- கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும்
கிருபையினாலே கடவுளின் செல்வப் புதல்வர்களாக அழைக்கப்பட்டவர்கள் எவ்வாறு நீதிமான்களாக்கப்பட்டு தெய்வீகக் குடும்பத்தின் உறுப்பினர்களாகச் சுவிகாரம் பெறுகின்றனர் எனக்கண்டோம். தாம் தெரிந்துகொண்ட மக்களைச் சிறப்பானவர்ளாகக் கடவுள் கருதுவது மட்டுமல்ல, தம் கிருபையினால் அவர்களுடைய முந்தைய நிலையிலிருந்து அவர்களை முற்றிலும் மாற்றி அமைக்கிறார். அவர்கள் பாவிகளாக இருக்கையில் தேவன் அவர்களைத் தெரிந்தெடுத்து அழைத்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்தப் பாவ நிலையிலே இருக்க அவர் அனுமதிக்கமாட்டார். அவர்கள் தம்மீது அன்புகாட்டி தமது வழிகளில் நடக்குமாறு அவர்களுக்கு கிருபையை அருளுகிறார். கடவுளால் நீதிமாக்களாக்கபட்ட மக்களில் கடவுளின் சாயல் புதுப்பிக்கப்படுகிற ஆவிக்குரிய நிகழ்ச்சியே பரிசுத்தமாக்கப்படுதலாகும். அதன் விளைவு அவர்களை மெய்ப் பரிசுத்தர்களாக்குவதே.
நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் ஆகிய இரண்டுமே தேவனுடைய கிருபையினாலே ஏற்படுகின்றுன. என்றாகிலும் அவை வெவ்வோறானவை. பாவி ஒருவன் தேவனால் குற்றமற்றுவன் என அறிவிக்கப்படும் தனிச்செயலே நீதிமானாக்கப்படுதல். ஆனால் விசுவாசியின் பழக்கங்களையும் நடத்தையையும் தேவன் தமது கிருபையினாலே பரிசுத்தமாக மாற்றியமைக்கும் தொடர் செயலே பரிசுத்தமாக்கப்படுதல். முந்தியது பாவத்தினால் வரும் குற்றத் தீர்ப்பிலிருந்து நம்மை விடுவிக்கிறது. ஆனால் பிந்தியது பாவத்தின் குறையிலிருந்து நம்மை கழுவி சுத்திகரிக்கிறது. நீதிமானாக்கப்படுதல் கணப்பொழுதில் நிகழ்வது. பரிசுத்தமாக்குப்படுதலோ தொடர்ந்து நிகழ்வது.
நீதிமானாக்கப்பட்டவர்கள் மீதே பரிசுத்தமாக்கப்படுதல் என்ற ஆசீர்வாதம் அருளப்படுகிறது. இப்பரிசுத்தம் புதிய உடன்படிக்கைக்குள் நாம் நுழைவதற்கு ஒரு நிபந்தனையாக இல்லாமல், அதன் விளைவாக ஏற்படும் அற்புத ஆசீர்வாதமாக அமைகிறது. இந்தப் பரிசுத்தமும் தேவ கிருபையினது ஈவேயாகும். இதனைத் தெளிவாக விளக்குவதற்காக நீதிமானாக்கப்பட்ட ஒருவரே நன்மையும் தூய்மையுமாக கிரியைகளைச் செய்யமுடியும் என்று எடுத்துக்காட்ட விழைககிறேன்.
ஒரு செயலானது தேவனுடைய பார்வையிலே ‘நற்கிரியையாக இருக்க வேண்டுமென்றால் அது சரியான நோக்கத்துடன், சரியான முறையில், சரியான குறிக்கோளுடன் செய்யப்பட வேண்டும். கடவுள்பேரிலுள்ள அன்பினால் அது ஆற்றப்படவேண்டும். அவருடைய மகிமையையே குறிக்கோளாகக்கொண்டு, அவர் கட்டளையின்படியே அது செய்யப்படவேண்டும். ஒருவேளை பாவியான ஒருவன் சரியான முறையைக் கையாண்டாலும், சரியான நோக்கத்துடனும், சரியான கோளுடனும் செயல்பட முடியாது.
விசுவாசி ஆற்றும் நற்கிரியைகள் இரட்சிப்பைச் சம்பாதிக்க அல்ல, அது தேவனுடைய கிருபையின் ஈவாகவே உள்ளது. கிருபை மிகுந்த தேவன்பேரில் உள்ள அன்பினாலும், நன்றியுணர்ச்சியினாலும், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளுவதில் விசுவாசி ஆர்வம் காட்டுகிறார். ‘என் கற்பனைகளைக் கைக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான்” என இயேசு பெருமானும் கூறினாரன்றோ? (யோவான் 14:21). மெய்யாக கீழ்ப்படிதலானது கடவுள்பேரிலுள்ள அன்பிலிருந்து தோன்றுகிறது. மெய்யான அன்பு கடவுளுக்குக் கீழ்ப்படிதலை உருவாக்குகிறது.
மேலும் விசுவாசிகள் கிறிஸ்துவோடு ஐக்கியப்படுவதின்பலனாக பரிசுத்தம் உருவாகிறது. அவ்வாறு அவர்கள் கிறி ஸ்துவோடு ஐக்கியப்பட்டதாலேயே பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் உறைகிறார். விசுவாசிகளுடைய வாழ்க்கையிலும், இருதயங்களிலும் பரிசுத்தம் உருவாக ஆவியானவர் திருவசனத்தைப் பயன்படுத்துகிறார். ‘உம்முடைய சத்தியத்திலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17). சத்திய வேதமே விசுவாசத்தின் அடிப்படையாக இருப்பதால் அதன் சத்தியத்தைத் தெளிவாகக் கண்டறியும்போதே ஆவியின் நற்கனியாகிய பரிசுத்தம் நம் வாழ்க்கையில் உருவாகும்.
விசுவாசிகளே பரிசுத்தத்தை நாடும்பொருட்டு வேதம் அவர்களை ஊக்குவிக்கும் சில ஏதுக்களை ஈண்டுக் காண்போம்.
- விசுவாசிகள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அவர்கள் கிரயத்திற்கு வாங்கப்பட்டவர்கள். இயேசு கிறி ஸ்துவின் விலையேறப்பெற்று இரத்தமானது கிரயமாக செலுத்தப்பட்டமையால் அவர்கள் பாவத்தை வெறுத்து தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளு இந்த இரத்தமே அவர்களை ஏவுகிறது. சிலுவையின் அடியில் நின்று இரட்சகர் படும் பாடுகளைக் காணுரும் விசுவாசி எல்லா பாவங்குளையும் வெறுக்கவேண்டும் அன்றோ? ‘ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால் அவன் சபிக்கப்பட்டவன்” என பவுல் எச்சரிக்கிறார் (1.கொரி 16:22).
- விசுவாசிகள் தெய்வீக பரம அழைப்பைப் பெற்றவர்கள். அவர்கள் பரிசுத்தராயிருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். ‘உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1பேது 1:15). இக்கட்டளை அவர்களைப் பரிசுத்தமாயிருக்க தூண்டுகிறது.
- தேவனுடைய சகல இரக்கங்களும், கிருபையும் சிறப்பாக அவர் நமக்கு அருளும் இலவசமான பாவ மன்னிப்பு. நாம் அவருக்கு கீழ்ப்படிய வேண்டுமென்ற ஆவலை உண்டுபண்ணுகிறது. ‘சகோதரரே, நீங்கள் உங்ககள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” என பவுல் அப்போஸ்தலன் வலியுறுத்துகிறார் (ரோம 12:1). தான தகுதியற்றவனாயிருக்கையில் கிடைக்கப்பெற்ற இவ்விரக்கங்கள், தேவனுடைய கிருபையை விசுவாசி போற்றுpத் துதிக்கச்செய்கின்றன.
- விசுவாசிகள் கடவுளின் பிள்ளைகளாகவும் சுதந்தரவாளிகளாகவும் சுவிகாரம் பெற்றுள்ளனர். விசுவாசியான ஒருவன் பாவ வழியில் நடக்கும்போது பரிசுத்த ஆவியானவர் துக்கமடைவார் என்பதனால் அவ்விசுவாசி அவ்வாறு கவலையீனமாக வாழாதபடி தடுக்கப்படுகிறான்.
- கடவுளின் வாக்குத்தத்தங்களும் தேவ பிள்ளையைப் பரிசுத்த மார்க்கத்தில் முன்னேறிச் செல்லவே ஊக்குவிக்கின்றன. ‘இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத்தப்பி, திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது” என அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார் (2பேது 1:4).
- கடவுள் தகப்புனாக தமது பிள்ளைகளைச் சிட்சிக்கிறார். கீழ்ப்படியாத பிள்ளைகளைத் தண்டித்து திருத்துவது பொறுப்புள்ள தகப்பனது கடமையோகும். ‘எந்தச் சிட்டையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என வேதம் கூறுகிறது (எபி.12:11). கடவுளின் தண்டனைக்குப் பயந்து பரிசுத்தத்தை நாடுவோமாயின் அது பரிதாபமே. எனினும் நாம் கீழ்ப்படிய நம்மைத் தூண்டுவதற்குத் தண்டனையும் ஒரு காரணமாகும் கடவுளின் கிருபை நிறைந்த அன்பிலிருந்தே கண்டிப்பு பிறக்கிறது. பரிசுத்த வாழ்விற்கு நடத்தும் வழிகளில் இவை முக்கியமானவைகள்.
மேற்கூறியவைகள் பரிசுத்தமாக்கப்படுதலானது நமது இரட்சிப்பில் மிக முக்கிய அம்சம் என்பதை நிரூபிக்கின்றன. பாவிகளுக்கு தேவ கிருபை இலவசமாக அருளப்படுவதினால் அவர்கள் தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருக்கலாம் என்பதல்ல. பரிசுத்த வாழ்க்கை நித்திய ஜீவனை அவர்களுக்குச் சம்பாதிக்காவிட்டாலும் கடவுளின் பிள்ளைகளது வாழ்க்கையில் பரிசுத்தமென்னும் நற்கனி காணப்படுவது இன்றியமையாததாம். அது இல்லாவிட்டால் அவர்கள் இரட்சிப்பையடைந்ததற்கு மெய்யான சான்று கிடையாது. இவ்வுண்மையை ஒருபோதும் மறக்கக்கூடாது.
எந்த செயலும் கடவுள்பேரிலுள்ள மெய்யான அன்பின் அடிப்புடையில் செய்யப்படாவிட்டால் அது அவருக்கு உகந்ததாய் இருக்க முடியாதென்பது தெளிவு. எனவே அவிசுவாசிகள் செய்யும் மிகச் சிறந்த நற்செயல்களும்கூட தவறானவையே. பாவிகள் கிறிஸ்துவைத் தமது இரட்சகராக அறிந்துகொள்ள அவர்களை நற்செயல்களைச் செய்யச் சொல்லுவது வீணான முயற்சியாகும். கிறிஸ்துவை இரட்சகராக அறிந்துகொள்ளும் அறிவானது ஒரு பாவி தனது சுயமுயற்சியினால் பெறுவதல்ல. அது தேவ கிருபையினால் அவனுக்கு அருளப்படும் ஈவாகும்.
எனவே தேவனுடைய அளவற்ற கிருபையினால் நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளே நம்மைப் பரிசுத்த வாழ்க்கைக்குத் தூண்டுகின்றன. அன்பனே! இந்த தெய்வீகக் கிருபையின் மெய்த் தன்மையைப் புரிந்து வாழ முற்படுவாயாக. அது இரட்சிப்பின் ஆசீர்வாதங்களை நமக்கு வெளிப்படுத்தி, நமக்கு அவற்றைச் சொந்தமாக்கும். தேவகிருபையே பரிசுத்த வழியை நமக்குப் போதித்து அதில் நாம் முன்னேறிச் செல்லத் தூண்டுகிறது. நமது வாழ்க்கை பரிசுத்தமாய் இலங்கிட இயேசு அருள்புரிவாராக!
‘மகனே, உன் நெஞ்நெனக்குத்தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன், இது பாராயோ?
அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே – பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே.”











