- கிறிஸ்துவின் தன்மையால் பலிதமாகும் கிருபை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மையினால் நமது இரட்சிப்பு பூரணம் பெற்றிருக்கிறது. ஆண்டவரது இரு தன்மைகளையும் நாம் தெளிவுற விளங்கிக்கொள்வது அவசியம். ஒரே ஆள்த்தத்துவத்தில் இரு தன்மைகளைக் கொண்டவர் கிறிஸ்து. அவர் தெய்வத்தன்மையும் மனிதத் தன்மையும் ஒருங்கே அமைந்தவர். கடவுளாகவும் மனிதனாகவும் திகழ்ந்தவர். இவ்விதமாக அவர் தனித்தன்மை வாய்ந்தவராய் இருந்ததால்தான் கிருபையினால் அருளும் மீட்பு அத்துணை பரிபூரணமாய் இருக்கிறது.
அவர் மெய் மனிதனாக இருக்கவேண்டும். ஏனெனில் கடவுள் தாம் படைத்த மக்கள் கைக்கொள்தவற்கான கட்டளைகளை ஆதிமுதல் பிறப்பித்திருந்தார். அவைகளைக் கடைப்பிடிக்க முடியும் என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டுவது அவசியம். ஆதி மனிதனாகிய ஆதாம் தேவ கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினான். மனிதனாகிய கிறிஸ்துவோ முற்றிலும் கடைபிடித்து பூரணமாய் நிறைவேற்றினார். ஒரு முறையேனும் பிதாவைப் பிரியப்படுத்தத் தவறினதில்லை அவரது மெய் மனிதத் தன்மையின் அடிப்படையிலேயே அவர் நீதிக் கட்டளைகளை நிறைவேற்றினது முழுமையாய் அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் அவர் ஒரு தேவதூதனாக தேவ கட்டளைகளைக் கைக்கொண்டிருந்தால் ஒரு மனிதன் அவைகளைக் கடைபிடிக்கக்கூடும் என்று நிரூபித்திருக்க முடியாது. ஆதாமாகிய மனிதன் பாவம் செய்தான். ஆகையால் கிறிஸ்துவாகிய மனிதர் தாம் பூரணமாக கீழ்ப்படிந்து நிறைவேற்றவேண்டும். மேலும் கிறிஸ்துவினது மனிதத் தன்மையானது மனுக்குலத்தின் ஆதிப்பெற்றோரோடு தொடர்புடையதாயிருத்தல் வேண்டும். அவர் தனிப்பட்ட மனிதனாக திடீரென உருவாக்கப்பட்டிருந்தால் அவது பொருத்தமானதாயிருக்காது. அப்படியிருந்தால் அவருடைய மனிதத் தன்மையானது அவர் இரட்சிக்கவந்த மனுக்குலத்தின் தன்மைக்கு ஒத்திருக்காது. ஒருவனை மீட்டுக்கொள்ளும் உரிமையானது அவனுடைய நெருங்கிய உறவினனுக்கே உரியது என திருமறையில் காண்கிறோம் (லேவி.25:48-49).
அதே நேரத்தில் அவருடைய மனிதத் தன்மை முற்றிலும் பாவமற்றதாக இருத்தல் இன்றியமையாததாகும். நமது பாவ இயல்பினால் நாம் தேவ கட்டளைகளை முற்றிலுமாகக் கைக்கொள்ளத் தவறுகிறோம். இயேசு கிறிஸ்துவினது மனிதத் தன்மையிலும் அணுவளவேனும் களங்கம் இருத்திருப்பின் கீழ்படிந்திருக்க முடியாது. கடவுளின் ஞானம் எத்தனை உன்னதமானது! இரட்சகராகிய இயேசு கிறிஸ்து ஒரு பெண்ணின் மகனாய்ப் பிறக்கவேண்டியிருந்தாலும்அவர் ஆதாமின் பாவக்கறைக்கு நீங்கலான விதத்தில் பெண்ணின் கர்ப்புத்தில் உற்பத்தியானார் (மத்.1:20). அவரே மாசற்ற பிறப்புடையவர். ஆதாம் முதல்கொண்டு பாவ இயல்புடைய மனித வர்க்கத்தில் இயேசுவானவர் பிறந்தாலும் மனித தன்மையில் உள்ள பாவம் இல்லாதவராகவே அவர் உதித்தார்.
இரட்சகரானவர் மனிதத் தன்மையோடு தெய்வத்தன்மையும் பொருந்தியவராக இருக்கவேண்டுமென்பது இன்றியமையாததாயிருந்தது. மானிடராகிய நாம் எல்லாவற்றிற்கும் கடவுளையே முழுவதுமாக சார்ந்திருப்பதால் நாம் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படிவரு அவசியமாகும். உலகில் பிறக்கும் எவரும் கடவுளின் ஆதரவு இன்றி தாமாகவே வாழமுடியாது. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் நம் பொருட்டாகக் கடவுளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிய வேண்டியதிருக்கிறது. தம் பொருட்டாகக் கடவுளுக்குக் கீழ்ப்படிய அவசியமில்லாத ஒருவரே மற்றவர்கள் பொருட்டாகக் கடவுளுக்குக் கீழ்ப்படிய முடியும். எனவே நம்மை இரட்சிக்கவல்ல ஒருவர் நம்மைப்போல் கடவுள் பேரில் சார்ந்திராமல் தாமே தெய்வத்துவம் வாய்ந்தவராய் இருத்தல் வேண்டும் அன்றோ?
பாவம் ஒரு எல்லையற்ற தீமையாகும். எந்தத் தீய செயலினது தீமையும் அச்செயலால் மீறப்படுகிற சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்தது. அந்தச் சட்டத்தினது முக்கியத்துவம் அதைப் பிறப்பித்த பெருமானின் அன்பையும் உயர் அந்தஸ்தையும் பொறுத்ததாகும். பரம்பொருளாகிய கடவுள் எல்லையற்ற அன்பும் அந்தஸ்தும் அதிகாரமும் உடையவர். அவர் பிறப்பித்த சட்டங்களும் எல்லையற்ற முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே மானிடர்களாகிய நாம் அவற்றிற்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிவது இன்றியமையாதது. நமது கீழ்ப்படியாமை எல்லை கடந்த குற்றமாகும். அதன் காரணமாக நமது பாவம் முடிவற்ற தண்டனைக்குரியதாகிறது. எல்லையற்ற தேவ கோபாக்கினையை வருவிக்கும் எல்லையற்ற தீமையான பாவத்தைச் சுமக்க எல்லையில்லா தெய்வீகமுள்ள இரட்சகரைத் தவிர யாரால் இயலும்? இயேசு ஒப்பற்ற மீட்பரானால் அவர் கடவுளாகவும் மனிதனாகவும் இருக்கவேண்டும்.
பாவத்தளையிலிருந்து நம்மை விடுவிக்கவல்ல இரட்சகர் ஒருங்கே மனிதனாகவும் இறைவனாகவும் இருத்தல் அவசியம். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் அதாவது குற்றமிழைக்கப்பட்ட பரிசுத்த இறைவனுக்கும் குற்றமிழைத்த பாவிக்கும் இடையில் ஒருவர் இருத்தல் மிக அவசியமாயிருக்கிறது. இயேசுவானவர் தெய்வீகத்தன்மை மட்டும் வாய்ந்தவராயிருப்பின் அவர் மக்களின் பிரதிநிதியாயிருக்க இயலாது. அவர் மனிதத்தன்மை மட்டுமே உடையவராய் இருப்பின் அவர் மக்களுக்காக கடவுளிடம் பரிந்து பேசமுடியாது. அவரது ஆள்ததத்;துவம் தெய்வீகம் மட்டுமானால் அது மனிதருக்கு எட்டாத உயராமாகும். மாறாக வெறும் பாவ மனிதத்தன்மையானால் அது கடவுளுடைய பார்வையில் மிகத் தாழ்வாகும். எனவே தெய்வீகத்தையும் மனிதத்துவத்தையும் கொண்ட ஆள்தத்துவமுடைய இயேசுவே இருதரப்பினரையும் இணைக்கக்கூடும்.
பிரதான ஆசாரியனாகவும் தீர்க்கதரிசியாகவும் மற்றும் இராஜாவுமாக தமது கடமைகளை ஆற்ற இயேசுவானவர் ஒருங்கே மனிதனாகவும் தெய்வமாகவும் இருத்தல் அவசியம்.
- பிரதான ஆசாரியனாக அவர் பலி செலுத்த பலிபொருள் ஏதேனும் பெற்றிருக்கவேண்டும். ஆனால் முழுமையான தெய்வீகம் வாய்ந்தவர் கடவுளுக்கு எதையும் படைக்க இயலாது. ஆகையால் பூரணமான மனிதத்துவத்தை காணிக்கையாக படைப்பதற்குக் கிறிஸ்து மனிதனாக இருத்தல் அவசியமாயிருந்தது. எல்லையற்ற பாவ திரளிற்கு பரிகாரமாக தமது மரணத்தில் அவர் படைக்கும் மனிதத்துவம் ஆகிய பல எல்லையற்ற உன்னத மதிப்புப் பெற்றதாயிருக்கவேண்டும். மாமேன்மையான அந்நிலை அவரது யெ;வீகத்தின் மூலமாகவே வரக்கூடும். எனவே இறை மனிதத்தன்மைகள் ஒருங்கே அமைந்தவரே நமக்கும் பிரதான ஆசாரியனாக விளங்க முடியும்.
- தீர்க்கதரிசியான அவர் கடவுளின் திருவுளசித்தத்தை அறிவதற்கும் எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் தமது Nபுhதனையை நாடும் மக்களுடைய உள்ளங்குளைப் புரிந்துகொள்ளுவதற்கும் கடவுளாயிருத்தல் அவசியமாகும். அதே நேரத்தில் மனிதர் புரிநு;துகொள்ளும் விதத்தில் கடவுளின் சித்தத்தைத் தமது வாழ்க்கையிலும் வார்த்தையிலும் வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக அவர் மனிதனாக இருத்தல் அவசியமாயிருக்கிறது (எபி.1:1, யோ.1:14).
- இராஜாவாக அவர் மனிதராகிய நமது மனச்சாட்சிகளை அடக்கி ஆளவும், திருச்சபையின் தனிப்பெருத்தலைவரால் இருக்கவும், தம்மைப் பின்பற்றுவோருக்கு நித்திய ஜீவனை அருளி அனைவருக்கும் நியாயாதிபதியாய் விளங்குவதற்கு கிறிஸ்து கடவுளாயிருப்பது அவசியம். அதே நேரத்தில் அவர் மனிதராய் இல்லாவிடில் தம்மோடிணைந்திருக்கிற திருச்சபையாகிய உடலின் தலையாக இருக்கவும், தமது குடிமக்களுக்கு இரக்கம் காட்டவும் அவரால் இயலாது (எபி.2:18). இரு தன்மைகளும் வாய்ந்த தன்னிகரற்ற கிறிஸ்துவின் பூரண மீட்பின் கிரியைமீது நாம் பூரணமாக சார்ந்துகொள்ளலாம். ஏனெனில் அவர் ஒருவரே தமது ஒப்பற்ற இரு தன்மையிலும் நமது மீட்பராயிருக்கத் தகுதியுள்ளவராயிருக்கிறார். இத்தகைய ஒப்பற்ற இரட்சகர் நமக்குக் கிருபையாக அருளும் மீட்பானது அதி உன்னதமானது. அது இணையீடற்றது. தேவ கிருபையே ஆட்சிபுரிகிறது.
நண்பனே! கடவுளின் அன்பையும் ஞானத்தையும் அளவிட்டுரைக்க இயலுமோ? அதனை வியந்து பணிந்துபோற்றுவாயாக! இயேசு கிறிஸ்து மெய்யான கடவுள் இல்லை என்றோ அல்லது மெய்யான மனிதன் இல்லை என்றோ நீ மறுப்பது எத்தனை பெரும் பாதகமாகும். கிறிஸ்துவினது தெய்வீகத்தையும் மனிதத்துவத்தையும் மறுக்கும். இவ்விருபெரும் தவறுகளும் விசுவாசிகளுக்கம் கடவுளுக்கும் இடையில் நடுவராய் இயங்கும் அதி உன்னத நிலையைத் தகர்த்தெறிகின்றன. இயேசு கிறிஸ்துவினுடைய மீட்பின் கிரியையை உள்ளபடிப் புரிந்துகொள்ளுவதற்கு அவருடைய தெய்வீகமும் மனுஷீகமும் இன்றியமையாதவை.
இவ்வொப்பற்ற மீட்பரண்டை பாவிகள் ஓடிவருவார்களாக!
இரட்சிக்க வல்லவராகிய கிறிஸ்துவை விசுவாசியுங்கள்! அவரது சத்திய போதனைகளையும் நடத்துதல்களையும் நித்தமும் நாடுங்கள். இராஜாதி இராஜாவாகிய அவரில் புகலிடம் கொள்ளுங்கள். அவருக்கே மனப்பூர்வமாய்க் கீழ்ப்படியுங்கள். ஏகச்சக்ராதிபதியாய் வீற்றிருக்கிற அவர்முன் வீழ்ந்து வணங்குங்கள். நித்தியானந்த கடவுளாகிய அவரையே உளமுவந்து துதியுங்கள். அவர் தமது உன்னத வல்லமையால் வெளிப்படுத்தும் கிருபையின் மாட்சிமைதான் என்னே! நம்மீது பொழிந்த அவரது மாட்சிமைமிக்க அருளே போற்றி! போற்றி!
‘மாசில்லாத மெய்த் தேவன்
மானிட ரூபமுடையார்
இயேசுகிறிஸ்து வென்ற
இனிய நாமமுடையார்.”









