• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

டேவிட் பிரெய்னார்ட்

April 4, 2016
in மிஷனறிகள்
0 0
டேவிட் பிரெய்னார்ட்

மிஷனறி வீரனாக மாறிய பெலவீன இளைஞன் டேவிட் பிரெய்னார்ட்

(1718 – 1747)

டேவிட் வா! வனத்திற்குள் சென்று நாம் விளையாடி மகிழ்ச்சியடையலாம் என்று நண்பர்கள் அழைத்ததற்கு, சிறுவன் டேவிட் அவர்களோடு போகமுடியாதவனாய் மரத்தின்கீழ் உட்கார்ந்திருந்தான். அவன் பெலவீன சரீரம் உடையவன். வீரச்செயல்களை அவனால் எடுத்துச் செய்யமுடியாது. டேவிட்டின் நண்பர்கள் புதுஅனுபவங்களையும், சாதனைகளையும் தேடித் திரியும்போது, அவனால் அவர்களோடு செல்ல முடியாதவனாய் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஏன் அத்தனை இளைத்த உடம்பு? எப்போதும் மரத்துண்டின் மீது உட்கார்ந்து மற்ற நண்பர்களின் விளையாட்டுகள், தீரச் செயல்கள் இவைகளைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமோ? கடவுளின் மேலான சித்தத்தை சிறுவன் டேவிட் அப்போது அறியாதிருந்தான்.

சிறுவன் டேவிட்

டேவிட் பிரெய்னார்ட் 1718ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பிறந்தவன். மிகவும் இளைத்த மெலிவான சிறுவனாகக் காணப்பட்டான். அவன் மற்றப் பையன்களைப்போல ஓடி ஆடி விளையாட விளையாட முடியாது. அவனில் காணப்பட்ட மிக அமைதலான சுபாவத்திற்கு இதுவே காரணமாக இருக்கலாம். ஆரம்ப வயதிலேயே தன் ஆத்த மீட்பைப் பற்றிக் கவலைப்பட்டவன். மரிக்கப் பயந்தவன். ஆனால் மகிழ்ச்சியாயிருக்கவும் மரித்த பின் பரலோகம் செல்லவும் வாஞ்சித்த ஓர் இளைஞன். எனினும் மனம் திரும்புதல் என்னவென்று அவனுக்குத் தெரியாது. அவனுடைய 9ம் வயதில் தகப்பன் மரித்துப்போனார். 14 வயதில் தன் தாயை இழந்தான். சிறுவயதிலேயே அநாதையாக விடப்பட்ட பிரெய்னார்;ட் மனம் சோர்ந்து ஆவிக்குரிய வாழ்க்கையின் நோக்கம் அற்றவனாய் காணப்பட்டான்.

புது வாழ்வடைதல்

பிரெய்னார்ட் வாலிப வயதில் தன்னை தீய நண்பர்களிடமிருந்து காத்துக்கொண்டான். அதிக நேரம் nஐபத்தில் தரித்திருந்தான். வேதம் வாசித்து தியானிப்பதில் அதிக நேரம் செலவழித்தான். ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும், மற்ற வாலிபரோடு சேர்ந்து, வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டான். ஆழமான ஆவிக்குரிய வாழ்க்கை நடத்த முயற்சித்தான். ஞாயிறு மாலையில், அன்று கேட்ட தேவசெய்தியை மறுபடியும் நினைவில் கொண்டுவந்து ஆழமாய் மனதில் பதிய வைப்பான். இவ்விதம் செய்வதனால், தன்னில் சுயநீதியை நிலைநாட்டினானேயன்றி கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக அறிந்திருக்கவில்லை. தன் மனதில் மெய் சமாதானத்தையும் பெற்றிருக்கவில்லை.

ஒரு நாள் தேவகோபாக்கினை தன்மேல் இருப்பதாக உணர்ந்தார். மனநிம்மதியை இழந்துவிட்டார். அன்றிலிருந்து அனுதினமம் மதகோட்பாடுகளை வெகு ஐhக்கிரதையாக அனுசரிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் குற்ற உணர்வு அவரை மிகவும் வாட்டியது. தன்னை கைவிடப்பட்டவனாக எண்ணினார். தன் நற்கிரியைகளில் சார்ந்திருப்பதிலிருந்து அவரை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. கிறிஸ்துவையே முழுவதும் சார்ந்து நம்புவதில் அவருடைய சுயநீதி தடையாய் இருந்தது. முடிவில் தூயஆவியானவர் முழுமையாய் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள உதவிசெய்தார். எவ்வித நிபந்தனையுமின்றி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். 21ம் வயதில் புதிய வாழ்க்கையில் பிரவேசித்தார். மறுபிறப்பின் அனுபவத்தைப் பெற்றார்.

கல்லூரிப் படிப்பு

ஏல் கல்லூரியில் சேர்ந்து படிக்க பிரெய்னார்ட் திட்டமிட்டார். மறுபிறப்படைந்த இரண்டாவது மாதத்தில் கல்லூரிப் படிப்பை ஆரம்பித்தார். பல சோதனைகள் மத்தியில், தூய வாழ்க்கை நடத்த முடியாது என்று பயந்தார். கர்த்தருடைய வார்த்தையை தியானித்து nஐபத்தினாலும் அவர் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டார். கடவுளோடு ஐக்கியப்பட அதிக நேரத்தைச் செலவழித்தார். கிறிஸ்துவைச் சேவிப்பதில் அதிக நாட்டம் கொண்டார். படிப்பில் நல்ல கவனம் செலுத்தியதால் அவர் சிறப்பு மாணவானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரீர பெலவினத்தால் நோய்வாய்ப்பட்டு அநேகமுறை கல்வி கற்பதில் தடை ஏற்பட்டது. ஒரு சமயம் கடின படிப்பினால் அதிக நோய்வாய்ப்பட்டு, வீட்டிற்குச் சென்று ஒய்வெடுக்க அனுப்பப்பட்டார். காசநோயினால:; பீடிக்கப்பட்டு இரத்தம் கக்கியதால் பெலவீனம் ஏற்பட்டது. வியாதிப்படுக்கையில் கிறிஸ்துவோடு அதிக நேரம் nஐபிக்க வாய்ப்பிருந்தது. கடவுளோடு கொள்ளும் ஒரு மணி நேர உறவினால் வரும் பேரானந்தம் உலக இன்பங்களையெல்லாம்விட மிக சிறந்தது. எவ்வளவுக்கதிகமாய் கிறிஸ்துவோடு உள்ள நமது ஐக்கியத்தின் இரகசியத்தை நாம் கற்றுக்கொள்கவேண்டியதாய் இருக்கிறது. எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை அதனால் சாத்தியமாகிறது.

தேவஊழியத்திற்கு அழைப்பு

கல்லூரிப் படிப்பில் மூன்றாவது ஆண்டில் இருக்கும்போது, கல்லூரியை விட்டு வெளியேற எதிர்பாராத துயர சூழ்நிலை ஏற்பட்டது. அவரது வாழ்க்கையில் இது ஒரு பெரிய ஏமாற்றமே. மற்ற சக மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டங்களைப் பெறும்போது அவர் தம் நாள் குறிப்பில் இவ்வாறு எழுதியதாவது: இந்நாளில் நானும் கல்லூரியில் பட்டங்களைப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் கடவுளே அதை எனக்குத் தர மறுத்துவிட்டார். அதே நேரத்தில் கிறிஸ்துவை அறியாத மக்களைப்பற்றிய ஒரு மனபாரத்தையும், கவலையையும் கர்த்தர் கொடுத்தார் என்பதே. அந்தகாரத்தில் இருக்கும் மக்களைக் குறித்து குறிப்பாக கவலைகொண்டார். சிவப்பு இந்தியர் அல்லது அமெரிக்க இந்தியர்கள் என அழைக்கப்பட்ட ஆதி இன் மக்களிடத்தில் திருப்பணி செய்ய மிசனறிகள் இல்லை. அவர்கள் கிறிஸ்துவை ஒருபோதும் அறிந்திராதவர்கள். பலமுறை தன் நீண்ட nஐபங்களில் இம்மக்களின் இரட்சிப்புக்காகப் போராடி, கிறிஸ்துவின் வழி நடத்துதலுக்காகக் காத்திருந்து நற்செய்தியை எடுத்துச் செல்ல ஆயத்தமாயிருந்தார்.

அமெரிக்க இந்தியர்களிடம் உம்மை மிசனறியாக அனுப்ப விரும்புகிறோம். உம்முடைய உதவியை பெரிதும் வரவேற்கிறோம் என்று நியூயோர்க் போதகர் ஒருவரால் பிரெய்னார்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உடனே மிசனறியாகச் செல்ல விரும்பிய பிரெய்னார்ட் முழு பெலத்தோடு காணப்படவில்லை. அமெரிக்க இந்தியர்களிடம் மிசனறியாகச் செல்லுகிறவர்கள் அடர்ந்த காடுகளையும் மிக ஆபத்தான காட்டாறுகளையும் நீரோடைகளையும் கடந்து செல்லவேணடும். இவர் எப்படி இத்தனை ஆபத்துக்களையும் கடந்து செல்வார்? கடவுள் அவரை மிசனறியாக அனப்புவாரென்றால் அவருக்குத் தேவையான பெலனையும் வல்லமையையும் அவர் கொடுப்பார் என்று அவருடைய நண்பர்கள் கூறினார்கள். அமெரிக்க இந்தியர்களுக்கு மிசனறியாகச் சேவை செய்ய பிரெய்னார்ட் தன் மனதை திடப்படுத்தி தீர்மானித்துவிட்டார்.

அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் திருப்பணி

டேவிட் பிரெய்னார்ட் தன்னுடைய 24ம் பிறந்த நாளன்று நாள் குறிப்பில் என் வாழ்நாளை கிறிஸ்துவின் மகிமைக்காக தத்தம் செய்து செலவழிக்கப்பட ஒப்படைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு அடர்ந்த காடுகள் மத்தியில் தனியாக வாழந்து, நாகரீகமற்ற இந்திய மக்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்க சென்றுவிட்டார். புத்தகங்கள் கூடுதலாக இருந்த உடைகள் ஆகியவற்றை விற்றுவிட்டார். வெளி உலகினின்று தன்னை பிரித்துக்கொண்டு, மகிழ்ச்சி தரக்கூடிய அந்த ஒரே இடத்தை நாடிச் சென்றார். காடுகள், மலைச்சரிவுகள் பள்ளத்தாக்குகள் ஆகிய இடங்களில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்களின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார். நாள் குறிப்பில் தனக்கு ஏற்பட்ட தீரச் செயல்களையும் அபூர்வ நிகழ்ச்சிகளையும் குறித்துவைக்க ஆரம்பித்தார். இதிலிருந்துதான் அவருடைய வன வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்கிறோம்.

ஆபத்துகளும் கடின வாழ்க்கை முறையும்

பிரெய்னார்ட் அவர்கள் அநேகமுறை குளிருக்கும் பசிக் கொடுமைக்கும் உட்பட்டார். வாழ்க்கை வசதிகள் ஒன்றையும் அவர் பெற்றிருக்கவில்லை. சோர்வு, சுகவீனம், கடின வாழ்க்கைமுறை இவற்றைத் தாங்கிக்கொண்டவராய் திருப்பணியில் முன்னேறிச் சென்றார். கொட்டும் பெருமழையில் ஓர் இரவு முழுவதும் பிரயாணம் செய்தும் ஒரு குடிசையோ, கூடாரமோ, மறைவிடமோ அவருக்குத் தென்படவில்லை. மிக ஆபத்தான பாதைகளில் நடந்தும் , குதிரையின்மீதும் பிரயாணம் செய்வார். எப்போதுமே அவருக்குப் பிரயாணங்கள் மிகுந்த அபத்துக்கள் நிறைந்ததாகவே இருந்தன. ஒருவரும் சென்றடைய முடியாத சில இன மக்களிடம் செல்லுவதற்காக மலைகளையும், செங்குத்தான பாறைகளையும் இரவு நேரங்களில் கடக்கவேண்டியதாயிருந்தது. ஆபத்துக்கள் நிறைந்த சதுப்பு நிலப்பிரதேசங்களையும் கடந்து சென்றார். ஒருநாள் கடுமையான இருளில் தன் மொழிப்பெயர்ப்பாளருடன் ஒரு மலைப் பிரதேசத்தைக் கடந்து செல்ல முயற்சித்தார். மலைகளுக்கு கீழே மிக ஆழமான மலை அருவிகளும், ஆறுகளும் பாய்ந்துகொண்டிருந்தன. குதிரைகள் தடுமாறி தவறுமானால் பல நூறு அடிகள் கீழே விழ ஏதுவாகும். ஆழமான ஆறுகளில் விழுந்தாலும் தப்ப முடியாது. அன்று இரவில் குதிரையின்மேல் பிரெய்னார்ட் பிரயாணம்செய்துகொண்டிருக்கும்போது பாறைகளின் இடுக்கில் குதிரையின் கால் சிக்கிக்கொண்டது. வலி தாங்கமுடியாமல் குதிரை துடிக்கவே பிரெய்னார்ட் தூக்கியெறியப்பட்டு தரையில் விழுந்தார். தெய்வாதீனமாக கீழே புரண்டு ஓடும் ஆற்றில் விழாமல் தப்பினார். கட்டுக்கடங்காமல் புரண்டு ஓடும் நீர் ஓடைகளைக் கடக்கும்போது nஐபித்துக் கொண்டே தேவ ஒத்தாசையைப் பெற்று நடந்துசெல்வார்.

பலமுறை அவருக்கேற்ற ஆகாரம் கிடைக்காது. பத்து முதல் 15 மைல்கள் பிரயாணப்பட்டு ஒரு ரொட்டியை வாங்க வேண்டியதிருக்கும். அப்படி வாங்கப்பட்ட ரொட்டியும் சாப்பிடுமுன் புளிப்பாகி பூசணம் பூத்துவிடும். சில சமயங்களில் அந்த ரொட்டியும் கிடைக்காமல் போய்விடும். பலகைகள்மேல் பரப்பி போடப்பட்ட வைக்கோல் புற்கள்மீது படுத்து உறங்குவார். அதிகத் தனிமையில் இருந்தபோது அவருடைய மொழிப்பெயர்ப்பாளருடன் மாத்திரம் உரையாட முடியும். மனப் பாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்தவ சகோதரர்கள் அவருக்கில்லை. அவரோடு nஐபிக்கவும் யாருமில்லை. எனக்கோ எவ்வித ஆறுதலுமில்லை. என் அனைத்து ஆறுதல் தேறுதல்களும் கடவுளிடம் மட்டுமே உள்ளது என்று நாள் குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.

சிவப்பு இந்தியர்கள்

பிரெய்னார்ட் தான் ஊழியம் செய்யத் தெரிந்துகொண்ட இந்தியர்கள் அநாகரிகமான ஆதிவாசிகள்;. மூடநம்பிக்கையால் கட்டப்பட்டிருந்தார்கள். பறவைகள், மிருகங்கள், மரங்கள் , பருவ காலங்கள் ஆகியவற்றை வணங்கி வந்தனர். அவர்களுடைய வணக்கமுறை விநோதமானது. ஆதிவாசிகள் பூசாரிகள், பிரெய்னார்ட்டின் மீது கோபமுற்றனர். அவர் சாகவும் நோய்வாய்படவும் மூடநம்பிக்கை செயல்களால் முயன்றனர். கட்டுப்படுத்த முடியாத நடனங்கள், மிலேச்சத்தனமான கூச்சல்கள் போட்டு அவரை வீழ்த்த எண்ணினர். அவரோ எவ்வித தீங்கும் நேரிடாமல் தைரியமாய் நின்று, கிறிஸ்துவே அதிகாரமுடையவர் என்று சாட்சி பகர்ந்தார். ஒரு நாள் ஒரு பூசாரி தோல் உடை உடுத்தி கிளிஞ்சல்களாலும், இலைகளாலும் அலங்கரித்துக்கொண்டு அவரிடம் வந்தான். என்னுடைய இன மக்களைச் சந்தித்து அவர்கள் பூர்வீக மதத்தையே பின்பற்றவேண்டும் என்று போதிப்பேன் என்றான். டேவிட் அவனுக்கு கிறிஸ்துவைப் பிரசங்கித்தார். அந்த முதிய பூசாரி மிகக் கவனமாய் கேட்டான். உள்ளத்தில் உணர்த்தப்பட்டவனாய் இனி பரலோகப் பிதாவை மாத்திரம் சேவிப்பேன் என்று தீர்மானித்தான்.

சிவப்பிந்திய மக்களிடம் பரவச நடனம நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதுவே அவர்கட்கு அதிக உற்சாகத்தைத் தரும் போர் நடனமாகும். வெட்ட வெளியில் பெருந்தீயை வளர்த்து அதைச் சுற்றிலும் நடனமாடும் நிகழ்ச்சியாகும். இளம் போர் வீரர்களும், வயோதிப பூசாரிகளும், தீயைச் சுற்றி சுற்றி வருவார்கள். சுவாலை உயர எழும்பும்போது, குதித்து நடனம் புரிவார்கள். பேரிரைச்சலும் கூச்சலும் இருக்கும். ஓர் இரவு முழுவதும் நடனமாடி களிப்பர். பலமுறை டேவிட்ட இந்நடன காட்சியை மறைந்திருந்தவாரே பார்த்துக்கொண்டிருப்பார். அடுத்தநாள் அவர்களுக்கு சுவிசேசத்தை அறிவிப்பார்.

கண்ணீரோடு செய்த சேவையும் திருப்பணியும்

எண்ணற்ற இடையூறுகள் ஏற்பட்டும், பிரெய்னார்ட் எப்படியாவது அமெரிக்க இந்தியர்கள் இரட்சிக்கப்படவேண்டுமென்று வாஞ்சித்தார். மிகுந்த கரிசனையோடு தனியாவே காடுகளுக்குள் சென்று பல மணிநேரம் இம் மக்களின் இரட்சிப்புக்காக nஐபிப்பார். அழுகையோடு மனப்பாரத்துடன் மன்றாடுவார். அநேகமுறை உபவாசித்து nஐபிப்பதுமுண்டு. சில சமயங்களில் அவருக்கேற்படும் பலத்த எதிர்ப்புக்கைளத் தாங்கமுடியாதவராய் மனச்சோர்வு அடைவதுமுண்டு. ஒரு சமயம் தன் நாள் குறிப்பில் எனக்கு எந்த ஒரு காரியமும் முக்கியம் வாய்ந்ததாகத் தெரிவதில்லை. என்னுடைய இதய தூய்மையும் பேய் அடிமைத்தனத்தில் வாழும் மக்களுடைய மாற்றமுமே அதிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதுகிறேன் என்றும் மற்றொரு முறை எவ்விடத்தில் எவ்விதம் வாழ்ந்தேன் என்பதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை, என்னென்ன உபத்திரவங்களைக் கடந்துபோனேன் என்பதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. அனால் கிறிஸ்துவுக்கென்று ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினேன் என்பதே பிரதானம். இதுவே என் வாழ்க்கையின் குறிக்கோளும் நோக்கமுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுந்த சரீர சுகவீனத்திலும் பாடு துன்பங்கள் மத்தியிலும் அவருடைய திருப்பணி தொடர்ந்தது. ஒரு சமயம் வெட்ட வெளியில் தங்கி உறங்கியதால் அதிக சுகவீனம் அடைந்தார். காய்ச்சலும் சரீர வேதனையும் மிகுதியானதினால், இரத்தம் அவர் வாயினின்று வெளிப்பட்டது. அநேகமாக மணரத்தை நெருங்கிவிட்டார். ஆனாலும் ஒரு வாரத்திற்குப் பின் டேவிட்டின் உடல்நிலை தேறி தன் பணியைத் தொடரமுடிந்தது. ஒவ்வொரு நாளிலும் பிரசங்கம் செய்து முடித்தவுடன் அதிக களைப்புடன் காணப்படுவார். காய்ச்சல் அதிகமாகும். எதுவும் செய்ய இயலாதவராய்ப் படுத்துவிடுவார். அதிகமாக இரத்தம் கக்க நேரிடும் இப்படியே அவர் வாழ்க்கையின் பெலன் சிறிது சிறிதாக குன்றிப்போய் இந்தியர்களை அவர் நேசித்ததினால் அவர்களுடைய இரட்சிப்புக்கென்று தன்னையே பலியாக வார்த்துவிட்டார்.

அவருக்கு மற்ற பல நற்குணங்கள் பணிசெய்ய கிடைத்தன. இப்படிப் பாடுகள் நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமா? சொந்த நகருக்கு அருகாமையிலே வசதியுள்ள பெரிய சபையின் போதகராகப் பணியாற்ற அழைப்புப் பெற்றார். வசதியுள்ள சபைகளை விரும்பிச் சென்றிருக்கலாம். உபத்திரவங்கள் நிறைந்த சிவப்பிந்தியர்கள் சேவைக்கு தன்னை அர்ப்பணிக்காதிருந்திருந்தால் உலகம் டேவிட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே முடியாது.

பலன்கள்

கண்வீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் (சங்.126:5) என்ற கடவுளின் வாக்குப்படி அநேக நாட்கள் இரவும் பகலும் பிரயாசப்பட்டு உழைத்த அவருடைய பணி பலன்தர ஆரம்பித்தது. உபவாச nஐபங்களும், கண்ணீரீன் வேண்டுதல்களும் கனிகொடுக்க ஆரம்பித்தன. பரிசுத்த ஆவியானவர் வல்லமையாய் கிரியை செய்ய ஆரம்பித்து, அவர்மேல் இறங்கினார். பிரெய்னார்ட் பிரசங்கித்த எல்லா இடங்களிலும் உள்ள சிவப்பு இந்தியரையும் ஆவியானவர் ஆட்கொண்டார். பரிசுத்த ஆவியானவரின் மகா வல்லமையான செயல்கள் 1745ம் ஆண்டு இந்தியர்கள் மத்தியில் நடைபெற்றன. தீய பாவ வாழ்க்கையில் வாழ்ந்து சுவிசேசத்தை எதிர்த்த அனைவரும் பாவ உணர்ச்சி பெற்று மனம் மாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களும் இவ்வற்புத ஊழியத்தைக் காண வந்தார்கள். பிரெய்னார்ட் சிவப்பு இந்தியருக்கு என்னதான் கூறுகிறார் என்று பார்க்க வந்த ஐரோப்பியரும் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஒருநாள் சிவப்பு இந்திய இளம்பெண் ஒருவள் அற்புத மனமாற்றம் நடைபெறுகிற நிகழ்ச்சியை அறிய அவலாய் பிரெய்னார்ட் இருந்த இடத்தை தேடி வந்தாள். பிரெய்னார்ட் அவளுக்கு தான் பிரசங்கித்து வந்த கிறிஸ்துவே உண்மையான ஒரே தெய்வம் என்றும், மனந்திரும்புதல் நம்மை தூயவாழ்வுக்கு வழிநடத்தும் என்றும் கூறினார். அவளோ கேலியாக சிரத்து அவரைப் பரியாசம் பண்ணினாள். என்றாலும் அவர் நடத்தின கூட்டத்தில் பங்குகொண்டாள். மிகக் கவனமாய் நற்செய்தியைக் கேட்கவே பாவ உணர்ச்சி பெற்று அழ ஆரம்பித்தாள். அவளால் உட்காரவோ நிற்கவோ முடியவில்லை. அத்தனைக்கதிகமாய் பாவ உணர்வு அவள் நிலைமையை எடுத்துக்காட்டியது. முடிவில் கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகரும் ஆண்டவருமாக ஏற்றுக்கொண்டாள். கர்த்தருடைய கிருபை இரக்கங்களுக்காக அழுது புலம்புவதும் சிவப்பு இந்திய மக்கள் சத்தமிட்டு அழுது பாவ உணர்வு அடைவதும் பிரெய்னார்ட் நடத்திய எல்லா கூட்டங்களிலும் நடைபெற்ற காட்சியாக அமைந்தது. மலைக் காடுகளில் வாழ்ந்து வந்த எல்லா சிவப்பிந்திய இன மக்களும் ஏராளமாய் வந்து பிரெய்னார்ட் அவருடைய பிரசங்கத்தைக் கவனமாய் கேட்டனர். கடவுளுடைய புத்தகத்தையுடைய வெள்ளைப் பிரசங்கியார் என்று அவர் எல்லாராலும் அறியப்பட்டார். சிறுவர்கள் வந்து அவர் கூறுவதைக் கேட்டனர்.

மிகக் குறுகிய வாழ்க்கை

டேவிட் பிரெய்னார்ட் 29 வயது நிரம்பியவரானார். இருண்ட குளிர் காடுகளில் திருப்பணி செய்ய தன்னை அர்ப்பணித்தபோது தான் அதிக நாள் உயிர்வாழமுடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நற்செய்தியைக் கேள்விப்படாத சிவப்பிந்தியருக்குச் சுவிசேசத்தை அறிவிப்பது தன் கடமை. சரீர சுகத்தைவிட பிரதானமானது என்றும் கருதினார். இவ்விதம் தன் சுகத்தைப் பொருட்படுத்தாது உழைப்பில் ஈடுபட்டதினால் என்றுமே சுகப்படுத்த முடியாத காசநோயின் பிடியில் சிக்கினார். சிறுது சிறிதாக அவருடைய ஐPவ இரத்தம் கொட்டப்பட்டது. மரப்படுக்கையில் படுத்திருக்கும்போது தாங்கமுடியாத சரீரவேதனையையும் துயரத்தையும் சகித்தார். கடைசி நேரத்திலும் தன் சகோதரனிடம் சிவப்பு இந்தியரின் ஆவிக்குரிய வாழ்க்கை மேம்பாட்டைக் குறித்தே உரையாடிக்கொண்டிருந்தார். சிவப்பிந்தியரை அவ்வளவாய் நேசித்து அன்பு கூர்ந்தார். வரப்போகும் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய சிந்தையும் நினைவும் எப்போதும் அவர் மனதில் நிலைத்து நின்றது. மிக மெல்லிய குரலில் நிச்சயமாகவே கிறிஸ்து வரப்போகிறார். தாமதம் செய்யார். நானும் தேவதூதரோடு சேர்ந்து என் தேவனை மகிமைப்படுத்துவேன் என்று பேசினார். அவ்வாறு அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே 1747ம் ஆண்டு அக்டோபர் 9ம் நாள் 29ம் வயதில் டேவிட் பிரெய்னார்ட் தான் சேவித்து வந்த ஆண்டவரைத் தரிசிக்கவும் மகிமைப்படுத்தவும் தேவதூதரோடு சேர்ந்து துதித்து ஆர்ப்பரிக்கவும் கிறிஸ்துவின் சமூகத்தை அடைந்தார்.

மிகக் குறுகிய வாழ்வே ஆனாலும் அது முழுவதும் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு. அந்த வாழ்க்கை எத்தனை நாள் ஐPவித்திருந்ததோ அத்தனை நாட்களும் பூரண உபயோகமும் ஆசீர்வாதமுமாகத் தத்தம் செய்யப்பட்டது. அவர் மரித்த பின்னும் அவருடைய வாழ்க்கை வரலாறு நாள்குறிப்பின் வாயிலாக அறியப்பட்டு உணரப்பட்டன. இவரைப் பின்பற்றி வில்லியம் கேரி, கென்றி மார்ட்டின் ஆகிய தலைசிறந்த மிசனறிகள் அயல்நாடுகளில் அருட்பணியாளர்களாகத் தங்களை ஒப்புக் கொடுத்தனர். மிசனறிப் பணிக்கென நீயும் உன்னைத் தத்தம் செய்வாயா?

ShareTweetPin

Related Posts

சாது சுந்தர் சிங்
மிஷனறிகள்

சாது சுந்தர் சிங்

1889 - 1929 மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிரந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண்டிருந்தன. என்றாலும் பனியால் மூடிய மலைகள்மீது அவர் நடந்து...

டேவிட் லிவிங்ஸ்டன்
மிஷனறிகள்

டேவிட் லிவிங்ஸ்டன்

அறியப்படாத ஆபிரிக்காவுக்கு வழிவகுத்துக்கொடுத்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2016-02-10 22:34:30Z | http://piczard.com...

பர்த்தலேமேயு சீகன்பால்க்
மிஷனறிகள்

பர்த்தலேமேயு சீகன்பால்க்

பர்த்தலேமேயு சீகன்பால்க் பர்த்தலேமேயு சீகன்பால்க் 1683ம் ஆண்டு ஜுன் மாதம் 23ம் தேதி ஜெர்மனி நாட்டில் ஓபர்லௌசிட்ஸ் என்ற மாவட்டத்தில் புல்ஸ்னிஸ்ட் என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தையின்...

வில்லியம் கேரி
மிஷனறிகள்

வில்லியம் கேரி

வில்லியம் கேரி (1760 - 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி...

Next Post
(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(1) ஆணவம்

Recommended

00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

19. கைக்கொள்ள வேண்டியவை

பகைவரை நேசிக்கும் இறையன்பு

பகைவரை நேசிக்கும் இறையன்பு

00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

01. கிறிஸ்தவ வாழ்க்கையின் இலக்கு

Song 250 – Ennakagavae

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.