேசு சமாரிய ஸ்திரிக்குப் போதித்தார் (யோ.4:23). தொழுதுகொள்ளுதல் என்பது தேவன் எப்படிப்பட்டவர் என்பதை பற்றியதாகும். நமக்கு அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியதல்ல. இக்கருத்து இன்றைய ஏராளமான விசுவாசிகளுக்கு தெரியவில்லை. ஆராதனையில் தேவனுக்கு கொடுத்தல் மட்டுமே பங்குபெறும், அவரிடத்தில் பெற்றுக்கொள்ளுதல் அல்ல (சங்.96:8). என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது என்று மரியாள் பாடினார் (லூக்.1:46). மகிமைப்படுத்தல் என்பது உயர்வாக கூறுதலாகும் (சங்.34:3). துதி பொருளுள்ளதாக அமைய தேவனுடைய பலவித நாமங்களைக் (பெயர்களை) கற்றுக் கொள்ளுங்கள்.

2) ஸ்தோத்தரித்தல்

தேவனுடைய சமூகத்தில் பிரவேசிக்கின்ற பொழுது துதியோடு, ஸ்தோத்திரமும் உடன் வருகிறது (சங்.100:4 , 95:2) கர்த்தருடைய ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெற்றபிறகும் கூட, இரட்சிக்கப்படாத இவ்வுலகம் அவருக்கு நன்றியற்றதாகவே இருக்கிறது (ரோ.1:21). இயேசு ஒரே சமயத்தில் பத்து குஸ்டரோகிகளை சுகமாக்கினார், ஆனால் ஒருவன் மட்டுமே அவருக்கு நன்றி கூறினான். சுத்தமானவர்கள் பத்துபேர் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக்.17:17) என இயேசு வினவினார், அவர் நமக்கு செய்த ஒவ்வொரு ஆசீர்வாதங்களையும் நினைக்கவேண்டும். அவைகளில் சரீரப்பிரகாரமான ஆசீர்வாதங்கள், அவரின் பிள்ளைகளோடுள்ள ஐக்கியம், ஆகியவை அடங்கும். கஷ்டங்கள் கூட இருக்கலாம், என்றாலும் தேவன் அக்கஷ்டங்களை நம்முடைய ஆசீர்வாதமாக்குகிறார் (ரோ.8:28). எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள் (1.தெச.5:18 , எபே.5:20) ஸ்தோத்திரம் செலுத்துதல் ஆசீர்வாதங்களைப் பெற வழிவகுக்கிறது.

3) அறிக்கையிடல்

நம்முடைய தேவன் பரிசுத்த தேவன், எவையெல்லாம் நம்முடைய சிந்தைகளையோ அல்லது செயல்களையோ அசுத்தப்படுத்துகிறதோ அவைகள் ஐக்கியத்திற்கும் நம்முடைய ஜெபங்களுக்கும் தடையாக இருக்கிறது (சங்.66:18). இப்படிப்பட்ட பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிட வேண்டும் (நீதி.28:13). நம்முடைய தோல்விகள், பாவசிந்தைகள், செயல்கள் ஆகியவை தேவனுக்கு முன்பாக உண்மையாயிருக்க வேண்டும். தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும் என்று சங்கீதக்காரன் வேண்டுகிறான் (சங்.139:23). பரிசுத்தரோடு நடக்க வேண்டுமென்றால், நமக்கு சுத்த இருதயம் தேவையாயிருக்கிறது. தேவனுக்கருகாமையில் இருத்தல் பாவத்தை குறித்து அதிகமாய் அறிவை தருகிறது (ஏசா.6:5). உண்மையாகவே உங்களுடைய பாவங்களையும், தோல்விகளையும் அறிக்கையிடும் பொழுது, அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் (1யோ.1:9).

4) பரிந்துபேசுதல்

பிறரைப்பற்றிய கரிசனையும், ஜெபம் காரியங்களை மாற்றும் என்கிற உறுதியும், நம்மை தேவனுக்கு நேராக ஜெபிக்க தூண்டுகிறது. பெயர்கள் அடங்கிய ஜெபமென பரிந்துபேசுதல் அழைக்கப்படுகிறது. மோசே தேவனோடு வல்லமையாக பரிந்து பேசியவன். தன்னுடைய சகோதரியாகிய மிரியாமையும், இஸ்ரவேலரையும் தேவனுடைய நியாயத்தீர்;ப்பிலிருந்து தப்புவிப்பதற்கு அவரிடத்தில் வேண்டுதல் பண்ணினான் (எண்.12:1-13 , யாத்.32:7-14). நம்முடைய கர்த்தராகிய இயேசு பிதாவினுடைய அருகிலிருந்து நமக்காக தினந்தோறும் பரிந்து பேசுகிறார் (எபி.7:25). புதிய ஏற்பாட்டு நிருபங்களில், சபைக்காகவும், தனிநபர்களுக்காகவும் செய்கின்ற விண்ணப்பங்கள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஒழுங்காக கர்த்தரிடத்தில் விண்ணப்பங்களை கொண்டு செல்ல, உறுதியாக பரிந்து பேசுகிறவர்கள், ஜெபக்குறிப்புக்களை வைத்திருப்பார்கள். நம்மை சுற்றியுள்ள இரட்சிக்கப்படாத அனேகருக்கும், நோயிலும், துன்பத்திலும், இருப்பவர்களுக்கும் நம்முடைய ஜெபம் தேவையாயிருக்கிறது. நம்முடைய ஜெபங்களில், கர்த்தருடைய பண்ணைகளில் ஊழியம் செய்ய ஊழியக்காரர்களை அனுப்பும்படிக்கு தேவனிடத்தில் வேண்டிக்கொள்வது மிக முக்கியமானதாக இருக்கிறது (மத்.9:37-38 , லூக்.22:31-32).

5) விண்ணப்பம் செய்தல்

அன்றன்றுள்ள தேவைகளை கர்த்தருக்கு முன்பாக கொண்டுவரவேண்டும் (மத்.6:11). ஆனால் நாம் அவைகளைப் பற்றிய கவலையில் அகப்பட்டு விடக்கூடாது (மத்.6:23-34). ஆவிக்குரிய விஷயங்கள் பற்றி விண்ணப்பம் பண்ணுதல் அவசியமாகும், கர்த்தருடைய வசனத்தை அறிகிற அறிவிற்காகவும் (சங்.119:34), அநியாயத்திலிருந்தும் மனிதர் செய்யும் இடுக்கண்ணிலிருந்து விடுதலைக்காகவும் (சங்.119:133-134) விண்ணப்பம் செய்யலாம். தினந்தோறும் உள்ள கடமைகளுக்கும், முக்கிய தீர்மானங்களுக்கும் நமக்கு வழி நடத்தல் தேவையாயிருக்கிறது. அடைக்கலான் குருவிகள் விழுவதையும், நம்முடைய தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணியிருக்கிறவராகிய தேவனுக்கு ஜெபத்தில் ஏறெடுக்கப்படுகின்ற எந்த விண்ணப்பமும் சிறியதாக இருப்பதில்லை (மத்.10:29-31).

ஜெபத்திற்கான நிபந்தனைகள்

ஜெபமானது ஜெபத்தினுடைய சட்டத்திற்குட்பட்டு இருக்கவேண்டும். இவைகள் வேதவாக்கியங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சில வேளைகளில் இவைகள் நாம் குழந்தை பருவத்தில் கற்றுக்கொண்ட, உணர்ந்து கொண்ட முறைகளுக்கு மாறாக இருக்கலாம். தேவனுடைய சத்தியத்தின்படி நாம் ஜெபிக்கின்றபொழுது, தேவனிடத்திலிருந்து நாம் நிச்சயமாக பதிலை எதிர்பார்க்கலாம். தேவனால் அளிக்கப்பட்ட விசேஷ சலுகை ஜெபம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது, அது ஒரு உரிமை அல்ல. சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்ட ஜெபத்தை தேவன் ஏற்றுக்கொள்கிறார் (ஏசா.66:2 , சங்.51:17) மேட்டிமை, அகந்தையான எந்த ஜெபமும் கர்த்தருக்கு விருப்பமில்லாததாக இருக்கிறது (1சாமு.2:3 , 15:23). ஜெபமானது எவ்வழியில் ஆசீர்வாதமான ஒரு சலுகை என்பதை இப்பொழுது பார்ப்போம்.

1) தேவனுடைய பிள்ளைகளின் சலுகை

விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தால் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள் (கலா.3:26) எல்லா தேவனுடைய பிள்ளைகளுக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கிறார். எல்லா இரட்சிக்கப்படாத ஜனங்களும் கீழ்ப்படியாமையின் மற்றும் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருக்கின்றனர் (எபே.2:1-3). இயேசுவின் இரத்தத்தால் மட்டுமே நாம் தேவனுடைய சமூகத்தில் தைரியமாக பிரவேசிக்க முடியும் (எபி.10:19). இது எல்லா மனிதனுக்கும் உள்ள உரிமை அல்ல பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிக்குப் போடுகிறது நல்லதல்ல என்று இயேசு கூறினார் (மத்.15.26 , மாற்.7:27). இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபங்கள் இருக்கவேண்டும் (யோ.14:13-14 , 15:16 , 16:23-26). அவர் மூலமாகத்தான் தேவனிடத்தில் சேரமுடியும் (யோ.14:6). தேவன் அவருடைய குமாரனில் மகிமைப்படுகிறார். இயேசுவின் நாமத்தில் என்கிற சொல்லை ஜெபத்தின் இறுதியில் பயன்படுத்துவது நாம் எதன் அடிப்படையில் தேவனை அண்டுகிறோம் என்பதை காட்டுகிறது. இயேசுவின் நாமத்தில் ஜெபம் பண்ணுவது, கிறிஸ்துவின் ஆவி நாம் தேவனிடத்தில் ஏறெடுக்கும் ஜெபத்தை தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்கான அழைப்பாகும். நாம் தைரியத்தோடே வருவோம் (எபே.3:12).

2) விசுவாசிப்பவர்களின் சலுகை

எல்லாவற்றையும் முயற்சித்து, அவைகள் எல்லாம் தோல்வியில் முடிந்தபின்பு, இறுதியாக ஜெபம்பண்ண வருகிற மனிதன் தேவனிடத்தில் அற்ப விசுவாசமுள்ளவனாயிருக்கிறான். ஜெபத்தைப்பற்றிய தேவனுடைய சத்தியமான வாக்குத்தத்தங்களை சந்தேகித்து உறுதியில்லாமல் ஜெபம்பண்ணுகிறவன் அவரை கனவீனம் பண்ணுகிறான். அவன் இருமனமுள்ள மனிதன் என்று அழைக்கப்படுகிறான். அப்படிப்பட்ட மனிதன்தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக (யாக்.1:7). தன்னுடைய வல்லமையை உணர்ந்து கொள்ளாத விசுவாசமற்ற சீஷர்களைக் கர்த்தர் கடிந்து கொள்கிறார் (மத்.17:17 , லூக்.9:41) சந்தேகம் தேவனுடைய வல்லமையான செய்கைகளை நிறுத்த காரணமாயிருக்கிறது (மத்.13:58). கடுகளவு விசுவாசத்தைச் சரியான இடத்தில், அதாவது தேவனிலும், அவருடைய வார்த்தையிலும் வைக்கின்றபொழுது, அது மலையைப் பெயர்க்கும் விசுவாசமாயிருக்கிறது (மத்.17:20). கர்த்தர் ஜனங்களிடத்தில் கேட்டார், நீங்கள் கேட்டுக்கொள்வதை என்னால் செய்ய முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர்கள் ஆம் என்று பதில் கூறிய பொழுது, உங்கள் விசுவாசத்தின்படியே ஆகக்கடவது என்றார், விசுவாசித்தவர்கள் பலனைக் கண்டார்கள் (மத்.9:28-30). பிள்ளை சுகமடைய வேண்டும் என்று கிறிஸ்துவினிடத்தில் கூறினர். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். அத்தகப்பன் இவ்வாறு பதில் கூறினார் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் (மாற்.9:23-24). அம் மனிதனிடத்தில் இயேசு பதில் கூறியபடியே பிள்ளையை விடுவித்தார். நூற்றுக்கு அதிபதி ஜெபத்தைப் பற்றி சிறிது அறிந்திருந்தான். ஆனால் அவனுடைய விசுவாசம் சரியான நபரிடத்தில் இருந்தது (லூக்.7:2-10). விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் (எபி.11:6). நீங்கள் பதிலை எதிர்;பார்க்கிறீர்;களா? எதிர்;பார்க்கவில்யையென்றால் கேட்பதற்குப் பிரச்சனைப்படாதீர்;கள். விசுவாசமுள்ள ஜெபத்தை நம்பி வாருங்கள் (யாக்.5:15).

3) விரும்புகிறவர்களின் சலுகை

தங்களுடைய சரீரங்களைத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தவர்;களை அவருடைய நன்மையும், பரிபூரணமான சித்தத்தாலே ஆசீர்வதிக்கிறார்; (ரோ.12:1-2). நாம் அவருடைய சித்தத்தை ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளும்பொழுது அதன்படி நாம் ஜெபம்பண்ணமுடியும். (1.யோ.5:14-15). வேதவசனத்திலே வெளிப்படையாகக் கூறப்பட்டிராத தேவனுடைய சித்தம்பற்றிய விசயங்களை நாம் எப்படி அறிந்துகொள்ளமுடியும்? வேதவாக்கியங்களில் தெளிவாக தேவனுடைய சித்தம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதை நாம் உரிமை பாராட்டமுடியும். கொள்கையளவில் நமக்குப் பின்பற்ற முடியும். கட்டளை என்ற ரீதியில் அவற்றிற்கு நாம் கீழ்ப்படிய முடியும். எச்சரிப்பு என்ற வகையில் நாம் அவற்றிற்குச் செவிகொடுக்கமுடியும். நாம் தேவனுடைய சித்தத்தின்படி வேண்டிக்கொள்கிறபொழுது, சுயநலவாதிகளாகவும், சுயஇச்சைகளை நிறைவேற்ற வேண்டுதல் செய்கிறவர்;களாகவும் இருக்கமாட்டோம் (யாக்.4:3). கர்;த்தரை அறியாதவர்கள் பற்றி எப்படி விண்ணப்பம் செய்வது? இழந்துபோனவர்;கள் என்ற வகையில் நாம் கிறிஸ்துவினிடத்தில் வேண்டுதல் செய்யமுடியும். ஏனென்றால் எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என்று அவர்; விரும்புகிறார்;. (2.பேது.3:9 , 1.தீமோ.2:4). விசுவாசிகளுடைய ஜெபத்திற்கும், இரட்சிப்பை இழந்து போனவர்;களுக்கும் இடையே நெருங்கிய தொடர்;பு இருக்கிறது. அவர்கள் சார்பாக தேவனிடத்தில் வேண்டுதல் செய்யவேண்டும். நோயாளிகளைப் பற்றிய ஜெபம் என்ன? நாம் ஜெபித்தால் தேவன் அனைவரையும் சுகமாக்குவார் என்று நாம் நம்பமுடியுமா? சில தேவனுடைய அருமையான பிள்ளைகள் இப்படி ஆகும் என்று நம்புகிறார்;கள். இருந்தாலும் நாம் பவுலினுடைய அனுபவத்தையும் (2.கொரி.12:8-9), துரோப்பீமுவின் அனுபவத்தையும் (2.தீமோ.4:20), எப்பாப்பிரோத்துவின் அனுபவத்தையும் (பிலி.2:25-30), தீமோத்தேயுவின் அனுபவத்தையும் (1.தீமோ.5:23) கருத்தில் கொள்ளவேண்டும். இவர்கள் தேவனோடு நடந்தபொழுது வியாதியுள்ளவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளில் உரிமையாக நோய்களைக் குணமாக்குதல் இருக்குமானால் ஒருவர்;கூட ஒருபொழுதும் சுகவீனத்தினால் மரித்திருக்கமாட்டார்;கள். கிறிஸ்து ஏராளமானவர்;களைச் சுகமாக்கினார்; அதேபோல் அப்போஸ்தலர்களும் செய்தார்கள். அவருடைய நாமத்தினாலே திரளான ஜனங்கள் சுகமாக்கப்படுகிறார்;கள். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இன்றும் விடுவிக்கிறது (யாக்.5:15). கர்;த்தருக்கு முன்பாக நம்முடைய மனதில் சொஸ்தமாகுதல் தேவனுடைய சித்தம் என்று உறுதியான நம்பிக்கை இருக்குமானால் நாம் அதன் அடிப்படையில் ஜெபம்பண்ணலாம். நாம் எங்கு வாழ்வது, வேலைசெய்வது, பிரயாணம் பண்ணுவது, தேவனுக்காக எங்கு உழைப்பது போன்ற சூழ்நிலை அடிப்படையான தீர்;மானங்களுக்கான ஜெபங்களைப் பற்றியும் யாக்கோபு 4:13-15ல் கூறப்பட்டுள்ளது.

நாம் தேவனுடைய சித்தத்ததைச் செய்ய விரும்புகிறோமா (லூக்.22:42)? நாம் தேவபக்தியான ஆலோசனையை ஏற்றுக்கொள்வோமா (நீதி.11:14)? ஒரு செயலைப் பற்றி சமாதானம் ஏற்படும் வரையிலும் நாம் காத்திருக்க விரும்புகிறோம். தீர்;மானங்கள் தேவனுடைய தீர்;மானங்களின் அடிப்படையில் ஏற்பட நாம் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறோமா (மத்.6:33). அப்பொழுது அவர் நம்மை வழிநடத்துவார் (நீதி.3:5-6). நாம் தேவனுடைய சித்தத்தைச் செய்ய விருப்பத்தோடு வருவோமாக (யோ.7:17).

ஜெபத்திற்குப் பதில்கள்

மேற்கூறப்பட்ட அனைத்தும் நிபந்தனைகளையும் நாம் சிந்தித்தால் தேவன் எப்பொழுதும் நம்முடைய ஜெபத்திற்குப் பதிலளிப்பாரா? இதன் பதில் ஆம் ஆகும். தேவனுடைய பதில் பல வழிகளில் வருகிறது என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். லேமன் ஸ்டவுஸ் நான்கு விதமான பதில்களை கூறுகிறார்;. (1) நேரடியான பதில்கள் (2) காலந்தாழ்ந்த பதில்கள் (3) வித்தியாசமான பதில்கள் (4) மறுதலிக்கப்பட்ட பதில்கள். இதோடு சேர்;ந்து தகர்க்கும் பதில்களையும் சேர்;த்துக்கொள்ளலாம். இவ் வேண்டுதலை ஏறெடுக்காமல் விட்டுவிடுதல் நல்லது.

1) நேரடிப் பதில்கள்

சிறைச்சாலையில் பேதுரு இருந்தபொழுது சபை கூடி ஜெபித்ததும் அவன் விடுதலை ஆனான் (அப்.12:5-11). அல்லது எலியாவின் ஜெபமும் இப் பதிலைச் சார்;ந்ததே. முதலில் வானம் மழை பெய்யாதவண்ணம் வேண்டியது, பின்னர்; வானத்தைத் திறந்தது (யாக்.5:17-18). சங்கீதக்காரன் சந்தோஷப்படுகிறான் தேவன் அவனின் ஜெபத்திற்குப் பதில் கொடுத்ததற்கு (சங்.116:1-2).

2) காலந்த தாழ்ந்த பதில்கள்

காலம் தாழ்ந்த பதில்கள் கர்;த்தராகிய இயேசுவின் வருகைக்காக விசுவாசியினால் செய்யப்படும் ஜெபத்தைக் கூறலாம் (வெளி 22:20). காலம் இதுவரையிலும் தகுதியாகவில்லை. மரியாளும், மார்;த்தாளும் கர்த்தராகிய இயேசு விரைவில் வந்து தங்கள் சகோதரன் குணமடைய செய்ய வேண்டினர்;. ஆனால் அவர் லாசரு மரிக்குமட்டும் தாமதித்திருந்தார் (யோ.11:3-6,14-15). இக்கால தாமதம் மரித்தவரை உயிரோடு எழுப்புகின்ற பெரிய அற்புதத்தைச் செய்ய தருணத்தை கிறிஸ்துவுக்கு வழங்கியது. கர்த்தருக்குக் காத்திருப்பது எளிமையான விசயம் அல்ல. ஆனால் அதற்குப் பலன் உண்டு (சங்.69:3 , 37:7,9,34).

3) வித்தியாசமான பதில்கள்

வித்தியாசமான பதில்களில் தேவன் நம்முடைய வேண்டுதலை மாற்றி அவருக்கு நலமானதைத் தருவதாகும். பவுலினுடைய சரீரத்திலிருந்த முள்ளை நீக்குவதைவிடவும் கர்;த்தர்; அவனுக்கு அதைவிட நன்மையானதைக் கொண்டவராக இருந்தார் (2.கொரி.12:7-9). கெத்சமனேயில் கர்த்தராகிய இயேசுவின் ஜெபத்தைப் பார்;க்கும்பொழுது என் பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும், ஆகிலும் என் சித்தப்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது (மத்.26:39) என்று ஜெபித்தார்;. பிதாவினுடைய பதில் இழந்துபோன மனிதர்;கள் அவருடைய குமாரனின் இரத்தம் சிந்துதலினால் இரட்சிப்படைய வேண்டியதாயிருந்தது.

4) மறுதலிக்கப்பட்ட பதில்

தன் பலவீனத்திலே எலியா தான் சாகவேண்டுமென்று வேண்டிக்கொண்ட ஜெபம் (1.இராஜா.19:4-5) இவ் வகையைச் சார்ந்தது. இவ் வேண்டுகோளுக்குப் பதிலாக அவன் பெலப்படுத்தப்பட்டான். சீஷர்;கள் சமாரியர்களின் கிராமத்தை வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து அழிக்க வேண்டினார்;கள் (லூக்.9:54). ஆனால் கர்த்தரோ அவர்களை இரட்சிக்க வந்தார், அழிக்க வரவில்லை.

5) தகர்க்கும் பதில்கள்

இஸ்ரவேல் ஜனங்கள் இராஜாவுக்காக வேண்டிக்கொண்டது (1.சாமு.8:5-18), அது தேவனையே தள்ளிவிடுவதாக இருந்தது. எசேக்கியா தன் மரணத்தைத் தள்ளிப்போட ஆவல் கொண்டது (2.இராஜா.20:1-6). அவன் நாட்களைக் கவலைக்குரியதாக மாற்றியது (20:12-19). இப்படிப்பட்ட நம்முடைய வேண்டுதலைக் கேட்டு தேவன் பதில் தருவார். இருந்தாலும் ஆத்துமாவிலே இளைப்பைத் தருகிறார்; (சங்.106:15).

ஜெபத்தினால் மேலும் உள்ள ஆசீர்;வாதங்கள்

1) ஆவிக்குரிய பெலன்

நாம் ஜெபிக்கின்ற பொழுது ஆவிக்குரிய பெலன் வருகிறது. நம்முடைய ஆத்துமாவிற்கு புதுபெலன் கிடைக்கிறது (ஏசா.40:31).

2) ஆவிக்குரிய பரிசுத்தம்

ஒருவன் கர்த்தருடைய அழைப்பை ஏற்று சோதனைக்குட்படாதபடிக்கு வழித்திருந்து ஜெபம் பண்ணுகிறவனானால் (மத்.26:41) ஆவிக்குரிய பரிசுத்தம் அவன் பங்காயிருக்கிறது.

3) ஆவிக்குரிய பலன்

நம்முடைய ஊழியத்தில் தைரியத்திற்காக ஜெபம் பண்ணும்போதும் (அப்.4:29-31). எதிர்;ப்பவர்களுக்குத் தகுந்த பதில் கொடுக்க பரம ஞானத்தை நாடும்போதும் ஆவிக்குரிய பலன் ஏற்படுகிறது (அப்.6:10).

4) ஆவிக்குரிய ஐக்கியம்

தேவனோடு ஆவிக்குரிய ஐக்கியத்தோடு பண்ணப்படும் ஜெபமானது தேவன் காரியங்களை பார்;ப்பதுபோல் நாமும் பார்க்க உதவுகிறது. அவருடைய அறிவிலேயும் வழியிலேயும் வளரவும் நடக்க உதவுகிறது (அப்.10:9-35).

5) ஆவிக்குரிய பிரகாசம்

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும் (சங்.119:18). நம்முடைய பாதம் நடக்கவேண்டிய வழியைக் காட்டும் (சங்.119:105) என்று நாம் கேட்கின்றபொழுது ஆவிக்குரிய பிரகாசம் ஏற்படுகிறது.

நாம் வந்து சேர்;ந்திருப்பவரின் எல்லைற்ற ஆற்றலை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் எல்லா தேவைகளையும் தர வல்லமை உள்ளவர்;. என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி.4:19). மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்; (லூக்.18:27). அவர் நம்முடைய இருதயத்திற்கு சவாலான கேள்வியைக் கேட்கிறார்;. என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரேமி.32:27 ; ஆதி.18:14). நாம் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் நாம் பதிலை அறிவோம்.

பாடம் 10ற் கான கேள்விகள்

1) சங்கீதம் 100:4ல் கூறப்பட்டுள்ள ஜெபத்தின் இரண்டு தன்மைகள் என்ன? அவ்விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எப்படி வரைவீர்;கள்? எது உங்களுக்குக் கடினமாய் உள்ளது? ஏன்?

2) எவ்வித உபகாரத்திற்காய் சங்கீதம் 103ல் சங்கீதக்காரன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான்? எப்படி சங்கீதக்காரன் கர்த்தரின் நாமத்தையும், குணத்தையும் துதிக்கிறான்?

3) தேவன் உங்களுக்குச் செய்தவைளைப் பற்றி ஒரு பட்டியலிடுக. அவர்; செய்ததற்காக நன்றி கூறவும். தேவனுடைய குணங்களைப் பற்றி ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். அவர் யார் என்பதை அறிந்து அவரைத் துதியுங்கள்.

நன்றி சொல்வதற்காக காரணங்கள் துதிப்பதற்காக காரணங்கள்

4) சங்கீதம் 32:1-5ல் தாவீது எதைப் பற்றி ஜெபம்பண்ணுகிறான்? தேவனிடத்தில் அறிக்கை இடுவதற்கு முன்னும் அதன் பின்னும் ஒரு மனிதனின் நிலை என்ன என்று தாவீது கூறுகிறான்?

5) பிறருக்காக விண்ணப்பம் செய்வதில் சாமுவேல் கொண்டிருந்த முக்கியத்துவம் என்ன (1.சாமு.12:23)? நாம் யாருக்காக விண்ணப்பம் செய்யவேண்டும்?

எபேசி.6:18-20

1.தீமோ.2:1-4

லூக்.6:28

யாக்.5:16

பிறருக்காக ஒழுங்காக தவறாமல் விண்ணப்பம் பண்ணுவதற்கு உங்களால் என்ன செய்யமுடியும்? ஜெப அட்டவணையை (பிற்சேர்;க்கை) ஒரு வாரம் பயன்படுத்தவும். பின்னால் நீங்கள் உங்களால் முடியும் வழியைக் கண்டுபிடிக்கலாம்.

6) எந்தெந்த தனிப்பட்ட தேவைகளுக்காக நாம் ஜெபம்பண்ணவேண்டும்?

சங்.37:5

மத்.26:41

எபி.4.16

யாக்.1.5

1.பேது.5:7

7) வெற்றிகரமான ஜெபத்திற்கான நிபந்தனைகளை அடையாளம் காண்க.

யோ.15:7

யோ.14:13

1.யோ.5:14-15

மத்.21:22

இயேசுவின் நாமத்தில் ஜெபம் பண்ணுவது என்பதின் பொருள் என்னவென்று உமது கருத்து என்ன?

8) வல்லமையான ஜெபத்திற்குத் தடையாக இருப்பவைகளை அடையாளம் காண்க.

நீதி.21:13

நீதி.28:9

எசேக்.14:3

மல்.1:8-9

மத்.6:14-15

யாக்.1:6-7

யாக்.4:2-3

1.பேது.3:7

9) ஜெபத்திற்கான பதில்களின் வகையைத் வேதவாக்கியங்களோடு பொருத்துக.

  • நேரடி அ) யோ.11:3-6,14-1
  • காலந்தாழ்ந்த ஆ) அப்.12:5-11
  • மறுதலிக்கப்பட்ட இ) எண்.11:18-20 சங்.106:15
  • தகர்க்கும் ஈ) 1.இராஜா.19:4-5

10) பிலிப்பியர் 4:6-7ஐ உங்கள் சொந்த நடையில் எழுதுக.

இப் பகுதியோடு எப்படி உங்கள் ஜெபஜீவியத்தை மதிப்பிடுவீர்;கள்? என்னென்ன மாறுதல்கள் செய்ய தீர்;மானிக்கிறீர்;கள்?

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 11: நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கிறோம்

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 12: அனுபவ சாட்சி

Recommended

00. பொருளடக்கம்

07. பெயர்ப்பட்டியல்

00. கிருபையின் மாட்சி

10. விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்?

00. கிருபையின் மாட்சி

12. கிறிஸ்துவின் பணியும் கிருபையின் வெற்றியும்

Song 124 – Yesuve En

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.