• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

பாடம் 09: தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல் (புசித்தல்)

April 5, 2016
in அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 9: தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல் (புசித்தல்)

மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத்.4:4) உபாகமம் 8:3 லிருந்து எடுக்கப்பட்ட கூற்று இதுவாகும். இப்பாடம் தேவன் தன்னுடைய ஜனங்களுக்கு கொடுக்கிற ஆகாரத்தைப் பற்றி கூறுகிறது.

தேவன் பூமிக்குரிய ஆகாரத்தைவிட மனிதனுக்கு மேலானதை அளித்திருக்கிறார். அவர் நமக்கு வேதவாக்கியங்களை அளித்திருக்கிறார். தேவனுடைய வார்த்தைகள் முழுதும் வேதபுஸ்தகமாக நம்மிடம் உள்ளது (2தீமோ.3:16 , 2.பேது.1:19-21). பழைய ஏற்பாட்டிலிருந்து இயேசு ஒழுங்காக வசனங்களை எடுத்துக்கூறினார், அவைகளின் நிறைவேறுதலே புதிய ஏற்பாடாக இருக்கிறது. வேத புத்தகத்தில் தான் கர்த்தர் சொல்லுகிறார் என்ற பதம் அனேகமுறை தொடர்வாக கூறப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது (எபி.4:12) என்றென்றைக்கும் நிற்கிறது, ஜீவனுள்ளதுமாயிருக் கிறது (1பேது.1:23). இதன் மகிமை குறித்து 119ம் சங்கீதத்தில் பாடப்பட்டுள்ளது. வேதப்புத்தகம் தேவன் மனிதனோடு தொடர்பு கொள்வதற்கு இருப்பதாகவும், மனிதனின் அதிகாரியும், அவனை படைத்தவருடைய போதனைகள் அடங்கிய ஏடாக இருப்பதாலும், நாம் இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருநாளும் கவனமாக பயன்படுத்த வேண்டியது இவ்வேத புத்தகமாகும். தொடர்ந்து நாம் வேத புத்தகத்திற்கு கொடுக்க வேண்டிய கவனத்தைப் பற்றியும், கீழ்ப்படிதலைப் பற்றியும் தெளிவாக அதே வேதபுத்தகத்தில் கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது(உபா.6:6-9).

வேத புத்தகத்தில் உள்ள பயன்கள்

பயபக்தியோடும், கீழ்ப்படிதலோடும் வேத வசனத்தை படிப்பவர்களின் வாழ்க்கையை தேவனுடைய வசனமானது மாற்றி அமைத்துள்ளது என்பதற்கு எண்ணற்ற நிகழ்ச்சிகள் சான்றாக உள்ளது. எந்தெந்த வழிகளில் இவ்விலைமதிப்பற்ற புத்தகத்தை உண்மையிலே படிப்பவர்களின் வாழ்க்கை பயன் அடைகிறது என்பதைப் பார்ப்போம்.

1) இரட்சிப்பு

தேவனுடைய வார்த்தையால் மறுபிறப்பு நிகழ்கிறது (1பேது.1:23) மனதிலே தேவனுடைய வசனமானது நடப்படும் பொழுது கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நமக்கு இரட்சிப்பு கிடைக்கிறது (2.தீமோ.3:15). தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும்.

2) ஆவிக்குரிய ஆகாரம்

தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளுதலைப் பற்றி கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால் ஆத்துமாவிலே தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளுதலாகும் (எரே.15:16). இது பாலுக்கும் (1பேது.2:3) தேனுக்கும் (சங்.19:10,119:103) ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளது. பலமான ஆகாரமாகவும் தேவனுடைய வார்த்தை இருக்கிறது (எபி.5:12,14).

3) வளர்ச்சி

ஆத்துமாவிற்கு தேவனுடைய வசனத்தைக் கொடுக்கின்றபொழுது, நம்மை அவ்வசனமானது பரிசுத்த விசுவாசத்தில் கட்டி எழுப்புகிறது (அப்.20:32) ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு வசனமாகிய ஆகாரம் தேவையாயிருக்கிறது (1.பேது.2:3).

4) ஞானம்

எங்கும் கல்வியினுடைய மதிப்பு உயர்வாகவே இருக்கிறது, கல்வி மூலம் ஜனங்கள் ஞானத்தை சம்பாதிக்கலாம் என நம்புகின்றனர். இருந்தாலும் வேதவாக்கியமே நம்மை நம்முடைய சத்துருவை விடவும் ஞானமுள்ளவனாக்குகிறது, உலகப்பிரகாரமான ஆசிரியர்களைவிடவும் அறிவை நமக்கு தருகிறது (சங்.119:98-100).

5) சுத்திகரிக்கிறது

உலகம் முழுவதும் ஒழுக்க சீர்கேடுகளால் நிறைந்துள்ளது, மனதையும், இருதயத்தையும் சுத்தப்படுத்துகிற மிக பெரிய சுத்திகரிப்பானது வசனமாகவே இருக்கிறது (சங்.119:9 , யோ.15:3) பாவம் செய்யாமையிலிருந்து நம்மை பாதுகாப்பதும் வசனமே (சங்.119:11).

6) ஆறுதல் அல்லது உற்சாகம்

ஆறுதல் அல்லது உற்சாகத்தை நம்முடைய கஸ்டமான மற்றும் கவலைகள் நிறைந்த நேரங்களில் நமக்கு தருகிறது (சங்.119:28, 50, 76 , ரோ.15:4).

7) வழிகாட்டி

எதை செய்வதென்றும், எங்கே திருப்புவது என்பதும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. வசனம் நம்முடைய பாதைக்கு தீபமாக இருக்கிறது (சங்.119:105).

8) சந்தோஷம்

வசனம் கவலை நிறைந்த இந்த உலகத்தில் சந்தோசம் தரக்கூடியதாக இருக்கிறது. (யோ.15:11).

9) ஆசீர்வாதம்

தேவனுடைய வசனத்திற்கு கீழ்ப்படிந்து கவனமாயிருப்பவர்களுக்கு ஆசீர்வாதங்கள் உண்டென்று வேதவாக்கியங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது (உபா.28:1-8). தேவனுடைய பார்வையில் வெற்றி என்பது வசனத்தில் தொடர்ந்து நின்று அதை கைக்கொள்ளுவதின் அடிப்படையில்த்தான் உள்ளது (யோசு.1:8).

பலவிதங்களில் தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளுதல்

பலவிதமான விதத்தில் வசனங்கள் மூலமாக சரியான ஆகாரம் நமக்கு கிடைக்கிறது. தேவனிடத்தில் நம்முடைய கண்களை திறக்க விண்ணப்பம் செய்கின்றபொழுதும் (சங்.119:18) பரிசுத்தஆவியானவர் தெய்வீக போதகராக இருக்கும்பொழுதும் (யோ.14:26) தேவனுடைய அப்பத்தை நம்முடைய உள்ளான மனிதனுக்குள் உட்கொள்ள முடிகிறது. வளர்ந்து வருகின்ற விசுவாசி பின்வருகின்ற முறைகளில் செயல்படுகிறார்.

1) கேட்டல்

வேதத்தைக் கேட்கவேண்டும் (நீதி.28:9 , லூக்.19:48) வேத புத்தகம் எளிதாக கிடைப்பதற்கு முன்பும், அச்சு இயந்திரங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பும், ஏராளமான ஜனங்களுக்கு வேதவசனங்களை சபை ஆராதனைகளில் மட்டுமே கேட்டமுடிந்தது. தேவனுடைய வசனம் பிரகடனப்படுத்தும் பொழுது அவற்றை உன்னிப்பாக கவனிப்பதற்கு நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். என்ன சொல்லப்படுகிறது என்பதை நாம் கவனமாக சிந்திக்கவேண்டும். குறிப்புகள் எடுப்பதன் மூலமும், எடுக்கப்பட்ட குறிப்புகளை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலமும், பிறரோடு அதைப்பற்றி விவாதிப்பதன் மூலமும் நாம் கேட்டவைகளை நினைவில் வைத்துக் கொள்ளமுடியும்.

2) வாசித்தல்

வேதத்தை வாசிக்கவேண்டும் (உபா.17:19-20 , வெளி.1:3) வேதத்தை வாசிப்பதற்கு திட்டமிட்ட ஒழுங்கை வரையறுத்துக் கொள்ளவேண்டும், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவோடு ஒழுங்காக வாசிக்கவேண்டும். இப்படி செய்வதால் வேதபுத்தகத்தின் முழு மைய கருத்தையும் அறிய முடியும். பழைய ஏற்பாடு, மற்றும் புதிய ஏற்பாடு இரண்டையும் தெளிவுற அறிந்திருக்கவேண்டும்.

3) படித்தல் அல்லது ஆராய்தல்

வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும் (அப்..17:11 , நீதி.2:1-5) ஒரு பகுதியை வாசிப்பதை விடவும் இது முக்கியமானதாக இருக்கிறது. படித்தல் அல்லது ஆராய்தல், ஆழமாக தோண்டுதலைக் குறிக்கிறது. முக்கியமான கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொள்ளவும், அக்கருத்துக்களைப் பற்றி கேள்விகளை எழுப்பவோ அல்லது பிறரோடு பகிர்ந்து கொள்ளவோ வேண்டும். படிக்கின்ற ஒவ்வொன்றையும் வாழ்க்கையிலே கடைப்பிடிக்கவேண்டும். அதுவே சக்தி வாய்ந்த வேத ஆராய்சி ஆகும்.

4) இருதயத்தில் பதிய வைத்தல் அல்லது மனப்பாடம் செய்தல்

வேத வசனத்தை இருதயத்தில் பதித்து வைத்திருக்கவேண்டும் (உபா.6:6-7 , சங்.37:31 , நீதி.7:1-3). நம்முடைய இருதயத்திலே தேவனுடைய வசனத்தை மறைத்து வைப்பதற்கு நிச்சயமான ஒரே வழி, அவற்றை இருதயத்திலே மனப்பாடமாக பதிய வைத்தலேயாகும். நாம் கேட்பதிலேயும், வாசிப்பதிலேயும் பெரும்பாலானவற்றை மறந்து விடுவோம். ஆனால் மனப்பாடம் செய்தவற்றையோ 100 வீதம் ஞாபகத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளமுடியும். முக்கியமான ஒரு வசனத்தை நம்முடைய ஆத்துமாவுக்காக மனதில் திரும்ப கொண்டுவரவேண்டிய தேவையிருந்தாலோ, பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தாலோ, மனப்பாடம் செய்து கொள்ளப்பட்ட வசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்த்தராகிய இயேசு சோதனையை மேற்கொள்வதற்குத் தன் இருதயத்தில் பதித்து வைத்திருந்த வசனங்களை பயன்படுத்தினார் (மத்.4:1-11) வசனங்களை மனப்பாடம் செய்வதற்கு, முக்கியமான வேதவசனங்களடங்கிய சிறிய அட்டைகள் ஏராளமாக இப்பொழுது கிடைக்கிறது.

5) தியானித்தல்

வேத வசனங்களைத் தியானிக்கவேண்டும் (சங்.119:15,23,48,78,148 , பிலி.4:8) தியானித்தல் என்பது நன்கு ஆலோசித்து, ஆழமாக சிந்தித்து, பின்பு சிந்தித்ததை பற்றி தனக்குள்ளே அமைதியாகவோ, சத்தமாகவோ அளவளாவுவதைக் குறிக்கும். தியானநேரமே சில சத்தியங்களைப் பற்றியும் தேவனுடைய ஆள்தத்துவத்iதைப் பற்றியும் பிரதிபலிப்பு ஏற்படுகிற நேரம். பசுவானது அமைதியாக ஓய்வு நேரத்தில் தான் உட்கொண்ட உணவை அசை போடுகிறது போல தியான நேரமும் இருக்கிறது. நம்முடைய காலை வேத ஆராட்சியில் குறிப்பிட்ட சில வசனங்கள் நம்முடைய இருதயத்தில் பேசினது என்ற உணர்;வு உள்ளத்தில் ஏற்படுகின்றபொழுது தியானித்தல் ஆரம்பமாகிறது. தியானித்ததின் பயனால் கிடைத்தஅரும் கருத்துகளைக் குறித்து கொள்ளவும். பின்பு பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்.

பயனுள்ள உட்கொள்ளல், நாம் என்ன மனநிலையில் வசனத்தை அணுகுகிறோம் என்பதின் அடிப்படையில் தான் உள்ளது. அர்ப்பணிப்போடு வசனத்தைப் படிக்கிற மாணவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அவரின் வார்த்தையை ஒழுங்காக படிப்பதற்கும், படித்த வசனங்களை அனுதின வாழ்க்கையில் கைக்கொள்வதற்கும், ஒப்புக்கொடுக்கிறான். உறுதியான, சீரான படிப்பே வளர்ச்சியை தரும் அல்லாமல் உறுதியற்ற ஒழுங்கற்ற முறைகள் அல்ல. வசனத்தை உட்கொள்ளல் தேவனோடு ஆவிக்குரிய பரிமாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

வேத ஆராட்சி முறை

வேதாகமத்தில், வேதபுத்தகத்தை எப்படி படிக்கவேண்டும் என்று தனிப்பட்ட எம்முறையும் கூறப்படவில்லை என்றாலும், வசனத்தோடு விசுவாசிக்கு உள்ள பலமான தொடர்பின் அடிப்படையில் பின்வரும் முறைகள் பயன்படுத்தப்படுகிறது. தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவைத்தல், எவ்வித இடஞ்சலும், கவனத்தை திசைதிருப்பாத ஓர் இடம். தொடர்ந்து வேதாகமம் முழுவதும் படிப்பதற்கு ஒரு செயல்த்திட்டம். கிறிஸ்துவோடு இணங்கி நடப்பது என்ற நோக்கத்தை வரையறுத்துக் கொள்ளல். இவை நான்கும் வேதபுத்தகத்தை படிக்க அடிப்படையான அம்சங்கள்.

கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிதல், கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக இருத்தல், கிரமமாக வசனத்தைப் படித்தல் ஆகியவை எவ்வித சிறப்பு போதனைகளும் இன்றி நற்பலன் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. நாம் வசனத்தை அணுகுகின்ற பொழுது பின்வருகின்ற மூன்று கேள்விகளை பயன்படுத்துதல் பயன் உள்ளதாக இருக்கும்.

1) வசனம் என்ன சொல்கிறது?

ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளவைகளைக் கவனமாகக் கவனியுங்கள். அப் பகுதியின் தன்மை, கூறப்பட்டுள்ள விளக்கங்கள், செயல்கள் மற்றும் விலியுறுக்கப்பட்டுள்ள போதனைகளைக் குறித்துக்கொள்ள வேண்டும். முக்கியமான வார்;த்தையை வசனத்திலேயே அடிக்குறியிட்டுத் தனியாக ஒரு காகிதத்தில் அதைப் பற்றிக் குறிப்பு எழுதிக்கொள்ளவும். அதிகமாய் நேரம் எடுத்து, மனதை ஒருமுகப்படுத்தி இவைகளைச் செய்யவேண்டும்.

2) பொருள் என்ன?

படித்த பகுதியைச் சரியான முறையில் விளக்கவேண்டுமென்றால், அதன் பொருளை அறிந்திருக்கவேண்டும். வார்;த்தையின் விளக்கத்தை நிச்சயமாக உறுதி செய்துகொள்ளவேண்டும். சந்தேகம் எழும்பும்பொழுது அவற்றைச் சோதித்துக்கொள்ளவேண்டும். ஏன் இந் நிகழ்ச்சி வேதபுத்தகத்தில் சேர்;க்கப்பட்டுள்ளது என வினா எழுப்பவும். வார்;த்தைகளிலோ அல்லது செயல்களிலோ ஏற்படுகின்ற விளைவுகளை குறித்துக்கொள்ளவும். இதில் தேவனுடைய மனநிலை என்ன? என்ன உபதேசம் கூறப்பட்டுள்ளது? விசுவாசியின் வாழ்க்கையில் இவ் உபதேசத்தின் முக்கியத்துவம் என்ன? இப் பகுதியின் முற்பகுதியில் என்ன கூறப்பட்டுள்ளது, அதேபோல் பிற்பகுதியில் என்ன கூறப்பட்டுள்ளது? இது சந்தர்;ப்பம் என அழைக்கப்படுகின்றது. சந்தர்;ப்பத்திற்கு புறம்பான முறையில் நாம் எதையும் இடையில் புகுத்துவதற்கு விரும்பக்கூடாது. புரியாத ஒன்றிற்காக நீங்கள் நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. தேவைப்பட்டால் வருங்காலப் படிப்பிற்காக குறிப்புகளை எடுத்துக்கொள்ளலாம். தெளிவாகப் புரிந்துகொண்ட விசயத்தில் கவனத்தைச் செலுத்தல் நல்லது.

3) எப்படி என் வாழ்க்கையில் செயல்படுத்துவேன்?

இக் கேள்வி உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் வசனத்தை ஏற்றுக்கொண்டு அதைக் கடைப்பிடிப்பதை வலியுறுத்துகிற ஒன்றாக இருக்கிறது அல்லது தேவனை அறிகிற அறிவிலே உள்ள வளர்;ச்சியின் அளவைக் குறிக்கிறது. கற்றறிந்ததை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்பொழுதுதான் பயன் உள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல கற்றதைக் குறித்து உங்கள் நோக்கத்தையும் வெளிக்கொணர்;வதாக இருக்கிறது. வேதஆராட்சியானது நம்மை மாற்றுவதற்கும் கிறிஸ்துவோடு நம்முடைய செயல்களை ஒப்புமையாக இருப்பதற்கும் தேவனை முழுவதுமாக அறிந்து அவரைப் புகழ்வதையுமே நோக்கமாகக் கொண்டது. தனிப்பட்ட வாழ்க்கையில் கடைப்பிடிக்காத எந்தக் கருத்துகளும் வேதாகமத்தின் நோக்கத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவதற்குச் சமமாக இருக்கிறது. வாக்குத்தத்தங்கள், எச்சரிக்கைகள், கட்டளைகள், எடுத்துக்காட்டுகள், பாவங்கள், உற்சாகமூட்டுதல் அல்லது தேவனுடைய குணங்களைப் பற்றிய சத்தியங்களைப் பாருங்கள். படிக்கும்பொழுது தேவன் தன்னுடைய வசனத்தின் மூலம் உங்களோடு பேசும்படியாக வேண்டிக்கொள்ளுங்கள். தேவை ஏற்படும்பொழுது தேவனிடத்தில் காத்திருங்கள். அவருடைய சமூகத்திலே இருக்கும்பொழுது அவசரப்படவேண்டாம். வருங்காலத்தில் பயன் உள்ளதாக இருப்பதற்காக தினந்தோறும் கற்றுக்கொண்டதைக் குறிப்பு எடுத்துப் பத்திரப்படுத்திக்கொள்ளவும். நீங்கள் படித்ததிலிருந்து வேதவாக்கியங்களைப் பற்றிய பலவீனமான அல்லது எந்தநபரையும் சாராத கருத்துக்களை நீக்கிவிடவும். நீங்கள் தவிர்க்கிறவர்;களாக இருக்கவேண்டாம். நீங்கள் தேவனுடைய பாதத்திலிருந்து கற்றுக்கொள்ளவிரும்பினால் அவர்; உங்கள் ஆசிரியராக இருக்கவிரும்புகிறார்;.

வேத ஆராட்சிசெய்ய பயன்படும் உபகரணங்கள்

தற்காலத்தில் வேதபுத்தகத்தைச் சரியான முறையில் படிப்பதற்கு ஏராளமான உபகரணங்கள் உள்ளது. ஆவியானவர் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்பொழுது வேதபுத்தகம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. ஆனாலும் உபகரணங்கள் மூலம் பயன்பெறமுடியும். இங்கு சில உபகரணங்களைப் பார்;ப்போம்.

1) அடிப்படை மொழிபெயர்ப்புக்கள்

வேதம் என்ன கூறுகிறது என்பதைச் சரியான முறையில் புரிந்துகொள்ளத் தீர்;மானம் உடையவர்;களாய் இருக்கவேண்டும். ஆங்கில மொழி தெரிந்த ஏராளமானோர்; முiபெ துயஅநள ஏநசளழைn (முதுஏ) யை விரும்புகின்றனர்;. பிற்காலத்தில் வழக்கிலில்லாத சொற்கள் நீக்கப்பட்டு நேற முiபெ துயஅநள (Nமுதுஏ) மொழிபெயர்;ப்பு வந்திருக்கிறது. பிறர்; நேற யுஅநசiஉயn ளுவயனெயசன டீiடிடந (Nயுளுடீ) இ நேற ஐவெநசயெவழiயெட ஏநசளழைn (Nஐஏ) இ நேற நுபெடiளா டீiடிடந (Nநுடீ) விரும்புகின்றனர்;. இது போன்ற பிறமொழிபெயர்;ப்புகளும் அதிகமாக இப்பொழுது கிடைக்கிறது. குறிப்புகள், ஒப்பீட்டு வசனங்கள், விளக்கவுரைகள் மற்றும் வரைபடங்கள் அடங்கிய வேதபுத்தகம் ஏராளமாக இப்பொழுது கிடைக்கின்ற ஒன்றாக இருக்கிறது. புதிய விசுவாசி அடிப்படையான மொழி பெயர்ப்பைப் படிப்பது நல்லது.

2) பொழிப்புரை வேதபுத்தகம்

சரியான மொழிபெயர்ப்புகளாயிராமல் ஆனால் பொழிப்புரைகளாக உள்ள வேதபுத்தகங்கள் உள்ளது. டுiஎiபெ டீiடிடந இ Phடைipள வுழனயல’ள நுபெடiளா (புழழன நேறள) ஆகிய வேத புத்தகம் இதில் அடங்கும். நல்ல மொழிபெயர்;ப்பிலிருந்து படித்து, பொழிப்புரை வேதபுத்தகத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு பயன்படுத்துவது நல்லது.

3) ஒத்தவாக்கிய விளக்கவுரை

அகர வரிசைப்படி வேதத்தில் உள்ள வார்த்தைகள் எப்பகுதியில் உள்ளது, அதன் ஒப்பீட்டு வசனம் எங்கு உள்ளது போன்ற கருத்துக்கள் புத்தகமே ஒத்தவாக்கிய விளக்கவுரை. இப் புத்தகம் வேதபுத்தகத்தை கிரமமாக படிக்க உதவும். எபிரெய மற்றும் கிரேக்க வார்த்ததைகளின் அர்;த்தமும் கொடுக்கப்பட்டிருக்கும். ளுவசழபெ மற்றும் லுழரபெ சிறப்பானது.

4) அகராதிகள்

முக்கியமான சொற்களில் உங்களுக்கு ஆழமான அறிவு ஏற்படுவதற்கு அகராதி உதவிசெய்கிறது. ருபெநச’ள மற்றும் வுhந நேற டீiடிடந னுiஉவழையெசல ஆகியவை பொதுப்படையான பின்னணி, வேதபகுதிகளைப் பற்றியும், வேதாகமத்தில் உள்ள பெயர்;கள், புத்தகங்கள் பற்றியும் விளக்கங்கள் கொண்டதாக உள்ளது.

5) பிற உபகரணங்கள்

புவியியல் மற்றும் வரலாறு சம்பந்தமாக அறிய டீiடிடந யுவடயள இருக்கிறது. வேதாகமக் கலைக்களஞ்சியம் டீiடிடந நnஉலஉடழிநனயை களாகிய ஐவெநசயெவழையெட ளுவயனெயசன அல்லது ணுழனெசஎயn போன்றவைகள் பயன் உள்ளவைகளாக இருக்கிறது. எளிமையான வேதாகமப் பயிற்சித் திட்டங்களும் பயன் உள்ளதாக இருக்கிறது.

நல்ல வாசிக்கத் தகுந்த மொழிபெயர்;ப்பும், சில சாதாரண உபகரணங்களும் முதலில் தேவைப்படுகிறது. வேதபுத்தகத்தைப் படிக்க உபகரணங்கள் வாங்கும்போது, வேதத்துக்குப் புறம்பாகவும், தாராள கொள்கை மற்றும் விமர்;சனத்துக்குரியவர்;கள் எழுதிய புத்தகங்களை தவிர்;க்கவேண்டும். மேற்சொல்லப்பட்ட ஐந்து உபகரணங்களும் ஆங்கிலம் தெரிந்தவர்;களுக்கே பயன்படும்.

முடிவுரை

தேவனுடைய வசனத்தை அறிவதிலே நீங்கள் எங்கு இருக்கவிரும்புகிறீர்;கள்? குழந்தையாக இருக்க விரும்புகிறீர்;களா? பலமான ஆகாரமாகிய வசனத்தை உட்கொள்ளமுடியுமா அல்லது இப்பொழுது பாலைத்தான் அருந்துகிறீர்;களா? (1.கொரி.3:1-3). காலத்தைப் பார்;த்தால் போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது. நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்;கள். பாலுண்ணுகிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களுடையவர்;களாகிய பூரண வயதுள்ளவர்;களுக்குமே தகும் (எபி.5:12-14).

தேர்;வு செய்தல் நம்மைச் சார்ந்தது. நாம் விசுவாசத்தில் புதியவராக அல்லது முதிர்;ச்சியடையாதவர்களாக இருந்தால் கர்த்தருக்குள் வளரும்படியாக களங்கமில்லாத ஞானப்பாலாகிய திருவசனத்தின்மேல் வாஞ்சையாயிருப்போம் (1.பேது.2:3). நாம் வசனத்திலே முதிர்;ச்சியடையாதவர்;களாயிருந்தால் பலமான ஆகாரத்தை நாடுவோம். பகுத்தறியத்தக்கதாக நம்முடைய ஆவிக்குரிய புலன்களைப் பயிற்சிப்போம்.

பாடம் 9 ற் கான கேள்விகள்

இந்த வாரத்தில் ஒவ்வொரு காலையிலும் நாம் தேவனுடைய வார்த்தையைப் பற்றி பல்வேறு விதமான தியான பயிற்சியைச் செய்வோம். இம்மாதிரி செய்வது தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளுதல் என்பதைப் பற்றி நாம் விவாதிக்க நம்மை ஆயத்தப்படுத்தும். மேலும் கடந்தவார பாடமாகிய தேவனோடு நேரம் செலவிடல் என்பதற்கு பலம் கூட்டுவதாகவும் அமையும். பின்வருகின்ற முறையிலே நாம் ஆயத்தமாக வேண்டும் என்று கருத்துக்கள் கூறப்படுகிறது.

1) தேவ ஆவியானவர்; வெளிச்சம் தர விண்ணப்பம் செய்யவும்.

2) வேத பகுதியை பல முறை வாசிக்கவும்.

3) ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறிய தலைப்புக் கொடுக்கவும். முக்கியமான கருத்தைப் பற்றி சுருக்கமாக எழுதிக்கொள்ளவும். தனிப்பட்ட வேண்டுதல்களை ஏறெடுக்கவும்.

4) ஒவ்வொரு நாளும் தியான நேரம் முடிந்தபின்பு தியானித்த பகுதியைப் பற்றி கேள்விகளுக்கு பின்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள கற்றுக்கொள்ள வழிகாட்டி பகுதியில் எழுதவும்.

தின அட்டவணை

நாள் 1 சங்.19:7-11

நாள் 2 உபா.11:18-21

நாள் 3 2.தீமோ.2:14-19

நாள் 4 சங்.119:9-16

நாள் 5 சங்.1

நாள் 6 யாக்.1:22-25

நாள் 7 மறுபடி பார்;த்தல்

மாதிரிப் பயிற்சி அட்டவணை

பகுதி: கலா. 1.11-17 திகதி: ஆடி 12, 1998

தலைப்பு: மனிதனால் கற்றதல்ல

சுருக்கம்: எப்படிப் பவுல் நேரடியாகத் தேவனிடத்திலிருந்து நற்செய்தியைப் பெற்றார் என்று விளக்குகிறார்;.

வேண்டுதல்: கர்;த்தாவே வசனத்தை நானே படிக்க உதவிசெய்யும். நான் வசனத்தை ஒழுங்காகப் படித்தபின் பிற உபகரணங்களைப் படிப்பேன்.

1) நாள் 1: சங்கீதம் 19:7-11

தேவனுடைய வசனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பலவிதமான பெயர்கள் என்ன? வசனத்தில் என்னென்ன குணங்கள் சொல்லப்பட்டுள்ளது? வசனம் என்ன வகையில் உங்கள் வாழ்க்கையைப் பாதித்துள்ளது?

2) நாள் 2: உபாகமம் 11:18-21

வாழ்க்கையில் எந்தெந்த பகுதிகளாக இருதயம் , கை , ஞாபககுறி, வீட்டு நிலைகால்கள், வாசல் ஆகியவை வசனங்களால் கூறப்பட்டுள்ளது? இப் பகுதியிலிருந்து எப்படி வசனத்தை நன்றாகக் கற்றுக்கொள்ளமுடியும்?

3) நாள் 3: 2.தீமோத்தேயு 2:14-19

வசனங்கள் 14, 16, 17, 18 வசனங்களில் என்னென்ன பிரச்சனைகள் கூறப்பட்டுள்ளது? வசனம் 15ல் அதன் தீர்;வு என்ன? தேவனுடைய வசனத்தைக் கற்றுக்கொள்கிற மாணவன் என்ற முறையில் வசனத்தை ஏற்றுக்கொள்ளக் காரணமாய் இருக்கின்ற நான்கு காரணங்களைக் கூறுக.

4) நாள் 4: சங்கீதம் 119:9-16

சங்கீதக்காரனால் வெளிக்காட்டப்பட்டுள்ள மனநிலையும், செயலும் என்ன? எப்படி ஒருவன் அவனுடைய இருதயத்திலே வசனத்தை மறைத்து வைக்கிறான்?

5) நாள் 5: சங்கீதம் 1….

இச் சங்கீதத்தில் பாக்கியவான் யார் என்பதை விளக்குக. அவன் ஏன் வெற்றியுள்ளவனாக இருக்கிறான்? அவன் எதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்?

6) நாள் 6: யாக்கோபு 1:22-25

எப்படி வசனம் கண்ணாடியைப்போல் இருக்கிறது? என்ன செயல் தேவைப்படுகிறது? கீழ்ப்படிதலுக்கும், ஆவிக்குரிய பிரகாரமாக தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்ளுதலுக்கும் உள்ள உறவு என்ன?

7) நாள் 7: மறுபடி பார்த்தல்.

உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய முக்கியத்துவம் என்ன என்று கற்றிருக்கிறீர்;கள்? கற்றுக்கொண்டதன் விளைவாக உங்கள் மனநிலை மற்றும் செயல்களில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது?

பகுதி: __________________________________________________

தலைப்பு: ______________________________________________

சுருக்கம்: _______________________________________________

வேண்டுதல்: ____________________________________________

திகதி: ____________________

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 11: நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கிறோம்

Recommended

00. கிருபையின் மாட்சி

08. கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும்

Song 033 – Yesu Enthan

Song 077 – Ummaipol

00. பொருளடக்கம்

07. பெயர்ப்பட்டியல்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.